Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தோட்டா ஃப்ரம் தொட்டபெட்டா
தோட்டா ஃப்ரம் தொட்டபெட்டா
தோட்டா ஃப்ரம் தொட்டபெட்டா
Ebook93 pages30 minutes

தோட்டா ஃப்ரம் தொட்டபெட்டா

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"ப்ரீதி... ப்ரீதி..."
 பதற்றமாய்க் குரல் கொடுத்துக் கொண்டே - உத்தேசமாய் மேகப்புகைக்குள் நடந்தான் விமல்குமார்.
 பனி மேகம் தன் அடர்த்தியை குறைத்துக் கொண்டு விலக -
 கண்ணெதிரிலே தடுப்பு சுவர் மோதியது. வேகமாய் அதை நோக்கி ஓடினான்.
 "ப்ரீதி... ப்ரீதி..."
 தடுப்புச் சுவரில் கையை ஊன்றி மறுபக்கம் பார்த்தான்.
 பள்ளத்தாக்கு 'ஹோ'வென்று விரிந்தது.
 மனசுக்குள் பய எந்திரம் ஒன்று வேகமாய்ப் பற்சக்கரங்களைச் சுழற்ற ஆரம்பித்தது.
 "ப்ரீதி."
 அவன் குரல் அந்தப் பள்ளத்தாக்கின் பாறைகளில் எதிரொலித்து விட்டுத் தேய்ந்து நிசப்தமாகியது
 அவன் இதயம் முறிந்து கொண்டிருந்த அந்த வினாடி –
 "உங்க டாட்டர் இங்க இருக்கா... ஸார்."
 ஒரு குரல் காருக்குப் பக்கத்திலிருந்து கேட்டது பெண் குரல்.
 திரும்பினான்.
 பார்த்ததுமே மனசை ஈர்க்கிற முகத்தோடு அந்தப் பெண் நின்றிருந்தாள். அவள் தோளில் துவண்டிருந்தாள் ப்ரீதி.
 வேகவேகமாய் அவளிடம் வந்தான் விமல்குமார்.ப்ரீதிக்கு ஒண்ணும் ஆகலையே?"
 "இவ்வளவு அஜாக்கிரதையா இருக்கலாமா சார்! நான் மட்டும் இந்த வழியா வந்திருக்கலைன்னா... நீங்க இப்ப உங்க ப்ரீதியை பாத்திருக்க முடியாது... உங்க பாட்டுக்கு கார் பானட்டுக்குள்ளே தலையைக் குனிஞ்சுகிட்டீங்க. பூவை பறிக்கிற ஆசையில் குழந்தை தடுப்புச் சுவர்க்கு மேலே ஏறிட்டா. குழந்தைகளை வெளியே கூட்டிட்டு வந்தா... பார்வை அவங்க மேலேயேத்தான் இருக்கணும். இது பல பேரண்ட்ஸ்களுக்கு தெரியறதே இல்லை."
 "ஸாரி! நான் கவனிக்கலை... உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே?"
 "நீங்க உங்க அஜாக்ரதையை உணர்ந்தாலே போதும்...! குழந்தை அதிர்ச்சியில் மயக்கமாய்ட்டா...! நடக்க இருந்த விபரீதத்தை நீங்க உணரணும்ங்கிறதுக்காகவே - இவளை எடுத்துகிட்டு சுவர் தடுப்பைவிட்டு காருக்குப் பின்னால வந்து நின்னுட்டேன்... தண்ணி இருந்தா எடுங்க..."
 விமல்குமார் கார்க் கதவை விரித்து - ப்ரீதியின் வாட்டர் கேனை வெளியே எடுத்தான். நீரைக் கைக்கு வார்த்து ப்ரீதியின் முகத்துக்குத் தெளித்தான்.
 அடுத்த ஒரு நிமிஷத்துக்குள் ப்ரீதி கண்களை பிரித்தாள்.
 கண்களை அலையவிட்டு - சுற்றும் முற்றும் பார்த்தவள் - தன்னைத் தோளில் சாய்த்துக் கொண்டிருக்கும் அவளை பார்த்தவுடன் -
 "குட்மார்னிங் டீச்சர்." என்றாள்.
 விமல்குமார் ஆச்சர்யத்துடன் அவளைப் பார்த்தான்.
 "நீ... நீங்க... இவளோட டீச்சரா?"
 "எஸ்..." தலையசைத்தாள் அவள்.
 "அடிக்கடி உங்களைப் பத்தி ப்ரீதி சொல்லுவா... எப்பவாவது ஒரு நாள் உங்களை வந்து மீட் பண்ணனும்னு கூட நினைச்சுகிட்டிருந்தேன்...!"நான் எட்டரைக்கெல்லாம் இந்த இடத்தை க்ராஸ் - பண்ணிப் போயிடுவேன். இன்னிக்கு வீட்டில் புறப்படறப்பவே லேட் ஆயிருச்சு..."
 "ப்ரீதியோட நல்ல நேரம்தான்... வாங்க ஸ்கூலுக்கு காரிலேயே போயிடலாம்."
 ஒரு விநாடி தயங்கினவள் -
 விமல்குமார் சற்று பவ்யம் கலந்த பார்வையுடன் காரின் கதவைத் திறந்து விட்டு இருக்கையைப் பார்த்துக் கைகாட்டியதும்.
 முறுக்கத் தோன்றாமல் உள்ளே போனாள். கதவை சாத்திவிட்டு - ட்ரைவிங் சீட்டுக்கு வந்து - காரை ஸ்டார்ட் செய்தான். ப்ரீதி சொன்னாள்.
 "அந்தப் பூ. கைக்கு எட்டவேயில்லை டாடி..."
 "இரு... இரு... உன்னை வீட்டுக்கு போய் கவனிச்சுக்கிறேன்."
 "யூ ஆர் ராங் சார்! நம்ம அஜாக்கிரதைக்கு குழந்தையை திட்டறதில் எந்த அர்த்தமுமில்லை. தப்பு உங்க மேலதான்! இந்த மாதிரி துருதுருப்பான குழந்தைங்க மேல எப்பவுமே நாம ஒரு கண் வெச்சிருக்கணும்..."
 "ஐ அக்ரி வித் யூ..."
 அந்த ஹேர்பின் வளைவை விழுங்கியது கார்.
 "மே ஐ நோ யுவர் குட் நேம்...?"
 "சரிதா."
 "ரெஸிடென்ஸ் எங்கே?"
 "மவுண்ட் வியூ! சொந்த ஊர் ஊட்டி... தொட்டபெட்டா ஏரியா"
 "பேமிலி?"அப்பா இல்லை! அம்மாவும், நானும்தான்!"
 சமப்படுத்தப்பட்ட தளத்தில் கான்வென்ட் தெரிந்தது யூனிஃபார்மில் குழந்தைகள் ப்ரேயருக்காக அணிவகுத்து நின்றிருந்தார்கள்.
 காம்பவுண்ட் கேட் அருகே - காரை நிறுத்தினான்.
 ப்ரீதி புத்தகப் பையையும், சாப்பாட்டு பேகையும் அள்ளிக் கொண்டு ஓடினாள்.
 "டாடி... டாட்டா"
 "ஸ்கூலுக்குப் போறதுன்னா அவளுக்கு ரொம்ப இன்ட்ரெஸ்ட்."
 புன்னகைத்து ஆமோதித்தாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 14, 2023
ISBN9798223757887
தோட்டா ஃப்ரம் தொட்டபெட்டா

Read more from Rajeshkumar

Related to தோட்டா ஃப்ரம் தொட்டபெட்டா

Related ebooks

Related categories

Reviews for தோட்டா ஃப்ரம் தொட்டபெட்டா

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தோட்டா ஃப்ரம் தொட்டபெட்டா - Rajeshkumar

    1

    ராபின் சொட்டு நீல நிறத்திலிருந்த அந்த மாருதி கார் மலைப் பாதையில் ‘ம்ம்ம்’மென்ற உறுமலோடு ஏறிக் கொண்டிருந்தது. ஸ்டிரியங்கைக் கையாள்பவன் விமல்குமார். மஹாராஷ்டிரா மாநிலம் பம்பாய்க்கும் - பூனாவுக்கும் இடைபட்ட ரங்வாலா ஹில் ஸ்டேஷன் அது.

    விமல்குமாருக்கு, இடதுபக்கம் ஒரு பெரிய புத்தக மூட்டை. அதற்குப் பக்கத்தில் ஒயர் கூடைக்குள் திணிக்கப்பட்ட சிறிய டிபன் காரியர், அதற்கு அப்பால், ஜன்னலுக்கு தவ்விக் கொண்டு வெளிப்புறக் காட்சிகளை உற்சாகமாய் வேடிக்கை பார்த்தபடி எட்டு வயது ப்ரீதி

    ஸ்கூல் யூனிபார்மில் நிரம்பியிருந்த ப்ரீதி -

    பெரிய மனுஷி தோரணையில் விமல்குமாரை? பார்த்துக் கேட்டாள்.

    டாடி... டயம் எத்தனை?

    எட்டு அம்பது...

    வாட்சைப் பார்த்துவிட்டு சிரித்துக் கொண்டே அவர் சொல்ல - தன் சின்ன முகப்பரப்பில் கோபத்தைக் கொண்டு வந்தாள் ப்ரீதி.

    நாம ஸ்கூல் போறதுக்குள்ளே லேட்டாயிடும். டீச்சர் என்னைத் திட்ட போறாங்க..

    ஸ்கூல் பக்கத்தில் வந்தாச்சு! நீ பத்து எண்ணறதுக்குள்ளே ஸ்கூல் காம்பவுண்டுக்குள்ளே போயிரலாம்...

    பார்க்கலாமா?

    ஓ எஸ்...

    கியரை மாற்றி ஆக்சிலேட்டரை மிதித்தான் விமல்குமார்.

    கார் பத்தடி தூரம் கூட நகர்ந்திருக்காது.

    கண்ணாடிக்கு முன்னால் குபுகுபுவென்று புகை மண்டலம் ஒன்று உற்பத்தியாகித் தெரிந்தது.

    விமல்குமார். புருவங்களைச் சுருக்கிக் கொண்டு காரை ஓரங்கட்டி நிறுத்தினான்.

    ஏன் டாடி காரை நிறுத்திட்டிங்க...

    கேட்டுக் கொண்டே திரும்பினவள் பானட் இடுக்குகளிலிருந்து கோஷ்டி கோஷ்டியாய் வெளியேறி வரும் புகை மண்டலத்தைப் பார்த்ததும் கீச்சலாய்க் கத்தினாள்.

    என்ன டாடி.. ஒரே புகை...!

    ஒண்ணுமில்லை. ரேடியேட்டர் பாயிலாயிடுச்சு. வாட்டரை லெவல் பண்ணினாப் போதும்...!

    அவன் சொன்னது புரிந்ததோ, புரியவில்லையோ.. மொத்தத்தில் ஸ்கூலுக்கு லேட் ஆகப் போகிறதென்பதை - உணர்ந்து கொண்டு அப்பாவை கோபமாய் பார்த்தாள்.

    விமல்குமார் அவளின் தலையைக் கோதிவிட்டு -

    "டீச்சர் கிட்டே நான் சொல்லிக்கறேன்மா. ‘பயப்படாதே’ என்றான்.

    பின் சீட்டுக்குப் பின்னால் கேனில் இருந்த தண்ணீரை எடுத்துக் கொண்டு பானட்டுக்கு வந்தான் விமல்குமார்.

    காரை விட்டுக் கீழே இறங்கின ப்ரீதி - அந்த சுற்றுச் சூழலைப் பார்த்துவிட்டு விநாடிக்குள்ளாக பள்ளிக் கூடத்தை மறந்து போனாள்.

    டாடி! இந்த இடம் எவ்வளவு அழகா இருக்கு?

    உனக்கு பிடிச்சிருக்கா?

    ம்... என்றவள் டாடி! நான் அந்த பூவை பறிச்சுகிட்டு வரட்டுமா? கேட்டாள்.

    பத்திரம்

    விமல்குமார் பானட்டில் தீவிரமாய்க் குனிந்திருந்த போது - ப்ரீதி ரோட்டின் மறுபக்கத்தை அடைந்தாள். ரோட்டோரம் வளர்ந்திருந்த ஆவாரம் பூக்களை பறித்துக் கொண்டே -

    தடுப்புச் சுவருக்கப்பால் எட்டிப்பார்த்தாள்.

    சரிவான பள்ளத்தாக்கு.

    தவறி விழுந்தால் சரிவின் தரையைத் தொட அரை மணி நேரமாவது ஆகும்.

    தடுப்புச் சுவரின் மறுபக்க விரிசல்களில் வேர் விட்டிருந்த சின்னச் சின்ன செடிகளில் ஊதாநிற பூக்கள் கொத்து கொத்தாய் தெரிய -

    ப்ரீதி எம்பி அவைகளைப் பறிக்க முயன்றாள்.

    பூக்கள் ப்ரீத்தியின் கைக்கு எட்ட மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தது.

    காற்றில் ஆடுகிறபோது - அவள். கையோரம் லேசாய்த் தடவி விட்டு பிறகு, விலகிக் கொண்டு கண்ணாமூச்சி காட்டியது பூச்செடிகள்.

    அதைப் பறித்தே ஆக வேண்டுமென்கிற தீவிரம் ப்ரீதியின் மனசை ஆக்ரமித்துக் கொள்ள – முயற்சியை தொடர்ந்தாள்.

    அப்போதுதான் அந்த அடர்த்தியான மேகம் சுற்றுப் புறத்தைப் புகையாய் போர்த்திக் கொண்டு அவளைக் கடந்தது.

    ரேடியேட்டர் வேலையை முடித்துக் கொண்டு பானட்டைச் சாத்தின விமல்குமாருக்கு திடீரென்று ப்ரீதியின் வீறிடலான அலறல் குரல் தடுப்புச் சுவருக்கு அப்பாலிருந்து கேட்டது.

    டாடீ... ஈ... ஈ... ஈ...

    குரல் வந்த திசைக்கு அவசரமாய்த் தலையைத் திருப்பினான்.

    அடர்த்தியான மேகம் சுற்றுப் புறத்தைக் கனமாக மூடியிருக்கவே - கண்ணுக்கு முன்னால் எதுவுமே அவனுக்குப் புலப்படவில்லை.

    மனசைப் பதட்டம் ஆக்ரமிக்க - குரல் வந்த தடுப்புச் சுவரை நோக்கி - தட்டுத் தடுமாறி நடக்க ஆரம்பித்தான்.

    2

    "ப்ரீதி... ப்ரீதி..."

    பதற்றமாய்க் குரல் கொடுத்துக் கொண்டே - உத்தேசமாய் மேகப்புகைக்குள் நடந்தான் விமல்குமார்.

    பனி மேகம் தன் அடர்த்தியை குறைத்துக் கொண்டு விலக -

    கண்ணெதிரிலே தடுப்பு சுவர் மோதியது. வேகமாய் அதை நோக்கி ஓடினான்.

    ப்ரீதி... ப்ரீதி...

    தடுப்புச் சுவரில் கையை ஊன்றி மறுபக்கம் பார்த்தான்.

    பள்ளத்தாக்கு ‘ஹோ’வென்று விரிந்தது.

    மனசுக்குள் பய எந்திரம்

    Enjoying the preview?
    Page 1 of 1