Manasukkul Neruppu
By R. Manimala
()
About this ebook
சிட்டியில் புதுமாப்பிள்ளை குறிவைத்து கொலை செய்யும் கொலைகாரன். உயிரை பணயம் வைத்து நடக்கும் ஷகிலா. பாலன் திருமணத்தில் அவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி என்ன? டி.ஜி.பி தலைமையிலான குழு, கொலைக்காரனை பிடித்தார்களா? அடுத்தடுத்து நடக்கும் மர்ம கொலைகளால் ஏற்படும் திக் திக் நிமிடங்களில் மனசுக்குள் நெருப்பு யாருக்கு எரிந்தது?
Read more from R. Manimala
Kanney, Nerungathey! Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Nindrai Kaaviyamai! Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Nee Ena Kandean! Rating: 0 out of 5 stars0 ratingsKalavadinean Kanapozhuthil! Rating: 0 out of 5 stars0 ratingsNee En Nila Rating: 0 out of 5 stars0 ratingsEngey En Thean Kinnam? Rating: 4 out of 5 stars4/5Enathu Nila Kanniley...! Rating: 0 out of 5 stars0 ratingsSollathan Ninaikkirean! Rating: 0 out of 5 stars0 ratingsUyire Nerungi... Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalin Pon Veedhiyiley... Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Megangal Rating: 0 out of 5 stars0 ratingsEn Kaadhal Kanmani Rating: 0 out of 5 stars0 ratingsNinaithathu Yaro... Neethaney! Rating: 0 out of 5 stars0 ratingsKadhal Rajiyam Enathu! Rating: 0 out of 5 stars0 ratingsKannathil Muthathin Eeram! Rating: 0 out of 5 stars0 ratingsMugarasi Rating: 0 out of 5 stars0 ratingsEn Priyasakhi Rating: 2 out of 5 stars2/5Kaadhal Theriniley... Rating: 0 out of 5 stars0 ratingsAasai Kodi Sumanthu! Rating: 0 out of 5 stars0 ratingsManasellam Banthalitten! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Valaiyil Vizhalama! Rating: 0 out of 5 stars0 ratingsMalare Mounama? Rating: 0 out of 5 stars0 ratingsNinaivennum Sannathiyil? Rating: 0 out of 5 stars0 ratingsUn Ninaivil Rating: 0 out of 5 stars0 ratingsVaa... Ponmayiley! Rating: 0 out of 5 stars0 ratingsUn Uyirai Naanirukka... Rating: 0 out of 5 stars0 ratingsPennalla... Neeyoru Bommai Rating: 0 out of 5 stars0 ratingsPesu... Malarey... Pesu! Rating: 0 out of 5 stars0 ratingsUn Per Solla Aasaithan Rating: 0 out of 5 stars0 ratings
Related to Manasukkul Neruppu
Related ebooks
Ange Sendru Anbai Sollu Rating: 0 out of 5 stars0 ratingsSamsaram Enbathu Veenai! Rating: 0 out of 5 stars0 ratingsKutra Parigaram Rating: 5 out of 5 stars5/5Enge Andha Sorgam? Rating: 0 out of 5 stars0 ratingsKozhaigal Rating: 0 out of 5 stars0 ratingsEnnennavo En Nenjile... Rating: 0 out of 5 stars0 ratingsPesu... Malarey... Pesu! Rating: 0 out of 5 stars0 ratingsAnbulla Maanvizhiye Rating: 0 out of 5 stars0 ratingsKuyil Thottam Rating: 0 out of 5 stars0 ratingsKannukkoru Vannakkili Rating: 5 out of 5 stars5/5Pennalla... Neeyoru Bommai Rating: 0 out of 5 stars0 ratingsNandha En Nila Rating: 0 out of 5 stars0 ratingsPalingu Pookalin Oorvalam Rating: 4 out of 5 stars4/5Kaadhal – Sila Kaatchigal Rating: 0 out of 5 stars0 ratingsVaigairai Deepangal Rating: 5 out of 5 stars5/5Malare Mounama? Rating: 0 out of 5 stars0 ratingsSoorya Thagangal Rating: 0 out of 5 stars0 ratingsThottuvidum Thooram Rating: 0 out of 5 stars0 ratingsKolai Kolai Ariya Aaval Rating: 4 out of 5 stars4/5October Pournami Rating: 0 out of 5 stars0 ratingsVilagava Pazhaginom? Rating: 0 out of 5 stars0 ratingsVannathupoochikku Vazhi Vidu Rating: 4 out of 5 stars4/5Eppodhum Nee! Rating: 2 out of 5 stars2/5மனசுக்கு மட்டும்! Rating: 0 out of 5 stars0 ratingsசொந்தக்காரங்க! Rating: 0 out of 5 stars0 ratingsBramma Mudichu Rating: 0 out of 5 stars0 ratingsYudha Bhoomi Rating: 0 out of 5 stars0 ratingsGanga Rating: 5 out of 5 stars5/5July Malargale! Rating: 0 out of 5 stars0 ratingsKanal Vizhi Rating: 5 out of 5 stars5/5
Reviews for Manasukkul Neruppu
0 ratings0 reviews
Book preview
Manasukkul Neruppu - R. Manimala
https://www.pustaka.co.in
மனசுக்குள் நெருப்பு
Manasukkul Neruppu
Author:
ஆர். மணிமாலா
R. Manimala
For more books
https://www.pustaka.co.in/home/author/r-manimala
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
1
ஆரஞ்சு வர்ணத்தில் அழகிய கால்பந்தாய் மேற்கில் கொஞ்சம், கொஞ்சமாய் இறங்கிக் கொண்டிருந்தான் சூரியன். சிதறியிருந்த மேகக்கூட்டமும் இளஞ்சிவப்பு நிறத்தில் தாவணி அணிந்த பெண்களாய் மெதுவாய் நகர்ந்து விளையாடிக் கொண்டிருந்தன.
ஷகில்... இப்படி... இந்தப் பக்கம் பார்... ம் ஸ்மைல்... ஓக்கே!
தூரத்துல அந்த ஐஸ் வண்டிக்காரனைப் பார்த்த மாதிரி நில்லு. முண்டம்... பக்கவாட்டுல திரும்பி... எனக்கு சைட்போஸ்ல... ம்... சரி, சரி. அசையாதே! முகத்தை கொஞ்சம் மேல தூக்கு. ம்கூம்... ஒரேயடியா அண்ணாந்து பார்க்காதே... தடிமாடு... முறைக்காதே... சொன்ன மாதிரி நில்லு...ம்... இட்ஸ் ஓக்கே! ரெடி...
பாலன் காமிராவின் பட்டனை அமுக்க...
அதே நேரத்தில்...
சடக்கென்று திரும்பி... வாயை அஷ்டகோணலாக்கி... நாக்கை வெளியே தொங்க போட்டு, கண்ணின் கருவிழிகளை முனைகளில் நிறுத்தி மாறுகண் காட்டி... அட்டகாசமாய் பிலிமில் பதிந்து போனாள் ஷகிலா.
சேச்சே... நாயே...
பாலன் கோபமாய் அவளை நோக்கி வந்தான்.
என்ன இப்படி பண்ணிட்டே?
பொறுமைக்கும் அளவிருக்கு. எவனோ ஒருத்தன் இந்த டப்பா கேமராவை ஒரு ஏமாந்த சோணகிரி கிடைச்சானேங்கற சந்தோஷத்தில் ஆயிரம்ரூபாய்க்கு வித்தாலும் வித்தான்... இப்படி நில்லு... அப்படி நில்லு... அங்கே பார்... இங்கே பாருன்னு ஒரே டார்ச்சர். சரி... அதைக்கூட பொறுத்துக்கலாம். அதென்ன முண்டம்... தடிமாடு, நாய்... என்ன... என்ன நெனச்சிட்டு இருக்கே உன் மனசுல?
ஷகிலா ஹீல்ஸ் அணிந்த காலால் ஓங்கி மிதிக்க சிவப்பு நிற மிடி ஒருமுறை காற்றில் உயர்ந்து... பளபளப்பான சருமத்தைக் காட்டியது.
பின்னே என்ன? ஒரு போட்டோவுக்கு போஸ் குடுக்கக் தெரியலை. நீயெல்லாம் ஒரு எம்.ஏ. ஸ்டூடெண்ட்? வெட்கம்... வெட்கம்?
நல்ல கதையாருக்கே? ஸ்டூடெண்ட்னா போஸ் குடுக்கத் தெரியணுமா?
நல்லா கேட்ட போ! இந்த காலத்தில பொண்ணுங்க அதைத்தானே முக்கியமா கத்துக்குதுங்க. அப்பத்தானே நாளைக்கு நாமளும் சுஷ்மிதாவாகவோ, ஐஸ்வர்யாவாகவோ ஆகலாம்னு... படுசூட்டிகையா இருக்குதுங்க. எனக்குன்னு வந்து வாய்ச்சியே தத்தி.
த பாரு பாலு! கன்ட்ரோல் யுவர் டங்க்.
லூஸு... லூஸு...
கோபத்தில் மார்புகள் விம்ம... இடுப்பில் கை வைத்து முறைத்த ஷகிலா... சீ போடா...
என்றாள்.
என்னயா போடா சொன்னே? உன்னை...
பாலன் அவளை அடிக்க கையை ஓங்க... ஒரே பாய்ச்சலாய் ஓடினாள் ஷகிலா. பாலனும் விடாமல் துரத்த...
கடற்கரையின் மொத்த ஜனமும் இவர்களை வேடிக்கைப் பார்த்தது...
இளவட்டங்கள் ‘ஹோவென’ குரல் கொடுத்தது.
பாலனுக்குக் கொஞ்சம் வெட்கமாய் இருந்தது. கால்களில் வேகம் இப்போது குறைந்திருந்தது. ஆனால், ஷகிலா எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் கவலைப்படாமல் ஓடினாள்.
சற்று நேரத்தில் திரும்பிப் பார்த்தவள்... தூரத்தில் அவன் காமிராவோடு அமர்ந்திருந்ததைப் பார்த்துச் சிரித்தாள்.
தலையை இடது பக்கமாய் சாய்த்து... இடுப்பில் கை வைத்து பளீரென சத்தம் போட்டு சிரித்த ஒய்யாரமும், தோள் வரை வெட்டி விடப்பட்ட அடர்த்தியான கூந்தலின் இண்டு இடுக்கில் சூரியனின் கதிர்கள் ஊடுருவி பிரவுன் நிறத்தில் மின்னிய அழகும்... பாலனை காமிராவைத் தயார் பண்ணச் சொல்ல... அந்த நிலையில் அவளை ஃபோகஸ் செய்து குமிழை அவிழ்த்த... சொல்லி