Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Singapore Sathi
Singapore Sathi
Singapore Sathi
Ebook109 pages49 minutes

Singapore Sathi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சூரியகாந்தன் என்னும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தன் கட்சிக்காரர் மூலமாக பெருந்துயரத்தை அனுபவிக்க காத்திருக்கிறார். அவரது மகன் புகழேந்தி, பரத், சுசீலாவின் உதவியை நாடி அவனது தந்தைக்கு நேரவிருந்த துயரத்தை எவ்வாறு துடைத்தான். பரத்தும், சுசீலாவும் புகழேந்திக்கு உதவினார்களா? பார்ப்போம்...

Languageதமிழ்
Release dateOct 1, 2022
ISBN6580100908066
Singapore Sathi

Read more from Pattukottai Prabakar

Related to Singapore Sathi

Related ebooks

Reviews for Singapore Sathi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Singapore Sathi - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    சிங்கப்பூர் சதி

    Singapore Sathi

    Author :

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    முக்கிய குறிப்பு!

    (இந்தக் கதை 200% கற்பனைக் கதை. எல்லாப் பெயர்களும் நிகழ்ச்சிகளும் கலப்படமற்ற கற்பனை. வேறு ஒரு காலகட்டத்தில் இந்தக் கதை நிகழ்கிறது - பட்டுக்கோட்டை பிரபாகர்)

    அனல் துப்பும் சூரியன் உச்சி நோக்கிப் பயணம், பறவைகள் கப்சிப், மரங்கள், ஓவியங்கள். சாலைகளின் தார் கண்ணீர், ஜூஸ் கடைகளில் டோக்கன், மின்விசிறிகளில் மாயசுழற்சி, துடைக்கத் துடைக்க வியர்வை என்ற உக்கிர கோடையின் காலை பத்து மணிக்கு

    பெஸண்ட் நகரில், தமிழ்நாடு முதல் அமைச்சர் சூர்யகாந்தன் வீட்டின் வரவேற்பு ஹாலில், முன்னணி வாரப் பத்திரிகையின் இளைஞன் சுடர்மணியும் அருகில் கிளிக்கத் தயாராய் கேமிரா மாலையணிந்த கிருஷ்ணனும் காத்திருந்தார்கள்.

    வழங்கப்பட்ட ஆரஞ்சு பானங்களை உடனே காலி செய்து வைத்தார்கள்.

    சி.எம். பத்து நிமிஷத்தில கூப்புடுவார் என்றுச் சொல்லிவிட்டு உதவியாளர் யாருக்கோ போன் செய்யத் துவங்கினார்.

    பொதுவா ஸண்டே வரச் சொல்லவே மாட்டார். நம்ம பத்திரிகைமேல தனி அபிப்பிராயம் எப்பவும் உண்டு. அதனாலதான் ஸண்டேக்கு ஒப்புக்கிட்டார் என்றான் சுடர்மணி, கிருஷ்ணன் காதில்.

    சப் எடிட்டர் பிளாக் அண்ட் வொயிட்தான் எடுக்கச் சொன்னார். நான் எதுக்கும் இருக்கட்டும்னு டிரான்ஸ்பரன்சி மாட்டி ஒரு கேமிரா கொண்டாந்திருக்கேன். அவருக்கு மூடு நல்லா இருந்தா நாலு தட்டிக்கலாம்.

    நல்லா ஒத்துழைப்பார்.

    ஏம்ப்பா சுடர், பீரியட் முடிய இன்னும் ஒண்ரை வருஷம் இருக்கு. ஆனா அதுவரைக்கும்கூடத் தாங்காதுன்னு சொல்றாங்களே அப்படியா?

    கிருஷ்ணா, டூ தர்ட் மெஜாரிட்டி க்ளீனா இருக்கு. எதிர்க்கட்சி சுண்டு விரலை கூட உசத்த முடியாது. ஆனா பிரச்னை பூரா கட்சிக்குள்ளேதான்.

    இவருக்கு கடுமையா எதிர்ப்பு இருக்கோ?

    ஒரு மறைமுக எதிரணி உருவாகிற மாதிரி தெரியுது.

    யாரு சூத்தரதாரி? தீர்த்தராமன் தானே?

    சரியாத் தெரியலை. அவரையும் சொல்லலாம் கட்சிக்குள்ளே லேசா கட்டுப்பாடு தளர்ந்திருக்குது. இது உண்மை. ஆனா யாரும் தனிப்பட்ட முறையில விட்டுக்கொடுத்துப் பேசறதில்லை.

    இவர்கள் குசுகுசுப்பாகப் பேசிக்கொண்டிருக்க, நடு வகிடு எடுத்த சஃபாரி அணிந்த உதவியாளர் இண்ட்டெர்காம் எடுத்துப் பேசிவிட்டு, போங்க, ஆபீஸ் ரூமுக்குக் கூப்பிடறார். மாடில, தெரியுமில்லை? என்றார்.

    தெரியும். பல தடவை போயிருக்கேனே.

    சுடர்மணி டேப்ரெக்கார்டர் எடுத்துக்கொண்டு அருகில் புறப்பட்ட மாடிப் படிகளில் ஏறினான். கிருஷ்ணன் மத்தளம் போன்ற தனது கேமிரா உபகருவிகள் கொண்ட பையை எடுத்து வாரைத் தோளில் மாட்டிக்கொண்டு அவனைத் தொடர்ந்தான்.

    குளிர் செய்யப்பட்டிருந்த அந்த அறைக்கு வேறு உள்படிகள் வழியாக வந்திருந்த முதல்வர் சூர்யகாந்தன் லுங்கியும், டி-ஷர்ட்டும் அணிந்து காஷுவலாக இருந்தார்.

    வாங்க, உக்காருங்க என்று கை கூப்பினார்.

    மேஜை, நாற்காலிகள் தவிர... வசதியாக அமர்ந்து பேச தரையில் முக்காலடி உயரத்திற்கு திண்டுகள் இருந்தன. அதில் ஒன்றில் அமர்ந்து கொண்டார். இவர்களும் அமர்ந்தார்கள்.

    சூர்யகாந்தனுக்கு ஐம்பத்தி மூன்று வயது. இன்னும் ஒரு முடிகூட கறுக்காத தலை. ட்ரிம் செய்யப்பட்ட மீசை. அடர்த்தியாய் புருவங்கள். பாரம்பரியமாய் வேட்டி கட்டின முதல்வர்களையே பார்த்து வந்த தமிழகத்தில் பேண்ட் அணிந்து, சட்டையை இன் செய்து, கோட் அணிந்து சட்டசபைக்கு வருகிற வித்தியாசமான முதல்வர்.

    பதினைந்தே வருடங்களில் ஒரு புதிய கட்சியை பிரபலப்படுத்தி எந்தக் கட்சியின் கூட்டும் இல்லாமல் தனித்து நின்று அறுதிப் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சிக்கு வந்த பெருமை சூர்யகாந்தனைச் சேரும்.

    சூரியகாந்தன் தன் சிகரெட் பெட்டியைத் திறந்து அதில் இருந்த கடைசி சிகரெட்டை உருவிக்கொண்டு, இண்ட்டெர்காமில், சிகரெட் பாக்கெட் அனுப்புப்பா என்று கூறிவிட்டுப் பற்ற வைத்துக்கொண்டு, அப்புறம்... என்று நிமிர்ந்தார்.

    கேள்விகள் கேட்கலாமா சார்?

    என்ன அவசரம்? பத்திரிகை எப்படிப் போகுது?

    நல்லாப் போகுது சார்.

    ரெண்டு வாரம் முன்னாடி தலையங்கம் என்ன அப்படி எழுதிட்டாரு?

    என்ன எழுதிருந்தார் சார்?

    அடுத்த தேர்தலிலும் சூர்யகாந்தனே வருவது நல்லது. ஆனால் அதற்கு முன் அவர் தோட்டத்தில் கொஞ்சம் களை எடுத்துக் கொள்வது உதவும்னு எழுதியிருந்தார்.

    உங்க மந்திரி சபையில் சிலரோட போக்கு உங்க நோக்கங்களுக்கு எதிரா இருக்கிற மாதிரி பொதுவா ஒரு கருத்து இருக்கு. அதை மனசில வச்சி எழுதிருப்பார்னு நினைக்கிறேன்.

    அப்படி எதுவும் இல்லைங்களே சுடர், குறிப்பிட்டுச் சொல்லுங்களேன்.

    அமைச்சர் தீர்த்தராமன் அவர் தொகுதில நடந்த ஒரு கொலை வழக்கில சம்பந்தப்பட்டிருக்கிறதா போலீசே வழக்கு தொடர்ந்திருக்கே.

    "ஆமாம். இவரும் சம்பந்தப்பட்டிருக்கலாமோன்னு நினைச்சி வழக்கு போட்டுருக்காங்க. அதனால என்ன? வழக்கு இன்னும் முடியலையே. தீர்ப்பாகலையே, வழக்கு தொடரப்பட்டதாலேயே அவரைக் குற்றவாளியா நினைச்சி நடவடிக்கைகள் எடுக்க முடியாதே. தீர்ப்பு வரட்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டா அப்போ கட்சி நடவடிக்கை எடுக்கலாம். ஒரு விஷயத்தை கவனிக்கணும் நீங்க. குற்றப்பத்திரிகை தாக்கல் பண்றதுக்கு முன்னால

    Enjoying the preview?
    Page 1 of 1