Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Indru Muthal
Indru Muthal
Indru Muthal
Ebook94 pages34 minutes

Indru Muthal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அகர்வால் இந்திய ராணுவத்தின் மேஜர். காசிம் பாகிஸ்தான் ராணுவத்தின் உளவாளி. ப்ளூ நெக்லஸ் பற்றிய தகவலை அறிந்திருந்த காசிமை இந்திய ராணுவம் கைது செய்தது. காசிம் ப்ளூ நெக்லஸ் பற்றிய தகவலை இந்திய ராணுவத்திடம் சொன்னானா? உளவாளியாக இருந்ததால் அவன் என்னென்ன இழந்தான்? என்பதை பட்டுக்கோட்டை பிரபாகரின் விறுவிறுப்பான பாணியில் படித்து அறிவோம்...

Languageதமிழ்
Release dateMay 6, 2023
ISBN6580100908099
Indru Muthal

Read more from Pattukottai Prabakar

Related to Indru Muthal

Related ebooks

Reviews for Indru Muthal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Indru Muthal - Pattukottai Prabakar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இன்று முதல்

    Indru Muthal

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    நியூடெல்லி, பனி மாதத்தின் ஒரு ஈரமான மாலை. குழந்தைகளின் சண்டைபோல திடீர் என்று மூன்று நிமிடங்களுக்குச் சடசட மழை, பிறகு சமாதானமாகிக் காற்றால் விசிறிக் கொண்டிருந்தது. வீரியமில்லாத வெளிச்சம். குடைகள், குடைகள்.

    சாலைகளில் போக்குவரத்துத்துறையின் வெள்ளைப் பட்டைகள் பளீரென்று தெரிந்தன. பறவைகள் மரங்களைவிட்டு விலகும்போது, கிளைகள் தண்ணீரை உதிர்த்தன. அஸ்தமனச் சூரியனின் பின்னணியில் கட்டிடங்களின் கறுப்பு அவுட்லைன்களும், கூட்டமாகப் பறக்கும் பறவைகளும் கேமிராக்களை ‘கிளிக்’கச் சொல்லின.

    அலிபோர் ரோடில் சந்தடிகள் கரைந்த எல்லையில் ஏராளமான மர வரிசைகள். உள்ளே பதுங்கியிருந்த அந்த அரசாங்கக் கட்டிடத்தை அவை சுத்தமாக மறைத்தன. இந்திய இராணுவத்திற்குச் சொந்தமான அலுவலகங்களில் ஒன்று, உச்சந்தலையில் தேசியக்கொடி நனைந்து தொய்ந்து சுருட்டிய மசால் தோசையாய் தொங்கியது.

    செக்யூரிட்டிக்குச் சிறிய கல் கட்டிடம் இருந்தது. சாலையின் குறுக்கில் இரும்புக் கம்பம் இருந்தது. பொத்தான் அழுத்தினால் அது மின்சார மோட்டார் இயக்கத்தில் மேலே உயர்ந்து வாகனங்களுக்கு வழிவிட்டது. STOP AND GO!

    செக்யூரிட்டி கார்டுகள் நான்கைந்து பேர்கள் இருந்தனர். அனைவரிடமும் துப்பாக்கிகள். வந்து தேங்கிய ஜீப்பில் அமர்ந்திருந்த சௌபே அகர்வால் காந்தி டைப் கூலிங்கிளாஸ் அணிந்திருந்தார். சதுர முகம், விளம்பர ஷேவிங் பெரிய உதடுகள்.

    இரும்புத் தடை மேலே உயர, ஜீப்பின் பயணம் தொடர்ந்தது. முக்கிய கட்டிடத்தை அடைய இரண்டு நிமிடங்கள் பிடித்தது. தரையெல்லாம் ஈரம்.

    ஐந்து மணிக்கே சூரியன் பலவீனப்பட்டதால் எங்கும் மின்சார விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. முகப்பில் சோடியம் வேபரின் ஆரஞ்சு வெள்ளம்.

    அகர்வால் இறங்கிக்கொண்டு தன் பேண்டின் இரண்டு பாக்கெட்டுகளிலும் கைகளை நுழைத்துக்கொண்டு டாக், டாக் என்று நடந்தார். காரிடார் முழுக்க பச்சைத் தட்டிகள் தொங்கின. டியூப்லைட் வரிசைகளில் ஒன்று மட்டும் பள்ளிக்குச் செல்ல அடம் பண்ணும் சிறுவனாய்த் தேம்பிக்கொண்டிருந்தது. மாநில பாரபட்சமில்லாத கொசுக்கள், அவற்றுக்கான எண்ணெயில் தோய்த்த காகித வலைகள்!

    சுவர்களில் அம்புக் குறிகள் போட்டுப் பிரிவுகள் எழுதியிருந்தார்கள். மசூதி கூட்டுப் பிரார்த்தனைபோல நிறைய டைப்ரைட்டர்கள் ஒரே நேரத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும் பின்னணியில் அவர் மாடிப்படிகளில் ஏறினார். பச்சைக் கம்பளம்.

    எதிர்ப்பட்ட ஜூனியர்கள் நின்று சல்யூட் அடிக்க, தரத்திற்குத் தக்கபடி அகர்வால் பதில் மரியாதை செய்தபடி நடந்தார். நடையில் ‘நான்’ இருந்தது.

    மாடியின் காரிடாரில் கடைசிக்குச் செல்ல, அலுவலக ஒலிகள் தேய்ந்தன. மைக்ரோ வேவ் இரும்பு டவரின் உச்சியில் சிவப்பு விளக்கு எரிவது அவர் கண்ணை உறுத்தியது. 42 வினாடிகளுக்கு ஒருமுறை வெளிச்சம் பாய்ச்சும் சர்ச் லைட் அவர் அந்தக் கடைசி அறையை அடைவதற்கு முன்பு இரண்டு முறை ஒளியால் அவரைத் தடவிவிட்டு விலகியது. காற்றில் மண் வாசனை.

    அந்த சாத்தப்பட்ட அறையின் இரும்புக் கதவின் அருகில் இருந்த அழைப்பு மணிப் பித்தானை அழுத்தினார். உள்ளே குக்கூ, குக்கூ என்றது, கதவின் நடுவில் இருந்த சிறிய சதுரம் திறந்து இவர் முகம் பார்க்கப்பட்ட பிறகு திறக்கப்பட்டது. கிரீச் OIL PLEASE கிரீச் OIL PLEASE...

    திறந்தவன் தன் துப்பாக்கியை இறக்கி சல்யூட் அடித்ததை அலட்சியப்படுத்தி உள்ளே நடந்தார். கதவு மறுபடி கோரிக்கையுடன் மூடிக்கொண்டது.

    அது ஒரு பெரிய சதுர அறை. உத்தரத்தில் இருந்து தொங்கின இரண்டு இரும்புச் சங்கிலிகளில் பொருத்தப்பட்ட கைகளுடன் அவன் தளர்ந்து நின்று கொண்டிருந்தான். அவன் இடுப்பில் ஒரு ஜட்டி மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது.

    அவன் முகம் லாரி சக்கரம் நசுக்கின பவுடர் டப்பாபோல சப்பையாக இருந்தது. காயங்கள்! சில உலர்ந்தவை. சில புதியவை. முகத்தில் ஒரு வாரத் தாடி, தலை குப்பையாக இருந்தது. கண்களில் மட்டும் ‘முடிந்தால் என்னை விடுவித்துப்பார்’ என்னும் சவால் இருந்தது. இளைஞன், 30 அல்லது 31.

    அகர்வால் அவன் எதிரில் வந்து நின்றார். சிகரெட் பற்ற வைத்துக்கொண்டார்.

    காசிம், உன்னைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது.

    உங்கள் பரிதாபம் எனக்குத் தேவையில்லை! வேறு திசை பார்த்தான்.

    துவைக்கப்பட்ட துணியாக அவன் கசங்கியிருந்தாலும் குரலில்

    Enjoying the preview?
    Page 1 of 1