Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

உன் கண்ணில் நூறு நிலா
உன் கண்ணில் நூறு நிலா
உன் கண்ணில் நூறு நிலா
Ebook89 pages28 minutes

உன் கண்ணில் நூறு நிலா

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஹாஸ்பிடல்,
 'இன்டென்ஸிவ் கேர்யூனிட்' என்று அடர்த்தியான சிவப்பில் ஆங்கில எழுத்துக்கள் கதவில் அப்பியிருக்க கதவின் நெற்றியில் ஒரு சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
 சர்க்கஸ் மானேஜர் சபாபதி தன் வழுக்கை நெற்றி நிறைய வியர்த்து தெரிந்தார். பக்கத்தில் சர்க்கஸ் ஊழியர்கள். தீர்க்கா, நிரஞ்சன் இரண்டு பேர்களும் கவலை அணிந்த முகங்களோடு வராந்தாவின் ஓரத்தில் நின்றிருந்தார்கள். ஐ.ஸி. யூனிட்டுக்குள் வெள்ளுடுப்பு நர்ஸ்கள் உள்ளே போவதும் வெளியே வருவதுமாய் இருந்தார்கள். தீர்க்கா கம்மிய குரலில் கூப்பிட்டாள்.
 "மாஸ்டர்...!"
 "ம்..."
 "விமலாவுக்கு ஒண்ணும் ஆகாதே...?"
 "தைரியமாயிரு... சரியான நேரத்துக்கு இங்கே கொண்டு வந்துட்டோம்."
 "பாம்பு உடம்பை முறுக்கி பிழியற வரைக்கும் என்ன பண்ணிட்டிருந்தா...? எப்பவும் ஜாக்கிரதையா இருப்பாளே...?"
 நர்ஸ் ஒருத்தி ஐ.ஸி. யூனிட் கதவைத் திறந்து கொண்டு வெளியே வர தீர்க்கா அவளைப் பின் தொடர்ந்து போய் கேட்டாள்.
 "சிஸ்டர்... இப்ப கண்டிஷன் எப்படியிருக்கு?"
 "ஸாரி... எனக்கு எதுவும் தெரியாது... டாக்டர்கிட்டே கேட்டுக்குங்க..."
 "உயிர்க்கு எந்த ஆபத்தும் இல்லையே?அதை டாக்டர்தான் சொல்லணும்..." நர்ஸ் போய்விட, மானேஜர், நிரஞ்சன் அருகில் வந்தார். பெருமூச்சொன்றை விட்டபடி சொன்னார்.
 "ஒரு வருஷமா... விமலா... இந்த ஸ்நேக் ஈவண்ட்டை பண்ணிட்டு வர்றா... ஒரு தடவை கூட இப்படி நேர்ந்தது இல்லை... இன்னிக்கு காலரியில் கூட்டம் அதிகம்... ரசிகர்களோட கரகோஷமும் அதிகம். அந்த சந்தோஷத்துல மெய்மறந்துட்டாளோ...?"
 நிரஞ்சன் தலையாட்டி மறுத்தான்.
 "அப்படி இருக்க வாய்ப்பில்லை ஸார். இன்னிக்கு விமலா கொஞ்சம் மூட் அவுட்... முகம் சரியில்லை. மனசுக்குள்ளே எதையோ நினைச்சு..." பேச்சை முடிக்கவில்லை.
 "க்ளக்..."
 ஐ.ஸி. யுனிட்டின் வெள்ளை பெயிண்ட் கதவு திறந்துகொள்ள டாக்டர் வெளிப்பட்டார்.
 தீர்க்கா, நிரஞ்சன், மானேஜர் சபாபதி மூன்று பேரும் டாக்டரை சூழ்ந்தார்கள்.
 "டாக்டர்...! ஹெள... ஈஸ்... ஹர்... கண்டிஷன்?"
 "ப்ளீஸ்! என்னோட ரூமுக்கு வாங்க..."
 சொல்லிவிட்டு முன்னால் நடந்த டாக்டர் சுரேந்திரனுக்கு இருபத்தேழு வயது. இளைஞன். காரட் நிறம். அடிப்படையில் பணக்காரன். அம்மாவின் ஆசைக்காக மானேஜ்மெண்ட் கோட்டாவில் மெடிகல் காலேஜில் சேர்ந்தான். இன்றைக்கு, குறுகிய காலத்திலேயே மருத்துவத்துறையில் அவனுக்கு நல்ல பெயர். 'ஆர்த்தோ' வில் ஸ்பெஷலைஸ் பண்ணிக் கொண்டிருக்கிறான். நண்பர்கள் குறைவு. புத்தகப் பூச்சி.
 சுரேந்திரன் வராந்தா முனையில் இருந்த அறைக்குள் நுழைந்து இருக்கையில் சாய, பின்தொடர்ந்த மூன்று பேரும் எதிரே இருந்த நாற்காலிகளில் தளர்வாய் உட்கார்ந்தார்கள். தீர்க்கா கம்மிய குரலில் கேட்டாள்

Languageதமிழ்
Release dateDec 9, 2023
ISBN9798223393139
உன் கண்ணில் நூறு நிலா

Read more from Rajeshkumar

Related to உன் கண்ணில் நூறு நிலா

Related ebooks

Related categories

Reviews for உன் கண்ணில் நூறு நிலா

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    உன் கண்ணில் நூறு நிலா - Rajeshkumar

    உன் கண்ணில் நூறு நிலா!

    1

    அந்த சர்க்கஸ் கூடாரம் சற்று பிரம்மாண்டமாய்த்தான் இருந்தது. ராத்திரி இருட்டின் பின்னணியில் கூடாரத்தின் உச்சியிலிருந்து விழித்திருந்த, சீரியல் லைட் சரம், நிறம்நிறமாய் ஒளிர்ந்தது. சுற்றிலும் பெயிண்டிங் செய்யப்பட்ட துணி பேனர்கள். சர்க்கஸ் அழகிகள் சிக்கன உடைகளில் பேனர்கள் மீது வில்லாய் வரையப்பட்டிருக்க ஜனங்கள் கொத்து கொத்தாய் காலரிகளில் நிரம்பித் தெரிந்தார்கள். ஷோ துவங்கி சற்று நேரம் ஆகியிருக்க காலரி முழுக்க உற்சாகக் கூச்சல்கள் வண்ண சாட்டின் உடைக்கு மாறிக் கொண்டிருந்தாள்.

    தீர்க்கா பௌடர் பூசிய ஒரு தேவதை. வயது இருபது இருக்கலாம். ஆனால் முகத்தில் இன்னமும் குழந்தைத்தனம் கொஞ்சம் பாக்கியிருந்தது. விபரம் தெரிந்த நாளிலிருந்தே சர்க்கஸ் கூடாரத்தில் வளர்ந்தவள். ஊர் ஊராய் கேம்ப் போட்டதில் எல்லா மொழிகளுமே சரளமாய் பேச வரும். சர்க்கஸில் இருக்கும் வயது முதிர்ந்தவர்கள் தீர்க்கா அவளுடைய அப்பா ஜாடை என்று சொல்வது வழக்கம். சிலர் அம்மா ஜாடை என்று சொல்வதும் உண்டு. ஆனால் தீர்க்காவுக்கு அம்மா அப்பா என்கிற அந்த இரண்டு பேர்களின் முகங்கள் துளிக்கூட ஞாபகம் இல்லை. அவளுக்கு மூன்று வயதாய் இருக்கும்போது இரும்புக் கூண்டுக்குள் மோட்டார் சைக்கிள் சாகஸம் நிகழ்த்தும் போது ஏற்பட்ட கோர விபத்து இருவரையும் பலி வாங்கிவிட்டதாய் தகவல்.

    தீர்க்கா சர்க்கஸின் முக்கிய விளையாட்டான ட்ரபீஸில் ராணி. ஆபத்தான அந்த விளையாட்டை அநாயாசமாய் செய்து அசத்துவாள். கயிற்று ஊஞ்சலை விட்டு அந்தரத்தில் அவள் பறந்ததில் பார்க்கிற இருதயங்கள் சில விநாடிகளுக்கு ‘லப்டப்’பை மறந்து திக்கித்து நிற்கும்.

    தீர்க்கா கண்ணாடிக்கு முன் இருந்த ஸ்டூலில் உட்கார்ந்து தன் வாழைத் தண்டு கால்களை மெல்லிய ஸ்கின் சாக்சால் மூடியபோது வெளியே காலடிச் சத்தம் கேட்டது.

    தலையை நீட்டி ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள்.

    நிரஞ்சன் உள்ளே வந்து கொண்டிருந்தான். ஜிம்னாஸ்டிக் தனமான உடம்பு. இறுக்கமான பேண்ட்டுக்கு கீழே பெல்ட்டும் கால்களில் வெண்ணிற சாக்ஸும் தெரிந்தன.

    தீர்க்காவுக்கு ஆசான் நிரஞ்சன். ட்ரபீஸ் வித்தையின் ‘அ’ முதல் ‘ஃ’ வரை கற்றுக் கொடுத்தவன். தமிழ் பேச்சில் லேசாய் மலையாளம் கலந்து இருக்கும். நெற்றியில் எந்நேரமும் மணக்கும் சந்தனப் பொட்டு.

    தீர்க்கா...! ரெடியாயிட்டியா?

    நான் எப்பவோ ரெடி மாஸ்டர்...

    போன தடவை மாதிரி கான்வாஸ் ஷூ லேஸை தப்பா முடிச்சு போட்டுக்காதே...

    தீர்க்கா மெல்லச் சிரித்தாள்.

    மாட்டேன் மாஸ்டர்! அந்தத் தப்பை இன்னொரு தடவை பண்ண மாட்டேன். சாதாரண. ஷு லேஸ்தானேன்னு அலட்சியமா இருந்துட்டேன். பாரை காலாலே ‘க்ரிப்’ பண்ணிட்டு தலைகீழா ஊஞ்சல் ஆடும்போது அந்த தப்பான முடிச்சு வேலையைக் காட்டிடுச்சு. பாரிலிருந்து வழுக்கி... அம்மாடி! கீழே வலை விரிச்சிருந்ததாலே தப்பிச்சேன். உடம்பைக் குலுக்கிக் கொண்டாள்.

    நிரஞ்சன் கவலைக் குரலில் குறுக்கிட்டான்.

    நம்ம ட்ரபீஸ் விளையாட்டில் என்னிக்குமே கவனக் குறைவு, அலட்சியம் இந்த வார்த்தைகளுக்கெல்லாம் இடமில்லை. கரணம் தப்பினால் மரணம் என்கிற வாக்கியம் நமக்கே நமக்காக சொல்லப்பட்ட வாக்கியம்...

    பக்கத்துக் கூண்டிலிருந்து அடிக்கடி சிங்கத்தின் கர்ஜனையும், கட்டியிருந்த யானையின் சங்கிலி அசையும் சத்தமும் கேட்டது. காற்றில் கெட்ட மாமிச வாடை.

    தீர்க்கா லிப்ஸ்டிக் ஸ்டிக்கால் உதட்டை சிவப்பாக்கிக் கொண்டே நிரஞ்சனை ஏறிட்டாள்.

    இப்ப... எந்த ஈவண்ட் போயிட்டிருக்கு மாஸ்டர்...?

    ஃபயர், ப்ளே...!

    தீர்க்கா சிரித்தாள்.

    பாவம் ரிங் மாஸ்டர் நாராயணன் புதுசா வந்த மைனர்புலி ரிங் மாஸ்டரை தண்ணி காட்டுது.

    நிரஞ்சனும் சிரித்தான்.

    ஒரு மாசமா ட்ரெயினிங் கொடுத்தும் அந்த டைகர் வழிக்கு வரலை. நாராயணனோட முகத்துல ஏகப்பட்ட பிறாண்டல்கள்... மனுஷன் வாழ்க்கையை வெறுத்துட்டார்...

    ஃபயர் ப்ளேக்கு அடுத்தபடியாத்தானே... விமலாவோட ஸ்நேக் ஈவண்ட்...?

    ஆமா...

    திரும்பினாள் தீர்க்கா.

    ஒரு விஷயம் கவனிச்சீங்களா மாஸ்டர்...?

    என்ன?

    விமலா ரெண்டு நாளாவே உற்சாகமாயில்லை...! எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கா...

    எனக்கு அப்படித் தோணலையே...?

    ஒரு பெண்ணை ஒரு பெண்ணினால்தான் புரிஞ்சுக்க முடியும் மாஸ்டர்...

    "தீர்க்கா...! இங்கே இருக்கிற பெண்கள்ல யார் சந்தோஷமா இருக்காங்க?

    Enjoying the preview?
    Page 1 of 1