Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Gnabagam Varuthey
Gnabagam Varuthey
Gnabagam Varuthey
Ebook179 pages45 minutes

Gnabagam Varuthey

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு பக்கக் கதைகள் தானே என்று ஒரு பக்கத்தையும் ஒதுக்கி வைக்க முடியாது அளவில் சிறியதாய் இருந்தாலும் ஒரு நாவலாய் சிந்தனையை கிளறி விட்டுச் செல்லும் ஆற்றல் மிக்கதாக இருக்கிறது. இந்த ஒரு பக்கக் கதைகள். ரயில் பயணங்களிலோ அல்லது பஸ் பயணங்களிலோ நீண்ட நெடிய கதைகளைப் படிக்க நேரமின்றி பாதியிலேயே விட்டு விடுவதை விட குறைந்த நேரத்தில் ஒரு பக்கக் கதைகளை வாசித்து விட்டு செல்லலாமே என வாசகன் தன் வசதியை கருத்தில் கொள்ளுகிற போது ஒரு பக்க கதைகள் தன் வெற்றியை அடையாளப்படுத்துகிறது.

இந்த நூலில் இடம் பிடித்திருக்கும் பல கதைகள் குமுதம் மற்றும் குங்குமம் வார இதழில் வெளிவந்தவைகள் அவற்றை தொகுத்து மூன்றாவது தொகுதியாக வெளிவருகிறது. வாசியுங்கள் நேசியுங்கள்.

Languageதமிழ்
Release dateAug 12, 2023
ISBN6580153310045
Gnabagam Varuthey

Read more from Irenipuram Paul Rasaiya

Related to Gnabagam Varuthey

Related ebooks

Related categories

Reviews for Gnabagam Varuthey

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Gnabagam Varuthey - Irenipuram Paul Rasaiya

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஞாபகம் வருதே

    (ஒரு பக்க கதைகள் - தொகுதி 3)

    Gnabagam Varuthey

    Author:

    ஐரேனிபுரம் பால்ராசய்யா

    Irenipuram Paul Rasaiya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/irenipuram-paul-rasaiya

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    வாழ்த்துரை

    என்னுரை

    1. மௌனம்

    2. மனிதநேயம்

    3. கனவு

    4. கொலைகாரா…

    5. காது கேக்காது

    6. பாய் ஃப்ரெண்ட்

    7. ஏமாற்றம்

    8. ஆரோக்கியம்

    9. விசாரிப்பு

    10. தம்பி வீடு

    11. ஸ்பெஷலிஸ்ட்

    12. விஷேசம்

    13. ஆறுதல்

    14. விருப்பம்

    15. செலவுக்காசு

    16. மொய் கவர்

    17. மிச்சக் காசு

    18. நகை

    19. சிகரெட்

    20. கேள்வி

    21. விசாரணை

    22. நெத்தியடி

    23. சம்மதம்

    24. முடியாது

    25. சந்தோஷம்

    26. ஒசத்தி

    27. வேண்டுதல்

    28. ஞாபகம் வருதே

    29. பென்சன்

    30. டியூஷன்

    31. தலைகுனிவு

    32. பார்வை

    33. பென்சன்

    34. போலீஸ்

    35. இரக்கம்

    36. தங்கச்சி

    37. தங்கம்

    38. சம்பளம்

    39. சம்பாத்யம்

    40. சிக்கனம்

    41. மன இறுக்கம்

    42. நோட்புக்

    43. நல்ல விஷயம்

    44. தங்கை

    45. தறுதல

    46. பகிர்தல்

    47. சந்தோஷம்

    48. அஞ்சலி

    49. டிஸ்ரப்

    50. டெக்னிக்

    51. ஞாயம்

    52. சில்லரை

    53. அட்வைஸ்

    54. மனசு

    55. அக்கறை

    56. மகன்

    57. ஃபைன்

    58. பகிர்வு

    59. மதிப்பீடு

    60. கிராமம்

    61. காதல் வயசு

    62. தகுதி

    63. நிம்மதி

    64. அவகாசம்

    65. திருப்தி

    66. அட்சதை அரிசி

    67. கைப்பக்குவம்

    68. கூலி

    69. தரகர்

    70. தமிழ்

    71. ஸ்பீடு

    72. காரியக்காரி

    73. கவனிப்பு

    74. தெய்வத்தாய்

    75. அனுதாபம்

    76. சாந்தம்

    77. எஸ்.எம்.எஸ்

    78. குண்டு பொண்ணு

    79. நிரந்தரம்

    80. நஷ்டம்

    81. இரக்கம்

    82. வேறுபாடுகள்

    83. டியூசன்

    84. வசீகரம்

    85. புன்னகை

    86. உயிரின் வலி

    87. ரசனை

    88. சந்தர்பம்

    89. குஷி

    90. தெய்வமே

    91. தோரணை

    92. கொட்டேஷன்

    93. டூ-இன் ஒன்

    94. கோடீஸ்வரன்

    95. நண்பனின் கதை

    96. நிறைவு

    97. வலி

    98. பெரும்செலவு

    99. தந்திரம்

    100. ஆனந்தம்

    வாழ்த்துரை

    அனைத்து எழுத்தாளர்களுக்கும் இரண்டு விதமான எண்ணம் எப்போதும் மேலோங்கி இருக்கும். ஒன்று தான் மிகச்சிறந்த எழுத்தாளர் இலகுவாய், அழகாய் வசீகரமாய் மனதைக் கவரும் வண்ணம் என் எழுத்து இருக்கிறது என்பது. மற்றொன்று தான் எழுதுவது சரி இல்லையோ...? இன்னும் வார்த்தைகளில் வலு சேர்க்க வேண்டுமோ...? படிப்பவர்களைக் கவரும் வகையில் வார்த்தை ஜாலம் பண்ண வேண்டுமோ…? என்பது, இவருக்கு முதல் எண்ணம் பொருத்தமாக இருக்கிறது.

    முக்கியமாய் சாமானியனுக்கும் ஒரு படைப்பாளிக்கும் உள்ள வித்தியாசம் இந்த சிந்தனைதான். இந்த ஒருபக்கக் கதைகளைப் படித்தால் அவ்வளவும் மிக இயல்பான அன்றாடம் நம் வாழ்வில் நடக்கக்கூடிய, நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்வுகள்தான்.

    முதியவர்களின் மனநிலை, தான் பெற்ற பிள்ளைகளைப் பிரிந்து தனிமையில் இருக்கும் கொடுமை, தன் பேரக்குழந்தைகளைக் காண ஏக்கத்துடன் இருப்பது, அதற்காக எதுவும் செய்யத் தயாராக இருப்பது என ஒரு பத்து வரி கதையில் நெகிழ்ச்சியைக் கண்ணீரைக் கொண்டு நிரப்பி உள்ளார் ஐரேனிபுரம் பால்ராசய்யா.

    நுட்பமான விஷயங்களை கூட அநாயசமாகச் சொல்லும் நேர்த்தி, தான் அனுபவித்த தனக்குத் தெரிந்த உணர்வை வார்த்தைகளால் படிப்பவர்களுக்கும் செலுத்தும் திறன் என ஒருபக்க கதைகளில் கூட தன் படைப்பாற்றலை நிரூபிக்க முடியும் என நிரூபித்து வெற்றியும் கண்டுள்ள நண்பர் நூலாசிரியர் ஐரேனிபுரம் பால்ராசய்யா இன்னும் பல நூல்களை இந்த சமூகத்தின் நலனைக் கொண்டு எழுதி வெளியிட வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.

    வாழ்க வளமுடன்.

    ம. வான்மதி

    ஆசிரியர் பாவையர் மலர்,

    சென்னை

    வாழ்த்துரை

    எவ்வளவு பெரிய ஆலமரமும் ஒரு சிறு விழுதில் உயிர் கொண்டுள்ளது. ஒரு சின்ன அணுவில்தான் அளப்பரிய சக்தி அடங்கி கிடக்கிறது. அது போலத்தான் ஒரு பக்க கதைகள்.

    ஒரு பக்க கதைகள் தானே என்று ஒரு பக்கத்தையும் ஒதுக்கிவைக்க முடியாது. அளவில் சிறியதாய் இருந்தாலும் ஒரு நாவலாய்கூட தூண்ட முடியாத சிந்தனையை கிளறிவிட்டுச் செல்லும் ஆற்றல் மிக்கதாக இருக்கிறது. அந்த வகையில் பார்க்கும்போது சிறந்த சிறுகதை எழுத்தாளரும், என் இனிய நண்பருமான ஐரேனிபுரம் பால்ராசய்யா அவர்களின் ஒருபக்க கதைகள் நூலில் ஓராயிரம் சிந்தனைகளைத் தூண்டும் கரு புதைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

    ஞாபகம் வருதே நூலில் ஊடலும் கூடலும் சேர்ந்ததுதான் இல்வாழ்க்கை. வெறும் இனிப்பு மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியுமா...? காரமும் சேர்ந்தால்தான் உடலுக்கு நல்லது என்று உறவில் ஏற்படும் விரிசல்கள் தவிர்க்கப்பட்டு இல்வாழ்க்கை சீரும் சிறப்புமாய் அமைய வேண்டும் என்பதை இந்த கதைகள் மூலமாக நினைவூட்டுகிறார்.

    இப்படி ஒவ்வொரு பக்கங்களும் அசத்தல் வாசகர்களின் இதயம் உரசி செல்லும் இனிய நண்பருக்கு என் கனிவான வாழ்த்துக்கள்.

    கவிஞர் செல்வராஜா

    திரைப்பட பாடலாசிரியர்,

    சேலம்.

    என்னுரை

    நாவல், குறுநாவல், சிறுகதைகள் வாசித்துப் பழகிய வாசகர்களைத் திசைதிருப்பி ஒரு பக்கக் கதைகள், அரைப் பக்கக் கதைகள், கால் பக்கக் கதைகள், நொடிக் கதைகள், போஸ்ட் கார்ட் கதைகள், மைக்ரோ கதைகள், பத்து நிமிடக் கதைகள், சிங்கிள் வரிக்கதைகள் எனப் படிக்கத் தூண்டியவர் எழுத்தாளர் சுஜாதா அவர்கள்.

    கால மாற்றம் அவசர யுகத்தை நம்மில் விதைத்துவிட்டுச் சென்றிருக்கிறது. உண்பதற்கும், உறங்குவதற்கும், வாசிப்பதற்கும், யோசிப்பதற்கும் நேரம் கிடைக்காத சூழலில் சிறுகதைகள் வாசிக்கும் பழக்கம் பலருக்கும் குறைந்திருக்கிறது.

    சொல்ல வந்த விஷயம் என்ன…? சட்டுன்னு சொல்லிவிட்டுக் கிளம்பு என்று தன்னிடம் அன்பாய் பேசவரும் நண்பர்களை அவசரம் காரணமாக விரட்டுவதுபோலச் சிறுகதைகள்

    Enjoying the preview?
    Page 1 of 1