Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அவிழ மறுக்கும் அரும்புகள்
அவிழ மறுக்கும் அரும்புகள்
அவிழ மறுக்கும் அரும்புகள்
Ebook69 pages20 minutes

அவிழ மறுக்கும் அரும்புகள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இளம் குற்றவாளிகள் காப்பகம் கோணல் மாணலான எழுத்துக்களோடு அந்த பெயர்பலகை தெரிய உள்ளே ஒடு வேய்ந்த பழங்காலக் கட்டிடம் சமீபத்தில் சுண்ணாம்பு பூச்சு நடந்ததில் கட்டிடத்திற்கு லேசாய் களை வந்திருந்தது. கட்டிடத்தைச் சுற்றிலும் கண்ணாடித் துண்டுகள் பதித்த காம்பௌண்ட் சுவர்.
 கேட் முகப்பில் காகித தோரணங்களும் பேனரும் காற்றில் ஆடியது. சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியின் பத்தாவது ஆண்டு விழா - இது பேனர் வாசிகம்.
 ப்ரோபேஷன் ஆபிஸர் ராஜகோபாலனும் பள்ளியைச் சேர்ந்த நான்கைந்து ஆசிரியர்களும் கைகளில் மாலைகளோடு காத்திருந்தார்கள். ஒலி பெருக்கியில் வயலின் இசை கசிந்து கொண்டிருந்தது.
 கேட் அருகே கார் ஹார்ன் சத்தம் கேட்டது.
 "வந்துட்டாரு..."
 பரபரப்படைந்தார்கள்.
 ஃபோர்டு கார் வந்து நிற்க…
 ரத்ன சபாபதி பின் கதவைத் திறந்து கொண்டு கீழே இறங்கினார். கையில் வெள்ளி பூண் போட்ட வாக்கிங் ஸ்டிக்.
 "வணக்கம்..."
 "ஸாரி கொஞ்சம் லேட்டாயிடுச்சு..."
 "பரவாயில்லீங்கய்யா..."
 ரத்னசபாபதியின் கழுத்தில் மாலைகள் விழுந்தன.
 "இதெல்லாம் எதுக்கு...?" - மாலைகளை கழற்றி பி.ஏ.விடம் கொடுத்துக் கொண்டே நடந்தார்"விழா மேடை எந்தப் பக்கம்...?"
 கூட்டிப் போனார்கள்.
 "பள்ளிக்கூட கட்டிடம் ரொம்ப பழசாயிருக்கே?"
 "கட்டி அம்பது வருஷம் ஆகுதுங்கய்யா..."
 "எத்தனை குழந்தைங்க படிக்கறாங்க...?"
 "ஐநூத்தி இருபத்தஞ்சு பேர்..."
 "சாப்பாடு தங்கற வசதி இதெல்லாம் கவர்மெண்ட் பாத்துக்குதா...?"
 "ஆமாங்கய்யா..."
 "இங்கே படிக்கிற பசங்க எல்லாருமே குற்றம் பண்ணி சீர்த்திருத்தப்பட வந்தவங்க தானே?"
 "ஆமாங்கய்யா... இதுல பலர் அப்பா அம்மா இல்லாத அனாதைங்க..."
 விழா மேடையை அமைத்திருந்த அந்த சிறிய மைதானம் முழுக்க பத்திலிருந்து பதினைந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்.
 ரத்ன சபாபதி மேடை ஏறியதும் கைகளைத் தட்டினார்கள். கடவுள் வாழ்த்து முடிந்து - ப்ரோபேஷன் ஆபீஸர் வரவேற்புரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது - கும்பலுக்கு மத்தியில் உட்கார்ந்திருந்த - அந்த பதினைந்து வயது சிறுவன் எழுந்தான். சரசரவென்று நடந்து - மேடையை நோக்கி போனான்.
 கையில் நான்காய் மடிக்கப்பட்ட காகிதம்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 14, 2023
ISBN9798223898030
அவிழ மறுக்கும் அரும்புகள்

Read more from Rajeshkumar

Related to அவிழ மறுக்கும் அரும்புகள்

Related ebooks

Related categories

Reviews for அவிழ மறுக்கும் அரும்புகள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அவிழ மறுக்கும் அரும்புகள் - Rajeshkumar

    1

    "வணக்கம்..."

    வணக்கம்...

    நாங்க, ‘காலை கதிர்’ பத்திரிக்கையிலிருந்து வர்றோம், மத்திய அரசு உங்களுக்கு சிறந்த தொழிலதிபர் விருது குடுத்து, கெளரவிச்சிருக்காங்க. தென்னிந்தியாவிலேயே முதல் முறைய இந்த விருதைப் பெறுகிற உங்களுக்கு எங்கள் பத்திரிக்கையின் சார்பாக பாராட்டுக்கள்...

    நன்றி...

    மிஸ்டர் அனந்த கிருஷ்னண்! உங்க தொழில் வெற்றிக்கு காரணமா எதை நினைக்கறீங்க?

    கடினமான உழைப்பு. தரமான பொருள் உற்பத்தி. நியாயமான விலை. இந்த மூணு காரணங்களைச் சொல்லலாம்...

    உங்களுக்கு இப்ப என்ன வயசு...?

    நாற்பத்தி ஒண்ணு...

    உங்க வாரிசுகளை...

    ஸாரி... எனக்கு இஷ்யூஸ் கிடையாது. வேற கேள்வி கேட்டா பரவாயில்லை...

    வெரி ஸாரி...

    இட்ஸ்... ஓ... கே.

    டெலிபோன் கிணுகிணுத்தது.

    அனந்த கிருஷ்ணன் ‘எக்ஸ்க்யூஸ்மி’ - சொல்லி ரிஸீவரை எடுத்து காதுக்குக் கொடுத்தார்.

    எஸ்...

    என்ன விருது கிடைச்ச சந்தோஷத்துல இருக்கீங்களா...? மறுமுனையில் மனைவி அமிர்தாவின் குரல் கேட்டது.

    அனந்த கிருஷ்ணன் சிரித்தார்.

    போன்ல உன் அரட்டையை ஆரம்பிச்சுட்டியா...? நேரமில்லை அமிர்தா. பத்திக்கைகாரங்களுக்கு பேட்டி குடுத்துட்டு இருக்கேன். ஒரு பத்து நிமிஷம் கழிச்சு போன் பண்ணு...

    ரிஸீவருக்கு அதன் இடத்தை கொடுத்தார்.

    நேரம்: 11.10.

    நேரம்: 12.05.

    நிருபரின் கை குலுக்கல்

    தொலைபேசி

    மறுபடி அமிர்தா

    ஒரு முக்கியமான விஷயம்...

    என்ன...?

    போன்ல சொல்லமாட்டேன். நேர்ல வாங்க...

    ரொம்ப முக்கியமான விஷயமா...?

    ஆமா... ரொம்ப... ரொம்ப...

    ஒரு க்ளு குடேன்...

    நோ... நோ...

    ப்ளிஸ்... ப்ளிஸ்...

    சரி… ஒரே ஒரு சின்ன க்ளு...

    சொல்லு...

    BR

    BR ன்னா...?

    க்ளு... அவ்வளவுதான்...

    ஒண்ணும் புரியலையே...?

    காரை ஓட்டிகிட்டே யோசிச்சுட்டு வாங்க... பிஸினஸை மறந்துட்டு மூளையோட எல்லா பாகத்தையும் இதை யோசனை பண்ண செலவழியுங்க...

    அவ்வளவுதானே? வீடு வந்து சேர்றதுக்குள்ளே கண்டு பிடிச்சுடறேன்.

    பார்க்கலாம்...

    அனந்த கிருஷ்ணன் ரிஸீவரை வைத்து விட்டு, எழுந்தான்.

    போர்டிகோவில் காத்திருந்தது கடல் வண்ண காண்ட்ஸா. நுழைந்து ஸ்டிரியங்கைப் பிடித்தார்.

    அதென்ன பி.ஆர்...?

    யோசித்துக் கொண்டே இக்னீஷியனை அசைத்து காரை கனைக்க வைத்து நகர்த்தினார். கம்பெனி கேட்டில் காக்கி யூனிஃபார்மில் நின்றிருந்த வாட்ச்மேன் விறைப்பாகி சல்யூட் போட - கார் வெளியே வந்தது. போய்க் கொண்டிருந்த போக்குவரத்து வெள்ளத்தில் கலந்தது..

    சிக்னல்கள் வழி மறித்தது.

    சிவப்பில் நின்று அம்பாசிரில் தயங்கி பச்சையில் சீறினார்.

    என்னவாக இருக்கும்? காரை இடது பக்கமாக ஒடித்தார்... போக்குவரத்து குறைந்த ஒயிட்ஸ் சாலை.

    பத்து நிமிஷத்துக்கு – நூல் பிடித்த மாதிரியான பயனம்.

    அவருடைய பங்களா அசோக மரக் கும்பலுக்கு மத்தியில் வந்தது. அனந்த கிருஷ்ணனின் காரை அவ்வளவு சீக்கிரத்தில் எதிர்பார்க்காத கேட் வாட்ச்மேன் கையில் நெருப்போடு இருந்த பீடியை அவசரமாய் சாக்கடையில் சுண்டி விட்டு சல்யூட் வைத்தான்.

    கார் உள்ளே போயிற்று:

    போர்டிகோவில் போய் குலுங்கி நின்றதும் இறங்கினார். ஹால் சோபாவில் புத்தகம் ஒன்றை

    Enjoying the preview?
    Page 1 of 1