Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

உடைந்த வானவில்
உடைந்த வானவில்
உடைந்த வானவில்
Ebook120 pages41 minutes

உடைந்த வானவில்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

டொக்...
 டொக்...
 டொக்...
 கதவுத் தட்டல் சப்தத்துக்காக நிமிர்ந்த டாக்டர் மிருதுளாதேவி - குரல் கொடுத்தாள்.
 "கமின்."
 சந்தன நிறத்தில் ஜிப்பாவும் பட்டு வேஷ்டியும் உடுத்தியிருந்த புரோக்கர் பொன்னம்பலம் உள்ளே பிரவேசித்தார். கக்கத்தில் மஞ்சள் வர்ண ரெக்சின் பேகை அதக்கியிருந்தார். பெரிய புன்னகையோடு இரண்டு கைகளையும் கூப்பிக் கும்பிடு போட்டார்.
 "வணக்கம்மா..."
 "நீங்களா... நான் யாரோ பேஷண்ட்ன்னு நினைச்சேன்..."
 "நாலு நாளா கோல்ட் இருக்கு. அதனால நான் கல்யாண புரோக்கரா மட்டும் இங்கே வரலை... ஒரு பேஷண்ட்டாவும் வந்திருக்கேன்."
 சொல்லி விட்டு உயர்ந்த டெசிபலில் அவரே சிரித்துக் கொண்டார்.
 "என் பொண்ணு ஆர்த்திக்கு நல்ல மாப்பிள்ளையாப் பார்த்துக் கொடுத்துட்டிங்கன்னா உங்க கோல்ட் சரியாப் போயிடும்..."
 மிருதுளாதேவி சொன்னதும் - மேலும் சிரித்தார்.
 மிருதுளாதேவி ஸ்டெத்தை மேஜை ஓரமாய் நகர்த்தி வைத்து விட்டு கேட்டாள்"விஷயத்துக்கு வாங்க... நல்ல வரன்கள் ஏதாவது கொண்டு வந்திருக்கிங்களா.?"
 "இல்லாமலா உங்களை வந்து பார்ப்பேன்."
 "இங்கே பாருங்க பொன்னம்பலம்! சும்மா செலவுக்குக் காசை வாங்கிட்டுப் போறதுக்காக பிரயோஜனம் இல்லாத எதையாவது காட்டிட்டுப் போகக் கூடாது."
 "உங்க கிட்டே அப்படியெல்லாம் செய்வேனா... நான் புரோக்கர் மட்டும் இல்லை. ஜோதிடமும் தெரிஞ்சவன். அதனால ஜோதிடப் பொருத்தம் இல்லாத ஒரு ஜாதகத்தை இது வரைக்கும் உங்க கிட்டே நீட்டினதே இல்லை..."
 "எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை. அதனாலதான் பிறந்ததிலிருந்தே என் பொண்ணுக்கு நான் ஜாதகமே எழுதலை..."
 பொன்னம்பலம் அகலமாய்ச் சிரித்தார்.
 "நீங்க எழுதலைன்னா நான் விட்டுடுவேனா...? உங்க பொண்ணோட டேட் ஆஃப் பர்த் கேட்டு நான் கட்டமெல்லாம் போட்டு வெச்சிட்டேனே. அதை வெச்சு பொருத்தம் பார்த்துத்தான் உங்க கிட்டே மாப்பிள்ளை ஜாதகத்தை நீட்டறேன்..."
 "எனக்கு அந்தப் பொருத்தத்தைப் பத்தி எந்தக் கவலையும் இல்லை... மாப்பிள்ளை எப்படி இருக்கணும்ன்னு நான் சில நிபந்தனைகள் போட்டிருக்கேனே... அதெல்லாம் பொருந்தி வருதான்னு பாருங்க... பொருத்தம் இருந்தால்தான் நான் கல்யாணத்தைப் பத்தி முடிவெடுப்பேன்..."
 "நீங்க போட்டிருப்பது எல்லாமே படு சிக்கலான நிபந்தனைகள் டாக்டரம்மா..."
 "ஏன்...?"
 "பணக்காரனா இருக்கணும்ன்னு சொல்லியிருக்கிங்க... ஓக்கே... ஆனா நிறையப் படிச்சிருக்கணும்ன்னு வேற சொல்றிங்க... பணக்காரப் பசங்க நிறையப் பேர் பொறுப்பில்லாம தறுதலையா இல்லே சுத்தறாங்க."
 "அப்படிக் கொஞ்சம் பேர் இருந்தா இப்படியும் கொஞ்சம் பேர் இருக்கத்தான் செய்வாங்க... சின்ன வயசிலிருந்தே பிசினசைப் பொறுப்பா நிர்வாகிக்க ஆரம்பிச்ச எத்தனையோ பேரை நான் பார்த்திருக்கேன்."அப்படிப்பட்ட ஒரு வரனைத்தான் இப்போ நான் கொண்டு வந்திருக்கேன்... நீங்க போட்ட அத்தனை கண்டிஷன்களும் இந்த மாப்பிள்ளைக்குப் பொருந்தி வரும்ன்னு நினைக்கிறேன்."
 மிருதுளாதேவி நிமிர்ந்தாள்.
 "பையன் பேர் என்ன...?"
 "கைலாஷ்."
 "என்ன படிச்சிருக்கான்...?"
 "எம்பிஏ."
 "நான் கேட்ட மாதிரி மல்ட்டி பிசினசில் ஈடுபட்டு இருக்காங்களா...?"
 "ஆமாம்மா... ஃபவுண்டரில இருந்து ஈ காமர்ஸ் வரைக்கும் எல்லாத் துறையிலும் ஈடுபட்டிருக்காங்க."
 "டீடெயில்சைக் குடுங்க..."
 புரோக்கர் தன்னிடமிருந்த மஞ்சள் தடவிய கவரை நீட்டினார்.
 "இந்தாங்கம்மா... பையனோட அப்பா அம்மா யாரு... அவங்க குலம் கோத்திரம் என்ன... சொத்து எவ்வளவு... எல்லா தகவல்களுமே குறிச்சிக் கொடுத்திருக்கேன்."
 "போட்டோ வெச்சிருக்கிங்களா...?"
 "போட்டோவும் இருக்கு... பொண்ணு கிட்டே காட்டுங்க... பொண்ணுக்கு மாப்பிள்ளையைப் பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேச ஆரம்பிக்கலாம்."
 மிருதுளாதேவி சிரித்தாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 8, 2023
ISBN9798223424376
உடைந்த வானவில்

Read more from Rajeshkumar

Related to உடைந்த வானவில்

Related ebooks

Related categories

Reviews for உடைந்த வானவில்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    உடைந்த வானவில் - Rajeshkumar

    1

    அந்த ஹால் பூராவும் ஏராளமான கம்ப்யூட்டர் திரைகள் செவ்வக முகங்களுடன் நிறங்களைச் சிதறடித்தபடி மின்சாரத்தைத் தின்று கொண்டிருக்க - அழகான இளைஞர்கள் இளைஞகள் கீ போர்டுகளின் மேல் விரல்களை நடனமாட விட்டுக் கொண்டிருந்தார்கள்.

    ஆர்த்தியின் மேஜைக்கு அருகே வந்த அந்த லேப் அட்டெண்டர் பவ்யமான குரலில் சொன்னான்.

    யுவர் டைம் ஈஸ் அப்...

    அடுத்த பேட்ச் பெண், பாலிமர் சேரில் இவள் எழுவதற்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.

    வாட்சைப் பார்த்த ஆர்த்தி - புருவங்களை உயர்த்திக் கொண்டே – ஒ... நேரம் போனதே தெரியலை... ஸாரி... என்றபடி கம்ப்யூட்டரை விட்டு அகன்றாள்.

    கண்ணாடி வேய்ந்த அலுமினியக் கதவைத் தள்ளித் திறந்து வெளி வராந்தாவுக்கு வந்தபோது மினு அவளுக்காகக் காத்திருந்தாள்.

    என்னடி ஆர்த்தி...! கம்ப்யூட்டர்ல உன்னை மறந்து மூழ்கிப் போயிட்டே...

    இன்னிக்கு குடுத்த ப்ராப்ளம் ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங்...

    ரொம்ப இன்வால்வ் ஆகாதே...

    ஏன்...?

    உனக்குத் தீவிரமா மாப்பிள்ளை தேடிட்டிருக்காங்க... அதுவரைக்கும். பொழுது போறக்காகத்தான் உன்னைக் கம்ப்யூட்டர் கிளாசில் சேர்த்திருக்கேன்னு உங்கம்மா சொன்னாங்க...

    வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமத்தான் இங்கே வந்தேன்... ஆனா கம்ப்யூட்டர் மேல தானாகவே ஈர்ப்பு வந்துடுச்சு...

    சந்தோஷம்... உங்க அம்மா கிட்டே ஒரு கம்ப்யூட்டர் ஆசாமியையே பார்த்து உனக்குக் கல்யாணம் பண்ணி வெக்கச் சொல்றேன்...

    ம்கூம்... அம்மா ஏகப்பட்ட கண்டிஷன்களோட எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டிருக்காங்க...

    அவங்க கண்டிஷன்ஸ் என்னென்ன...?

    மாப்பிள்ளை மல்ட்டி பிசினஸுக்கு சொந்தக்காரரா இருக்கணும்... அப்போதான் ஒரு பிசினசில் இறங்குமுகம் இருந்தாலும் மத்ததை வெச்சு சமாளிச்சிக்கலாம்.

    அப்புறம்...?

    பிசினஸ் மட்டும் போதாது. நிறையப் படிச்சிருக்கணும். கத்துக்கிற மனப்பான்மை உள்ளவரா இருக்கணும்...

    ம்... அப்புறம்...?

    சிவப்பா அழகர் உயரமா... அட ஹேண்ட்ஸம்ன்னு சொல்ற மாதிரி இருக்கணும்...

    மூணாவது கண்டிஷன்ஸ் தப்பே இல்லை. ஏன்னா... அட மிஸ் யுனிவர்ஸ்ன்னு சொல்ற மாதிரி நீ அழகா இருக்கியே... உன்னைப் பார்த்தா எனக்கே கொஞ்சம் பொறாமையாத்தான் இருக்கு. நான் மட்டும் ஆம்பளையா இருந்தா இந்த கம்ப்யூட்டர் கிளாசை சாக்கா வெச்சு உன்னை லவ் பண்ணியிருப்பேன்...

    ஏய் இட் ஈஸ் டூ மச்... தீபா மேத்தா படமெல்லாம் ரொம்பப் பார்க்காதே.

    சொல்லிக் கொண்டே ஹை ஹீல்ஸ் சப்தம் எழுப்ப - படிகளில் இறங்கி - தனது மாருதி காரைத் தொட்டாள் ஆர்த்தி.

    முதுகுக்குப் பின்னால் ஒரு குரல் கேட்டது.

    ஹலோ...

    திரும்பிப் பார்த்தாள் ஆர்த்தி.

    அப்பாஸ் அஜீத் ஷாருக்கான் எல்லோரையும் குலுக்கிப் போட்டு எடுத்த மாதிரி தோற்றத்தில் அந்த இளைஞன் நின்றிருந்தான்.

    அவளை நோக்கி நீண்டிருந்த அவன் கை ஒரு சிவப்பு ரோஜாவை நீட்டிக் கொண்டிருந்தது.

    புன்னகை தேங்கியிருந்த உதடுகளை அசைத்துச் சொன்னான்.

    இன்னிக்கு வேலன்ட்டைன்ஸ் டே... காதலின் அடையாளமான சிவப்பு ரோஜாப் பூவை உங்களுக்குக் கொடுக்க ஆசைப்படறேன்... மறுத்துடாதிங்க... ப்ளீஸ்...

    2

    டொக்...

    டொக்...

    டொக்...

    கதவுத் தட்டல் சப்தத்துக்காக நிமிர்ந்த டாக்டர் மிருதுளாதேவி - குரல் கொடுத்தாள்.

    கமின்.

    சந்தன நிறத்தில் ஜிப்பாவும் பட்டு வேஷ்டியும் உடுத்தியிருந்த புரோக்கர் பொன்னம்பலம் உள்ளே பிரவேசித்தார். கக்கத்தில் மஞ்சள் வர்ண ரெக்சின் பேகை அதக்கியிருந்தார். பெரிய புன்னகையோடு இரண்டு கைகளையும் கூப்பிக் கும்பிடு போட்டார்.

    வணக்கம்மா...

    நீங்களா... நான் யாரோ பேஷண்ட்ன்னு நினைச்சேன்...

    நாலு நாளா கோல்ட் இருக்கு. அதனால நான் கல்யாண புரோக்கரா மட்டும் இங்கே வரலை... ஒரு பேஷண்ட்டாவும் வந்திருக்கேன்.

    சொல்லி விட்டு உயர்ந்த டெசிபலில் அவரே சிரித்துக் கொண்டார்.

    என் பொண்ணு ஆர்த்திக்கு நல்ல மாப்பிள்ளையாப் பார்த்துக் கொடுத்துட்டிங்கன்னா உங்க கோல்ட் சரியாப் போயிடும்...

    மிருதுளாதேவி சொன்னதும் - மேலும் சிரித்தார்.

    மிருதுளாதேவி ஸ்டெத்தை மேஜை ஓரமாய் நகர்த்தி வைத்து விட்டு கேட்டாள்.

    விஷயத்துக்கு வாங்க... நல்ல வரன்கள் ஏதாவது கொண்டு வந்திருக்கிங்களா.?

    இல்லாமலா உங்களை வந்து பார்ப்பேன்.

    இங்கே பாருங்க பொன்னம்பலம்! சும்மா செலவுக்குக் காசை வாங்கிட்டுப் போறதுக்காக பிரயோஜனம் இல்லாத எதையாவது காட்டிட்டுப் போகக் கூடாது.

    உங்க கிட்டே அப்படியெல்லாம் செய்வேனா... நான் புரோக்கர் மட்டும் இல்லை. ஜோதிடமும் தெரிஞ்சவன். அதனால ஜோதிடப் பொருத்தம் இல்லாத ஒரு ஜாதகத்தை இது வரைக்கும் உங்க கிட்டே நீட்டினதே இல்லை...

    எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை. அதனாலதான் பிறந்ததிலிருந்தே என் பொண்ணுக்கு நான் ஜாதகமே எழுதலை...

    பொன்னம்பலம் அகலமாய்ச் சிரித்தார்.

    நீங்க எழுதலைன்னா நான் விட்டுடுவேனா...? உங்க பொண்ணோட டேட் ஆஃப் பர்த் கேட்டு நான் கட்டமெல்லாம் போட்டு வெச்சிட்டேனே. அதை வெச்சு பொருத்தம் பார்த்துத்தான் உங்க கிட்டே மாப்பிள்ளை ஜாதகத்தை நீட்டறேன்...

    எனக்கு அந்தப் பொருத்தத்தைப் பத்தி எந்தக் கவலையும் இல்லை... மாப்பிள்ளை எப்படி இருக்கணும்ன்னு நான் சில நிபந்தனைகள் போட்டிருக்கேனே... அதெல்லாம் பொருந்தி வருதான்னு பாருங்க... பொருத்தம் இருந்தால்தான் நான் கல்யாணத்தைப் பத்தி முடிவெடுப்பேன்...

    நீங்க போட்டிருப்பது எல்லாமே படு சிக்கலான நிபந்தனைகள் டாக்டரம்மா...

    ஏன்...?

    பணக்காரனா இருக்கணும்ன்னு சொல்லியிருக்கிங்க... ஓக்கே... ஆனா நிறையப் படிச்சிருக்கணும்ன்னு வேற சொல்றிங்க... பணக்காரப் பசங்க நிறையப் பேர் பொறுப்பில்லாம தறுதலையா இல்லே சுத்தறாங்க.

    அப்படிக் கொஞ்சம் பேர் இருந்தா இப்படியும் கொஞ்சம் பேர் இருக்கத்தான் செய்வாங்க... சின்ன வயசிலிருந்தே பிசினசைப் பொறுப்பா நிர்வாகிக்க ஆரம்பிச்ச எத்தனையோ பேரை நான் பார்த்திருக்கேன்.

    அப்படிப்பட்ட ஒரு வரனைத்தான் இப்போ நான் கொண்டு வந்திருக்கேன்... நீங்க போட்ட அத்தனை கண்டிஷன்களும் இந்த மாப்பிள்ளைக்குப் பொருந்தி வரும்ன்னு நினைக்கிறேன்.

    மிருதுளாதேவி நிமிர்ந்தாள்.

    பையன் பேர் என்ன...?

    கைலாஷ்.

    என்ன படிச்சிருக்கான்...?

    எம்பிஏ.

    நான் கேட்ட மாதிரி மல்ட்டி பிசினசில் ஈடுபட்டு இருக்காங்களா...?

    ஆமாம்மா... ஃபவுண்டரில இருந்து ஈ காமர்ஸ் வரைக்கும் எல்லாத் துறையிலும் ஈடுபட்டிருக்காங்க.

    டீடெயில்சைக் குடுங்க...

    புரோக்கர் தன்னிடமிருந்த மஞ்சள் தடவிய கவரை நீட்டினார்.

    "இந்தாங்கம்மா... பையனோட அப்பா அம்மா யாரு... அவங்க குலம் கோத்திரம் என்ன... சொத்து எவ்வளவு... எல்லா

    Enjoying the preview?
    Page 1 of 1