Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaividuveno Kanmaniye!
Kaividuveno Kanmaniye!
Kaividuveno Kanmaniye!
Ebook435 pages2 hours

Kaividuveno Kanmaniye!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாரதி ஒரு நர்ஸ். தன் வேலை தன் சேவை என்றிருக்கும் அவள் விமலநாதனை சந்திக்கிறாள். காதல் வயப்படுகிறாள். ஆனால் அவன் மணந்து கொள்ள கேட்கும்போது மறுக்கிறாள். ஏன் விமலநாதனை மணந்து கொள்ள மறுக்கிறாள்? அவள் மறுப்பதற்கு விமலின் எதிர்வினை என்ன? பாரதியின் வாழ்வில் நடந்த பிரச்சனைகள் என்ன? அவளது பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்ததா? இருவரும் இறுதியில் இணைந்தார்களா? கதையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

Languageதமிழ்
Release dateOct 21, 2023
ISBN6580170810324
Kaividuveno Kanmaniye!

Related to Kaividuveno Kanmaniye!

Related ebooks

Related categories

Reviews for Kaividuveno Kanmaniye!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaividuveno Kanmaniye! - Thoorika Saravanan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கைவிடுவேனோ கண்மணியே!

    Kaividuveno Kanmaniye!

    Author:

    தூரிகா சரவணன்

    Thoorika Saravanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/thoorika-saravanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 1

    ஞாயிற்றுக்கிழமை...

    பின்மதிய வேளை. சென்னை மாநகரத்தின் பெரும்பாலான பகுதிகள் சோம்பல் போர்வையுடன் காட்சி அளித்தன.

    அப்போது... அவள்... ஓட்டமும் நடையுமாக விரைந்தாள். அவ்வப்போது பின்னால் திரும்பிப் பார்த்துக் கொண்டும் நடக்கும் போதே இருபுறமும் பார்வையால் துழாவிக் கொண்டும் நடந்தாள்.

    இரு மருங்கிலும் பெரிய பெரிய வீடுகள், இல்லை, இல்லை பங்களாக்கள் நிறைந்த சாலை அது.

    ஒரு பங்களாவின் முன் பெரிய கம்பிக் கதவின் அருகே நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டு இருந்த காவலாளியைக் கண்டவள் அதிக சப்தம் செய்யாதவாறு அவனைக் கடந்தாள்.

    வேகமாக நடந்து கொண்டு இருந்தவள் ஒரு பங்களாவின் பெரிய கம்பிக் கதவைப் பார்த்ததும் சட்டென்று நின்றாள்.

    தேடியது கிடைத்து விட்ட நிம்மதியில் முகம் மலர, தான் நடந்து வந்த பாதையின்புறம் ஒரு முறை பார்வையை வீசியவள் திருப்தியுடன் அந்த பங்களாக் கதவின் தாழை விலக்கி உள்ளே நுழைந்தாள்.

    இருபுறமும் செடிகள் இருந்த பாதையில் வேகமாகச் சென்றவள் அதே வேகத்தோடு அழைப்பு மணியையும் அழுத்தி விட்டாள்.

    பிறகுதான் ‘ஐயோ! நம் அவசரத்துக்கு இப்படி அழுத்தி விட்டோமே! என்ன நினைப்பார்களோ! கதவைத் திறப்பவர்கள் கொஞ்சமும் நாகரீகம் இல்லாமல் நடந்து கொண்டு விட்டதாக நினைத்து அவள் நாடி வந்த உதவியைச் செய்யா விட்டால் என்ன செய்வது?’ எனத் தன் அவசரப் புத்தியை நொந்து கொண்டே மேலே போட்டிருந்த துப்பட்டாவால் முகத்திலும் கழுத்திலும் வெள்ளமெனப் பெருகிக் கொண்டிருந்த வியர்வையைப் பரபரவெனத் துடைத்தாள்.

    அப்போது கதவு வேகமாகத் திறந்தது. அவள் நினைத்தது சரியே என்பது போல கதவைத் திறந்த நெடியவன் கண்களில் சீற்றம் இருந்தது.

    இவன் மதியத் தூக்கத்தைக் கெடுத்து விட்டோமோ என மனதில் எண்ணியவள் அவசர அவசரமாக,

    சாரி சார்! மன்னிச்சுக்கோங்க! ஒருத்தன் துரத்திட்டு வந்தான். பதட்டத்துல அவசரமாக் காலிங் பெல்லை அழுத்திட்டேன். இப்போ கொஞ்சம் உள்ளே விட்டீங்கன்னா... என்றவள் திரும்பி மூடியிருந்த கம்பிக்கதவைப் பார்த்தாள்.

    மறுபடி அவனைப் பார்த்த போது அவன் கண்களில் கடுமை குறைந்திருந்தது போலத் தெரிந்தது.

    ஆனால் இப்போது சந்தேகமாகப் பார்த்தது மட்டுமல்லாமல்,

    நீ சொல்லுவது உண்மை என்று எப்படி நம்புறது? என்று கேட்டான்.

    சார்! என்று வேகமாகக் கைப்பையைத் துழாவியவள் இது என் ஐ.டி. கார்டு (id Card) என்று அவனிடம் நீட்டினாள். அதைப் பார்த்துக் கொண்டே அவன் விலகி வழி விட்டான். அவள் உள் நுழைந்து கதவையும் மூடினாள்.

    சிறிது நேரம் அந்தக் கதவிலேயே சாய்ந்து நின்று கண்களை மூடி மூச்சு வாங்கியவள் இங்கே வா! என்ற குரலில் கண்களைத் திறந்தாள்.

    அவன் அதற்குள் அந்த வரவேற்பறையில் இருந்த சோபாவின் அருகே சென்றிருந்தான். அவள் அருகே வந்தவுடன் உட்கார்! என்றான்.

    அவள் தயக்கமாகப் பார்க்கவும் உள்ளே சென்று ஒரு கண்ணாடிக் குடுவையில் நீரும் ஒரு டம்ப்ளரும் கொண்டு வந்தான்.

    கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி விட்டு இந்தத் தண்ணியைக் குடி என்றான்.

    அவன் கூறியபடியே செய்தவள் நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

    அன்று காலை நடந்த சம்பவம் அவள் மனதுக்குள் விரிந்தது.

    அவள் ஒரு நர்ஸ். அவள் பணி புரியும் மருத்துவமனைக்கு அடிக்கடி வரக்கூடிய ஒரு மூச்சிரைப்பு நோயாளியின் மகள் அவளை அவளது விடுதித் தொலைபேசி எண்ணிற்கு அழைத்தார்.

    அந்த எண்ணை அவள் சாமானியமாக யாருக்கும் கொடுத்து விட மாட்டாள். மருத்துவமனைத் தலைமை மருத்துவரிடம் மட்டுமே அந்த எண் இருக்கும். ஏதாவது அவசரம் என்றால் கூட அவர் மட்டுமே அந்த எண்ணில் அழைப்பார்.

    இந்த நோயாளி அவர் மகளுடன் தனியாக வசித்து வந்தார். ஆண் துணையற்ற குடும்பம்.

    அதனால் ஒவ்வொரு முறை மூச்சிரைப்பு வரும் போதும் பதறி அடித்துக் கொண்டு மருத்துவமனை ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் செய்வதும் மருத்துவமனைக்கு வந்ததும் நிலைமை சரி ஆவதுமாக நிறைய முறைகள் நடந்து விட்டன.

    இன்ஹேலரை முறையாகப் பயன்படுத்தச் சொல்லிக் கொடுத்தும் பயன்படுத்தாமல் கஷ்டம் வந்ததும் அலயக் குலய ஓடி வருவதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

    சென்ற முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவர்களை வீட்டிலேயே நெபுலைசர் (மருந்து உறிஞ்சும் கருவி) வாங்கி வைத்துக் கொள்ளுமாறு அறிவுரை கூறினார் டாக்டர்.

    அவர்களுக்குப் பணத்திற்கு ஒன்றும் குறைவில்லை ஆதலால் அது நல்ல யோசனையாகப் படவும் அங்கே இருந்தே ஆன்லைனில் ஆர்டர் செய்து அதை எப்படி முறையாகப் பயன்படுத்துவது என எல்லா செய்முறைகளையும் கேட்டுக் கொண்ட பிறகே வீட்டிற்குச் சென்றார் அந்தப் பெண்.

    வீட்டிற்கு செல்லும் முன் அவளிடம் மிகவும் அவசரம் என்றால் மட்டுமே கூப்பிடுவதாகக் கூறி அவள் எவ்வளவோ தவிர்க்கப் பார்த்தும் முடியாமல் அவள் விடுதி எண்ணை வாங்கிக் கொண்டு போய் இருந்தார்.

    அன்று காலை அவளுக்குப் பணி விடுப்பு என்பதால் ஆற அமரக் குளித்து உணவு அருந்தி முடித்துக் கொண்டிருந்த போது அந்தப் பெண்ணிடம் இருந்து அழைப்பு வந்தது.

    நெபுலைசர் பயன்படுத்துவதி்ல் ஏதோ தவறு நேர்ந்து விட்டது என்றும் அவளை ஒரே ஒரு முறை நேரில் வர முடியுமா எனக் கேட்டும், இல்லை என்றால் ஆம்புலன்ஸ்க்கு கூப்பிடுவதாகவும் கூறினார் அந்தப் பெண்.

    அவள் கெஞ்சிக் கேட்கவும் அவளால் மறுக்க இயலவில்லை. ஆம்புலன்ஸ் விரைவாகப் போகும் என்றாலும் அவளது விடுதி மருத்துவமனைக்கு அருகிலேயே இருக்கிறது என்பதாலும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகம் இராது என்பதாலும் அவள் போவதற்கும் ஆம்புலன்ஸ் போவதற்கும் பெரிய கால வித்யாசம் இருந்து விடப் போவது இல்லை எனக் கணித்தவள் தான் வருவதாகக் கூறித் தொலைபேசியை வைத்தாள்.

    மின்னல் வேகத்தில் கிளம்பிப் பேருந்தைப் பிடித்தவள் மிக விரைவிலேயே அவர்கள் வீட்டை அடைந்து விட்டாள்.

    அந்தப் பெண் என்ன தவறு செய்கிறாள் என்பதைச் சுட்டிக் காட்டி சரியாக அவளையே ஒரு முறை பயன்படுத்தச் செய்து அதை வீடியோ எடுத்தும் கொடுத்து இதை மீண்டும் மீண்டும் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லவும் அவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி.

    இதை முதலிலேயே செய்யாமல் போனோமே என்றிருந்தது அவளுக்கு.

    அவளை மதிய உணவு அருந்தி விட்டுப் போகும்படி கட்டாயப்படுத்தவும் சிறிது நேரம் இருந்து அவர்களுடன் அளவளாவி விட்டு மதிய உணவும் அருந்தி விட்டுக் கிளம்பினாள்.

    முதல் நாள் நல்ல மழை பெய்து இருந்ததால் அங்கங்கே மழை நீர் தேங்கி இருந்தது.

    வரும் வழியில் கார் ஒன்று செல்லும் போது தெறித்த சேறு கண்களில் பட்டு விடவும் தலையில் முக்காடிட்டிருந்த துப்பட்டாவைத் தளர்த்தி கண்களைத் துடைத்துக் கொண்டு இருந்த போது தான் அவன் அவளைப் பார்த்தான்.

    அவளும் அவனைப் பார்த்த உடன் அவள் உள்ளம் பதறத் தொடங்கியது.

    எப்படியாவது அவனிடம் இருந்து தப்பித்து விட எண்ணி வேகமாக அங்கிருந்து நடக்க ஆரம்பித்தாள்.

    நல்லவேளையாக அவனை யாரோ தடுத்து நிறுத்தி ஏதோ கேட்க முற்பட்டதைக் கண்டவள் நடையில் வேகத்தைக் கூட்டி இந்த வீடு இருந்த சந்திற்குள் திரும்பி விட்டாள்.

    இப்போ சொல்லு, என்ன விஷயம்? என்ற அவனது குரலில் நினைவுகளில் இருந்து மீண்டவள்,

    என்னோட ஐடி கார்டுல பாத்துருப்பீங்களே! நான் ஒரு நர்ஸ். அடிக்கடி எங்க ஹாஸ்பிடலுக்கு வர்ற நோயாளி ஒருத்தரைப் பார்க்கிறதுக்காக வந்தேன். பார்த்துட்டுக் கிளம்புறப்போ வழில ஒருத்தன் துரத்திட்டு வந்தான். ரோட்லயும் பெருசாக் கூட்டம் இல்ல. பயமா இருந்தனால அவன்கிட்ட இருந்து தப்பிக்க நடக்க ஆரம்பிச்சு இந்த ரோட்டுக்குள்ள வந்துட்டேன்.

    இங்கேயும் யாரும் இல்லன்றனால எந்த வீட்டுக்குள்ளேயாவது போய்க் கொஞ்ச நேரம் இருந்துட்டு அவன் போனதுக்குப் பிறகு போகலாம்னு நினைச்சேன். நிறைய வீடுகள்ள நாய்கள் ஜாக்கிரதைன்னு போர்டு இருந்துச்சு. உங்க வீட்டுல போர்டும் இல்லை, வாசல்ல காவலுக்கும் யாரும் இல்லை. அதுதான்... என்று இழுத்தாள்.

    மனதுக்குள் ‘அய்யோ, அவன் நிர்வாகத்தைக் குறை கூறுவது போலப் பேசி விட்டோமோ?’ என்று தோன்றியது.

    ஆனால் அவன் அதைக் கண்டு கொண்டது போலத் தெரியவில்லை.

    சரி, இப்போ என்ன செய்யப் போறே?

    என்ன செய்றதுன்னு தெரியல சார். அவன் போயிருப்பான்னு உறுதியாத் தெரிஞ்சாக் கிளம்பிருவேன்.

    அவன் பின்புறம் பார்த்து, மாதையா! என்று அழைத்தான்.

    பின் வாசல் வழியே தலையில் முண்டாசு கட்டியிருந்த ஒருவன் ஓடி வந்தான். அவன் கைகளைப் பார்த்தால் தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்திருப்பான் என்று தோன்றியது.

    என்னங்க ஐயா!

    அவன் என்ன டிரஸ் போட்டிருந்தான்? இவளைப் பார்த்துக் கேட்டான்.

    பிரவுன் கலர் பேண்டும் வெள்ளைக் கலர் ஷர்ட்டும் போட்டிருந்தான்.

    கேட்டுகிட்டேயில்ல! வெளியே போய் அந்த மாதிரி யாராச்சும் நின்னாப் பேச்சுக் குடுத்து என்ன விவரம்னு கேளு. அப்புறம் அவன் இந்தப் பொண்ணைத் துரத்திட்டு வந்திருக்கான். கவனம்!

    ஒரு முறை அவள்புறம் பார்த்த மாதையன், சரிங்கையா என்று பின்புறம் போனான்.

    என்னைப் பத்தி எதுவும் சொல்லி விட மாட்டாரே.

    மாதையன் புத்திசாலி.

    அவளுக்கு சுறுசுறுவெனக் கோபம் வந்தது. ‘அதென்ன எண்ணி எண்ணிப் பேசுவது? கூட ரெண்டு வார்த்தை பேசினா முத்தா உதிர்ந்து விடும், வேண்டாம்! உதவி செய்கிறான் இப்படி எல்லாம் நினைக்கக் கூடாது.’

    அவள் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள்.

    அதற்குள் அவன் எழுந்து உட்கார்ந்திருந்த இடத்திற்கு எதிர்ப்புறமிருந்த அதாவது அவளுக்குப் பின்புறம் இருந்த அறையை நோக்கிச் சென்றான்.

    அவள் பார்வையால் தொடரவும், ‘இங்கே வா’ என்பது போலக் கையசைவால் சைகை செய்து விட்டு அறைக்குள் நுழைந்தான்.

    அவள் திடுக்கிட்டுப் போனாள். ‘இது என்னடா வம்பாப் போச்சு. வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்த கதை ஆகி விடுமோ. இவனைப் பற்றி முன்னைபின்னை தெரியாமல் இவன் தனியாக இருக்கும் அறைக்குள் செல்வது எந்த விதத்தில் சரி ஆகும்.’

    ‘இந்த வீட்டுக்குள் வரும் போது மட்டும் அவன் என்ன குடும்பத்துடனா இருந்தான்.’

    அவள் மனம் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்தது.

    தான் இப்படித் தயங்கி நிற்பதைப் பார்த்தால் சந்தேகப் படுகிறாள் என நினைப்பானோ என எண்ணியவள் அதையும் சங்கடமாக உணர்ந்தாள்.

    ‘அறைக்குள் சென்றுதான் பார்ப்போமே! மாதையன் எப்போது வேண்டுமானாலும் உள்ளே வரலாம் என்ற நிலையில் அவனால் என்ன செய்து விட முடியும்’ என்ற தைரியத்தில் அந்த அறைக்குள் செல்லத் தயாரானாள்.

    பார்த்த முதல் நாளே உன்னைப் பார்த்த முதல் நாளே

    காட்சிப் பிழை போலே உணர்ந்தேன் காட்சிப் பிழை போலே

    ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்

    கடலாய் மாறிப் பின் எனை இழுத்தாய்

    என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையாதே!

    அத்தியாயம் 2

    அறையினுள் சென்றவனை நினைத்துப் பயந்து கொண்டே பின்னால் சென்றவள் அவன் ஒரு ஜன்னலின் அருகே நின்றிருந்ததைப் பார்த்து சற்று ஆசுவாசம் அடைந்தாள்.

    ஜன்னலில் திரைச்சீலை இருந்ததால் வெளியே இருப்பவர்கள் உள்ளே பார்க்க முடியாது. ஆனால் பேசுவது கேட்கும்.

    அப்போதுதான் மாதையன் வெளியே பேசுவதைக் கேட்பதற்காகத்தான் அவன் இங்கு வந்திருக்கிறான் என்பது புரிந்தது.

    அந்த அறை நல்ல விசாலமாக இருந்தது. ஓரமாக ஒரு படுக்கை போடப்பட்டு இருந்தது. அருகிலிருந்த மேஜை மேலே ஒரு ஜாடியில் தண்ணீரும் ஒரு டம்ப்ளரும் இருந்தது. அதன் அருகில் ஒரு குறிப்பேடும் பேனாவும் இருந்தது.

    ஓரமாக ஒரு மியூசிக் சிஸ்டமும் அதன் அருகிலேயே ஒரு குறுந்தகடுகள் வைக்கும் தாங்கியில் நிறைய குறுந்தகடுகளும் இருந்தன.

    அறை மூலையில் மற்றொரு கதவிருக்க, குளியலறையாக இருக்கும் என எண்ணிக் கொண்டாள். மற்றபடி அறை சுத்தமாக இருந்தது. ஓய்வெடுக்கும் அறை எனக் கணித்தாளவள்.

    ஒரு பார்வையில் இத்தனையையும் அளவெடுத்தவள் வெளியே பேச்சுக் குரல் கேட்கவும் காதைத் தீட்டிக் கொண்டாள்.

    ஏ, குப்பைக்காரா!

    அவளுக்குச் சட்டென்று சிரிப்பு வந்தது. வாயைக் கையால் மூடிக் கொண்டு அவனைப் பார்த்தாள்.

    அவன் கண்களில் சிரிப்பு இருந்தாலும் வாயின் மேல் விரல் வைத்துப் பேசாமல் அமைதியாய் இரு என்பது போல சைகை செய்தான்.

    யாரைப் பார்த்துக் குப்பைக்காரன்னு சொன்னே? எதிர்க்குரல் கேட்டது.

    இல்லைப்பா! இன்னைக்குக் காலைல இருந்து குப்பை வண்டி வரலை. அதான் நீ கார்ப்பரேஷன் ஆளோன்னு நினைச்சுக் கேட்டுட்டேன். தப்பா நினைச்சுக்காதே! ஆமா, நீ யாரு? உன்னை நான் இந்த ஏரியாவுல பார்த்தது இல்லையே!

    எனக்கு இந்த ஏரியா இல்லை. பஸ்ஸ்டாண்டுல ஒரு பொண்ணைப் பார்த்தேன். தெரிஞ்ச பொண்ணு மாதிரி இருந்துச்சு. இந்த ரோட்டுக்குள்ளேதான் வந்துச்சு. நீ எதுனாப் பாத்தியா? அவனுக்குத் தெரிந்திருக்குமோ என்ற நப்பாசையில் கேட்டான்.

    நான் யாரையும் பாக்கலையே! தெரிஞ்ச பொண்ணுன்னா நின்னு பேசிருக்கும்ல!, வேற பொண்ணா இருக்கப் போவுது. நீ சரியாப் பாக்கலையோ என்னவோ!

    அப்பிடித்தான் போல! சரி! நான் கிளம்புறேன்பா. கொஞ்சம் குடிக்கத் தண்ணி குடேன். இந்த வெயில்ல அலைஞ்சு தொண்டை எல்லாம் காஞ்சு கிடக்கு.

    மாதையன் கம்பிக்கதவைத் திறந்து உள்ளே போய் அங்கே முன்னாலேயே வைக்கப்பட்டிருந்த மண் பானையிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தான்.

    தேங்க்ஸ்பா, நான் போய் வாரேன் அவன் விடைபெற்றுச் செல்ல மாதையன் உள்ளே விரைந்தான்.

    எஜமான் அந்த அறையில் இருந்து வருவதைப் பார்த்தவனுக்கு, தாங்கள் பேசியது கேட்டிருக்கும் என்று புரிந்து விட்டது.

    அதற்கேற்ப நீ போய் வேலையைப் பாரு மாதையா! என்று அவன் உத்தரவிடவும்,

    அய்யா! பாக்க ரப்பான ஆளாத்தான் தெரியுறான். அம்மாவைப் பாத்துப் போகச் சொல்லுங்க.

    சரி! நான் பாத்துக்கிறேன்.

    அவளிடம் திரும்பி இப்போ என்ன பண்ணப் போறே? என்று கேட்டான்.

    கொஞ்ச நேரம் பார்த்துட்டு நான் கிளம்புறேன், சார்.

    கிளம்பி மறுபடி அவன்ட்டப் போய் மாட்டிக்கப் போறியா?

    அவள் பேசாமல் இருக்கவும்,

    எனக்கு ஒரு பதினைஞ்சு நிமிஷம் வேலை இருக்கு. அதுக்கப்புறம் நானும் வெளியேதான் போறேன். நீ வெயிட் பண்ணினேன்னா நானே உன்னை ட்ராப் பண்றேன்.

    உங்களுக்கு ஏன் சார் வீண் சிரமம்?

    சிரமம்னா கேட்டு இருக்கவே மாட்டேன். உன் ஹாஸ்பிடல் தாண்டித்தான் நான் போக வேண்டி இருக்கு. அந்த ஏரியாவுல விட்டா நீ போயிடுவேல்ல.

    போயிருவேன் சார் அவள் முகம் மலர்ந்து சொன்னாள்.

    சரி! நான் வேலை முடிச்சுட்டு வந்துடறேன்.

    எங்கே போய் வேலை செய்யப் போகிறான் என்று நினைக்கும் போதே எதிரில் இருந்த சோஃபாவில் உட்கார்ந்து அதில் பாதி மூடிய நிலையில் இருந்த மடிக்கணிணியை எடுத்து முன்னால் இருந்த மர மேஜை மேலே வைத்துத் தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.

    ஏதாவது சாஃப்ட்வேர் பணியில் இருப்பான் போல, முக்கியமான வேலையின் இடையில் தான் வந்து தொல்லை செய்து விட்டோம் என நினைத்து மனதிற்குள் வருந்திக் கொண்டாள்.

    அங்கே ஒரு புத்தக அலமாரி இருக்கு. ஏதாவது புக் வேணும்னா எடுத்துப் படி!

    இல்ல சார், பரவாயில்ல.

    அவன் குனிந்து அவன் வேலை செய்து கொண்டிருந்த மேஜையின் கீழ் அடுக்கில் இருந்த பத்திரிக்கைகளை எடுத்துக் கொடுத்தான்.

    தேங்க்ஸ்! என்று அதை வாங்கியவளுக்கு அதில் மனம் செல்லவில்லை.

    வீட்டின் அமைப்பில் பார்வையை செலுத்தினாள். வீட்டு வாயில்படி அருகில் பெரிய காலணி வைக்கும் அலமாரி இருந்தது.

    அதைத் தாண்டி உள்ளே வந்ததும் சிறுபடிகள், மூன்றே மூன்று படிகள் முடிந்ததும் இரண்டு அரை வட்ட வடிவில் சோஃபாக்கள் எதிர் எதிராகப் போடப்பட்டு இருந்தன. அதாவது அவர்கள் உட்கார்ந்திருந்த இடம் தரையிலிருந்து சற்று கீழிறங்கி அமைந்திருந்தது.

    சோஃபாக்களின் அடுத்த முனையில் மறுபடி மூன்று படிகள் இருந்தன. அதைத் தாண்டிப் பின்புறம் போகும் வழியில் மேலே செல்லும் படிக்கட்டுக்கள் வளைவாக அமைந்திருந்தன.

    அதை ஒட்டி இருந்தது சமையலறை. அதற்கு முன் இருந்த இடத்தில் உண்ணும் மேஜை, நாற்காலிகள் இருந்தன. அந்த அறையின் முடிவில் பின்புறக் கதவு இருந்தது.

    படிக்கட்டுகளின் வளைவின் இந்தப்புறம் ஒரு பெரிய LED தொலைக்காட்சியும் அதன் எதிரில் சோஃபாக்களும் போடப்பட்டு இருந்தன.

    தொலைக்காட்சி பார்க்க வேண்டுமானால் அங்கேயோ அல்லது அவள் உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்தோ கூட பார்க்கலாம். மொத்தத்தில் பணச் செழிப்பு மிக்க வீடு என்று தோன்றியது.

    இனி கிளம்பலாம் சிறிது நேரத்தில் அவன் சொன்னான்.

    உனக்குக் கொஞ்சம் ஃப்ரெஷ் பண்ணிக்கணும்னா அந்த அறைக்குள்ளே பாத்ரூம் இருக்கு.

    வியர்வை வடிய வந்தவளுக்குக் கொஞ்சம் முகம் கழுவினால் நன்றாக இருக்கும் போலத்தான் இருந்தது.

    அவள் மனதில் நினைத்ததை அவன் சொன்னது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

    அவள் முன்பு சென்ற அறைக்குள் சென்று முகம் கழுவித் தலையைச் சீர் படுத்தி வெளியே வந்தாள்.

    வெளியே போன போது, போகலாமா? எனக் கேட்டு அவன் முன்னே நடந்தான்.

    கதவைத் திறக்கும் முன் அவள் முகத்தைப் பார்த்தவன், ஏன் இப்படிப் பயப்படுறே? நான்தான் கூடவே வர்றேனே! உடன் ஆள் இருக்கும் போது அவனால் என்ன செஞ்சுற முடியும்?

    இல்லை. அவன் கண்ணில் படாமலே போய்ட்டா நல்லா இருக்கும்னு தோணுச்சு.

    பெயருகேற்ற தைரியம் கொஞ்சம் கூட இல்லயே! அப்பிடி என்ன பயமோ சரி, சரி, நான் போய்ப் பார்த்துட்டுச் சொல்றேன். அப்போ வா.

    அவள் தலையாட்டியவுடன் அவன் கதவைத் திறந்து வெளியே சென்றான்.

    போர்டிகோவில் நின்று சுற்றும் முற்றும் பார்த்தவன் அவளை வருமாறு சைகை செய்தான். அவள் வந்து அமர்ந்தவுடன் வண்டியை உயிர்ப்பித்துக் கொண்டே,

    துப்பட்டாவைத் தலையைச் சுத்திப் போட்டுக்கோ. இந்தா! இந்தக் கூலிங் கிளாஸ் போட்டுக்கோ!

    ‘என்ன இவன் சின்னப் பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்றான்’ என்று தோன்றிய போது ‘ஆமா, நீ சின்னப் பிள்ளை மாதிரி பயந்தேல்ல அதுதான்’ என்றும் தோன்றியது அவளுக்கு. தன் நல்லதற்காகத்தான் சொல்கிறான் என்பதால் மறுபேச்சுப் பேசாமல் அவன் சொல்லுக்குப் பணிந்தாள்.

    மாதையன் வந்து கதவைத் திறந்தவுடன் கார் கிளம்பியது. இப்பொழுதுதான் அந்தச் சாலையை நன்றாகப் பார்த்தாள். எல்லா வீடுகளுமே பெரியதாகவும் ஆடம்பரமாகவும்தான் இருந்தன.

    பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் போகன்வில்லா மரங்களும் சரக்கொன்றை மரங்களும் தலை கொள்ளா மலர்களுடன் காட்சி அளித்தன.

    உதிர்ந்த மலர்கள் சாலையின் இரு புறமும் கிடந்தது பிங்கும் மஞ்சளும் கலந்த கார்பெட் போர்த்தியது போலக் காணப்பட்டது.

    அந்தத் தெருமுனை வரை சென்றதும் இவர்கள் இடதுபுறம் திரும்ப அவன் - அவளைத் துரத்திக் கொண்டு வந்தவன் வலது புறச்சாலையிலிருந்து அந்தச் சந்திற்குள் திரும்பினான்.

    திரும்பிப் பார்க்காதே! என்று அவன் சொல்லவில்லையானால் நிச்சயமாகத் திரும்பிப் பார்த்திருப்பாள்.

    அவள் ஆச்சரியமாக அவன்புறம் திரும்பி எப்படி நான் திரும்பப் போறேன்னு கரெக்டாக் கண்டுபிடிச்சிங்க?

    ரொம்ப சிம்பிளான மனித மனத்தோட இயல்பு. தப்பிச்சுட்டோம்கிறதை உறுதி பண்ணிக்க நீ திரும்பிப் பாப்பேன்னு அவனுக்குத் தெரியும். அதை எதிர்பார்த்துத்தான் அவனும் காரைப் பார்த்தான். நீ திரும்பிப் பாக்கலைன்னதும் யாரோன்னு நினைச்சுட்டுப் போயிருப்பான்.

    இதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா, இவன் மனோதத்துவம் படித்திருப்பான் போல என நினைத்துக் கொண்டே தேங்க்ஸ்! என்றாள்.

    அவன்தான் என்னைத் துரத்திகிட்டு வந்தான்னு எப்பிடி உங்களுக்குத் தெரியும்?

    ஒரு யூகம்தான்.

    ஞாயிறு மதியம் என்பதால் சாலையில் ஈ, காக்காய் கூட இல்லை. கார் வேகமெடுத்தது.

    திடுமென எனக்கு ஒரு சந்தேகம்! என்றான். அவள் என்ன என்பது போலப் பார்க்கவும்,

    பஸ் ஸ்டாண்டுல பார்த்தேன்னு சொன்னே. அங்கே வம்பு பண்ணினவன் ஏன் பின்னாலயே வரணும்?

    அவள் பேசாமலே இருக்கவும் ஒரு வேளை நீ தனியா வந்தா மறுபடி முயற்சி பண்ணிப் பார்க்கலாம்னு நினைச்சான் போல! அவள் அதற்கும் பதில் சொல்லவில்லை.

    காருக்குள் கனத்த மௌனம் நிலவியது.

    சிறிது நேரப் பயணத்திற்குப் பிறகு இங்கே நிறுத்திக்கோங்க, சார்!!

    காரிலிருந்து இறங்கி அவன் கூலிங் கிளாஸை அவனிடம் திரும்பக் கொடுத்து விட்டு ரொம்பத் தேங்க்ஸ், சார் என்றாள்.

    இனிமேல் கவனமா இரு! இந்த மாதிரி வெளியே போறதா இருந்தா ஃப்ரெண்ட்ஸ் யாரையாவது கூடக் கூட்டிட்டுப் போ. தனியாப் போகாதே! என்றவன் சட்டென்று கிளம்பிச் சென்று விட்டான்.

    வழியிலேயேதானே மருத்துவமனை இருக்கிறது... அங்கே இறக்கி விடுகிறேன் என்று சொல்லுவான், தெரிந்தவர்கள் பார்த்தால் தவறாக எண்ணுவார்கள் வேண்டாம் என்று மறுக்கலாம் என நினைத்தவள் அவனும் அதையே யோசித்துத் தான் கேட்டவுடன் இறக்கி விட்டான் போல என நினைத்துக் கொண்டாள்.

    எதிரே இருந்த பேருந்து நிறுத்தத்தில் நின்று உடனே பேருந்தும் கிடைக்கவும் அதில் ஏறி அமர்ந்தவள், ‘அடடா! அவன் பெயரைக் கூடக் கேட்காமல் விட்டு விட்டோமே!’ என நினைத்தாள். அவன் பெயர் என்னவாக இருக்கும் என அவள் யோசனை ஓடியது. அவனுக்குத் தகுந்தாற்போல் சில பெயர்களை அதுவாக இருக்குமோ இதுவாக இருக்குமோ என யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு அப்போதுதான் ஒன்று உறைத்தது.

    அவள் பெயரைத்தான் அவள் கேட்கவில்லையே தவிர அவள் பெயர் விலாசம் எல்லாம் அவனுக்குத் தெரியுமே! அதை வைத்து ஏதாவது சில்மிஷம் செய்யக் கூடுமோ! அவளுக்கு லேசான பயம் வந்தது.

    சே! சே! அப்படிச் செய்பவன் வீட்டில் வாய்ப்புக் கிடைத்த போதே செய்திருக்க மாட்டானா?

    இவன் பார்வை செயல் எல்லாவற்றிலும் கண்ணியமாகத்தான் தெரிகிறான். அவனைப் பற்றிக் கவலை கொள்ளத் தேவை இல்லை. இனிமேல் அவனைப் பார்க்கப் போவது கூட இல்லை என்னும் போது எதற்குக் கவலைப் பட வேண்டும் என்று மனதைத் தேற்றிக் கொண்டாள், அடுத்த நாள் காலையிலேயே அவனை மீண்டும் சந்திக்கப் போவதை அறியாமல்.

    உன் பேரே தெரியாது

    உன்னைக் கூப்பிட முடியாது

    நான் உனக்கோர் பேர் வைத்தேன்

    அது உனக்கே தெரியாது

    அத்தியாயம் 3

    திங்கட்கிழமை... நேரம் காலை ஏழு மணி...

    பாரதி பணிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். வாரத்தின் முதல் நாள் ஆதலால் அன்று பேருந்தில் கூட்டம் இருக்கும் என்பதால் கொஞ்சம் சீக்கிரம் போவது நல்லது என நினைத்துத் தன் காரியங்களை விரைவாகவே செய்து கொண்டு இருந்தாள்.

    பாரதி அழகான இருபத்தி மூன்று வயது இளம்பெண். சிறு பெண்ணின் பேதைமையும் இல்லாமல் திருமணமான பெண்ணின் முதிர்ச்சியும் இல்லாமல் முகத்தில் ஒரு அழகு தெரியும் வயது. பெண்கள் உண்மையிலேயே மிகவும் அழகாகத் தெரியும் பருவம் இது.

    சுமாராக இருக்கும் பெண்களே அழகாகத் தெரிவார்கள் என்றால் பாரதியைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

    அழகு என்றால் சாதாரண அழகல்ல. பார்ப்போரைச் சுண்டி இழுக்கும் ரகம்.

    நிகுநிகுவென்ற கோதுமை நிறம்... பிறை நெற்றி... அழகிய நீண்ட விழிகள்... வில் போல நீண்டு வளைந்து இருந்த புருவங்களுக்கு மத்தியில் அவள் வைத்திருந்த சிறிய வட்டப் பொட்டு அவள் நிறத்திற்குப் பளிச்சென்று தெரிந்தது. நேர்நாசி. இயல்பிலேயே கொஞ்சம் சிவந்து இருந்த கன்னங்கள். மெலிதாகவும் இல்லாமல் தடிப்பாகவும் இல்லாமல் அவள் முகத்திற்கேற்ற அளவான இளஞ்சிவப்பு நிற உதடுகள், பெண்களே பார்த்துப் பொறாமைப்படும் உடலமைப்பு என்று பேரழகியாக இருந்தாள்.

    ஆனால் அதே நேரம் அந்த அழகினால் வரும் ஆபத்தையும் அனுபவப் பூர்வமாகவே உணர்ந்தும் இருந்தாள். அதனால் அவளது அலங்காரம் எப்பொழுதுமே மிகவும் எளிமையாக இருக்கும். எல்லா நிறங்களும் அவளுக்கு நன்றாக இருக்கும் என்றாலும் சிவப்பு, ஆரஞ்சு, அடர்பச்சை, ஊதா போன்ற பளீர் நிறங்கள் அவளுக்கு வெகு பொருத்தமாக இருக்கும்.

    அதனாலேயே அந்த வண்ணங்களைத் தவிர்த்து வெளிர் நிறங்களையே தேர்ந்தெடுப்பாள்.

    இளம் பச்சை வண்ணத்தில் டாப்ஸ், கரும் பச்சை பாண்ட், கரும் பச்சை துப்பட்டா அணிந்து வேறு எந்த ஒப்பனையும் இன்றி கூந்தலையும் ஏற்றி வாரிப் பின்னந்தலையில் கொண்டையிட்டிருந்தாள்.

    காதுகளில் ஒற்றை முத்துத் தோடு. கழுத்திலோ கைகளிலோ ஆபரணம் எதுவும் இல்லை.

    இடது கையில் கருப்பு நிற கைக்கடிகாரம். தன் கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

    பாரதி ஒரு வேலை பார்க்கும் மகளிர்க்கான விடுதியில் தங்கி இருந்தாள். கடந்த

    Enjoying the preview?
    Page 1 of 1