Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyir Nee..! Udal Naan..!
Uyir Nee..! Udal Naan..!
Uyir Nee..! Udal Naan..!
Ebook176 pages1 hour

Uyir Nee..! Udal Naan..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சின்னஞ்சிறு வயதில் அறிமுகமாகி, நேசத்தாலும், பாசத்தாலும் தங்கள் நட்பை வளர்த்துக் கொண்டார்கள் இருபெண்கள். அவர்கள் வாழ்க்கையில் தென்றல் மட்டுமே வீசவில்லை. பல திடுக்கிடும் திருப்பங்களும், புயல்களும் வீசியபோதும் எப்படி தோழிகள் ஒருவருக்கொருவர் ஆதரவாக நின்று அவற்றை எல்லாம் எதிர்கொண்டு, இறுதிவரை தங்களுக்காக மட்டும் வாழாமல் தங்கள் வாழ்க்கையை பொதுநல சேவைக்காக அர்ப்பணித்தார்கள் என்பதைக் கூறும் நட்பூ மணம் வீசும்...

“உயிர் நீ... உடல் நான்..!!” புதினம் உங்கள் பார்வைக்காக.

Languageதமிழ்
Release dateDec 3, 2022
ISBN6580152209278
Uyir Nee..! Udal Naan..!

Read more from Viji Sampath

Related to Uyir Nee..! Udal Naan..!

Related ebooks

Related categories

Reviews for Uyir Nee..! Udal Naan..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyir Nee..! Udal Naan..! - Viji Sampath

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உயிர் நீ..! உடல் நான்..!

    Uyir Nee..! Udal Naan..!

    Author:

    விஜி சம்பத்

    Viji Sampath

    For more books

    https://www.pustaka.co.in/home/author/viji-sampath

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் – 2

    அத்தியாயம் – 3

    அத்தியாயம் – 4

    அத்தியாயம் – 5

    அத்தியாயம் -6

    அத்தியாயம் – 7

    அத்தியாயம் -8

    அத்தியாயம் -9

    அத்தியாயம் – 10

    அத்தியாயம் – 11

    அத்தியாயம் -12

    அத்தியாயம் – 13

    அத்தியாயம் -14

    அத்தியாயம் – 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 1

    "எடுத்த காரியம் யாவினும் வெற்றி,

    எங்கு நோக்கினும் வெற்றி மற்றாங்கே

    விடுத்த வாய்மொழிக்கெங்கணும் வெற்றி

    வேண்டினேனுக்கருளினள் காளி.!"

    பாரதி பாடியதைப் போல... சிங்கப்பூரில் ஷ்யாமளி தொட்டதெல்லாம் துலங்கியது.அவளிடம் யோசனை கேட்டு... அவளிடம் உதவி பெற்றுப் போனவர்களுக்கும் அப்படியே அனைத்தும் நன்மையாக நடந்தது. ஷ்யாமளி மீது அன்பும், பாசமும் கொண்ட மக்கள் அவளைச் சுற்றிலும் இருக்க, ஷ்யாமளி இந்தியா சென்று விட முடிவு செய்ததுதான் அவர்களை மனவருத்தமடையச் செய்தது.

    சிங்கப்பூர் சாங்கி ஏர்போர்ட்!

    இந்தியாவுக்குக் கிளம்பிய ஷ்யாமளியை வழியனுப்ப வந்த கூட்டத்தைப் பார்த்து அங்கிருந்த மற்ற பயணிகளுக்கு ஒரே ஆச்சர்யம். இந்தப் பெண்மணி யாராக இருக்கும்...? ஏதோ சினிமா நடிகைக்குக் கூட்டம் கூடுவது போல இத்தனை பேர் திரண்டிருக்கிறார்களே என்று அவர்களும் முண்டியடித்துக் கொண்டு வந்து பார்க்க...

    அழகான காட்டன் புடவையில்... நெடுநெடுவென வளர்த்தியாக இருந்த ஷ்யாமளிக்கு வனப்பான உடல் வாகு, சந்தன நிறம், சுருண்ட கூந்தல் இயல்பான, வசீகரமான புன்னகை. முத்துப் பல் தெரிய பேசும் அவள் குரலினிமையைக் கேட்டவர்கள், அவள் பாடினால் எப்படி இருக்கும் என்று கண்டிப்பாக யோசிப்பார்கள். ஹ்ம்ம்ம்ம்.! ஷ்யாமளி பாட்டெல்லாம் பாடி எத்தனையோ வருடங்களாகி விட்டது.

    எப்போது சிங்கப்பூர் வந்து ஆருயிர்த் தோழி லலிதாவின் குடும்ப பிசினஸான ஜவுளி பிசினசைக் கையில் எடுத்தாளோ அப்போதிருந்து இந்த நொடி வரை பிசினசை விஸ்தரித்ததோடு... அருமை மகள் விபாவரியைக் வளர்ப்பதிலும் .மீதியுள்ள நேரத்தை அங்கிருக்கும் தமிழர்களின் நலனைக் கவனிப்பதிலுமே செலவிட்டாள். கொஞ்ச நேரம் கூட உடம்புக்கும், மனதுக்கும் ஓய்வு கொடுக்காமல் அவள் உழைத்த உழைப்பு... ஏராளமான பணத்தைக் கொடுத்ததோடு கடந்தகால கசப்புகளை, வருத்தங்களைத் திரும்பவும் நினைவுக்கு கொண்டு வராமல் இருக்கவும் உதவியது.

    இப்போது திரும்பவும் தாய்நாடான இந்தியாவுக்கே சென்று நிரந்தரமாக அங்கேயே இருந்து விடலாம் என்ற முடிவுடன் கிளம்பியவளைக் கண்ணீர் மல்க வழியனுப்ப வந்தவர்களில் கொஞ்சம் பேர் பிசினஸ் தொடர்[புடையவர்கள் என்றால் மற்றவர்கள் அவளுடைய தோழமைகளும், அங்குள்ள சமூக ஆர்வலர்களும்தான்.

    என்ன செய்வது...?

    இதற்கு மேல் சிங்கப்பூரில் இருக்க அவளுக்கு மனமில்லை. அதனால்தான் பிசினஸை நம்பிக்கையான ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு ஊரைப் பார்க்கக் கிளம்பி விட்டாள்.

    செக்யூரிட்டி செக் இன் க்கான அழைப்பு வர, அனைவரிடமும்

    இன்முகத்தோடு விடை பெற்ற ஷ்யாமளி, விபாவரியை ஒரு கையிலும்... ஹேண்ட் லக்கேஜை ஒரு கையிலும் பிடித்தவாறு எஸ்கலேடரில் ஏறினாள்.

    எத்தனைக்கெத்தனை ஷ்யாமளி இந்தியா போவதில் உற்சாகமாக இருந்தாளோ... அத்தனைக்கத்தனை விபாவரி ஒரே சோகவரியாக இருந்தாள். அவளுக்கு இந்தியா செல்வதில் துளிக்கூட இஷ்டமில்லை. அவளும்தான் என்ன செய்வாள்? பிறந்த நாள் முதலாக சிங்கப்பூரிலேயே இருக்கிறாள். ஆண்டுக்கு ஒரு முறை ஒரு வாரம் இந்தியாவில் இருப்பது ப்ரச்னை இல்லை... இந்தியாவிலேயேதான் இனிமேல் இருக்கப் போகிறோமென்று தன்னை வற்புறுத்தி அழைத்துப் போகும் தாயின் மீது பயங்கரமான கோபத்துடன் இருந்தாள். இங்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் அவளுக்கு அத்தனை பேரையும் விட்டுப் பிரிவது அவளுக்குத் தாங்கொணாத் துயராக இருந்தது.

    மகள் தன் மேல் கோபத்துடன் இருப்பது ஷ்யாமளிக்குத் தெரியாதா என்ன.? சின்னப் பெண் அவளுக்கென்ன தெரியும் தாய்நாட்டின் அருமையும், பெருமையும்...! அங்கே போனால் எல்லாம் சரியாகிவிடும் .இதோ ஃப்ளைட்டுக்காகக் காத்திருக்கும் நேரத்தில்... ஏர்போர்ட்டின் உள்ளே இருக்கும் கடைகளில் மகளுக்குப் பிடித்தவற்றை வாங்கிக் கொடுத்து விட்டால் அவள் கோபமெல்லாம் புஸ்வாணமாகி விடாதா என்ன? அது போலவே… கடைகளுக்குள் புகுந்து, தனக்குப் பிடித்தவற்றை வாங்கிக் கொண்டதில் கொஞ்சம் சமாதானமாகிப் போனாள் விபா.

    நான்கு மணி நேர விமானப் பயணத்தில்... விபா தூங்கி விட...

    ஷ்யாமளிக்குக் கடந்தகால நினைவுகள் விழித்துக் கொண்டன.

    இதோ தன் தோள் மீது சாய்ந்து கவலையற்றுத் தூங்கும் விபாவின் வயதில்தான் 1980 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஷ்யாமளி கிராமத்திலிருந்து பெற்றோர்களுடனும், எட்டு வயதுத் தங்கை விஷாலியுடனும் சென்னைக்கு வந்தாள். அந்த வயதிலேயே தங்கள் குடும்பக் கஷ்டம் என்னவென்பதை காலம் அவளுக்கு போதித்திருந்தது. சென்னைக்கு வந்தவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த முகவரியைப் போவோர், வருவோரிடமெல்லாம் காட்டி ஒரு வழியாகத் திருவல்லிக்கேணியில் லலித பவனம் எனப் பெயரிடப்பட்டிருந்த ஒரு பெரிய பங்களாவை, இல்லை... இல்லை ப்ரம்மாண்டமான கேட்டை அடைந்தார்கள்.

    உள்ளிருக்கும் பங்களா தெரியாதவாறு சுற்றிலும் நெடுநெடுவென வளைர்ந்த மரங்கள் மறைத்துக் கொண்டிருக்க, முன்புறமிருந்த கேட். உள்புறமாகத் தாளிடப்பட்டிருந்தது.

    கேட்டருகில் நின்று கொண்டு...

    கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே போகலாமா...? நாய் ஏதாவது இருந்து மேலே விழுந்து பிடுங்கி விட்டால் என்ன செய்வது...?

    என்ற பயத்தில் தயங்கியபடியே நின்றிருந்தார்கள்.

    ஷ்யாமளி எப்போதுமே சாது... பதவிசாக நடந்து கொள்வாள். விஷாலியோ விஷமக் கொடுக்கு. மளமளவென்று கேட்டில் கால் வைத்து ஏறியவள்...உள்பக்கம் யரையோ பார்த்து...

    ரொம்ப நேரமா நாங்க வெளியவே நின்னுகிட்டிருக்கோம்... கொஞ்சம் வந்து கேட்டைத் திறங்களேன்.

    ஏய் கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டியா? அம்மா மீனாக்ஷி அதட்ட...

    எவ்வளவு நேரம் நிக்கிறதாம்... கால்வலி, பசி வேற

    விஷாலி அலுத்துக் கொண்ட நேரம் வாசல் கேட் திறந்து கொண்டது.

    பாலாம்பிகை போல அழகே உருவாய்... ஒரு சிறுமி... கருவண்டுக் கண்களும் தெய்வீகச் சிரிப்புமாய் கையில் ரோஜா மலர்களுடன் நின்று கொண்டிருக்கப் பக்கத்தில் ஒரு வயதானவர்... தோட்டக்காரராக இருக்க வேண்டும்.

    யாருங்க நீங்க... உங்களுக்கு என்ன வேணும்?

    தோட்டக்காரர் ஷ்யாமளியின் அப்பாவைப் பார்த்து கேட்க...

    இந்த வீட்டு முதலாளியப் பாக்கணும்... நான் கிராமத்திலிருந்து சபாபதி ஐயா அனுப்பி வந்திருக்கேன்

    என்றார் கணேசன் மிகவும் பவ்யமாக.

    வாங்க... உள்ளே வாங்க...

    தோட்டக்காரர் முன்னே போக...

    வெல்கம் எம் பேரு லலிதா... என்னை லல்லின்னும் கூப்பிடலாம்"

    ஷ்யாமளி, விஷாலிக்கு ரோஜாப்பூவைக் கொடுத்து அந்தக் குட்டிப் பெண் அவர்களை வரவேற்ற அந்த கணம் தேவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட நேரமாக இருந்திருக்க வேண்டும்.

    தோட்டக்காரர் வீட்டினுள் போய் முதலாளி சிவகுருவிடம் விவரம் சொல்ல அவரும் வெளியே வராண்டாவுக்கு வந்தார். வந்தவரிடம் கணேசன் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினார்.

    கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தார் சிவகுரு. அவருடைய ஆத்ம சினேகிதன் பாலக்ருஷ்ணனின் அப்பா சபாபதி எழுதி இருந்தார். நீண்ட கடிதம்... நேரில் பேசுகிறாற் போலவே இருந்தது.

    அன்புள்ள சிவா,

    உனக்கும் உன் குடும்பத்தார்க்கும் என் மனமார்ந்த நல்லாசிகள். இங்கு நான் நலம். நீங்கள் அனைவரும் நலம்தானே?

    இந்தக் கடிதம் கொண்டு வரும் கணேசன் இத்தனை நாள் என்னுடைய வீட்டில் வரவு, செலவு, தோட்டம் துரவு இவற்றைக் கவனித்துக் கொண்டு என்னுடைய வளர்ப்புப் பிள்ளை போல கூடவே இருந்தான். மிகவும் நல்லவன். சூதுவாது தெரியாத அப்பிராணி. இப்போது எனக்கு உடல்நிலை மிகவும் மோசமாகி விட்டபடியால் என்னுடைய சொத்துகள் அனைத்தையும் விற்று விட்டு பம்பாய்க்கு நான் என்னுடைய மகள் வீட்டுக்கே போகிறேன். மருமகன் டாக்டர் என்பதால் அங்கேயே வரும்படி வற்புறுத்துகிறார்கள். உன்னுடைய ஸ்னேகிதன்தான் அல்பாயுசிலேயே என்னைத் தவிக்க விட்டுப் போய் விட்டானே. இங்கிருந்தால் அவனுடைய நினைவு என்னை மிகவும் வாட்டுகிறது கணேசனை மனதில் வைத்துதான் இத்தனை நாட்கள் அவர்கள் அழைத்தும் நான் போகவில்லை. ஆனால் இனியும் அவர்கள் அழைப்பை நான் தட்டிக் கழிக்க முடியாது. கணேசனுக்கு ஏதாவது வியாபாரம் சொந்தமாக வைத்துத் தரலாம் என்றால்...எனக்கு அதுக்கெல்லாம் சாமர்த்தியம் போதாதே அப்பா என்று தயங்குகிறான். அது மட்டுமல்லாமல் அவனுடைய இரு பெண்களும் படிக்க ஆசைப்படுகிறார்கள்.

    யோசித்ததில் எனக்கு உன்னுடைய நினைவுதான் வந்தது. நீ போனமுறை அறுவடை சமயம் கிராமத்துக்கு வந்த போது உன்னுடைய ஜவுளிக்கடைக்குப் பொறுப்பான, நம்பிக்கையான ஓர் ஆள் வேண்டும் என்று கேட்டது நினைவுக்கு வந்தது. கணேசனை கடைக்கும் அவன் மனைவியை வீட்டு வேலைகளுக்கும் சேர்த்துக் கொள். குழந்தைகளை நல்ல பள்ளிக்கூடமாகப் பார்த்து சேர்த்து விடு. இதை நான் ஒரு வேண்டுகோளாகத்தான் கேட்கிறேன். வாடகைக்கு வீடு பார்த்து, அட்வான்ஸ் கொடுக்கவும்... வீட்டு சாமான்கள் வாங்கவும் கணேசனுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்திருக்கிறேன். நீ செய்யப் போகும் உதவிகளுக்கு என் நன்றி. உன்னுடைய நிலங்களை நம்பிக்கையான ஒருவரிடம் ஒப்படைத்திருக்கிறேன். அவரைப் பற்றிய விவரங்களையும் இணைத்திருக்கிறேன். இப்படிக்கு சபாபதி.

    தன் சோகத்தை மறந்து, தன் பணியாளர் கணேசனுக்காக உள்ளன்போடு அவர் எழுதி இருந்த கடிதம் சிவகுருவின் மனதை உருக்கியது. அவருக்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் தோன்றியது. சபாபதியும், சிவகுருவின் அப்பா நடேசனும்

    Enjoying the preview?
    Page 1 of 1