Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

9 Tharavum 9 Giragangalum
9 Tharavum 9 Giragangalum
9 Tharavum 9 Giragangalum
Ebook50 pages18 minutes

9 Tharavum 9 Giragangalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வித்தியாசமாய் யோசிப்பதில் தம்பி பால கணேஷ் மிகச் சிறப்பானவர். 9 தலைப்புகள் கொடுத்து 9 கதைகள் எழுதச் சொல்லியிருந்தார். சவாலை ஏற்று இதோ கதைகள். வாசித்து மகிழப் போகும் உங்களுக்கு அன்பின் நன்றி. நூலாக்கம் செய்யும் புஸ்தகாவிற்கு மனப்பூர்வ நன்றி. இத்தொகுப்பை தம்பி பால கணேஷிற்கு சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

Languageதமிழ்
Release dateDec 2, 2023
ISBN6580111310380
9 Tharavum 9 Giragangalum

Read more from Rishaban

Related to 9 Tharavum 9 Giragangalum

Related ebooks

Related categories

Reviews for 9 Tharavum 9 Giragangalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    9 Tharavum 9 Giragangalum - Rishaban

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    9 தாராவும் 9 கிரகங்களும்

    (சிறுகதைகள்)

    9 Tharavum 9 Giragangalum

    (Sirukadhaigal)

    Author:

    ரிஷபன்

    Rishaban

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rishaban-novels

    பொருளடக்கம்

    என்னுரை

    1 தடவை சொன்னா

    2 இதயங்கள்

    3 முடிச்சுகள்

    4 நாள் காதல்

    5 வயதினிலே

    6 தல்

    7 நூறுகள்

    8 கால் பூச்சி

    9 தாராவும் 9 கிரகங்களும்

    என்னுரை

    வித்தியாசமாய் யோசிப்பதில் தம்பி பால கணேஷ் மிகச் சிறப்பானவர். 9 தலைப்புகள் கொடுத்து 9 கதைகள் எழுதச் சொல்லியிருந்தார்.

    சவாலை ஏற்று இதோ கதைகள்.

    வாசித்து மகிழப் போகும் உங்களுக்கு அன்பின் நன்றி.

    நூலாக்கம் செய்யும் புஸ்தகாவிற்கு மனப்பூர்வ நன்றி.

    இத்தொகுப்பை தம்பி பால கணேஷிற்கு சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    அன்புடன்

    ரிஷபன்

    1 தடவை சொன்னா

    கதவைத் திறந்து போட்டுட்டு போக வேணாம். குழாயை சரியா மூடியிருக்கான்னு பார்க்கணும். கேஸ் அடுப்பை அணைச்சதும் கீழேயும் க்ளோஸ் பண்ணனும். பால் பாக்கட் அஞ்சு மணிக்கே போட்டுருவான் சமயத்துல. எடுக்காம விட்டா பூனை தூக்கிண்டு போயிடும். இப்பல்லாம் ஒரு குரங்குப் பட்டாளமே வருது. ஆனா அது சாயங்காலம் தானேன்னு அலட்சியமா இருக்கக் கூடாது. மனசு மாறி கார்த்தால கூட வரும்.

    வாசலில் ஆட்டோ இரண்டு முறை ஹார்ன் அடித்து விட்டார். ரெயில் பிடிக்கப் போகணும் என்கிற பதட்டமே இல்லாமல் பங்கஜா தன் பத்துப் பதினைந்து கட்டளைகளைச் சொல்லிக் கொண்டே போனாள்.

    பூம் பூம் மாடு போல் தலையாட்டி கழுத்து எக்கச்சக்கமாய் வலித்தது.

    சரிம்மா. பார்த்துக்கிறேன்

    இப்படித்தான் போன தடவை அடுப்புல பாலை வச்சுட்டு அப்படியே கதவைப் பூட்டிண்டு ஆபிஸ் போயிட்டிங்க. அப்புறம் நினைப்பு வந்து மத்தியானம் ஓடி வந்து பார்த்தா பாத்திரம் உருகிப் போயிருந்துது. சிலிண்டர் காலி. நல்ல வேளை விபரீதமா எதுவும் நடக்கல.

    தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டேன். ஆட்டி ஆட்டி வலித்ததால்.

    போன வருஷம் பைப்பை மூடல. ஹால் முழுக்க ஜலப் பிரவாஹம். தொட்டில தண்ணி தீர்ந்து போச்சுன்னு அபார்ட்மெண்டே அல்லோலஹல்லோலம். செக்ரட்டரி மானம் போறாப்ல கத்தினார். தேவையா இது நமக்கு

    ஆட்டோ ஹார்ன் ஏழாவது தடவையாய் ஒலித்தது.

    இருப்பா வரேன். இவன் ஒருத்தன். என்னவோ கால்ல கஞ்சி கொட்டிண்டு பறப்பான். வாடிக்கையா கூப்பிடறோம்னு இங்கிதமே இல்லை. பத்து நிமிஷத்துல இறக்கி விடப் போறான். இதோ இருக்கிற ஸ்டேஷனுக்கு இவ்ளோ ராங்கி

    என்னை திரும்பிப் பார்த்தாள். என்ன சொல்லிண்டு இருந்தேன்

    இங்கிதமே இல்லைன்னு

    "ஜோக்கா. சிரிச்சுட்டேன். இதுக்கு ஒண்ணும்

    Enjoying the preview?
    Page 1 of 1