Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

எளிது எளிது கொல்வது எளிது..!
எளிது எளிது கொல்வது எளிது..!
எளிது எளிது கொல்வது எளிது..!
Ebook97 pages32 minutes

எளிது எளிது கொல்வது எளிது..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாறைக்குடைவுக்கு கீழே தீப்பந்தம் ஒன்றும் சோகையாய் எரிந்து கொண்டிருக்க அதன் வெளிச்சத்தில் மூன்று பேர் பீடி புகையும் வாய்களோடு தெரிந்தார்கள். அலட்சியமாய் வாரப்பட்ட கிராப்தலைகள். சிவந்த கண்கள், பிரகாசமில்லாத முகங்கள். முரட்டுத் துணியில் பேண்ட்சர்ட்.
 "ஜவஹர்..."
 "ம்..."
 "சுபாஷை... இன்னும் காணோமே...?"
 "எப்படியும் எட்டு மணிக்குள்ளே வந்துடறதா சொன்னான்..."
 "அவன் கொஞ்ச நாளாவே சரியில்லை பட்டேல்..."
 "எப்படிச்சொல்றே...?"
 "சொன்ன நேரத்துக்கு அவன் வர்றதில்லை. காரணம் கேட்டா... எதையோ சொல்லி மழுப்பறான்..."
 ஏதோ சொல்ல வந்த ஜவஹரை கையமர்த்தினான் பட்டேல்.
 "ஜவஹர்...! கொஞ்சம் இரு... யாரோ வர்ற சத்தம் கேட்குது."
 மூன்று பேரும் உன்னிப்பானார்கள். தீப்பந்தங்களை வாயால் ஊதி அணைத்தார்கள். சரசரவென்று பாறைக்குப் பின்னால் ஒண்டிக்கொண்டார்கள். கிசுகிசுத்தார்கள்.
 "பட்டேல்..."
 "ம்..."
 "யாரோ ரெண்டு பேர் வர்றாங்க... காலடிச் சத்தத்தைக் கவனி...

அவன் கவனித்துவிட்டு
 "ஆமாம்... ரெண்டு பேர்தான். போலீஸாய் இருக்கலாம்... பிஸ்டலை எடுத்துக்கலாமா...?"
 "ம்... எடுத்து... அலர்ட்ல வை..."
 காலடிச் சத்தம் நெருங்கிக்கொண்டிருந்தது. பாறைக்குடைவுக்கு கொஞ்சம் முன்பாக வந்ததும் காலடிச்சத்தம் நின்றது. குரல் கேட்டது.
 "புதுயுகம் நிச்சயம் பூக்கும்."
 குரலைக் கேட்டதும்
 மூன்று பேர்களின் கைகளில் இருந்த பிஸ்டல்கள் தாழ்ந்தன. மலர்ந்தார்கள், ஒட்டுமொத்தமாய். "சுபாஷ்..." குரல் கொடுத்தார்கள்.
 "நானேதான்..."
 மறுபடியும் ஒரு தீக்குச்சியின் உறவில் தீப்பந்தங்கள் உயிர் பிடித்துக்கொண்டு எரிந்தன. சுபாஷ் பாறைச்சரிவில் ஏறி குடைவுக்கு வந்தான். அவனுக்குப் பின்னால் அந்தப் பெண் தயங்கி தயங்கி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே வந்தாள்...
 "அதான் யார்ன்னு கேட்டேன்..."
 "சொல்றேன்... மொதல்ல உள்ளே போயிடலாமா...?"
 சுபாஷ் அந்தப் பெண்ணைக் கூட்டிக் கொண்டு பாறைக்குடைவுக்குள் நுழைந்தான். மற்ற மூன்று பேரும் அவர்களைப் பின்தொடர்ந்து உள்ளே போனார்கள்.
 பட்டேல் அஞ்சனாவை ஏறிட்டான்.
 ஒரு ஆண்மகனுக்கு இருக்கவேண்டிய உயரம். தீட்சண்யம் மிக்க கண்கள், தொளதொள சர்ட்டிலும் பேண்டிலும் அவனுடைய அனாடமி அடிபட்டுப் போயிருந்தது. உயர்த்திப்போட்ட சின்னக் கொண்டையும் காதில்ஆடிய பிளாஸ்டிக் வளையல்களும் அவளுடைய முகத்திற்கு. எடுப்பாய் இருந்தது. சுபாஷ் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச்சை ஆரம்பித்தான்.
 "நண்பர்களே! இந்த அஞ்சனா ஒரு கல்லூரி மாணவி. நாம் வகுத்திருக்கிற சித்தாந்தங்களுக்கு ஆதரவு தரக்கூடியவள் இன்றைக்கு சாயந்தரம் ஆறு மணிக்கு 'இலக்கியச் சந்தை' என்னும் அமைப்பில் இவள் பேசின பேச்சையும் பாடின கவிதையையும் கேட்டேன். கேட்போரின் நரம்புகளை தாம்புக் கயிறுகளாக மாற்றக் கூடிய வலிமை இவள் பாடிய கவிதை வரிகளுக்கு இருந்தது. அஞ்சனா! அந்தக் கவிதை வரிகளை என்னுடைய நண்பர்களுக்கு சொல்லிக் காட்டு..."
 அஞ்சனா நிமிர்ந்து நின்றாள். கண்களில் ஒரு கனல் வந்து உட்கார்ந்து கொண்டது. வார்த்தைகளுக்காக உதடுகளைப் பிரித்தான்.
 "பூக்காதோ... புதுயுகம்?"
 "ஏன் பூக்காது?"
 "நிச்சயம் சிவப்பாய் பூக்கும். உழைப்பு உரத்துடன் உற்சாக நீர் பாய்ச்சி நம்பிக்கை விதைகளைத்தூவி முளைத்திடும் முன்னேற்ற நாற்றுக்களை நட்டு வைத்து நாளும் பாங்காய் கவனித்தால் புதுயுகம் நிச்சயம் பூக்கும். அது ஆதவனே ஆனாலும் உச்சிக்கு வந்துவிட்டால் உடனே இறங்கு முகம்தான். எழுவது பேரலையே என்றாலும், சரிந்து விழ்ந்து வந்து மணல் பாதம் பற்றத்தான். பல துளி நீர் சேர்ந்தால் பாய்கின்ற காட்டாறு. குறுக்கே யார் நின்று மறித்தாலென்ன எங்களைத் தடுத்தாலென்ன...! ஓ! துரோகப் பூனைகளே! ஏமாந்த எலிகள் எங்களின் எண்ணிக்கை எக்கச்சக்கமாகி விட்டால் உங்களுக்கு மணி கட்டும் அவசியம் இல்லாமல் போய் விடும். எங்களுக்கு பூக்காதோ புதுயுகம்? ஏன் பூக்காது? நிச்சயம் சிவப்பாய் பூக்கும்...!"
 அவள் கவிதை வரிகளைச் சொல்லி முடித்ததும் அரை நிமிஷ நேரத்திற்கு ஒரு வேண்டாத அமைதி நிலவியது. சுபாஷ் அந்த அமைதியைக் கலைத்தான்.
 "கவிதை எப்படியிருக்கு...?நல்லாத்தான் இருக்கு. அதுக்காக இந்தப் பொண்ணை நம்பி உடனே நம்ம இடத்திற்கு கூட்டிட்டு வந்துடறதா சுபாஷ்...?"
 அஞ்சனா குறுக்கே வந்தாள்.

 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 9, 2023
ISBN9798223343622
எளிது எளிது கொல்வது எளிது..!

Read more from Rajeshkumar

Related to எளிது எளிது கொல்வது எளிது..!

Related ebooks

Related categories

Reviews for எளிது எளிது கொல்வது எளிது..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    எளிது எளிது கொல்வது எளிது..! - Rajeshkumar

    1

    விடிந்து வெகு நேரமாகியிருந்தும் ஏற்காடு கதகதப்புக்குத் திரும்பாமல் ப்ரிஜ்ஜில் வைத்த பண்டம் மாதிரி ஜில்லென்றிருந்தது. குளிரும் காற்றும் ஒன்றையொன்று துரத்தி விளையாடிக்கொண்டிருக்க ஜனங்கள் கம்பளிக்கோட்டுகளில் கைகளைப் புதைத்துக் கொண்டு ரோட்டோரமாய் நடந்தார்கள்.

    ஹோட்டல் ஷேர்வராய்,

    ரூம் நெம்பர் ஐம்பத்தொன்பது.

    விஸ்வம் குளியலறையிலிருந்து நடுங்கிக் கொண்டே வெளிப்பட்டான். உடம்பில் ஆவி பறந்தது. கனமான டர்க்கி டவலால் உடம்பைத் துவட்டிக் கொண்டே கண்ணாடி முன்வந்து நின்ற விஸ்வத்திற்கு முப்பது வயதிருக்கலாம். சிவந்த நிறம். நீள்வட்டமுகம். தூக்கி சீவின அமெரிக்கன் கிராப். பிரஷ் மீசை.

    கட்டிலின்மேல் கம்பளிக்குவியலுக்குள் அடைப்புக் குறி மாதிரி படுத்து தூங்கிக் கொண்டிருந்த மனைவி தேவிகாவை நிலைக் கண்ணாடியில் பார்த்து குரல் கொடுத்தான் விஸ்வம்.

    தேவிகா...

    தேவிகா...?

    உம்...

    கம்பளிக்குவியல் அசைந்தது. புரண்டது.

    எந்திரி... விடிஞ்சு ரொம்ப நேரமாச்சு.

    மணி எவ்வளவுங்க...? கம்பளிக்குள்ளிருந்து குரல் வந்தது.

    ஒன்பதேகால்...

    அச்சச்சோ... அவ்வளவு நேரமாயிடுச்சா...? இன்னிக்கு கிள்ளியூர் வாட்டர் பால்ஸ் பார்க்கப்போகணுமே...?

    கம்பளியை காமா சோமாவென்று கலைத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள் தேவிகா.

    பின்னந்தலையை வறட் வறட்டென்று இடது கை விரல்களால் பிராண்டிக் கொண்டு வாயை அகலமாய் பிளந்து கொட்டாவி விட்டாள். தேவிகாவுக்கு எண்பது கிலோ உடம்பு. யானைநிறத்துக்கு கொஞ்சம் மட்டு. சப்பாத்தி மாவு உருண்டை மாதிரி மூக்கு. ஒரு கிலோ சதையைதாங்கிய மோவாய். இடுப்பும் பின் பக்கங்களும் அமோகமான பரப்பளவில் இருந்தன. அழகான விஸ்வத்துக்கு அசிங்கமான மனைவி.

    பத்து மணிக்கெல்லாம் இங்கிருந்து கிளம்பிடணும் தேவிகா... சூட்கேசைக் கிளறி பேண்டையும் சர்ட்டையும் எடுத்துக் கொண்டே சொன்னான் விஸ்வம்."

    இதோ... ஆச்சுங்க... அரைமணி நேரத்துல நான் ரெடியாயிடுவேன்... சொல்லிக் கொண்டே பாத்ரூமை நோக்கிப் போனாள் தேவிகா.

    தேவிகா... நிறுத்தினான்.

    ம்...

    நீ குளிச்சு ரெடியாகி ஹோட்டல் ரிஷப்ஷன்ல வந்து உட்கார்ந்திட்டிரு... நான் இப்ப வந்துடறேன்...

    ஏன் எங்கே போறீங்க...?

    கார்ல கொஞ்சம் மக்கர்... பிரேக் லீவர் லூசா இருக்கு... பக்கத்துல பெட்போர்ட் ரோடுல ஒரு ஆட்டோ மொபைல்ஸ் கடை இருக்கு... அங்கே போய் காரை காட்டிட்டு வந்துடறேன்... அப்படியே பெட்ரோலும் பிடிச்சுட்டு வந்துடறேன்...

    நேரமாயிடாதே...?

    பதினைஞ்சு நிமிஷத்துல வந்துடுவேன்...

    சரி...

    டோரை லாக் பண்ணிக்க... யாராவது கதவைத் தட்டினா யார்ன்னு கேட்டுட்டுத் திற... நீ பாட்டுக்கு பளிச்சின்னு திறந்துடாதே... எவனாவது பூந்துடுவான்... நகை நட்டு ஏராளமா வெச்சிருக்கே... ஜாக்கிரதை...

    ம்... ம்... நீங்க போயிட்டு வாங்க...

    விஸ்வம் ஜெர்க்கின் கோட்டின் ஜிப்பை இழுத்து விட்டுக் கொண்டே அறையை விட்டு வெளியே வந்தான். ஏற்காட்டின் குளிர் காற்று ‘கூல்மார்னிங்’ என்று சொல்லிக் கொண்டே அவன் முகத்தில் வந்து மோதியது. ஹோட்டலுக்கு வெளியே லைகோபோடியம் மரங்களுக்குக் கீழே நிறுத்தப்பட்டிருந்த கிளிஞ்சல் வெள்ளை பியட் காரை நோக்கி நடந்தான். ஹோட்டல் வாச்மேன் டிப்ஸை எதிர் பார்த்து விரைத்துப் போட்ட சல்யூட்டை அலட்சியம் பண்ணிக் கொண்டே காருக்குள் ஏறி உட்கார்ந்து விருட்டென்று கிளப்பிக் கொண்டு போனான்.

    ரோட்டோரங்களில் டீக்கடைகள் மட்டுமே உயிரோடு இருக்க மற்ற கடைகள் இன்னமும் கண் விழிக்காமல் இருந்தன.

    ஆள் நடமாட்டம் அற்ற ஏற்ற இறக்கமான ரோடுகள். அதில் சாம்பிராணி புகை மாதிரி அலையும் பனி. சுற்றிலும் ஒரு அந்தகார மெளனம்.

    காரின் மூன்று நிமிஷ ஓட்டத்திற்குப் பிறகு

    அந்தக் குறுகலான திருப்பத்தில் நின்றது.

    கார் ஹாரனை மூன்று முறை சப்தித்தான்.

    அடுத்த வினாடி

    அந்த சிப்ரஸ் மரத்திற்குப் பின்னால் ஒரு மனிதத்தலை முளைத்தது. கழுத்தை உயர்த்திப்பார்த்தது. விஸ்வம் கையசைக்க

    தோல் பையை தோளில் மாட்டிய ஆறடி உயர அவன் காரை நோக்கி ஓடி வந்தான். தாவாக்கட்டை பூராவும் முள்ளு முள்ளாய் தாடி. மேலுதட்டில் கெட்டியாய் மீசை.

    மகேஷ், கார்ல ஏறு... விஸ்வம் சொல்ல, அவன் ஏறிக் கொண்டான்.

    தேவிகா எங்கே...?

    அந்த யானை குளிச்சிட்டிருக்கு... ஆட்டோமொபைல்ஸ் போறதா சொல்லிக் கொண்டு வெளியே வந்தேன். நீ தயார் நிலையில் தானே இருக்கே...?

    ஆ... மா...

    என்ன... ஆமான்னு சொல்லும்போதே குரல் நடுங்குது...

    எனக்கு பயமாயிருக்கு விஸ்வம்... நான் கள்ளக் கடத்தல் விவகாரங்களில் எவ்வளவோ தகிடுதத்தம் பண்ணுவேன். ஆனா இதுவரைக்கும் கொலை பண்ணினதே கிடையாது...

    விஸ்வம் காரை நகர்த்திக் கொண்டே சிரித்தான்.

    எளிது. எளிது. கொல்வது எளிது. அதிலும் மகா எளிது ஒரு பெண்ணைக் கொல்வது...

    விஸ்வம்! உன்னோட ஒய்ப் தேவிகா உன்கிட்டே அன்பாதானே இருக்கா...?

    ஆமா...

    பின்னே ஏன் அவளைக் கொல்லணும்...?

    "அவ எம்மேல அன்பு காட்டறா... ஓ.கே. ஆனா பணத்தை கண்ணில காட்ட மாட்டேங்கிறாளே... செலவுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1