Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aayiram Nilavugal
Aayiram Nilavugal
Aayiram Nilavugal
Ebook137 pages1 hour

Aayiram Nilavugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Devibala
Languageதமிழ்
Release dateMay 2, 2020
ISBN9781043466930
Aayiram Nilavugal

Read more from Devibala

Related authors

Related to Aayiram Nilavugal

Related ebooks

Related categories

Reviews for Aayiram Nilavugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aayiram Nilavugal - Devibala

    1

    அலாரம் அடித்தது.

    சண்முகம் கண்களை விழித்தான்.

    பக்கத்தில் கண்களைத் திருப்ப, தாரா படுக்கையில் உட்கார்ந்திருந்தாள்.

    என்னாச்சு?

    வயிறெல்லாம் எரியுதுப்பா தாங்கமுடியலை.

    மாத்திரை தரட்டா?

    நானே எடுத்துப் போட்டுக்கிட்டேன்

    என்னை ஏம்மா எழுப்பலை?

    சீக்கிரம் எழுந்து எல்லாம் ரெடி பண்ணி வச்சிட்டு, நீங்க ஆபீசுக்கும் போகனுமே!

    ரொம்ப அதிகமா இருக்கா

    ம்... அழத் தொடங்கினாள்.

    சண்முகம் அவசரமாக படுக்கையை விட்டு எழுந்தான்.

    ஒரு மாதிரி தவிப்பாகி விட்டது.

    பைக்ல ஒக்கார முடியுமா?

    ம்...

    இரு வந்துர்றேன்

    சரி

    உள்ளே போய் அவசரமாக பல் தேய்த்து, முகம் கழுவிக் கொண்டு வந்தான்.

    ட்ரஸ் மாற்றிக் கொண்டான்.

    குழந்தைகள் இரண்டும் நல்ல உறக்கத்தில் இருந்தன.

    புறப்படு வெளிய பூட்டிட்டு டாக்டர்கிட்ட போயிட்டு வந்திடலாம்

    குழந்தைங்க எழுந்துட்டா?

    தெரியும். நீ வா

    அவளை அணைத்துப் பிடித்து வாசலுக்குக் கொண்டு வந்தான்.

    கதவைப் பூட்டிவிட்டு வண்டியை இறக்கினான் கீழே..

    மணி நாலு விடியக்கூட இல்லை இருட்டு கப்பிக் கிடந்தது. நாய் ஊளைவிட்டது. லாரிகளின் சப்தம் அவ்வப்போது, எங்கேயோ பழைய சினிமாப் பாட்டு கேட்டது.

    பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

    மெதுவா ஒக்காரு. சரியா ஒக்காந்தியா புடிச்சுக்கோ கெட்டியா தைரியமா ஒக்காருவியா? போகலாமா?

    சண்முகம் தனியாரில் வேலை பார்க்கும் மனிதன். சாதாரண ஆபீஸ் வேலைதான். செக்ஷன் இன்சார்ஜ். சம்பளம் பிடித்தம் போக, கையில் ஏழாயிரத்துச் சொச்சம் வரும் தனியாக, வெளியே அக்கவுண்ட்ஸ் எழுதுவதில், ரெண்டாயிரம் ரூபா வரும்.

    இரண்டு குழந்தைகள்.

    பையனுக்கு வயது ஒன்பது. பெண்ணுக்கு ஆறு.

    சண்முகத்துக்கு முப்பத்தியேழு வயது.

    பணக்கார வாழ்க்கை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் ஓரளவுக்கு கண்யமாக குடும்பம் நடக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

    போன வருடம் கூட தாரா நன்றாகத்தான் இருந்தாள்.

    அதன் பிறகுதான் இந்த வயிற்று வலி பிரச்னை தொடங்கிவிட்டது. அல்சர் என்றார்கள். இல்லை என்றார்கள்.

    குடலில் ஏதோ பிரச்னை என்றார்

    பலவித டெஸ்ட்டுகள்... மருத்துவ வசதி... ஆனால் பிரச்சனையை இன்னமும் சரியாக டயக்னைஸ் பண்ண எந்த டாக்டராலும் முடியவில்லை இரண்டு முறை அட்மிட் ஆகி, திரும்பவும் வந்து விட்டாள்.

    இப்போது அதிகமாகிறது.

    சமீபகாலத்தில் சண்முகம் படும் வேதனை கொஞ்ச நஞ்சமல்ல.

    எத்தனை பணச் செலவு! லீவெல்லாம் வீணாகிறது. உடம்புக் கஷ்டம் சமாளிக்க முடியாத ஒரு கட்டத்துக்கு வரத் தொடங்கி விட்டது.

    மாதம் மருந்துக்கே ஆயிரத்துக்கு மேல் ஆகிறது. தவிர, இது மாதிரி அடிக்கடி டாக்டரிடம் வரவு வீட்டில் நாலுக்கு எழுந்து டிபன், சமையலை முடித்து, குழந்தைகளை எழுப்பி பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவிட்டு, சண்முகம் ஆபீசுக்கு புறப்படுவதற்குள் தலை சுழன்று விடும்.

    சண்முகம் சமையல் கற்று வைத்திருத்த காரணத்தால், பிரச்னையில்லை. ஆனால் சமாளிக்கவும் உடம்பு, மனசில் தெம்பு வேண்டாமா?

    க்ளினிக் வந்துவிட்டது.

    அவளை எப்போதும் பரிசோதிக்கும் டாக்டர்தான்.

    பார்த்தார்.

    சண்முகம் புதுசா ஒரு ஸ்பெஷலிஸ்ட் வந்திருக்கார் டெல்லிலேருந்து வயிறு சம்பந்தப்பட்ட டாக்டர் நிச்சயமா அவரால நல்ல ஒரு பதிலை உங்களுக்கு சொல்லமுடியும்

    சரி டாக்டர்

    நானே பிக்ஸ் பண்ணித் தர்றேன் நீங்க கவலைப்பட வேண்டாம் இப்ப பெயின் ரிலீவர் போட்டிருக்கேன். அட்மிஷன் வேண்டாம்

    இருவரும் வீடு திரும்பி விட்டார்கள். .

    நீ படு நான் வேலைகளை ஆரம்பிக்கிறேன்

    தாரா படுத்துவிட்டாள்.

    சண்முகம் மளமளவென வேலைகளைத் தொடங்கி விட்டான்.

    சண்முகம் பெரிய ஃபேமிலியைச் சேர்ந்தவன். அப்பா, அம்மா உயிருடன் இருக்கிறார்கள். இவர்கள் அண்ணன் தம்பி ஆறுபேர்... சிஸ்டர்ஸ் மூன்று பேர்,

    ஒன்பது பெத்தவள் அம்மா

    ஆறு பேரில் சண்முகம் நாலாவது தான். முதலில் கூட்டுக் குடும்பமாகத் தான் இருந்தார்கள்.

    2வது அண்ணனுக்கு மும்பைக்கு மாற்றலாகி விட அண்ணியை அழைத்துக் கொண்டு போய் விட்டான்.

    3வது அண்ணனுக்கு அறுபது கிலோமீட்டர் தொலைவில் பேக்டரி இருந்ததால் வந்து போவது கஷ்டம் என, அதே ஊரில் குடித்தனம் வைத்து விட்டான்.

    சகோதரிகள் கல்யாணமாகி ஒருத்தி தவிர மற்ற இருவரும் வெளியூரில்,

    ஒரு தம்பி-கல்யாணமானவன். அயல்நாட்டுக்குப் போய்விட்டான்.

    கடைசி தம்பி நடிகன் பெரிய கதாநாயக நடிகன் பல்ல. ஆனால் நடிப்பில் சம்பாதிக்கிறான். திருமணம் ஆகாத 27 வயது கட்டை பிரம்மச்சாரி

    பெரியண்ணன் வீட்டில் ஆப்பா அம்மா இருக்கிறார்கள்.

    பெரியண்ணனுக்கு ஐம்பது வயது 18 வயதில் கல்லூரியில் படிக்கும் ஒருபெண். ஒரே மகன்தான்.

    சண்முகம் பெரியண்ணனுடன் கூட்டுக் குடும்பமாகத்தான் இருந்தான்.

    முதலில் எல்லாருடனும் கலந்து பழகிய தாரா, படிப்படியாக விலகத் தொடங்கினாள்.

    பிரச்னைகளை இவள் உருவாக்கினாளா அல்லது மற்றவர்களா எனத் தெரியவில்லை

    ஆனால் சுருக்கென கோபம் வந்து விடும் தாராவுக்கு. அந்த வேகத்தில் வார்த்தைகனைக் கொட்டி விடுவாள்

    அப்படி அம்மாவிடம் இவள் பேசப் போக, அது பெரிய இஷ்யூ ஆகி விட்டது.

    அம்மா அழத் தொடங்கி, ரகளையாகி வாத பிரதிவாதங்கள் முத்திப் போய்-

    அன்று இரவே, என்னங்க. வேறு வீடு பாருங்க. நான் இந்த வீட்ல இருக்க முடியாது.

    இரு தாரா பேசிக்கலாம்

    என்ன பேசறது? உங்கம்மா, அப்பா தாறுமாறா பேசிட்டாங்க. உங்கண்ணனும் ஆதரவு

    நீயும் பதில் சொன்னே இல்லையா?

    பின்ன சொல்லாம இருப்பேனா?

    தானிக்கு தீனி சரியாப் போச்சுனு விட்ரு

    இல்லீங்க இனிமே என்னால ஒரு நாள் கூட இந்த வீட்ல வாழ முடியாது. அவங்க பேசுவாங்க. நான் ஊமையா இருக்க முடியுமா?

    சண்முகம் மௌனமாக இருந்தான்.

    ஆனால் ஏதாவதொரு காரணத்தை வைத்துக் கொண்டு சண்டை தினசரி தொடர்ந்தது.

    அம்மாவே அழைத்து -

    சண்முகம் நீ தனியாப் போயிடு உன் பொண்டாட்டியோட அராஜகம் தாங்கலை

    அழுதாள் அம்மா.

    சண்முகத்துக்கு கூட்டை விட்டுப் பிரிகிறோமே என்றிருந்தது.

    உடனடியாக வீடு கிடைத்து விட்டது.

    மகளுக்கு அப்போது வயது ரெண்டு, பையனுக்கு அஞ்சு.

    தனியாகக் குடித்தனம் என்ற போது சுலபமாக இல்லை. மண்டை இடித்துக் கொண்டிருந்தது.

    எப்படியோ சமாளித்து ஒருவிதம் செட்டிலாகிவிட்ட இந்த நேரம் இவளது நோய்

    முதலில் அட்மிட் ஆனபோது அப்பா, அம்மா எனகு டும்பம் மொத்தமும் தாராவை வந்து பார்த்தது. இது தொடர்கதை ஆவதும், வருவது குறைந்து நின்றே விட்டது.

    சண்முகம் மட்டும் பல சமயம் ஆபிசில் அரை நாள் லீவு போட்டு விட்டு பெற்றவர்களை பார்க்கப் போவான். திரும்பி வந்து விடுவான்.

    அவர்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1