Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ettavathu Swaram..!
Ettavathu Swaram..!
Ettavathu Swaram..!
Ebook229 pages1 hour

Ettavathu Swaram..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வெளிநாட்டில் வாழும் உமா-தேவ் தம்பதியின் ஒரே மகள் சுமதி. தாய் உமா கண்டிப்புடன் வளர்த்தாலும் தந்தை கொடுத்த அதிகப்படியான செல்லம், மற்றும் அதிகப்படியான சுதந்திரத்தால் திருமண மரபுகளை உடைத்து லிவ்விங் டூ கெதரில் ஒரு அமெரிக்கனுடன் சேர்ந்து வாழ முடிவெடுக்கிறாள். இதற்குள் தேவ்... மிருதுளா என்ற இளவயது பெண்ணின் அழகிலும் காதலிலும் ஈர்க்கப்பட்டு, மனைவி உமாவை பிரிந்து அவளுடன் சென்று விட, உமா தனித்து விடப்படுகிறாள். தனிமையின் விரக்தியும், சொல் பேச்சு கேட்காத பெண்ணின் செயலும் அவளை மன அழுத்தத்திற்குள் தள்ளுகிறது. வெறுமையின் விளம்பில் நின்று தத்தளிக்க இயலாமல் தாய்நாடு திரும்புகிறாள். இது தெரிந்து தேவ் மனைவியை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல இந்தியா வருகிறான். ஐந்தாண்டுகள் கணவனைப் பிரிந்து வாழ்ந்த உமாவிற்கு கணவனின் வருகை பெரும் சுமையாகிறது. வாக்குவாதம் வளர்கிறது. கோபத்தில் தேவ் உமாவை கன்னத்தில் அடிக்கிறான். எதிர்பாரத விதமாக உமா மயங்கி விழுகிறாள். பதற்றமான தேவ் உமாவை மருத்துவமனையில் சேர்க்கிறான். உமாவிற்கு என்னவாயிற்று... மகள் சுமதியை ஏன் துணைக்கு அழைக்கிறான்.... உமா மகளை ஏற்றுக் கொள்கிறாளா... மிருதுளாவின் நிலை என்னவாகிறது... என்பதை சொல்வதே இக்கதை....!

Languageதமிழ்
Release dateNov 1, 2022
ISBN6580144709196
Ettavathu Swaram..!

Read more from Ilamathi Padma

Related authors

Related to Ettavathu Swaram..!

Related ebooks

Related categories

Reviews for Ettavathu Swaram..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ettavathu Swaram..! - Ilamathi Padma

    http://www.pustaka.co.in

    எட்டாவது ஸ்வரம்..!

    Ettavathu Swaram..!

    Author :

    இளமதி பத்மா

    Ilamathi Padma

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ilamathi-padma

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம்- 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம்- 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் - 19

    அத்தியாயம்- 20

    அத்தியாயம் - 21

    அத்தியாயம் - 22

    அத்தியாயம் - 23

    அத்தியாயம் - 24

    அத்தியாயம் - 25

    அத்தியாயம் - 1

    விடிந்து விட்டதற்கு அடையாளமாய் கிழக்கு வெளுக்கத் துவங்கியிருந்தது. சாளரம் வழியாக நுழைந்தத் தென்றல் உமாவின் முகத்தை வருடியது. வேப்பம்பூவின் மணம் நாசியை நிறைக்க அதை உள்ளிழுத்து நூரையீரலை சுத்தப்படுத்தினாள்.

    எழுந்து தோட்டத்தை ஒரு வலம் வந்தால் முழுமையாய் விடிந்து விடும்!

    இந்த அதிகாலை பொழுதை முழுமையாய் ரசிக்கக் கற்றுக் கொடுத்தவர் அப்பா. அம்மா அடுப்படியில் வியர்வையில் குளித்துக் கொண்டிருக்க, அப்பா தன்னை மரம் செடி கொடிகளை, அதன் பூக்களை, கிளைகளை, பச்சையத்தின் குளிர்ச்சியை, ஒற்றை இதழ் செம்பருத்தியின் திருகிய இதழமைப்பை வரி வரியாய் விவரிப்பார். கண்கள் விரிய கேட்டுக் கொண்டிருக்கும் உமாவை பாட்டியின் குரல் சிட்டாய் பறக்க வைக்கும்!

    வாசலைத் திருத்தி கோலம் போடு உமா. அப்படியே பூஜைக்குப் பூவைப் பறிச்சுட்டு வா. உங்கப்பனுக்குத்தான் வேலையில்லை உனக்குமா...?

    பாட்டி உச்சரிக்கும் அந்த உனக்குமா - வில் ஒரு அழுத்தம் இருக்கும்.!

    அம்மா இன்று என்ன மெனு சொல்லிட்டீங்கனா, பரபரவென வேலையை முடிச்சுட்டு கிளம்பிடுவேன்அறை வாசலில் நின்று குரல் கொடுத்த பங்கஜத்தைப் பார்த்து புன்னகைத்தாள் உமா.

    "எங்கப் போறே நீ...?

    நேத்தே சொன்னேனே மா கொழுந்தனுக்கு நிச்சயதார்த்தம் போய்ட்டு நாளைக் காலையில் வந்துடுவேன்

    "ஓ... மறந்துட்டேன் பங்கஜம். முத்து போயாச்சா...?

    நேத்தே போய்ட்டாருங்க மா. ஒரு நாள் ராத்திரிதானே துணைக்கு ராஜாத்தி வருவாள்.

    ஹேய்... எனக்கெதுக்குத் துணை...? நான் என்ன சின்னக் குழந்தையா நாற்பது வயசாச்சு.தவிர இது என் வீடு நான் பிறந்து வளர்ந்த இடம்.!

    சரிதான் என் மாமனார் எங்களுக்குப் படிச்சு படிச்சு சொல்லியிருக்கார் உங்களைத் தனியா விடக்கூடாதுனு...

    கலகலவென நகைத்தாள் உமா.

    "பங்கஜம் நீ ஒன்றுமே செய்ய வேண்டாம். நான் பார்த்துக்கிறேன்

    நீ கிளம்பு. இன்றொரு நாள் நான் சமைக்க மாட்டேனா..."

    அய்யோ... என் மாமா தொலைச்சுக் கட்டிடுவாரு மா

    சரி சிம்பிளா ஏதாவது செய். பருப்பு ரசம் கூடப் போதும். தயிர் இருக்குல்ல...? இரண்டு மோர் மிளகாய் வறுத்துடு. ஓடு ஓடு நிற்காதே. உனக்கு நேரமாய்டும்என்றவள் அப்பாவின் ஈசி சேரில் உட்கார்ந்து தடவிக் கொடுத்தாள். இதில் உட்கார தம்பிக்கும் தனக்கும் நடக்கும் போட்டி போட்டியை நினைத்ததும் சிரிப்பு வந்தது. எப்போதும் விட்டுக் கொடுப்பதற்கும் அணுசரித்துப் போவதற்கும் பெண்களுக்கு மட்டுமே சமுதாயம் கற்றுத் தருகிறது. ஆனால் அப்பா அப்படி இல்லை. இருவரையும் சமமாகவே

    வளர்த்தார். வேலகளை இருவருக்குமாய் பிரித்துக் கொடுத்தார். என் ஃபிரண்ட்ஸ் யாரும் ஒரு வேலையும் செய்யறதில்லை. அக்காவோ தங்கையோதான் வேலை செய்வாங்க. இந்த வீட்லதான் எல்லா கொடுமையும் நடக்கும். பெண்கள் செய்யும் வேலைகளையெல்லாம் என் தலையில் ஏன் கட்டுகிறீர்கள் என்று அப்பா இல்லாத போது கத்துவான்.

    நீ போடா நான் பார்த்துக்கிறேன். உங்கப்பா பண்றதெல்லாம் அடாவடிதான் என்ன செய்ய...? என்று பேரனை சமாதானப்படுத்துவாள் பாட்டி.

    "பெண்ணா லட்சணமா நடந்துக்கோ. யார் வீட்டுக்கு வாழப் போறியோ... பிறந்த வீட்டு பெருமையைக் காப்பாற்று. பெண்ணை இப்படி வளர்த்திருக்காங்கனு ஒரு சொல் வரக் கூடாது கவனம்! என்று அடிக்கடி நினைவுப்படுத்தி, படுத்தி எடுப்பாள் பாட்டி.

    நெய்ல் பாலிஸ் போடக் கூடாது. பேன்ட் சர்ட் போடக் கூடாது.லிப்ஸ்டிக் போடக் கூடாது என்று பல கூடாதுகளை உமா அறவே வெறுத்தாள். முக்கியமாய் விபூதி பூசிக் கொண்டுதான் வெளியில் போகனும் என்று சொன்னாலே கடுப்பாவாள். ஆனால் தம்பி பாட்டியை தாஜா செய்து காரியம் சாதித்துக் கொள்வான். பாட்டியும் பேரனை ராஜா ராஜா என்றுத் தாங்குவாள்.

    இட்லி வார்த்துட்டேன் மா சாப்பிட வாங்க என்று பங்கஜம் வந்து நிற்கவும்,

    இதோ குளிச்சுட்டு வந்துடுறேன் என்றவாறு குளியலறைக்குள் நுழைந்த உமாவின் கூந்தலைப் பின்னால் நின்று ரசித்தாள் பங்கஜம். இடுப்பு வரை நீண்டிருந்த கூந்தல் அடர்த்தியாய் அழகாய் இருந்தது!

    பங்கஜம் புறப்பட்டுப் போனதும் வீட்டைப் பூட்டிக் கொண்டு தன்னுடன் படித்தப் பள்ளித் தோழி நான்சி வீட்டு அழைப்பு மணியை ஒலிக்க விட்டு மறைவாய் நின்று கொண்டாள். கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு வெளியே வந்த நான்சி குழப்பத்துடன் மறுபடியும் கதவை சாத்திக் கொண்டு உள்ளேப் போக... மறுபடியும் அழைப்பு மணியை அழுத்த, கதவைத் திறந்த நான்சி உமாவைக் கண்டதும், 'ஹூய்ய்ய்'

    என்று ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வாடி வாடி... வரேனு சொல்லவேயில்லையே எப்ப வந்தே...

    வந்து ஒரு வாரமாச்சு. ஜெட்லாக் போகவே மூன்று நாளாச்சு. பங்கஜம் வித விதமாய் சமைத்துக் கொடுக்க சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கினேன. இன்றுதான் உன் நினைவு வந்தது.

    அடிப்பாவி உன் ஒன்று விட்ட அண்ணன்தான்... என் கணவன் அதுவாவது ஞாபகம் இருக்கா இல்லையா...?

    இருக்கானா...?

    ஆபீசில் ஆடிட்டிங்னு காலையிலேயே போய்ட்டான்.

    ம்ம்ம்... இப்படி கணவனை அவன் இவன் என்று மரியாதையின்றி அவன் தங்கையிடமே சொல்லலாமா...

    ஏய்ய்... போதும் போதும் நீயும் உங்கண்ணனும் எனக்குக் கொடுக்கும் மரியாதைக்கு இது அதிகம்என்ற நான்சி உமாவின் கன்னத்தில் செல்லமாய் ஒரு தட்டுத் தட்டினாள்.

    மாமியோரோட இணக்கம் ஆயாச்சா நான்சி...?

    அந்த மிராக்கிள் ஒருநாள் நடக்கும்! அதுக்கு நான் ஒரு குழந்தை பெத்துக்கனும். நான் ரெடிதான்! உங்கண்ணன்தான் விட்டேத்தியா இருக்கான். இப்ப என்ன அவசரம்னு கேட்கிறான்....? அதை விடு. சுமதி என்ன செய்கிறாள்...

    படிப்பு முடிஞ்சுதா...?

    "ம்ம்ம்... வேலையில் ஜாய்ன் பண்ணிட்டாள். நல்லா படிச்சா, புத்திசாலி, நல்ல வேலை ஆனால் வயிற்றில் நெருப்பை அள்ளி கொட்டிவிட்டுப் போய்ட்டாள். அப்பா செல்லம், அதிக சுதந்திரம் ஒரு அமெரிக்கனோட லிவ்விங் டூ கெதர். எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன் கேட்கலை என்னிஷ்டம் என் ஃபர்ஷனல் இது!இதில் மூக்கை நுழைக்காதேனு சொல்லிட்டாள். தனியே போய் நாலுமாச்சு என்ற உமாவின் குரலில் உயிரில்லை.!

    ஐந்து நிமிட அமைதிக்குப் பின்...

    சரி விடு காலம் மாறுது நம்மால் ஒன்றும் செய்ய முடியாதுஎன்ற நான்சி விசும்பும் உமாவை ஆதரவாய் அணைத்துக் கொண்டாள். இதோ பார் உமா நம்மூர்லேயே நிறை பேர் இப்படித்தான்! நானும் உங்கண்ணனும் ஓரிரு மாதம் அப்படி இருந்திருக்கோம். இப்ப கல்யாணம் பண்ணிக்கலையா... இரண்டு மனசும் ஒன்றாக இணையும் போது கல்யாணம் என்ற சடங்கு அவசியானு சில சமயம் தோணும்!"

    உனக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைனு விட்டுட்டுப் போய்ட்டால் என்ன செய்வது...

    அதை அவள் பார்த்துப்பாள் ஃபிரீயா விடு. அதுக்காகத்தான் நீ இங்க வந்துட்டியா...?

    ஆமாம் அங்க இருக்கப் பிடிக்கலை. எப்பவும் சுமதி நினைவாவே இருக்குஎன்று தேம்பி தேம்பி அழுத உமாவின் முகத்தைக் கையில் தாங்கிக் கொண்டாள்.ஏய்... இதோ பார் நீ வளர்ந்த சூழல் வேறு அவள் வளர்ந்த சூழல் வேறு... தவிர கலாச்சாரம் கற்பு இதெல்லாம்தான் உன்னைக் குழப்புதுனு நினைக்கிறேன். ஜஸ்ட் இக்னோர் இட். வாழ்க்கையில் சந்தோசம்தான் ரொம்ப முக்கியம்! அவள் புத்திசாலி சந்தோசமா இருப்பா. நீ நினைக்கிற மாதிரி இல்லாமல் அவன் நல்லவனாக இருக்கலாம் அல்லவா...?

    "நான்சென்ஸ் அவனைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கலை. கண்களில் குரூரம்தான் தெரியுது!

    ஏதோ ஒரு கால்குலேட் பண்ணித்தான் என் பெண்ணை மயக்கி வச்சிருக்கான். இவள் சேர்த்து வைத்தப் பணத்தையெல்லாம் ஏமாத்தி வாங்கிட்டு ஒடப் போறான். இப்பதான் தெரியும் பெத்தவங்களோட அருமை!

    ஓகே ரிலாக்ஸ். தேவ்க்கு தெரியுமா...?

    எனக்குத் தெரியாது. அவளே சொல்லட்டும். என் பெண் என் பெண் என்று பெருமை பேசித் திரிந்ததற்கு நல்லா முகம் முழுக்க கரியை பூசிட்டாள். என் கூடப் படித்த கிளாஸ் மேட் ஒரு முறை போன் செய்ததற்கே அவன் யாரு, என்ன பேரு, எந்த ஊரு, அடிக்கடி போன் பண்ணுவானா... நீ ஏன் அவனோட சிரிச்சு சிரிச்சுப் பேசுறே... என்று ஆர்ப்பாட்டம் செய்தார். இப்ப எப்படி ரியாக்ட் பண்ணுவார்னு பார்க்கனும்! அவர் ஜெர்மனில், இவள் கனடாவில், நான் இந்தியாவில். நல்லா இருக்குல்ல கேட்க... மேலும் விசம்பத் துவங்கினாள்.

    எல்லாமே ஒருநாள் மாறும் உமா. எவ்வளவு தைரியமானப் பெண் நீ... இப்படி மனசை பரிதவிக்க விடலாமா...?

    "ஐ லூஸ் எவ்ரிதிங்க். இனி யாருக்காக வாழனும்னு புரியலை நான்சி. 5 வருசத்துக்கு முன்பே ஐ லைக் மிருதுளானு, தேவ் விட்டுட்டுப் போனார். மாமியாரிடம் சொன்னதற்கு, ஓ மிருதுளாவா அவள் மல்ட்டி மில்லியரோடப் பெண். தவிர உனக்கு இனி குழந்தை பிறக்காதுனு டாக்டர் சொல்லிட்டார். விட்டுக் கொடுத்துப் போடின்னுட்டாள். ஆண் வாரிசு வேண்டுமாம்! இப்ப பெண் போய்ட்டாள். அன்பு, பாசம், பந்தம் இதுக்கெல்லாம் அர்த்தம் இருக்கா...?

    "ஐயோ நிஜமா இது...?! 5 வருசம் ஆச்சா... அப்புறம் வந்தாரா இல்லையா... அப்பாவும் பெண்ணும் வீடியோ காலில் பார்த்துப்பாங்க பேசிப்பாங்க. இருபது வயசு பெண்ணுக்கு இரண்டு வயசு தம்பி! எங்காவது பார்த்திருக்கியா... நீ ?

    வா சாப்பிட்டு கொஞ்ச நேரம் தூங்கு உங்கண்ணா வரட்டும் பேசி ஒரு முடிவுக்கு வருவோம்.

    "இல்லை நான்சி நான் கிளம்புறேன். எனக்குத் தனிமை வேணும். யாருமில்லாத வீட்டில் அழுது துயரத்தைத் தீர்த்துக்கனும்.

    ஸாரி உன்னையும் கஷ்டப்படுத்திட்டேன். அண்ணனிடம் இப்போதைக்கு எதுவும் சொல்லாதே ப்ளீஸ் வரேன்!

    அத்தியாயம் - 2

    லேப்டாப்பை உயிர்ப்பித்தாள் சுமதி. அருகில் மிக நெருக்கமாய் அமர்ந்திருந்த விக்காஷ் - ன் தலையில் செல்லமாய் முட்டி"தள்ளிப் போ அம்மாவுடன் பேசனும். உன்னைப் பார்த்தால் டென்சனாய்டுவாள். ஒரு வாரமாய் காணோம் போன் செய்தால் கிடைக்கலை. கொஞ்சம் பயமா இருக்கு.!

    உங்கப்பாவிடம் கேளு தெரிஞ்சுடும்.

    அப்பாவின் நினைவில் ஆகாஷ் மட்டும்தான் இருக்கான். மிருதுளாவுடன் இணைந்து வாழத் தொடங்கியதும் அம்மாவிடம் பேசுவதேயில்லைஎன்றவள் குரலில் வருத்தம் இழையோடியது.'

    "ம்ம்ம்... உங்கப்பா செய்ததை நான் செய்தால் நீ என்ன செய்வாய்... ?

    எங்கம்மா மாதிரி உட்கார்ந்து அழ மாட்டேன். என்னை நாலு பேர் லவ் பண்றாங்க அதில் ஒருத்தனை செலக்ட் செய்வேன்.

    "அடிப்பாவி...! சீரியசா சொல்றியா...????

    "ஆமாம்! என்றாள் அழுத்தமாய்.!

    இன்னும் எவ்வளவு காலம் நீங்கள ஆட்டம் போடுவீர்கள்...??? எங்களு க்கு மட்டும் உணர்வுகள் இல்லையா...

    யூ மீன் செக்ஸ்...?

    எஸ்! எங்கம்மா பாவம் 35 வயசிலிருந்து இன்று வரை எந்த ஆணையும் நிமிர்ந்து கூட பார்த்ததில்ல. ஆனால் இது அவசியமானு தெரியலை.

    ஹேய் கமான் பேபி... நாம் அவங்களுக்கு ஒரு நல்லத் துணையைத் தேடித் தருவோம்.

    செருப்பால் அடிப்பாள். வாங்கத் தயாரா...? தவிர அதற்கு அப்பாவை டைவர்ஸ் பண்ணனும். அதைச் செய்ய மாட்டாள். அப்பாவும் டைவர்ஸ் கொடுக்க மாட்டார்."

    நான்சென்ஸ்... என்ற விக்காஷ் கண்களை மூடி கட்டிலில் சாய்ந்தான். தனக்கு பத்து வயதாகும் முன்னரே அப்பாவும் அம்மாவும் பிரிந்து ஆளுக்கொருத் துணையைத் தேடிக் கொள்ள, தன்னை எப்படி பாதித்தது என்று நினைக்கும் போதே கண்கள் கலங்கின. ஒரு இந்தியப் பெண்ணை மணந்து கொண்டால் பிரிவென்பதை சந்திக்க நேராது எனத் தன் நண்பன் கூறியதைக் கேட்டு, அறிவும் அழகும் நிறைந்த சுமதியை தன் வசம் திருப்ப முதலில் தமிழ் படித்தான். வேஷ்ட்டி கட்டப் பழகினான். ஓய்வு நேரங்களில் ஒரு இந்திய ரெஸ்ட்டாரண்ட்டில் சமையல் கற்றான். எதற்கும் மசியவில்லை சுமதி. தினம் தவறாமல் ஐ லவ் யூ மெசேஜ் அனுப்ப, ஐ ஹேட் யூ என்று பதில் அனுப்பினாள். சோர்ந்து போனவன் அலுவல விசயமாய் கனடா போய் திரும்பும் போது, He is my man என்று ஒரு மலையாளியை அறிமுத்தினாள். அதிர்ந்தான்! ஒரு வார்த்தை கூடப் பேசாமல் ஓரிரு நாளில் வேலையை ராஜினாமா செய்து விட்டு நியூ ஜெர்சியிலிருந்து கனடாவிற்கு இடம் பெயர்ந்தான். பத்தே நாளில் சுமதியும் கனடா வந்தாள். அதே அலுவலகத்தில் விக்காஷ் -ன் மேலதிகாரியாக வந்து நிற்பாள் என்று விக்காஷ் கற்பனை கூட செய்ததில்லை. எல்லோரும் சுமதியை வரவேற்று வாழ்த்துகள் தெரிவிக்க, விக்காஷ் தன் சீட்டில்

    Enjoying the preview?
    Page 1 of 1