Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஜமுனா! ஜாக்கிரதை!
ஜமுனா! ஜாக்கிரதை!
ஜமுனா! ஜாக்கிரதை!
Ebook150 pages36 minutes

ஜமுனா! ஜாக்கிரதை!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"அஸ்வின்...!"
 "அப்பா...!"
 "ஒரு நிமிஷம் என்னோட ரூமுக்கு வந்துட்டுப் போ..." அப்பா செண்பகராமனின் குரல் கேட்டு நிலைக்கண்ணாடி முன் நின்று டை கட்டிக் கொண்டிருந்த அழகான இருபத்தேழு வயது அஸ்வின் பக்கத்து அறையை நோக்கி வேகவேகமாய்ப் போனான்.
 "என்னப்பா...?"
 "ஆபீஸுக்கு உடனே கிளம்பணுமா... இல்லை... கொஞ்சம் லேட்டாப் போகலாமா?"
 "லேட்டாவே போகலாம்... ஏம்ப்பா... என்ன விஷயம்? உடம்புக்கு ஏதும் முடியலையா...? இல்ல வேற ஏதாவது ஒர்க் இருக்கா?"
 "அதெல்லாம் ஒண்ணுமில்லடா... புரோக்கர் இப்பத்தான் வந்து பொண்ணோட போட்டோவைக் கொடுத்துட்டுப் போனார். நீ போட்டோவைப் பார்த்து சரின்னு சொல்லிட்டா நான் பொண்ணோட அப்பாக்கிட்டே பேசி இன்னிக்கு சாயந்தரமே நேர்ல பெண் பார்க்க ஏற்பாடு பண்ணிடுவேன்... இந்தா போட்டோ...!" செண்பகராமன் சொல்லிக் கொண்டே தன் கையில் வைத்து இருந்த போட்டோவை நீட்ட அஸ்வின் அதை வாங்கிப் பார்த்தான்.பார்த்த முதல் பார்வையிலேயே அஸ்வினின் உடம்பில் லேசாய் மின்சாரம் பாய்ந்த உணர்வு.
 "பொண்ணோட பேர் என்னப்பா?"
 "ஹரிணி."
 "ப்யூட்டிஃபுல் நேம்..." என்று உதடுகளுக்குள் முணுமுணுத்துக் கொண்ட அஸ்வின் மறுபடியும் போட்டோவைப் பார்த்தான்.
 ஹரிணி போட்டோவில் நேர்பார்வை பார்த்து இதயத்தை நொறுக்கினாள். காமிராவை க்ளிக் செய்த விநாடி லேசாய் வலதுபக்க உதட்டை சுழித்து இருந்தாள். மிதமாய் மை தீட்டியிருந்த கண்களில் இலவச மின்சாரம் விநியோகமாகிக் கொண்டிருந்தது.
 "அப்பா!"
 "என்ன...?"
 "பொண்ணு டபுள் ஓ.கே... ஃபேமிலி ஸ்டேட்டஸ் எப்படி...?"
 செண்பகராமன் சிரித்தார்.
 "அது ட்ரிபிள் ஓ.கே... பொண்ணோட அப்பா பட்டாபிராமனுக்கு ஏகப்பட்ட சொத்து. இறந்து போன மனைவியின் வழியிலும் ஏகப்பட்ட சொத்து. ஹரிணியைத் தவிர வேறு வாரிசும் கிடையாது. கல்யாண புரோக்கர் நேத்து சாயந்தரம் உன்னோட போட்டோவைக் கொண்டுபோய் பொண்ணுக்கும், பொண்ணோட அப்பாவுக்கும் காட்டியிருக்கார். நம்ம குடும்பத்தைப் பற்றியும் சொல்லியிருக்கார். உன்னோட போட்டோவைப் பார்த்ததும் அவங்க ஓ.கே.சொல்லிட்டாங்களாம். இப்ப நம்ம பதிலுக்காக அவங்க காத்துக்கிட்டு இருக்காங்க..."
 "அப்பா! எனக்கு பொண்ணு ஓ.கே. உங்களுக்கு ஸ்டேட்டஸ் ஓ.கே. அப்புறம் என்ன...? பொண்ணை இன்னைக்கே நேர்ல பார்த்துடலாம்..."
 "போன் பண்ணி பேசிடட்டுமா...?"
 "ம்...""இரு... இரு... இப்பவே பேசி உன் முன்னாடியே டயத்தை கன்ஃபர்ம் பண்ணிடறேன்..." - சொன்ன செண்பகராமன் டெலிபோன் ரிஸீவரைக் கையில் எடுத்துக் கொண்டு டயல்களில் எண்களைத் தட்டினார்.
 மறுமுனையில் உடனே இணைப்புக் கிடைத்துப் பேசிவிட்டு அஸ்வினை ஏறிட்டார்.
 "அஸ்வின்...! அவங்க சாயந்தரம் ஐந்து மணிக்கு மேல் பெண் பார்க்கிற நிகழ்ச்சியை வெச்சுக்கலாமான்னு கேக்கறாங்க... நீ என்ன சொல்ற...? அந்த நேரம் உனக்கு வசதிப்படுமா...? இல்லை ஆறு மணிக்கு மேல் ஃபங்ஷனை வெச்சுக்கலாமா...?"
 "அவங்க சொன்ன நேரத்துக்கே இருக்கட்டும்ப்பா... எனக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை..."
 "அப்ப... சம்மதம் குடுத்துடட்டுமா...?"
 "ம்... குடுத்துடுங்க..." அஸ்வின் சொல்லிவிட்டு தன் கழுத்து டையை இறுக்கிக் கொண்டே தன்னுடைய அறைக்குள் போய் ப்ரீஸ்கேஸை எடுத்துக் கொண்டு போர்டிகோவில் நின்றிருந்த தன்னுடைய 'ஸ்கார்ப்பியோ' கார்க்கு வந்தான். உதட்டில் பிறந்த உற்சாக விசிலோடு ட்ரைவிங் இருக்கைக்குச் சாய்ந்தான். மறுபடியும் ஒருதடவை ஹரிணியின் போட்டோவை எடுத்துப் பார்த்தான். முதல்தடவை பார்த்ததைக் காட்டிலும் இப்போது அழகாய் இருப்பதுபோல் தோன்றியது.
 "ஐ லவ் யூ ஹரிணி" என்று மெல்ல சொல்லிக் கொண்டான். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அந்த போட்டோவுக்கு முத்தம் ஒன்றைப் பதித்துவிட்டு காரை நகர்த்தி ரோட்டுக்கு வந்து போக்குவரத்தில் கலந்தான். கார் மிதமான வேகத்தில் விரைந்து ஐந்து நிமிஷங்களை விழுங்கியிருந்தபோது அவனுடைய செல்போன் ரிங்டோனை வெளியிட்டது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 15, 2023
ISBN9798223015178
ஜமுனா! ஜாக்கிரதை!

Read more from Rajeshkumar

Related to ஜமுனா! ஜாக்கிரதை!

Related ebooks

Related categories

Reviews for ஜமுனா! ஜாக்கிரதை!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஜமுனா! ஜாக்கிரதை! - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    கேட்டதையெல்லாம் நம்பாதே!

    நம்பியதையெல்லாம் சொல்லாதே!

    பைப்பில் புகையிலைத் தூளை நிரப்பி சிகரெட் லைட்டர் வெளித்தள்ளிய தீப்பிழம்பின் சிறிய நாக்கால் அதைப் பொசுக்கி, பைப்பை ஆழமாய் உறிஞ்சி மெலிதாய் புகைவிட்ட டி.ஜி.பி.ஹரிஹரசுதன் தன் உதவியாளர் ராஜகாந்தன் கதவுக்கு அப்பால் தயக்கமாய் நிற்பதைப் பார்த்ததும் நெற்றியின் பரப்பளவைச் சுருக்கினார்.

    வாங்க... ராஜகாந்தன்...! என்ன விஷயம்...?

    ராஜகாந்தன் கையில் செல்போனோடு உள்ளே வந்தார்.

    சார்...! பெங்களூரிலிருந்து டி.ஜி.பி.கெம்பண்ணா பேசறார். நீங்க பிஸியாய் இருந்தா அப்புறமா பேசறேன்னு சொன்னார்.

    செல்போனைக் கொண்டாங்க... நான் புகை விடறதுக்கா கவர்ன்மெண்ட்ல சம்பளம் தர்றாங்க... ஏதோ ஒரு முக்கியமான விஷயம் இருக்கப்போய்த்தான் போன் பண்ணியிருக்கார்... சொன்ன ஹரிஹரசுதன் செல்போனை வாங்கி காதுக்கு ஒற்றினார்.

    குட்மார்னிங்... மிஸ்டர் கெம்பண்ணா...

    குட்மார்னிங்... மிஸ்டர் ஹரிஹரசுதன்... எப்படி இருக்கிறீர்கள்...?

    ஃபைன்...! நீங்கள்...?

    கெம்பண்ணா சிரித்தார். நான் எப்படி இருப்பேன் என்று பேப்பர், டி.வி. செய்திகளைப் பார்த்தாலே உங்களுக்குப் புரிந்து இருக்குமே...? பெங்களூரில் சர்வதேச சாஃப்ட்வேர் கம்பெனிகள் வந்ததில் இருந்து தினசரி ஏதாவது ஒரு பிரச்னை. போனவாரம் நடந்த ‘பென்னர்கட்டா’ வெடிகுண்டு விபத்தில் ‘இட்டாலி’ சாஃப்ட்வேர் கம்பெனியின் கட்டிடம் தரைமட்டமானது உங்களுக்குத் தெரியும். நல்லவேளையாக முன்கூட்டியே தகவல் தெரிந்ததால் கம்பெனியில் இருந்த அத்தனை பேர்களையும் வெளியேற்றிக் காப்பாற்ற முடிந்தது. வெடிகுண்டு இருக்கும் இடத்தை தேடிக் கண்டுபிடித்து டிப்யூஸ் செய்வதற்குள் வெடிகுண்டு தன் வேலையைக் காட்டி விட்டது. ஐநூறு கோடி ரூபாயில் நிர்மாணிக்கப்பட்டு இருந்த அந்த சாஃப்ட்வேர் நிறுவனம் இப்போது உடைந்துபோன ஒரு கண்ணாடி டம்ளராகிவிட்டது. நான் சரியாய்த் தூங்கி நான்கு நாட்களாகி விட்டது. இன்வெஸ்ட்டிகேஷன் ஈஸ் கோயிங் ஆன்...

    வெடிகுண்டு வைத்தவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடிந்ததா...?

    ஒரு க்ளூ கிடைத்துள்ளது. அது சம்பந்தமாய் உங்களுடன் பேசத்தான் செல்போனில் அழைத்தேன்...

    சொல்லுங்கள்... என்ன க்ளூ...?

    உங்கள் தமிழ்நாட்டில் ‘ப்ளாக் ஃப்ளேம்ஸ்’ என்ற பெயரில் அதாவது ‘கரும்புகை’ என்ற அர்த்தத்தில் இயக்கம் ஏதாவது உள்ளதா?

    ப்ளாக் ஃப்ளேம்ஸ்...?

    எஸ்...

    அப்படி ஒரு இயக்கம் இருக்கிற மாதிரி தெரியவில்லையே...?

    உங்களுடைய உளவுத்துறையிடம் கேட்டுச் சொல்ல முடியுமா?

    உளவுத்துறையிடம் கேட்க வேண்டியதே இல்லை மிஸ்டர் கெம்பண்ணா! தினசரி அவர்களிடமிருந்து எனக்கு அறிக்கைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. நீங்கள் சொல்வது போல் ‘ப்ளாக் ஃப்ளேம்ஸ்’ என்ற பெயரில் எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் தமிழ்நாட்டில் இல்லை... என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

    மறுமுனையில் கெம்பண்ணா மெல்லச் சிரித்தார். ஸாரி மிஸ்டர் ஹரிஹரசுதன்...! நான் இதைச் சொல்வதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்...

    என்ன...?

    உங்களுடைய தமிழ்நாட்டு உளவுத்துறை விழிப்போடு செயல்படவில்லை என்று நினைக்கிறேன். ‘ப்ளாக் ஃப்ளேம்ஸ்’ என்ற இயக்கமொன்று திருச்சியைத் தலைமையிடமாக வைத்துக் கொண்டு இயங்கி வருகிறது.

    ஹரிஹரசுதன் நிமிர்ந்து உட்கார்ந்தார். இந்தத் தகவலை உங்களுக்கு யார் சொன்னது...?

    எங்களிடம் பிடிபட்ட ஒரு பெண்...

    பெண்ணா...?

    ஆமாம்...! அவளுடைய பெயர் கோப்பெருந்தேவி என்று சொன்னாள். அவளைப் பெண் கான்ஸ்டபிள்களிடம் ஒப்படைத்து ஒரு நாள் முழுவதும் ரெட் செல்லில் வைத்து விசாரித்தபோது அவள் சொன்ன தகவல்கள் இது.

    அந்தப் பெண்ணின் பெயர் என்ன என்று சொன்னீர்கள்?

    கோப்பெருந்தேவி...

    அவள் எப்படி போலீஸ் கையில் மாட்டினாள்...?

    "பெங்களூரில் இருக்கும் எல்லா ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களையும், சாதாரண ஹோட்டல்களையும் சோதனை போட்டபோது அவள் மாட்டினாள். போலீசார் கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதில்களைச் சொன்னாள். போலீசார்க்குச் சந்தேகம் வந்தது. அப்போது அவளுடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. போலீஸார் அந்த செல்போனை எடுக்க முயன்றபோது அவள் சட்டென்று எடுத்து அதை ஜன்னல் வழியே வீசிவிட்டாள். ஏழாவது மாடியிலிருந்து கீழே விழுந்த அந்த செல்போனை போலீஸார் கண்டுபிடிக்க முயன்றார்கள். அது கிடைக்கவில்லை. யார்க்காவது அது கிடைத்து எடுத்துப் போயிருக்கலாம் என்று நினைத்த போலீஸார் அவளிடம் செல்போன் நம்பர் என்ன என்று கேட்டார்கள். அவள் வாயைத் திறக்கவில்லை. அதற்குப் பிறகு அவளைக் கைது செய்து ரெட் செல்லுக்குக் கொண்டு வந்து விசாரித்தபோதும் செல்போன் நம்பர் தனக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டாள். அவள் தன்னுடைய இயக்கத்தைப் பற்றிப் பேசும் போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டுக் கத்துகிறாள். அவளை இன்னமும் நாற்பத்தெட்டு மணி நேரத்திற்குள் விடுதலை செய்ய வேண்டுமாம். இல்லாவிட்டால் பெங்களூரில் உள்ள இன்னொரு சாஃப்ட்வேர் கம்பெனி தூள்

    Enjoying the preview?
    Page 1 of 1