Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Viralgalai Meettum Veenai
Viralgalai Meettum Veenai
Viralgalai Meettum Veenai
Ebook136 pages52 minutes

Viralgalai Meettum Veenai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நல்ல வசதியான குடும்பம் வாழ்க்கையை எந்த விதத்திலும் அனுபவிக்கலாம் என்கிற எண்ணம் கொண்ட சித்தார்த்துக்கு மனைவியாக அமைந்தால் நித்யா இவனின் இந்த குணம் அவனை எப்படி புரட்டிப் போட்டது? அவனுக்கு நேரிட்டது என்ன? அதன் பின் தன் மனைவி நித்யா எடுத்த முடிவு என்ன? என்பதை இந்துமதி-யின் விரல்களை மீட்டும் வீணை கதையின் மூலம் காணலாம்...!

Languageதமிழ்
Release dateMay 8, 2023
ISBN6580123909406
Viralgalai Meettum Veenai

Read more from Indhumathi

Related to Viralgalai Meettum Veenai

Related ebooks

Related categories

Reviews for Viralgalai Meettum Veenai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Viralgalai Meettum Veenai - Indhumathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    விரல்களை மீட்டும் வீணை

    Viralgalai Meettum Veenai

    Author:

    இந்துமதி

    Indhumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/indhumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    தரையில் இறங்கும் விமானங்கள் எனும் நாவல் மூலம் புகழ்க் கொடி நாட்டியவர் திருமதி இந்துமதி. மத்தியதர மக்களின் உள்ளார்ந்த உணர்வுகளை படம் பிடித்துக் காட்டுவது இவரது சமத்துவம் ததும்பும் நடை. ‘சக்தி 81’ நாவலில் வரும் புதுக்கவிதைகள் அவருடைய கவிதை மனத்துக்கு சாட்சி சொல்வன.

    - கலைஞன்

    1

    உயர, இன்னும் உயர, மேகத்தின் சிரசைத் தொட்டுக் கொள்ளத் துடித்து அலுமினிய ஃப்ரேமில் கனத்த கண்ணாடி மாட்டிக் கொண்டு, மேல்நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் அந்த கான்க்ரீட் கட்டடத்தின் உள்ளே மிகக் குளுமையாக இருந்தது.

    நித்யாவிற்குக் கொஞ்சம் பயமாக இருந்தது. இவ்வளவு பெரிய்ய்ய ஆபீஸிலா வேலை செய்யப் போகிறோம்...? பயத்தோடு ஒரு மூலையில் சந்தோஷமும் எட்டிப் பார்த்தது. அவளின் மிரட்சியைக் கண்டு மரத்தடுப்பிற்கு அந்தப்புறமிருந்த பெண் இவளைப் பார்த்துச் சிநேகமாக மென்னகைத்து, ப்ளீஸ் கம்...! என்றாள். கறுப்பு ஸ்லீவ்லெஸ்ஸில் பளபளப்பாய் சந்தனக் கை தெரிய இவள் கொடுத்த பேப்பரில், கண்களை மட்டும் ஓட்டினாள். பின் நிமிர்ந்து பார்த்து,

    வெல்கம்! இடது பக்கம் திரும்பினீங்கன்னா லிஃப்ட் தெரியும். நாலாவது மாடி. நானூற்றி ஐந்தாம் அறை. கதவைத் தட்டினால் ரமணன்னு ஒருத்தர் வருவார். யு கேன் கோ ப்ளீஸ்...!

    தாங்க்ஸ்! சொல்லிவிட்டு லிஃப்டில் நுழைந்தாள். மெலிதான பாப் சங்கீதம். டோனா சம்மர் அடிக்குரலில் ‘லவ் டு லவ் யு பேபி’ கதற. நாலாவது மாடியில் லிஃப்ட் சுயமாய்த் திறந்து கொள்ள 401… 402... 403... 404... 405...

    வாசலில் அழைப்பு மணி ஏதும் ஒட்டியிருக்கவில்லை. தட்டலாமா...? யோசித்துத் தட்டினாள். பதிலில்லை. திரும்பவும்,

    டக்... டக்... டக்...

    ஆட்காட்டி விரலின் முட்டி தயங்கினபோது கதவு படீரென்று கோபத்துடன் திறந்து கொள்ள...

    ஹூதி ஹெல் ஈஸ் சத்தம் போட்டவன், இவளைப் பார்த்துச் சட்டென்று,

    ஸாரி. ப்ளீஸ் கம் இன்...

    கொஞ்சம் தயங்கி, மிஸ் நித்யா... என்றான்.

    நித்யா அவனுடனே உள்ளே நுழைந்தாள். மீண்டும் விசாலமானறை. அறையின் ஆரம்பத்தில் சோபா ஸெட் ஓரமாய் வீடியோ. சின்னத்திரையில் ப்ரூஸ்லீ ஏகமாய் குதித்துக் கொண்டிருந்தார். மரத்தடுப்பு, அறையை இரண்டாகப் பிரிக்க, எங்கோ மேலிருந்து மட்டும் ஒளி சின்ன டூம்விளக்கு மேஜைக்கு மட்டும் ஒளி பாய்ச்சியது.

    உட்காருங்க... ஸாரி, யாரோன்னு நினைச்சுக் கத்திட்டேன். எங்க ஆபீஸ்ல ஃபார்மாலிட்டீஸ் கிடையாது. வேலைக்கு இடைஞ்சல்னா யாரானாலும் பார்க்கிறதில்லை அதனால தான்

    "பரவாயில்லை... நானும் அப்படித் தொணதொணன்னு தட்டியிருக்கக் கூடாது.

    இப்போ விஷயத்துக்கு வருவோம். என் பேரு ரமணன். அக்கவுண்ட்ஸ் எக்ஸிக்யுடிவ். என் டிபார்ட்மெண்ட்டுலதான் உங்களுக்கு வேலை. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்குங்க. பாஸ்கிட்ட பேசிட்டு உங்களை அழைச்சுண்டு போறேன்.

    நாற்காலியின் விளிம்பில் படாமல் உட்கார்ந்து சன்னமாய் தாங்க்யூ சார் என்றதும் அவன் சொன்னான்:

    சார் போட்டெல்லாம் கூப்பிட வேண்டாம். அது என்னை வயசானவனாக்கிடும். ஜஸ்ட் கால் மி ரமணன், மிஸ்டர் ரமணன்...

    ஓகே சார்! சொல்லிவிட்டுத் தயங்கித் தலையைக் குனிந்து கொண்டு சிரிப்பை அடக்கினாள்.

    எதிரில் உட்கார்ந்திருந்த அவனை நிமிர்ந்து பார்க்கச் சங்கோஜமாக இருந்தது. ஆனால், சிறிதுகூட அந்நியத்தன்மையில்லாத அவனின் பேச்சு பிடித்திருந்தது. வெகுளியாய்ப் பழகும் குழந்தைத்தனம் பிடித்திருந்தது. கலைந்த தலையின் கீழ் விசாலமான - பேசுகிறபோது கோடுகள் விழுகிற நெற்றியும், கறுப்பு மெட்டலிக் கண்ணாடியும், நேர்த்தியான மூக்கிற்குக் கீழ் செப்பனிடப்பட்ட மீசை, ப்ரெஞ்ச் தாடியும் அவனை அழகாகவே காட்டின.

    வாங்க...! பாஸைப் பார்க்கப் போகலாம்...

    அவனுடைய வேகத்திற்குத் தொடர்ந்தாள். நான்கு அறைகள் தள்ளி ஐந்தாவது அறை வாசலில் கால் வைத்ததுமே அசரீரியாகக் குரல், ப்ளீஸ் கம் இன்! என்றதும் நிமிர்ந்து பார்த்தாள். சின்னப் பெட்டியில் ‘ஷார்ப்’ என்று ஒட்டியிருந்தது.

    உள்ளே போனால் நிறைய வழுக்கையோடு இந்தி சினிமாத்தனமாகப் பெரிய மனிதர் உடம்பை நாற்காலிக்குள் திணித்துக் கொண்டு அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார். ரமணன் அறிமுகப்படுத்தினான்...

    மிஸ்டர் எஸ்.கே. நிவாஸ். நிவாஸ் அஸோஸியேட்டின் தலைவர் எம்.டி.ஸார், இவங்க

    அவர் அவன் பேச்சை வெட்டினார்: தெரியும். மிஸ். நித்யா.எம்.ஏ. ஆங்கில இலக்கியம். இருபத்தாறு வயசு. ஆம் ஐரைட்...?.

    ரமணன் மௌனமாக நிற்க, அவள் ஆச்சரியத்துடன் பார்த்தாள். மேலே தொடர்ந்தார்:

    என்ன பார்க்கறே...? அசப்பில் நீ என் பெண் சரயு மாதிரியே இருக்கே... இப்ப அவ ஹஸ்பண்ட்கூட ஸ்டேட் ஸுல இருக்கா. டேக் யுவர் ஸீட் கனிவாய் பார்த்துவிட்டு ரமணன் பக்கம் திரும்பினார்.

    என்னடா… பம்பாய்க்காரன்கிட்ட பணம் வாங்கினியா.? ரெண்டு வாரமா போன் பண்ணித் தகராறு பண்றான். நீ போனாவது பண்ணி பதில் சொல்லணும். இல்லே, நேர்லயாவது போகணும்.

    சரி சார்...

    என்னம்மா நித்யா பார்க்கறே...? என் கம்பெனியே இது மாதிரித்தான். எப்போ வேணா, யார் எதிர்லயாவது அவசியமானா மட்டும் மரியாதை கொடுத்துப்போம். மற்றபடி அப்பா, பிள்ளை -அப்பா, பொண்ணு மாதிரித்தான். ஆனால், தொழில்னு வர்றபோது எல்லாரும் கெட்டி. இல்லாட்டி போனால் 500 ரூபாய் லே-அவுட்டை 5,000 ரூபாய்க்குத் தள்ள முடியுமா சொல்லு...?

    நித்யாவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. வார்த்தைகளுக்குத் தடுமாற, அவரே மீண்டும் பேசினார்:

    "நீ என்ன பண்ணணும், உன் வேலை என்ன என்பதையெல்லாம் ரமணன் சொல்லித் தருவான். வேலையைவிட இங்கே சேர்றவங்களுக்கு ரெண்டு விஷயம் நல்லாத் தெரியணும். ஒண்ணு, அலங்காரமா இருக்கிறது; இரண்டாவது, அழகா பொய் சொல்றது. இன்னிக்கு நீ ஆபீஸை சுற்றிப் பாரு. இன்னிக்கு ஒரு நாள் மட்டும் முதல் நாளானதால என் செலவுல லஞ்ச் உனக்கு வந்துடும். பிடிப்பு போக ஆரம்பச் சம்பளமாக அறுநூற்று முப்பது ரூபா நாற்பத்தைஞ்சு பைஸா... திருப்தியா ஏதாவது அதிருப்தி, சங்கடம்னா நேராக என்னை வந்து பாரு. கூட வேலை செய்யறவங்ககிட்டே சொல்லாதே... அது எனக்குப் பிடிக்காது. ஓகே! இப்போ நீ போலாம். ஆல் தி பெஸ்ட்...! ரமணா...கூட்டிண்டு போய் ஸீட்ல உட்கார வை. போம்மா...

    ரொம்ப தாங்-

    ஷ்… அதெல்லாம் வேணாம்... பேசாம போ...

    ஆச்சரியமாக வெளியில் வந்தாள். ரமணன் அந்தப் பெரிய விளம்பரக் கம்பெனியின் ஒவ்வொரு மூலைக்கும் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தான். பின், அவளது ஸீட்டில் உட்கார வைத்துச் சின்ன சரித்திரமாகச் சொன்னான்:

    "இருபத்தேழு பெண்கள், நூற்றி ஐம்பத்து மூணு ஆண்கள் இந்தக் கம்பெனிக்காக உழைக்கிறார்கள். ரெண்டாவது ஃப்ளோர்ல கான்டீன் இருக்கு. கொஞ்சம் காசு குறைச்சல். வீட்டு டிபன் மாதிரி இருக்கும். வயிற்றைக் கெடுக்காது. அதனால் தைரியமாகச் சாப்பிடலாம். இன்னும் ஏதாவது சந்தேகம் இருந்தால்

    Enjoying the preview?
    Page 1 of 1