Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நியூ டெல்லி 2001
நியூ டெல்லி 2001
நியூ டெல்லி 2001
Ebook153 pages37 minutes

நியூ டெல்லி 2001

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பூமா ஐ.எஸ்.டி.யில் கலிபோர்னியாவில் இருக்கும் தன் கணவனோடு பேசிக் கொண்டிருந்தாள். பூமாவின் கணவன் ஸ்ரீராம் ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி.
 "என்னங்க..."
 "சொல்லு பூமா..."
 "உங்க பையன் இங்கே எக்கச்சக்க லூட்டி பண்றான்.>>
 "அப்படியா...?"
 "ம்..."
 "என்ன பண்ணினான்?"
 "எட்டி எட்டி உதைக்கிறான்..."
 "உதைக்கிறானா? நல்லா உதைக்கட்டும்."
 "என்னங்க இது...? உங்க பையனை மிரட்டற லட்சணம் இதுதானா...? வலி தாங்க முடியலைங்க. அதுவும் ராத்திரி நேரத்துல அவன் படுத்தற பாடு இருக்கே. ஒரு பத்து நிமிஷம் நிம்மதியா தூங்க முடியலைங்க."
 "'இவ்வளவு லூட்டியா பண்றான்...?"
 "நான் என்ன வேணும்ன்னா சொல்றேன். நீங்களே வேணும்ன்னாலும் உங்க பையனை விசாரிச்சு பார்த்துக்குங்க."
 "சரி போனை அவன்கிட்ட குடு..."பூமா தன் காதில் வைத்திருந்த ரிஸீவரை எடுத்து தன் ஏழு மாத பம்மிய வயிற்றின் மேல் வைத்தாள்.
 "டேய் உங்கப்பா பேசறார்... பேசு." ஸ்ரீராம் குரல் கொடுத்தான்.
 "ஏண்டா கண்ணா, அம்மாவைத் தூங்கவிடாமே இம்சை பண்றே...? நான் ஊர் வந்து சேர்ற வரைக்கும் சமத்தா இருக்கணும்..."
 "......."
 "என்ன... நான் எப்ப வருவேன்னு கேக்கறியா இன்னும் சரியா ஆறு மாசம். உனக்குப் பக்கத்துல, இருப்பேன். டாடி ஊருக்கு வரும்போது உனக்கு... என்ன வாங்கிட்டு வரட்டும்?"
 "......."
 "என்னது... தங்கச்சி பாப்பாவா...? அதுக்கெல்லாம் ஊர்க்கு வந்துதான் ஏற்பாடு பண்ணணும்டா கண்ணா?"
 பூமா குறுக்கிட்டு ரிஸீவரில் குரலைக் கொடுத்தாள்.
 "கட்... கட்... இதுக்கு மேல உங்களைப் பேச விட்டா பையன் கெட்டுப் போயிடுவான்..."
 "உன் பையன்தான் தங்கச்சி பாப்பா வேணும்ன்னு கேட்டான்."
 "அதெல்லாம் அஞ்சு வருஷத்துக்கப்புறம்தான்...! அதாவது உங்க பையன் மாஸ்டர் ஸ்ரீராம் யூ.கே.ஜிக்கு போய் நர்ஸரி ரைம்ஸ் சத்தம் போட்டு பாடணும்..."
 "ரொம்ப பெரிய கேப்...?"
 "இருக்கட்டும்... இருக்கட்டும்..."
 "சரி பூமா... இந்த டிஸ்கஷனை இந்தியாவுக்கு நான் வரும்போது வெச்சுக்கலாம். இப்போ எனக்கு கம்பெனிக்கு நேரமாச்சு கிளம்பட்டுமா...? நாளைக்கு போன் பண்றேன்."
 "எத்தனை மணிக்கு...?"
 "இதே நேரம்...! போனுக்கு பக்கத்துல வெயிட் பண்ணு..."சரிங்க..."
 "இது விடைபெறும் நேரம். எங்கே ஒரு ஸ்வீட் அண்ட் ஹாட் கிஸ் ப்ளீஸ்..."
 "இதை மட்டும் மறக்கமாட்டீங்களே...?"
 "இதுக்குத்தானே நான் போனே பண்றேன்."
 "சரி... சரி கன்னத்தைக் கொண்டு வாங்க."
 "கன்னம் ஆல்ரெடி தயார்..."
 பூமா தன் செர்ரி நிற உதடுகளைக் குவித்து காற்றில் ஒரு முத்தத்தைப் பிறப்பித்துவிட்டு ரிஸீவரை வைத்தாள்.
 மாஸ்டர் ஸ்ரீராம் வயிற்றில் உதைத்தான், பூமா வயிற்றில் கை வைத்து அதட்டினாள்.
 "குட்டி ராஸ்கல்...! கையையும் காலையும் வெச்சுகிட்டு சும்மாயிருக்க மாட்டியா...? உங்கப்பனுக்குத் தப்பாமே பொறந்து இருக்கே...!"
 சமையலறையிலிருந்து பூமாவின் அம்மாக்காரி வள்ளியம்மை எட்டிப் பார்த்தாள்,
 "என்ன மாப்பிள்ளைகிட்ட பேசிட்டியா...?"
 "ம்..."
 "என்னமோ போடியம்மா... வயிறு நிறைய புள்ளைய வெச்சுகிட்டு நீ இங்கே உட்கார்ந்திருக்கே... மாப்பிள்ளையோ மேல் படிப்பு, வேலைன்னு கலிபோர்னியாவில் உட்கார்ந்திருக்கார். இந்த மாதிரியான நேரத்துலதான் பொண்டாட்டிக்கு பக்கத்துல புருஷன் இருக்கணும்."
 பூமா அம்மாவை முறைத்தாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 20, 2023
ISBN9798223450672
நியூ டெல்லி 2001

Read more from Rajeshkumar

Related to நியூ டெல்லி 2001

Related ebooks

Related categories

Reviews for நியூ டெல்லி 2001

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நியூ டெல்லி 2001 - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    ஜனவரி 23.

    வருஷம் 2001. பனி பெய்யும் சாயந்தர வேளை.

    டெல்லி ரீகல் ஸ்கொயர்க்கு எதிரே இருந்த பாலிகஞ்ச் அண்டர் க்ரௌண்ட் ஷாப்பிங் மார்க்கெட்டுக்கு முன்பாக டாக்ஸியை நிறுத்தி இறங்கிக் கொண்ட விவேக்கும் ரூபலாவும் பேவ்மெண்டில் நடை போட்டார்கள்.

    என்னங்க...

    ம்...

    ஸ்வெட்டர் எடுத்து வந்திருக்கலாம். இது என்ன டெல்லியா...? இல்லை ப்ரிஜ்ஜா...? இந்தக் குளிர் குளிருது. அம்மாடி!

    விவேக் உள்ளங்கைகளைத் தேய்த்துக் கொண்டே ரூபலாவைப் புன்னகையோடு பார்த்தான்.

    இதுக்காகத்தான் நீ டெல்லிக்கு வராதே, உன்னோட அம்மா வீட்டுக்குப் போயிருன்னு சொன்னேன். நீ கேட்கலை. டெல்லியில எவ்வளவு குளிராயிருந்தாலும் சரி... அதைப்பத்தி எனக்கு கவலையே கிடையாதுன்னு சொன்னே...! இப்ப இங்கே வந்து இது டெல்லியா இல்ல ப்ரிஜ்ஜான்னு கேட்கறே...?

    இதுக்கு முந்தியெல்லாம் டெல்லி வந்திருக்கேனே. இப்படி ஒரு குளிர் இருந்ததே இல்லை என்னமோ அண்டார்டிகா பனிப் பிரதேசத்தில் நடந்து போற மாதிரி இருக்கு.

    உனக்கு இப்போ குளிரக்கூடாது. அவ்வளவு தானே?

    ஆமா...

    அதுக்கு ஒரே வழிதான் இருக்கு...

    என்ன வழி...?

    என் இடுப்புல கையைப் போட்டு கெட்டியா கட்டிப் பிடிச்சுக்க.

    அப்படி பிடிச்சுகிட்டா...?

    குளிர் ஓடிப்போயிடும்...

    தமிழ் சினிமா நிறைய பார்த்து பார்த்து கெட்டுப் போயிட்டீங்க... பேசாமே நடங்க...

    நீ எதுக்கும் மசியமாட்டியே. அங்க பாரு, எல்லாரும் எப்படி ஜோடி ஜோடியா போறாங்கன்னு. புருஷனோட இடுப்பைப் பிடிச்சுகிட்டா கூட தப்பா...?

    இந்த ரோட்டு ரொமான்ஸ் எல்லாம் நமக்கு வேண்டாம்.

    உனக்கு வயசாயிருச்சு ரூபி. அதான் இப்படி ரொமான்ஸ் விஷயத்துல பேக் அடிக்கிறே...

    என்ன சொன்னீங்க...? எனக்கு வயசு ஆயிடுச்சா...?

    ஆமா.

    உங்களுக்கு...?

    அய்யா என்னிக்குமே இளமைதான்! நித்ய மார்கண்டேயன்.

    அய்யே...! ரொம்பவும் பீத்திக்காதீங்க...!

    ரூபலா விவேக்கின் காதைப் பிடித்துத் திருகிக் கொண்டிருக்கும் போதே அவனுடைய சஃபாரி சர்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் மெலிதாய் ஒரு எலக்ட்ரானிக் இசை கொடுத்துக் கூப்பிட்டது.

    செல்போனை எடுத்து இடது காதுக்கு வைத்தான் விவேக்.

    ஹலோ...

    ........

    எஸ் ஸார், ஐயாம் விவேக்...!

    .......

    ஞாபகம் இருக்கிறது ஸார்| இரவு பத்து மணிக்குத்தானே...?

    .......

    வந்துவிடுவேன் ஸார். டெல்லிக்கு வந்ததே அந்தப் பணிக்காகத்தானே...?

    ......

    இப்போது நான் என் மனைவியோடு பாலிகஞ்ச் அண்டர் க்ரௌண்ட் ஷாப்பிங் காம்ப்ளக்ஸுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன், என் மனைவியின் ஹாபி வெளியூர்களுக்குப் போனால் ஷாப்பிங் செய்வதுதான்.

    ...............

    ஷாப்பிங் ஒரு மணிநேரத்தில் முடிந்துவிடும் ஸார். நான் சரியாய் பத்து மணிக்கெல்லாம் உங்களுக்கு முன்பாய் நின்றிருப்பேன்.

    .......

    எஸ் ஸார்...! பேசிவிட்டு செல்போனை அணைத்தான் விவேக்.

    ரூபலா கேட்டாள்.

    போன்ல யார்ங்க...?

    ஆர்.ஏ.எஃப். கமிஷனர்.

    ஆர்.ஏ.எஃப்ன்னா...?

    RAPID ACTION FORCE... தமிழ்ல சொல்லணும்ன்னா அதி விரைவுப் படை...

    பாலிகஞ்ச் அண்டர் க்ரௌண்ட் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் சுரங்கப் படிகளோடு வர, விவேக்கும் ரூபலாவும் இறங்கி நடந்தார்கள்.

    ஜனக்கூட்டம் உள்ளே அலைமோதியது.

    என்னங்க...

    ம்...

    நாம் டெல்லி மண்ணை மிதிச்சு ரெண்டு நாளாகப் போகுது...

    ஆமா...

    இப்பவாவது சொல்லுங்க... நீங்க டெல்லிக்கு என்ன காரியமா வந்திருக்கீங்க...?

    வெங்காயத்தை ஒட்டு மொத்தமா கொள்முதல் பண்ணி மெட்ராஸ் கொத்தவால் சாவடிக்குக் கொண்டு போய் வியாபாரம் பண்ணத்தான்...

    நான் சீரியஸா கேட்டுக்கிட்டு இருக்கேன்.

    ரூபி ஒரு விஷயம் சொன்னா உனக்கே ஆச்சர்யமாயிருக்கும்.

    என்ன...?

    'டெல்லி அழைப்பு எதுக்காகன்னு எனக்குத் தெரியாது. ஆனா ரெட் டாட்ஸ் மேட்டர்..."

    ரெட் டாட்ஸ் மேட்டரா...? அப்படின்னா என்ன அர்த்தம்...?

    ரெட் டாட்ஸ் மேட்டர் என்கிற வார்த்தை ஒரு கோட் வேர்ட் மாதிரி. ரெட் டாட்ஸ்ன்னா ரத்தத் துளிகள்ன்னு அர்த்தம். ரத்தத் துளிகள் சிந்தப் போகிற ஒரு சம்பவம் டெல்லியில் நடக்கலாம். அதைப் பத்திப் பேசி ஒரு முடிவு எடுக்கத்தான் எனக்கு இந்த அவசர அழைப்பு. மொத்தம் ஏழு பேர்க்கு மட்டுமே அழைப்பு. அதுல அடியேனும் ஒருத்தன்...

    ரூபலாவின் முகம் இப்போது மாறியிருந்தது. கண்களில் லேசாய் திகில்.

    என்னங்க... நீங்க சொல்றதை கேக்கும்போதே எனக்கு வயித்தைக் கலக்கற மாதிரி இருக்கு. ரத்தம் சிந்தற மாதிரி டெல்லியில் என்ன சம்பவம் நடக்கப் போகுது?

    தெரியாது. இன்னிக்கு ராத்திரி பத்து மணிக்கு ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ் டிபார்ட்மெண்டைச் சேர்ந்த ஹை அபீஷியல்ஸோடு பேசிப் பார்த்தாத்தான் தெரியும்...

    நடந்து கொண்டிருந்த ரூபலா நின்று விட்டாள்.

    என்ன நின்னுட்டே...?

    வாங்க... ஹோட்டல் ரூமுக்கே போயிடலாம்.

    ஷாப்பிங்...?

    வேண்டாம்...

    ஏன்...?

    ஷாப்பிங் பண்ற 'மூடு' இப்போ இல்லை.

    பயந்துட்டியா...? இதுக்குத்தான் உன்கிட்ட எதையுமே சொல்றதில்லை.

    ரெட் டாட்ஸ் மேட்டர் என்னவாயிருக்கும்ன்னு போன நிமிஷத்தில் இருந்தே என்னோட இருதயம் எக்ஸ்ட்ராவா துடிக்க ஆரம்பிச்சிருச்சு... வாங்க, ஹோட்டல் ரூமுக்கு போயிடலாம். ரூபலா சொல்லிக் கொண்டே திரும்ப முயல,

    Enjoying the preview?
    Page 1 of 1