Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Chinnu Engira Chinnasamyum Akkee Engira Akkeesiyavum
Chinnu Engira Chinnasamyum Akkee Engira Akkeesiyavum
Chinnu Engira Chinnasamyum Akkee Engira Akkeesiyavum
Ebook118 pages40 minutes

Chinnu Engira Chinnasamyum Akkee Engira Akkeesiyavum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சின்னுவுக்கு அக்கீயின் பேரில் ஈர்ப்பு இல்லைதான். இது கல்லூரிக் காலத்திலேயே நீடிக்கிறது. ஆனால் சின்னுவும் ரூபிணியும் விரும்புகிறார்கள். எதிர்பாராமல் ரூபிணியின் துர்மரணம் நிகழ்கிறது. சின்னு உடைந்து போய் அக்கீயை விட்டு விலக நினைக்கிறான். இடையில் ரோகிணியின் நிச்சயமற்ற ஊடுருவல்! ஆனால், பூமாவின் நினைவில் அக்கீயையும் துறந்து, சின்னு கடந்து செல்கிறான். இறுதியில் மீண்டும் இருவரும் ஓர் உச்சக்கட்டத்தில் சந்திக்கிறார்கள். ஒருவேளை நிரந்தரமாக இழந்தவர்களையே நினைத்து வாழ்க்கையைத் தொலைத்து விடுவதில் என்ன பயன் என்பதை அக்கீசியா, சின்னசாமிக்கு உணர்த்தியிருக்கலாம்.

Languageதமிழ்
Release dateDec 23, 2023
ISBN6580171910516
Chinnu Engira Chinnasamyum Akkee Engira Akkeesiyavum

Related to Chinnu Engira Chinnasamyum Akkee Engira Akkeesiyavum

Related ebooks

Related categories

Reviews for Chinnu Engira Chinnasamyum Akkee Engira Akkeesiyavum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Chinnu Engira Chinnasamyum Akkee Engira Akkeesiyavum - N. Manoharan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சின்னு என்கிற சின்னசாமியும் அக்கீ என்கிற அக்கீசியாவும்

    Chinnu Engira Chinnasamyum Akkee Engira Akkeesiyavum

    Author:

    சந்திரா மனோகரன்

    N. Manoharan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/n-manoharan

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    பெருமழையில் சாலைகளும், விளக்குக்கம்பங்களும் தொப்பலாய் நனைந்து கொண்டிருந்தன. சிதறும் விளக்கு வெளிச்சத்தில் இருள் ஆங்காங்கே பதுங்கிக்கிடந்தது. குறைந்த ஆள் நடமாட்டம். பேருக்கு இரண்டு மூன்று பேர் கையில் குடையுடன்.

    விவேகானந்தா நகர் குறுக்குச் சாலையின் திருப்பத்திலிருந்த வீட்டின் முன்பு ஒரு ஆட்டோ வந்து நிற்க... தலையில் முக்காடு போட்டவாறு, கையில் ஒரு சிறிய சூட்கேசுடன் அவள் இறங்கினாள்.

    அவள்தான் அக்கீசியா!

    இரும்பு கேட்டுக்கு உட்புறமிருந்த அழைப்புமணியை வேகவேகமாக அழுத்தினாள்.

    இந்நேரத்தில்... மழைப்பொழிவில்... அதுவும் இரவு பதினோரு மணிக்கு யாராயிருக்கும்?

    கதவை ஒருக்களித்தவாறு எட்டிப்பார்த்தான்.

    அவன்தான் - சின்னு என்கிற சின்னசாமி!

    சின்னசாமியைச் சுருக்கி... அவனே ‘சின்னு’ என்று வைத்துக்கொண்டான்.

    அது அவனுக்குப் பிடித்திருந்தது.

    அவனுக்கு மட்டுமில்லை. மற்றவர்களுக்கும்தான்!

    அவளைப்பார்த்த மாத்திரத்தில்---

    அவன் மழையில் நனைந்த பட்சிபோல், கொஞ்சம் சிலிர்த்துப்போனான்.

    ஆங்காங்கே வெள்ளைநிறத்தில் மாடர்னாய் டிசைன் போட்ட ஊதா நிறப்புடைவையிலிருந்து சொட்டுப்போடும் மழைத்துளிகளுடன் அவள்!

    பேச்சலர் மட்டும் தங்கியிருக்கும் வீட்டுக்கு... அதுவும் நடுச்சாமத்தில்

    சின்ன சூட்கேஸுடன் ஓர் இளம்பெண். நல்ல வேளை, கொட்டும் மழை ஒரு பாதுகாப்பு. அக்கம் பக்கம் உறக்கம்.

    அவன் மறுபேச்சின்றி கதவைத் திறந்துவிட்டான். போர்டிகோ லைட்டை அணைத்துவிட்டான். மங்கிய இருளில் அவள் விறுவிறுவென்று உள்ளே நுழைய... கதவு அடைக்கப்பட்டது.

    பெட்டியை சோஃபா அருகே வைத்துவிட்டுச் சொன்னாள்:

    சின்னு! நான் வந்து...

    அவன் சைகையில் ‘போதும்’ என்பதுபோல் கரத்தை உயர்த்திவிட்டு,

    அப்புறம் பேசிக்கலாம்... இலேசா நனைஞ்சிருக்கே போலிருக்கு... உள்ளே போயி டிரஸ் மாத்திட்டு வா...நான் காஃபி போடறேன்... உனக்கு ப்ரூ பிடிக்கும்தானே என்றான்.

    ஹாலை அடுத்திருந்த அறைக்குள் நுழைந்த அக்கீசியா கதவைத்

    தாழிட்டுக்கொண்டாள்.

    பத்து நிமிடம் கழித்து, பச்சையும் மஞ்சளும் கலந்த மாடர்ன் வண்ணத்தைக் குழப்பியடித்தது போன்ற நைட்டியில், தழையத் தழைய வந்தாள். கேசத்தைக் கோதிவிட்டவாறு, பிடரியில் கிடத்தி இருந்தாள்.

    சில நிமிடங்களுக்கு அவள் எதுவும் பேசவில்லை. மழைக்குளிருக்கு காஃபி இதமாயிருந்தது.

    தேங்க்ஸ் சின்னு

    அவள் சுவரையொட்டிக்கிடந்த ஒரு பிரம்பு நாற்காலியில் அமர்ந்தாள்.

    ‘எப்படியும் எதையாவது... பிரச்சனையுடன்தான் வந்திருப்பாள்’

    அவன் கணித்தபடியே, அவள் பேச்சும் இருந்தது.

    "எனக்கு மாப்பிள்ளை பாக்கறாங்க, சின்னு... எவனோ ஒருத்தனோட ஃபோட்டோவைக் காட்டி அவனைக் கட்டிக்கச் சொல்லி வற்புறுத்தறாங்க...

    எனக்கு அவனைப் பிடிக்கலே... என்னை ஒரு வார்த்தை கேட்கலாமில்லியா

    எவனையும் பிடிக்கலே! எப்படியாவது கல்யாணத்தை முடிச்சிரலாம்னு

    பார்க்கறாங்க!" - நொறுங்கிப் போனாள் அக்கீசியா.

    உங்கம்மாவுமா உன்னைப் புரிஞ்சக்கலே... அம்மாகிட்டே வெளிப்படையாப் பேசிற வேண்டியது தானே?

    க்கும். அம்மாவாவது... அவங்க அப்பா சொல்றபடிதான் கேட்பாங்க

    வெறுப்பைக் கொட்டிய அவள் முகத்தை சிறிதுநேரம் வெறுமனே

    பார்த்துக்கொண்டிருந்தான் சின்னு.

    குடும்பத்தையே உதறிவிட்டு, இன்னொருவனை நம்பிவந்திருக்கிற காரிகையை அவன் விழிகளால் பருகிக்கொண்டிருந்தான்.

    நீ படிச்ச பொண்ணு இல்லியா... இப்படிச் செய்யலாமா? இது உனக்கே நியாயமாப்படுதா?

    சின்னசாமி இப்படிப் பேசுவானென்னு அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவள் இலேசாக அதிர்ந்தாள்.

    முகத்தை சிலுப்பியவாறு, சரியில்லீங்க தாத்தா! இது தத்துவம் பேசற நேரமா சொல்லுடா என்றாள், பொய்க்கோபத்துடன்.

    "நாளைக்கு என்ன நடக்கும்னு யோசிச்சிச்சுப் பார்த்தியா... நீ பாட்டுக்கு

    எல்லாரையும் தூக்கி எறிஞ்சிட்டு வந்துட்டே... மாப்பிள்ளை வீட்டுக்குத் தெரிஞ்சா..."

    அதையெல்லாம் யோசித்துப்பார்த்தா, அப்புறம் எதையும் சாதிக்க முடியாது... பேப்பர்லே பார்க்கறீங்க இல்லியா

    உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு, காஃபி டம்ளரைக் கழுவுவதற்கு

    சமையலறைக்குப் போனாள்.

    அக்கீசியா! அப்படியே வச்சிரு... காலைலே வேலைக்காரி வருவா... அவ பார்த்துக்குவா

    அதுதான் நான் வந்துட்டேனல்லே!

    அவனுக்கு சங்கடமாக இருந்தது. மனதுக்குள் திட்டம் போட்டான்.

    ‘எப்படியாவது இவளை விடியறதுக்குள்ளே கிளப்பியாகணுமே’

    நீ ஒரு நிமிஷத்திலே போட்ட ட்ரெஸ்ஸோட வந்துட்டே...! நான் அப்படி முடியாது... கொஞ்சம்கொஞ்சமா பேரண்ட்ஸ்க்கு உன்னைப்பத்திச் சொல்லி... மெதுவாப்புரிய வச்சு... அதுக்கு ஆறு மாசம், ஒரு வருஷம்கூட ஆகலாம்

    உக்கும்... அப்புறம் நீ என்னை மறந்துற வேண்டியதுதான்! எனக்குப் பிடிக்காத ஒருவனுக்குக் கட்டி வச்சு...

    அப்படியொண்ணு நடந்தா, அதையும் நீ ஏத்துக்கவேண்டியதுதான்!

    சின்னு! டோன்ட் டாக் ரப்பிஷ்!

    அவள் சினத்துடன் சன்னலோரம் சென்று வெளியே எட்டிப்பார்த்தாள்.

    மழை நின்றிருந்தது. வெளியே ஆளரவம் இல்லை. சுவர்க்கடிகாரம் ஒரு மணி காட்டிற்று.

    ***

    அக்கீசியா குடும்பம் வளமானது என்று சொல்லமுடியாது. அவள் தந்தை

    தங்கப்பன் வாகனங்களுக்கு உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஓர் உள்ளூர் கம்பெனியில் டெக்னீஷியனாக வேலை பார்க்கிறார். அம்மா வனிதா ஹோம் மேக்கர். புத்தகம் படிப்பது, நாவல் எழுதுவது அவள் பொழுதுபோக்கு.

    ஒரே பெண் அக்கீசியா. உடன்பிறப்பு இல்லை. கல்லூரியில் சைக்காலஜி படிக்கும்போதே அவள் மனம் அலைபாய்ந்தது. குறுக்கே சின்னசாமி என்கிற ‘சின்னு’ வந்து முட்டினான். அவன் தமிழ் இலக்கியம் பயின்று வந்தான்.

    சின்னச்சாமியின் தந்தை பரமானந்தம் பூனேவில் இருக்கிறார், ஒரு கெமிக்கல் கம்பெனியில் உயர் பதவி. அவன் அம்மா சுசீலா, ஒரு பிரபலமான ஹாஸ்பிடலில் - நிர்வாகப் பிரிவில் பணிபுரிகிறாள்.

    யாருமே எதிர்பார்க்காத... ஆனால் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு கல்லூரி வளாகத்தில் நடந்தது.

    அது...

    அன்று கல்லூரியில் அக்கீசியாவைச் சுற்றி பட்டாம்பூச்சிகளைப்போல் சிறு கூட்டம். அதற்குக் காரணம் அவள் கையிலிருந்த ‘பூமா’ மாத நாவல்தான். அவள் தோழிகளிடத்தில் ஆர்வமாகக் காட்டிக்கொண்டிருந்தாள்.

    நாவலின் பிரதிகளைச் சிலர் புரட்டிக்கொண்டிருந்தார்கள். அப்புறம் பாய்ஸ், பாய்ஸ்தானே!

    டெங்கு கொசுபோல் அவளையே சுற்றிச் சுற்றி வந்தார்கள்.

    அக்கீ! கங்கிராட்ஸ் டி!

    "அக்கீ! படிச்சிட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1