Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vangala Viriguda Ennum Asuran
Vangala Viriguda Ennum Asuran
Vangala Viriguda Ennum Asuran
Ebook49 pages16 minutes

Vangala Viriguda Ennum Asuran

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மெரினா என்றதும் நம் மனதில் உற்சாகம் பொங்குகிறது. பீச்சுக்கு போய் அலைகளை பார்த்துக் கொண்டு அப்படியே இருந்துவிடலாம். போன்ற எண்ணம்.

உங்களுக்கு தெரியுமா! எட்டாம் நூற்றாண்டில் மெரினா பேச் கிடையாது. கடல் அலைகள் மோதும் இடத்தில இருந்த ஆலயங்கள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் மற்றும், மயிலை கபாலீஸ்வரர் கோவில். கரடுமுரடாக பாறைகள் மட்டுமே இருந்த கறைகள். நிறைய மரங்கள், வந்துதித்த வெண்திரைகள், செம்பவள வெண்முத்தம் அந்தி விளக்கும், மணிவிளக்காம் - என்று சூரிய அஸ்தமன திருவல்லிகேணியை பேயாழ்வார் பாடி இருக்கிறார்.

பதினாறாம் நூற்றாண்டில் தான் முதன்முதலாக கடற்கரையை உருவாக்கும் திட்டம் ஏற்பட்டது. மணற்பரப்பு அப்போது இல்லை. செயின்ட் கீர்ஜ் கோட்டையே 1640 ல் தான் கட்டப்பட்டது என்கிற போது, சிறிய மீன்பிடி துறையாக இருந்த சென்னை துறைமுகம் 1870 ல் தான் கட்டப்பட்டபோது என்கிறபோது, மெரினா எப்போது உருவாகி இருக்கும். ஹார்பர் உருவானபோதுதான் ஒரு கடற்கரையை உருவாக்கினால் என்ன என்று யோசனை தூண்டியது.

ஹார்பர் கட்டுவதற்காக கொண்டு வந்த மண்ணை கொண்டு, கடாரகரையும் உருவாக்கப்பட்டது. அதன்மூலம் நிலப்பரப்புக்கு, காலுக்கும் இடையே பெரிய இடைவெளி உருவாக்கப்பட்டது. இந்த அப்பணியை செய்தவர் சர் மவுண்ட் ஸ்டூவர்ட் எலிபின்ஸ்டன் (இவர் பெயரில்தான் மவுண்ட் ரோடு எல்பின்ஸ்டன், தியேட்டர், அண்ணா சிலை எதிரே இயங்கியது. துறைமுகத்தை கட்டுவதற்காக, 1870 ல் சென்னை வந்த எல்பின்ஸ்டன் கடற்கரை அழகில் மயங்கினார். 1881 ல் மீண்டும் சென்னையின் கவர்னர் ஜெனரலாக இலண்டனில் இருந்து வந்தபோது, சென்னை மெரினா கடற்கரை மண் பரப்பை உருவாக்கினார்.

அதற்கு என்ன பெயர் வைப்பது என்று யோசித்து, இத்தாலிய, ஸ்பானிஷ் மற்றும் போர்ச்சுகல் மொழிக்கு பொதுவான மெரினா என்கிற பெயரை தேர்ந்தெடுத்தார். இத்தாலிய மற்றும் போர்ச்சுகீய மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில், மெரினா என்னும் சொல்லுக்கு ஹார்பர் அல்லது படகுகளும், ஓடங்களும் நிறைந்த ஒரு துறைமுகம் என்று பொருள்.

உலகத்திலேயே இரண்டாவது பெரிய கடற்கரையாக திகழ்கிறது மெரினா பீச்.

தமிழகத்தின் அணிகலன்களில் தலையாம் சென்னையில் ஜொலிக்கும் வைரக்கல் மெரினா பீச். கடற்கரையின் முழு ஹீரோ நமது வங்காள விரிகுடா என்னும் பெ ஆப் பெங்கால் தான். நமது கண்ணுக்கு, ரம்யமாக, மனதுக்கு இதத்தை தரும், மாலை வேளைகளில் நமது உற்ற துணைவனாக விளங்கும், வங்காள விரிகுடாவின் உண்மை முகம் தெரியுமா?

பார்க்கத்தான் சாது ! கோபம் வந்தால் காடு கொள்ளாது! 2004 சுனாமியின் போது அதன் கோபத்தை, வெறியாட்டத்தை பார்த்தோம். அதற்கு முன்பாக கூட பல சமயங்களில் வங்காள விரிகுடாவுக்கு கோபம் வந்திருக்கிறது.

ஒரு சமயம், ஒரே சமயத்தில், இரண்டு புயல்கள் சென்னையை தாக்கின. அப்போது வங்காள விரிகுடாவின் கோபம் எல்லை மீறியது.

வாருங்களேன் ! நமது வங்காள விரிகுடாவை கோபதாபங்களை பற்றி தெரிந்து கொள்வோம்!

முகநூல் தொடராக வந்த எனது தொடரை நூலாக வெளியிடும் புஸ்தகாவுக்கு எனது நன்றிகள். வாசகர்களுக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள்!

Languageதமிழ்
Release dateDec 11, 2023
ISBN6580132110521
Vangala Viriguda Ennum Asuran

Read more from Kalachakram Narasimha

Related to Vangala Viriguda Ennum Asuran

Related ebooks

Related categories

Reviews for Vangala Viriguda Ennum Asuran

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vangala Viriguda Ennum Asuran - Kalachakram Narasimha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வங்காள விரிகுடா என்னும் அசுரன்

    Vangala Viriguda Ennum Asuran

    Author:

    காலச்சக்கரம் நரசிம்மா

    Kalachakram Narasimha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalachakram-narasimha

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    1

    இது நவம்பர் மாதம். வட கிழக்கு பருவ மழை சூடு பிடித்து விட்டது.

    வடகிழக்கு பருவம், மெரினா, மற்றும் நவம்பர் மாதம் மூன்றும் இணைந்தாலே, Bay of Bengal எனப்படும் வங்காள விரிகுடாவுக்கு கொண்டாட்டம்தான்.

    மற்ற மாதங்களில் எல்லாம், அமைதியாக நீல நிற சேலையை கட்டிக்கொண்டு, மணப்பெண் போல, தலை குனிந்து அமர்ந்திருக்கும், வங்காள விரிகுடா கடல், நவம்பர் வந்தால், சொர்ணாக்காவாக மாறிவிடும்.

    நேற்று திலகர் திடலை பற்றி பதிவிட்டு இருந்தேன். பொதுவாக மெரினா என்றாலே, மனதில் ஒரு வித குதூகலமும், உற்சாகமும் பிறக்கும்.

    திருவான்மியூரில் இருந்து எனது இந்து ஆபிசுக்கு போக வேண்டும் என்றாலும், ட்ரைவர் ராயப்பேட்டை வழியாக செல்ல முற்படும்போது, வேண்டாம், மெரினா வழியாக போங்க" - என்று உறுதியாக சொல்லிவிடுவேன். நான் பிறந்ததே, திருவல்லிக்கேணி என்பதால், மெரினா மீது அவ்வளவு மோகம்.

    கடல் மீது எவ்வளவு மோகம் என்றால், நான் பிறந்தது முதல் கடற்கரையோரம்தான் வசித்து வருகிறேன். திருவல்லிக்கேணியில் முப்பத்தைந்து வருடங்கள், மயிலையில் ஐந்து வருடங்கள், பெசன்ட் நகரில் ஐந்து வருடங்கள், இப்போது திருவான்மியூரில் 15 வருடங்கள் என்று கடற்கரையோரமாவே வாழ்ந்து வருகிறேன்.

    பொதுவாக, கடலை பார்க்கும் போதே பிரமிப்பாக இருக்கும். சிறு வயதில் நினைத்து கொள்வேன்.

    இந்தியாவின் மூன்று பக்கமும் கடல் இருக்கிறதே. (அதனால்தான் நமது தென் பகுதி பெயர் கரை நாடு. அதுவே கர்னாட் என்று வெள்ளைக்காரன் சொல்லி கர்னாடிக் என்று மாறியது.)

    இந்த கடலுக்கு கோபம் வந்தால்,?--- என்று சிறு வயதில் பீச்சுக்கு போகும் போதெல்லாம் எனக்குள் கேட்பேன்.

    வீடு கடற்கரையின் அருகில் இருந்ததால், சில சமயம் பொங்கும், கடலோசை கூட மொட்டை மாடியில் கேட்கும்.

    அப்போது எனது பாட்டனார் இருந்தார், கடலை பற்றி நிறைய கதைகள் கேட்பேன்.

    டைட்டானிக் விபத்து 1912 ல் நடந்த போது, எனக்கு ஒன்பது வயசு தெரியுமா. என்னோட அப்பா கதை சொல்லியிருக்கார் என்று தாத்தா டைட்டானிக் விபத்து பற்றி சொல்லுவார்.

    1964 டிசம்பரில் வீசிய புயலில், பாம்பன்

    Enjoying the preview?
    Page 1 of 1