Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

11 மணி 59 நிமிஷம் 59 வினாடிகள்
11 மணி 59 நிமிஷம் 59 வினாடிகள்
11 மணி 59 நிமிஷம் 59 வினாடிகள்
Ebook100 pages34 minutes

11 மணி 59 நிமிஷம் 59 வினாடிகள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

விடாமல் அடித்துக் கொண்டிருந்த டெலிபோனை நோக்கிப் போனார் மெஹ்ரா. இடம்: அவருடைய பங்களாவின் தனியறை. நேரம் காலை பதினோரு மணி.
 மெஹ்ரா அறிவு ஜீவி. ஏராளமான ஐ.க்யூ. நாற்பத்து நான்கு வயதில் கடலளவு கம்ப்யூட்டர் ஞானம். மனித உடம்புகளைக் காட்டிலும் எந்திர உடம்புகளை நேசிப்பதில் ஆர்வம் அதிகம். போன வருடம் முதல் மனைவி சோபியா இறந்து போக அதைப் பற்றிக் கவலைப்படாமல் மறுமாதமே இருபத்தியோரு வயது ரெஜிதாவை - கல்யாணம் பண்ணிக் கொண்டவர்.
 ரிஸீவரை எடுத்தார்.
 "ஹலோ..."
 "மிஸ்டர் மெஹ்ரா...?"
 "எஸ்..."
 "நான் ராமபத்ரன். கம்ப்யூட்டரிங் டெக்னாலஜி காலேஜ் பிரின்சிபால்... போன மாதம் ஒரு அரசு விழாவில் கலந்து கொண்டோமே...?"
 "வணக்கம் ராமபத்ரன்...

"வணக்கம்..."
 "என்ன விஷயம்...?"
 அடுத்த மாதம் கல்லூரியில் வெள்ளிவிழா. மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை சாயந்தரம்..., ஆறு மணிக்கு நீங்கள் வந்திருந்து ஃபங்க்ஷனை நடத்தித் தர வேண்டும்..."
 "ஸாரி... ராமபத்ரன்! இன்னும் ஒரு ஆறுமாத காலத்திற்கு தான் விழாக்களிலும் திருமணங்களிலும் கலந்து கொள்ள இயலாது... வரப்போகிற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு ஒவ்வொரு தங்கத் துணுக்குக்குச் சமம்."
 "மாணவர்கள் உங்கள் வருகையை ஆவலாய் எதிர்பார்க்கிறார்கள். ஒரு அரைமணி நேரமாவது..."
 "ஸாரி... வெரி ஸாரி... வெள்ளி விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்." ரிஸீவரை வைத்து விட்டு திரும்பினார் மெஹ்ரா. அவருடைய அழகான இளம் மனைவி ரெஜிதா நின்றிருந்தாள். சல்வார் கம்மீஸ். கம்மீஸின் அடர்த்தியான கத்திரிப்பூ நிறம். அவளுடைய பவுன் நிற உடம்புக்குப் பாந்தமாய் பொருந்தியிருந்தது.
 "யார்கிட்டயிருந்து போன்...?" குரல் செர்ரிப்பழம்.
 "கம்ப்யூட்டரிங் டெக்ஜாலஜி காலேஜ் பிரின்சிபால் பேசினார்..."
 "என்னவாம்..."
 "அடுத்தவாரம் காலேஜ் வெள்ளிவிழாவாம். மாட்டேன்னுட்டேன்..."
 "ஏன் போனா என்ன...?"
 "ப்ராஜக்ட்டை ஆறுமாசத்துக்குள்ளே. முடிக்க வேண்டாமா?" ரெஜிதா அவரை சமீபித்து – அவர் தோள்மேல் கையை வைத்தாள். "அது என்ன ப்ராஜெக்ட்கிறதை என்கிட்ட கூட சொல்லக் கூடாதா...?"
 "சொல்றேன்... ஃபினிஷிங் ஸ்டேஜ் வரட்டும்..."
 "இதையேதான் மூணுமாசமா சொல்லிட்டிருக்கீங்க... நான் உங்க மனைவி. எதிரி இல்லை. என்கிட்ட கூட சொல்லக் கூடாதா...?""நீயும் கம்ப்யூட்டரிங் சயின்ஸ் படிச்சவதானே?"
 "ஆமா..."
 "என்னவாயிருக்கும்ன்னு நீயே 'கெஸ்' பண்ணு பார்க்கலாம்..."
 "நான் ஏற்கெனவே கெஸ் பண்ணி வெச்சிருக்கேன்."
 "சொல்லேன் பார்க்கலாம்..."
 "மைக்ரோ ப்ராஸஸர் பேஸ்டு அன்இன்ட்ரப்டடட் பவர் சப்ளை யூனிட்தானே...?"
 மெஹ்ரா சிரித்தார்.
 "அதெல்லாம் பிஸ்தா... ப்ராஜெக்ட்ல நான் இமய மலையை நினைச்சிட்டிருக்கும் போது... நீ பரங்கிமலையைப் பத்தி பேசிட்டிருக்கே..."
 ரெஜிதா குனிந்து - அவர் கன்னத்தில் மெல்ல முத்தமிட்டாள். "இன்னிக்கு நான் உங்களை விடப் போறதில்லை. அந்த ப்ராஜெக்ட் என்னங்கிறதை நீங்க சொல்லித்தான் ஆகணும்..."
 "கொஞ்சம் பொறு..."
 "பொறுக்க மாட்டேன்..."
 "அது ரகசிய ப்ராஜெக்ட்"
 "நான் உங்க ஒய்ப்..."
 "என்னோட அஸிஸ்டெண்ட் ராஜ்க்கு கூட நன் சொல்லலை..."
 "நானும் உங்க அஸிஸ்டெண்ட்டும் ஒண்ணா...?" சொன்னவள் மெஹ்ராவின் முகத்தை இரண்டு கைகளால் ஏந்தி நிமிர்த்தி அவர் அணிந்திருந்த கண்ணாடியைக் கழற்றிவிட்டு நெற்றியிலும் உதட்டிலும் தன் ஈரமான ஸ்பான்ஞ் உதடுகளை ஒற்றினாள்.
 மெஹ்ராவின் உடம்பில் நெருப்பு பற்றிக் கொண்டது.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 8, 2023
ISBN9798223510192
11 மணி 59 நிமிஷம் 59 வினாடிகள்

Read more from Rajeshkumar

Related to 11 மணி 59 நிமிஷம் 59 வினாடிகள்

Related ebooks

Related categories

Reviews for 11 மணி 59 நிமிஷம் 59 வினாடிகள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    11 மணி 59 நிமிஷம் 59 வினாடிகள் - Rajeshkumar

    1

    கண்ணே! உன் கரம் என் மீது

    பட்டதும்

    என் சர்க்யூட்களிளிலெல்லாம்

    சந்தோஷ ரதங்களின் ஓட்டம்

    மதி...

    எனக்கு சூடாக டீ வேணும்...

    என்ன ராஜ் இது? அரை மணி நேரத்துக்கு முன்னாடி தானே டீ போட்டுக் குடுத்தேன்?

    அது பத்து நிமிஷத்திலேயே ஆவியா போயிடுச்சு...

    இப்படி டீ குடிக்கிறது தப்பு...! இதே ரீதியில் நீங்க டீ குடிச்சிட்டிருந்தா... உடம்புல ரத்தத்துக்குப் பதிலா டீ தான் ஓடும்...

    நீ என்ன சொன்னாலும் சரி... எனக்கு இப்போ டீ வேணும், டீ உள்ளே போனாத்தான் இந்த சர்க்யூட்டை சிக்கல் இல்லாமல் ஃபினிஷ் பண்ண முடியும்...

    சரி தர்றேன்... புலம்பாதீங்க... சொன்ன மதி கம்ப்யூட்டர் சங்கதிகள் நிறைந்த - அந்த ஏ.ஸி. அறையின் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு வெளிப்பட்டாள். அப்படி வெளிப்பட்ட மதி தொள தொளப்பான ஒரு ஜெர்ஸி பனியனையும், சற்றே இறுக்கமான ஸ்டோன்வாஷ் பேண்ட்டையும் தரித்திருந்தாள். நீள் வட்ட முகம். புருவம் மழித்த இடத்தில் - வளையல் துண்டுகளாய் - ஐப்ரோ நீற்றல்கள். சதைப் பிடிப்பான சின்ன உதடுகளில் உறுத்தாத லிப்ஸ்டிக் பூச்சு. கழுத்தில் மெலிதாய் புரளும் ஒரு தங்கச் சங்கிலி. ஷாம்பூ அலசின கூந்தலைக் கொத்தாக உயர்த்திப்போட்டு - அதை ஒரு ரப்பர் பேண்டால் சிறைப்படுத்தியிருந்தாள். உடம்பின் எல்லா பாகங்களிலும் சந்தன நிறம் தெரிந்தது. பேரழகி என்று துணிந்து சொல்லலாம். தப்பில்லை.

    இவளுக்கு உத்யோகம் எல்லோரா எக்யூப்மெண்ட்ஸில் - டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட். உதவி மேனேஜர் இவளிடம் அதிகம் வழிவான். ஏ.ஸி. அறையில் ஒரு தடவை சூடாக அறைந்தது பரம ரகசியம். கம்பெனியில் யார்க்கும் தெரியாது. ரொம்ப நாட்களாய் - ஆண்களை - வெறுத்துக் கொண்டிருந்தவள். கடைசியில் ‘ராஜ்’ என்கிற அழகான இளைஞனைக் காதலிக்க ஆரம்பித்திக்கிறாள்.

    ராஜ்?

    முழுப் பெயர்?

    ராஜ் தான். உடன் எந்த ஒட்டுப் பெயரும் இல்லை. கெட்டிக்காரன். முக்கிய அந்தஸ்து: எலக்ட்ரானிக் என்ஜினியரின் அஸிஸ்டெண்ட். தொண்ணூற்றி ஆறில் எம்.ஈ. எலக்ட்ரானிக்ஸ் முடித்து விட்டு - ஒரு அரசாங்க இண்டர்வ்யூவை அட்டெண்ட் பண்ணப் போன போது - இண்டர்வ்யூ கண்டக்டிங் குழுவில் மெஹ்ராவும் ஒருவர். ராஜை இண்டர்வ்யூ பண்ணும்போதே அவன் சரக்குள்ளவன் என்பதைப் புரிந்து கொண்டார் மெஹ்ரா. தன் பர்சனல் லெபாரட்டரியில் - துவங்கியிருக்கும் ஒரு புதிய ப்ராஜக்ட்க்கு - ‘ராஜ்’ மாதிரி ஒரு அஸிஸ்ட்டண்ட் தேவை என்பதைப் புரிந்து கொண்டவர். இண்டர்வ்யூ செலக்ஷனில் அவனை நிராகரித்து விட்டு - சாயந்தரமாய் அவன் வீட்டுக்குப்போய் - தனக்கு அஸிஸ்டண்ட்டாய் வர சம்மதமா என்று கேட்டு லேப்புக்குக் கூட்டிக் கொண்டு வந்தார். ஆரோக்கியமான நாலு இலக்க சம்பளம் கொடுத்தார். சர்க்யூட் பார்மிங் ஒர்க்ஸ் மட்டும் பார்த்தால் போதுமென்று சொல்லி - கேட்கும் போதெல்லாம் லீவு கொடுத்தார். லேப்பில் வேலை இல்லாத போது - மார்க்கெட்டில் கிடைக்காத - எலக்ட்ரானிக் உதிரி பாகங்களுக்காக எல்லோரா எக்யூப்மெண்ட்ஸுக்குப் போவான். அப்போது தான் மதி அறிமுகமானாள். ‘இவளைக் காதலிக்கலாம் போல் தோன்றுகிறதே’ என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே - மதி அவனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள் இவன் பார்க்கிற சமயமாய் பார்த்து - கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் ‘ஐ லவ் யூ...’ என்று எழுதிக் காட்டினாள். அந்த நிமிஷத்திலிருந்து இருவரும் அதி தீவிரமாய் காதலிக்க ஆரம்பித்து - இப்போது களைத்து போய் கல்யாணம் பண்ணிக்கொள்ளலாமா என்கிற யோசனையில் இருக்கிறார்கள்.

    டீ... ரெடி...

    மதியின் குரல் கேட்டு - சர்க்யூட்டில் கவனமாயிருந்தவன் நிமிர்ந்தான்.

    ஆஹ்ஹா... தாங்க்ஸ். உடம்பு பூராவும் மலர்ந்து கொண்டே... கப் அண்ட் சாஸரை வாங்கினான் ராஜ். டீயின் மணம் நாசிக்குள் கிரஹப்பிரவேசம் செய்தது. என்ன மணம்... என்ன மணம்...?

    சூடாய் இருந்த டீயை செல்லமாய் உறிஞ்சினான்.

    ராஜ்...

    இது என்ன சர்க்யூட்...?

    மெஹ்ராவைத்தான் கேட்கணும்...

    ஏன் உங்களுக்குத் தெரியாதா...?

    தெரியாது... ரெண்டு வருஷமா அவர்க்கு அஸிஸ்டென்ஸ் குடுத்திட்டிருக்கேன்... ஆனா... அவர் என்ன ப்ராஜக்ட்ல இறங்கியிருக்கார்ன்னு எனக்கே இன்னும் பிடிபடலை.

    வெளியே சொன்னா யாரும் நம்பமாட்டாங்க...

    அப்பட்டமான நிஜம் மதி... இந்த... ரெண்டு வருஷத்துல ஏறக்குறைய பத்தாயிரம் சர்க்யூட்களுக்கும் மேலே... நான் ஃபார்ம் பண்ணியிருக்கேன். எல்லாமே மெஹ்ராவோட இன்ஸ்ட்ரக்ஷன்படி தான். அந்த சர்க்யூட்டுகளை அவர் என்ன காரியத்துக்காக உபயோகப்படுத்தப் போறார்ன்னு எனக்குப் புரியலை... தெரியலை...

    உங்க எலக்ட்ரானிக்ஸ் அறிவுக்கு கொஞ்சம் கூடவா புரியலை?

    ஊ... ஹு... ம்! எல்லாமே ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமில்லாத துண்டு துண்டான சர்க்யூட்ஸ். அந்த துண்டு சர்க்யூட்களை வெச்சிகிட்டு... ஒரே யூனிட்ல அஸெம்பிள் பண்ணப் போறாரா...? இல்லை வேற, ஏதாவது ப்ரோக்ராம் சார்ட்டுக்கு உபயோகப்படுத்திக்கப் போறாரா...? இதெல்லாம் கேள்விக் குறி சமாச்சாரங்கள்.

    விசித்திரம்...

    என்ன விசித்திரம்?

    சர்க்யூட்ஸ் ஃபார்ம் பண்ணினது நீங்கதானே?

    நானேதான்...

    ராஜ் புன்னகைத்தான். டீயை ஒரே மூச்சில்

    Enjoying the preview?
    Page 1 of 1