Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஆசரிப்புக் கூடாரம்: இயேசுகிறிஸ்துவைக் குறித்த ஒரு விளக்கமான ஓவியம் (II)
ஆசரிப்புக் கூடாரம்: இயேசுகிறிஸ்துவைக் குறித்த ஒரு விளக்கமான ஓவியம் (II)
ஆசரிப்புக் கூடாரம்: இயேசுகிறிஸ்துவைக் குறித்த ஒரு விளக்கமான ஓவியம் (II)
Ebook707 pages4 hours

ஆசரிப்புக் கூடாரம்: இயேசுகிறிஸ்துவைக் குறித்த ஒரு விளக்கமான ஓவியம் (II)

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பழைய ஏற்பாட்டில், கர்த்தர் தமக்கொரு ஆசரிப்புக்கூடாரத்தை அமைக்க மோசேயிற்கு கட்டளையிட்டதைப் போல், அவர் நமக்குள் வாசஞ் செய்யும்படியாக, நம்மிருதயங்களில் அவருக்கொரு வாசஸ்தலத்தை அமைக்குமாறு கூறுகிறார். நம்மிருதயங்களினுள் அவருக்கு வாசஸ்தலம் அமைக்க உபயோகிக்கவேண்டிய விசுவாசத்தின் பொருட்கள் நற்செய்தி வார்த்தையாகிய நீர் மற்றும் ஆவியே. இப்பொருட்களாலான நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் நம்மைக் கழுவி சுத்தஞ் செய்ய வேண்டும். தமக்கொரு வாசஸ்தலத்தை அமைக்குமாறு கர்த்தர் கூறுகையில், நம்மிருதயங்களை வெறுமையாக்கி நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்குமாறு கூறுகிறார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நம்மிருதயங்கள் சுத்திகரிக்கப்பட வேண்டும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நம்மிருதயங்களின் அணைத்துப் பாவங்களையும் கழுவும்போது, அவற்றில் வாசஞ் செய்ய கர்த்தர் வருகிறார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலமே உங்களால் உங்களிருதயங்களில் பரிசுத்த ஆலயத்தைக் கட்ட முடியும். ஆலயத்தை நீங்களே கட்ட முயன்று, இதுவரை, உங்களில் சிலர், இருதயங்களைச் சுத்திகரிக்கும்படி மனம் வருந்தி ஜெபித்துக் கொண்டிருந்திருப்பீர்கள். ஆனால் இந்த தவறான விசுவாசத்தைக் கைவிட்டு, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து உங்கள் மனங்களை புதுப்பிக்க வேண்டிய நேரம் இதுவே.

Languageதமிழ்
PublisherPaul C. Jong
Release dateOct 10, 2023
ISBN9788965322436
ஆசரிப்புக் கூடாரம்: இயேசுகிறிஸ்துவைக் குறித்த ஒரு விளக்கமான ஓவியம் (II)

Related to ஆசரிப்புக் கூடாரம்

Related ebooks

Reviews for ஆசரிப்புக் கூடாரம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஆசரிப்புக் கூடாரம் - Paul C. Jong

    paul_Tm10_coverFrontflap_Tm10.gif

    ஆசரிப்புக் கூடாரத்தின் மூடுதிரைகள்

    Tabernacle01.jpg

    1. இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் நெய்யப்பட்ட திரைச்சீலைகளில் கேரூபீன்களின் சித்திரங்கள் பொறிக்கப்பட்டு ஆசரிப்புக் கூடாரத்தின் முதலாவது மூடுதிரைகள் தயாரிக்கப் பட்டன. இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலம் மேசியா வருவார் என்றும் அவரை விசுவாசிப்போரை அவர்களின் பாவங்களில் இருந்தும் ஆக்கினைகளில் இருந்தும் அவர் இரட்சிப்பார் என்றும் இது வெளிப்படுத்துகிறது.

    Tabernacle02.jpg

    2. ஆசரிப்புக் கூடாரத்தின் இரண்டாவது மூடுதிரையானது ஆட்டின் மயிரினால் தயாரிக்கப் பட்டது. மனிதகுலத்தை அவர்களின் பாவங்களிலிருந்தும், இப்பாவங்களுக்கான ஆக்கினையிலிருந்தும் விடுதலைச் செய்வதின் மூலம் மேசியா அவர்களை நீதிமானாக்குவார் என்பதை இது நமக்குக் கூறுகிறது.

    Tabernacle03.jpg

    3. ஆசரிப்புக் கூடாரத்தின் மூன்றாவது மூடுதிரையானது சிவப்பு நிறம் பூசப்பட்ட ஆட்டுத் தோலினால் ஆனது. மேசியா இப்பூமிக்கு வருவதையும், ஞானஸ்நானம் பெறுவதின் மூலமாக உலகின் எல்லாப் பாவங்களையும் அவர் சுமப்பார் என்பதையும், சிலுவையில் அறையப்பட்டு, தனது மக்களுக்கான பலி காணிக்கையாவார் என்பதையும் இது அறிவிக்கிறது.

    Tabernacle04.jpg

    4. ஆசரிப்புக் கூடாரத்தின் நான்காவது மூடுதிரை தகசுத் தோலினால் செய்யப்பட்டது. தகசுத் தோலானது இயேசு கிறிஸ்துவின் சித்திரத்தை நமக்குக் காட்டுகிறது, அவர் நம்மை உலகத்தின் பாவங்களிலிருந்து இரட்சிப்பதற்காக மனித்குலத்தின் அளவுக்குத் தன்னைத் தாழ்த்தினார்.

    front_flap6.giffront_flap71st_page

    ஆசரிப்புக் கூடாரம்: இயேசுகிறிஸ்துவைக் குறித்த ஒரு விளக்கமான ஓவியம் (II)

    Smashwords Edition

    Copyright 2006 by Hephzibah Publishing House

    எல்லா உரிமையும் பதிப்பாளருக்கே. இப்புத்தகத்தின் எப்பகுதியையும் பிரதியெடுக்கவோ, மறுபடியும் நூலாக்கும் வகையில் பதிவு செய்தலோ; மின்னனுவியல், இயந்திரவியல், ஒளிப்பிரதியெடுத்தல், பதிவு செய்தல் மேலும் எவ்வகையிலோ தகவல் பரிமாற்றம் செய்யலாகாது. அப்படிச் செய்வதானால் பதிப்பாளர் அல்லது பதிப்புரிமை உடையவர்களிடமிருந்து எழுத்து மூலமான அனுமதி பெறப்பட வேண்டும்.

    வேதவசனங்கள் தமிழ் வேதாகமத்திலிருந்து மேற்கோள் காட்டப் பட்டுள்ளன.

    ISBN 978-89-6532-243-6

    அட்டைப்படம்: மின்.சூ.கிம்

    ஓவியம்: யங்-ஏ. கிம்.

    இந்நூல் கொரியாவில் அச்சிடப்பட்டது.

    நன்றிகள்

    வெளிப்படுத்தின விசேஷத்தைக் குறித்து இரண்டு தொகுப்புகளாக வெளியாகிய எனது புத்தகங்களைத் தொடர்ந்து, ஆசரிப்புக் கூடாரத்தைக் குறித்து நான் எழுதிய இரண்டு தொகுப்புகளின் வரிசையில் இது இரண்டாவது நூலாகும். கர்த்தருடைய கிருபையினால் மட்டுமே இப்புத்தகம் வெளியிடப்பட்டது என்பதை நான் கூறவேண்டியதில்லை. தேவனால் கொடுக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது எத்தனை உண்மையானது எனவும், வேதாகமப்படி எத்தனை சரியானது எனவும், இந்த நற்செய்தியானது எத்தனை மதிப்புடையது எனவும், அதிகமாக நான் எழுதும் போது, எனது இருதயத்தின் ஆழத்தில் அதிகமதிகமாக உணர்வதுடன் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து எனது பாவங்களுக்கு பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொண்டதற்கு மிகவும் நன்றியறிதலுடையவனாகவும் இருக்கிறேன்.

    புது வாழ்வு இயக்கத்திலுள்ள அலுவலர்களுக்கும் எனது உடன் பணியாளர்களுக்கும் எனது ஆழமான நன்றிகளைத் தெரிவிக்க வார்த்தைகள் என்னைத் தோற்கடிக்கின்றன, அவர்கள் இப்புத்தகத்தை வெளியிடுவதற்கு ஒன்று கூடி கடினமாக உழைத்ததுடன், நற்செய்திக்கு பணியாற்ற தம்மிருதயங்களை இணைத்துள்ளனர். அவர்களுடைய விலையேறப்பட்ட கடினமான உழைப்புகள் உலகம் முழுவதும் பெருமளவு கனிகளை அளிக்கும் என்பது நிச்சயம். இந்த விசுவாசமிக்க ஆத்துமாக்களின் அர்ப்பணிப்புள்ள சேவையினாலேயே இப்புத்தகம் வெளி வந்துள்ளது, மேலும் அவர்களுடைய ஊழியங்களின் மூலமே நம் தேவனின் பெரிய கட்டளையைப் பின்பற்றி உலகின் முடிவு வரை நற்செய்தியை என்னால் பரப்ப முடிகிறது. இப்புத்தகத்தை மொழி பெயர்க்க எங்களுக்கு உதவிய திரு. ஏ.டி.எட்வர்ட் ராஜ் அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

    நம் அனைவரையும் இரட்சித்தமைக்காகவும், தேவனுடைய செயல்களுக்கு பணியாற்ற பணியாளர்களாகிய எங்களையும் அவருடைய ஆலயத்தையும் அனுமதித்தமைக்காகவும், எல்லா மகிமைகளையும் நன்றிகளையும் கர்த்தருக்கு அளிக்கிறேன்.

    PAUL C. JONG

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. நம்முடைய பாவங்களுக்காக நித்திய மரணத்தை அனுபவிக்கப் போகிறவர்கள் நாமல்ல (யோவான் 13:1-11)

    2. பரிசுத்த ஸ்தலத்தின் திரைகளும் தூண்களும் (யாத்திராகமம் 26:31-37)

    3. மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் யாரால் பிரவேசிக்கக் கூடும் (த்திராகமம் 26:31-33)

    4. கிழிந்து போன திரைச்சீலை (மத்தேயு 27:50-53)

    5. ஆசரிப்புக் கூடார பலகைக்கான இரண்டு வெள்ளிப் பாதங்களும் இரண்டு கழுந்துகளும் (யாத்திராகமம் 26:15-37)

    6. சாட்சியின் பெட்டியில் மறைந்திருக்கும் ஆவிக்குரிய இரகசியங்கள் (யாத்திராகமம் 25:10-22)

    7. பாவமன்னிப்பிற்கான காணிக்கை கிருபாசனத்தில் கொடுக்கப்பட்டது (யாத்திராகமம் 25:10-22)

    8. அப்பத்தின் மேஜை (யாத்திராகமம் 37:10-16)

    9. பொன் விளக்குத்தண்டு (யாத்திராகமம் 25:31-40)

    10. தூபபீடம் (யாத்திராகமம் 30:1-10)

    11. பாவநிவாரண நாளில் பலிகாணிக்கைச் செலுத்திய தலைமை ஆசாரியன் (லேவியராகமம் 16:1-34)

    12. ஆசரிப்புக் கூடார மூடுதிரைகளில் மறைந்துள்ள நான்கு இரகசியங்கள் (யாத்திராகமம் 26:1-14)

    13. வாசகர்களின் விமரிசனங்கள்

    நற்செய்தி பாடல்கள்: படைப்பிற்கு முன் கடவுள் இரட்சிப்பை திட்டமிட்டார்

    Gospel Songs : Before Creation God Planned Salvation

    0Foreword.jpg

    முன்னுரை

    பரிசுத்த ஸ்தலத்தை நமது இருதயங்களிலும் கட்ட வேன்டும்

    நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பற்றி இன்னமும் அறியாதவர்களுக்கும் அதனை விசுவாசிக்காதவர்களுக்கும் நான் சாட்சி கூற விரும்பும் இந்த சத்தியம் தேவையாயிருக்கிறது, அவர்களுக்கு புதிய மற்றும் பழைய ஏற்பாட்டில் வெளிப்படுத்தப் பட்ட சத்தியமாகிய நீர் மற்றும் ஆவியை சாட்சி கூற விரும்புகிறேன். ஆசரிப்புக் கூடாரத்தைக் குறித்து நான் சாட்சி கூறுகையில், நான் அடிப்படை கோட்பாடுகளைக் குறித்து பேசுவதாக மட்டுமே தெரியலாம், ஆனால் அவர்களின் இருதயங்களிலுள்ள பாவப் பிரச்சினையை தீர்த்துவிட்ட வார்த்தையாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து அவர்களிடம் பேசுவது எனது விருப்பமாகும், அப்பொழுது மட்டுமே, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து அறியாமல் இருக்கும் அவர்கள் அதனை புரிந்து கொண்டு கர்த்தருக்கு சொந்தமானவர்களாவர்.

    முக்கிய வசனங்களிலிருந்து, கர்த்தர் மோசேயை அழைத்து அவர் சஞ்சரிக்கும்படி அவருக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டும்படி கூறுவதை நாம் காண்கிறோம். கர்த்தர் சஞ்சரிக்கும் படியான இடத்திற்கு பரிசுத்த ஸ்தலம் என்று பெயர். இந்த பரிசுத்த ஸ்தல கதவின் மூடுதிரையில் இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பின் இரகசியம் மறைந்திருக்கிறது. இந்த வசனங்களில் தனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டும்படி இஸ்ரவேல் மக்களிடம் கர்த்தர் கட்டளையிடுவதிலிருந்து, அவர் வாசம் பண்ணுவதற்கு நமது இருதயங்களிலும் ஒரு பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டும் படு அவர் நம்மிடம் கூறுவதாக நான் விசுவாசிக்கிறேன்.

    பரிசுத்தமுள்ள கர்த்தர் நம்முடன் வாசம் செய்ய நாம் விரும்பினால், நாம் நம் பங்கிற்கு செய்ய வேண்டியது என்ன? முதலாவதாக, கர்த்தர் எப்படி நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக நமது எல்லாப் பாவங்களையும் கழுவினார் என்பதை அறிந்து கொள்ளவேண்டும். நாம் அதனை விசுவாசிக்க வேண்டும். அப்படிச் செய்வதற்கு அடிப்படையில் நாம் எத்தகையவர்கள் என்பதைப் பார்க்க வேண்டும். நமது பிறப்பிலிருந்தே, பாவியாக பிறப்பதைத் தவிர வேறுவழியில்லை. அப்படியானால், நம்மைப் போன்ற மக்களின் இருதயங்களில் பரிசுத்தமுள்ள தேவனின் ஆவியால் எப்படி வாசம் செய்ய முடியும்? தேவனுடைய ஆவியானது பாவிகளின் இருதயங்களில் வாசம் செய்ய வேண்டுமானால், நற்செய்தியாகிய தெளிவான சத்தியத்தை விசுவாசிக்கும் விசுவாசம் அவர்களிடம் இருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறினால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நமது எல்லாப் பாவங்களையும் கழுவிய பின்னரே பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசம் செய்ய முடியும். நித்தியமான சத்தியமாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலம் பரிசுத்தமான கர்த்தர் நமது இருதயங்களில் வாசம் செய்ய முடிவது சாத்தியமாயிற்று. இந்த சத்தியமானது. அதாவது பாவமன்னிப்பு பெற்றவர்களின் இருதயங்களில் பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்கிறார் என்பது, கர்த்தரின் சித்தத்தால் சாத்தியமாகிற்று.

    கர்த்தர் வாசம் செய்ய விரும்பும் பரிசுத்த ஸ்தலம்

    ஆயினும், இன்னமும் இந்த பாவமன்னிப்பைப் பெறாத அநேக மக்கள் இந்த சத்தியத்தை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களின் இருதயங்களில் வாசம் செய்ய கர்த்தர் எத்தனையாய் விரும்புகிறார் என்பதை அவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள். ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டும் படி கர்த்தர் ஏன் மோசேயிடம் கூறினார் என நீங்கள் எண்ணுகிறீர்கள்? நமது இருதயங்களில் வாசம் செய்வதற்காகவே அவர் அப்படிச் செய்தார். அநேக மக்கள் சத்தியத்தைக் (நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி) குறித்து அறியாததால், மிகப் பெரிய, ஆடம்பரமான தேவாலயங்களைக் கட்டுவதற்கும், மிகவும் அதிகமான பணத்தைச் செலவு செய்கிறார்கள், அந்த ஆலயங்களே கர்த்தர் வாசம் செய்யும் இடங்கள் என்று விசுவாசித்து மாயையில் விழுவதே பிரச்சினையாகும்.

    அத்தகைய மக்கள் தம் வாழ்நாள் முழுவதும் சம்பாத்தித்த எல்லாப் பணத்தையும் காணிக்கையாக்க சித்தமுடையவர்களாய் இருக்கின்றனர், மிகவும் ஆடம்பரமான பெரிய கட்டிடங்களாக கட்டினால் மட்டுமே அவர்களின் அந்த ஆலயங்கள் பரிசுத்தமுள்ள கர்த்தரின் ஆலயமாகும் என அவர்கள் தவறாக எண்ணுவதே இதற்கான காரணமாகும். நாம் பெரிதும், அழகியதுமான ஒரு ஆலயத்தைக் கட்டி அதனைக் கர்த்தரிடம் கொடுத்தால் அவர் அதில் பிரியப்படுவாரா? இதனை நாம் செய்தால் அவர் நம்மை உண்மையாகவே ஆசீர்வதிப்பாரா? இந்த ஆலயம் கர்த்தரால் வாசம் செய்யப்படும் பரிசுத்த ஸ்தலம் ஆகிவிடுமா? அவைகள் உண்மையே அல்ல. இவைகளெல்லாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அறியாதவர்களின் அறிவில்லாத விசுவாசத்தினதும், சிந்தனைகளினதும் விளைவேயாகும், மேலும் அவர்கள் பெரிதான மாயையில் விழுந்து போனார்கள்.

    கர்த்தர் வாசம் செய்ய விரும்பும் பரிசுத்த ஸ்தலமானது ஒரு பெரிய ஆலயக்கட்டிடம் அல்ல, ஆனால் அது பாவங்கள் கழுவப்பட்ட உங்களின் இருதயங்களாகும். பாவமன்னிப்பு பெற்று பரிசுத்தமாகிய நீதிமான்களின் இருதயத்தில் வாசம் செய்ய கர்த்தர் விரும்புகிறார். அப்படியானால், இதனைச் சாத்தியமாக்குவதற்கு மனம் வருந்தி ஜெபித்து பரிசுத்தமாக வேண்டுமா? இல்லை, இது உண்மையல்ல. ஆயினும் இன்றைய கிறிஸ்தவர்களில் பலர் இப்படியாகத்தான் விசுவாசிக்கிறார்கள். இது மிகவும் துரதிருஷ்டவசமானதும் கவலையளிப்பதாகவும் இல்லையா?

    கர்த்தர் கூறினார், அவர்கள் நடுவிலே நான் வாசம் பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக. நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின்படியும், அதினுடைய எல்லாத் தட்டுமுட்டுகளின் மாதிரியின்படியும் அதைச் செய்வீர்களாக (யாத்திராகமம் 25:8-9). கர்த்தர் கூறியதைப் போல, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்த அனைவரின் பாவங்களையும் அவர் கழுவியதுடன், அவருடைய ஆவியானவர் வாசம் செய்யக்கூடிய இடமாகவும் அவர்களை ஆசீர்வதித்தார். தனது ஊழியர்களாக கர்த்தர் மாற்றுவது அவர்களைத்தான். கர்த்தர் நமக்கு தனது பரிசுத்த ஸ்தலத்தின் மாதிரியைக் காட்டினார், இந்த மாதிரிக்கு ஏற்றபடி பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டும் படி அவர் நம்மிடம் கூறினார், அவர் நமக்கு காட்டியபடி செய்ய வேண்டும். இதன் மூலமாக, ஆசரிப்புக் கூடாரத்தின் இரகசியமாகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக பாவமன்னிப்பை நம்மால் பெற்றுக் கொள்ள வேண்டும் என கர்த்தர் நம்மிடம் கூறுகிறார்.

    மேசேயின் மூலமாக ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டுவதற்காக, தனக்கு காணிக்கையை எடுத்து வரும்படி கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கு கட்டளையிட்டார். யாத்திராகமம் 25:3-7 இல் எழுதப்பட்டுள்ளது, நீங்கள் அவர்களிடத்தில் வாங்கவேண்டிய காணிக்கையாவன, பொன்னும், வெள்ளியும், வெண்கலமும், இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்புநூலும், மெல்லிய பஞ்சுநூலும், வெள்ளாட்டுமயிரும், சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும், தகசுத்தோலும், சீத்திம் மரமும், விளக்கெண்ணெயும், அபிஷேகதைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும், தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும், ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகக் கற்களும் இரத்தினங்களுமே. இந்த காணிக்கைகளை ஏற்றுக் கொண்ட மோசே, கர்த்தரிடமிருந்து ஞானத்தைப் பெற்ற பணியாட்களின் மூலமாக இந்தப் பொருட்களைக் கொண்டு கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டினான்.

    பழைய ஏற்பாட்டில் தனக்கொரு ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்ட மோசேயிடம் கட்டளையிட்ட கர்த்தர், புதிய ஏற்பாட்டில், நமக்குள்ளாக வாசம் செய்யும்படி, நம் ஒவ்வொருவரின் இருதயங்களுக்குள்ளும் ஒரு பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டும் படி கூறுகிறார். நமது இருதயங்களுக்குள் இந்த பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டுவதற்கு பயன்படும் பொருட்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வார்த்தையாகும். இந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் பொருட்களின் மூலமாக, நமது எல்லாப் பாவங்களையும் கழுவி, சுத்தமானவர்களாக இருக்கவேண்டும். தமக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டும்படி கூறியதின் மூலமாக, நமது இருதயங்களை வெறுமையாக்குமாறும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்குமாறும் கர்த்தர் கூறுகிறார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நமது இருதயங்களை நாமனைவரும் சுத்திகரிக்கவேண்டும்.

    பாவிகளின் இருதயங்களில் கர்த்தர் வாசம் செய்ய வேண்டுமானால், நம்மிடம் எத்தகைய விசுவாசம் இருக்க வேண்டுமென்ற கேள்வி, அப்பொழுது, எழும்புகிறது. இதற்கான பதில் எளிமையும் தெளிவுமானது. பரிசுத்தமுள்ள கர்த்தர் பாவிகளின் இருதயங்களில் வாசம் செய்ய வேண்டுமானால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது அவர்களிடம் எதைக் கூறுகிறது என்பதை அவர்கள் முதலில் அறிந்து கொள்ள வேன்டும், அதன் பிறகு அவர்கள் அதனை விசுவாசிக்க வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அவர்கள் விசுவாசிக்கும் போது மட்டுமே, அவர்களின் இருதயங்கள் சுத்திகரிக்கப் பட்டு, பாவமன்னிப்பையும் பெறும் போது மட்டுமே, பரிசுத்தமுள்ள கர்த்தர் கடைசியாக பரிசுத்த ஆவியானவராக, பாவமன்னிப்பு பெற்ற அத்தகைய மனிதர்களின் இருதயங்களில் வாசம் செய்வார். பாவமன்னிப்பு பெற்ற நீதிமான்கள் தம்முடைய பிடிவாதத்தை விட்டு விட்டு, கர்த்தரின் அருளாகிய, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்க தீர்மானித்தவுடன், அவர்களின் இருதயங்களில் வாசம் செய்வதற்காக கர்த்தர் வருகிறார்.

    இதனால்தான் 1 கொரிந்தியர் 3:16-17 கூறுகிறது, நீங்கள் தேவனுடைய ஆலயமயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். கர்த்தர் பரிசுத்தரும் முற்றிலும் பாவமற்றவருமாயிருக்கிறார். பாவியின் இருதயத்தில் அவரால் தங்கியிருக்க முடியாது. ஆகவே, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் முற்றிலுமாக தூய்மையான பிறகே அவரால் நமது இருதயங்களுக்குள் வரமுடியும். பாவமன்னிப்பைப் பெற்றவர்களால் மட்டுமே பரிசுத்த ஆவியானவரின் வரத்தைப் பெற முடியும் என்று வேதாகமம் தெளிவாக கூறுகிறது (அப்போஸ்தலர் 2:38).

    மறுபடியும் பிறந்தவர்களை சத்தியத்தின் வார்த்தை பெரிதும் ஆசீர்வதிக்கிறது, ஆனால் பாவமன்னிப்பை இன்னமும் பெறாதவர்களுக்கோ, அதனைப் புரிந்து கொள்வது மிகவும் கடினமானது. பரிசுத்தமுள்ள கர்த்தரால் மனித இருதயங்களில் எப்படி வாசம் செய்ய முடியும்? இன்னமும் மறுபடியும் பிறக்காத இறையியலாளர்களிடமோ அல்லது போதகர்களிடமோ, இத்தகைய கேள்வி விடுவிக்கப்பட முடியாததாக இருக்கும். இன்னமும் மறுபடியும் பிறக்காத இன்றைய மக்களிடம் இந்த கேள்வியை நாம் கேட்டு, இதற்கான சரியான பதிலைக் கூறும்படிக் கூறினால், அவர்கள் ஊழியர்களாயிருந்தாலும், டீக்கன்களாக இருந்தாலும், மூப்பர்களாக இருந்தாலும், ஒரு திருப்திகரமான பதில் வருவது மிகவும் கடினமானதாகும். ஆனால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அறிந்து அதனை விசுவாசிப்பவர்களுக்கு இந்த எளிய கேள்விக்கான பதில் இருக்கிறது.

    அப்படியானால், நாம் இப்போது என்ன செய்ய வேன்டும்? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நமது இருதயங்களால் விசுவாசிக்கும் போது, கர்த்தரை நமது இருதயங்களில் வாசம் செய்ய ஏதுவாக்கும் பரிசுத்த ஸ்தலம் கட்டப்படுகிறது. பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டுவதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசித்து, அதன் மூலமாக நமது இருதயங்களில் உள்ள எல்லாப் பாவங்களையும் கழுவி கர்த்தருக்கு முன்னதாக நிற்கும் போது மட்டுமே நமது இருதயங்கள் கர்த்தர் வாசம் செய்யக்கூடிய பரிசுத்த ஸ்தலங்களாக மாறும்.

    நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து, நமது இருதயங்களில் உள்ள எல்லாப் பாவங்களையும் நாம் சுத்தம் செய்யும் போது, அவற்றில் வாசம் செய்வதற்கு கர்த்தர் வருவார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலமாகவே, பரிசுத்த தேவாலயத்தை உங்கள் இருதயங்களில் கட்டமுடியும். உங்களில் சிலராவது உங்கள் இருதயங்களை சுத்தப் படுத்த இதுவரை மனம் வருந்தி ஜெபித்ததின் மூலம், உங்கள் சொந்தத்தில் தேவாலயத்தைக் கட்ட முயற்சி செய்திருப்பீர்கள். ஆனால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து உங்கள் மனதை புதியதாக்கி இந்த தவறான விசுவாசத்தை கைவிட்டு விட்டு, சீர்ப்படுவதற்கான உங்களின் நேரம் இதுவேயாகும்.

    நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே பழைய ஏற்பாட்டு பலி காணிக்கை முறையின் உண்மையான சாராம்சமாகும்

    பழைய ஏற்பாட்டில், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது ஆசரிப்புக் கூடாரத்தின் பலி காணிக்கை முறையாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டு பலி காணிக்கை முறையில் களங்கமற்ற பலி காணிக்கையும், ஆசாரியர்களும், கைவைத்தல்களும், இரத்தம் சிந்துதலும், தவிர்க்கக் கூடாத இன்றியமையாத சத்தியங்களாக இருந்தன. கர்த்தரால் புனிதப் படுத்தப்பட்ட பலி காணிக்கை மிருகத்தை பாவிகள் எடுத்து வந்தனர், தமது கைகளை அதன் தலையில் வைப்பதின் மூலமாக தமது பாவங்களை எல்லாம் அதன் மீது சுமத்தினர், அதன் பிறகு அதன் இரத்தத்தைப் பிடித்து ஆசாரியர்களிடம் கொடுத்தனர். ஆசாரியர்கள் அந்த காணிக்கையை பாவிகளின் சார்பாக கர்த்தரிடம் கொடுத்தனர், மேலும் அவர்கள் பலி காணிக்கையை துண்டுதுண்டாக வெட்டி, அதன் இரத்தத்தை சர்வாங்க தகன பலிபீடத்தின் கொம்புகளில் ஊற்றினர்.

    பாவநிவாரண நாளிலே, இஸ்ரவேல் மக்களுக்கான பலி காணிக்கையை கொடுப்பதற்கு முன்னதாக, தலைமை ஆசாரியன் தனக்காகவும் தனது வீட்டாருக்காகவும் பலி காணிக்கை ஒன்றைக் கொடுக்க வேண்டியதிருந்தது. தலைமை ஆசாரியன் இஸ்ரவேல் மக்களுக்காக பலி காணிக்கை கொடுப்பதற்கு முன்னால், அவன் தன்னுடைய பாவங்களையும், தன்து குடும்பத்தாரின் பாவங்களையும் நிவர்த்திக்க வேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டார், ஆகவே கர்த்தர் நியமித்தபடியே அவன் அவைகள் அனைத்தையும் செய்தான். அவன் இரண்டு ஆடுகளை பலி காணிக்கையாக எடுத்து வந்து, அவற்றிற்காக சீட்டு போட்டு, தனது கைகளை முதலாவது ஆட்டின் தலையின் மீது வைத்ததின் மூலமாக இஸ்ரவேல் மக்களின் பாவங்களை அதன் மீது சுமத்தினான். அந்த ஆட்டைக் கொன்று, தெளிப்பதற்காக அதன் இரத்தத்தை பரிசுத்த ஸ்தலத்திற்குள் எடுத்து வந்து, அவருக்கு பலி காணிக்கை கொடுத்தான்.

    அதன் பிறகு, மற்ற ஆட்டை தனது மக்களின் எல்லாப் பாவங்களுக்குமான பலி காணிக்கையாக கொடுத்தான். அதற்கு அவன், உயிருள்ள ஆட்டின் தலையின் மீது கைகளை வைக்க வேண்டியிருந்தது, அதன் பிறகு இஸ்ரவேல் பிள்ளைகளின் மீறுதல்களையும், அவர்களுடைய அக்கிரமங்களையும், அவர்களுடைய எல்லாப் பாவங்களையும் அறிக்கைச் செய்தான், அதன் பிறகு, பொருத்தமான ஒருவனின் மூலமாக அது வனாந்தரட்திற்குள் அனுப்பப் பட்டது (லேவியராகமம் 16:20-21). இங்கே தலைமை ஆசாரியனின் ஒரு முக்கியமான செயலை நாம் கவணமாக பார்க்க வேண்டும் - அதாவது, உயிருள்ள ஆட்டின் தலை மீது தனது கைகளை வைத்தான். இந்த செயலுக்கான விளைவு என்ன? இந்த செயலின் மூலமாக இஸ்ரவேலர்களின் எல்லாப் பாவங்களும் பலி காணிக்கை மிருகத்தின் மீது சுமத்தப் பட்டன என்று வேதாகமம் கூறுகிறது. கர்த்தரால் ஏற்படுத்தப் பட்ட பழைய ஏற்பாட்டின் பலி காணிக்கை முறையானது புதிய ஏற்பாட்டின் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை வெளிப்படுத்துகிறது.

    நமது விசுவாசத்தின் மூலம் கர்த்தரின் விருப்பங்களை நாம் நிறைவேற்ற வேண்டும்.

    எகிப்தியரிடமிருந்து இஸ்ரவேல் மக்களை விடுவித்து, வனாந்தரத்தில் வாழ்ந்த பிறகு அவர்களைக் கானான் தேசத்தை நோக்கி வழிநடத்துவதே இஸ்ரவேல் மக்களுக்கு கர்த்தர் செய்ய விரும்பியதாகும். தனது மக்களுக்குள் வாசம் செய்யவும் அவர்களால் ஆராதிக்கப் படுவதையுமே கர்த்தர் விரும்பினார். அவர் அவர்களின் கர்த்தராக இருக்கவும், அவர்களைத் தனது சொந்த மக்களாக மாற்றவுமே அவர் அவர்களை எகிப்து நாட்டிலிருந்து விடுதலையாக்கினார். இதைப் போல, உங்களுக்கும் எனக்குமான கர்த்தரின் திட்டங்கள் மிகவும் தெளிவானவையாகவும் நிச்சயமானவையாகவும் இருக்கிறது. நம் ஒவ்வொருவரையும் பாவத்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதையாக்கி, நம்மைத் தனது மக்களாக மாற்றுவதை அவர் விரும்புகிறார். ஆயினும், மக்கள் இதனை எள்ளவும் தெரிந்து கொள்ளாமல் தமது நேரத்தை வீனடித்துக் கொண்டிருக்கின்றனர், இந்த சூழ்நிலை மிகவும் கவலையளிக்கிறது.

    லேவியராகமத்தில் காட்டப்பட்ட பலி காணிக்கை முறையானது இயேசுவின் ஊழியங்களைப் பற்றி அப்படியே கூறுகின்றன, அவர் இப்பூமியில் பிறந்து, ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் மரித்து, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்து, நம்மை இரட்சித்தார். இந்த சத்தியமே நமது பாவங்களைக் கழுவவும், இதன் மூலம் நாம் கர்த்தருக்கும் முன்னதாக நிற்கவும் நம்மை ஏதுவாக்கியது. நாம் பாவமற்றவர்களாக மாறி கர்த்தருக்கு ஊழியம் செய்யும் போது இந்த உலகத்தில் நம்மால் விசுவாசத்தால் வாழமுடிவதுடன், நாம் கர்த்தருடன் நடக்கையில், நற்செய்தியை அதிலுள்ள யாவருக்கும் பரப்பவும் முடிகிறது. பாவமன்னிப்பைப் பெறுவதற்கான வழி இத்தனைத் தெளிவானதாக இருக்கும்போது, இந்த சத்தியத்தைக் குறித்து அறியாமல் அலையும் மக்களுக்காக பரிதாபப் பட மட்டுமே முடிகிறது.

    பாவிகளின் இருதயங்களில் கர்த்தர் வாசம் செய்ய வேன்டுமானால், கர்த்தர் வாசம் செய்வதற்கேற்ற பரிசுத்தமான விசுவாச வீட்டை அவர்கள் முதலில் கட்ட வேண்டும். அப்படியானால், இந்த வீட்டை அவர்கள் கட்டுவது எப்படி? வைக்கோலிலா அல்லது பலைகையிலா? செங்கல்லிலா? ஆனால் அத்தகைய திடப்பொருட்களால் கட்டப்பட்ட இடங்களில் கர்த்தர் வாசம் செய்ய விரும்புவதில்லை, ஏனெனில் அவர் ஆவியாயிருக்கிறார். கர்த்தருடைய செயல்களில் பங்கு பெறவும் அவருக்கு ஒரு வீட்டைக் கட்டவும், அவர் நம்மிடம் குறிப்பிட்ட பொருட்களையே நாம் பயன்படுத்த வேண்டும்.

    பழைய ஏற்பாட்டில், அவர் அவர்களிடம் கூறிய பொருட்களின் மூலமாக தேவாலயத்தைக் கட்டுமாறு கர்த்தர் இஸ்ரவேல் மக்களிடம் கூறினார் - அதாவது பொன், வெள்ளி, வெண்கலம், இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவை, ஆட்டின் மயிர், ஆட்டுக் கடாவின் சிகப்புச் சாயம் பூசப்பட்ட தோல்கள், தகசுத் தோல்கள், மற்றும் சீத்திம் மரம் ஆகியவைகளே அவையாகும். இதைப் போல, கர்த்தரால் ஏற்படுத்தப் பட்ட விசுவாசப் பொருட்களான நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக விசுவாசத்தின் பரிசுத்த வீட்டை நமது இருதயங்களில் கட்ட வேண்டும். நமது சொந்த சிந்தனைகளின் மூலமாகவும் யோசனைகளின் மூலமாகவும் கர்த்தர் வாசம் செய்யும் இருதய வீட்டை நாம் கட்டக்கூடாது.

    கர்த்தர் வாசம் செய்யும் வீட்டை நாம் கட்ட வேண்டுமானால், நமது பாவங்களைத் துடைப்பதற்காக உலகம் தோன்றுவதற்கு முன்னரே கர்த்தரால் திட்டமிடப்பட்டு முடிவுசெய்யப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நம் விசுவாசித்தேயாக வேண்டும். ஆசரிப்புக் கூடார தூண்களை நாம் மண்ணினால் செய்தால், கர்த்தர் நம் இருதயங்களில் வாசன் செய்யமாட்டார். கர்த்தர் வாசம் செய்யும் தேவாலயமாக நாம் மாறவேண்டுமானால், அவர் கேட்கும் விதமாக நம் விசுவாசத்தை நாம் மாற்றவேண்டும், ஆகவே நம்மால், அவரின் நற்செய்தியை அறிந்து அதனை விசுவாசிக்கமுடியும், இதன் மூலமாக பாவமன்னிப்பை நாம் பெற்று, அவரைப் பிரியப் படுத்தி, நமது விசுவாச வாழ்வை வாழுகையில் அவரால் நேசிக்கப்பட முடியும். அப்படிசெய்வதற்கு, நமது மனதை நாம் திறக்க வேன்டும், நமது விசுவாசம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பின்பற்ற வேண்டும். கர்த்தர் காட்டிய மாதிரியின் மூலமாக வழிநடத்தப்பட்டவர்களும், அதனை அதன் படியே விசுவாசித்து பின்பற்றுபவர்களுமாக, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசித்தேயாக வேண்டும்.

    இதைப் போல, நீங்களும் நானும் தேவனை நமது இருதயத்தில் வாசம் செய்யும்படி விரும்பினால், கர்த்தரின் குமாரர் பெற்ற ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் நான் விசுவாசிக்க வேன்டும். அவர் நம்மை எப்படி இரட்சித்தாரோ அதன் படியே நாம் விசுவாசிக்க வேண்டும் - அதாவது, கர்த்தரின் குமாரர் இப்பூமிக்கு வந்தார், ஞானஸ்நானம் பெற்றார், சிலுவையில் மரித்தார், மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்தார். இந்த சத்தியத்தை விசுவாசிப்பதின் மூலமாக, நமது இருதயங்களின் எல்லாப் பாவங்களையும் சுத்தப் படுத்த வேண்டும். நாம் இதனைப் புரிந்து கொண்டு விசுவாசிக்க வேண்டும், ஏனெனில் அப்போது மட்டுமே விசுவாசிப்பவர்களின் இருதயங்களில் கர்த்தரால் வாசம் செய்யமுடியும். நாம் நமது பாவங்களில் இருந்து விடுவிக்கப் பட வேண்டுமானால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

    நமது இரட்சிப்பிற்கான வாசல் இயேசுவே

    இயேசு கூறினார், நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் (யோவான் 14:6). கர்த்தரிடமிருந்து பாவமன்னிப்பை நாம் பெற்றுக் கொள்ள வேன்டுமானால், இயேசுவானவர் கர்த்தரின் குமாரர் என்பதை விசுவாசித்தேயாக வேண்டும். நமது எல்லாப் பாவங்களையும் இயேசு கிறிஸ்து தனது சரீரத்திற்குள் ஏற்றுக் கொண்டார் என்பதையும், அவற்றிற்காக அவர் ஆக்கினைக்குள்ளானார் என்பதையும், இதன் மூலமாக அவர் தன் ஞானஸ்நானத்தினாலும் சிலுவையின் இரத்தத்தாலும் நம்மை இரட்சித்தார் என்பதை நமது இருதயங்களில் நாம் விசுவாசித்தாக வேண்டும். இந்த இரட்சிப்புக்காக கர்த்தருக்கு நாம் போதுமான நன்றிகளைக் கூற முடியாது. இதனைப் போல நாம் விசுவாசிக்கவில்லை எனில், நமது எல்லா விசுவாசமும் வீனே, நாம் எத்தனை பக்தியோடு இருந்தும் பயனில்லை.

    சத்தியத்தின் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைத் தவிர பாவமன்னிப்பை வேறெந்த வழிகளிலும் நம்மால் பெற்றுக் கொள்ள முடியாது. கடைசி நாட்கள் வரும்போது, எத்தனைச் சரியாக கர்த்தரை நாம் விசுவாசித்தோம் என்று உண்மையான நற்செய்தியுடன் நாம் செய்த செயல்களின் மூலம் அவர் சோதிப்பார் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறான். நம்முடைய செய்கைகள் எரிந்து அழிந்து போய்விட்டால், அத்தகைய செயல்கள் யாவும் வீனாகும் என்று பவுல் கூறினான் (1 கொரிந்தியர் 3:11-15). உண்மை சத்தியத்தின் வார்த்தையாகிய, நற்செய்தி வார்த்தையாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து கர்த்தருக்கு முன்னால் வருவதை நம்மால் தவிர்க்க முடியாது.

    கடைசி நாட்களில் கர்த்தர் நமது விசுவாசத்தை சோதிக்கும் போது, நமது மாமிசத்திற்குரிய விசுவாச வாழ்க்கையில் கட்டிய அனைத்து செயல்களும் நெருப்பினால் எரிந்து போகும். வைக்கோல், கல், செங்கல், அல்லது பலகையினால் தேவாலயத்தைக் கட்டினால், அதன் விளைவு இத்தகையதாகவே இருக்கும். அப்படியானால், எதனைக் கொண்டு, கர்த்தரின் வீட்டை நாம் கட்டவேன்டும்? எச்சந்தேகமும் இல்லாமல், கர்த்தர் நமக்கு கூறியவைகளைக் கொண்டே - அதாவது, சீத்திம் மரம், வெள்ளி, பொன், வெண்கலம், இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல், விலையேறப்பட்ட கற்கள் போன்றவற்றை பயன்படுத்தி தேவாலயத்தை நாம் கட்ட வேண்டும்.

    நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்க வேண்டும் என்று இது நம்மிடம் கூறுகிறது, அதாவது நமது தேவன் இப்பூமிக்கு வந்து நம்மை இரட்சித்தார், இதன் மூலமாக பாவமன்னிப்பை நாம் பெற்றுக் கொள்ளலாம். நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்று இயேசு கூறிய போது, உண்மை சத்தியமாகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக நமது எல்லாப் பாவங்களையும் துடைத்துவிட்டதாக பொருள் படும்படி கூறினார். அவர் பரலோகத்தின் வாசலுமாய் இருக்கிறார். இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலமாக ஆசரிப்புக் கூடார பிரகாரத்தின் வாசல் நெய்யப்பட்டதைப் போல, ராஜாதி ராஜாவாகிய இயேசு மனித சரீரத்தில் இப்பூமிக்கு வந்து, உலகின் எல்லாப் பாவங்களையும் சுமப்பதற்காக ஞானஸ்நானம் பெற்று, அதனை நிவர்த்தி செய்ய மரிக்கும் படியாக இரத்தத்தைச் சிந்தி, இதன் மூலமாக பரலோகத்தின் வழியை நமக்காக திறந்தார். இந்த தேவனை நாம் விசுவாசிப்பதின் மூலமாக, விசுவாசத்தினால் புதிய வாழ்வைப் பெற்றுக் கொண்ட கர்த்தரின் மக்களாக நாம் மாறினோம், நாம் நித்திய ஜீவனைப் பெற்றவர்களுமாவோம். ஆனால் பாவிகளுக்கு இந்த சத்தியம் தெரியாது, ஆகவே, அவர்கள் தமது விசுவாசத்தின் வீட்டை வைக்கோலால் தொடர்ந்து கட்டிக் கொண்டிருக்கிறார்கள், முடிவில் அவை யாவும் எரிந்து போகும்.

    கர்த்தர் தமக்கு காட்டிய மாதிரியின் படியே கர்த்தரின் உண்மையான ஊழியர்கள் தேவாலயத்தைக் கட்டுகிறார்கள்

    ஆசரிப்புக் கூடாரத்தைக் குறித்த சத்தியத்தை கிறிஸ்தவர்களுக்கு காட்ட வேண்டும் என எனது இருதயப் உணர்ந்ததற்கான காரணம் இதுவேயாகும். ஆசரிப்புக் கூடாரத்தைக் குறித்த எனது முதலாவது புத்தகம் யூத மக்களைப் பற்றியது. இப்போது, கர்த்தர் புறஜாதியாருக்கு ஏற்படுத்திய ஆசரிப்புக் கூடாரத்தில் வெளிப்படுத்தப் பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை, அவர்களுக்கு போதிக்கிறேன். ஆசரிப்புக் கூடாரத்தில் வெளிப்படுத்தப் பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விளக்குவதற்கு இன்னமும் சில உரையாடல்கள் போதுமானது.

    ஆசரிப்புக் கூடாரத்தில் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை பிரித்து அதனை விளக்கினால், நாம் மற்றவர்களுக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தவர்களாவோம். அதன் பிறகும் அவர்கள் விசுவாசிக்காவிட்டால் நம்மால் செய்யக் கூடியது எதுவும் இல்லை, ஆனால் அவர்கள் விசுவாசிக்கிறார்களோ இல்லையோ, கர்த்தருடைய ஊழியர்களாகிய நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை முழு உலகத்திற்கும் பரப்புவதை தொடர வேன்டும். இந்த செயலை நாம் முடிக்கும் போது, மறுபடியும் பிறக்காத அநேக கிறிஸ்தவர்கள் தமது எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்கப் படுவது சாத்தியமானதாகும். சத்தியமாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து கூறும் கடமை உங்களுக்கும் எனக்கும் இன்னமும் இருக்கிறது. இதனால் தான் நற்செய்தியை பிரசங்கிக்க இத்தனைக் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

    இந்த வேலையைச் செய்யாமல், நற்செய்தியைப் பிரசங்கிக்க நாம் தவறினால், இயேசுவின் இரத்தத்தை மட்டுமே விசுவாசித்துக் கொண்டிருப்பவர்கள் நரகத்தில் தள்ளப் படுவர், கர்த்தர் அவர்களுடைய பாவங்களை நம்முடையதாக காண்பார் (எசேக்கியேல் 33:6, 1 கொரிந்தியர் 9:16). நாம் இதனைச் செய்வோம் என்று உறுதியாக நம்பி கர்த்தர் இந்த விலையேறப் பட்ட நற்செய்தியை நம்மிடம் கொடுத்திருக்கிறார். நாம் வலிக்கு அஞ்சுபவர்களாகவும், கபட்டு ஊழியர்களாகவும் மாறினால், இதன் பலனாக நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை மக்களால் பார்க்கவும் முடியாது, கேட்கவும் முடியாது, அதன் பிறகு இதற்கான முழு பொறுப்பும் நம்முடையதாகிவிடும். கர்த்தர் நம்மைக் கண்டிப்பார், என்னுடைய நற்செய்தியை நீ ஏன் பரப்பவில்லை? எனக் கேட்பார். இதனால் தான் நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைத் மக்களுக்கு எடுத்துச் செல்ல தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்யும்போது, நரகத்தினுள் வீசப்படும் அவிசுவாசிகளின் நிலமைக்கு நாம் பொறுப்பானவர்களாக இருக்க மாட்டோம். அது அவர்களுடைய சொந்த தவறாகும், ஏனெனில் அவர்களுக்கு சத்தியம் தெரிந்தாலும் கூட அதனை அவர்கள் விசுவாசிக்கவில்லை.

    நாம் இப்போது செய்ய வேண்டியதெல்லாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை முழு உலகமும் பரப்புவது மட்டுமே. இது நான் மட்டும் செய்ய வேண்டிய வேலை அல்ல, இது நாம் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டிய வேலையாகும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் அவர்களுக்கு பிரசங்கிக்கும் போது, மக்கள் அதனை விசுவாசிக்காவிட்டால், இது நமது சக்திக்கும் மீறிய ஒன்றாகும், இதற்காக கர்த்தர் நம்மை பலி கூற மாட்டார்.

    ஏற்கனவே, அவருடைய வார்த்தையிலிருந்து இந்த நற்செய்தியைக் குறித்த கடைசி அத்தாட்சியைத் தரும்படியாக அநேக மக்கள் கேட்கின்றனர், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது ஆசரிப்புக் கூடாரத்திலும் நிரூபிக்கப் பட்டதா? ஆசரிப்புக் கூடாரத்தில் கர்த்தர் கூறியதை நாம் அவர்களுக்கு கூறினால், இந்த அத்தாட்சிக்கு முன்னதாக அவர்களால் எதனையும் கூற முடியாது, நமது இருதயங்களும் விடுதலையாகி மகிழ்ந்து களிகூறும், ஏனெனில் நாம் எதனை எல்லாம் செய்ய வேன்டுமோ அதனை உண்மையாக செய்து விட்டோம். அவர்களின் ஒவ்வொருவரும் விசுவாசித்து மறுபடியும் பிறப்பதனால், அவர்களின் இருதயங்கள் சுத்தமாகி, கர்த்தர் வாசம் செய்வதற்கு ஏற்ற ஆலயமாகும் என்று நம்ப முடியும்.

    நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அவர்கள் விசுவாசிக்கிறார்களா அல்லது விசுவாசிக்கவில்லையா என்பதற்கு நாம் பொறுப்பானவர்களாக இருக்க முடியாவிட்டாலும், நற்செய்தியை பரப்பிய நமது சிறிய வேலையை நிறைவேற்றி விட்டோம், அது நமது தலையாய கடமையாகும். இது மிகவும் இலகுவான வேலை அல்ல. ஒரு புத்தகத்தைத் தயாரிக்க, மிகுந்த அர்ப்பணிப்பு தேவை, விசுவாசம், தொடர்ந்து வரும் துன்பங்களை சந்திக்க நிலைத்து நிற்கும் பொறுமை தேவையாகும், இது ஒரு தாயின் பிரசவ வேதனைகளைப் போன்றது.

    தேவன் நமது இருதயங்களுக்குள் வாசம் செய்ய விரும்புகிறார், அதற்காக பழைய ஏற்பாட்டுக் காலத்தில், பலி காணிக்கையின் மூலமாகவும், கை வைப்பதின் மூலமாகவும், பலி காணிக்கைமுறையின் படியான இரத்தத்தினாலும், இஸ்ரவேல் மக்களின் பாவங்களைத் துடைத்தார், புதிய ஏற்பாட்டில், இயேசு இவ்வுலகிற்கு வந்தார், யோவானால் ஞானஸ்நானம் பெற்றார், உலகின் எல்லாப் பாவங்களையும் சுமந்தார், சிலுவையில் அறையப் பட்டார், தனது இரத்தத்தைச் சிந்தி சிலுவையில் மரித்தார், மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்தார், இவைகளின் மூலமாக நமது நிறைவான இரட்சகரானார். இந்த இயேசுவை நமது இருதயங்களால் விசுவாசிப்பதின் மூலமாகவே, பாவமன்னிப்பை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும், மேலும் இதன் மூலமாகவே பரிசுத்தமான கர்த்தர் நமது இருதயங்கள் வாசம் செய்யமுடியும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைத் தவிர வேறு சத்தியங்கள் இல்லை.

    உலகம் முழுவதும் விதைக்கப் பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது சீக்கிரமாகவே பலன் தரும்

    தேவன் இந்த பூமிக்கு மறுபடியும் திரும்புவதற்கு முன்னால் இதனை சாதித்து விட வேண்டும் என்பது எனது மிகப் பெரிய ஆவலாகும். சீக்கிரமாக வந்து நம்மை அழைத்துச் செல்லுமாறு தேவனிடம் நான் வேண்டுகிறேன். தேவன் மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்ததைப் போல, அவர் நம்மிடம் திரும்பி வந்து நித்திய ஜீவனைத் தரும் அந்த நாளுக்காக நாம் ஏங்கிக் கொண்டிருக்கிறோம். தேவன் திரும்பி வருவதற்கு முன்னர் நாம் தூங்கி விட்டால், அவர் நம்மை எழுப்பி, ஆவிக்குரிய ஆடையால் நம்மை உடுத்தி, தனது பரலோக ராஜ்யத்திற்கு மேலே எடுத்துச் செல்வார். இந்த நாள் சீக்கிரமாக வரவேண்டும் என்று நாம் காத்திருக்கிறோம், அந்நாளிலே தேவன் நம்மை எடுத்துக் கொள்வார், அவர் நமக்காகத் தயாரித்த ஆயிரவருட அரசுக்கு நம்மை எடுத்துச் செல்வார், அதன் பிறகு பரலோகத்தில் உள்ள கர்த்தரின் ராஜ்யத்தில் நித்தியமாக வாழுவதற்கு நம்மை ஏதுவாக்குவார். இது சரியானது இல்லையா? இதனால் தான் நற்செய்தியானது முழு உலகமும் பரவ வேண்டும் என நான் நம்புகிறேன்.

    ஆதி சபையின் நாட்களில் இருந்தே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது பிரசங்கிக்கத் தொடங்கப் பட்டது. இந்த நற்செய்தியானது உத்வேகம் பெற்று, இது வரை 2000 ஆண்டுகளாக பிரசங்கிக்கப் பட்டிருந்தால், இந்த உலகத்தின் முடிவு ஏற்கனவே வந்திருக்கும். ஆனால் ஆதி சபையின் காலம் முடிந்தவுடனேயே, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது தடைப்பட்டு, அப்படியே விட்டுவிடப்பட்டது. இப்போது தான் நற்செய்தியானது மீண்டுமாக எழும்பி, உலகம் முழுவதும் பிரசங்கிக்கப் பட்டு வருகிறது, அது உலகில் பரவும் காலம் மிகவும் குறுகியதாகும். அவர் பரிசுத்த ஆவியானவரின் முதலாவது மழையையும், கடைசி மழையையும் எடுத்து வருவேன் என்று கூறியதைப் போன்று, நாம் இப்போது பரப்பி வரும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை எல்லோரும் கேட்டு, அதன் விளைவாக பாவமன்னிப்பையும் நித்திய ஜீவனையும் பெற்றுக் கொள்வார்கள்.

    மனித குலத்தின் இறுதி கட்டம் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தின் இந்த சமயத்தில், நம் மூலமாக கர்த்தர் நற்செய்தியைப் பரப்பி வருகிறார் என்பது நமக்கு மதிப்பைத் தருகிறது, நமது வாழ்வை அவருடைய ஊழியத்திலும், நற்செய்தியைப் பரப்பும் சிறந்ததொரு வேலையிலும் நாம் பங்கேற்கிறோம் என்பதற்கு நாம் அவருக்கு நன்றி கூற வேண்டும்.

    சரியாக பார்த்தால், நமது வாழ்க்கையானது குப்பைத் தொட்டியில் போட்டு, தீக்குழியொன்றின் எறியப்படுவதற்கு தக்கவாறு இருக்கிறது. ஆதாமின் சந்ததியினராக பிறந்ததினால், நாம் மனிதகுலத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதற்கான ஒரு பொது தண்டனையாக நாம் நரகத்தினுள் வீசப்படுவதைத் தவிர்க்க முடியாதவர்களாக இருந்தோம். ஆயினும் தனது குமாரரின் மூலமாக, கர்த்தர் நமது பாவங்களைக் கழுவி, அதற்கான ஆக்கினையிலிருந்து நம்மை இரட்சித்தார் - இது எத்தனை விசுவாசத்திற்கு உரியதாகவும் நன்றியறிதலுக்கு உடையதாகவும் இருக்கிறது? நாம் எத்தனை அதிர்ஷ்டசாலிகள் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும், இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் உலகத்தின் அழுக்கான மாசுபட்ட நீரினால் அடித்துச் செல்லப்பட்டு, அவர்களின் கடைசி இடமான மரணத்தின் கடலினுள் ஆழ்த்தப்பட்டிருக்கும் போது நாம் விடுவிக்கப் பட்டோம். நரகத்திற்கு செல்ல வேண்டியிருந்த உங்களையும் என்னையும் நமது பாவங்களிலிருந்து விசுவாசத்தினால் இரட்சித்த கர்த்தருக்கு நன்றி மட்டுமே நம்மால் கூறமுடியும்.

    நாம் இப்போது செய்து கொண்டிருக்கும் ஊழியங்கள் கூட வெகு சீக்கிரமாகவே முடிந்து விடும். நாம் ஏற்கனவே செய்த ஊழியங்களின் பின்னணியில், உண்மையான நற்செய்தியைப் பரப்பும் நமது ஊழியம் உத்வேகம் பெற்று வருகிறது, அது தனது வேகத்தையும் அதிகப் படுத்தி வருகிறது, அநேக நாடுகளில் உள்ள அநேக மக்கள் பாவமன்னிப்பை சீக்கிரமாகவே பெறுவார்கள். கர்த்தரின் சித்தத்தை நாம் அனைவரும் பின்பற்றி நற்செய்தியை அதன் முழுமைக்கும், தேவன் திரும்பி வருவதற்கு வெகுநாட்களுக்கு முன்னரேயே பரப்ப வேன்டும். கர்த்தரின் மகிமையை நாம் அனுபவிக்கும் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை நான் அறிந்திருக்கிறேன். உண்மையாகவே அது சீக்கிரமாக வருகிறது. நற்செய்தியை முழு உலகமும் பரப்பிய பிறகு கர்த்தர் நம்மை அழைத்தால், அவருடைய அன்பினால் நிறைந்த ராஜ்யத்தில் மகிழ்ச்சியுடன் பிரவேசித்து என்றென்றும் வாழமுடியும்.

    நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நோக்கி அனைத்து ஆத்துமாக்களையும் வழிநடத்துவதற்கான நேரம் இதுவேயாகும், இதன் மூலமாக, அவர்களாலும் கூட, பிதாவாகிய கர்த்தரை ஆவியுடனும் உண்மையுடனும் ஆராதிக்க முடியும் (யோவான் 4:23). இப்போது நாம் நமது தேவன் மீதுள்ள விசுவாசத்தினால், கர்த்தர் காட்டிய படி விசுவாசத்தின் பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டும் வேலையை, தேவன் நம்மிடம் ஒப்படைத்தபடி, அதனை நிறைவேற்ற வேன்டும் - சுருக்கமாக கூறினால், விசுவாசத்தினால் நாம் எதற்காக வேலை செய்தோமோ அதற்கும் மேலான கனிகளைச் சுமப்போம். நம்மைப் பாவங்களில் இருந்து விடுதலைச் செய்த கர்த்தருக்கு எல்லா நன்றிகளையும் கொடுக்கிறேன்.

    Sermon01
    Enjoying the preview?
    Page 1 of 1