Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Medhuvaga Sellum Ambulancegal
Medhuvaga Sellum Ambulancegal
Medhuvaga Sellum Ambulancegal
Ebook134 pages51 minutes

Medhuvaga Sellum Ambulancegal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

என்னுடைய 9-வது சிறுகதைத் தொகுப்பான “மெதுவாகச் செல்லும் ஆம்புலன்ஸுகள்” தொகுப்பில், குடும்பக் கதை, சமூகக் கதை, காதல் கதை, என்று பல்வேறு வகைக் கதைகள் இத்தொகுப்பில் இருந்த போதும் “மெதுவாகச் செல்லும் ஆம்புலன்ஸுகள்” என்னும் சமூகக் கதையின் பெயரையே தொகுப்பிற்கு வைக்கப்பட்டதன் காரணம், சமீபத்தில் நிகழ்ந்து விட்ட ஒரு சோகமான... கோரமான ரயில் விபத்தை மையப்படுத்தி, அதன் காரணமாய் வெளிப்படும் மனித நேயத்தை இக்கதையின் மூலமாகக் கூறியுள்ளேன். இப்பூவுலகின் ஒவ்வொரு அசைவும் அவனாலேயே நிகழ்த்தப்படுகின்றது என்பதை எல்லோரும் உணர முடியும் விதமாய் ஒரு நன்னெறியை எடுத்துரைத்துள்ளேன். “உடன்பட்டுக் கடன் பட்டு” கதையில் ஒரு குடும்பத்தலைவனின் கையறு நிலையையும், அவன் தன் குடும்பத்திற்காக ஏற்றுக் கொள்ளும் வேதனைகளையும் விவரித்துள்ளேன்.

ஒரு சிறுகதைத் தொகுப்பில் இடம் பெறும் கதைகள் எல்லாவற்றிலும் ஏதேனும் ஒரு கருத்தோ, படிப்பினையோ எடுத்துரைக்கப்படுமானால் அத்தொகுப்பு முழுமையான வரவேற்பை நிச்சயம் பெறும். அதே நேரம் அவ்வாறு எடுத்துரைக்கப்படும் கருத்து பூடகமாகவோ, கடின வார்த்தைகள் மூலமாகவோ, எடுத்துரைக்கப்படும் போது அவை பாமர மக்களைச் சென்றடைவதில் சிறு தள்ளாட்டம் ஏற்படுவதுண்டு. அதை தவிர்க்கும் எண்ணத்திலேயே இத்தொகுப்பின் எல்லாக் கதைகளும் சாதாரண வழக்கு மொழியிலேயே புனையப்பட்டுள்ளன.

மாற்றுத் திறனாளிகளின் இன்னொரு பரிமாணத்தை, “சூப்பையன்” என்னும் கதை மூலமாகவும், ஊதிய உயர்வுக்காகவோ அல்லது பதவி உயர்வுக்காகவே தன் மேனேஜருக்கு அவல ஊழியங்களைச் செய்யும் பணியாளரின் நிலையை “வெங்கி விஜயம்” என்னும் கதையின் வாயிலாக கூறியுள்ளேன்.

நிதானமாய் வாசியுங்கள். நிச்சயம் நெகிழ்வூட்டும்.

Languageதமிழ்
Release dateDec 11, 2023
ISBN6580130010281
Medhuvaga Sellum Ambulancegal

Read more from Mukil Dinakaran

Related to Medhuvaga Sellum Ambulancegal

Related ebooks

Related categories

Reviews for Medhuvaga Sellum Ambulancegal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Medhuvaga Sellum Ambulancegal - Mukil Dinakaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மெதுவாகச் செல்லும் ஆம்புலன்ஸ்கள்

    (சிறுகதைகள்)

    Medhuvaga Sellum Ambulancegal

    (Sirukadhaigal)

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    பொருளடக்கம்

    என்னுரை

    மெதுவாகச் செல்லும் ஆம்புலன்ஸ்கள்

    சாயம் போன பட்டாம்பூச்சிகள்

    ஓடம் ஒரு நாள் வண்டியில்

    காக்கா கூட்டத்தை பாருங்க!

    மறைக்கப்பட்ட நிஜங்கள்

    சுயமா சிந்திக்கணும் சுரேஷு

    உடன் பட்டுக் கடன் பட்டு

    அதெல்லாம் வயசுக் கோளாறு

    பேச மறந்த ஊமைகள்

    உறவுச் சங்கிலி

    சந்தேகப் பிராணிகள்

    பிராயச்சித்தம்

    பாசக்காரப் பயலுவ...!

    அமைதியும் மொழியாகும்

    நிறம் மாறும் நிஜங்கள்

    எனக்கு தண்டனை வேணும்

    வெங்கி விஜயம்

    தழும்பு

    சூப்பையன்

    என்னுரை

    இணைய தளத்தில் வெளியாகும் என்னுடைய 9-வது சிறுகதைத் தொகுப்பு மெதுவாகச் செல்லும் ஆம்புலன்ஸுகள். குடும்பக் கதை, சமூகக் கதை, காதல் கதை, என்று பல்வேறு வகை கதைகள் இத்தொகுப்பில் இருந்த போதும் மெதுவாகச் செல்லும் ஆம்புலன்ஸுகள் என்னும் சமூகக் கதையின் பெயரையே தொகுப்பிற்கு வைக்கப்பட்டதன் காரணம், சமீபத்தில் நிகழ்ந்து விட்ட ஒரு சோகமான... கோரமான ரயில் விபத்தை மையப்படுத்தி, அதன் காரணமாய் வெளிப்படும் மனித நேயத்தை இக்கதையின் மூலமாகக் கூறியுள்ளேன். இப்பூவுலகின் ஒவ்வொரு அசைவும் அவனாலேயே நிகழ்த்தப்படுகின்றது என்பதை எல்லோரும் உணர முடியும் விதமாய் ஒரு நன்னெறியை எடுத்துரைத்துள்ளேன்.உடன்பட்டுக் கடன் பட்டு கதையில் ஒரு குடும்பத்தலைவனின் கையறு நிலையையும், அவன் தன் குடும்பத்திற்காக ஏற்றுக் கொள்ளும் வேதனைகளையும் விவரித்துள்ளேன்.

    ஒரு சிறுகதைத் தொகுப்பில் இடம் பெறும் கதைகள் எல்லாவற்றிலும் ஏதேனும் ஒரு கருத்தோ, படிப்பினையோ எடுத்துரைக்கப்படுமானால் அத்தொகுப்பு முழுமையான வரவேற்பை நிச்சயம் பெறும். அதே நேரம் அவ்வாறு எடுத்துரைக்கப்படும் கருத்து பூடகமாகவோ, கடின வார்த்தைகள் மூலமாகவோ, எடுத்துரைக்கப்படும் போது அவை பாமர மக்களைச் சென்றடைவதில் சிறு தள்ளாட்டம் ஏற்படுவதுண்டு. அதை தவிர்க்கும் எண்ணத்திலேயே இத் தொகுப்பின் எல்லாக் கதைகளும் சாதாரண வழக்கு மொழியிலேயே புனையப்பட்டுள்ளன.

    மாற்றுத் திறனாளிகளின் இன்னொரு பரிமாணத்தை, சூப்பையன் என்னும் கதை மூலமாகவும், ஊதிய உயர்வுக்காகவோ அல்லது பதவி உயர்வுக்காகவே தன் மேனேஜருக்கு அவல ஊழியங்களைச் செய்யும் பணியாளரின் நிலையை வெங்கி விஜயம் என்னும் கதையின் வாயிலாக கூறியுள்ளேன்.

    நிதானமாய் வாசியுங்கள். நிச்சயம் நெகிழ்வூட்டும்.

    வணக்கம்.

    இவண்,

    முகில் தினகரன்

    கோயமுத்தூர்

    மெதுவாகச் செல்லும் ஆம்புலன்ஸ்கள்

    ஜூன் 2024.

    "கே.பி.எஸ். எஞ்சினீரிங் கல்லூரியில் காணுமிடமெல்லாம் பெற்றோர்களும், மாணவ மாணவிகளும், கையில் சில காகிதங்களைச் சுமந்து கொண்டு அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தனர்.

    ஏற்கனவே கவுன்சிலிங்கில் தேர்வானவர்கள் அதற்கான அத்தாட்சிக் காகிதத்துடன் அட்மிஷன் செய்யப்படும் இடத்தில் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

    சில சீனியர் மாணவர்கள் அந்தக் கூட்டத்திற்கு உதவி செய்யும் விதமாய் வெளியூர்க்காரர்களுக்கு அட்மிஷனுக்கு எங்கு செல்ல வேண்டும்...? ஹாஸ்டலில் சேருவதற்கு எங்கே செல்ல வேண்டும்...? கேண்டீனுக்கு எப்படி செல்ல வேண்டும்...? என்று வழிகாட்டிக் கொண்டிருந்தனர்.

    டேய் கதிர்... வர்ற இருபத்திநாலாம் தேதி தலைவர் ரஜினியோட சம்ஹாரன் படம் ரிலீஸாகப் போகுதுடா... ரசிகர் மன்ற டிக்கெட்டுக்கு இப்பவே சொல்லி வெச்சிடுடா... என்று ஒரு சீனியர் மாணவன் சொல்ல,

    மச்சா... அதெல்லாம் நாலு நாளைக்கு முன்னாடியே நான் சொல்லி வெச்சிட்டேன்...! போன வருஷம் அவரோட ஜெயிலர் வந்து சக்கை போடு போட்ட மாதிரி இந்த வருஷம் இந்த சம்ஹாரன் வந்து திரையுலகையே ஒரு ஆட்டு ஆட்டப் போகுது... பாரு! என்றான் இன்னொரு சீனியர் மாணவன்.

    கல்லூரி கேட்டின் முன் வந்து நின்ற டவுன் பஸ்ஸிலிருந்து, மகள் கவிதா உதவியுடன் இறங்கிய வேதாச்சலத்திற்கு, பின்னால் இறங்கிய யாரோ ஒருவர் அவருடைய நீண்ட ஊன்று கோலை எடுத்துத் தர, தேங்க் யூ என்றபடி வாங்கிக் கொண்டார்.

    அந்த ஊன்று கோலை வலது கக்கத்தில் வைத்துக் கொண்டு, அதையே இல்லாத வலது காலாய் உபயோகித்துக் கொண்டு, டக்கு... டக்கு என்று நடந்தார் வேதாச்சலம்.

    ஏம்மா கவிதா... கூட்டம் அதிகமாயிருக்கே... இங்கே உனக்கு அந்தக் கோர்ஸ் கிடைக்குமாம்மா? சந்தேகமாய்க் கேட்டார்.

    அப்பா... கவுன்சிலிங்ல நான் மூணு சாய்ஸ்க்குமே இந்த காலேஜ் பெயரைத்தான் குறிப்பிட்டிருந்தேன்...! கட்-ஆப் மார்க்குல ஜஸ்ட்.05% வித்தியாசத்துல எனக்கு இந்தக் காலேஜ் மிஸ்ஸாயிடுச்சு...! எப்படியும் யாராவது ஒருத்தர் விலகினா அடுத்ததா இருக்கற எனக்குத்தான் அந்த வாய்ப்பு வரும்...! அதை மட்டும் நம்பித்தான் இங்க வந்திருக்கேன்...! என்ற கவிதாவை அக்கல்லூரியின் சீனியர் மாணவரொருவர் அணுகி, அட்மிஷனா மேடம்? கேட்டான்.

    ம்ம்ம்... ஆமாம் என்றாள்.

    கவின்சிலிங்ல அட்மிஷன் ஓ.கே.பண்ணி லெட்டர் குடுத்திருப்பாங்களே... அதைக் கொண்டு வந்திருக்கீங்களா?

    உதட்டைப் பிதுக்கினாள் கவிதா.

    அடடே... அது இருந்தால்தானே அட்மிஷன் போடுவாங்க?

    இல்லை ப்ரோ... எனக்கு கவுன்சிலிங்ல ஓ.கே. ஆகலை...! வெறும் பாயிண்ட் ஃபைவ் வித்தியாசத்துல எனக்கு இந்தக் காலேஜ் கிடைக்கலை... வேற காலேஜ் குடுத்தாங்க... நான் இல்லை இதுதான் வேணும்ன்னு பிடிவாதமா இருந்தேன்...! கடைசில... யாராவது ஒருத்தர் அந்தக் கோர்ஸ் வேண்டாம்னு விலகினா உங்களுக்கு சான்ஸ் இருக்கு... போய்ப் பாருங்கன்னு சொன்னாங்க அதான் இங்க வந்திருக்கேன்" என்றாள்.

    அந்த சீனியர் மாணவர் யோசித்து விட்டு, என்ன கோர்ஸ் கேட்டிருந்தீங்க? கேட்டார்.

    ஏரோ நாடிகல்

    தலையை இட, வலமாய் ஆட்டிய மாணவர், இல்லை மேடம்... அந்தக் கோர்ஸுக்கு காம்படிஸன் அதிகம்... அதனால உங்களுக்கு வாய்ப்பு கம்மிதான்...! இருந்தாலும் டிரை பண்ணிவோம்... வாங்க சொல்லியவாறே அந்த மாணவர் முன் செல்ல, கவிதாவும், அவள் தந்தையும் பின் தொடர்ந்தனர்.

    வேக வேகமாகச் செல்லும் அந்த மாணவருடன் தன்னால் நடக்க முடியும், ஆனால் தன் தந்தை அந்த ஊன்று கோலுடன் நடக்க சிரமப்படுவதைப் புரிந்து கொண்ட கவிதா, எக்ஸ்க்யூஸ் மீ... கொஞ்சம் மெதுவா நடக்கலாமே... பாவம்... அப்பா ரொம்ப சிரமப்படறார் என்றாள்.

    ஓ... ஸாரி... என்ற இளைஞன் மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.

    அட்மிஷன் நடந்து கொண்டிருக்கும் அந்த ஏரியாவிற்குச் சென்றதும் அந்த மாணவன் ஒவ்வொரு அறைக்கும் சென்று, அங்கு என்ன கோர்ஸுக்கான அட்மிஷன் நடைபெறுகிறது, என்பதை விசாரித்தான்.

    மேடம்... இதோ இந்த ரூமில்தான் ஏரோ நாடிகல் அட்மிஷன் போயிட்டிருக்கு என்றபடி உள்ளே எட்டிப் பார்த்தவன், நிறைய பேர் வெய்ட் பண்ணிட்டிருக்காங்க... நீங்களும் போய் உட்கார்ந்து வெய்ட் பண்ணுங்க... உங்க முறை வந்ததும் போய்க் கேட்டுப் பாருங்க...! அவங்க என்ன சொல்றாங்களோ... அதன்படி செய்யுங்க" என்றான்.

    ரொம்பத் தேங்க்ஸ்ங்க

    இட்ஸ் ஓ.கே. அவன் சென்றதும் உள்ளே சென்று வரிசையில் கடைசியாக அமர்ந்தாள் கவிதா. கக்கத்தில் இருந்த ஊன்றுகோலை பக்கத்துச் சுவற்றில் சாய்த்து வைத்து விட்டு, தானும் அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டார் வேதாச்சலம்.

    வரிசையாக பெயர் அழைக்கப்பட, ஒவ்வொருவராக உள்ளே சென்று விட்டு, மலர்ந்த முகத்துடன் வெளியேறிக் கொண்டிருந்தனர்.

    கவிதாவின் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாய்க் கரையத் துவங்கியது.

    யார்தான் ஏரோநாடிகல் கோர்ஸை விட்டுத் தருவார்கள்...? ப்ச்... நான்தானாக்கட்டும் கட்-ஆப் மார்க்குல ஒரு.05% கூடுதலா எடுத்திருக்கக் கூடாதா? தன்னைத் தானே நொந்து கொண்டாள்.

    தன் அருகே அமர்ந்திருந்த பெண் தோற்றத்திலேயே பணக்கார யுவதியாயிருந்தாள். அவள் உடையலங்காரமும், அவள் மீதிருந்து வீசும் பர்ஃப்யூம் வாசனையும், அங்கிருந்தோர் அனைவரையும் கட்டியிழுத்தது.

    இவளுக்கெல்லாம்... என்ன கேடு...? பார்த்தா கொழுத்த பணக்காரி மாதிரி இருக்கா...? மேனேஜ்மெண்ட் கோட்டாவுல பணத்தைக் குடுத்து அட்மிஷன் வாங்கிட்டுப் போக வேண்டியதுதானே...? அதை விட்டுட்டு கவுன்சிலிங்கில் வந்து என்னை மாதிரி ஏழை மாணவிங்க வயித்திலடிக்கணுமா...? சனியன்

    Enjoying the preview?
    Page 1 of 1