Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

T.R.vin Thernthedukkappatta Sirukathaigal
T.R.vin Thernthedukkappatta Sirukathaigal
T.R.vin Thernthedukkappatta Sirukathaigal
Ebook123 pages45 minutes

T.R.vin Thernthedukkappatta Sirukathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

600க்கும் மேற்பட்ட கதைகளிலிருந்து முத்தான, மாணிக்கமான கதைகளாய் 30 சிறுகதைகள் கோர்க்கப்பட்ட நூல்மாலையிது.

Languageதமிழ்
Release dateJun 10, 2023
ISBN6580154009865
T.R.vin Thernthedukkappatta Sirukathaigal

Read more from Tamilselvan Ratna Pandian

Related to T.R.vin Thernthedukkappatta Sirukathaigal

Related ebooks

Related categories

Reviews for T.R.vin Thernthedukkappatta Sirukathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    T.R.vin Thernthedukkappatta Sirukathaigal - Tamilselvan Ratna Pandian

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    த.ர.வின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்

    T.R.vin Thernthedukkappatta Sirukathaigal

    Author:

    தமிழ்ச்செல்வன் ரத்னபாண்டியன்

    Tamilselvan Ratna Pandian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/tamilselvan-ratna-pandian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. யாரவள்

    2. அம்மா

    3. பெற்றோரும் மகனும்

    4. மீண்டும் மாமியார்

    5. மூன்றாம் மனிதர்

    6. இனி என்றும் சந்தோஷமே

    7. மருமகள்

    8. செருப்பு

    9. ரயிலும் போதி மரமும்

    10 அழுக்குச் சட்டை

    11. வாழ்க்கை வரம்

    12. எரியப்போகும் உடல்

    13. 9 மாதமும் 36 மாதமும்

    14. முகம் தெரியாமல் பின்னாடி...

    15. ஜனனம்

    16. வாய் பேசா மௌனங்கள்

    17. அம்மாவின் வெட்கம்

    18. மகன்

    19. அப்பா அப்பாதான்

    20. பேரழகி...

    21. கண்ணழகி.

    22. மறுபக்கம்

    23. தயிர் சாதம்

    24. அப்பா

    25. ஒழுக்கம்

    26. குலதெய்வம்

    27. மீண்டும் கருப்பட்டி

    28. நன்றியுடைமை

    29. பாரதியின் பாரதம்

    30. அப்பாவுக்கு மரியாதை

    1. யாரவள்

    20 வருடங்களாக டெல்லியில் குப்பை கொட்டிவிட்டு சென்னைக்கு மாற்றலாகி TTK Road அலுவலகத்தில் 10 to 6 பணி ஆரம்பித்தேன். வைஸ்பிரசிடெண்ட் ப்ரமோஷன் வேறு. சென்னை பிரசிடெண்ட், அலுவலகத்தில் எல்லோரையும் மொத்தமாகக் கூப்பிட்டு... ப்ரேயர் ஹால் மாதிரி கூட்டத்தில் (இடைவெளிவிட்டுத்தாங்க) அறிமுகப்படுத்தினார். கிட்டத்தட்ட நாற்பது சதவிகிதம் இளைஞிகள்.

    ஒரு இளைஞி... 21, 22 (எம்பொண்ணு) வயதிருக்கும்... புதுசா join பண்ணியிருப்பா போல, அசப்பில் 20 வருடத்து முந்திய என் மனைவியை நினைவுபடுத்தினாள். 90 சதவீதம் அப்படியே மூக்கும் முழியும். ஒரே வித்தியாசம், புத்திசாலித்தனம் அதிகமா முகத்தில் ஒட்டியிருந்தது... மேக்கப் போன்று.

    இருபது செகண்ட் அவளை அதிகம் பார்த்தது அவளுக்கும் தோன்றியிருக்கும் போல. என்ன ஸார்னு பக்கத்தில் வந்தாள்.

    Stunned. அவளாயிருக்குமோ? என் இதயத்துடிப்பு ஆர்வத்தில் வேகத்தைக் கூட்டியது. முகத்தைத் துடைத்துக் கொண்டேன்.

    பேரென்னம்மா?

    கவிதா.

    பத்து நிமிடம் கழித்து என் ரூமுக்கு வா. கொஞ்சம் பேச வேண்டியதிருக்கு.

    சரி ஸார் குழப்பத்துடன் போனாள். அவளுக்கு எப்படி தெரியும் என் மனதிலுள்ளது?

    பத்து நிமிடங்கள் பத்து யுகமா கழிந்தது.

    கதவைத் தட்டினாள்.

    கமின் ப்ளீஸ்.

    உக்காரு.

    காஃபி குடிக்கிறீயா?

    தேங்க்ஸ் ஸார்.

    ஸார் மோர்லாம் வேண்டாம். எனக்கு உன் அப்பா வயசு. அப்பான்னு கூப்பிடு. இல்லன்னா அங்கிள்னு கூப்பிடு.

    ஸார்... ஸாரி... தடுமாறினாள்.

    நீ எந்த ஊரு.

    தூத்துக்குடி... (நான் நினைத்தது சரிதான்)

    அம்மா பேரு?

    சுகந்தி.

    (நிச்சயம் அவள்தான்)

    நானும் உங்க ஊர்தான்... உன்னைப் பார்த்ததும் சொந்தம் மாதிரி தோணுச்சு, தப்பா நினைக்காதே.

    எனக்கும் உள்ளுக்குள் அப்படித்தான்தோணுது அங்கிள்.

    அவள் முதுகில் தட்டிக்கொடுத்து, பிறகு பார்ப்போம் என்றேன்.

    சரி அங்கிள்னு போனவளைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அவள் தலை மறைந்ததும் வீட்டிற்கு ஃபோன் பண்ணினேன்.

    Surprise news honey... வீட்டுக்குத் தெரியாமல் காதல் கல்யாணம் பண்ணி தொடர்பு இல்லாமல் இருந்தாளே உந்தங்கச்சி... அவளைக் கண்டுபிடிச்ச மாதிரி வச்சுக்க. அவ பொண்ணு எங்க ஆஃபிஸ்லதான் வேலை பாக்குறா.

    மறுமுனையில் சந்தோஷத்தில் அழுதாள் மனைவி.

    2. அம்மா

    எங்க வீட்டு வேலைக்காரி வள்ளி கடகடவென பாத்திரங்களைத் தேய்த்தாள். வீட்டைக் கூட்டி லிஜோல் கலந்த தண்ணீரால் வீட்டைச் சுத்தம் பண்ணிட்டு நான் கொடுத்த காஃபியை சந்தோஷமாகக் குடித்தாள். எங்க வீட்டு காஃபி பலகாரங்களை அவள் விரும்பிச் சாப்பிடுவாள். மணி ஒன்றாகப் போகிறது. அவள் மகள் பத்தாங்கிளாஸ். மகன் எட்டாங்கிளாஸ். இருவரையும் தன் தகுதிக்கு மீறிய பள்ளிக்கூடத்தில் சேர்த்திருந்தாள். கணவர் பலசரக்குக் கடையில் உதவியாள். மனைவியைப் போலவே நல்ல உழைப்பாளி.

    தாங்களிருவரும் பத்தாங்கிளாஸ் தாண்டி படிக்காட்டியும் பசங்களை நல்லா படிக்க வைக்கணும்னு வெறியோடு காசெல்லாம் படிப்புக்கு செலவழிக்கும் குடும்பம். வள்ளி பொண்ணுக்கு படிப்பில் ஏதும் சந்தேகமெனில் என்னிடம் வந்து தீர்த்துக்கொண்டு போய்விடுவாள்.

    வள்ளி எனக்கும் இன்னும் மூன்று வீடுகளின் எஜமானிகளுக்கும் வலதுகை மாதிரி. எங்கள் அபார்ட்மெண்டில் நிறைய டிமாண்ட் உள்ள தேவதை. அவளாகத்தான் நாலு வீட்டில் நல்லா செய்வோம்னு கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கிறாள். பணத்திற்கு ரொம்ப அலையற பெண்ணும் கிடையாது.

    இன்று சொந்தக்காரர்கள் வருவதால் மாலை டிஃபனுக்கு உதவி பண்ண அவளை வரச் சொல்லியிருந்தேன். அவள் இப்போது பொண்ணுக்கு மதிய சாப்பாடு கொடுத்துட்டு இன்னொரு வீட்டு வேலையை முடித்துவிட்டு வருகிறேன் என்றாள். காலையில் சாப்பாடு தயாராக நேரமாகி விட்டதால் வள்ளி பொண்ணு சாப்பாடு எடுத்துக்காமலேயே பள்ளிக்கூடத்திற்கு அவசரமாகப் போய்விட்டாளாம்.

    அவசர அவசரமாக தலைவிரி கோலமாக கொஞ்சம் ஈரமான சேலையுடன் லஞ்ச் பாக்ஸை எடுத்துக்கொண்டு ஒரு கி.மீ தூரமுள்ள பள்ளிக்கூடத்திற்கு வேகமாக வேர்க்க விறுவிறுக்க நேரமாகி விட்டதே... பொண்ணு பசியோடு இருப்பாளேன்னு மாரத்தான்ல ஓடுற மாதிரி ஓட ஆரம்பித்தாள். பார்த்துக் கொண்டிருந்த எனக்கே பாவம் போல இருந்தது.

    இரண்டரை மணிக்கு திரும்பி வந்தாள் வள்ளி. அவள் முகம் ஏதோ நெருங்கிய சொந்தத்தின் மரணத்தைப் பக்கத்திலிருந்து பார்த்துவிட்டு வந்தவள் மாதிரி சோகமயமாயிருந்தது. கண்கள் அழுதழுது மெட்ராஸ் ஐக்காரி மாதிரி இருந்தன. வேலையிலும் கவனமில்லை.

    என்னாச்சு வள்ளி?

    ஒன்னுமில்லைக்கா.

    கண்லாம் சிவந்திருக்கு... முகமே மாறிப்போச்சு. காலைல நல்லாத்தானே இருந்தே.

    அக்கா...ன்னு வீரிட்டு அழுது சேலைத் தலைப்பால் கண்களை துடைத்துக் கொண்டாள். அவளுக்குப் பேச்சே வரவில்லை. இரண்டு நிமிடம் அவள் இயல்புக்கு வரக் காத்திருந்தேன்.

    பள்ளிக்கூடத்திலே மற்ற பொண்ணுங்களோடு சாப்பிட உட்கார்ந்திருக்கிறாள் இவள் பொண்ணு. இவள் புன்னகையுடன் லஞ்ச் பாக்ஸைக் கொடுத்துவிட்டு திரும்பியிருக்கிறாள். யாரோ ஒரு பொண்ணு இவள் மகளிடம் அம்மாவான்னு கேக்க இல்லை பக்கத்து வீட்டு வேலைக்காரின்னு சொன்னது வரை இவள் காதில் பழுக்கக் காய்ச்சிய இரும்பைக் காதில் ஊற்றியது போல விழுந்திருக்கிறது. தனது தகுதிக்கு மேல் பணக்காரப் பசங்க படிக்கும் பள்ளியில் சேர்த்ததால் இந்த மாதிரி எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறதோ என்றெண்ணி நடக்க முடியாமல் நடந்து, நொந்துபோய்

    Enjoying the preview?
    Page 1 of 1