Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கண்களில் எத்தனை கள்ளமடி
கண்களில் எத்தனை கள்ளமடி
கண்களில் எத்தனை கள்ளமடி
Ebook88 pages28 minutes

கண்களில் எத்தனை கள்ளமடி

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அந்த மினி பங்களாவின் போர்டிகோவில் சாம்பல் நிற அம்பாஸிடர் பளபளப்பாய் நின்றிருந்தது.
 காரின் முகப்பிலும், பின்புறமும் பித்தளை கோட்டிங்கில் தடித்த எழுத்துக்கள் GOVT. OF INDIA என்று சொன்னது.
 டாப் கேரியரில் படுக்கை மடிப்புகள், சூட்கேஸ்கள் நைலான் கயிறினால் கட்டப் பட்டிருந்தன.
 சிப்பந்திகள் பயணத்திற்குத் தேவையான பொருட்களை பரபரப்பாய்க் காருக்குள் எடுத்து வைத்தபடி இருந்தார்கள்.
 போர்டிகோ சுவரில் மதியன் ஐ.ஏ.எஸ். என்று எழுதியிருந்தது.
 மதியன் ஹால் சோபாவில் போன் ரிசீவரைக் காதில் உரச விட்டபடி அமர்ந்து இருந்தார்.
 "இன்னிலாந்து நாலு நாளைக்கு நான் லீவ்... வெளியூர் போறேன்... ஆபீஸ் விஷயம் எதுவா இருந்தாலும் பத்தாம் தேதிக்கு மேல கான்ட்டாக்ட் பண்ணுங்க...''
 "'ரிலாக்சேஷன்க்காகத்தான் போறேன்... ப்ளீஸ்... கான்ட்ராக்ட் ஆஃப்ட்டர் டென்த்...''
 மதியன் ரிசீவரை வைத்தார்.
 அவர் மனைவி பானுமதி அவருக்கு எதிரே வந்து நின்றாள்.
 ''என்னங்க..."
 "என்ன...?''
 "இதுக்குத்தான் நான் காலைல நாலு மணிக்கெல்லாம் கிளம்பிப் போயிடலாம்ன்னு சொன்னேன்...''
 "ஏன்...?'"நேரம் ஆக ஆக உங்களைக் கேட்டு போன் கால்ஸ் வந்துட்டேதான் இருக்கும்...''
 "இன்னும் பத்து நிமிஷத்தில் கிளம்பிட லாம்...''
 ''இன்னும் பத்து நிமிஷம் இங்கே இருந்திங்கன்னா நம்ம ப்ரோக்கராமையே கான்சல் பண்ண வேண்டி வந்தாலும் வரலாம்... இப்பவே கிளம்புங்க..."
 "கவலைப்படாதே... இனிமே எந்தக் கால் வந்தாலும் எடுக்க வேண்டாம்...''
 முன்னறைக்குத் திரும்பிக் குரல் கொடுத்தார்.
 ''பி.ஏ...''
 ''எஸ்... ஸார்...
 சபாரி அணிந்த பி.ஏ. தொப்பையைத் தூக்கிக்கொண்டு வேகமாய் வந்தார்.
 "கார் ரெடியா...?"
 "லக்கேஜை ஒரு தடவை செக் பண்ண சொல்லியிருக்கேன் ஸார்... செக் பண்ணி, முடிச்சிட்டாங்கன்னா ரெடிதான்...''
 "அது வரைக்கும் எந்த போன் கால் வந்தாலும் நீங்களே மேனேஜ் பண்ணிக்கங்க... என்கிட்டே கொடுக்க வேண்டாம்."
 "ஓக்கே ஸார்...''
 அவர் சொல்லும்போதே –
 ஙீ...
 ஙீ...
 ஙீ...
 முன்னறையில் டெலிபோன் ஓசை கேட்டதுபோனை எடுக்கச் சென்ற பி.ஏ. போன வேகத்திலேயே திரும்பி வந்தார்.
 "ஸார் போன் ஃபார் யூ..."
 மதியன் எரிச்சலோடு நிமிர்ந்தார்.
 ''உங்களையே அட்டெண்ட் பண்ணச் சொன்னேனே..."
 "'லைன்ல மினிஸ்டர் இருக்கார் ஸார்... வேற யாரா இருந்தாலும் ஏதாவது பதில் சொல்லி நானே மேனேஜ் பண்ணியிருப்பேன்...''
 சொல்லிக்கொண்டே கையில் எடுத்து வந்திருந்த ஹேண்ட்செட்டை மதியனிடம் நீட்டினார்.
 அதை வாங்கிக் கொண்ட மதியன் குரலில் பவ்யம் வழிய
 ''வணக்கம் ஸார்...'' என்றார்.
 "வணக்கம். என்ன மதியன்... நீங்க நாலு நாளைக்கு லீமாமே...''
 "எ... எஸ் ஸார்...''
 "டெண்டர் ஃபைல்ஸ் சம்பந்தமா உங்ககிட்டே விவாதிக்க வேண்டியிருந்தது... இன்னிலாந்து நாலு நாளைக்கு லீவ்... ரொம்ப அர்ஜெண்ட்ன்னா வீட்டுக்கு டயல் பண்ணிப் பாருங்கன்னு சொன்னாங்க..."
 ''ந... நான் இப்ப... உங்களைப் பார்க்கணுமா ஸார்...?''
 மறுமுனையில் அமைச்சர் சிரித்தார்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 9, 2023
ISBN9798223306139
கண்களில் எத்தனை கள்ளமடி

Read more from Rajeshkumar

Related to கண்களில் எத்தனை கள்ளமடி

Related ebooks

Related categories

Reviews for கண்களில் எத்தனை கள்ளமடி

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கண்களில் எத்தனை கள்ளமடி - Rajeshkumar

    1

    வானம் அந்த அதிகாலை வேளையில் சூரியக் கிரகணங்களால் சலவை செய்யப்பட்டுக் கொண்டிருக்க ரம்யாவுக்கு கண், இமைகளின் மேல் பாரம் அழுத்தியது.

    நைட் ட்யூட்டி

    இலவம்பஞ்சு நிற நர்ஸ் உடை கைப்பையைத் தஞ்சமடைந்து இருக்க இள நீல ஷிபானுக்குள் தன்னை நுழைத்துக் கொண்டு ரிலீவருக்காகக் காத்திருந்தாள்.

    ஓய்வெடு என்று கண்கள் கெஞ்சிக் கொண்டிருக்க. மேஜையின் மேல் கையை மடித்து புறங்கைக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

    எத்தனை நேரம்...?

    குட்மார்னிங் ரம்யா...

    ரிலீவரின் குரல் கேட்டதும் சட்டென்று நிமிர்ந்தாள்.

    ‘‘குட்மார்னிங்... என்ன இன்னிக்கு இவ்வளவு லேட்...?’’

    கைப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டே ரம்யா கேட்க ரிலீவர் பெண் புன்னகைத்தாள்.

    "ஸாரி ரம்யா... பஸ்ஸை மிஸ் பண்ணிட்டேன்...’’

    ‘‘நான் கிளம்பட்டுமா...?’’

    "நைட் புது அட்மிஷன் ஏதாவது இருந்ததா...?’’

    "பைக் ஆக்சிடென்ட் கேஸ்... அஞ்சாம் நம்பர் ரூம்ல போட்டிருக்கு...’’

    ‘‘ஃப்ராக்ச்சரா...?’’

    "ஆமா...’’

    எங்கே கையா...? காலா...? தலையா...?

    ‘‘முட்டிக்கால் ஜாயிண்ட் கூழாப் போயிடுச்சு...’’

    ‘‘வயதென்ன...?’’

    ‘‘இருபது...’’!

    ‘‘கடவுளே... இந்தப் பசங்க ஏன்தான் இப்படிக் கண் மண் தெரியாம வண்டி ஓட்டறாங்களோ...! எனக்கு வேற ஏதாவது மெசேஜ் இருக்கா ரம்யா...?’’

    "எல்லாமே லாக் புக்ல எழுதியிருக்கேன்... நிதானமாப் படிச்சுப் பார்த்துக்கோ... பதினொரு மணிக்கு ஒரு ஆப்ரேஷன் இருக்கு... டாக்டர் வில்சன் அட்டெண்ட் பண்றார். அதை மட்டும் கேர்ஃபுல்லா பார்த்துக்கோ... அரேன்ஜ்மெண்ட் சரியில்லைன்னா அவருக்கு புசு புசுன்னு கோபம் வரும்... நான் கிளம்பறேன்... ஸீ யூ...’’

    "ஸீ யூ ரம்யா...’’

    ரம்யா தன்னுடைய வார்டை விட்டு வெளியே வந்தாள்.

    வராந்தாவில் நடக்கிறபோது எதிர்ப்பட்ட சக நர்ஸ்களுக்குப் புன்னகையைக் கொடுத்தபடி போர்டிகோவை நோக்கிச் சென்றாள்.

    படிகளில் சரிந்து சிமிமெண்ட் பேவ் மென்ட்டில் வளைந்து சென்றவள் மெயின் கேட்டைத் தொட்டபோது - குரலால் நிறுத்தப்பட்டாள்.

    ரம்யா சிஸ்டர்...

    செக்யூரிட்டி கார்டின் முரட்டுக்குரல்.

    திரும்பினாள் ரம்யா.

    ‘‘என்ன...?" என்று கேட்டது அவள் பார்வை.

    "உங்களுக்கு போன்...’’

    "போனா...? யாரு...?’’

    "தெரியலை... ரிசப்ஷன்ல் இருந்து உங்க வார்டுக்கு ட்ரை பண்ணியிருக்காங்க... மெயின் கேட்டுக்கு லைனைக் கொடுத்துப் பாருங்கன்னு உங்க வார்டுல சொல்லியிருக்காங்க...’’

    ஒருக்களித்துக் கவிழ்ந்து கிடந்த ரிசீவரை எடுத்தவள் பீறிட்ட கொட்டாவியை அடக்கிக் கொண்டே குரல் வெளியிட்டாள்.

    ‘‘ஹலோ... ரம்யா ஷியர்...’’

    மறுமுனையில் இருந்து இதுவரை பரிச்சயமில்லாத ஒரு பெண் குரல் கேட்டது.

    ‘‘ரம்யா... என் பேர் தாரிகா... நான் உங்களை உடனே மீட் பண்ணனும்...! எனக்காக ஒரு பத்து நிமிஷம் ஒதுக்குவீங்களா...?"

    அந்தப் பெண்ணின் குரலில் இருந்த அவசரம் அவளை யோசிக்க வைத்தது.

    ‘தாரிகா’

    ‘யார் இந்தத் தாரிகா...?’

    "யார் நீங்க...? என்ன விஷயமா என்னை. மீட் பண்ணனும்...?’’

    ‘‘போன்ல பேச முடியாது... நேர்லதான் பார்க்கணும்... அட்ரஸ் சொல்றேன்... எங்க வீட்டுக்கு வர முடியுமா...?’’

    ‘‘உங்க வீடு எங்கே இருக்கு...?’’

    "டாடாபாத்...’’

    ‘‘என்ன விஷயம்ன்னு சொல்லுங்க... நான் இப்பதான் நைட் ட்யூட்டி முடிச்சிட்டு போய்ட்டிருக்கேன்... சாயந்தரமா உங்களை வந்து பார்க்கறேன்...’’

    "சாயந்தரம் வரைக்கும் என்னால பொறுக்க முடியாது ரம்யா... உடனே பார்க்கணும்ன்னு சொன்னேன்...’’

    "என்ன விஷயம்...?’’

    போன்ல சொல்ல முடியாதுன்னு சொல்றேனே..."

    ‘‘சுருக்கமா சொல்லுங்க..."

    "சுருக்கமா சொல்லணும்ன்னா உயிர் போற விஷயம்... நான் ஒரு பெரிய சிக்கல்ல மாட்டிக்கிட்டிருக்கேன்... உங்களாலதான் என்னை சிக்கல்ல இருந்து விடுவிக்க வைக்க முடியும்...’’

    குழப்பமாய் ரிசீவரை வைத்தாள் ரம்யா.

    2

    அந்த மினி பங்களாவின் போர்டிகோவில் சாம்பல் நிற அம்பாஸிடர் பளபளப்பாய் நின்றிருந்தது.

    காரின் முகப்பிலும், பின்புறமும் பித்தளை கோட்டிங்கில் தடித்த எழுத்துக்கள் GOVT. OF INDIA என்று சொன்னது.

    டாப் கேரியரில் படுக்கை மடிப்புகள், சூட்கேஸ்கள் நைலான் கயிறினால் கட்டப் பட்டிருந்தன.

    சிப்பந்திகள் பயணத்திற்குத் தேவையான பொருட்களை பரபரப்பாய்க் காருக்குள் எடுத்து வைத்தபடி இருந்தார்கள்.

    போர்டிகோ சுவரில் மதியன் ஐ.ஏ.எஸ். என்று எழுதியிருந்தது.

    மதியன் ஹால் சோபாவில் போன் ரிசீவரைக் காதில் உரச விட்டபடி அமர்ந்து இருந்தார்.

    "இன்னிலாந்து நாலு நாளைக்கு நான் லீவ்... வெளியூர் போறேன்...

    Enjoying the preview?
    Page 1 of 1