Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ennarumai Thozhi..!
Ennarumai Thozhi..!
Ennarumai Thozhi..!
Ebook197 pages1 hour

Ennarumai Thozhi..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் நல்ல நட்பு பாராட்டியவரும், மனம்விட்டுப் பேசிச் சிரித்துப் பழகக்கூடிய வெகு சிலரில் ஒருவராகவும் இருந்த டி.ஏ. நரசிம்மன் அவர்களின் மனதில் நிலைத்த நினைவுகள் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரும்புப் பெண்மணி என வர்ணிக்கப்படும் ஜெயலலிதாவுடனான அவருடைய நேரடி சந்திப்புகள். இதுவரை இந்த உலகம் கண்டிராத ஒரு ஜெயலலிதாவை உங்களுக்கு அனுபவபூர்வமாக அறிமுகப்படுத்தும் என்பது நிச்சயம்.

Languageதமிழ்
Release dateFeb 4, 2023
ISBN6580132109337
Ennarumai Thozhi..!

Read more from Kalachakram Narasimha

Related to Ennarumai Thozhi..!

Related ebooks

Reviews for Ennarumai Thozhi..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ennarumai Thozhi..! - Kalachakram Narasimha

    http://www.pustaka.co.in

    என்னருமை தோழி..!

    Ennarumai Thozhi..!

    Author :

    காலச்சக்கரம் நரசிம்மா

    Kalachakram Narasimha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalachakram-narasimha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    1

    என்னருமை தோழியே…!

    பல நாட்கள் என்னிடம் நீங்கள்

    கூறியிருந்த சேதிகளை

    இதுவே அம்மாவின் நியதிகள்

    என்று பறைசாற்ற போகின்றேன்…

    இன்னுயிர் தோழியே…

    அன்றொரு நாள் உங்கள் வாழ்க்கை

    சரிதத்தை இயற்ற நான் அனுமதி

    கோரி நின்றபோது நீங்கள்,

    "அதற்கான நேரம் வரும்…

    நீதான் அதை எழுதுவாய்…" என்றீர்கள்.

    இதோ அந்த நேரமும் அமைந்துவிட்டது.

    ஆனால்… வாசிக்கத்தான் நீங்கள் இல்லை!

    நான் கோரிய அனுமதியை

    அன்றே வழங்கியிருந்தால்,

    யாரும் அறிந்திராத

    உங்களது மென்மையான இதயத்தினை

    உமக்குள் நீங்கள் ஒளிந்திருந்த…

    குதூகல கோமளத்தின் சிறப்புகளை

    உங்கள் பார்வையிலேயே வெளிக்

    கொணர்ந்திருப்பேனே…!

    இப்போது கூறினால் என்னாகும்?

    இரும்புக்குள் ஏது மென்மை

    என்றல்லவோ கேட்பார்கள்?

    உங்களைப் பற்றிச் சொல்கின்ற இந்த

    புதியவன் யார் என்கிற வினாக்களும் எழுமே…

    அரசியலுக்காக உங்களைச் சுற்றியவர்கள்,

    பொருளுக்காக உங்களைச் சுற்றியவர்கள்

    இன்னும் பதவி, புகழ் மற்றும் விருதுகளுக்காக

    உங்களைச் சுற்றியவர்களையெல்லாம் கடந்து,

    ‘உங்கள் மன நிம்மதிக்காகவும், ஆன்மிகத்

    தேடலுக்காகவும்

    நீங்கள் ஏற்படுத்திக்கொண்ட நட்பு நான்’

    என்று என்னை நானே அறிமுகப்படுத்திக்கொள்ளும்

    இந்த வாய்ப்பும் நீங்கள் எனக்கு நல்கியதுதான்.

    என்னருமைத் தோழியே…!

    அரண்மனை அறிந்தாய், அரியணை அறிந்தாய்.

    உன்னுள் ஒருபுறம் இருந்ததை நினைத்திட மறந்தாய்.

    வருகின்ற வழக்குகளைத் தீர்த்து முடித்தாய்.

    உன்மனதின் வருத்தங்களைத் தீர்க்க மறுத்தாய்…

    மகள், சகோதரி, மாணவி, நாட்டியத் தாரகை,

    பாடகி, நடிகை, எழுத்தாளர், விமர்சகர்,

    தலைவி, முதல்வர், அம்மா ஆகிய

    நிலைகளையெல்லாம்

    கடந்து ஏமாற்றங்களும் சோகங்களும் நிறைந்த

    தனிமையில் மட்டும் நீங்கள் வெளிப்படுத்திய

    அந்த அம்மு என்கிற குறிஞ்சி மலரைப்

    பற்றிப் பேச விழைகிறேன்.

    உமது நினைவுகளுக்குப் பல்லாண்டு

    பாடுகிறேன்.

    (மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் நல்ல நட்பு பாராட்டியவரும், மனம்விட்டுப் பேசிச் சிரித்துப் பழகக்கூடிய வெகு சிலரில் ஒருவராகவும் இருந்தவரின் மனதில் நிலைத்த நினைவுகள் இந்த நூலில் பதிவு செய்யப்படவிருக்கின்றன. இரும்புப் பெண்மணி என வர்ணிக்கப்படும் ஜெயலலிதாவுடனான அவருடைய நேரடி சந்திப்புகள். இதுவரை இந்த உலகம் கண்டிராத ஒரு ஜெயலலிதாவை உங்களுக்கு அனுபவபூர்வமாக அறிமுகப்படுத்தும் என்பது நிச்சயம்)

    2

    என்னருமை தோழி…!

    உங்களது திரைப்பட வாழ்க்கை வெண்ணிற ஆடையில் துவங்கிய போதே, நமது நட்புக்கு கட்டியம் கூறப்பட்டுவிட்டது போலும். நீங்கள் மிகவும் விரும்பி நடித்த நகைச்சுவை படங்களுக்கு வசனங்களை எழுதிய ‘சித்ராலயா’ கோபுவின் ஏழு வயது மகன் நரசிம்மனாக உங்களை முதலில் சந்தித்தேன்.

    உங்கள் அரசியல் ஆசான் கொணர்ந்த சத்துணவுத் திட்டத்தை பற்றி ஆராய்ச்சி புத்தகம் எழுதுவதற்காக, அப்போது அத்திட்டத்தின் செயல்பாட்டுத் தலைவராக இருந்த உங்களை பேட்டி காண குருநானக் கல்லூரி மாணவனாக வந்து சந்திக்கையில் உங்கள் அறிமுகம் கிடைத்தது. அதன்பின் உமது அறுபதாவது பிறந்த நாளில் மீண்டும் நமது நட்பு துளிர்விட்டது. இறுதிவரையில் அந்த நட்பு தொடர்ந்தது அல்லவா!

    எனது எழுத்துகளாலோ, பத்திரிகை தொழிலாலோ நான் திரைப்படக் குடும்பத்தை சேர்ந்தவன் என்பதாலோ, நீங்கள் எனக்கு இந்த அங்கீகாரத்தினை தரவில்லை. ஆன்மீகம் அல்லவோ நம்மை ஒன்று சேர்த்தது! தாங்கள் எந்த நட்பையும் தொடர்ந்தது கிடையாது, என்பதையும் நான் அறிவேன்.

    தங்களிடம் உள்ள நெருக்கத்தை ஒரு எழுத்தாளர் சுய விளம்பரம் செய்து, ‘நான் ஜெயலலிதாவின் மனசாட்சி’ என்று கூறியதால், அந்த நட்பையே முறித்து கொண்டதை நான் அறிவேன்!

    ஆனால், என்னிடம் கொண்ட நட்பை மட்டும் கடைசிவரை நீடிக்க செய்தீர்கள். அது நான் செய்த பெரும் பாக்கியம்தான்! என்னை தங்களின் நிழல் நண்பன் என்று தாங்கள் பெருமையுடன் கூறியது என் செவிகளில் இன்னும் ரீங்கரிக்கின்றது. ‘நரசிம்மன்’ என்ற என் பெயர் தங்களது குலக்கடவுளை நினைக்கச் செய்வதுபோல் உள்ளது என்று புன்னகையுடன் கூறுவீர்களே!

    ஆணின் விலா எலும்பை உடைத்து முதல் பெண்ணை உருவாக்கினான் இறைவன் என்பது ஒரு நம்பிக்கை. ஆனால் நாங்கள் கண்கூடாக கண்டது, தன்னை எதிர்த்த அத்தனை ஆண்களின் விலா எலும்புகளையும் உடைத்து நொறுக்கி, அவற்றை நூலில் கோர்த்து, பட்டாபிஷேக மாலையாக அணிந்து, தமிழக சிம்மாசனத்தில் இறுதிவரை கோலோச்சியது உமது கம்பீரத் தலைமை அல்லவா…!

    தங்களது விலா எலும்புகளை காத்து கொள்வதற்காகவே உங்கள் முன்பாகப் பல ஆண்கள் குனிந்து கும்பிடு போட்டு நின்றனர். உங்களுக்கெதிராக வேட்டிகள் மட்டுமா வரிந்து கட்டின…? வடநாட்டு பைஜாமா குர்தாக்களும், ஆடம்பர கோட் சூட்களும், கூலிப்படை லுங்கிகளும்கூடத்தான் அணி திரண்டன.

    ***

    உங்களுக்கு நினைவிருக்கிறதா?

    டெல்லி மேல் சபையில் நீங்கள் ஆற்றிய உரைகளை திரட்டி புத்தகமாக செய்து அதனை மேற்பார்வையிடும் பணியினை எனக்கு தந்தீர்களே. அந்த பணி நிறைவடைந்து, நீங்கள் அதற்குரிய சன்மானத்தை எனக்கு தர முற்பட்டபோது, உம்மை பற்றி ஒரு புத்தகம் எழுத அனுமதி தந்தால் அதுவே எனக்கு பெரும் சன்மானம் என்று நான் கேட்டேன். அப்போது நீங்கள் சிரித்தபடியே வாக்கு தந்தீர்கள் - ‘உரிய நேரம் வரும்… அப்போது வாய்ப்பு உனக்குத்தான்’ என்றீர்களே. அந்த உரிமையை இப்போது, இப்படி எடுத்துகொள்ளும் நிலை வரும் என்று கனவிலும் நான் நினைத்ததில்லை.

    ஒரு நாள் நான் தங்களை பற்றி எழுத வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் என்னுடன் அடிக்கடி சந்திப்பினை ஏற்படுத்திக் கொண்டீர்களோ என்று இப்போது யோசிக்கிறேன்.

    சரி… அதில் எந்த சந்திப்பில் இருந்து துவக்குவது? தமிழகத்தையும் அதன் மக்களையும் நீங்கள் பரிதவிக்க வைத்த அந்த 75 நாட்களில் இருந்தே துவங்குகிறேன்.

    உங்களது போராட்ட குணமும் சிங்கமுகத்தானின் கருணையும் உங்களை மீண்டும் எங்களிடம் சேர்த்துவிடும் என்று உறுதியுடன் நம்பினேன். உடல்நலம் குன்றி அப்போலோவில் அனுமதிக்கப்பட்டீர்கள் என்ற செய்தி வந்ததும், சாதாரண காய்ச்சல்தானே என கவலையை விட்டொழித்தேன். ஆனால் நவராத்திரி கொலு துவங்கும் நாள் சிவராத்திரியாக மாறியது எனக்கு.

    தாங்கள் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வந்ததும் பதைபதைத்து போய் காந்தி ஜெயந்தியன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு ஓடி வந்தேன். உங்களது நெருங்கிய நண்பன் என்று நீங்கள் அளித்திருந்த உரிமை அங்கே எனக்கு வழிவிட்டது. மற்றவர்களைப்பற்றி நான் அறியேன்! எனக்கு எவ்வித தடைகளும் இல்லை.

    கலங்கிய கண்களுடன் இருந்த உங்கள் தோழி சசிகலா அவர்கள் என்னை வரவேற்று நிலைமையை விவரித்தார். கிருமி ஒன்று உமது சுவாசப்பையில் ஆட்டம் போட்டு, அங்கங்களை செயலிழக்க வைக்க முயல்வதாக கண்களில் நீருடன் சொன்னார். அக்காவின் ஆன்மீக நண்பர் நீங்கள்… உங்கள் பிரார்த்தனையின் மீது எப்போதுமே அவருக்கு நம்பிக்கை உண்டு. சீரிய சிங்கம் என்று அவர் வழிபடும் நரசிம்மரிடம், என் அக்காவை மீட்டுத் தரும்படி பிரார்த்தனை செய்யுங்கள் என்றார்.

    மகாராணியாக ஒய்யார நடை நடக்கும் தாங்கள் கிழிந்த நாராக கிடக்கிறீர்கள் என்பதை அறிந்தபோது துயரத்தில் கண்கள் குளமாயின. தாங்கள் குணமாகி வீடு திரும்புவது திண்ணம் என்று நான்கூற, சசிகலா அவர்கள் நம்பிக்கையுடன் கேட்டுக் கொண்டார். அதன் பிறகு அவ்வப்போது அப்பல்லோ வந்து நீங்கள் பக்தியுடன் உச்சரிக்கும் நரசிம்மதுதியை கூறி வந்தேன். அக்டோபர் 15 பூரண நிலவன்று உமக்காக ஆலயங்களில் தீபங்கள் ஏற்றப்பட்டன. உங்களுக்காக எனது வேண்டுதலும் தொடர்ந்தது.

    ***

    நவம்பர் நான்கு, வெள்ளிக்கிழமை அலுவலக பணியில் இருந்தேன். இரவு மணி எட்டு நல்ல செய்தியை நல்கினார், உமது உதவியாளர் பூங்குன்றன். ‘அம்மா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்’ என்றார். அம்மா உணவகங்கள் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு உணவளித்த நீங்கள் சிறிது சிறிதாக தயிர் அன்னத்தை சிரமத்துடன் உட்கொண்டதாக அறிந்தபோது எனக்கு பெரும் நம்பிக்கை ஏற்பட்டது.

    மருத்துவமனை வந்து சசிகலா அவர்களிடம் எனது மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். உங்கள் சிகிச்சை தொடரவிருந்த இரண்டாம் மாடியறை எண் 2035-ல் மருத்துவ ஏற்பாடுகள் நடைபெறுவதையும் கண்டேன். எனதருமை தோழி மீண்டு விட்டார் என்கிற மனநிறைவுடன் இல்லம் திரும்பினேன். அதன்பிறகு, மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த தாங்கள், நவம்பர் 12 சனியன்று தனியறைக்கு மாறியதாக பூங்குன்றன் வாயிலாகத் தெரிந்து கொண்டேன். நீங்கள் போயஸ் தோட்டத்திற்கு திரும்பும் நாளுக்காக காத்திருந்தேன்.

    ***

    அந்த நம்பிக்கை எல்லாம் பொய்த்துப்போய், அந்தக் கொடுஞ்செய்தி வந்தபோது, இனி உங்களை நேரில் பார்த்துப் பேச வழியில்லை என்று உணர்ந்தபோது… என் நினைவில் வந்தது உங்கள் அறுபதாம் பிறந்தநாளையொட்டி நான் உங்களுக்கு விடுத்த முன்னெச்சரிக்கையும் அதைத்தொடர்ந்து நடந்த அதிர்ச்சிகரமான நிகழ்வுகளும்தான்.

    அதிலும் மரணம் குறித்து நீங்கள் தெரிவித்த அந்தக் கருத்து…!

    3

    2011-ம் ஆண்டில் நடைபெற்ற எனது தந்தை சித்ராலயா கோபுவின் சதாபிஷேகத்திற்கு உங்களை அழைக்க நான் வந்தபோது, எண்பதாம் வயதில் அடியெடுத்து வைப்பது எத்தனை உன்னதமான விஷயம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்த நீங்கள், எனக்கு எண்பதாம் வயது வரும்போது எப்படி கொண்டாடப் போகிறேனோ… என்று கற்பனையில் ஆழ்ந்தீர்களே… எப்படி அதற்குள் புறப்பட்டு விட முடிவெடுத்தீர்கள்?

    வழக்கம்போல், தாங்கள் எடுத்த அதிரடி முடிவா இது? காவலர்கள் நடத்திய ‘அரெஸ்ட்’களின் போதெல்லாம் நெஞ்சுரத்துடன் தலையுயர்த்தி நடந்த நீங்கள், ‘கார்டியாக் அரெஸ்ட்’டுக்கு மட்டும் ஏன் தலை சாய்த்து விட்டீர்கள்…?

    எம்.ஜி.ஆர் மரணத்தின்போது அவர் உடலின் அருகில் உங்களுக்கு இடம் தர மறுத்தவர்கள், இப்போது ராணுவ மரியாதையுடன், அவருக்கு அருகிலேயே உங்களுக்கு நிரந்தர இடம் தந்திருக்கிறார்கள். ‘முகம் துடைக்கும் கைகுட்டையையே கையில் வைத்திராமல் பின்னால் அமர்ந்திருப்பவரிடம் தரும் நாசுக்கினை கொண்ட தாங்கள், தங்கள் திருமுகத்தினை சுற்றி அந்த வெள்ளை

    Enjoying the preview?
    Page 1 of 1