Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal Thoguthi - 9
Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal Thoguthi - 9
Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal Thoguthi - 9
Ebook240 pages1 hour

Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal Thoguthi - 9

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் கருத்துகளையும் விழுமியங்களையும் கோட்பாடுகளையும் இஸ்லாமிய மக்களின் உணவு பழக்கவழக்கங்களையும் வட்டாரமொழிவழக்கையும் நீதிக்கதைகளாக வடித்துள்ளேன். பைபிள் கதைகள் மற்றும் திருக்குறள் கதைகள் என் கதைகளுக்கு முன்னோடி. மத நல்லிணக்கத்தை குறிக்கோளாக கொண்டவை என் நீதிக்கதைகள்.

Languageதமிழ்
Release dateAug 13, 2022
ISBN6580111008312
Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal Thoguthi - 9

Read more from Arnika Nasser

Related to Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal Thoguthi - 9

Related ebooks

Reviews for Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal Thoguthi - 9

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal Thoguthi - 9 - Arnika Nasser

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    திருமறை நபிமொழி இஸ்லாமிய நீதிக்கதைகள் தொகுதி – 9

    Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal Thoguthi – 9

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    https://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. சிவப்பு ஒட்டகம் தேடாதே!

    2. நரபலி நேர்ச்சை

    3. கர்ப்பிணி நோன்பு

    4. நறுமணம்

    5. பிறருக்காக

    6. பகலில் இரவில்

    7. தற்சமயம் வேண்டாமே...

    8. மூடிசாடி கண்ணியப்படுத்து

    9. கோயில்களில் திருக்குர்ஆன்

    10. பாப்பாவைக் கிள்ளாதே!

    11. ஊழியம் செய் உஸைத்

    12. வாழ்நாள் முழுக்க நோன்பு

    13. வெள்ளி கடை விடுமுறை

    14. பெண்டிருக்கு ஸலாம்

    15. கறுப்பு நீச்சல்

    16. ஷைத்தானுடைய அறுவை

    17. இடது கையால்

    18. சுவனத்தின் கடைத் தெரு

    19. ரயில் பயணிகளுக்கு நடுவே...

    20. தெரிந்தா தெரியாமலா?

    21. நேர்ச்சையில் சிக்கல்

    22. ஒரு பிரேதமும் 40மூமீன்களும்

    23. வெடிக்க வெடிக்க நரகம்

    24. கான் பாயும் ஆறு மகள்களும்

    25. சிறுநீர் கழிக்காதே

    1. சிவப்பு ஒட்டகம் தேடாதே!

    ஜூஆம்மா தொழுகை முடிந்தது.

    தொழுகைக்காக வந்திருந்த நானூறு பேரும் கலைய ஆரம்பித்தனர். சுல்தான் அக்தர் பதட்டமடைந்தான். பள்ளிவாசலின் வெளிவாசலில் தனது சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தான். அந்த சைக்கிள் அகலமான அதிக எடை தாங்கும் கேரியர் கொண்டது. சைக்கிளுக்கு வழக்கமான பூட்டு தவிர செயின் பூட்டும் உண்டு. சைக்கிளின் ஹாண்டில்பாரில் பேருந்துகளில் காணப்படும் பலூன் வடிவ ஒலிபெருக்கி பொருந்தியிருந்தான். அந்த சைக்கிள் வைத்துதான் பொம்மை பிஸ்கெட் வர்க்கி வியாபாரம் செய்வான் சுல்தான்.

    வெளிவாசலுக்கு ஓடினான். நிமிடத்துக்கு முப்பதுதடவை அழகிய முகமன் கூறி யாசகம் கேட்கும் ஆண், பெண் கூட்டத்தைத் தாண்டினான். நின்றிருந்த பத்துகார் முந்நூறு பைக்குகள் இருபது சைக்கிள்கள் இடையே தனது சைக்கிளை தேடினான். எவ்வளவு பெரிய கூட்டத்தில் இருந்தாலும் அவனது சைக்கிள் அவனை பார்த்ததும் ‘அத்தா... நான் இங்கிருக்கிறேன்’ என கூவும் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

    ஆனால் இந்த தடவை சைக்கிள் குரல் கொடுக்கவில்லை. பதறிப்போனான். நிறுத்திய இடத்துக்குப் போனான். சைக்கிள் இல்லை. நிறுத்திய வாகனங்கள் எல்லாம் நிறுத்திய இடத்தில் நிற்க இவனது சைக்கிளை மட்டும் காணவில்லை. அங்குமிங்கும் ஓடி தேடினான். தேடும் போதே நெற்றியில் அடித்துக் கொண்டான். பத்து இலட்சம் ரூபாய் மதிப்புள்ள கார்களை ஒரு இலட்சம் மதிப்புள்ள பைக்குகளை விட்டுவிட்டு நாலாயிரம் மதிப்புள்ள ஓட்டை சைக்கிளை ஏன் திருடிப்போனான் திருடன்? திருடன் தொழிலுக்கு புதுசோ? அல்லது நம் சைக்கிளை மட்டும் திருட வேண்டும் என்கிற வேண்டுதல் செய்தவனோ? குருவி ரொட்டி வியாபாரம் கூடாது என்பவனோ?

    முதலில் நாம் தொழ சைக்கிளிலில் வந்தோமா, நடந்து வந்தோமா? சட்டைப்பாக்கட்டை பேன்ட் பாக்கட்டை துழாவினான் சுல்தான். காணாமல் போன சைக்கிளின் சாவிகள் இருந்தன.

    பள்ளிவாசலின் இடதுவலது வீடுகளில் நெரிசல் தவிர்க்க நிறுத்தினோமா? ஓடினான். வீட்டுக்காரர்களிடம் விசாரித்தான். சைக்கிள் அங்கிருக்கும் எந்த வீடுகளிலும் நிறுத்தப்படவில்லை.

    சைக்கிள் இல்லவே இல்லை. திருடப்பட்டது என்பது லட்ச சதவீத உண்மை என்கிற உறுதியுடன் பள்ளிவாசலுக்குள் ஓடினான் சுல்தான் அக்தர்.

    முத்தவல்லி, இமாம், மோதினார் ஏதோ பள்ளி விஷயமாக பேசிக்கொண்டிருந்தனர். அஸ்ஸலாமு அலைக்கும். நான் சுல்தான் அக்தர். சைக்கிளில் ஓடி ஓடி ரொட்டிவியாபாரம் செய்பவன். பள்ளிவாசலின் வெளிவாசலில் நிறுத்தியிருந்த சைக்கிளை காணவில்லை!

    முத்தவல்லி, நிதானமா தேடிபாருங்க பாய். சைக்கிள் இருக்கும்!

    தேடிட்டேன். தேடிட்டேன். சைக்கிள் இல்லை. திருடிட்டு போய்ட்டாங்க!

    திருடிட்டு போய்ட்டாங்கன்னு ஏன் நினைக்றீங்க? மாத்திகீத்தி எடுத்துட்டு போயிருக்கலாமில்லையா?

    என் சைக்கிள் 25வருடத்துக்கு முந்திய மாடல். குதிரைகளோடு குதிரையை கட்டிப்போட்டிருந்தா குதிரை மாறிப் போகும். குதிரையோட ஒருபாரம் சுமக்கும் கோவேறு கழுதையை விட்டிருந்தா கழுதை மாறிப் போகுமா?

    உங்க உதாரணம் சரியாதப்பான்னு தெரியல. நாங்க பள்ளிவாசல் விஷயமா பேசிக்கிட்ருக்கம். இன்னும் போய் தேடிப்பாருங்க!

    பிரயோஜனமில்லை. சைக்கிள் கிடைக்காது. பள்ளிவாசலின் வெளிவாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஏழை தொழுகையாளியின் சைக்கிள் திருட்டு போய்விட்டது என்பதும் பள்ளிவாசல் விஷயம்தான் முத்தவல்லி. என் பிரச்சனையை கவனிங்க!

    பள்ளிவாசல் நிர்வாகிகள் சுல்தானுடன் சேர்ந்து சைக்கிள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இடத்துக்கு வந்தனர். எல்லா வாகனங்களும் புறப்பட்டு போயிருந்தன. சுல்தானின் சைக்கிளை திருடியவன் செயின் பூட்டை ஆக்ஸா பிளேடு வைத்து அறுத்திருந்திருக்கிறான். இரும்புத்தூள்களும் சில இரும்புக் கண்ணிகளும் காணக்கிடந்தன.

    சைக்கிள் திருட்டுதான் போயிருக்கு இமாம்!

    நானும் இந்த பள்ளிவாசல்ல பதினைந்து வருடமா தொழுகை நடத்திக்கிட்டு வரேன். இதுவரைக்கும் சைக்கிளோ பைக்கோ திருட்டுப் போனதில்லை. இதுதான் முதல்தடவை! இமாம்.

    செருப்பு காணாம போய்ருக்கு. தொழுகையாளி பாக்கட்டுகளிலிருந்து விழுந்த பணங்கள் திருப்பிக் கிடைத்ததில்லை. இது என்ன புதுசா சைக்கிள் திருட்டு? மோதினார்.

    நீங்க மூணுபேரும்தான் என் திருட்டு போன சைக்கிளுக்கு பொறுப்பு! சைக்கிளை மீட்டுக் குடுங்க!

    நல்ல கதையா இருக்கு பிஸ்கெட் பாய். நாங்கள் பள்ளி நிர்வாகிகள். வாகனங்கள் நிறுத்துமிட குத்தகைதாரர்கள் அல்ல. நாங்க எவ்விதத்திலும் திருட்டு போன சைக்கிளுக்கு பொறுப்பாக மாட்டோம். போங்க, போய் ஆக வேண்டிய காரியத்தை பாருங்க!

    "சுல்தான் பாய் நான் உங்களுக்கு ஒரு நபிமொழி சொல்றேன் கேளுங்க. பள்ளியில் ஒருவர் ஒட்டகத்தை தேடினார். ‘எவரேனும் சிவப்புநிற ஒட்டகத்தை இங்கு பார்த்ததுண்டா? பார்த்திருப்பின் கூறுங்கள்’ என்று கூறினார். அது கேட்ட நபிகள் நாயகம் ‘நீர் அதனை அடைய பெறாதிருப்பீராக! ஏனெனில் நிச்சயமாக பள்ளி எதற்காக கட்டப்பட்டதோ அதற்காகவே கட்டப்பட்டிருக்கிறது ஒட்டகம் தேடுவதற்காகவல்ல’ என்று கூறினார்கள். நாங்களும் அதே பதிலைத்தான் கூறுகிறோம். பள்ளி நிர்வாகிகள் பள்ளி பணிகளை கவனிக்க மட்டுமே இருக்கின்றனர். அவர்கள் திருட்டுப்பொருளை கண்டுபிடித்துக் கொடுக்கும் போலீஸ் அல்ல! இமாம்.

    நபிகள் நாயகம் அவர்கள் பள்ளியில் யாதொன்றையும் விற்பதையும் வாங்குவதையும் தவறிவிட்டதை அங்கு தேடுவதையும் கவி பாடுவதையும் வெள்ளிக்கிழமை ஜுஆம்மா தொழுகைக்கு முன் கூட்டமாய் கூடுவதையும் தடை செய்துள்ளார்கள்! மோதினார்.

    ஒரு பணக்கார தொழுகையாளி பள்ளிவாசலின் முன் நிறுத்திவைத்த 75லட்ச ரூபாய் காரைக் காணவில்லை எனக்கூறினால் அவருக்கு நபிமொழி கூறி திருப்பி அனுப்புவீர்களா? மாட்டீர்கள். ஏழைக்கு ஒரு நீதி பணக்காரனுக்கு ஒரு நீதியா?

    பேசிப்பேசியே கொல்றீங்களே பாய். எங்களை என்னதான் பண்ணச் சொல்றீங்க?

    பள்ளிவாசலின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை காணவில்லை. என போலீஸில் கம்ப்ளைன்ட் கொடுங்க. முத்தவல்லியே புகார் தரார்னு போலீஸ் செயல்பட்டு திருடனை கண்டுபிடித்து விடும்.

    அது அசிங்கம் அது அசிங்கம். நமக்குள் இருக்கும் விஷயத்தை போலீஸ் பார்வைக்கு கொண்டு செல்வது மரியாதைக்குரிய விஷயம் இல்லை!

    ஜுஆம்மா தொழுகை தொழ வந்த ரொட்டி வியாபாரி சுல்தான் அக்தரின் சைக்கிளை காணவில்லை. சைக்கிள் பற்றி துப்பு கொடுங்கள். துப்பு கொடுத்தோருக்கு அல்லாஹ் மறுமைநாளில் தக்கக்கூலி கொடுப்பான் என பள்ளிவாசல் மைக்கில் அறிவியுங்கள்!

    முத்தவல்லி எதிர்மறையாக தலையாட்டினார். அப்படி செய்ய முடியாது பாய்!

    சைக்கிள் திருட்டுப்போனது கூட்டுத்தொழுகை நடத்துமிடத்தில். திருடன் எந்த மதத்தை சார்ந்தவனோ நமக்குத் தெரியாது. ஆனால் திருடனுக்கும் ஏன் மஹல்லா மக்களுக்குமே பள்ளி நிர்வாகிகள் மீது மரியாதையோ பயமோ இல்லை என்கிற உண்மை இந்த சம்பவத்தால் வெட்டவெளிச்சமாகிறது. நிர்வாகிகள் தங்கள் இயலாமையை ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது!

    என்ன பாய்... வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசுகிறீர்கள். எங்களது நிர்வாகத்திறமை பற்றி நீங்கள் சான்றிதழ் தரவேண்டியதில்லை. அல்லாஹ் அறிவான் வக்புவாரியம் அறியும் மஹல்லாமக்கள் அறிவர்!

    பேசாம ஒண்ணு செய்ங்க முத்தவல்லி!

    என்ன?

    பள்ளிவாசலின் முன் நிறுத்தப்படும் வாகனங்கள் திருட்டுப்போனால் அதற்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பல்ல... இப்டின்னு ஒரு போர்டு போட்ருங்க!

    எதுக்கு போர்டு? அதெல்லாம் தேவையில்லை!

    நீங்க தொழ எந்த வாகனத்ல வந்தீங்க?

    போர்டு ஐகான்!

    அதை யாரும் திருடிட்டு போயிருந்தா இப்படி சாத்வீகமா பேசுவீங்களா முத்தவல்லி? தனித் தொழுகையை விட கூட்டுத்தொழுகை அதிக நன்மை பயக்கும் என்பதால்தானே பள்ளிக்கு தொழ வருகிறோம். வாகன பாதுகாப்புக்கு எதாவது செய்யலாம்தானே?

    தொழுகையாளியின் பொருளை திருடுபவன் உண்மையான முஸ்லிமாக மாட்டான். என்வாகனம் திருட்டு போயிருந்தா உங்களளவு பதட்டமடையத்தான் செஞ்சிருப்பேன். யாரையும் துன்புறுத்தாம நானே தேடுதலில் இறங்கியிருப்பேன். வாகனப்பாதுகாப்புக்கு செக்யூரிட்டியா போட முடியும்?

    பள்ளிவாசல் சம்பந்தப்படாமல் வெளியாட்கள் வாகனங்கள் பார்த்துக்கொள்வது போலொரு ஏற்பாடு செய்யலாமே? சென்னையில் சில பள்ளிவாசல்களில் தொழுகையாளிகளின் செருப்புகளை முஸாபர்கள் பார்த்துக் கொண்டு ஒருரூபாய் இரண்டு ரூபாய் பெற்றுக் கொள்கிறார்களே...

    உங்கள் விஷயம் மட்டும் பேசுங்கள்!

    வாழ்வாதாரமாக இருந்த சைக்கிளை திருட்டு குடுத்துவிட்டேன். பள்ளிவாசல் நிர்வாகிகள் எனக்கு தனிப்பட்ட முறையிலாவது உதவக்கூடாதா?

    தனிப்பட்ட முறையில் என்றால்?

    ரூபாய் நாலாயிரம் செலவு பண்ணினால் தொலைந்தது போலொரு சைக்கிளை வாங்க முடியும். நீங்களும் பள்ளிவாசல் தொழுகையாளிகளும் சேர்ந்து ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு எனக்கு புதுசைக்கிள் வாங்கிக் குடுத்து விடுங்கள். தொடர்ந்து பள்ளிக்கு தொழ வருவேன்!

    முத்தவல்லி சிரித்தார். கில்லாடியான ஆள் நீங்கள். யாரோ ஒரு திருடன் திருடிச்சென்றதுக்கு எங்களை அபராதம் கட்டச் சொல்கிறீர்கள்!

    "அபராதம் அல்ல, ஒரு முஸ்லிமுக்கு ஒருமுஸ்லிம் செய்யும் உதவி!’

    முத்தவல்லி யோசித்தார். சுல்தான் அக்தர்பாய்! அடுத்த ஜுஆம்மா தொழுகைக்குள் உங்கள் கோரிக்கையை பரிசீலித்து வைக்கிறோம். நீங்கள் புறப்படுங்கள்!

    சுல்தான் போனவுடன் முத்தவல்லி கைபேசி மூலம் காவல்நிலையத்தை தொடர்பி நடந்தததை விவரித்தார். புகார் பதிவு செய்யாம பழைய ஹெர்குலஸ் சைக்கிள் தேடி கண்டுபிடிச்சுக் கொடுங்க! என்றார். மோதினாரை அழைத்து, மஹல்லா முழுக்க சொல்லி சைக்கிள் தேடச் சொல்லுங்க! என்றார். பள்ளிவாசலின் இடப்புறம் வலப்புறமிருக்கும் வீடுகளில் புதிதாக எதாவது ஒரு சைக்கிள் திருடன் நடமாடுகின்றானா என விசாரிக்கச் சொன்னார்.

    ***

    அடுத்த ஜுஆம்மா தொழுகை முடிவில்

    முத்தவல்லியும் பள்ளிவாசல் நிர்வாகிகளும் புது சைக்கிளுக்கான சாவி கொத்தை சுல்தானிடம் நீட்டினர். இந்த சைக்கிளையாவது பத்திரமா பாத்துக்கங்க பாய்.

    செகன்ட் ஹாண்ட் சைக்கிள் வாங்கித்தந்திருவீங்களோன்னு பயந்தேன். பெரிய மனசு பண்ணி புது சைக்கிள் வாங்கிக் குடுத்திட்டீங்க. அல்லாஹ் உங்களுக்கு மேலும் பல நன்மைகளை வாரி வழங்கட்டும்!

    வெளிவாசலுக்கு நடந்தான் சுல்தான் அக்தர். வெளிவாசலில் ஒரு 22வயது இளைஞன் அங்குமிங்கும் ஓடினான்.

    என்ன தம்பி ஆச்சு? ஒருவர் வினவினார்.

    போன வாரம்தான் வாங்கின ஒருலட்சம் ரூபாய் பெறுமானமுள்ள ஸ்போர்ட்ஸ் பைக் இதோ இங்கதான் நிறுத்தி வச்சிருந்தேன். காங்கல. பள்ளிவாசல் முத்தவல்லி எங்கே? நிர்வாகிகள் எங்கே? கூவினான் இளைஞன்.

    யா அல்லாஹ்! தலை தொப்பியின் மேல் கைவைத்து நெட்டுயிர்த்தார் முத்தவல்லி.

    சிவப்புஒட்டகத்தை தேடுபவர்கள் எக்காலத்திலும் தொடர்ந்து இருக்கத்தான் செய்கிறார்கள். தொலைந்த ஒட்டகத்துக்கு பதில் புதுஒட்டகத்தை வாங்கித் கொடுத்தது முத்தவல்லியின் தவறோ? இறைவனே அறிவான்!

    2. நரபலி நேர்ச்சை

    குளிர்பதன மூட்டப்பட்ட அறை.

    டைரக்டர் மாடல் ரிவால்விங் சேரில் அமர்ந்திருந்தார் ஸபர் நிவாஸ். வயது65. தலையில் வெள்ளை நிற வலைத்தொப்பி. நெற்றியில் தொழுகை அடையாளம். கண்களில் கோல்டன் பிரேம் பவர் கிளாஸ். மீசை இல்லாத மேல் உதடு. கூம்பு வடிவ தாடி. வெள்ளை ஜிப்பா, வெள்ளை பைஜாமா ஷு.

    அவரது எதிரே எம்.பி.ஏ. படித்த இருமகன்கள்.

    மேஜையில் தணிக்கை அதிகாரி தயாரித்த இறுதி ஆண்டறிக்கை. அதனை எடுத்து மகன்களுக்கு வாசித்துக் காட்டினார். ஆண்டு நிகரலாபம் 514 கோடி.

    நியாஸின் கண்களில் ஆனந்தக்கண்ணீர் துளிர்த்தது.

    ஏன்த்தா அழறீங்க? மூத்தமகன்.

    வருமானம் வரி கட்டியது போக நமது சொத்தின் நிகர மதிப்பு 2000கோடி. சரியாக 11வருடங்களுக்கு முன்னாடி நானொரு பாப்பர். பிப்ரவரி 2000ல் நீதிமன்றம் மூலம் மஞ்சள் கடுதாசி கொடுத்தவன் நான்.

    உங்க கடுமையான உழைப்பு உங்களை மீண்டும் கோடீஸ்வரனாக்கி விட்டது. மஞ்சள் கடுதாசி பச்சை கடுதாசி ஆகிவிட்டது! இளைய மகன்.

    "முழு தகவலும் அறியாம பேசுகிறாய் மகனே. நாம் கடந்த ஆறு தலைமுறைகளாகவே பரம்பரை பணக்காரர்கள். சரக்கு கப்பல்கள் எட்டு நமக்கு சொந்தமாய் இருந்தன. என் தந்தை காலத்தில் அதாவது உங்கள் பாட்டனார் காலத்தில் ஒரு தொழில் எதிரி முளைத்தான். அவனோடு போராடி போராடி களைத்து ஒருநாள் இறந்து போனார் எங்கத்தா. என் காலத்தில் என்னுடன் தொழில் எதிரியின் மகன் மோத ஆரம்பித்தான். அவனின் பெயர் ஹஸன். அவனின்

    Enjoying the preview?
    Page 1 of 1