Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

யாருக்கு மாப்பிள்ளை யாரோ..?
யாருக்கு மாப்பிள்ளை யாரோ..?
யாருக்கு மாப்பிள்ளை யாரோ..?
Ebook112 pages41 minutes

யாருக்கு மாப்பிள்ளை யாரோ..?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திக்பிரமையுடன் நின்றிருந்தாள் திலகா. அருகில் ஓடி வந்த தோழிகள் அன்பு, உஷா, தமிழ், கலா ஆகியோர் திலகாவை சூழ்ந்தனர். 

"ஏய்... திலகா... உன் ஆளு என்னடி சொன்னார்?" என்று நால்வருமே கேட்க.

"ம்ம் அவரோட வீட்ல வேற இடத்திலே பெண் பார்த்து வைச்சிருக்காங்களாம்" 

"என்ன..." என்று அதிர்வுடன் அதிர்வுடன் கேட்டனர் தோழியர் நால்வரும்.

"ம்ம் ஆமாண்டி"

"என்னடி இது இவ்ளோ சாதாரணமா சொல்றே" என்றாள் கலா. 

"பின்னே என்னை என்னச் செய்யச் சொல்றே அவங்க வீட்ல காதல் திருமணம் என்றால் அறவே பிடிக்காதாம். மேலும் எங்க வீட்ல எங்கக்கா திருமணம் இருக்கு அதன் பிறகுதான் என்னோட திருமணத்தை பற்றியே நான் யோசிக்க முடியும்" 

"அதனால" என்றாள் உஷா. 

"அதனால அந்த திலக் திருமணம் செய்தா செஞ்சுக்கட்டும்"

"ஏய் உன்னை காதலிக்க அவன் எப்படியெல்லாம் உன் பின்னே சுற்றினான்" என்றாள் தமிழ். 

"ம்ம் அதையெல்லாம் அந்த நேரம். இப்போ அவனுக்கு அவனது பெற்றோர் சொல்லே வேத வாக்கு."

"ஏனாம்" என்றாள் அன்பு 

"ம்ம் இந்தப் பழம் புளிக்கும். அதான் பெற்றோர் பார்க்கும் பெண்ணை கட்டிக்க ரெடியாகிட்டான்." 

"என்னடி இது கர்மமே கண்ணாய் இருந்த உன் மனசை கலைச்சிட்டு இப்படி அவன் வேற பெண்ணை கட்டிக்க சம்மதிக்கலாமா இது பச்சை துரோகம்" என்றாள் உஷா. 

"போடி எனக்கே இவன் மீது பிடிப்பு இல்லாம போயிடுச்சி அவன் போனாப் போறான் விட்டுத் தள்ளு" 

"என்னடி இது இப்படி சொல்லிட்டே" என்றனர் தோழிகள்.

"உனக்கும் அவனுக்கும் பிடிக்காம போனதற்கு காரணம் என்ன" என்றாள் கலா. 

"ம்ம் ஒரு சமயம் அவன் என்கிட்டே பேசும்போது அங்கே ஒரு காகம் இறந்து கிடந்தது. அதைப் பார்த்து காக்கை கூட்டம் 'கா கா' வென கூப்பாடு போட உடனே நான் இந்த காக்கைகள் இப்படி துக்கம் கொண்டாடுகிறதே என்றும் இதை எப்படி தீர்ப்பது என்றும் கேட்டேன். 

அதற்கு அவன் இது என்ன வேண்டாத வேலை என்று வெறுப்போடு சொன்னான். உடனே அவனது பேச்சை கண்டு கொள்ளாமல் அருகில் இருந்த வீட்டில் உள்ளவர்களிடம் ஒரு மண் வெட்டி வாங்கி ரோட்டு ஓரமாய் மண்ணை தோண்டி அந்த இறந்து போன காக்கையை எடுத்து வந்து புதைத்து விட்டேன் சிறிது நேரத்தில் காக்கைகள் எல்லாம் கலைந்து சென்று விட்டன. அங்கே நின்றிருந்த சிலர் நல்லதும்மா எங்களுக்கு இதைச் செய்ய தோணலையே என்று என்னை பாராட்டினர். 

இதை பார்த்த திலக்கிற்கு கோபமாக வந்தது. என்னுடன் பேசாமலேயே போய்விட்டான்." 

"நல்லது செய்தால் பாராட்டாம இப்படி ஏன் கோபப்படணும்." 

"அது மட்டுமல்ல இன்னொருமுறை ஒரு நாய்க்கு பிஸ்கெட் வாங்கி போட்டேன் அதுவும் அவனுக்கு பிடிக்கவில்லை. இப்படி உயிர்கள் மீது அன்பு காட்டுவது குற்றமா என்று கேட்டேன். 

அதற்கு அவன் 'எங்கள் குடும்பத்தில் இப்படி நாலு பேர் முன்னாடி செய்வது அறவே பிடிக்காது என்று முகத்தில் அடித்தாற்போல பேசிவிட்டு சென்றவன்தான் இன்று வந்து என் பெற்றோர் பார்க்கும் பெண்ணையே நான் மணம் முடிக்கப் போகிறேன்' என்றான். நானும் இவன் நமக்கு செட்டாக மாட்டான் என்று முடிவோடு வந்துவிட்டேன்" என்றாள் திலகா. 

 

 

 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 15, 2023
ISBN9798223813842
யாருக்கு மாப்பிள்ளை யாரோ..?

Read more from Sundari Murugan

Related to யாருக்கு மாப்பிள்ளை யாரோ..?

Related ebooks

Reviews for யாருக்கு மாப்பிள்ளை யாரோ..?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    யாருக்கு மாப்பிள்ளை யாரோ..? - Sundari Murugan

    1

    திக் பிரமையுடன் நின்றிருந்தாள் திலகா. அருகில் ஓடி வந்த தோழிகள் அன்பு, உஷா, தமிழ், கலா ஆகியோர் திலகாவை சூழ்ந்தனர்.

    ஏய்... திலகா... உன் ஆளு என்னடி சொன்னார்? என்று நால்வருமே கேட்க.

    ம்ம் அவரோட வீட்ல வேற இடத்திலே பெண் பார்த்து வைச்சிருக்காங்களாம்

    என்ன... என்று அதிர்வுடன் அதிர்வுடன் கேட்டனர் தோழியர் நால்வரும்.

    ம்ம் ஆமாண்டி

    என்னடி இது இவ்ளோ சாதாரணமா சொல்றே என்றாள் கலா.

    பின்னே என்னை என்னச் செய்யச் சொல்றே அவங்க வீட்ல காதல் திருமணம் என்றால் அறவே பிடிக்காதாம். மேலும் எங்க வீட்ல எங்கக்கா திருமணம் இருக்கு அதன் பிறகுதான் என்னோட திருமணத்தை பற்றியே நான் யோசிக்க முடியும்

    அதனால என்றாள் உஷா.

    அதனால அந்த திலக் திருமணம் செய்தா செஞ்சுக்கட்டும்

    ஏய் உன்னை காதலிக்க அவன் எப்படியெல்லாம் உன் பின்னே சுற்றினான் என்றாள் தமிழ்.

    ம்ம் அதையெல்லாம் அந்த நேரம். இப்போ அவனுக்கு அவனது பெற்றோர் சொல்லே வேத வாக்கு.

    ஏனாம் என்றாள் அன்பு

    ம்ம் இந்தப் பழம் புளிக்கும். அதான் பெற்றோர் பார்க்கும் பெண்ணை கட்டிக்க ரெடியாகிட்டான்.

    என்னடி இது கர்மமே கண்ணாய் இருந்த உன் மனசை கலைச்சிட்டு இப்படி அவன் வேற பெண்ணை கட்டிக்க சம்மதிக்கலாமா இது பச்சை துரோகம் என்றாள் உஷா.

    போடி எனக்கே இவன் மீது பிடிப்பு இல்லாம போயிடுச்சி அவன் போனாப் போறான் விட்டுத் தள்ளு

    என்னடி இது இப்படி சொல்லிட்டே என்றனர் தோழிகள்.

    உனக்கும் அவனுக்கும் பிடிக்காம போனதற்கு காரணம் என்ன என்றாள் கலா.

    "ம்ம் ஒரு சமயம் அவன் என்கிட்டே பேசும்போது அங்கே ஒரு காகம் இறந்து கிடந்தது. அதைப் பார்த்து காக்கை கூட்டம் ‘கா கா’ வென கூப்பாடு போட உடனே நான் இந்த காக்கைகள் இப்படி துக்கம் கொண்டாடுகிறதே என்றும் இதை எப்படி தீர்ப்பது என்றும் கேட்டேன்.

    அதற்கு அவன் இது என்ன வேண்டாத வேலை என்று வெறுப்போடு சொன்னான். உடனே அவனது பேச்சை கண்டு கொள்ளாமல் அருகில் இருந்த வீட்டில் உள்ளவர்களிடம் ஒரு மண் வெட்டி வாங்கி ரோட்டு ஓரமாய் மண்ணை தோண்டி அந்த இறந்து போன காக்கையை எடுத்து வந்து புதைத்து விட்டேன் சிறிது நேரத்தில் காக்கைகள் எல்லாம் கலைந்து சென்று விட்டன. அங்கே நின்றிருந்த சிலர் நல்லதும்மா எங்களுக்கு இதைச் செய்ய தோணலையே என்று என்னை பாராட்டினர்.

    இதை பார்த்த திலக்கிற்கு கோபமாக வந்தது. என்னுடன் பேசாமலேயே போய்விட்டான்."

    நல்லது செய்தால் பாராட்டாம இப்படி ஏன் கோபப்படணும்.

    "அது மட்டுமல்ல இன்னொருமுறை ஒரு நாய்க்கு பிஸ்கெட் வாங்கி போட்டேன் அதுவும் அவனுக்கு பிடிக்கவில்லை. இப்படி உயிர்கள் மீது அன்பு காட்டுவது குற்றமா என்று கேட்டேன்.

    அதற்கு அவன் ‘எங்கள் குடும்பத்தில் இப்படி நாலு பேர் முன்னாடி செய்வது அறவே பிடிக்காது என்று முகத்தில் அடித்தாற்போல பேசிவிட்டு சென்றவன்தான் இன்று வந்து என் பெற்றோர் பார்க்கும் பெண்ணையே நான் மணம் முடிக்கப் போகிறேன்’ என்றான். நானும் இவன் நமக்கு செட்டாக மாட்டான் என்று முடிவோடு வந்துவிட்டேன்" என்றாள் திலகா.

    இருந்தாலும் உனக்கு தில்லுதாண்டி என்று தோழியர் கூற.

    இதுல என்ன தில்லு வேண்டியதிருக்கு அவனே இப்போதான் வேலை தேடிட்டு இருக்கான். திருமணம் முடித்தாலும் தன் பெற்றோர் வருமானத்தில்தால் உட்கார்ந்து திங்கப்போகிறான். அவன் பணக்காரன்தான். ஆனால் சுயசம்பாத்தியம் இல்லையே. பெற்றோர் பார்க்கும் பெண்ணை கட்டலைன்னா சொத்தில் சல்லிகாசு பெயராதுன்னு தெரிஞ்சுதான் என்னை சுழற்றிவிட்டுட்டு போறான் இப்படிப்பட்டவனோட காதலை சுமந்துகிட்டு நானும் இவனோட வாழ போராடணுமா சொல்லுங்கடி நான் பேசுறது தப்பா

    தப்பே இல்லம்மா இருந்தாலும் நீ படிப்புல் மட்டும் இல்லடி வாழ்க்கையில் முடிவு எடுக்கிறதிலேயும் கில்லாடி தான்பா என்று தோழியர் நால்வரும் கலாய்க்க.

    ம்ம் அப்படி வாங்க வழிக்கு

    ஆமா படிப்பு முடிந்ததும் ஆளாளுக்கு ஒவ்வொரு பக்கமா பறந்துடுவோம்ல என்றாள் தமிழ்.

    நாம் ஐவரும் வருடத்திற்கொருமுறை ஒன்றா கூடிடணும்பா என்றாள் அன்பு.

    ஆமாம்பா என்ன ஆனாலும் நாம தோழியர் ஐவரும் பிரியவே கூடாது என்றாள் உஷா

    கண்டிப்பாக என்றாள் கலா

    "சரி கடைசி செமஸ்டர் முடியும்போது இது பற்றி டீடெய்லா பேசலாம் என்றாள் திலகா

    ஓகே இப்போ நாம ஒவ்வொருத்தரும் வீட்டிற்கு கெளம்பலாம் என்று தத்தமது வீட்டிற்கு போகும் வழியில் நடந்தனர்.

    திலகாவின் வீடு மெயின் ரோட்டிலேயே இருந்தது.

    அக்கா... அக்கா... நில்லுங்க என்றவாறு சிறுமி ஒருத்தி ஓடிவர.

    என்ன என்று இவள் அச்சிறுமியிடம் கேட்க.

    இந்தாங்க உங்க தலையில் இருந்து இந்த ரோஜாப்பூ கீழே விழுந்துடிச்சி அதான் எடுத்து உங்களிடம் கொடுக்க ஓடியாந்தேன் என்று அவளிடம் மஞ்சள் நிற ரோஜாவை தர.

    கை நீட்டி வாங்கியவள் ஓகே தேங்க்ஸ் குட்டிம்மா என்றவள் அதை தன் கையால் கசக்கி அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டாள்

    அக்கா ஏங்கா அதை குப்பையில் போட்டீங்க அது நல்லாதானே இருந்திச்சி என்று அந்த சிறுமி கேட்க.

    இல்ல பாப்பா நல்லா இருந்தாலும் தெருவில் விழுந்திடுச்சி இல்ல அப்பவே அது நமக்கு உபயோகப்படாது அதான் குப்பையில போட்டேன் என்றாள்.

    குழந்தை புரியாது அவளை குறுகுறுவென பார்த்தது.

    பாப்பா உன் அம்மா உன்னை கூப்பிடறாங்க பார் என்று திலகா கூற இவளை திரும்பி திரும்பி பார்த்தபடி சிறுமி சென்றாள்.

    ‘இந்தப் பூவைப்போலதான் அவனும். என் மனதில் இருந்து கீழே விழுந்துவிட்டான். அவனையும் என் வாழ்க்கையில் இருந்தே தூக்கியெறிந்து விட்டேன்’ என்று தெளிந்த மனதுடன் வீட்டிற்குள் நுழைந்தாள் திலகா.

    2

    "ஏம்பா குரு சாப்பிட்டுட்டு போயேன்பா" என்றாள் பாலாம்பிகை.

    அம்மா அண்ணன் என்றைக்குத்தான் காலை சாப்பாட்டை வீட்டில் சாப்பிட்டிருக்கான்னு இன்று சாப்பிட கூப்பிடறே என்றாள் காவியா.

    ஏய் வாலு நீ சாப்பிட்டாச்சா என்றான் குரு.

    Enjoying the preview?
    Page 1 of 1