Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அக்கரை சிவப்பு
அக்கரை சிவப்பு
அக்கரை சிவப்பு
Ebook78 pages24 minutes

அக்கரை சிவப்பு

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மும்பை.
 பெயர் மட்டுமே மும்பை என்று மாற்றப்பட்டிருக்க - அதே பழைய சுறுசுறுப்போடும், ஜனநெரிசலோடும், மப்பும் மந்தாரமுமான 'எந்த நிமிஷமும் மழை வந்துவிடும்' என பயமுறுத்தும் வானத்தோடும் அப்படியே இருந்தது நகரம்.
 சிவா பெரிய ரோலர் சூட்கேசை டாக்சியில் திணித்தான். நித்யா அதிக கனமில்லாத பெட்டி ஒன்றைக் கையில் தாங்கி இருந்தாள்.
 டாக்சி டிரைவர் டிக்கியை அறைந்து சாத்தினான்.
 "ஸாப்... சலே...?"
 "சலே..."
 நித்யாவும், சிவாவும் பின் ஸீட்டில் நிரம்பினார்கள்.
 கார் போக்குவரத்து நிரம்பி வழியும் சாலையில் ஏர்போர்ட்டை நோக்கி நீந்திச் செல்ல ஆரம்பித்தது.
 "ஏழு மணிக்கு ஃப்ளைட்... அதுக்குள்ளே போய்டுவோமா அண்ணா...?"
 தலையசைத்தான் சிவா.
 "இங்கிருந்து ஏர்போர்ட் பக்கம்தான்... பத்தே நிமிஷத்தில் நாம ஏர்போர்ட்டில் இருப்போம்..."
 "த்ரில்லிங்கா இருக்குண்ணா... அவரைப் பார்க்கப் போறோம்ங்கிறது ஒரு த்ரில்... முதல்முதலா விமானத்தில் பயணம் பண்ணப் போறோம்ங்கறது ரெண்டாவது த்ரில்..."
 புன்னகைத்தான் சிவா

"எனக்கும் இதுதான் முதல் ஃப்ளைட் பயணம்... சின்ன தனியார் கம்பெனியில் கிளார்க்கா குப்பை கொட்டற எனக்கு உன் மூலமா அடிச்ச யோகம் இது... நீ வாழ்க... உன்னோட வீட்டுக்காரர் வாழ்க..."
 "ஸ்கூல்ல படிக்கறப்ப ஒரு தடவை ஏர்போர்ட்டுக்கு கூட்டிப்போய்க் காமிச்சிருக்காங்க... ஃப்ளைட் லேண்ட் ஆகறதையும், டேக் ஆஃப் ஆகறதையும் கண்ணாடித் தடுப்புக்கு இந்தப்பக்கமா நின்னு வேடிக்கைப் பார்த்துட்டு வந்தோம்..."
 "ஃப்ளைட்டில் ஏறி வெளிநாடு போவோம்ன்னு அப்போ நீ கனவில்கூட நினைச்சிருக்கமாட்டே... இல்லே...?"
 புன்னகைத்துத் தலையசைத்தாள் நித்யா.
 "புது இடம்... புது அனுபவம்... எங்கே போறது... என்ன பண்றதுன்னு தெரியாம ரெண்டு பேரும் பேந்தப் பேந்த விழிக்கப் போறோம்..."
 "அங்கேதான் தப்பு பண்றே... உன் அண்ணன் சிவா அப்படியெல்லாம் எங்கேயும் போய் விழிக்கமாட்டான்... சரியான ஏற்பாட்டோடதான் கிளம்பி வருவான்..."
 "என்ன சொல்றே...?"
 "நாம மும்பை ஏர்போர்ட்டில் திருதிருன்னு விழிக்க வேண்டிய அவசியமே இல்லை... நம்மை கைட் பண்றதுக்கு அங்கே ஆள் இருக்கு..."
 "என்கொயரி கவுண்ட்டர்ல கேட்டுக்கலாம்ன்னு சொல்றியா...? நம்ம நாட்டுல என்கொயரி கவுண்ட்டர்கள்ல ஆளே இருக்கமாட்டாங்க... அப்படியே இருந்தாலும் பொறுமையாவும், சிரிச்ச முகத்தோடும் பதில் சொல்றவங்களா இருக்கமாட்டாங்க..."
 "இல்லே நித்யா... மும்பை ஏர்போர்ட்ல நமக்கு வேண்டிய ஆள் இருக்காங்க..."
 "யாரு...?"
 "கணேஷ்..."
 "கணேஷா...? எந்த கணேஷ்...?"நான் காலேஜில் படிக்கறப்ப நம்ம வீட்டுக்கு கம்பைன்ஸ்டடி பண்றதுக்காக வருவானே... என் கிளாஸ்மேட்... கணேஷ்... ஞாபகமிருக்கா...?"
 "ஒல்லியா... உயரமா..."
 "அவனேதான்... இப்போ நல்லா குண்டாயிட்டான்... அவன் மும்பை ஏர்போர்ட்லதான் வேலை பார்க்கறான்..."
 "அப்படியா... என்னவா இருக்கார்...?"
 "ஏர் ட்ராஃபிக் கண்ட்ரோலர்ன்னு சொன்னாங்க... நேத்திக்கு ஏதேச்சையா ஒரு ஃப்ரெண்டைப் பார்த்தப்பதான் இந்த விபரம் தெரிஞ்சது... கணேஷைப் போய்ப் பாரு... எதுன்னாலும் ஹெல்ப் பண்ணுவான்னு சொல்லியனுப்பினான்..."
 "அந்த அண்ணனை எனக்கு நல்லாத் தெரியுமே... நம்ம வீட்டுக்கு வந்தா வரிஞ்சு கட்டிட்டு வீட்டு வேலைகளை செஞ்சு குடுப்பார்... வேண்டாம்ன்னு சொல்லச் சொல்ல எத்தனை நாள் பைப்பில் தண்ணி பிடிச்சு ஊத்தியிருக்கார்..."
 "ஹெல்ப்பிங் டென்டன்சி அவனுக்கு ஜாஸ்தி..."
 டாக்சி வேகம் குறைந்தது.
 மெர்க்குரி வெளிச்சத்தில் குளிக்கும் ஏர்போர்ட்டின் முகப்பு வாயிலில் பிரவேசித்து போர்டிகோ ஓரமாய் டயர்களைத் தேய்த்து நின்றது.
 டிரைவர் இறங்கி டிக்கியைத் திறந்து தர, பெரிய ரோலர் சூட்கேசை மார்பிள் தரையில் இறக்கினான் சிவா.
 மீட்டர் பார்த்து சார்ஜைத் தந்தான்.
 டீசல் வாசனையை இறைத்துவிட்டு டாக்சி சென்று விட –
 நித்யாவும், சிவாவும் திரும்பி லவுன்ஜை நோக்கி நடந்தார்கள்.
 இன்னும் அரை மணி நேரத்தில் கிளம்ப இருக்கிற ஏர் இந்தியா விமானத்துக்காக நிறையப் பேர் காத்திருந்தார்கள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 15, 2023
ISBN9798223838272
அக்கரை சிவப்பு

Read more from Rajeshkumar

Related to அக்கரை சிவப்பு

Related ebooks

Related categories

Reviews for அக்கரை சிவப்பு

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அக்கரை சிவப்பு - Rajeshkumar

    1

    நித்யா சப்தமிடும் டெலிபோனின் ரிசீவரை ஆவலோடு வாரி எடுத்தாள்.

    இருபத்தியொரு வயது நித்யா. இளமை அவள் உடம்பின் ஒவ்வொரு அங்குலத்திலும் விசா வாங்கிக்கொண்டு குடியேறி இருந்தது. பால்கோவா நிற நெற்றி மையத்தில் வசீகரமாய்க் குங்குமப் பொட்டு, சங்குக்கழுத்தில் தங்கச்சங்கிலியோடு கனமான தாலிக்கொடியும் தவழ்ந்தது.

    ஹலோ... குரல் ஐஸ் வாட்டர் குளிர்ச்சியுடன் ரிசீவரில் இறங்கியது.

    ஹலோ நித்யாவா...?

    மறுமுனையிலிருந்து பரபரப்பாய் மனோஜின் குரல் கிணற்றுக்குள்ளிருந்து பேசுவதைப் போல் வெகு ஆழத்தில் கேட்டது.

    பரபரப்பு நித்யாவையும் தொற்றிக் கொண்டது.

    அவன் குரலைக் கேட்ட சந்தோஷத்தில் மூச்சுத் திணறப் பேசினாள்.

    நித்யாதாங்க பேசறேன்... எப்படி இருக்கீங்க...?

    நல்லாயிருக்கேன்... நீ...?

    ம்... இருக்கேங்க...

    உன் அண்ணன் சிவா...?

    அவரும் நல்லாருக்கார்.

    போன வாரம் நான் அனுப்பி வெச்ச பணம் கைக்கு வந்து சேர்ந்ததா... என்கேஷ் பண்ணிட்டீங்களா...?

    ம்...

    வரி நீங்கலாக ஐந்து லட்சத்தி சொச்சம்...! என்னோட ஒருவருஷத்திய உழைப்பு... என்ன சுரத்தே இல்லாம ஒரு ‘ம்’...?

    நமக்குக் கல்யாணமாகி இன்னியோட சரியா ஒரு வருஷம் ஆயிடுச்சுங்க... ஆனா முழுசா ஒரு மாசம்கூட நாம சேர்ந்து இருக்கலை. அரைகுறையா ஹனிமூன். துபாயில் வேலை கிடைச்சு மூணாவது வாரமே நீங்க ஃப்ளைட்ல அபுதாபிக்குப் பறந்துட்டீங்க... லெட்டர்ல உங்க கையெழுத்து... போன்ல உங்க குரல்... இதான் நான் கண்ட தாம்பத்யம்...

    நித்யா...

    நமக்கு ஒரு வாரம் கழிச்சுக் கல்யாணம் ஆச்சே உங்க சித்தப்பா மக பத்மா... அவளுக்கு கொழுக் மொழுக்ன்னு அழகா ஒரு பையன் பொறந்திருக்கான்...

    நித்யா வாழ்க்கைக்குப் பணம் முக்கியமில்லையா?- பணம் இருந்தாத்தான் நாலு பேர் நம்மை மதிப்பாங்க. எனக்கு மட்டும் குழந்தை ஆசை இல்லையா என்ன...? நிறைய இருக்கு... ஆனா நம்ம குழந்தையை நம்மை மாதிரியே மிடில் கிளாஸ் கஷ்டங்களோட ஏனோதானோன்னு வளர்க்கறதில் எனக்குக் கொஞ்சமும் இஷ்டம் இல்லை... கேட்டதெல்லாம் வாங்கித் தரணும்... நிராசையேகூடாது... அதுக்கு நிறைய பணம் வேணும்... அந்தப் பணத்தை சம்பாதிக்கத்தான் பல்லைக் கடிச்சுகிட்டு இந்தப் பாலைவனத்தில் இருக்கேன்...

    நீங்க ஆயிரம்தான் காரணம் சொல்லுங்க... என் நெஞ்சில் சுத்தமா நிம்மதியில்லைங்க... இன்னிக்கு நம்ம முதல் வெட்டிங் டே... நாளும் கிழமையுமா உங்களோட ஒண்ணா சேர்ந்து கோயிலுக்குப் போறதுக்குக்கூட விதியத்தவளா இருக்கேனே...

    பேசப் பேசவே உடைந்து போய்க் குலுங்கி அழ ஆரம்பித்தாள் நித்யா.

    ஏய் நித்யா... அழாதே...

    விசித்துக்கொண்டே குமுறினாள். எப்படிங்க அழாம இருக்க முடியும்...?

    காம் டவுன் ப்ளீஸ். இன்னிக்கு நம்ம கல்யாண நாள்ன்னுதான் ஆசை ஆசையா உனக்கு கால் பண்ணினேன்... நீ இப்ப என் மூடையும் சேர்த்து ஸ்பாயில் பண்றே...

    நித்யா அழுகை வெள்ளத்திற்குப் பிரயத்தனப்பட்டு அணை போட்டாள்.

    மனசு தாளாம அழுதுட்டேன்... என்னை மன்னிச்சுக்குங்க... எனக்காவது ஆறுதல் சொல்ல அண்ணன் இருக்கார்... நீங்க பாவம் கண்காணாத தொலைவில் தன்னந்தனியா பாடுபட்டிருக்கீங்க... உங்களை நான் மூட் அவுட் பண்ணலை...

    குட்... இப்பத்தான் நீ நல்ல பொண்ணு... மொதல்ல கண்ணு ரெண்டையும் துடைச்சிக்கோ...

    ம்... துடைச்சிட்டேன்...

    ரெடியா...?

    என்ன ரெடியா?

    உனக்கு இப்ப நான் ஒரு கல்யாண நாள் பரிசு தரப் போறேன்... அதை வாங்கிக்க நீ ரெடியான்னு கேட்டேன்.

    குப்பென்று ரோஜா இதழ்களைப் போல் முகம் சிவந்தாள் நித்யா.

    தெரியும்... நீங்க என்ன பரிசு தருவீங்கன்னு எனக்குத் தெரியும்...

    "தெரியுமா...? உன் குரல்ல என்ன இவ்வளவு வெட்கம்...? அபுதாபியிலிருந்து பேசறப்பவே இப்படி வெட்கப்படறவ நேருக்கு நேரா

    Enjoying the preview?
    Page 1 of 1