Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா
Ebook100 pages36 minutes

மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜோசியரைப் பார்த்து தேதியைக் குறித்துக் கொண்ட பின் வினோத்தும், அம்மா கமலாவும் வீடு திரும்பியிருக்க-
 அக்கா மாலினியும், அத்தான் பரசுவும் வினோத் வீட்டில் காத்திருந்தார்கள்.
 "நீங்க வந்ததும், நாங்க புறப்படலாம்னு இருக்கோம்மா!"
 "இருடி மாலினி! நாளைக்குப் போகலாம்!"
 இருவரும் உள்ளூர்தான். கல்யாணமாகி ஆறு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை.
 "ஆமாம்கா! அங்கே போய் என்ன செய்யப் போறே? காலையில குளிச்சு, டிபன் சாப்டுட்டுப் போகலாம். அது சரி! துளசி பற்றி உன்னோட அபிப்ராயம் எதையும் நீ சொல்லலியே?"
 மாலினி பேசவில்லை!
 "உன்னைத்தாண்டி கேக்கறான்!"
 "அந்தப் பெண்ணை எனக்கும், இவருக்கும் சுத்தமா பிடிக்கலை"
 வினோத் படக்கென திரும்பினான்.
 "ஏண்டீ அப்படி சொல்ற? அவ அழகாத்தானே இருக்கா! நல்ல படிப்பு. கைநிறைய சம்பாதிக்கறா! எல்லாம் தெரிஞ்சிருக்கு! பிடிக்காத அளவுக்கு அவகிட்ட எதுவும் தப்பா இல்லையே?"
 "விடும்மா! கட்டிக்கப் போறவன் அவன். வாழப் போறது அவன்கூட! இதுல நாங்க யாரு?"
 "ஏன்கா இப்படி பேசற? உன் அபிப்ராயம் யாருக்கு வேணும்னு கேட்டிருந்தா, நீ இப்படி பேசலாம்.இந்த வீட்ல நீயும் ஒருத்தி! அப்புறம் என்ன?

அம்மா அருகில் வந்தாள்.
 "என்னம்மா மாலினி? சொல்லு!"
 "அம்மா! அந்தப் பொண்ணுக்கு திமிரும், கர்வமும் தூக்கலாத் தெரியுது! அவ ட்ரஸ், பேசற முறை எல்லாமே அகங்காரமா தெரியுது! அவ வினோத்தைத் தவிர இந்த வீட்ல யாரையும் மதிக்க மாட்டானு எனக்குத் தோணுது!"
 "ஏன்? அவ உங்கிட்ட பேசலைனு இப்பிடி சொல்றியா?"
 "அதுவும்தான். என்னை சுத்தமா அவ கண்டுக்கவே இல்லை. நானும் இந்த வீட்டுப் பெண்தானே? உனக்கு பிறகு எனக்கு பிறந்த வீட்டுக் கதவை சாத்தற மாதிரி ஒரு தம்பி பொண்டாட்டி வந்துட்டா, நான் எங்கேம்மா போவேன்?"
 மாலினி அழத் தொடங்கி விட்டாள்.
 பரசு குறுக்கிட்டான்.
 "இதப்பாரு! வினோத் தேதி கூட குறிச்சிட்டான். என்ன அர்த்தம்? அவனுக்கு துளசியை ரொம்பப் புடிச்சிருக்குனு அர்த்தம். நீ அதைத் தடுத்தா, அவனுக்கு எரிச்சல் வரும். நீ நினைக்கற மாதிரி ஒருத்தி வந்து கதவைச் சாத்திட்டா கவலைப்படாதே. உனக்கு நான் இல்லையா?"
 சமாதானம் சொல்வதைப் போல அத்தான் அவளை உசுப்பிவிட-
 மாலினி அழுகை அதிகமாக,
 வினோத் உள்ளே வந்து விட்டான்.
 மாலினி பொறாமை பிடித்தவள். அவளை எந்த நேரமும் கொஞ்சிக் கொண்டிருக்க வேண்டும். அவளும், அவள் புருஷனும்தான் தேவ தூதர்கள் என பேச வேண்டும். அவளைக் கேட்காமல் எதுவும் செய்யக்கூடாது!
 இது அம்மாவுக்கும் தெரியும்.
 ஆனால் மகளை விட்டுத் தர முடியாது!
 இங்கு பல அம்மாக்கள் அழிவதே மகளை அளவுக்கு மீறி ஆதரிப்பதால் தானேபாத்தியா? அவன் எதுவும் பேசாம உள்ள போறான். இப்பவே உன் பிள்ள விழுந்தாச்சு. அவ கழுத்துல ஒரு தாலியைக் கட்டிட்டா, உன்னைக் கழட்டி விட்ருவான். உன்னை நெனச்சாத்தான் எனக்குப் பாவமா இருக்கம்மா!"
 "அப்படி அத்தையை விட்ருவோமா? நம்ம கூட வந்து இருப்பாங்க அத்தை!" - பரசு!
 "அதெப்படி முடியும்? என் தம்பி மேல அம்மாவுக்கு உசிரு! அது மட்டுமில்லை. பிள்ளையை விட்டுட்டு பெண் வீட்ல வந்து தங்கினா அவங்களுக்கு அகௌரவம்!"
 அம்மா வந்து விடுவாளோ என்ற பயத்தை வெளிப்படுத்தி விட்டாள் மாலினி!
 அம்மா எதுவும் பேசவில்லை!
 "அத்தையை நீ குழப்பாதே! நேரமாச்சு. போய்ப் படுக்கலாம்.
 காலைல பேசிக்கலாம்!"
 அம்மா கமலா உள்ளே வர, வினோத் கண் மூடிப் படுத்திருந்தான்.
 அம்மா கதவைச் சாத்தி விட்டு கட்டிலில் வந்து உட்கார்ந்தாள்!

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 9, 2023
ISBN9798223012771
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா

Read more from Devibala

Related to மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா

Related ebooks

Related categories

Reviews for மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா - Devibala

    1

    "பையன் எம்.டெக். படிச்சிருக்கான். எம்.பி.ஏ. முடிச்சிருக்கான். பெரிய கம்பெனியில வேலை. மாதச் சம்பளம் இங்கியே ரெண்டு லட்சம். ஒரு தடவை வெளிநாடு போயிட்டு வந்தா, லட்சக் கணக்கா அள்ளிட்டு வர்றான். திருவான்மியூர்ல சொந்த வீடு. வெளிநாட்டுக் கார்! அப்பா, உயிரோட இல்லை. அம்மாவும், கல்யாணம் ஆன ஒரு அக்காவும்தான்! உங்க பொண்ணு ராஜாத்தி மாதிரி இருக்கலாம்!"

    தரகர் அடுக்கிக் கொண்டே போனார்.

    அப்பா, அம்மா இருவருக்கும் மகிழ்ச்சி.

    பையன் பேரு வினோத். பார்க்க லட்சணமா இருப்பான். எதிர் பாக்கறது படிச்ச பொண்ணை; நல்ல குடும்பத்தை.

    எங்க துளசியும் பி.டெக் படிச்சிருக்காளே! அவளும் கிட்டத்தட்ட அம்பதாயிரம் சம்பாதிக்கிறா. அழகான பொண்ணு. ஒரே பொண்ணுங்கிற தால எல்லாம் சேர்த்து வச்சிருக்கோம். சீரும் சிறப்புமா செய்வோம். சரி! பெண் பார்க்க வரச் சொல்லிடுங்களேன்.

    அந்த நடைமுறை சம்பிரதாயங்கள் வேண்டாம்னு பையன் சொல்றான். ‘நெட்ல சாட் பண்ணி முதல்ல பேசிடறேன்! அப்புறமா நேர்ல சந்திக்கலாம்’னு சொல்றான்!

    துளசி வெளியே வந்தாள்.

    அவரோட ஈ.மெயில் ஐ.டி. இருக்கா?

    கொண்டு வந்திருக்கேன்மா. தரகர் எடுத்துக் கொடுத்தார்.

    இப்ப வீட்ல இருப்பாரா?

    இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமைதானே! இருப்பார்.

    இப்பவே பேசிடலாம்!

    துளசி அதை வாங்கிக் கொண்டு கம்ப்யூட்டர் முன் போய் உட்கார்ந்தாள்.

    இன்டர்நெட்டில் இணைப்பு தந்து, ‘நெட் மீட்டிங்’ முறையில் கம்ப்யூட்டரை இணைக்கத் தொடங்கினாள்.

    சில நிமிடங்களில் வினோத் திரையில் தெரிந்தான். அவன் வீடு தெரிந்தது. அம்மா இருந்தார்கள்.

    ஹாய்! நான் துளசி! தரகர் எல்லா விவரங்களையும் தந்தார். அதான் நெட்ல வந்துட்டேன்!

    வெரிகுட்! அம்மா! இப்படி வா!

    அம்மா வந்தார்கள்.

    அந்தப் பொண்ணு துளசி இவங்கதான்!

    நமஸ்காரம் ஆன்ட்டி! இது எங்க அப்பா, அம்மா!

    இருவரும் பரஸ்பரம் வணங்க, வினோத், துளசி சரளமாக பேசத் தொடங்கி விட்டார்கள்.

    அந்தப் பேச்சில் இரு குடும்பத்துக்கும் எல்லாரையும் பிடித்து விட்டது!

    அம்மா! எனக்கு துளசியை பிடிச்சிருக்கு! உனக்கு?

    வாழப்போறவன் நீதான். உன் திருப்திதான் எனக்கு முக்கியம்!

    துளசி! உங்க அபிப்ராயம் என்ன?

    வெளிப்படையாக கேட்டே விட்டான்!

    எனக்கு சம்மதம்! அப்பா, அம்மாவிடம் துளசி கேட்க, அவர்களும் தலையாட்ட,

    மற்ற சங்கதிகளை எப்பப் பேசறது வினோத்? துளசியின் அப்பா கேட்டார்!

    இனி பெரியவங்க நீங்க பேசிக்குங்க! எங்களுக்கு வேலை இல்லை.

    நாங்க ரெண்டு பேரும் வந்து உங்கம்மாவை பாக்கறோம்!

    ஒண்ணு செய்வோம். நல்ல ஒரு ஏஸி ரெஸ்ட்டாரெண்ட்ல டேபிள் புக் பண்ணுவோம். ஒரு நல்ல டின்னர் சாப்டுட்டு ஜாலியா எல்லாம் பேசி முடிவெடுப்போம். என்ன துளசி?

    குட் ஐடியா!

    நாளைக்கே புக் பண்ணிடவா?

    பண்ணிடுங்க!

    புக் பண்ணிட்டு நேரம், இடத்தை நான் சொல்றேன். நீங்க மூணு பேரும் வந்துடுங்க! நான் எங்கம்மா, அக்காவோடு அங்கே வந்துர்றேன்!

    இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    துளசியின் அப்பா, அம்மா உற்சாகமானார்கள்.

    எங்கும் போகாமல் கம்ப்யூட்டர் வந்த பிறகு வீட்டுக்குள் இருந்தபடியே ஒரு கல்யாணம் தீர்மானிக்கப்பட்டது.

    என்ன ஒரு விஞ்ஞான வளர்ச்சி!

    அரை மணி நேரத்தில் ஒரு பெரிய ஓட்டலைச் சொல்லி, நேரத்தையும் வினோத் கொடுத்து விட்டான்!

    துளசி! உனக்கு திருப்திதானே?

    பிடிச்சிருக்குப்பா! அவர் வெளிப்படையா இருக்கார். பாசாங்கு இல்லை. இந்தக் காலத்துல இதுதான் முக்கியம்!

    கோயில்ல வச்சு கல்யாணத்தை சிம்பிளா பண்ணுங்கனு சொல்லிடுவாரா? நீ எங்களுக்கு ஒரே மகள். நல்லா, பெரிசா செய்யணும்னு ஆசைப்படறோம்!

    அதையெல்லாம் பேசிக்கலாம்மா! அப்பா! நியாயமான விருப்பங்களை சொல்றதுல, தப்பில்லை. அவர் மாப்பிளையா பந்தா காட்டாம உங்களுக்கு பிள்ளையா இருக்கக் கூடியவரா இருந்தா மட்டுமே நீங்க ஒப்புக்கிட்டா போதும்! இது பழைய காலம் இல்லைப்பா. யாரும் யாருக்கும் பயப்பட வேண்டாம். ரெண்டு குடும்பம் நட்பால இணையனும். அப்பத்தான் உறவு என்னிக்கும் நீடிக்கும்!

    அதாம்மா எங்களுக்கு வேணும்!

    அப்பா! நான் வெளில போயிட்டு வந்திர்றேன்!

    துளசி புறப்பட்டு விட்டாள்.

    துளசி படபடவென நிறைய பேசமாட்டாள். ஆனால் தேவைக்கு நன்றாகவே பேசுவாள்!

    துளசிக்கு முன் கோபமும், பிடிவாதமும் கொஞ்சம் தூக்கலாக உண்டு! சொன்னபடி நடக்க வேண்டும். ஒளிவு மறைவு கூடாது! நேரே ஒன்று, மறைவில ஒன்று என இரண்டு முகங்கள் இருந்தால் அவளால தாங்கிக் கொள்ள முடியாது!

    இந்த குணம் மாற வேண்டும் என அம்மா சொல்வாள்!

    நான் எதுக்காக என்னை மாத்திக்கணும்!

    அப்படி இல்லம்மா! கோடு போட்டு நீ வாழ்ந்தாலும், எதிராளி அந்தக் கோட்டுக்குள்ளே நிக்கணும்னு நீ கட்டாயப்படுத்த முடியாது. பலவித குணாதிசயங்கள் உள்ள மனுஷங்க நம்மைச் சுற்றி இருப்பாங்க. அவங்க கூடத்தான் நாம வாழ்ந்தாகணும்!

    அவசியம் இல்லை. அந்த மாதிரி ஆட்களை நான் ஒதுக்கிடுவேன்!

    இதுதான் துளசியின் காரெக்டர்!

    வினோத் அதற்கு தோதாக இருப்பவன் போலத் தெரிகிறது!

    அதனால்தான் துளசிக்குப் பிடித்து விட்டது!

    துளசி அரை நாள் அலுவலகம் போய் திரும்பி விட்டாள்.

    மாலை ஏழு மணிக்கு சந்திப்பு என பதிவு செய்யப்பட்டிருந்தது!

    துளசி ஒரு ஜீன்ஸும், டாப்சும் அணிந்து கொண்டாள்.

    துளசி! இந்த ட்ரஸ்லதான் வரப்போறியா?

    ஏன்மா?

    இல்லை...ஒரு கல்யாணப் பேச்சு நடக்கப் போகுது! அந்த நேரத்துல இந்த மாதிரி...?

    "எனக்குப் புடிச்சிருக்கு.

    Enjoying the preview?
    Page 1 of 1