Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நிலவைத் தேடும் சூரியகாந்திகள்
நிலவைத் தேடும் சூரியகாந்திகள்
நிலவைத் தேடும் சூரியகாந்திகள்
Ebook175 pages42 minutes

நிலவைத் தேடும் சூரியகாந்திகள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சாயந்தரம் நான்கு மணி.
 மெயின் கேட்டுக்கு வந்த விஜயமோகனுக்கு காத்து நிற்கும் துரை கண்ணில் பட்டான். மஞ்சள் நிறத் துணிப்பையில் காலி டிபன் கேரியர்களோடு நிறையப் பேர் வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.
 விஜயமோகன் கேட்டுக்கு வெளியே வந்தான்.
 ஓரமாய் நின்றிருந்த துரை விஜயமோகனைப் பார்த்ததும், வந்து இணைந்து கொண்டான்.
 "போலாமா சார்?"
 "ம்."
 இரண்டு பேரும் நடக்க ஆரம்பித்தார்கள்.
 "நம்ம ஊர் எது சார்?"
 "கோயமுத்தூர்..."
 சிரித்தான் துரை.
 "அங்கே இருந்ததுக்கு இந்த வில்லேஜில வந்து இருக்கறதுன்னா ரொம்பக் கஷ்டமா இருக்கும். இல்ல சார்?"
 "ஆமா. என்ன ஊர் இது. ஒரே போர் அடிக்கும்னு தோணுது. ஒரு தியேட்டர் கூட இல்ல போலிருக்கு."
 "தியேட்டர் இருக்கு சார்."
 "வீடு ரொம்பத் தூரமா துரை?"
 "இல்லை சார் பக்கத்திலேதான்."

சொற்ப நடையில் சாலையை விட்டுக் கொஞ்சம் உள் வாங்கியிருந்த அந்த வீட்டுக்குக் கூட்டிப் போனான். காம்பௌண்ட் கேட் மாதிரி இருந்த அந்தக் தடிமனான மரக் கதவைத் தள்ளினான். அது கழுத்தில் கத்தி விழுந்த ஆடு மாதிரி எண்ணெயில்லாமல் 'றீச்' செனச் சத்தம்.
 விஸ்தாரமாய் இருந்தது காரை வாசல். குறுக்கே கட்டப்பட்டிருந்த கயிற்றில் துணிகளின் தொங்கல்கள். நேர் எதிரே ஒரு கிணறு. உருளை வழியே கயிறு வழிந்து முனையில் கட்டின பக்கெட்டோடு தெரிந்தது. மிகப் பக்கத்தில் ஒரு துவைக்கிற கல் வாசலுக்கு இடதிலும் வலதிலுமாய் இரண்டு கதவுகள் திண்ணைக்கப்பால் தெரிந்தன.
 இடது பக்கமிருந்த கதவைக் காட்டிச் சொன்னான் துரை.
 "ஸார்... அதான் வீட்டுக்காரங்க வீடு இந்தப் பக்கம் இருக்கிறது வாடகைக்கு விடப் போறது."
 "வீட்டுக்காரங்க எப்படி துரை?"
 "அதெல்லாம் பிரச்சினையே இல்லை சார். வயசான ஒரு அம்மா தான். பேர் பங்கஜம், ரொம்ப நல்ல மாதிரி."
 அந்த இடப்பக்கக் கதவைச் சமீபத்திருந்தார்கள்.. பாதி திறந்திருந்த கதவைப் பார்த்துக் குரல் கொடுத்தான் துரை.
 "பங்கஜம்மா... பங்கஜம்மா..."
 நடையோசையைத் தொடர்ந்து கதவு முழுசாய்த் திறக்கப் பட, கதவுக்கப்பால் பங்கஜம் தெரிந்தாள்.
 நரையும், கண்களும் வயது நாற்பதுக்கு மேல் என்றது. நார்த்தனமாய்த் தேகம். சாயம் போன நூல் புடவையை ஏனோ தானோவெனச் சுற்றியிருந்தாள். நெற்றி காலியாய் இருந்தது. கழுத்து மூளியாய் இருந்தது.
 "வா துரை..." என்ற பங்கஜம்.
 விஜயமோகனின் மேல் பார்வை படிந்ததும் புருவங்களைச் சுருக்கிட்டாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 6, 2023
ISBN9798223827405
நிலவைத் தேடும் சூரியகாந்திகள்

Read more from Rajeshkumar

Related to நிலவைத் தேடும் சூரியகாந்திகள்

Related ebooks

Related categories

Reviews for நிலவைத் தேடும் சூரியகாந்திகள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நிலவைத் தேடும் சூரியகாந்திகள் - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    பஸ்ஸின் அறுபது கிலோ மீட்டர் வேகத்தோடு விஜயமோகனின் யோசனைகளும் போட்டி போட்டன ஜன்னலில் தலை சாய்த்து, எதிர் காற்றின் தாக்குதலை அலட்சியப்படுத்தி உட்கார்ந்திருந்தான்.

    ஒரு பெண்ணின் சுயநலம் கலந்த மிரட்டலுக்கு செத்துப் போவேன் என்கிற மிரட்டலுக்குப் பயந்து...?

    பிரிமியா என்னை மிரட்டிப் பார்க்கறியா?

    கண்ணுக்குள் பிரிமியா நின்று கெஞ்சினாள்.

    ப்ளீஸ் என்னைப் புரிஞ்சுக்கங்க. தப்பா நினைக்காதீங்க விஜய், சத்தியமா இது மிரட்டல் இல்லை.

    பின்னே என்னவாம்?

    எது, மேல நான் ஆசை வச்சாலும் முதல்லயே ரெண்டு விஷயத்தை டிசைட் பண்ணிக்குவேன். கிடைச்சா எப்படி அணுபவிக்கலாம் அல்லது கிடைக்காட்டி எப்படி என்னைத் தேத்திக்கலாம்! உங்க விஷயத்தில் நீங்க கிடைக்காட்டி செத்துப் போறதுதான் ஒரே தேறுதல்.

    முட்டாள்தனம் பிரிமியா.

    என்னோட இந்த முடிவுக்காக நீங்க கல்யாணத்துக்குச் சம்மதிக்க வேண்டாம் விஜய்...

    வெகு சாமர்த்தியமான பேச்சு!

    இந்த விநாடியில்தான் பரிச்சயமான பெண்ணாகவே இருக்கட்டும். தெரிந்தே சாகவிட யாருக்கு மனசு வரும்?

    கடைசி கடைசியாய் நேற்றைக்குச் சொல்லிவிட்டான்.

    ஓகே பிரிமியா! அடுத்த வருஷம் இந்நேரம் மாமாவை நம்பிக்கையோட கல்யாண மண்டபம் புக் பண்ணச் சொல்லு.

    டிரைவர் பிரேக் அடித்ததில், யோசிப்புக் கலைந்து போக, பஸ் இரைச்சல் காதின் கவனத்துக்கு வந்தது.

    குறுக்கே புகுந்த ஓர் ஆட்டு மந்தை சாவகாசமாய்ச் சாலையின் அந்தப் பக்கம் போய்க் கொண்டிருக்க, பஸ் மீண்டும் வேகம் பிடித்தது.

    ஐந்தாவது நிமிடம் - கருமத்தம்பட்டியில் நின்று - புறப்பட்டு -

    அடுத்தடுத்த பதினைந்து நிமிடங்களில் அவிநாசி, பெருமாநல்லூர், செங்கப்பள்ளி, விஜயமங்கலம், பெருந்துறையைக் கடந்து ஹெட்லைட் வெளிச்சத்தோடு வாகனங்கள் எதிர்ப்பட ஈரோட்டைச் சமீபித்தது. பஸ் ஸ்டாண்டில் பயண அசதியோடு உதிர்ந்தான் விஜயமோகன்.

    சுற்றுப் பகுதியில் பத்துப் பதினைந்து நிமிடங்கள் அலைந்து சுமாரான லாட்ஜைப் பிடித்தான்.

    தூசி துடைக்கப்படாத ஃபேனுக்கடியில் மூட்டைப் பூசி கடிகளோடு அடுத்த நாளைய நினைப்போடு தூக்கம் வராமல் வெகு நேரம் புரண்டான்.

    காலையில் எழுந்ததுமே ஒரு ரூபாய் வெந்நீரில் உடலை நானைத்துக் கொண்டு புறப்பட்டான். லாட்ஜை விட்டு வெளியே வர, வர, எதிர்ப்பட்ட பல்ல கவுண்டம்பாளையம் பஸ்ஸைக் கை நீட்டி நிறுத்தி, காலி இருக்கை ஒன்றில் நிரப்பிக் கொண்டான்.

    அடுத்த பதினைந்தாவது நிமிஷத்தில் அந்தச் சின்ன கிராமத்தில் இருந்தான்.

    கிராமம் ஹைவேஸ் ரோடின் மேலாகவே இருந்தது. ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் மின் வசதி பெற்றிருந்தது. டீக்கடை ரேடியோ காலை ஏழேகால் மணி நியூஸைச் சிரத்தையாய் வாசித்துக் கொண்டிருக்க, வெளியே போட்டிருந்த மரப்பெஞ்சுகளில், தலையில் முண்டாசு சுற்றி வெற்றுடம்போடு தெரிந்த கிராமத்துப் பேர்வழிகள் கண்ணாடி டம்ளர்களில் இருந்த டீயை ஊதி, ஊதிக் குடித்துக் கொண்டிருந்தார்கள்.

    ரோடைக், கிராஸ் செய்தான் விஜயமோகன். வேட்டியை இடுப்புக்குக் கட்டி வாயில் சுருட்டோடு எதிர்ப்பட்ட அந்த ஆசாமியைக் கையசைப்பால் நிறுத்தினான் விஜய்.

    ஏங்க... தீப்தி டெக்ஸ்டைல்ஸுக்கு எந்தப் பக்கம் போகணும்?

    ஒரு விநாடி யோசித்த அந்த ஆசாமி கேட்டார்.

    பஞ்சு மில்லுங்களா?

    தலையசைத்தான் விஜயமோகன்.

    ஆமாங்க.

    தொண்ணூறு டிகிரி உடலைத் திருப்பி அருகில் போன சரளைக்கல் பாதையைக் காட்டினார்.

    பாருங்க. அதுலேயே போங்க... முக்கா மைல் நடக்கணும்...

    அந்தப் பாதைக்கு விஜயமோகன் போனபோது - அம்புக் குறியோடு போர்டே தெரிந்தது.

    WAY TO DEEPTI TEXTILES

    இரண்டு பக்கமும் முட்செடிகள் புதர் மாதிரி மண்டிச் கிடக்க, கற்றாழை செழித்த பாதைக்கு நடுவே நடந்தான். வெய்யில் அந்நேரத்துக்கே உறைத்தது முகம் வியர்த்தான் விஜய். இடையே திருப்பம் வந்தபோது, அங்கேயும் தீப்தி டெக்ஸ்டைல்ஸுக்கு வழி சொல்லி ஒரு போர்டு கோணலாய் நின்று கொண்டிருந்தது. அதன் மேல் உட்கார்ந்திருந்த ஒரு காக்கை அவனை ஓரப்பார்வை பார்த்தது.

    தொடர்ந்து நடந்தான் விஜயமோகன்.

    பதினைந்து நிமிஷம்! பெரிய இரும்பு கிராதிகேட் திறந்து வைக்கப்பட்டிருக்க, வலது பக்கம் மரக்கூண்டுக்குள் இரண்டு செக்யூரிட்டி கார்டுகள் தெரிந்தார்கள். நடந்து போய் அவர்களைச் சமீபித்தான் அவர்கள் விவரம் கேட்கும்முன் அப்பாய்ன்ட்மெண்ட் ஆர்டரைக் காட்டினதுமே- ஒரு செக்யூரிட்டி கார்டு புன்னகை பூத்த முகமாகி உள்ளே கூட்டிப் போனான்.

    அலுவலக சம்பிரதாயங்கள் எல்லாமே முடிந்து போனதும் ஏ.ஈ. தேவராஜிடம் சேர்ப்பிக்கப்பட்டான்.

    ஏ.ஈ. தேவராஜ் சமீபத்தில் கல்யாணமாகித் தொப்பை போட்டிருந்தார். குத்த வருவது போன்ற கூர்மையான மூக்குக்குக் கீழே மீசையை ஒழுங்கில்லாமல் வளர்த்திருந்தார். சிரித்த பல் வரிசையில் பாக்குக் கறை ஒட்டியிருந்தது. சுருள் பட்டிருந்த முடிக்கு மேல் ஏராளமான பஞ்சுத் துணுக்குகள்.

    எதிர் நாற்காலியில் விஜயமோகனை உட்காரச் சொல்லி சொன்னார்.

    நாற்காலியில் விஜயமோகன் நிரம்பிக் கொண்டதும் கேட்டார்.

    உங்க பேர் விஜயமோகனா?

    ஆமா சார்... தலையசைத்தான்.

    டிகிரியை எப்ப முடிச்சீங்க?

    எயிட்டி ஃபோர்-எயிட்டி ஃபைவ்ல சார்...

    ஒரு வருஷம் சும்மா இருந்தீங்களா?

    "வேலைக்கு ட்ரை பண்ணிக்கிட்டிருந்தேன். எதுவும் கிடைக்கலை. மீன் டைம் எம்.எஸ்ஸி கரெஸ்பான்டென்ஸ் கோர்ஸ் பண்ணிட்டிருக்கேன்.

    இங்கே பிராஸஸ் எப்படின்னு தெரியுமா?

    தெரியும் சார், இன்டர்வ்யூக்கு வந்தப்பவே உள்ளே ஷாப் ஃப்ளோருக்கு வந்து பார்த்தேன்...

    இன்னொரு தடவை பார்க்கணும்ன்னு பிரியப்பட்டா வாங்க... உள்ளே போயிட்டு வரலாம்.

    விஜயமோகன் தலையசைத்தான்.

    Enjoying the preview?
    Page 1 of 1