Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பனியைத் தேடும் ரோஜாக்கள்..!
பனியைத் தேடும் ரோஜாக்கள்..!
பனியைத் தேடும் ரோஜாக்கள்..!
Ebook116 pages43 minutes

பனியைத் தேடும் ரோஜாக்கள்..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"ஹலோ மிருணா... குட் மார்னிங்..."
 ஹோட்டல் ரிசப்ஷன் மஞ்சுவும் கோபிநாத்தும் முகமலர்ந்து சிரித்தார்கள்.
 அவளும் வாய் மலர்ந்து புன்னகைத்து "வெரி குட் மார்னிங் மை டியர் ஃப்ரண்ட்ஸ்" என்று சொல்லி விட்டுப் பக்கத்திலிருந்த இருக்கையில் உட்கார்ந்தாள்.
 "சாப்பிட்டுகிட்டிருக்காங்க எல்லாரும்... இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவாங்க... மிருணா உனக்கும் பிரேக் ஃபாஸ்ட் ஒரு ப்ளேட் கொண்டு வரச் சொல்லட்டுமா?" என்று மஞ்சு கேட்டாள்.
 "தாங்க் யூ மஞ்சு... இப்பதான் பஞ்சுப் பொதி மாதிரி அம்மாவோட இட்லிகளைச் சாப்பிட்டு வந்திருக்கேன்... எனக்கு அக்ரிமென்ட் பேப்பர் மட்டும் கொடுங்க மஞ்சு... ஒரு தடவை பார்த்து கையெழுத்துப் போட்டுடறேன்..."
 "இதோ... இந்தாங்க மிருணா..."
 அந்த உயர்நுட்ப வெண்மைத்தாளில் சுற்றுலா விவரங்கள் எழுதப்பட்டிருந்தன. பதினைந்து வெளிநாட்டுப் பயணிகளின் பெயர்களை ஒருமுறை படித்து மனதில் வாங்கிக் கொண்டாள். பிரான்ஸிலிருந்து எவ்வளவு பேர், இங்கிலாந்திலிருந்து எவ்வளவு பேர் என்று பார்த்துக் கொண்டு அவர்கள் வடஇந்தியாவில் எந்தெந்த இடங்களைப் பார்வையிட்டிருக்கிறார்கள், ரசனை என்ன, அபிப்ராயங்கள் என்ன, உணவு விருப்பங்கள் என்று எல்லாவற்றையும் நிதானமாக வாசித்துத் தெரிந்து கொண்டாள். கடைசியாக ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு நிமிர்ந்த போது மஞ்சு அவளையே இமைமூடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
 "ஏய் மஞ்சு... என்ன ஆச்சு?" என்றாள் மெல்லிய திகைப்புடன்.
 "ரொம்ப நாளா ஒரு சந்தேகம் மிருணா எனக்கு..."
 "சந்தேகமா? என்ன சந்தேகம்?""தப்பா நினைக்கக் கூடாது..."
 "தப்பா நினைக்கிற அளவுக்கு எதையும் மஞ்சுவால கேட்க முடியாது..." அவள் புன்னகைத்தாள்.
 "ப்ளீஸ்... ப்ரொசீட் மஞ்சு..."
 "மிருணாளினி என்னைப் பொறுத்தவரை யார் தெரியுமா? ஒரு டோட்டல் பர்ஸனாலிட்டி... நல்ல அழகு... பளிச்சுனு முகம்... மெல்லிசா தேகம்... கச்சிதமான புடவை, ரவிக்கை... எளிமையான நகை... கூர்மையான அறிவு... பாட்டு, ஓவி யம்னு திறமை... மகாபலிபுரம் கலைக்கல்லூரி காம்படீஷன்கள்ல எப்பவும் முதலிடம்... இப்படி மல்டி டாலன்ட்டா இருக்கிற ஒரு பெண், எம்.என்.சி. மாதிரி கம்பெனிகள்ல போய் ஒக்காந்துக்கிட்டு சம்பளத்தை அள்ளாம ஏன் இப்படி டூரிஸ்ட் வேலை பார்க்கணும்? வெயில்ல அலைஞ்சுகிட்டு இங்கிலீஷ், இந்தி, மராத்தி, பிரெஞ்சு, ஜெர்மன்னு தொண்டை தண்ணி வத்த கைட் வேலை பண்ணிக்கிட்டு ஏன் அல்லாடணும்? புரியலே மிருணா"
 மஞ்சு படபடத்து விட்டுத் தன் மேலுதட்டு வியர்வையை நாசூக்காக ஒற்றிக் கொண்டு அவளை ஏறிட்டாள்.
 அதே புன்னகையுடன் மிருணா தோழியை நிமிர்ந்து பார்த்து விட்டுச் சொன்னாள்.
 "பிரியமான வேலையும், பொழுதுபோக்கும் ஒரே மாதிரி அமையறது ஒரு அதிர்ஷ்டம் மஞ்சு... அது எனக்கு கெடைச்சிருக்கு... செங்கல்பட்டு தாசில்தாரா இருந்து ஓய்வு அடைஞ்சவர் என் அப்பா... காணி நிலம், உழவு மாடு, நன்செய் பூமின்னு வளமான பின்புலம் கொண்டவங்க என் அம்மா... நான் ஒரே பெண் அவங்களுக்கு... காட்டுப் பூச்செடி மாதிரி ரொம்ப சுதந்திரமா வளர்ந்தேன்... எந்த நிர்ப்பந்தமும் இல்லே எனக்கு... மார்க், மார்க், மார்க்னு யாரும் கட்டாயப்படுத்தலே... வேலை, சம்பாத்தியம், சம்பளம்னு எந்தக் கட்டாயக் கனவும் இல்லே... விரும்பினதைச் செய்... இதுதான் என் அப்பா சொன்ன பாடம். பி.எஸ்சி. பாட்டனி முடிச்சு, கம்ப்யூட்டர் கத்துகிட்டு நின்னப்போ எனக்குள்ள ஒரு ஃப்ளாஷ்... ஏன் வித்தியாசமான ஒரு வேலையை எடுத்து செய்யக் கூடாது? ஏன் மனசுக்குப் பிடிச்ச தொழிலை ஆரம்பிக்கக் கூடாதுன்னு குறுகுறுப்பு... பிறந்தது, வளர்ந்தது, வாழறது எல்லாமே இந்தக் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டம்தான்... இங்க இருக்கிற கோவில், சிற்பம், கல், பாறை, மண்டபம், கடல், கலங்கரை விளக்கம்னு ஒவ்வொரு இடமும் என் சின்னஞ்சிறு ஞாபகங்கள்லயும், உணர்வுகள்லயும் பதிஞ்சவிஷயங்கள்... ஏதோ ஒரு சம்பாத்தியத்துக்கான வழியா கூலி வாங்கிகிட்டு கைட் வேலை பாக்கறவங்களைப் பார்த்தேன்... திக்குனு ஒரு ஃபீலிங்... தேடி வந்து ரசிச்சுப் பாக்கறவங்களுக்கு இந்த மண்ணின் வாசனையோட, உணர்வுபூர்வமான ஈடுபாட்டோட ஏன் ஊரைச் சுற்றிக் காட்டக் கூடாதுன்னு ஒருபொறி எழுந்துச்சு... இதோ கைட் மிருணாளினி..."
 மஞ்சு மெல்லிய பிரமிப்புடன் தலையை அசைத்தாள். "கிரேட்" என்று முணுமுணுத்தாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 6, 2023
ISBN9798223587569
பனியைத் தேடும் ரோஜாக்கள்..!

Read more from V.Usha

Related to பனியைத் தேடும் ரோஜாக்கள்..!

Related ebooks

Related categories

Reviews for பனியைத் தேடும் ரோஜாக்கள்..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பனியைத் தேடும் ரோஜாக்கள்..! - V.Usha

    1

    வழக்கமான நேரத்தில் வழக்கமான விழிப்பு வந்து விட்டது.

    மிருணா எழுந்து உட்கார்ந்தாள். இருள் இன்னும் பிரியவில்லை. நிலவின் மங்கிய உருவம் வானத்திற்குப் பிரியா விடை கொடுத்துக் கொண்டிருந்தது. காற்றிலும் அதிகாலைக்கென்றே பிரத்யேகமான குளுமையும், மென்மையும்.

    அவள் விழிகள் தாமாக மூடிக் கொண்டன. இதயம் அந்த ஓசையின் எதிர்பார்ப்பில் மெல்ல மெல்ல தன் துடிப்பைக் கூட்டிக் கொண்டே போனது.

    ஓசை! ஓசை! ஆஹா... கடைசியில் அது கேட்டே விட்டது!

    அலையோசை! கரையைத் தேடி வந்து ஓடி முட்டி மோதும் அலைகளின் காலை நேரத்தின் அழகிய சங்கீதம்!

    மிருணா தன் நெஞ்சத்துடிப்பில் இப்போது ஒரு இனிமையை உணர்ந்தாள். எதிர்பார்த்த வேளையில் எதிர்பார்த்த ஒன்று கிடைத்துவிடும் போது இருதயத்தில் பரவுகிற இதமும் அமைதியும் இப்போதும் விரவிக் கொண்டிருந்தன.

    கடலின் லயம் பிறழாத அந்த ஓசையை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்ட அதே நேரத்தில் உள்ளுக்குள்ளே ஒரு பிரார்த்தனை வழக்கமான நிதானத்துடன் தானே எழுந்தது.

    ‘ஓ, இயற்கையே! மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்கிற பக்குவத்தையும், மாற்ற முடிவதை மாற்றிக் காட்டகிற வலிமையையும் எனக்குக் கொடுப்பாயாக!’

    பால் பொங்குகிற வாசனை நாசியைத் தொட்டது. தோட்டத்து கீரைகளுக்கு நீர் பாய்ந்தோடுகிற சிறிய சப்தமும் கேட்டது.

    அப்பாவும், அம்மாவும் எழுந்து கொண்டு விட்டார்கள். புன்னகையுடன் மிருணாளினி படுக்கையை விட்டு எழுந்தாள்.

    இதுவும் ஒரு இனிமையான நாளாக அமையும் என்று தோன்றியது.

    எப்பொழுதும் போல இருள் பிரியாத உதயத்தில் விழிப்பு. அலையோசையின் காலை நேர ராகம். பால் பொங்குகிற இனிய நறுமணம். நீர்க்குளியலில் சிலிர்த்து வெளிப்படுகிற கீரைப் பாத்திகளின் குளிர்க்காற்று வாசனை.

    இனிய தொடக்கத்திற்கு இதை விட வேறு என்னென்ன நிரூபணங்கள் வேண்டும்?

    காலைக்கடன்களை முடித்துக் கொண்டு அறைக்கு வந்த போது பொழுது நன்றாக விடிந்து விட்டது.

    காபி மிருணா... என்றபடி அம்மா வந்து கோப்பையை நீட்டினாள்.

    நீ குடிச்சியாம்மா? புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள் மிருணாளினி.

    நான், அப்பா ரெண்டு பேரும் குடிச்சாச்சு... சூடு ஆறிடப்போகுது... சீக்கிரம் குடி...

    இதோம்மா... என்றவள் உடனடியாக காபியை அருந்தி முடித்தாள்.

    ஆஸ் யூஷுவல், ஃபர்ஸ்ட் க்ளாஸ் என்றபோது அம்மாவின் முகத்தில் தோன்றிய பெருமித உணர்வு ரசிக்கத்தக்கதாக இருந்தது.

    மிருணா, இன்னிக்கு வேலை இருக்குதாம்மா? என்று கேட்டபடியே அப்பா வந்தார். துண்டு ஒன்றினால் முழங்கைகள் வரை ஓடியிருந்த ஈரத்தைத் துடைத்தபடி வந்தாலும், பசுமை மணத்தக்காளி கீரையின் வாசனை அவரைத் தாண்டிக் கொண்டு அறைக்குள் ஓடி வந்தது.

    இருக்குப்பா... முக்கியமான வேலைப்பா... என்று அவள் எழுந்தபடியே சொன்னாள்.

    வெளிநாட்டு டூரிஸ்ட்... பிரான்ஸ், இங்கிலாந்து ரெண்டு நாட்டுல இருந்தும் வராங்கப்பா... தமிழ்நாடு ஓட்டல்ல இருந்து நேத்தே கால் பண்ணிச் சொல்லிட்டாங்க... மகாபலிபுரம், திருக்கழுக்குன்றம் அப்புறம் முடிஞ்சா வேடந்தாங்கல் மூணு இடத்தையும் கவர் பணணணும்ப்பா...

    அம்மா பெருமூச்சுடன் மகளைப் பார்த்தாள்.

    வெயில் வீணாப் போகாம இப்படி அலையுறே மிருணா... கறுத்துப் போயிட்டே தெரியுமா? செல்லம்மா கூட நேத்து கேக்குறா. ‘கல்யாணம் பண்ணி அனுப்ப வேண்டிய பொண்ணை இப்படி கறுத்துப் போகவிட்டு வேடிக்கை பாக்குறியே அஞ்சுகம்... உங்க வீட்டுக்காரரும் ஏன் பேசாம இருக்காரு’ன்னு கேக்குறா... என்ன பதில் சொல்ல? ‘அப்பாவும் பொண்ணும் ஒரே கட்சி, இந்த ஏழை சொல் எங்க அம்பலத்துல ஏறப்போகுது’ ன்னு சொன்னேன்...

    ஒரே கட்சிதான்... ஆனா நியாயக்கட்சி... என்று அவள் சிரித்தாள்.

    நீயும் எங்க கட்சியில் சேர்ந்துடும்மா... சீக்கிரமே சி.எம். ஆயிடுவே...

    சி.எம்.மா? வார்டு மெம்பருக்குக் கூட எனக்குத் தெம்பில்லேடி பெண்ணே... அம்மா வருத்தத்துடன் தீவிரமாய் பதில் சொல்ல அப்பா, அதெல்லாம் ஏன் அஞ்சுகம்? நாட்டுல எப்பவும் பவர்ஃபுல் கிச்சன் காபினெட்தான்... நீதான் எல்லாம் என்றதும் அவள் வாய்விட்டுச் சிரித்தாள்.

    எப்பவும் காமெடியா பேசி என்னைக் காலி பண்ணிடுங்க... எப்படியோ போங்க... சமையலுக்கு டயமாச்சு...

    அம்மா நகர்ந்ததும், அப்பா துண்டை உதறிக் காயப்போட்டு விட்டு அவளிடம் வந்தார்.

    அது ஒண்ணுமில்லேம்மா... பரமசிவம் தெரியுமில்லே, என் ஒரே நண்பன்... திருநெல்வேலித் தோழன்? அவன் லெட்டர் போட்டிருந்தாம்மா... அவன் பையன் தாணுவுக்கு உன்னைக் கேட்டு... வர்ற ஞாயித்துக்கிழமை வரானாம் நம்ம வீட்டுக்கு...

    அப்பா... என்னப்பா இது... அவள் முகம் மாறிற்று.

    ஒரு வற்புறுத்தலும் இல்லேம்மா... அவனா வரேங்கறான்... வரட்டுமே? நீ கிளம்பும்மா... அப்பா சிரித்தார்.

    2

    "ஹலோ மிருணா... குட் மார்னிங்..."

    ஹோட்டல் ரிசப்ஷன் மஞ்சுவும் கோபிநாத்தும் முகமலர்ந்து சிரித்தார்கள்.

    அவளும் வாய் மலர்ந்து புன்னகைத்து வெரி குட் மார்னிங் மை டியர் ஃப்ரண்ட்ஸ் என்று சொல்லி விட்டுப் பக்கத்திலிருந்த இருக்கையில் உட்கார்ந்தாள்.

    சாப்பிட்டுகிட்டிருக்காங்க எல்லாரும்... இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவாங்க... மிருணா உனக்கும் பிரேக் ஃபாஸ்ட் ஒரு ப்ளேட் கொண்டு வரச் சொல்லட்டுமா? என்று மஞ்சு கேட்டாள்.

    தாங்க் யூ மஞ்சு... இப்பதான் பஞ்சுப் பொதி மாதிரி அம்மாவோட இட்லிகளைச் சாப்பிட்டு வந்திருக்கேன்... எனக்கு அக்ரிமென்ட் பேப்பர் மட்டும் கொடுங்க மஞ்சு... ஒரு தடவை பார்த்து கையெழுத்துப் போட்டுடறேன்...

    இதோ... இந்தாங்க மிருணா...

    அந்த உயர்நுட்ப வெண்மைத்தாளில் சுற்றுலா விவரங்கள் எழுதப்பட்டிருந்தன. பதினைந்து வெளிநாட்டுப் பயணிகளின் பெயர்களை ஒருமுறை படித்து மனதில் வாங்கிக் கொண்டாள். பிரான்ஸிலிருந்து எவ்வளவு பேர், இங்கிலாந்திலிருந்து எவ்வளவு பேர் என்று பார்த்துக் கொண்டு அவர்கள் வடஇந்தியாவில் எந்தெந்த இடங்களைப் பார்வையிட்டிருக்கிறார்கள், ரசனை என்ன, அபிப்ராயங்கள் என்ன, உணவு விருப்பங்கள் என்று எல்லாவற்றையும் நிதானமாக வாசித்துத் தெரிந்து கொண்டாள். கடைசியாக ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு நிமிர்ந்த போது மஞ்சு அவளையே இமைமூடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    ஏய் மஞ்சு... என்ன ஆச்சு? என்றாள் மெல்லிய திகைப்புடன்.

    ரொம்ப நாளா ஒரு சந்தேகம் மிருணா எனக்கு...

    சந்தேகமா? என்ன சந்தேகம்?

    தப்பா நினைக்கக் கூடாது...

    தப்பா நினைக்கிற அளவுக்கு எதையும் மஞ்சுவால கேட்க முடியாது... அவள் புன்னகைத்தாள்.

    ப்ளீஸ்... ப்ரொசீட் மஞ்சு...

    "மிருணாளினி என்னைப் பொறுத்தவரை யார் தெரியுமா? ஒரு டோட்டல் பர்ஸனாலிட்டி... நல்ல அழகு... பளிச்சுனு முகம்... மெல்லிசா தேகம்... கச்சிதமான புடவை, ரவிக்கை... எளிமையான நகை... கூர்மையான அறிவு... பாட்டு,

    Enjoying the preview?
    Page 1 of 1