Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannukkul Unnai Vaithean
Kannukkul Unnai Vaithean
Kannukkul Unnai Vaithean
Ebook279 pages2 hours

Kannukkul Unnai Vaithean

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாயகனும் நாயகியும் முதல் பார்வையிலேயே நேசம் கொண்டாலும், புரிதல் வந்த பிறகு தங்கள் நேசத்தை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். இருவர் வீட்டிலும் எவ்வித எதிர்ப்புமின்றி திருமணமும் நடக்கிறது. தேனிலவின் போது, இருவருக்கும் அதிர்ச்சி காத்திருக்கிறது. இருவரும் அதை எப்படி எதிர்கொண்டனர் என்பது தான் கதை.

Languageதமிழ்
Release dateDec 23, 2023
ISBN6580172210507
Kannukkul Unnai Vaithean

Read more from Premalatha Balasubramaniam

Related to Kannukkul Unnai Vaithean

Related ebooks

Reviews for Kannukkul Unnai Vaithean

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannukkul Unnai Vaithean - Premalatha Balasubramaniam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கண்ணுக்குள் உன்னை வைத்தேன்

    Kannukkul Unnai Vaithean

    Author:

    பிரேமலதா பாலசுப்ரமணியம்

    Premalatha Balasubramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/premalatha-balasubramaniam

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 1

    கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நரசார்டூல கர்தவ்யம் தைவமாநிகம்...

    காற்றில் கசிந்து வந்த சுப்ரபாதத்தை கேட்டுக்கொண்டே கண் விழித்தாள் மதிமலர். பெயருக்கு ஏற்ற மாதிரியே அழகும் அறிவும் நிறைந்தவள். தோழிகள் ‘மதி’ என்று அழைக்க, அம்மா ரேவதிக்கும் அப்பா ராகவனுக்கும் அவள் எப்போதும் ‘மலர்’ தான். பெற்றோரை தவிர மற்றவர்கள் அவளை மலர் என்று அழைப்பதை அவள் விரும்புவதும் இல்லை.

    காலையில் எழுந்தவுடன் அம்மா ரேவதிதான் சுப்ரபாதத்தை போட்டு விடுவார். நேற்று இரவு தூங்குவதற்கு கொஞ்சம் நேரம் ஆகி விட்டது. இல்லையென்றால் அம்மா சுப்ரபாதம் போடுவதற்கு முன்பே மதிமலர் எழுந்து விடுவாள். அம்மா என்றைக்குமே, ‘இதை செய், இப்படி செய்’ என்று வற்புறுத்துவது இல்லை. ஆனால் அம்மாவிடம் இருந்து எல்லா நல்ல பழக்கங்களும் மதிமலருக்கு இயல்பாகவே வந்து விட்டது. அதில் ஒன்று அதிகாலை ஐந்து மணிக்கே எழுவது. விடுமுறை தினமானாலும் ஐந்து மணிக்கே எழுந்து விடுவாள். அதனால் அவளுக்கு நிறைய நேரம் கிடைத்தது. அதை நல்ல விதத்தில் செலவிடவும் முடிந்தது.

    கணிப்பொறியியலில் உயர்கல்வியை படித்து முடித்தவள், வேலைக்கு முயன்று கொண்டிருந்தாள். அவளுடைய கல்வி தகுதிகளுக்கு வேலைவாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும்

    தன் திறமையை முழு அளவில் வெளிப்படுத்தும் ஒரு சவாலான வேலையை தேடிக் கொண்டிருக்கிறாள்.

    காலை கடன்களை முடித்ததும், தான் எப்போதும் செய்யும் யோகாவையும் முடித்துக்கொண்டு வெளியில் வந்தவளை அம்மாவின் காபியின் மணம் எதிர்கொண்டது.

    தேங்க்யூ மா… என்று சொல்லி காபியை வாங்கி ரசித்து குடித்தவள், காபின்னா அது அம்மா காபிதான்… பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு… என்று விளம்பர பாணியில் சொன்னாள்.

    மகளின் குறும்பை புன்னகையுடன் ரசித்து விட்டு, என்னடா,இன்னைக்கு எங்கே வேட்டை? என்று விசாரித்தார்.

    தான் வேலை தேடுவதை சொல்வதை புரிந்து கொண்டு சிரித்துக்கொண்டே, இன்னைக்கு வேட்டைக்கு லீவும்மா. என் பிரண்ட் இந்து இருக்காளே... அவளுக்கு இன்னைக்கு பிறந்த நாள். எல்லா ப்ரண்ட்சும் சேர்ந்து இன்னைக்கு வெளியில் போறோம் என்றாள்.

    சரிடா... அப்போ காலையிலயாவது சாப்பிடுவியா? உனக்கு பிடிச்ச சிகப்பரிசி புட்டு செய்யலாம்னு இருந்தேன். என்று கேட்ட அம்மாவிடம்,

    இல்லைமா, காலையிலேயே வர சொல்லி இருக்கிறாள். இன்னைக்கு காலையில் அவங்க வீட்டில் பிரேக் பாஸ்ட், கொஞ்ச நேரம் அரட்டை,அப்புறம் மூவி, மாலையில் பீச்,ஏழு மணிக்கெல்லாம் நம்ம வீட்டுக்கு ரிடர்ன். என்று மூச்சு விடாமல் சொல்லுவதை ஒரு சிரிப்புடன் பார்த்திருந்து விட்டு,

    அப்பா இன்னைக்கு, ட்ரிப்பில் இருந்து வராரே மலர். வந்தவுடனே உன்னை கேட்பாரேடா. என்ற அம்மாவை செல்லமாக அணைத்துக்கொண்டு,

    இன்னைக்கு ஒரு நாளைக்கு நான் இல்லாமல் நீங்க ரெண்டு பேரும் தனிமையில் இனிமை கொண்டடுங்கம்மா. என்று சிரிப்புடன் சொன்னாள்.

    சரியான வாலு. என்று அம்மா செல்லமாக திட்டியதை அதே சிரிப்புடனே வாங்கி கொண்டவள், நான் ஒரு கம்பெனிக்கு அப்ளை பண்ணி இருந்தேனே… அதுக்கு நாளைக்கு இன்டர்வியு. அங்கேதான் இந்துவோட அண்ணன் வேலை செய்கிறார். அங்கே என்ன எப்படி என்று கேட்டு தெரிந்து கொள்ள போறேன்மா. இன்னைக்கு அவங்க அண்ணன் வீட்டில் இருப்பாராம். ஆனால் மாலையில் பீச்சுக்கு போவதை கட் பண்ணி விட்டு உங்க தனிமையை கெடுக்க வந்திடறேன். சரியா? என்று சொல்லி விட்டு, அம்மா அவளை செல்லமாக அடிக்க கை ஓங்கவும் ஓடிப் போய் குளியலறையில் புகுந்து கொண்டாள்.

    குளித்து அழகான எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருந்த இளம் சிவப்பு சுடிதாரை அணிந்து, எளிமையாக அலங்காரம் செய்து கொண்டு, கண்ணாடியில் ஒரு முறை பார்த்து திருப்தி அடைந்தவளாக வெளியே வந்தவள், அம்மாவிடம் சொல்லிக் கொண்டு தனது ஸ்கூட்டியில் கிளம்பினாள்.

    இருபது நிமிட நேரத்திற்கு பின் இந்து வீட்டை அடைந்து, தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பரிசை கொடுத்து வாழ்த்து சொன்னவள், இந்துவின் முகம் சோர்ந்திருப்பதை கண்டு என்னடி, பர்த்டே அதுவுமா இப்படி இருக்கே? என்று விசாரித்தாள்.

    ஏற்கனவே வந்திருந்த சுபாவும்,அருணாவும் நாங்க வந்த போதிலிருந்தே இப்படி தான் இருக்கா. என்னன்னு கேட்டாலும் சொல்ல மாட்டேன்கிறா. என்று சலிப்புடன் சொன்னவுடன், என்னடி… என்ன ஆச்சு? என்று திரும்பவும் கேட்டாள்.

    காலையில் இருந்து இது வரைக்கும் மோகன் போனே பண்ணலடி... நான் போன் அடிச்சாலும் எடுக்கவே இல்ல., என்று அழுகுரலில் சொன்னாள்.

    மோகன் இந்துவின் காதலன். தூரத்து சொந்தம். ஒரு கல்யாணத்தில் பார்த்து, பார்த்தவுடனே காதலும் வந்து விட்டது. சொந்தம் என்பதாலும் நல்ல பையன் என்பதாலும் குடும்பத்திலும் ஏற்றுக் கொண்டனர்.

    அழுது விடுபவள் போல் இருந்த இந்துவை பார்த்து மதிமலருக்கு முதலில் சிரிப்புதான் வந்தது. ஆனால் ஏற்கனவே நொந்து போயிருப்பவளை கஷ்டப்படுத்த கூடாது என்று எண்ணி சிரிப்பை அடக்கி கொண்டாள்.

    ஒரு வேளை அவருக்கு உனக்கு பர்த்டே என்று தெரியாதோ என்னவோ? என்று சொல்லி முடிப்பதற்குள்,

    அது எப்படிடி தெரியாம போகும்? நான்தான் போன வாரத்தில் இருந்தே சொல்லி கொண்டிருக்கிறேனே? என்று சொன்னவளை பார்த்து அவளுக்கு இன்னமும் சிரிப்பு வந்தது.

    இருந்தாலும் அடக்கிக்கொண்டு சரிம்மா. ஒரு வேளை மறந்து போயிருக்கலாம். இல்லை வேற எதாவது முக்கிய வேலை இருந்திருக்கலாம். இல்லை ஈவினிங் எதாவது சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கலாமுன்னு நினைச்சிருக்கலாம். என்று சொல்லி கொண்டே போனவளை பார்த்து,

    நிறுத்துடி… உன் இருக்கலாம்களை. என்று எரிச்சலுடன் சொன்ன இந்து, அவர் வெளியூர் போயிருக்கிறார்.ஆனால் போன் பண்ணி விஷ் பண்ணலாமில்லை? என்ன இருந்தாலும் அவர் முதலில் விஷ் பண்ற மாதிரி ஆகுமா? என்று சொன்னாள்.

    அதை கேட்ட தோழிகள் மூவரும், அடிப்பாவி காலையில நாங்க இருக்கிற வேலையெல்லாம் விட்டுட்டு, உன்னை விஷ் பன்றதுக்கு வந்தா, அவர் முதலில் விஷ் பண்ற மாதிரி வருமான்னு… எங்க கிட்டயே சொல்றியா...உன்னை... என்று அவளை பிலு பிலுவென பிடித்து கொண்டனர்.

    சிறிது நேரத்திற்கு பிறகு சாரிடி… எனக்கு இன்னைக்கு மூடே இல்ல. இன்னைக்கு மூவி பார்க்க கண்டிப்பா போகணுமா? என்று கேட்டவளை முறைத்து விட்டு,

    மூவி போலாம்னு சொன்னவ நீதான். இப்ப போகனுமானு கேக்கறவளும் நீதான். ஏண்டி இந்த காதலில் மாட்டணும்? அப்புறம் புலம்பணும்? என்றாள் மதிமலர்.

    அப்படி கேட்டவளை எரிச்சலுடன் பார்த்து.எல்லாம் அவங்க அவங்களுக்கு வந்தாதான்டி தெரியும். என்றாள் இந்து.

    எனக்கா? வாய்ப்பே இல்லை... இந்த லவ் மேட்டர்லாம் நமக்கு ஒத்து வராதுப்பா. தோள் குலுக்கியவளை பார்த்து,

    நாளைக்கே உன் மனசுக்கு பிடிச்சவனா ஒருத்தனை பார்த்தால் லவ் பண்ண மாட்டேன்னா சொல்ற? என்று கேட்ட சுபாவை முறைத்தபடியே,

    ஏன்டி நான் லவ் பண்ணவே சான்ஸ் இல்லன்னு சொல்றேன். நீ என்னவோ நாளைக்கே மனசுக்கு பிடிச்சவனை பார்ப்பதை பத்தி சொல்ற. ஐ ஜஸ்ட் டோன்ட் பிலிவ் இன் லவ் அட் பஸ்ட் சைட், அதெப்படி முதல் தரம் பார்க்கும்போதே ஒருத்தர் மேல லவ் வரும்டி? என்று தனது நீண்ட நாள் சந்தேகத்தை முன் வைத்தாள்.

    அதுக்கு நம்ம இந்து பதில் சொல்வா பாரு. என்று அருணா கேலியுடன் சொல்ல மூவரின் பார்வையும் இந்துவின் பக்கம் திரும்பியது.

    இந்து கண்கள் ஒளிர அது பூர்வ ஜென்மத்தில நம்ம விரும்பினவங்கள பார்த்தா அந்த பீலிங் வரும்டி. என்று அனுபவித்து சொல்ல, இந்த முறை சிரிப்பை அடக்க முடியாமல் வாய் விட்டு சிரித்த மதி,

    அடி போடி, நான் லவ் அட் பஸ்ட் சைட்லேயே நம்பிக்கை இல்லன்னு சொல்றேன், இவள் பூர்வ ஜென்மத்துக்கு போயிட்டா. என்று சொல்லி விட்டு மறுபடியும் சிரித்தவளை பார்த்து இந்து முறைத்தாள்.

    அதற்கு மேல் இந்துவை பிறந்த நாள் அதுவுமாக கோபப்படுத்த கூடாது என்று நினைத்து கூல் பேபி, நீ கூப்பிட்டேன்னு அம்மாகிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச டிஷ் கூட வேண்டாம்னு சொல்லிட்டு வந்திருக்கேன், சாப்பாடு போடற எண்ணம் இருக்கா இல்லையா? என்று பேச்சை மாற்றினாள்.

    எதிர்பார்த்தது போலவே இந்துவும் சாரிப்பா… இதோ இப்போவே சாப்பிடலாம். என்று சொல்ல கேலிக்கும் கிண்டலுக்கும் இடையில் தோழிகள் சாப்பிட அமர்ந்தனர்.

    காலை உணவு முடிந்ததும், அருணாவும் சுபாவும் மூவி இல்லன்னு ஆச்சு, நாங்க கிளம்பறோம். என்று சொல்லிக் கொண்டு கிளம்பினர்.

    இந்து,பாஸ் அண்ணன் வீட்டில் இருப்பார்னு சொன்னியே? நாளைக்கு அவர் வேலை செய்கிற கம்பெனிக்குதான் இண்டர்வியூ போறேன். அதை பத்தி கேட்கணும். என்றாள் மதி.

    அண்ணன் இருக்கிறார்ப்பா…,இதோ கூப்பிடறேன் என்று அவள் சொல்லும்போதே பாஸ்கர் வந்தான்.ஹாய் மதி! எப்படிம்மா இருக்கே? வேலைக்கு எதாவது போறியா? என்றான்.

    நான் நல்லா இருக்கேன் அண்ணா, அண்ணிக்கு எப்போ டெலிவரி? என்று விசாரிக்க, இன்னும் ரெண்டு நாள்ல டாக்டர் டேட் கொடுத்திருக்காங்க… அதான் இன்னைக்கு நான் அவங்க ஊருக்கு கிளம்பறேன். என்றான்.

    அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே கைப்பேசியில் அழைப்பு வர, இந்து அவள் அறைக்கு போனாள்.

    அண்ணியை ரொம்ப கேட்டதா சொல்லுங்கண்ணா. என்று சொல்லி விட்டு நாளைக்கு உங்க கம்பெனியில் எனக்கு ஒரு இண்டர்வியூ இருக்கு. அதான் உங்க கிட்ட அட்வைஸ் கேட்கலாம்னு நினைத்தேன். என்றவளை ஆச்சரியத்துடன் பார்த்து,

    ஓ! உனக்கு கால் லெட்டர் வந்திருக்கா? யூஆர் ரியலி லக்கி மதி. எல்லா அப்ளிகேஷனையும் எங்க எம்டியே பார்த்து செலக்ட் பண்ணி கால் லெட்டர் அனுப்பினாரு. என்றான்.

    என்ன அண்ணா, இண்டர்வியூ லெட்டர் வந்ததுக்கே லக்கின்னு சொல்றிங்க? என்று வியந்தவளிடம்,

    உண்மைதான் மதி. இப்போ புதுசா ஒரு ப்ராஜெக்ட் ஆரம்பிக்க போறாங்க. அதுக்கு ரொம்ப திறமையும் அனுபவமும் இருக்கிற ஆளுங்களை எடுக்கிறாங்க. அப்போ ஃப்ரெஷர் உன்னையும் கூப்பிட்டு இருக்காங்க அப்படின்னா நீ லக்கிதானே? என்று சொன்னவன்,

    உண்மையிலேயே இந்த ப்ராஜெக்ட்ல வொர்க் செய்யறவங்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும். இந்த வேலை கிடைச்துன்னா ரொம்ப நல்லதும்மா. என்றும் சொன்னான்.

    மேலும் அந்த ப்ரொஜெக்டை பற்றி பாஸ்கரன் சொல்ல சொல்ல கேட்டவளுக்கு தான் கண்டிப்பாக அந்த வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது.

    நான் வேற இன்னைக்கு ஊருக்கு போறேன். இல்லன்னா எம்டி கிட்ட கொஞ்சம் சிபாரிசு செய்யலாம். என்றான்.

    இல்லண்ணா... எனக்கு என் திறமையில் நம்பிக்கை இருக்கு. என்றவளை பார்த்து சிரித்து விட்டு,

    குட். இப்படித்தான் இருக்கணும். அதுதான் எங்க எம்டிக்கும் பிடிக்கும். இந்த இந்துவை பாரு. ரெண்டு மாசம் முன்னாடி உன்னை மாதிரி இருந்தவ. இந்த காதல் விஷயத்துக்கு அப்புறம் ரொம்ப மாறிட்டா. படிச்ச படிப்பே ஞாபகம் இருக்கிற மாதிரி தெரியலை. என்று சிரித்தான்.

    பதிலுக்கு சிரித்து விட்டு ஓகே அண்ணா. ரொம்ப தேங்க்ஸ். நான் இந்து கிட்ட சொல்லிட்டு கிளம்பறேன். என்று சொல்லிவிட்டு இந்துவின் அறைக்கு வந்தவள் காதில்,

    என்ன இருந்தாலும் நீங்க முதல்ல விஷ் பண்ற மாதிரி வருமா? என்று இந்து சொல்லி கொண்டிருந்தது விழவும்,

    ‘அடிப்பாவி!பத்து நிமிஷம் முன்னாடி போன்ல பேச ஆரம்பிச்சவ இன்னும் அதே டாபிக்கையே பேசிக்கிட்டு இருக்கான்னா...ம்.’ என்று ஒரு பெருமூச்சுடன் இந்துவின் அருகில் வந்து ‘கிளம்புகிறேன்’ என்று சைகை செய்தாள்.

    அவளும் பேச்சு சுவாரசியத்தில் ‘சரி’ என்பது போல் சைகை செய்யவும் தாமதிக்காமல் கிளம்பினாள்.

    மதிமலருடைய தந்தை ஒரு புகழ் பெற்ற தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக இருக்கிறார். அந்த நிறுவனத்துக்கு சிங்கப்பூரில் கிளை இருப்பதால் அடிக்கடி அவர் சிங்கப்பூர் செல்ல நேரிடும்.

    ஒரு வாரம் அவரில்லாமல் மதிமலருக்கு போர் அடித்திருந்தது. அவள் பெற்றோருக்கு செல்ல மகள்.

    தோழிகளிடம் பகிர்ந்து கொள்ள முடியாத விஷயத்தை கூட அவள் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்வாள். அதனால் தோழிகளோடு சினிமாவுக்கு போகாமல், அப்பாவை பார்க்க போவது அவளுக்கு சந்தோஷம்தான்.

    வீட்டுக்கு வந்தவளை என்னடா மலர், ஈவினிங்தான் வருவேன்னு சொல்லி விட்டு சீக்கிரமா வந்திட்டே? என்று ஆச்சரியத்துடன் அம்மா வரவேற்க, ப்ச்... அதை விடுங்கம்மா. அப்பா வந்துட்டாரா? என்று ஆவலுடன் கேட்டாள்.

    வந்து விட்டார். வந்தவுடனே உன்னை கேட்டார். ஈவினிங்தான் வருவேன்னு சொன்னேன். குளிக்க போயிருக்கார். என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே வெளியே வந்த ராகவன் என்னடா... வந்துட்டாயா? என்று சிரிப்புடன் கேட்டவுடன்,சாரிப்பா... என்றாள்.

    எதுக்குடா சாரி? என்று புரியாமல் அவர் கேட்க இல்லப்பா... நான் இல்லாமல் கொஞ்ச நேரம் நீங்க ரெண்டு பெரும் தனிமையில் இனிமை காணுங்கன்னு அம்மாகிட்ட சொல்லிட்டு போனேன். கடைசிலே அதை கெடுக்க நானே வந்துட்டேன். அதான்... என்று சொல்லி விட்டு சிரித்தாள்.

    உதைக்கணும் இவளை. காலையில் இருந்து இப்படிதாங்க என்னை வம்புக்கு இழுக்கிறாள். என்று அம்மா சொல்லவும் அப்பாவும் சிரித்தார்.

    நீ இல்லாத தனிமை எங்களுக்கு இனிமையா இருக்காதுடா. என்று தீவிரமாக அப்பா சொல்வதை கேட்டவள்,ஐயோ அப்பா... அது எனக்கு தெரியாதா? என்று சொல்லி விட்டு, சரி எனக்கு இந்த தடவை சிங்கபூர்ல இருந்து என்ன வாங்கிட்டு வந்திங்க? என்று கேட்டாள்.

    உனக்கு ஒரு ஐபாட் வாங்கி வந்தேன். நெக்ஸ்ட் மன்த் போகும்போது உங்க ரெண்டு பேரையும் சிங்கப்பூர் கூட்டிகிட்டு போகணும். என்றவரை பார்த்து,

    இல்லப்பா நாளைக்கு நான் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர போகிறேன். அதுக்கு முழு ஈடுபாட்டோடு வேலை செய்யணும். அதனால அடுத்த மாசம் நான் லீவ் எடுக்க முடியாது. என்று சொன்னவளை ஆச்சரியத்துடன் பார்த்து,

    ஏன் மலர், நாளைக்கு இன்டர்வியு என்றுதானே சொன்னாய்? அதற்குள் வேலையில் சேர்ந்த மாதிரி சொல்றாயே? என்று கேட்டார் அம்மா.

    ஆமாம்மா இண்டர்வியுதான். ஆனால் இந்து அண்ணன் சொல்வதை எல்லாம் கேட்ட பிறகு இந்த வேலை நான் எதிர்பார்த்த மாதிரி இன்டரஸ்டிங் அண்ட் சேலஞ்சிங்கான ஜாப் மாதிரி தோணுது. அதனால் இந்த வேலை எனக்கு கண்டிப்பா கிடைக்கும்னு நினைக்கிறேன். என்றாள்.

    அது சரி. நான் அப்போ கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லவில்லையே. என்ன சீக்கிரமே வந்து விட்டாய் என்று கேட்டவளிடம், ஐயோ அது ஒரு பெரிய இல்ல... சின்ன கதை. என்று சொல்லி விட்டு என்ன நடந்தது என்று சொன்னாள்.

    இந்து எவ்வளவு இன்டலிஜென்ட் தெரியுமா?அவகூட இப்படி அசட்டு தனமா நடந்துகிறாளேன்னு இருக்கு. காதல் அறிவாளிகளையும் முட்டாளா மாத்திடும்போல. என்று அவள் சலித்து கொள்வதை பார்த்து பெற்றோர் இருவருக்கும் புன்னகை மலர்ந்தது.

    அப்படி இல்லைமா மலர். சில சமயம் காதல் முட்டாளையும் அறிவாளியா மாத்திடும். ஏன்டா உனக்கு இந்த காதலில் எல்லாம் நம்பிக்கை இல்லையா? என்று அப்பா கேட்டார்.

    நம்பிக்கை இருக்கு இல்லை என்பதை விட ஆர்வம் இல்லைன்னுதான் சொல்லணும். எனக்கு நிறைய படிக்கணும் படிச்சதை யூஸ் பண்ணி வேலை செய்யணும். அதில சாதிக்கனும்னுதான்பா ஆசை. என்று மதி சொல்லிக் கொண்டே போக,

    அப்படின்னா… வாட் அபௌட் யுவர் மேரிட் லைப்? என்று கேட்டவரிடம்,

    கல்யாணம்… கண்டிப்பா பண்ணிக்குவேன். உங்களையும் அம்மாவையும் பார்க்கும்போது எனக்கும் உங்கள மாதிரி அந்நியோன்யமான மண வாழ்கை அமையணும்னு ஆசையா இருக்கும். ஆனால் கல்யாணம் இப்போ கிடையாது. கொஞ்சமாவது என்னோட கேரியர்ல முன்னேற்றம் வந்த பின்னாடிதான். என்று சொல்லி விட்டு,

    அப்புறம் நீங்க யாரை மாப்பிள்ளைன்னு காண்பிக்கிரிங்களோ அவனை… சாரி… சாரி… அவரை கல்யாணம் பண்ணிக்கிறேன். என்று அப்பாவை பார்த்து கண் சிமிட்டினாள்.

    ஏன்டா உன்னை கல்யாணம் பண்ணிக்க போறவரை பற்றி எந்த எதிர்பார்ப்பும் இல்லையா? என்றவரை பார்த்து,

    எனக்கு நல்லது எதுன்னு உங்களுக்கு தெரியாதாப்பா? அதனால் உங்க செலக்க்ஷன்தான் என்னோட சாய்ஸ். ஆனால் ஒரே ஒரு எதிர்பார்ப்பு இருக்குப்பா. அது...நான் எப்படி வர போறவருக்கு நேர்மையாக இருக்க போறேனோ அதே மாதிரி அவரும் எனக்கு நேர்மையானவரா இருக்கணும் அவ்வளவுதான்! என்றாள்.

    ‘நான் எப்படி வர போறவருக்கு நேர்மையாக இருக்க போறேனோ?’ என்று அவள் சொல்லும்போது ரேவதிக்கும் ராகவனுக்கும் இடையே நடந்த கலக்கம் நிறைந்த பார்வை பரிமாற்றத்தை மதிமலர் கவனிக்க தவறினாள்.

    அத்தியாயம் 2

    அம்மா செய்த சுவையான சாப்பாட்டை பெற்றோருடன் அரட்டை அடித்தபடி சாப்பிட்டு விட்டு,சரிப்பா... நான் நாளை இண்டர்வியூக்கு தயார் பண்ண போகிறேன். என்று தன் அறைக்கு வந்த மதி கணிப்பொறியில் தனக்குத் தேவையான தகவல்களைத் தேடும் பணியில் மூழ்கினாள்.

    அவள் அறைக்குள் போனதும் ரேவதி ராகவனை நோக்கி "கேட்டீர்களா அவள் சொன்னதை? அவள் இப்படி நேர்மை நாணயம் என்றெல்லாம் பேசும்போது எனக்கென்னவோ மனசு சஞ்சலமாவே இருக்கு. ஒரு வேளை அவளுக்கு அது... அதெல்லாம்

    Enjoying the preview?
    Page 1 of 1