Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ரோஜா முள் கிரீடம்
ரோஜா முள் கிரீடம்
ரோஜா முள் கிரீடம்
Ebook112 pages37 minutes

ரோஜா முள் கிரீடம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அந்த நடுநிசி நேரத்தில் - வெள்ளக் கோவில் பஸ் ஸ்டாண்ட்டுக்குள் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழக பஸ் நுழைந்து - எஞ்சினின் உதறலை நிறுத்திக் கொண்டது.
 இந்து ஒரு பெரிய சைஸ் சூட்கேஸையும் ஒரு ப்ரீப் கேஸையும் எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள். கதவருகே நின்றிருந்த கண்டக்டர் நிஜமான வருத்தத்தோடு சொன்னார். "ஸாரிங்கம்மா...! பஸ் நடு வழியில ப்ரேக் டவுன் ஆகாம இருந்திருந்தா... பத்து மணிக்கெல்லாம் வெள்ளக்கோவில் வந்து சேர்ந்திருக்கலாம். இப்படி உங்களை அகால நேரத்ல இறக்கி விட்டுட்டு போறதுக்கு மனசு கஷ்டமாயிருக்கு...!"
 "பரவாயில்ல..."
 "நீங்க முத்தூர்தானே போகணும்...?"
 "ஆமா..."
 "இப்ப மணி ஒண்ணேகால்... இந்த நேரத்துக்கு உங்களுக்கு எந்த பஸ்ஸும் கிடைக்காது... விடிகாலையில அஞ்சு மணிக்குத்தான் பஸ்... அதுவரைக்கும் நீங்க இந்த பஸ் ஸ்டாண்ட்ல இருக்கிறது சரியில்லை. கொஞ்ச தூரம் நடந்தா பக்கத்துல - 'பாலாஜி நர்சிங் ஹோம்'ன்னு ஒரு ஹாஸ்பிடல் வரும்... அங்கே போயிட்டீங்கன்னா... விடியறவரைக்கும் பாதுகாப்பா இருந்துட்டு... மொத பஸ்ஸுக்கு போயிடலாம்"
 "தேங்ஸ்..."
 கண்டக்டர் விசில் கொடுக்க - பஸ் நகர்ந்தது. இந்து சூட்கேஸையும், ப்ரீப்கேஸையும் வைத்துக் கொண்டு அந்தக் குளிரில் அப்படியே நின்று - சுற்றும் முற்றும் பார்த்தாள். ஊர் அடங்கிப் போய் - இருட்டில் நிசப்தத்தில் இருந்தது. பஸ் ஸ்டாண்ட்டைச் சுற்றிலும் இருந்த கடைகள் பலகையினால் அடைக்கப்பட்டு அதன் முன்னேவிரித்த சாக்குத் துணிகளில் போர்வைகளை போர்த்துக் கொண்டு முடங்கியிருந்தார்கள். 'உர்ர் உர்ர்' என்ற உறுமல்களோடு பன்றிகள் சாக்கடையோரம் மோப்பம் பிடித்துக் கொண்டு அலைந்தன.
 இந்து, வலதுகையில் சூட்கேஸையும் இடது கையில் ப்ரீப்கேஸையும் எடுத்துக் கொண்டு மெதுவாய் நடந்தாள். கொஞ்சம் தூரம் போனதுமே டீக்கடையொன்று உயிரோடு இருப்பது தெரிந்தது. 'கிருஷ்ணா, முகுந்தா முராரே' என்று டேப்ரிக்கார்டர் கத்தியது. பாய்லரில் வெந்நீர் 'ஸ்ஸ்ஸ்' என்று இசை பாடிக் கொண்டிருக்க - அழுக்கான பனியன் லுங்கியோடு ஒரு ஆள் சினிமா வார இதழ் ஒன்றை புரட்டிக் கொண்டிருந்தான்.
 டீக்கடையை நெருங்கிய இந்து அவனை ஏறிட்டபடி கேட்டாள்.
 "பாலாஜி நர்சிங் ஹோமுக்கு எந்தப் பக்கம் போகணும்...?"
 அவன் புத்தகத்தினின்றும் கலைந்தான்.
 "என்ன கேட்டீங்க...?"
 "பாலாஜி நர்சிங் ஹோமுக்கு எப்படி போகணும்?"
 "ஊசியும் போட்டு காசும் கொடுக்கிற டாக்டரோட ஆஸ்பத்திரிதானே...? இப்படியே நேரா போய் வலது கை பக்கமா திரும்புங்க... ஆஸ்பத்திரி வரும்..."
 "தேங்க்ஸ்"
 "நோயாளியைப் பார்க்கப் போறதா இருந்தா... பன்னும், பொறை வர்க்கியும் வாங்கிட்டு போங்களேன்?" அவன் வியாபாரம் செய்யப் பார்த்தான்.
 "வேண்டாம்... நான் டாக்டரைப் பார்க்கத்தான் போறேன்..."
 "போங்க... டாக்ரோட, வீடும் ஆஸ்பத்திரியும் ஒண்ணாத்தான் இருக்கும். அவர் பெரும்பாலும் ஆஸ்பத்திரிலதான் இருப்பார்."
 "டாக்டரோட பேர் என்ன?பழனிகுமார்..."
 இந்து அவனுக்கு மறுபடியும் நன்றி சொல்லி விட்டு நகர - டீ குடிக்க வந்த ஒரு ஆசாமி டீக்கடைக்காரனிடம் பேசியது முதுகில் வந்து மோதியது.
 "ராசு! யார்ரா அந்தப் பொண்ணு...?"
 "வெளியூரு போலிருக்கு... டாக்டர் பழனிகுமாரை கேட்டுச்சு. சொல்லிவுட்டேன்..."
 "பொண்ணு 'திம்ன்'னு இருக்கா..."
 "கழுத்துல தாலி இருக்கு..."
 ''இருந்தா... என்னவாம்... பாரேன்... அவ இடுப்பு... அசையறதை...! பட்டணத்துப் பொண்ணு போலிருக்கு. அதான் இந்த ஷோக்கு..."
 இந்துவுக்கு இது மாதிரியான காமெண்ட்களை கேட்டுக் கேட்டு மனசு காய்த்து போயிருந்தது. எனவே பொருட்படுத்தாமல் நடந்தாள். சூட்கேஸின் பாரம் கையை இழுக்க தோள்பட்டை இற்று விடுவதைப் போல் வலித்தது. பொறுத்துக் கொண்டு நடந்தாள். வலதுகை பக்கம் ரோடு திரும்ப -
 ஹாஸ்பிடல் கட்டிடம் வெளிச்சமாய் தெரிந்தது. கட்டிடத்தின் நெற்றியில் பாலாஜி நர்ஸிங் ஹோம் - 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனை. கீழே - டாக்டர் பழனிகுமார் M.S. என்ற வாசகங்கள் பளீரென்று மின்னின. வாசலில் ஒரு மாருதி கார் நின்றிருந்தது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 14, 2023
ISBN9798223771159
ரோஜா முள் கிரீடம்

Read more from Rajeshkumar

Related to ரோஜா முள் கிரீடம்

Related ebooks

Related categories

Reviews for ரோஜா முள் கிரீடம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ரோஜா முள் கிரீடம் - Rajeshkumar

    1

    புஷ்பகிரி வேலாயுதசாமி கோயிலின் மலைகோபுர விளக்கு மட்டும் ஒரு வைரக்கல் மாதிரி ஜொலித்துக் கொண்டிருக்க - அந்தப் பகுதி முழுவதும் கரிச்சுரங்கம் மாதிரி இருண்டு கிடந்தது. நடுநிசி வானத்தில் நட்சத்திர குழந்தைகள் மேகக் குவியல்களுக்கு மத்தியில் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்க - எண்பது சதவீதம் தேய்ந்து போன நிலா வீரியமிழந்து தெரிந்தது. காற்று, மரங்களின் கிளைகளை அசைத்துப் பார்க்க - இருட்டான வயல் பரப்புக்கு நடுவே - அந்த இரண்டு பெண்களும் வேகம் வேகமாய் நடந்து கொண்டிருந்தார்கள். இரண்டு பேருமே இளம் பெண்கள்.

    இருவரும் வியர்த்திருந்தார்கள். கண்களில் பயம் இருந்தது. நிமிஷத்திற்கொருதரம் திரும்பிப் பார்த்துக் கொண்டார்கள்.

    சொர்ணம்...

    என்ன அகிலா...?

    இப்படி வயலுக்கு குறுக்கால பூந்து போனா... போலீஸ் ஸ்டேஷன் பக்கம்ன்னு சொன்னே...? பதினஞ்சு நிமிஷமா நடக்கிறோம். இன்னும் பொட்டு வெளிச்சத்தைக் காணோமே...

    இனி கொஞ்ச தூரம்தான்

    நாம தப்பிச்சு வந்ததை யாராவது பார்த்திருப்பாங்களா?

    "பார்த்திருக்க சான்ஸேயில்லை...’’

    இவ்வளவு நாளும் எப்படி ஏமாந்து போயிருக்கோம்... பாட்டு, பஜனை, ப்ளாக் போர்டுல எழுதி வைக்கிற பொன்மொழி, அருள் வாக்கு எல்லாமே வேஷம்...

    பேரைப் பாரு தவமணி தேவி...

    பழைய செருப்பை கரைச்சு வெச்ச சாணியில் தொட்டு முச்சந்தியில் அவளை நிக்க வெச்சு உச்சந்தலையில ‘மடேர் மடேர்’ன்னு அடிக்கணும்...

    நீ ஆசைபட்டபடி நாளைக்கே அடிக்கலாம்.

    தொலைவில் லாரி ஒன்று ‘ரொய்ங்ங்’ உறுமிக் கொண்டு போகும் சத்தம் கேட்டது. சொர்ணம் சொன்னாள்.

    மெயின் ரோட்டை நெருங்கிட்டோம்...

    பார்த்து வா... இந்தப் பக்கம் சேறு... காலை எசகு பிசகா வெச்சுடாதே... முழங்கால் வரைக்கும் உள்ளே போயிடும்...

    அந்த தவமணி தேவியை இந்த சேத்துல போட்டு புரட்டி எடுக்கணும்... அவ இடுப்புல ஓங்கி ஓங்கி மிதிக்கணும்.

    நாளைக்கு செய்யத்தான் போறோம்...

    இருவரும் பிறகு வந்த பத்து நிமிஷங்களில் வயல் வரப்பைக் கடந்து மெயின் ரோட்டின் விளிம்புக்கு வந்து சேர்ந்திருந்தார்கள்.

    போலீஸ் ஸ்டேஷன் இங்கிருந்து எவ்வளவு தூரம்?

    அதோ...! மினுக் மினுக்ன்னு வெளிச்சம் தெரியுதே... அதான் போலீஸ் ஸ்டேஷன்.

    ரொம்ப தூரம் இருக்கும் போலிருக்கு?

    முக்கா கிலோ மீட்டர் இருக்கும்... நடையை எட்டிப் போடு... சீக்கிரமா போய் சேர்ந்துக்கலாம்...

    தினமும் ப்ரேயர் முடிஞ்சதும் அந்த தவமணி தேவி என்ன சொல்லுவா?

    மாதராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா

    அந்த சிரிப்பு, பேச்சு, கண்ல தெரியற பாசம் எல்லாமே பொய்யி...

    அவளை நினைச்சாலே பத்திகிட்டு எரியுது...

    அந்த மைல்கல்லு மேல கொஞ்ச நேரம் உட்காருவமா... காலெல்லாம் கெஞ்சுது...

    சாவகாசமா உட்கார்ந்து பெருமூச்சு விடற நேரமா இது...? நடையை எட்டிப் போடு... சீக்கிரமே ஸ்டேஷன் போயிடலாம்...

    இருவரும் பேசிக் கொண்டே - விசுக் விசுக்கென்று வேகமாய் நடந்தார்கள். போலீஸ் ஸ்டேஷனின் ‘மினுக் மினுக்’ வெளிச்சம் பெரிதாகிக் கொண்டே வந்தது. போர்டு தெளிவாய் - சமீபத்திய புது பெயிண்டில் பளபளத்தது.

    முத்தூர் காவல் நிலையம்.

    வாசலில் ஒரு பைக் நின்றிருந்தது.

    அப்பாடி! ஒரு வழியா ஸ்டேஷனுக்கு வந்துட்டோம்.

    இன்ஸ்பெக்டர்கிட்டே விபரத்தை நீதான் சொல்லணும். எனக்கு போலீஸைப் பார்த்தாலே நாக்கு மேலண்ணத்துல போய் ஒட்டிக்கும்...

    நானே சொல்றேன். வா...

    ஸ்டேஷன் வாசலை மிதித்தபோது - கான்ஸ்டபிள் ஒருவர் மறித்தார்.

    ஏய்... யார் நீங்க...?

    அய்யா! நாங்க இன்ஸ்பெக்டரை பார்க்கணும்...

    என்ன விஷயம்...?

    அதை அவர்கிட்டதாங்க சொல்லணும் அகிலா சொல்லிக் கொண்டிருக்கும் போதே - உள்ளேயிருந்து அந்த நரைகிராப் இன்ஸ்பெக்டர் எட்டிப் பார்த்தார்.

    வாசல்ல யார் பொன்னுசாமி...?

    ரெண்டு பொண்ணுங்க ஸார். உங்களை பார்க்கணும்னு... வந்திருக்கு...

    உள்ளாற விடு...

    கான்ஸ்டபிள் நகர்ந்து கொள்ள - சொர்ணமும் அகிலாவும் வியர்த்த முகங்களை சேலைத் தலைப்பால் ஒற்றிக் கொண்டு உள்ளே போய் அந்த நடுத்தர வயது இன்ஸ்பெக்டரைப் பார்த்து கும்பிட்டார்கள். அவருடைய தலைக்கு மேலே புஷ்பகிரி வேலாயுதசாமியின் படம் மாட்டப்பட்டு மல்லிகைச் சரமொன்று கும்மென்று மணத்துக் கொண்டிருந்தது.

    இன்ஸ்பெக்டர் தணிகாசலம் தான் பார்த்துக் கொண்டிருந்த ஒரு ஃபைலை ஒதுக்கிவிட்டு நிமிர்ந்தார். கண்களில் கனிவு இழையோட கேட்டார். வாங்கம்மா... என்ன விஷயம்...?

    அகிலா மறுபடியும் கும்பிட்டாள். அய்யா! நாங்க ரெண்டு பேரும்... மலையடிவாரத்துக்குப் பக்கத்துல இருக்கிற ‘தாய் உள்ளம்’ அநாதை விடுதியைச் சேர்ந்த பெண்கள். முணு மாசத்துக்கு முன்னாடிதான் அந்த அநாதை விடுதியில் வந்து சேர்ந்தோம்...

    ‘‘சரி..."

    அந்த அநாதை விடுதியை நிர்வாகம் பண்ணிட்டு வர்ற தவமணி தேவி அம்மாவை நல்லவங்கன்னு நினைச்சிட்டிருந்தோம். ஆனா...

    தணிகாசலம் நிமிர்ந்தார்.

    ஆனா...?

    அந்த அம்மா ரொம்பவும் மோசமான பொம்பளைங்க... அநாதை விடுதின்னு பேரை வெச்சுகிட்டு விபச்சார விடுதியை நடத்திட்டிருக்கா...

    தணிகாசலம் நாற்காலியினின்று விருட்டென்று எழுந்தார். என்னது... விபச்சார விடுதியா...?

    ஆமாங்கய்யா...! ஒரு மணி நேரத்துக்கு முந்தி இந்தப் பொண்ணு சொர்ணம் பாத்ரூம் போகணும்ன்னு சொல்லி என்னை எழுப்பினா. எந்திரிச்சு ரெண்டு பேரும் போனோம். நாங்க வராந்தா இருட்டுல போய்கிட்டிருக்கும் போதே - வாட்ச்மேன் காம்பெளண்ட் கேட்டை திறக்கிற சத்தமும் - உள்ளே ஒரு கார் வர்ற சத்தமும் கேட்டது. இந்நேரத்துக்கு கார்ல யார் வர்றாங்கன்னு.... யோசிச்சு, அப்படியே நின்னுட்டோம்.

    இன்ஸ்பெக்டர் தணிகாசலம் பதட்டமானார்.

    ம்... சொல்லு.... அப்புறம்...?

    "கார் ஓரமா போய் நின்னதும்... அதிலிருந்து தவமணி தேவியும் ஒரு ஆளும் இறங்கினாங்க. அந்த ஆள் நீட்டா ட்ரஸ்

    Enjoying the preview?
    Page 1 of 1