Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ammamma.. Keladi Thozhi...! - Part 4
Ammamma.. Keladi Thozhi...! - Part 4
Ammamma.. Keladi Thozhi...! - Part 4
Ebook376 pages2 hours

Ammamma.. Keladi Thozhi...! - Part 4

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இதயம் படபடக்க... கால்கள் பின்ன... கைவிரல்கள் நடுங்க... முதலிரவு அறைக்குள் அடியெடுத்து வைக்கும் புதுமணப் பெண்ணைப் போல... அவர்களின் படுக்கையறைக்குள் அடியெடுத்து வைத்தாள் ராதிகா...

'என்ன முடிவெடுத்திருப்பான்...?

நான் கேட்ட வரத்தைத் தருவானா...?

இல்லை மறுப்பானா...?'

அவள் இதயம் கேட்டது...

அப்படி ராதிகா என்ன வரத்தை பாலமுரளியிடம் கேட்டாள்? அவள் கேட்ட வரத்தை அவன் தருவானா? வாசிப்போம் அடுத்த பாகத்தில்.

Languageதமிழ்
Release dateOct 7, 2023
ISBN6580133810198
Ammamma.. Keladi Thozhi...! - Part 4

Read more from Muthulakshmi Raghavan

Related to Ammamma.. Keladi Thozhi...! - Part 4

Related ebooks

Reviews for Ammamma.. Keladi Thozhi...! - Part 4

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ammamma.. Keladi Thozhi...! - Part 4 - Muthulakshmi Raghavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அம்மம்மா.. கேளடி தோழி...! - பாகம் 4

    Ammamma.. Keladi Thozhi...! - Part 4

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 108

    அத்தியாயம் 109

    அத்தியாயம் 110

    அத்தியாயம் 111

    அத்தியாயம் 112

    அத்தியாயம் 113

    அத்தியாயம் 114

    அத்தியாயம் 115

    அத்தியாயம் 116

    அத்தியாயம் 117

    அத்தியாயம் 118

    அத்தியாயம் 119

    அத்தியாயம் 120

    அத்தியாயம் 121

    அத்தியாயம் 122

    அத்தியாயம் 123

    அத்தியாயம் 124

    அத்தியாயம் 125

    அத்தியாயம் 126

    அத்தியாயம் 127

    அத்தியாயம் 128

    அத்தியாயம் 129

    அத்தியாயம் 130

    அத்தியாயம் 131

    அத்தியாயம் 132

    அத்தியாயம் 133

    அத்தியாயம் 134

    அத்தியாயம் 135

    அத்தியாயம் 136

    அத்தியாயம் 137

    அத்தியாயம் 138

    அத்தியாயம் 139

    அத்தியாயம் 140

    அத்தியாயம் 141

    அத்தியாயம் 142

    அத்தியாயம் 143

    108

    எங்கே நீ போனாலும்...

    என்னிடம்தான் திரும்பி வருவாய்...

    இரவின் நிசப்தம் அறையெங்கும் சூழ்ந்திருந்தது... கண்மூடிப் படுத்திருந்த ராதிகா தூங்கவில்லை... அவளுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்த பாலமுரளியால் தூங்க முடியவில்லை...

    அவன் ஷோபாவிற்காக பரிந்து பேசி அவளை அங்கேயே தங்கச் சொன்னதைப் பற்றி ராதிகா கேள்வி கேட்பாள் என்று அவன் எதிர்பார்த்திருந்தான்... அதற்காக சண்டைபோடுவாள்... அப்போது அவளை நான்கு கேள்விகள் கேட்டு விட வேண்டும் என்ற கொதிப்போடு காத்திருந்தான்...

    ராதிகா எதையும் கேட்கவில்லை... மௌனமாக அறைக்குள் வந்தாள்... கதவைத் தாழிட்டாள்... விளக்கை அணைத்தாள்... கட்டிலில் ஏறிப் படுத்து இமை மூடித் தூங்க ஆரம்பித்து விட்டாள்...

    வெளிப்படையான அந்த உதாசீனத்தில் பாலமுரளி வெகுண்டான்... அவளை எழுப்பிச் சண்டை போடலாமா என்று கூட யோசித்தான்... அதைச் செய்ய மனமின்றி எழுந்து பால்கனிக்குச் சென்று நடக்க ஆரம்பித்து விட்டான்...

    இதுபோன்ற இரவு நேர நடைப் பயிற்சியை திருநெல்வேலியில் தான் அவன் செய்திருக்கிறான்... தேனூத்தில் செய்ததில்லை... அன்று... அங்கேயும் அதைச் செய்ய வைத்து விட்ட ராதிகாவின் கழுத்தை நெரித்துக் கொன்று புதைத்து விட்டால்தான் என்ன என்ற வெறி அவன் மனதுக்குள் தலை தூக்கியது...

    இரவு நேரத்துக்கேயுரிய இதமான காற்று அவன் உடலில் படிய மெல்ல அவன் மனக் கொதிப்பு அடங்கியது... அறைக்குள் வந்தான்... அப்போதும் அவள் கண்மூடித்தான் படுத்திருந்தாள்... கோபத்துடன் கட்டிலில் விழுந்தவன் புரண்டு அவள் பக்கமாகத் திரும்பிப் படுத்தான்...

    மீனாட்சி தொடுத்துக் கொடுத்திருந்த மல்லிகை மொட்டுக்களின் சரம் தோளில் வழிய... அவள் இமை மூடிப் படுத்திருந்த தோற்றம் அவன் மனதை மயக்கியது... திருநெல்வேலியிலிருந்து திரும்பும் போது மோகினிப் பேய்க்கு பயந்து அவனை இறுக்கிக் கட்டிக் கொண்ட அந்த நிகழ்வு அவன் நினைவுக்கு வந்தது... அவனது உடல்மீது படிந்த அவளின் உடலின் மென்மையை உணர்ந்திருந்தவனுக்கு உடல் சூடேறியது... அருகில் படுத்திருந்தவளை இழுத்து அணைத்து... சுகித்து விட வேண்டும் போன்ற தாபம் அவனுக்குள் தகித்தது...

    ‘ராதிகா...!...’ அவன் தாகத்துடன் பெருமூச்சு விட்டான்...

    ‘மோகினி...!’ இவளே ஒரு மோகினி...! வழக்கம் போலவே அவன் பொறுமினான்...

    ‘இந்த லட்சணத்தில இவ மோகினியை நினைச்சு பயந்து நடுங்குறா... என்னமா ஒட்டிக்கிட்டா... பயந்து நடுங்கினாத்தான் என் பக்கத்தில் வருவாளாமா...? இல்லைன்னா கண்டுக்காம ஓரம் கட்டுவாளாமா...?’

    இரவு நேர உடையைத் தாண்டித் தெரிந்த அவளது கணுக்காலின் வெளுப்பு... அந்த மெல்லிய வெளிச்சத்தில் தந்தம் போல் மின்னி... அவனைச் சுண்டி இழுத்தது...

    மெதுவாக நகர்ந்து அவள் கால்மேல் கால் போட்டால் என்ன என்று தோன்ற...

    ‘இவள் என் பெண்டாட்டிதானே...’ என்று அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்...

    ‘அடுத்த பெண்ணின் மீதா நான் ஆசைப்படுகிறேன்... நான் கட்டிய தாலி... இவள் கழுத்தில் இருக்கிறது... உரிமையுடன் இவளை ஆண்டால் இவள் என்ன சொல்லிவிடப் போகிறாள்...?’

    உரிமையில்லாதபோதே அவளைத் தொட்டுத் தழுவி விட்ட நினைவில் அவன் பார்வை அவள் மீது படிந்து... உடல் பூராவும் படர்ந்து பரவியது...

    ‘அன்னைக்கும் நான் தொட்டவுடன் வந்து விட்டாள்தானே... இன்றைக்கு மட்டும் முடியாது என்றா மறுக்கப் போகிறாள்...?’

    அவள் மறுக்க மாட்டாள்தான்... அவனுக்கும் அது தெரியும்தான்...

    ஆனால்...? அந்த சங்கர்...?

    அவனது உணர்வுகள் பொங்கிய வேகத்தில் தணிந்தன... எப்போதுமே அவனது வேகத்திற்கு ஒரு வேகத்தடையாக சங்கர் இருப்பதை நினைத்து அவன் கோபத்துடன் கொந்தளித்தான்...

    ‘தென்காசியில் பெண் கட்டப் போகிறானா...? அதுவும் கோமதிநாயகத்தின் பெண்ணையா...? என்ன தைரியமிருந்தால்... என் வட்டாரத்துக்கே வந்து... என் மாமா மகளை கட்டிக் கொள்ள நினைத்திருப்பான்...?’

    ‘சென்னையில் இல்லாத பெண்ணா அத்தான்...?’ ஷோபா கேட்ட கேள்வி அவன் மனதில் எதிரொலித்தது...

    ‘என்னைவிட எதில் அந்த கோமதிநாயகத்தின் மகள் உயர்ந்தவள் அத்தான்...?’ அவளது கேள்வி அவனைச் சுட்டது...

    அவனுக்குத் தெரியும்... சங்கர் எதனால் சென்னையை விட்டுவிட்டு தென்காசியில் பெண் தேடினான் என்று...

    அதிலும் பாலமுரளியின் உறவுக்காரப் பெண்ணாக தேடிப் பிடித்திருக்கிறான் என்றால் அதிலுள்ள உள்நோக்கம் எதுவாக இருக்கக்கூடும் என்பதை புரிந்து கொள்ளாமல் இருக்க பாலமுரளி ஒன்றும் முட்டாள் இல்லையே...

    சங்கருக்கு ராதிகாவின் புகுந்த வீட்டின் அருகிலேயே இருந்தாக வேண்டும்...

    மற்றபடி... தென்காசியின் வட்டாரப் பெருமை அவனை இழுத்திருக்காது... நித்யாவின் அழகு அவனை ஈர்த்திருக்காது...

    சங்கரின் தேவை... ராதிகாவின் அருகாமை...

    பாலமுரளி விலகிப் படுத்தான்... இப்போது ராதிகாவின் தோற்றம் அவனை மயக்கவில்லை... அவளது கணுக்காலின் வெண்மை அவனை இழுக்கவில்லை...

    அவனை விட்டு விலகி நின்ற உறக்கம் வந்து ஒட்டிக் கொள்ள... அவன் கண்மூடித் தூங்க ஆரம்பித்தான்...

    அவன் அயர்ந்து உறங்க ஆரம்பித்த அந்த நொடியில் ராதிகா கண்விழித்தாள்... அருகில் படுத்திருந்தவனின் முகத்தைக் காதலுடன் பார்த்தாள்... அவன் முகத்தில் தெரிந்த கடினத்தில் அவள் மனம் கசிந்தது...

    ‘ஏன் இப்படி உன்னை வருத்திக் கொள்கிறாய்...?’ என்று அவன் முடிகோதி... மடியில் போட்டுக் கொள்ள வேண்டும் போன்ற உணர்வு அவளுள் எழுந்தது...

    ‘உன்னைத்தானே நான் நினைத்தேன்...? உன்னைத் தேடித்தானே நான் தவித்தேன்...? நீ தொட்டதால்தானே உன்னுடன் கலந்தேன்...?’

    அவள் கண்களில் கண்ணீர் பொங்கி வழிந்தது... சப்தமில்லாமல் அவள் அதைத் துடைத்துக் கொண்டாள்... அவள் மனம் துயரத்துடன் குமுறியது...

    ‘உன்னைத்தான் நானறிவேன்...

    மன்னவனை யாரறிவார்...?

    என் உள்ளமெனும் மாளிகையில்...

    உன்னையன்றி யார் வருவார்...?’

    பாடலுடன் அவள் மனம் கேள்வி கேட்க... அவள் தூங்க வெகு நேரமானது...

    மறுநாள் காலையில் காபியுடன் அவள் எழுப்பிய போது... கண்விழித்த பாலமுரளியின் விழிகள் சிவந்திருந்தன...

    ‘ராத்திரியில் தூங்காம விடிய... விடிய... பால்கனியில் நடைபழகினா இப்படித்தான்...’

    அவள் எதுவும் பேசாமல் காபிக் கோப்பையை நீட்டினாள்...

    அவளை உறுத்துப் பார்த்தபடி காபியை வாங்கிக் கொண்டவன்...

    ஷோபா எழுந்திருச்சிட்டாளா...? என்று கேட்டான்...

    அவனுக்குத் தெரியும்... அந்தக் கேள்வி அவளைச் சீண்டிவிடும் என்று...

    அவனது எதிர்பார்ப்பு வீணாகவில்லை... இந்தமுறை ராதிகா அமைதியை கடைபிடிக்காமல் அவனை சண்டைக் கோழியாய் முறைத்தாள்...

    எழுந்திருக்கலைன்னா என்ன செய்கிறதா உத்தேசம்...? போய் எழுப்பி விடறிங்களா...? என்று கேட்டாள்...

    அவளை ஒரு மார்க்கமாக பார்த்தபடி...

    அதையும் செய்யலாம்... தப்பில்லை..., என்று அமர்த்தலாக அவன் பதில் சொன்னான்...

    ஆமாமா... ஆம்பளைகளுக்கு எதுவும் தப்பில்லை... ராதிகாவின் முகம் கோபத்தில் சிவந்து விட்டது...

    யாரைச் சொல்கிற...? என்னையா...? அவன் வேண்டுமென்றே கேட்டான்...

    நீங்கதானே என் புருசன்... உங்களைத்தான் நான் சொல்லமுடியும்... ஊரில் இருக்கிறவங்களைச் சொன்னா... அவங்க அடிக்க வந்து விட மாட்டாங்களா...? படுக்கையை சரி செய்தபடி ராதிகா அவனை மேல் பார்வை பார்த்தாள்...

    அதெல்லாம் அடிக்க வரமாட்டானுங்க... முரளியின் முகம் இறுகியது...

    அவனது கடினத்தன்மையின் பிண்ணனியை ஆராய்ச்சி பண்ண ராதிகா முயலவில்லை...

    ‘நினைச்சா சிரிப்பான்... உடனே முறைப்பான்... வானிலையைக்கூட ஆராய்ச்சி பண்ணிரலாம்... இவனோட மனநிலையை ஆராய்ச்சி பண்ண முடியவே முடியாது... இந்த லட்சணத்திலே பொண்ணுகளோட மனசுதான் ஆழ்கடலாம்... அம்மம்மா...’

    உங்களுக்கென்னங்க... நீங்க சொல்லிட்டுப் போயிடுவிங்க... அடிவாங்கறது யாரு...? நானில்ல... ராதிகா இயல்பாகக் கூறினாள்...

    இந்த முரளியின் பெண்டாட்டிமேல விரல் தொடக்கூட ஒருத்தன் பிறந்துதான் வரனும்... அடிவாங்குவாளாமில்ல... பல்லைக் கழட்டிருவேன்... முரளி எரிந்து விழுந்தான்...

    அதானே... அடிச்சுக் கொல்லத்தான் நீங்க இருக்கீங்களே... அந்த உரிமையை மத்தவங்களுக்கு எப்படி விட்டுத் தருவீங்க...? ராதிகாவும் பட்டென்று சொல்லி விட்டாள்...

    என்னடி சொன்ன...? பாலமுரளி கர்ஜித்தான்...

    ராதிகா முகச் சிணுங்கலுடன் அங்கிருந்து நகரப் போனாள்... அவன் கைபிடித்து நிறுத்தியவன்... அவள் கழுத்தில் விரல் பதித்தான்...

    கொல்லுவேனா...? நானா...? அவன் கோபப்பட...

    இப்ப என்ன செய்துக்கிட்டு இருக்கீங்க...? என்று நிதானமாக அவள் கேட்டாள்...

    சட்டென்று அவள் கழுத்திலிருந்து கையை எடுத்து விட்டான் முரளி... கழுத்தை நீவி விட்டபடி ராதிகா அவனைப் பார்த்தபடி ஒரு கணம் நின்றாள்... பின்னர் ஒரு பெருமூச்சுடன் நகரப் போனாள்...

    பாலமுரளிக்கு அவளைப் போகவிட மனமில்லை...

    ஷோபா காபி சாப்பிட்டுட்டாளா...? என்று கேட்டான்...

    ராதிகா வெடுக்கென்று திரும்பி அவனையே இமைக்காமல் பார்த்தாள்... அவனின் புருவங்கள் சுருங்கின...

    என்னடி...? என்று கேட்டான்...

    பாலமுரளியின் பெண்டாட்டியின் விரல் தொடக்கூட ஒருத்தன் பிறந்து வரனும்ன்னு சொன்னீங்களே... வேலை வாங்க ஒருத்தி பிறந்து வரலாமா...?

    என்னது...? பாலமுரளியின் புருவங்கள் உயர்ந்தன...

    இல்லை... அந்த ஷோபாவுக்கு வேலைக்காரியாய் நான் இருக்கலாமான்னு கேட்டேன்... பாலமுரளியின் பெண்டாட்டி இன்னொருத்திக்கு சேவகம் செய்யலாமா...? அதை பாலமுரளியின் தன்மானம் அனுமதிக்குமான்னு கேட்டேன்...

    அவள் கேட்ட கேள்வியில் அவன் முகம் மாறிவிட்டது...

    ‘இவளை பேசி ஜெயிக்க முடியாது...’

    அவன் விழிகளில் லேசான பாராட்டுத் தோன்றி மறைந்தது...

    ஆக... வீட்டுக்கு வந்த விருந்தாளியை உபசரிக்க மாட்டேன்னு சொல்றே...

    விருந்தாளியா...? அவளா...?

    பின்னே இல்லைங்கறியா...? அவ வேற யாரு...? வீட்டுக்காரியா...?

    பாலமுரளி நிதானமாகக் கேட்க... ராதிகாவின் முகம் செந்தணழாக மாறியது...

    வீட்டுக்காரியா...? கொன்னுடுவேன்... அவள் சீறினாள்...

    அவளது கோபத்தில் பாலமுரளி இதம் கண்டான்... அவனுக்குள் மெலிதான உல்லாசம் பரவியது...

    என்னடி இது... பெண்கள் மென்மையானவங்கன்னு சொல்லுவாங்க...

    இந்த விசயத்தில் பெண்டாட்டி மென்மையானவ இல்லை...

    அதுக்காக கொலை செய்வியா...?

    கொலையும் செய்வாள் பத்தினின்னு கேள்விப் பட்டதில்லையா...? பார்த்து நடந்துக்கங்க... ஜாக்கிரதை... வீட்டுக்காரியாமில்ல... இப்படிப் பேச நாக்கு கூசலை...?

    ராதிகா கோபத்துடன் கையிலிருந்த தலையணையைத் தூக்கி படுக்கையின் மீது விட்டெறிந்தாள்...

    என்மேல இருக்க கோபத்தில தலையணையை கிழிக்காதே... பாலமுரளிக்கு அவளின் கோபத்தைக் காண்பதற்கு வேடிக்கையாக இருந்தது...

    என்கூடப் பேசாதீங்க... சொல்லிட்டேன்...

    ஏய்ய்... ராதிகா...

    அவன் கூப்பிடக் கூப்பிட அவள் வேகமாக வெளியேறி விட்டாள்... முரளியின் மனதிலிருந்த கோபம் தணிந்து உல்லாசம் நிலை கொண்டது...

    குளித்து... உடைமாற்றி அவன் செல் போனை காதுக்கு கொடுத்தபடி படிகளில் இறங்கிய போது... ஹாலில் அவனை எதிர்பார்த்துக் காத்திருப்பதைப் போல ஷோபா நின்றிருந்தாள்...

    அவள் காலையிலேயே குளித்து முடித்து... ஒப்பனைகள் செய்து ஒய்யாரமாக வந்து நின்று விட்டாள்...

    என்னம்மா இது... இந்தப் புள்ள விட்ட விடிகாலையிலேயே வேசம் கட்டிக்கிட்டு நிக்குது... எங்கேயாவது கூத்துக்கட்டப் போகுதா...?

    மீனாட்சி ராதிகாவிடம் கேட்டாள்...

    உஷ்ஷ்... அவள் ஆள்காட்டி விரலை உதட்டின்மீது வைத்து எச்சரித்தாள்...

    வரவர... இந்த வீட்டிலே வாயைத் திறக்கவே முடியல... பேச்சுச்சுதந்திரம் பறிபோனவளாக மீனாட்சி புலம்பியபடியே வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்...

    பூஜையை முடித்து விட்டு வந்த மேகலா... ஷோபாவைப் பார்த்து...

    சாப்பிட வாம்மா... என்று அழைத்தாள்...

    அத்தான் வரட்டும் ஆண்ட்டி..., அவள் திரும்பிக் கூடப் பார்க்காமல் பதிலைச் சொன்னாள்...

    ராதிகா பல்லைக் கடித்தாள்... மாமியாரின் முன்னால் கோபத்தை வெளிப்படுத்த முடியாதவளாய் சமையலறைப் பக்கம் போய்விட்டாள்...

    மேகலாவுக்கு சங்கடமாக இருந்தது...

    ‘இந்தப் பெண்ணுக்கும் பேசத்தெரியலை... பாலமுரளியும் இவளை அனுப்பித் தொலைக்க மாட்டேங்கிறான்... ஊருக்கு பெரிய மனுசனா இருந்து என்ன பிரயோசனம்...? பெண்டாட்டியின் மனசறிஞ்சு நடக்கத் தெரியலையே...’

    அலுப்புடன் தலையைப் பிடித்துக் கொண்டாள்... சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்த காவேரி...

    ம்ஹீம்... இந்தப் பொண்ணு இந்த வீட்டில் காலடி எடுத்து வைச்ச நாள் முதலா அம்மா தலையைத் தலையை பிடிச்சுக்கிறாங்க... இந்தப் பொண்ணு என்ன... தலைவலியை கூடவே கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்குதா...? என்று ராதிகாவிடம் கேட்டு வைத்தாள்...

    ஷோபா செய்து கொண்டிருந்த ‘ளொள்ளு’ வேலைகளால் எள்ளும்... கொள்ளும் முகத்தில் வெடிக்க நின்று கொண்டிருந்த ராதிகாவிற்கு சிரிப்பு வந்து விட்டது...

    என்னம்மா... சிரிக்கறிங்க...? காவேரி ஆவலுடன் கேட்டாள்...

    ஷோபாவுக்கும்... தலைவலிக்கும் இடையே உள்ள ஜென்மாந்திர தொடர்பைப் பற்றி இவளுக்குச் சொன்னால் புரிந்து கொள்வாளா...? என்று நினைவுடன் ராதிகா மேலும் சிரித்தாள்...

    சிரித்த முகத்துடன் சமையலறையை விட்டு அவள் வெளிப்பட்டபோது... டைனிங் ஹாலுக்கு வந்து விட்ட பாலமுரளி... ஷோபாவைக் கவனிக்காமல் ராதிகாவையே பார்த்தான்...

    109

    போகத்தான் நினைத்தாலும்...

    போகமனம் வரவில்லை...

    ஷோபாவினால் அதை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை...

    முதல்நாள்தான்... சங்கர் ராதிகாவை விடாமல் பின் தொடர்வதைப் பற்றி கதைகதையாய் பாலமுரளியிடம் எடுத்துச் சொல்லியிருந்தாள்... அதைக் கேட்டவனும் முகம் இறுகி... ஷோபாவுக்காக அவனது தாயையே எதிர்த்து வாதாடி அவளை அவன் வீட்டில் தங்க வைத்தான்...

    அத்தோடு நிறுத்தினானா...? அவளை ஊர் சுற்றிப் பார்க்க அழைத்துப் போவதாக ராதிகாவின் முன்னாலேயே சொல்லவும் செய்தான்...

    இத்தனையும் முதல் நாள் இரவில் செய்து விட்டுத் தூங்கப் போனவன்... மறுநாள் காலையில் ராதிகாவை விழுங்குவதைப் போல பார்த்து வைக்கிறான் என்றால் என்ன அர்த்தம்...?

    இரவில் இந்த ராதிகா சரியாக மந்திரித்து விட்டிருக்கிறாள் என்றுதானே அர்த்தம்...?

    பாலமுரளியின் பார்வையை கண்டு கொள்ளாமல் ராதிகா தட்டுக்களை வைத்தாள்... ஷோபாவின் முன்னால் அவள் வைத்த தட்டு மட்டும் ‘ணங்’கென்று சப்தம் போட்டது...

    ஷோபா பாலமுரளியைப் பார்த்தாள்... அவன் மனைவியைத் தீவிரமாக பார்வையிட்டுக் கொண்டிருந்தான்... ஷோபாவின் முன்னால் அவள் தட்டு வைத்த வேகத்தை கண்டிக்கும் நிலையில் அவனில்லை என்பது புரிந்து போக... ஷேபாவுக்கு தலைவலிக்க ஆரம்பித்தது...

    ‘இவளைத்தான் மேரேஜ் பண்ணித் தொலைச் சிட்டானில்ல... இன்னும் எதுக்காக காதலியைப் பார்ப்பதைப் போல பார்த்து வைக்கிறான்...’

    ராதிகாவைப் பார்க்கப் பார்க்க... அவளுக்கு பொறாமை பொங்கி எழுந்தது...

    அத்தான்...

    அவள் அழைத்ததை பாலமுரளி கவனிக்கவில்லை... அவளுடைய கோபம் அதிகரித்தது...

    அத்தான்... சப்தமாக அழைத்தாள்...

    ராதிகாவின் வெட்டும் பார்வையை ரசித்துக் கொண்டிருந்த பாலமுரளி... இனிய கனவில் தடங்கல் ஏற்பட்டு விட்ட எரிச்சலுடன் ஷோபாவின் பக்கமாக திரும்பினான்...

    என்ன ஷோபா...

    உங்க வொய்புக்கு விருந்தோம்பல்ன்னா என்னன்னு தெரியுமா அத்தான்...? பாவம்... அவளுக்கு எங்கே தெரிந்திருக்கப் போகிறது...? விலைவாசி விற்கிற விலையில... அவ வீட்டிலிருக்கிறவங்க மூன்று நேரமும் சாப்பிட்டு... நல்ல துணிமணி உடுத்தறதே பெரிய விசயம்... இதில வேற இவளை என்ஜினியரிங்ல சேர்த்து விட்டிருந்தாங்க... இந்த லட்சணத்தில் இவ வீட்டுக்கு எந்த கெஸ்ட் வந்திருக்கப் போகிறாங்க...?

    பாலமுரளிக்கே ஷோபாவின் பேச்சு பிடிக்க வில்லையெனும் போது மேகலாவுக்கு மட்டும் பிடித்து விடுமா...?

    அவள் முகம் சுளித்தாள்...

    இப்ப எதுக்காகம்மா என் மருமக வீட்டு ராமாயணத்தை இழுக்கற...? உனக்கு என்ன வேனுமோ... அதை மட்டுமே சொல்லு...

    அதைத்தான் சொல்ல வந்தேன் ஆண்ட்டி... வேண்டாதவங்களா இருந்தாலும்... சிரிச்ச முகத்தோட ட்ரீட் கொடுக்கறதுதான் மேனர்ஸ்... இவளுக்கு டைனிங் டேபிள் கல்ச்சர் தெரியலை... இப்படித்தான் பிளேட்டை ‘ணங்கு’ன்னு வைப்பாங்களா...?

    மேகலாவும் அதைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்... மருமகளின் செயலை மனதுக்குள் பாராட்டிக் கொண்டிருந்தாள்...

    ‘ம்ஹீம்... நானா இருந்திருந்தா தட்டைத் தூக்கி இவ தலைமேல போட்டிருப்பேன்... என் மருமகளா இருக்கப் போயி... போனாப் போகுதுன்னு இந்த மட்டிலும் விட்டு வைச்சிருக்கா...’

    பாரும்மா... என் மருமகளுக்கு நாகரிகம் இருக்கா... இல்லையாங்கிறதைப் பத்தி அப்புறம் பேசலாம்... முதல்ல உனக்கு அது இருக்கா...?

    நான் என்ன செய்தேன் ஆண்ட்டி...?

    சொன்னாத் தாங்க மாட்ட... பேசாம சாப்பிடு...

    மேகலா கண்டிப்புடன் கூற... ஷோபாவின் முகம் விழுந்து விட்டது... ‘கிழவி... மருமகளை விட்டுக் கொடுக்கவே மாட்டாளே...’

    மேகலாவிடம் இருந்து ஆதரவு கிடைக்காது என்பது ஷோபாவுக்கு தெரிந்ததுதானே... அவள்...

    அத்தான்... என்ற சிணுங்கலுடன் பாலமுரளியின் பக்கம் திரும்பினாள்...

    அதே நேரத்தில்... ராதிகா கையிலிருந்த கரண்டியை உயர்த்தி... இதனாலேயே ஒரு போடு போட்டு விடுவேன் என்று பாலமுரளியைப் பார்த்து ரகசிய சமிக்ஞை ஒன்றை செய்து வைக்கவும்... பாலமுரளி தேன் குடித்த நரியைப் போலாகி விட்டான்...

    அவனறிந்த வரையில் அவனைப் பார்த்து யாரும் ஒற்றை விரலைக் கூட உயர்த்தியது இல்லை... ராதிகா என்னடாவென்றால்... கரண்டியையே உயர்த்திக் காட்டுகிறாள்...

    ‘பாருடா... இவ என்னை மிரட்டறா...’ பாலமுரளியின் கண்களில் சுவராஸ்யம் தோன்றிவிட்டது...

    அவன் விழிகளில் சிரிப்புடன் ராதிகாவைப் பார்த்தபடி...

    சொல்லு ஷோபா... என்றான்...

    ‘என்னத்தைச் சொல்ல...’ ஷோபா கடுப்பானாள்...

    இவ்வளவு நேரமும் நடந்ததை அவன் கேட்டுக் கொண்டுதானே இருந்தான்... அதற்குப் பின்னாலும் ‘சொல்லு ஷோபா...’ என்றால் எதைச் சொல்வது...? அதுவும் சும்மாவும் கேட்கிறானா...? ராதிகாவைப் பார்த்துக் கொண்டே... ஷோபாவிடம் ‘சொல்லு’ என்கிறான்...

    இப்படி பெண்டாட்டியின் முந்தானையில் தூளிகட்டி ஆடுகிறவனிடம் அவன் பெண்டாட்டியைப் பற்றி குற்றம் சொல்ல முடியுமா...?

    இருந்தும் ஷோபாவினால் சும்மாயிருக்க முடியவில்லை... ராதிகாவின் இறுகின முகத்தையும்... அலட்சியப் போக்கையும் காணக்காண... அவளது வயிற்றில் அமிலம் சுரந்தது...

    ராதிகா ட்ரீட் பண்ற விதம் சரியில்லை அத்தான்... இதை நீங்க ஏன்னு கேட்க மாட்டிங்களா...?

    கேட்டுட்டா போச்சு... ஏன் ராதிகா...?

    பாலமுரளி கேட்க... அவனை உறுத்துப் பார்த்தாள் ராதிகா... அவன் வாய் விட்டுச் சிரித்தான்...

    நீங்களே சிரித்தால் எப்படியத்தான்...?

    விடுஷோபா... நீயேன் உன்னை விருந்தாளின்னு நினைச்சுக்கறே...

    பாலமுரளி ராதிகாவைப் பார்த்தபடி சொல்லி வைக்க... அவள் இப்போது அவனை நேரடியாகவே முறைத்தாள்...

    இல்லைன்னு சொல்கிறிங்களா அத்தான்... ஷோபா குதூகலிக்க ராதிகா குறுக்கிட்டாள்...

    ஏய்ய்... அடங்குடி... விருந்தும்... மருந்தும் மூணு நாள்தான்... நீ வந்து மூணு நாளாச்சு... கிளம்பறியா...?

    ராதிகாவின் கேள்வியில் ஷோபா திணறி விட்டாள்...

    நான் ஏன் கிளம்பனும்...? அதுதான் அத்தான் என்னை இங்கேயே தங்கிக்க சொல்லியிருக்காரே...

    தெரியுதில்ல... அப்புறமும் எதுக்காக... விருந்தோம்பல் டைனிங்டேபிள் மேனர்ஸ்ன்னு உனக்கு சம்பந்தமில்லாத விசயங்களையெல்லாம் பேசிக்கிட்டு இருக்கே...? இந்த லட்சணத்தில என் வீட்டை வேற இழுக்கறே... என் வீட்டுக்கு கெஸ்ட் வரலைன்னு நீ கண்டியா...? மாதத்திலே இருபது நாள் தாத்தா... பாட்டி... அத்தை... மாமா... சித்தி... சித்தப்பா... பெரியப்பா... பெரியம்மான்னு ஒரே கெஸ்ட் மயமாத்தான் இருக்கும்... ஆனா உன்னை மாதிரியான கெஸ்ட் என் வீட்டுக்கு வந்ததில்லை... என்னதான் நெருங்கின உறவா இருந்தாலும் வேலையிருந்தால் மட்டுமே வருவாங்க... வந்த வேலை முடிஞ்சவுடேன அவங்கவங்க வீட்டைப் பார்த்துப் போயிடுவாங்க... இங்கே தான் என்ன வேலைன்னே தெரியலையே...

    ராதிகா...

    பொறுடி... இன்னும் இருக்கு... உன் வீட்டுக்கு கெஸ்ட் வருகிற லட்சணத்தைத்தான் நான் பார்த்தேனே... இதே அத்தான்... சென்னைக்கு வந்தால் உன் வீட்டிலா தங்குவார்...?

    அது... அது வந்து...

    "என்னடி... மென்று முழுங்கறே... பதிலைச் சொல்லு... ஹோட்டலில் ரூம் போட்டுத் தங்குவார்... வந்த வேலை முடிஞ்சதும்... கிளம்பும் போது உன் வீட்டுக்கு வந்து ஹலோ

    Enjoying the preview?
    Page 1 of 1