Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இடி மின்னல் இந்திரா!
இடி மின்னல் இந்திரா!
இடி மின்னல் இந்திரா!
Ebook142 pages34 minutes

இடி மின்னல் இந்திரா!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சென்னை. மழையில் நனைந்து கொண்டிருந்த முன்னிரவு நேரம்.
 பதினோரு மணி.
 திருவான்மியூர் அட்சயா அவென்யூ ஏழாவது தெரு. இரண்டாவது பங்களா. சூப்ரிண்டெண்ட் ஆஃப் போலீஸ் சந்தோஷ்குமார் முதல் மாடியில் இருந்த படுக்கையறையில் மேஜை விளக்கைப் பொருத்திக் கொண்டு 'இண்ட்டர்போல் லா' புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தார். டெலிபோன் அழைத்தது. இடது கையில் ரிஸீவரை எடுத்து "எஸ்" என்றார்.
 "ஸார்... நான் டி.எஸ்.பி. சத்தார்."
 "சொல்லுங்க..."
 "ஸார்... ஒரு டெலிகேட்டான மேட்டர்."
 "என்ன..?"

"பழைய மகாபலிபுரம் ரோட்ல அரைமணி நேரத்துக்கு முந்தி ரோந்து போய்கிட்டு இருந்தபோது ரோட்டோரமா ஒரு கார் நின்னுட்டிருந்ததைப் பார்த்தோம். காரோட கதவுகளை லாக் பண்ணிகிட்டு உள்ளே ரெண்டு பேர் விபச்சாரம் பண்ணிட்டிருந்தாங்க... அவங்களை யாரு என்னான்னு விசாரிச்சபோது ஒரு அதிர்ச்சியான தகவல் ஸார்."
 "என்ன தகவல்... சொல்லுங்க..."
 "கார்க்குள்ளே இருந்த பொண்ணு ஒரு நடிகை ஸார்... இப்போ புதுசா ரிலீஸாகி வெற்றிகரமாய் ஓடிகிட்டு இருக்கிற 'பொன் வண்டு ஒன்று' என்ற படத்தில் அந்தப் பொண்ணுதான் ஹீரோயின். பேரு மதுலிகா."
 "சரி... பையன் யாரு..?"
 "அதுதான் ஸார் பிரச்னை... பையன் பேரு சைலேஷ். ஹைகோர்ட் நீதிபதி தேவேந்திராவோட மருமகன். உங்களை அவனுக்குத் தெரியுமாம்... போன் பண்ணி கேளுங்கள்னு சொன்னான். அதான் உங்களுக்குப் போன் பண்ணி..."
 "என்னைத் தெரியும்ன்னு சொன்னானா..?"
 "ஆமா... ஸார்..."
 "ராஸ்கல்...! ஏதோ ஒரு ஃப்ங்க்ஷன்ல பார்த்து வணக்கம் சொன்னதோடு சரி... மத்தபடி அவனை எனக்குத் தெரியாது... இப்ப நீங்க எங்கேயிருந்து பேசிட்டிருக்கீங்க..?"
 "பழைய மகாபலிபுரம் ரோட்லயிருந்து ஸார்..."
 "அந்த நடிகையையும் அவனையும் மொதல்ல அரஸ்ட் பண்ணி ஸ்டேஷனுக்கு கொண்டு போய் லாக்கப்புல தள்ளுங்க..."
 "ஸ... ஸ... ஸார்..."
 "என்ன..?"பையன் சாதாரண இடம் கிடையாது. ஹைகோர்ட் நீதிபதியோட மருமகன்... வார்ன் பண்ணி விட்டுடலாம் ஸார்..."
 "என்னது...! வார்ன் பண்ணி விட்டுடறதா...? நீங்க என்ன சொல்றீங்க சத்தார்..? ஹைவேஸ் ரோட்ல விபச்சாரம் நடந்தா பரவாயில்லைன்னு சொல்ல வர்றீங்களா..?"
 "நான் அப்படி சொல்லலை... ஸார்... அந்த ஹைகோர்ட் நீதிபதி தேவேந்திரா டெல்லி வரை செல்வாக்கு படைத்த மனிதர். அவரோட மருமகனை நாம 'டச்' பண்ணினா... நாளைக்கு நாம யூனிஃபார்மை மாட்டிகிட்டு நிம்மதியா வேலை பார்க்க முடியாது ஸார்."
 "இதோ பாருங்க சத்தார்...! சட்டம் யார்க்காவது எந்த காரணத்துக்காகவாவது வளையறதை நான் விரும்ப மாட்டேன். சட்டம் எல்லார்க்கும் பொதுவானது... தப்பு பண்ணினது யாராக இருந்தாலும் சரி அவங்க தண்டிக்கப்படணும்ங்கிறதுதான் என்னோட பாலிஸி."
 "ஸார்...! எதுக்கும் மேலிடத்தில் ஒரு வார்த்தை கேட்டுட்டு..."
 "லுக் சத்தார்...! உங்களுக்கு மேலிடம் யாரு..?"
 "நீங்கதான் ஸார்..."
 "என்கிட்டே கேட்டுட்டீங்கள்ல..? நான் சொன்னபடி பண்ணுங்க... அந்த நடிகையையும் சைலேஷையும் லாக்கப்புல போட்டுட்டு கையோடு கையாய் பிரஸ் மீடியாவுக்கும் டி.வி. மீடியாவுக்கும் தகவல் கொடுத்துடுங்க..."
 "எ... எ... எஸ்... ஸார்..."
 சந்தோஷ்குமார் ரிஸீவரை வைத்துவிட்டு படித்துக் கொண்டு இருந்த புத்தகத்துக்கு மறுபடியும் பார்வையைக் கொண்டு போனார்.
 கீழே -
 காம்பவுண்ட்கேட் வாசலில் ஏதோ சத்தம் கேட்டது. வாட்ச்மேன் யாரையோ விரட்டும் சத்தம்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 15, 2023
ISBN9798223160342
இடி மின்னல் இந்திரா!

Read more from Rajeshkumar

Related to இடி மின்னல் இந்திரா!

Related ebooks

Reviews for இடி மின்னல் இந்திரா!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இடி மின்னல் இந்திரா! - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    உலகிலேயே அதிவேகமான கம்ப்யூட்டர் நாஸாவின் சூப்பர் கம்ப்யூட்டர் என்று சென்ற மாதம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கம்ப்யூட்டரின் மதிப்பு 225 கோடி ரூபாய். இந்த கம்ப்யூட்டரை அமெரிக்க நிறுவனமான சிலிக்கான் கிராஃபிக்ஸ் உருவாக்கியுள்ளது.

    இந்த கம்ப்யூட்டரின் வேகத்துக்கு எந்த ஒரு நிபுணரும் ஈடு கொடுக்க முடியாது. ஒரு நொடி நேரத்தில் 42 டிரில்லியன் கணக்குகளை முடித்துவிட்டு எஸ் பாஸ்... எனக்கு அடுத்த வேலையைக் கொடுங்கள் என்று கேட்கக் கூடியது. இந்தக் கம்ப்யூட்டரின் பெயர் என்ன தெரியுமோ..? தெரிந்தவர்கள் நாவலைப் படிக்க ஆரம்பித்து விடலாம். தெரியாதவர்கள்... இரண்டாவது அத்தியாயத்தில் தெரிந்து கொள்ளலாம்.

    "ஜெயந்த்...! ம்... எனக்கு பயம்மாயிருக்கு... எதுக்கு பயம்...? டாக்டர் என்ன சொல்வாரோன்னுதான்... இதோ பார் மித்ரா... ரிசல்ட் எப்படியிருந்தாலும் அதை நாம ஸ்போர்ட்டீவா ஏத்துக்கணும்... தைரியமாயிரு...

    இல்ல ஜெயந்த்.. எனக்கு கன்ஃபர்மா தெரியுது. இது கர்ப்பம்தான்... பதினஞ்சு நாள் தள்ளிப் போயிருக்கு. காலையில் எந்திரிச்சதுமே மார்னிங் சிக்.. வாமிட் வருது... தலையைச் சுத்துது. தாளிக்கிற வாசனை லேசா மூக்குக்குள்ளே போனாலே போதும்- சிறுகுடலே வெளியே வர்ற மாதிரி வாந்தி. வேலைக்காரி தங்கம்மா என்னோட நாடியைப் பிடிச்சுப் பார்த்துட்டு என்ன சொன்னா தெரியுமா?

    என்ன சொன்னா...?

    எனக்கு ஆண் குழந்தைதான் பிறக்குமாம்...

    பரவாயில்லையே... நம்ம வீட்டு வேலைக்காரி தங்கம்மா ‘கைனகாலஜிஸ்ட்’ன்னு ஒரு போர்டை மாட்டிகிட்டு டாக்டர் தொழிலைக் கூட பார்க்கலாம்... போலிருக்கே..?

    என்னங்க...! உங்களுக்கு பையன் வேணுமா பொண்ணு வேணுமா..?

    இதோ பார் மித்ரா...! மொதல்ல டாக்டர் உன்னை செக் பண்ணி கன்ஃபர்ம்மா நீ கன்சீவ் ஆயிருக்கேன்னு சொல்லட்டும். அப்புறமா பொண்ணா பையனான்னு பேசிக்கலாம்.

    ஏன்... இன்னமும் உங்களுக்கு சந்தேகமா? எனக்கு சந்தேகமே கிடையாது. இன்னும் பத்து மாசம் கழிச்சு ஒரு குழந்தைக்கு நான் அம்மா. நீங்க அப்பா... பிறக்கப் போறது ஆண் குழந்தைதான்... நான் பேர்கூட வெச்சுட்டேன்... பேர் என்ன தெரியுமா?

    சொல்லு...

    சம்யுக்ராஜ்.

    பொண்ணாப் பொறந்துட்டா..?

    அது பையன்தான்...

    அதென்ன சம்யுக்ராஜ்..? பேர் ஏதோ புராண கால டைப்ல இருக்கு...

    ஜெயந்த் மேற்கொண்டு பேசும் முன்பு நர்ஸ் டாக்டரின் அறையிலிருந்து எட்டிப் பார்த்தாள். குரல் கொடுத்தாள்.

    மிஸஸ் மித்ரா.

    ஜெயந்த், மித்ரா இருவரும் எழுந்தார்கள். நர்ஸ் புன்னகைத்தாள். ஸார்... நீங்க வெளியே வெயிட் பண்ணுங்க... உங்க மனைவி மட்டும் வரட்டும்...

    ஜெயந்த், மறுபடியும் பாலிவினைல் நாற்காலிக்கு சாய- மித்ரா டாக்டரின் அறைக்குள் நுழைந்தாள்.

    அவள் உள்ளே போகும் வரை காத்திருந்த ஜெயந்த் தன்னுடைய செல்போனை எடுத்து சில எண்களைத் தட்டிவிட்டு காதுக்கு ஒற்றினான். மறுமுனையில் ரிங் போய் ரிஸீவர் எடுக்கப்பட்டு ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

    ஹலோ... சூர்யா நர்ஸிங்ஹோம்.

    டாக்டர் சூர்யநாராயணன் இருக்காரா?

    இருக்கார்... நீங்க..?

    நான் ஜெய்ந்த்... அவரோட நண்பர். அவர்கிட்டே கொஞ்சம் பேசணும்...

    ஒரு நிமிஷம்...

    ஜெயந்த் காத்திருக்க அடுத்த சில விநாடிகளில் டாக்டர் சூர்யநாராயணனின் குரல் கேட்டது.

    சொல்லுங்க ஜெயந்த்... என்ன விஷயம்?

    டாக்டர்...! நானும் என்னோட மனைவி மித்ராவும் இப்போ ஹெலன் ஹாஸ்பிட்டலில் இருக்கோம்.

    உங்க மனைவி மித்ராவை டாக்டர் ரோகிணி செக் - அப் பண்ணிப் பார்த்துட்டாங்களா..?

    இல்ல டாக்டர்... இப்பத்தான் டாக்டரின் அறைக்குள்ளே போயிருக்கா... இன்னும் கொஞ்ச நேரத்துல ரிசல்ட் தெரிஞ்சுடும்.

    மறுமுனையில் டாக்டர் சிரித்தார்.

    இதோ பாருங்க ஜெயந்த்... நீங்க மனசைப் போட்டுக் குழப்பிக்கிறதுல ஒரு பிரயோஜனமும் கிடையாது. உங்களாலே எப்போதைக்குமே உங்க மனைவியைத் தாயாக்க முடியாது. இது ஒரு நூறு சதவீத உண்மை. உங்க மனைவி நிச்சயமா கன்சீவ் ஆகியிருக்க மாட்டாங்க...

    பதினஞ்சு நாள் தள்ளிப் போயிருக்கே டாக்டர்?

    அதுக்குக் காரணம் உங்க மனைவியின் உடம்போட பயலாஜிகல் க்ளாக்தான். உடம்பு அனீமிக்கா இருந்தாலும் இப்படி நாள் தள்ளிப் போகலாம்...

    டாக்டர்...! அவளுக்கு மார்னிங் சிக்னஸ் இருக்கு. தாளிக்கிற வாசம் பட்டா வாமிட் பண்றா. தலையைச் சுத்துது; மயக்கமாய் இருக்குன்னு சோர்ந்து சோர்ந்து படுத்துக்கறா... அதுவுமில்லாமே...

    "வெயிட்... வெயிட் மிஸ்டர் ஜெயந்த்... ஒரு பெண் ‘கன்சீவ்’ ஆனால்தான் இப்படிப்பட்ட அறிகுறிகள் இருக்கும்ன்னு சொல்லப்படுவது சரியில்லை... வயிற்றில்

    Enjoying the preview?
    Page 1 of 1