Rummy and Joker
()
About this ebook
யாருமே தான் கண்டுபிடித்த ஒரு விஷயத்தை காசாக்கத்தான் பார்ப்பார்கள். ஆனால் டாக்டர் பரமசிவம் தன் கண்டுபிடிப்பால் மக்களுக்கு எந்தவிதமான தீமையும் நிகழக் கூடாது என்று நினைத்தார். அவர் கண்டுபிடிப்பால் டாக்டருக்கும், தாரணிக்கும் என்ன நிகழ்ந்தது? புரியாத ரம்மி & ஜோக்கர் புதிருக்கான விடையை தேடுவோம் பரத், சுசிலா உடன் நாமும்...
Read more from Pattukottai Prabakar
Bharath Rajyam Rating: 5 out of 5 stars5/5September, October, Christopher! Rating: 5 out of 5 stars5/5Bharath VS Susila Rating: 5 out of 5 stars5/5Bharath And Pattampoochi Rating: 5 out of 5 stars5/5Iravu Pathu Rating: 5 out of 5 stars5/5Kaadhalna Enna Prakash? Rating: 0 out of 5 stars0 ratingsNarukkendru Naalu Varthai Rating: 0 out of 5 stars0 ratingsOor Urangum Velai Rating: 5 out of 5 stars5/5Puthi Munai Vithai Rating: 5 out of 5 stars5/5Thappikka Thadaiyillai Rating: 5 out of 5 stars5/5Yaarukkum Mugam Illai Rating: 5 out of 5 stars5/5Ithuvarai… Rating: 0 out of 5 stars0 ratingsSugamthaney Suseela? Rating: 0 out of 5 stars0 ratingsUyirodu Vendum… Rating: 5 out of 5 stars5/5Thottal Thodarum Rating: 4 out of 5 stars4/5Pushpa Rating: 5 out of 5 stars5/5Ini... Iniya... Rating: 5 out of 5 stars5/5Varuvean! Velvean! Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Vidum Neram Rating: 5 out of 5 stars5/5Arjunan Ambu Rating: 5 out of 5 stars5/5Tick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5Naankadi Savukku Rating: 5 out of 5 stars5/5Kuttra Surangam Rating: 0 out of 5 stars0 ratingsPatharathey Bharath Rating: 5 out of 5 stars5/5
Related to Rummy and Joker
Related ebooks
Mutham, Nizhal Mutham Rating: 5 out of 5 stars5/5Bharath Varum Neram Rating: 0 out of 5 stars0 ratingsKanavugal Ilavasam Rating: 5 out of 5 stars5/5En Peyar Dhayalan Rating: 0 out of 5 stars0 ratingsUnakku Mattum Solvean Rating: 5 out of 5 stars5/5Bharath Speaking Rating: 0 out of 5 stars0 ratingsPushpa Rating: 5 out of 5 stars5/5Ini Idhu Porkalam Rating: 0 out of 5 stars0 ratingsThoda Mudiyatha Thoduvanam Rating: 5 out of 5 stars5/5Utharavin Padi Uyir Rating: 5 out of 5 stars5/5Iruthi Thudippu Rating: 5 out of 5 stars5/5December Poo Teacher Rating: 0 out of 5 stars0 ratingsOru Nijam Oru Nizhal Rating: 5 out of 5 stars5/5Vithaithal Vilaiyum! Rating: 5 out of 5 stars5/5Nalamillai... Nalama? Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathil Poothathu Rating: 0 out of 5 stars0 ratingsThirumbi Vaa! Theerpai Thaa! Rating: 0 out of 5 stars0 ratingsMiss India Missing Rating: 5 out of 5 stars5/5Azhagiya Penney Rating: 0 out of 5 stars0 ratingsWhisky Thaagam Rating: 0 out of 5 stars0 ratingsVelvet Yutham Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Mattean Malini Rating: 0 out of 5 stars0 ratingsSugamthaney Suseela? Rating: 0 out of 5 stars0 ratingsMaranam Thappinal Maranam Rating: 0 out of 5 stars0 ratingsPatharathey Bharath Rating: 5 out of 5 stars5/5Ini... Iniya... Rating: 5 out of 5 stars5/5Avan Thappa Koodathu Rating: 0 out of 5 stars0 ratingsKutra Thudippu Rating: 5 out of 5 stars5/5Sollungal Seyyapadum Rating: 0 out of 5 stars0 ratingsDevathaiyai Thedathey Rating: 5 out of 5 stars5/5
Reviews for Rummy and Joker
0 ratings0 reviews
Book preview
Rummy and Joker - Pattukottai Prabakar
http://www.pustaka.co.in
ரம்மி அண்ட் ஜோக்கர்
Rummy and Joker
Author :
பட்டுக்கோட்டை பிரபாகர்
Pattukottai Prabakar
For more books
https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அன்புள்ள உங்களுக்கு...
வணக்கம்.
நான் எழுதும் துப்பறியும் கதைகளில் தொடர்ந்து இடம்பெறும் கற்பனைப் பாத்திரங்கள் பரத் சுசிலா.
வாசகர்கள் மத்தியில் இவர்கள் என்னைவிட பிரபலம். என்னைச் சந்திக்கும் வாசகர்களின் ஒன்றாவது கேள்வி: பரத் சிலாவுக்கு எப்ப சார் கல்யாணம்?
இந்தப் பாத்திரங்களை கற்பனையாக உருவாக்கியபோது இத்தனை தூரம் இவர்கள் வரவேற்பைப் பெறுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை.
பரத் ஒரு வக்கீல். மூன்லைட் டிடெக்டிவ் ஏஜன்ஸி என்கிற பெயரில் ஒரு துப்பறியும் நிறுவனத்தை நடத்துபவன். அவனுக்கு நிறுவனத்திலும், வாழ்க்கையிலும் கிட்டத்தட்ட பார்ட்னராக செயல்படும் இனிய காதலி சுசிலா. துள்ளலும் குறும்பும் அதே சமயம் புத்திக் கூர்மையும், சாதுர்யமும் கலந்து அமைக்கப்பட்ட இந்தப் பாத்திரங்கள் இடம்பெற்ற நாவல்கள் இவர்கள் இடம்பெறாத நாவல்களை விட சற்று அதிகம் விற்பனையானதாக புத்தக வெளியீட்டாளர்களே குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
பரத் சுசிலா பங்குபெற்ற துப்பறியும் நாவல்களை தனிப்பட்ட தொகுதிகளாக, அழகிய புத்தக வடிவில் வாசகர்களான உங்களுக்கு தொடர்ந்து வழங்கவேண்டும் என்பது எனது நீண்ட நாளைய எண்ணம். இதோ இப்போது உங்கள் கைகளில் மற்றும் ஒரு தொகுப்பு! இதில் பரத் சுசிலா பங்குபெற்று துப்பறிந்த ஆறு சுவையான நாவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஆறு நாவல்களும் உங்களால் அதிகம் பாராட்டப் பெற்றவை. தனிச்சிறப்புகள் வாய்ந்தவை.
பரத் சுசிலா வரிசையில் முதல் தொகுப்பான ‘பரத், ஒரு பந்தயம்’ புத்தகத்திற்கான தங்களின் ஆதரவைத் தொடர்ந்து பரத் சுசிலா வரிசையில் பல தொகுப்புகள் அடுத்தடுத்து வெளி வரவிருக்கின்றன.
இந்தத் தொகுப்பை அழகாக அச்சிட்டு வழங்கியுள்ள நன்றியும், அட்டை வடிவமைத்த எனது மகள் பி.ஸ்வர்ணரம்யாவுக்கு அன்பும் சொல்லி உங்கள் சுவாரசியமான படிக்கும் அனுபவத்திற்கு வழிவிட்டு விலகுகிறேன்.
பிரியங்களுடன்,
பட்டுக்கோட்டை பிரபாகர்
37/1, கெனால் பேங்க் ரோடு,
கஸ்தூரிபா நகர், அடையாறு,
சென்னை 20.
அழைக்க: 044-24415709
அனுப்ப: pkpchennai@yahoo.co.in
1
குட்மார்னிங் டாடி.
குட்மார்னிங். என்ன அதிசயமா இன்னைக்கு ஆறு மணிக்கே எந்திரிச்சிட்டே?
ஒரு கெட்ட கனவு. தூக்கம் கலைஞ்சிடுச்சி. தட்ஸ் ஆல்.
"என்னோட ஜாகிங் வர்றியா தாரணி?’’
உங்களுக்கு தொந்தி கரையணும். ஓடறிங்க. வொய் ஷூட் ஐ?
தொந்தி கரையறது ஒண்ணுதான் ஜாகிங்கோட பலனா? ஒரு வாரம் என்னோட வந்து ஓடிப்பாரு. அப்புறம் சொல்லு. உடம்பு மட்டுமில்லை. மூளையும் ரொம்ப சுறுசுறுப்பா இருக்கும்.
"மூளையை சுறுசுறுப்பாக்கிட்டு உங்களை மாதிரி நானும் ஆராய்ச்சி பண்ணப்போறேனாக்கும்? போங்க டாடி. போர்! மறுபடி தூக்கம் வருதான்னு நான் போய் முயற்சி பண்ணிப் பார்க்கறேன். நீங்க போய் புஸ், புஸ்ன்னு ஓடிட்டு வாங்க.’’
பார்க்கறேன். இன்னும் எத்தனை நாள் இந்த செல்லம், சொகுசுன்னு பார்க்கறேன்.
ஏன், எனக்கென்ன? சிட்டில ஃபேமஸ் டாக்டர் பரமேஸ்வரனோட ஒரே புத்ரி. எங்கே போனாலும் எந்திரிச்சி நின்னு வரவேற்கறாங்க. பத்து பைசா கைல எடுத்துக்காம ஊர்பூரா சுத்திட்டு வரலாம். பூவா, தலையா போட்டுப் பார்க்க அவசியம் வந்தாதான் காசு தேவைப்படுது.
அதெல்லாம் சரி. மிஸஸ் தாரணி ஆனப்புறமும் இப்படியே பொழுதை கழிச்சிடுவியா?
ஷ்யூர். ஏன்னா என்னைக் கட்டிக்கப் போற மாப்பிள்ளைக்கு நான் ஒரே ஒரு கண்டிஷன்தான் வச்சிருக்கேன்.
என்னம்மா அது?
"இந்த வீட்டோட மாப்பிள்ளையா இருக்கணும் அவரு.’’
"தாரணி!’’
யெஸ் டாடி. இதை நான் விளையாட்டுக்குச் சொல்லலை. சீரியஸாதான் சொல்றேன். எனக்கு அம்மாவை போட்டோலதான் காட்டினாங்க. உங்களை விட்டு என்னால் பிரிஞ்சி போக முடியும்ன்னு தோணலை.
டோண்ட் பி ஸில்லி.
ஐ’ம் ஹண்ட்ரெட் பெர்ஸண்ட் சீரியஸ்.
அப்படி எல்லாம் இந்த காலத்தில எந்த மாப்பிள்ளையும் ஒத்துக்க மாட்டானம்மா.
ஒத்துக்காட்டா போகட்டும். சிம்ப்பிளா இன்னொரு முடிவு இருக்கு.
என்ன?
கல்யாணமே பண்ணிக்காம இருந்துட்டால் போச்சு.
ஏய்! என்ன பேச்சு இது?
காலையிலேயே அப்செட் ஆகவேணாம். என் கல்யாண பேச்சை நீங்கதான் எடுத்திங்க. நான் எம்.எஸ்சி. முடிக்க இன்னும் ஒரு வருஷம் இருக்கு. அதுக்கப்புறம் பேசிக்கலாம். நீங்க புறப்படுங்க டாடி.
கார் சாவியை எங்கே வச்... போன்ல யாரு பாரும்மா.
ஹலோ திஸ் ஈஸ் ஃபோர் த்ரீ நைன் ஜீரோ சிக்ஸ்
டாக்டர் பரமேஸ்வரன் வீடுதானே மேடம்.
யெஸ் அவர் பொண்ணு பேசறேன் நீங்க யார்?
பாம்பேலேர்ந்து வந்திருக்கேன். விஜய்பட்டேல்ன்னு பேரு. க்விக்வெல் ஃபார்மாசூட்டிகல்ஸ் முதலாளி. ஏற்கனவே நான் உங்க அப்பாவுக்கு தபால் எழுதி அவர் பதில் எழுதிருக்கார். நான் அவரை நேர்ல பார்த்துப் பேச விரும்பறேன். ஊர்ல இருக்காரா மேடம்?
"ஊர்ல இருக்கார். நீங்க அவரை சந்திக்கிறதுக்கு