Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yaaraikettu Nenjukkulley Vanthey?
Yaaraikettu Nenjukkulley Vanthey?
Yaaraikettu Nenjukkulley Vanthey?
Ebook80 pages24 minutes

Yaaraikettu Nenjukkulley Vanthey?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கல்லூரியில் இறுதி ஆண்டு எம்.சிஏ படிக்கும் சர்வேஷ். திலோத்தியிடம் தன் காதலை வெளிப்படுத்துகிறான். காதலை ஏற்க இஷ்டம் இல்லாதவள், பின் தோழிகளின் பேச்சை கேட்டு விளையாட்டாக காதலிக்க ஆரம்பிக்கிறாள். இந்த காதல் விளையாட்டு முடிவடைந்தது வினையிலா? விசேஷத்திலா? ஆவலுடன் காண வாருங்கள் வாசிப்போம்...

Languageதமிழ்
Release dateJun 28, 2023
ISBN6580130709854
Yaaraikettu Nenjukkulley Vanthey?

Read more from Indira Nandhan

Related to Yaaraikettu Nenjukkulley Vanthey?

Related ebooks

Reviews for Yaaraikettu Nenjukkulley Vanthey?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yaaraikettu Nenjukkulley Vanthey? - Indira Nandhan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    யாரைக்கேட்டு நெஞ்சுக்குள்ளே வந்தே?

    Yaaraikettu Nenjukkulley Vanthey?

    Author:

    இந்திரா நந்தன்

    Indira Nandhan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/indira-nandhan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    1

    தினம்தினம் முத்தங்களை

    சேமித்து வைக்கிறேன்

    என்றாவது ஒருநாள்

    எல்லாவற்றையும்

    மொத்தமாய் வாங்கிக் கொள்வாய் இல்லையா?

    சர்வேஷ்...

    சொல்லும்மா...

    ரேஷன்ல போய் சுகரும் கெரசினும் வாங்கி வந்துடுடா... அயர்ன் பண்ணிக்கொண்டிருந்த சர்வேஷின் பக்கமாய் வந்து குடும்ப அட்டையையும் பணத்தையும் நீட்டினாள் அமிர்தா.

    சர்வேஷ் காதிலே வாங்கவில்லை.

    பேண்ட்டை அயர்ன் பண்ணிவிட்டு கோடுபோட்ட முழுக்கை சட்டையைப் பிடித்து உதறி பரப்பினான்.

    அயர்ன் பாக்ஸில் மினுக்கிக் கொண்டிருந்த சிவப்பு விளக்கு சட்டென்று நின்னுபோனது.

    ச்சே கரண்ட் கட் ஆயிடுச்சே...

    சர்வேஷ் எரிச்சலானான்.

    டேய் சர்வேஷ். உன்னைத்தாண்டா...

    அமிர்தா விடாமல் நச்சரித்தாள்.

    என்னம்மா? நானே கரண்ட் கட் ஆயிடுச்சுன்னு டென்ஷன்ல இருக்கேன். தொல்லைப் பண்றியே...

    ரேஷன் கடைக்கு போயிட்டு வந்துடுடா...

    கெஞ்சினாள்.

    அதெல்லாம் என்னால முடியாதுமா...

    சர்வேஷ் உதட்டை சுழித்தான்.

    டேய் நீ என்ன நடந்தா போகப்போறே? பைக்கை எடுத்துகிட்டு போடா

    அப்பாவை போகச்சொல்லேன்...

    பாவம்டா அவரு. அவரைப்போய் ரேஷனுக்கு போகச்சொல்றே...

    ரிடையர்டு ஆனதுலேர்ந்து சும்மாதானே உட்கார்ந்திருக்கார். வாக்கிங் போகறதுமாதிரி நெனைச்சுகிட்டு ரேஷனுக்கு போகட்டுமே. உடம்புக்கு நல்லதும்மா.

    என்றபடியே அயர்பாக்ஸில் இருந்த சூட்டை வைத்து சட்டையை அவசரமாய் அயர்ன் பண்ணி முடித்து அதையே அணிந்துக் கொண்டான்.

    இது மட்டும் உங்கப்பா காதுல விழுந்துச்சுன்னு வெய்.

    என்ன பண்ணுவார்...?

    வெடுக்கென கேட்டான்.

    மனசு சங்கடப்படுவார். உன்னால முடியாதுன்னா நானே போய்க்கறேன்.

    நீ ஒண்ணும் போகவேணாம். வீணாவை போகச் சொல்லு.

    அவ வயசுப்பொண்ணுடா. பொறுப்பே இல்லாம பேசறே. பக்கத்துவீட்டு சங்கர் எதிர்வீட்டு விக்ரம் எல்லாரும் உன்னை மாதிரித்தான் காலேஜ்ல படிக்கறாங்க. அதுக்காக வீட்டு வேலையை எல்லாம் செய்யாமலா இருக்கானுங்க. சங்கருக்கும் விக்ரமுக்கும் இருக்கற பொறுப்பல கொஞ்சம்கூட உன்கிட்டே கிடையாது.

    அமிர்தா பொருமினாள்.

    யார்கூடவும் என்னை கம்பேர் பண்ணி பேசாதேம்மா. அப்புறம் எனக்கு கோபம் வந்துடும்.

    அயர்ன் பண்ணியிருந்த பேண்ட்டை அணிந்து பெல்ட்டை மாட்டிக்கொண்டான்.

    உன் கோபம் என்னை எதுவும் செய்யாது.

    காலேஜ்க்கு நேரமாயிடுச்சு டிபனை கொண்டுவந்து வெய்மா

    பரபரத்தான்.

    இன்னும் சட்னி அரைக்கலை...

    வீணாவை அரைக்க சொல்லறதுக்கென்ன?

    அவ பாத்திரம் தேய்ச்சுட்டிருக்கா...

    ஓகே சட்னி வேணாம். இட்லியும் சுகரும் கொண்டு வா. சாப்பிட்டுட்டு போய்கிட்டே இருக்கேன்.

    சுகர் தீர்ந்துடுச்சு அதனாலதான் உன்னை ரேஷனுக்கு போகச்சொன்னேன்.

    எனக்கு டிபனே வேணாம். காலேஜ் கேண்டில சாப்பிட்டுக்கறேன். பணத்தைக் கொடும்மா.

    அமிர்தா ரேஷனுக்காக நீட்டிய பணத்தை வெடுக்கென்று பறித்தபடியே வாசலில் நிறுத்தப்பட்டிருந்த தனது பைக்கை நோக்கி ஓடினான்.

    ரேஷனுக்காக வெச்சுருக்கற பணத்தை பிடுங்கிட்டுப் போறியேடா.

    அமிர்தா பின்னாலேயே ஓடினாள்.

    அப்பாகிட்டே வேறபணம் வாங்கிக்க...

    பைக்கை உதைத்து கிளப்பினான் சர்வேஷ்.

    சர்வேஷ் எப்பவும் இப்படித்தான்.

    Enjoying the preview?
    Page 1 of 1