Puthiya Sathurangam
()
About this ebook
ஒரு சேட்டிடம் இருந்து விலையுயர்ந்த பொருள் ஒன்று கொள்ளையர்களால் திருடப்படுகிறது. அந்த விலையுயர்ந்த பொருள் திருடியவரிடமிருந்து பல கைகள் மாறுகிறது. இதனை பரத் மற்றும் சுசிலா கண்டுபிடித்தார்களா? அந்த நபர் யார்? என்பதை வாசித்து அறிவோம்.
Read more from Pattukottai Prabakar
Iravu Pathu Rating: 5 out of 5 stars5/5Bharath VS Susila Rating: 5 out of 5 stars5/5September, October, Christopher! Rating: 5 out of 5 stars5/5Bharath Rajyam Rating: 5 out of 5 stars5/5Kaadhalna Enna Prakash? Rating: 0 out of 5 stars0 ratingsBharath And Pattampoochi Rating: 5 out of 5 stars5/5Thappikka Thadaiyillai Rating: 5 out of 5 stars5/5Oor Urangum Velai Rating: 5 out of 5 stars5/5Puthi Munai Vithai Rating: 5 out of 5 stars5/5Yaarukkum Mugam Illai Rating: 5 out of 5 stars5/5Ini... Iniya... Rating: 5 out of 5 stars5/5Uyirodu Vendum… Rating: 5 out of 5 stars5/5Mazhai Vidum Neram Rating: 5 out of 5 stars5/5Kuttra Surangam Rating: 0 out of 5 stars0 ratingsPushpa Rating: 5 out of 5 stars5/5Narukkendru Naalu Varthai Rating: 0 out of 5 stars0 ratingsThottal Thodarum Rating: 4 out of 5 stars4/5Patharathey Bharath Rating: 5 out of 5 stars5/5Arjunan Ambu Rating: 5 out of 5 stars5/5Sugamthaney Suseela? Rating: 0 out of 5 stars0 ratingsVaruvean! Velvean! Rating: 0 out of 5 stars0 ratingsIthuvarai… Rating: 0 out of 5 stars0 ratingsNaankadi Savukku Rating: 5 out of 5 stars5/5Tick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5
Related to Puthiya Sathurangam
Related ebooks
Avan Thappa Koodathu Rating: 0 out of 5 stars0 ratingsIthu Bharath Utharavu Rating: 0 out of 5 stars0 ratingsPogathey Vara Mattai Rating: 0 out of 5 stars0 ratingsOru Kappal Muthangal Rating: 0 out of 5 stars0 ratingsHello Bharath Sugama? Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Punnagaikkiral Rating: 5 out of 5 stars5/5Ilamai - Ithudan Inaippu Rating: 0 out of 5 stars0 ratingsThirumbi Vaa! Theerpai Thaa! Rating: 0 out of 5 stars0 ratingsVetrikku Vilai! Rating: 5 out of 5 stars5/5Bharath Speaking Rating: 0 out of 5 stars0 ratingsNetru Varai Kaadhali! Rating: 0 out of 5 stars0 ratingsIranthavane, Vanakkam Rating: 5 out of 5 stars5/5Nizhal Mudichu Rating: 5 out of 5 stars5/5Oru Nijam Oru Nizhal Rating: 5 out of 5 stars5/5Ini Ithu Vithi Rating: 0 out of 5 stars0 ratingsVaruvean! Velvean! Rating: 0 out of 5 stars0 ratingsEn Kaadhal Mannavaney Rating: 0 out of 5 stars0 ratingsMattravai Un Madiyil Rating: 0 out of 5 stars0 ratingsThuppakki Vidu Thoothu Rating: 0 out of 5 stars0 ratingsItho... En Ilavarasi! Rating: 5 out of 5 stars5/5Tick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5Iyandhira Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsUn Kathai Muttrum Rating: 0 out of 5 stars0 ratingsEnakku Mattum Theriyum Rating: 0 out of 5 stars0 ratingsThoda Mudiyatha Thoduvanam Rating: 5 out of 5 stars5/5Sollungal Seyyapadum Rating: 0 out of 5 stars0 ratingsThotravan Theerpu Rating: 5 out of 5 stars5/5Vithaithal Vilaiyum! Rating: 5 out of 5 stars5/5Maranam Thappinal Maranam Rating: 0 out of 5 stars0 ratingsPaarkathey! Patharathey! Rating: 5 out of 5 stars5/5
Reviews for Puthiya Sathurangam
0 ratings0 reviews
Book preview
Puthiya Sathurangam - Pattukottai Prabakar
https://www.pustaka.co.in
புதிய சதுரங்கம்
Puthiya Sathurangam
Author:
பட்டுக்கோட்டை பிரபாகர்
Pattukottai Prabakar
For more books
https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
1
ஆயிரக்கணக்கான மேல்தட்டு, கீழ்தட்டு, எவர்சில்வர் தட்டு, பீங்கான் தட்டு என்று எல்லா தட்டு மக்களுக்கும் இலவசப் பொழுது போக்கிடமாக நீளமான (அங்கங்கே அசுத்தமான) கடற்கரையைக் கொண்ட, இரண்டு நாள் தொடர் மழைக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மேடான பகுதிகளுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கிற, தக்காளி பழங்களுடன் ஏறினால், இறங்கும்போது தக்காளி ஸ்க்வாஷ் கிடைக்கச் செய்கிற அற்புத சாதா சர்வீஸ், ஜே சர்வீஸ், வி சர்வீஸ் விடுகிற டீஸலைச் சுவாசிக்கிற மூக்குகள் கொண்ட ஜனங்கள் வாழ்கிற அல்லது வாழ முயற்சி செய்கிற... மெட்ராஸ் என்கிற சென்னை.
அந்த ஃபியட் கார் தாம்பரம் செல்லும் சாலையில் நிதானமாக ஓடிக் கொண்டிருந்தது. வானத்தில் இரவுக்கான முன்னுரை சாம்பல் நிறத்தில் எழுதப்பட்டுக் கொண்டிருக்க... காரில் தலை விளக்குகள் இருட்டைத் துடைத்துக் கொண்டிருந்தன. காரின் பிரேக் பெடல் அழுத்தப்படும் போதெல்லாம் பின்னால் சிவப்பு விளக்குகள் ஒளிர்ந்தன. அந்த சிவப்பு வெளிச்சங்கள் அந்தக் கார் செல்லும் நோக்கத்தில் ஏதோ ஒரு பயங்கரம் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தாமல் உணர்த்தின - என்று எழுதினால் நீங்கள் திகிலடைவீர்கள்.
இப்போது திகில் வேண்டாம்.
அதனால் காருக்குள் இருந்தவர்கள் - மிஸ்டர் அண்ட் மிஸ். பரத் சுசிலா.
சுசிலா காரோட்டிக் கொண்டிருக்க... அருகே...
பரத் காலாட்டிக் கொண்டிருந்தான்.
டேப்பில் சன்னமாக எஸ்.பி.பி. ரஜினிக்காகப் பாடிக்கொண்டிருந்தார். பரத் ஜன்னல் வழியாக சிகரெட் சாம்பல் உதிர்த்துவிட்டுப் புகை இழுத்தான்.
என்ன வேண்டும் உனக்கு?
உங்களுக்குப் பிடிச்ச ஏதாவது வாங்கிட்டு வாங்க.
டூ பீஸ்ல நீச்சல் ட்ரெஸ் வாங்கிட்டு வரவா?
வேணாம், நிறைய இருக்கு.
அதெல்லாம் இப்போ சேராது சுசி! உனக்குத் தெரியாது. நீ ரொம்ப மாறிட்டே. சரி. சரி. அது வேணாம். ரோட்டைப் பார்த்து ஓட்டு, வேறென்ன வாங்கறது?
டெல்லில ஸ்வெட்டர்ஸ் சீப் பரத்!
சரி வாங்கறேன். மேலே என்ன வசனம் எழுதிருக்கணும்?
பிளைனா வாங்கிட்டு வாங்க. நான் பின்னிக்கிறேன். நாலு நாள்ல திரும்பிடுவீங்கதானே?
நிச்சயமா. மூணு நாள் கான்ஃபெரன்ஸ். ஒரு நாள் ஷாப்பிங், ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் பார்க்கணும். அவ்வளவுதான் வேற வேலை இல்லை.
தினம் போன் செய்யணும் பரத்!
ஷ்யூர், புதுசா கேஸ் எதுவும் எடுத்துக்காதே. எதாச்சும் எமர்ஜென்சின்னா என்னைக் கேளு.
கார் தகதகத்துக் கொண்டிருந்த விமான நிலையத்தில் நுழைந்தது. விளக்கொளிபட்ட பட்டுச்சேலை போல கட்டடம் முழுவதும் மின்னிக் கொண்டிருந்தது. அழைக்க, அனுப்ப வந்த கார்கள் ரேசில் ஓடப் போகிறதைப் போல வரிவரியாய்க் காத்திருந்தன. அவற்றின் வழுக்கை மண்டைகளில் ஸோடியம் வேப்பர் விளக்குகள் முகம் பார்த்துக்கொண்டன. காற்றாடிக்கு முன்னால் ஐஸ்பாரை நிறுத்தினதுபோல மயிர்க்கால்களுக்கு ஈரம் கொடுக்கும் காற்று.
பயணிகள் காத்திருக்கும் பகுதியில் சுசிலாவையும், இரண்டு சூட்கேஸ்களையும் விட்டுவிட்டுச் சென்று ரிப்போர்ட் செய்துவிட்டு விமானம் ஐம்பது நிமிடங்கள் தாமதமாகப் புறப்படும் என்பதையும் தெரிந்துகொண்டு வந்து அருகில் அமர்ந்தான் பரத்.
காத்திருந்த மற்றவர்கள் அடக்கிச் சிரித்தார்கள். கட்டுப்படுத்தி இருமினார்கள். குசுகுசுப்பாகப் பேசினார்கள். நளினமாகத் தும்மினார்கள்.
எதுக்கு ரெண்டு சூட்கேஸ் பரத்?
ஒரு சூட்கேஸ் பத்தலை.
அது தெரியுது. அப்படி என்ன பொருள்கள்?
ஒன்றை எடுத்துத் தன் மடியில் வைத்துத் திறக்க முற்பட்ட சுசிலாவின் பனியனில் 'HARVEST AFTER SUNSET' என்றிருந்தது.
எதுக்கு சூட்கேசைத் திறக்கறே? பார்க்கப் போற ரெண்டு நண்பர்களுக்கு சட்டை பிட், பேண்ட் பிட் எல்லாம் இருக்கு. விடு.
ஆனாலும் சுசிலா திறந்தாள். உள்ளே மேலாக இருந்த இரண்டு பாலிதீன் கவர்களைத் திறக்க... இரண்டிலும் உள்ளே சேலைகள் இருந்தன.
பரத். இதான் பேண்ட் பிட்டா?
அட! இது சேலையாச்சே. மை காட்! பை மாறிப் போச்சா?
பரத்! என்ன இதெல்லாம்?
இது ஷேவிங் செட். இது சென்ட் பாட்டில். இது பவுடர் டப்பா.
சீரியஸாச் சொல்லப் போறீங்களா இல்லையா? சேலைகள் யாருக்கு?
செக்ரடேரியேட்ல வேலை பார்க்கிறாங்க ரெண்டு பேரும். சுமா, ரமா. எவ்வளவு காரியம் செஞ்சு கொடுத்திருக்காங்க. என்னோட படிச்சவங்க. பணமா கொடுத்தா வாங்கமாட்டாங்க அதான்.
எனக்கு நம்பிக்கை இல்லை.
வேற எதுக்குன்னு நினைக்கிறே?
உங்க பதில் நேர்மையானதா இருந்தா எதுக்காகப் பொய் சொல்லணும்? என்னையும் கூட்டிட்டுப் போய் சேலை வாங்கியிருக்கலாமே. பரத்! எனக்கு துரோகமா?
என்ன சுசி இது? செய்முறை விளக்கம் சொன்னாக்கூட எனக்கு துரோகம் செய்யத் தெரியாது. அதிலேயும் உனக்கா? சுசி. நீ ருசின்னா நான் நாக்கு. நீ பசின்னா நான் பன்னு. நீ மாசின்னா நான் பங்குனி. என்னைப் போய் சந்தேகப்படறியே? நம்ம ஆபீஸ்ல அபிதான சிந்தாமணி இருக்கு புரட்டிப்பாரு. பரத்னா ராமன்னு பொருள் போட்டிருப்பான். ஆனா என்ன... டி.வி. ராமன் மாதிரி ஜீன்ஸ் போடுவேன். சிகரெட் பிடிப்பேன்.
"போதும், பேசியே சாதிப்பீங்க.