Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - January 2024
Kanaiyazhi - January 2024
Kanaiyazhi - January 2024
Ebook178 pages59 minutes

Kanaiyazhi - January 2024

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

January 2024 month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateJan 6, 2024
ISBN6580109510620
Kanaiyazhi - January 2024

Read more from Kanaiyazhi

Related authors

Related to Kanaiyazhi - January 2024

Related ebooks

Related categories

Reviews for Kanaiyazhi - January 2024

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - January 2024 - Kanaiyazhi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கணையாழி ஜனவரி 2024

    மலர்: 58 இதழ்: 10 ஜனவரி 2024

    Kanaiyazhi January 2024

    Malar: 58 Idhazh: 10 January 2024

    Author:

    ம.ரா

    Ma. Raa

    புதிய நம்பிக்கையோடும் சூரியனைக் கொண்டாடுவோம்!

    வெள்ளத்தில் மிதந்தது சூரியன்

    ஆனாலும்

    தமிழர் திருநாள்

    சூரியனைக் கொண்டாடுவோம்!

    தண்ணீர் வெள்ளத்தில்

    தானும் நடந்து

    இயல்பு வாழ்க்கைக்கு மக்களை

    எடுத்து வந்திருக்கும்

    முதல்வரைக் கொண்டாடுவோம்!

    போராடிப் போராடி

    எதிர்கொள்ளும் போதே

    சாதி, மத ஏற்றத் தாழ்வு எனும்

    சமூகப் பேரிடர்

    புதுப்புது அவதாரங்களில்

    களமிறங்குவதைப் போல

    அதிசய மழை,

    மேக வெடிப்பு, நில நடுக்கம்,

    வானத்தில் காற்றின்

    அரக்க விளையாட்டு என்று

    ஓவ்வொரு முறையும் புதிது புதிதாக

    வெவ்வேறு அவதாரங்களில்

    இயற்கைப் பேரிடர்!

    இயற்கைப் பேரிடர்!

    எதிர்க்க முடியாது;

    தடுக்க முடியாது;

    தப்பிக்கத்தான் முடியும்!

    ஆனால்

    மனிதர்கள் உருவாக்கும்

    சமூகப் பேரிடரைத் தொடர்ந்து

    எதிர்க்க வேண்டும்; தகர்க்க வேண்டும்!

    தகர்க்க முனைவது வன்முறையாம்

    இயற்கையைச் சிதைப்பது வளர்ச்சியாம்!

    இயற்கைப் பேரிடரோ

    சமூகப் பேரிடரோ

    தமிழர்களுக்குப் புதிதில்லை!

    கடல்கோள், சுனாமிகளையும்

    கடந்து வந்தவர்கள் தமிழர்கள்!

    வெள்ளப் பேரிடரைச் சொல்லாத

    தொன்மை நாகரிகம் கிடையாது.

    சுமேரியாவின் சார் ரூபாக் (தெற்கு ஈராக்)

    வெள்ளத்திலிருந்து தப்பிக்கக்

    கப்பல் செய்யக்

    கட்டளை போட்டிருக்கிறார் கடவுள்!

    பாபிலோனியா கில்காமேசு வரலாறு

    வெள்ளத்தால் கடவுள்

    உலகை அழிக்கப் போவதாகவும்

    தப்பிக்கக் கப்பல் கட்டச் சொன்னதாகவும்

    பதிவு செய்திருக்கிறது.

    மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த

    கடவுள் வெள்ளத்தை ஏவி விட்டதாகவும்

    கதை இருக்கிறது!

    ஏதேன் தோட்டத்திலிருந்து விரட்டப்பட்ட

    ஆதிமனிதத் தலைமுறைகள்

    கடவுளை மறந்தனராம்.

    கோபத்தில் கடவுள் உலகை அழிக்க

    வெள்ளத்தை அனுப்பி வைத்தாராம்!

    வான மதகுகள் உடைந்து

    நாற்பது நாள் மழை கொட்டியதாம்!

    பூமியின் ஊற்று மடைகளும்

    திறந்துகொண்டனவாம்!

    நோவா தப்பிக்கக் கடவுள் தந்த கப்பல்

    அரராத் மலையில் தரை தட்டியதாம்!

    ஒட்டுமொத்த உலகையும் ஒரே காலத்தில்

    அழிக்க மாட்டேன் இனி என்று

    கடவுள் தந்த

    உறுதிமொழிக் கையொப்பம்தான்

    மேகத்தில் தெரியும் வானவில்லாம்!

    அடைமழையில்

    மதுராந்தகம் ஏரி உடையாமல்

    இராமரும் இலக்குவனும்

    காவல் காத்த கதையை, நம்மூர்

    ஏரி காத்த இராமர் கோயில் சொல்கிறது!

    அங்கே

    ‘ஆராதனை என் அறியாமை ஒன்றுமே’ என்று

    கம்பர் சொன்னதாகவும் கதை.

    பெருவெள்ளத்திலிருந்து

    பூமியையும் மக்களையும் காப்பாற்றத்

    திருமால் எடுத்த மீன் அவதாரத்தைச்

    சொல்கிறது மச்ச புராணம்!

    வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு

    மூழ்கிப் போன பூமியைத்

    தோண்டி எடுத்து வந்து

    படகுபோல் நீரில் மிதக்க விடத்

    திருமால் எடுத்தது வராக அவதாரமாம்.

    அரிமர்த்தன பாண்டியன்

    ஆட்சிக் காலத்தில்

    நரியைப் பரியாக்கிய

    சிவபெருமான் திருவிளையாடலில்

    வைகை ஆற்றில் பெருவெள்ளமாம்!

    மக்களைக் காப்பாற்றக்

    கரையை அடைக்க

    வீட்டுக்கு ஒரு ஆள் என்று

    கட்டளை இட்டிருக்கிறான்.

    யார் யாருக்கு எந்தெந்த இடம் என்று

    நிவாரணப் பணிகள்

    பிரித்துக் கொடுக்கப்பட்டனவாம்!

    ‘கூலி கொடுத்து என்னை

    வேலைக்கு அமர்த்துபவர் உண்டோ’ என,

    ஆள் துணை இல்லாமல்

    பிட்டு விற்ற வந்திப் பாட்டியிடம்

    கூலிக்கு ஆளாக வந்து

    திருமுடியில் மண் சுமந்து

    வேடிக்கை காட்டி, வேலையைக் கெடுத்த

    கடவுளும்

    பிரம்படி பட்ட கதையைச் சொல்கிறது

    நம்ம ஊர்

    திருவிளையாடல் புராணம்!

    ‘அன்றிரவு’ சிறுகதையில்

    புதுமைப்பித்தனும்

    மதுரை வெள்ளத்தில்

    சிவனின் திருவிளையாடலை

    வழிமொழிந்திருக்கிறார்.

    இப்படிக்

    கதைகளில் எல்லாம் வெள்ளத்தைக்

    கட்டுப்படுத்தி மக்களைக் காப்பாற்றக்

    கடவுள் அவதாரங்கள்தான் வந்திருக்கின்றன!

    ஆனால் வரலாற்றில் தேடிப் பார்த்தால்

    கடவுளை எதிர்பார்க்காமல்

    கல்லணை கட்டியும்

    காவிரிக்குக் கரை எடுத்தும்

    வெள்ளத்திலிருந்து மக்களைக் காத்த

    வீரனாகத் தெரிகிறான் கரிகாலன்!

    இப்போது

    புயல் அடித்தது!

    வெள்ளம் சூழ்ந்தது

    கச்சா எண்ணெய் கலந்தது!

    போதாக் குறைக்கு

    உரத் தொழிற்சாலையிலிருந்து

    அமோனியா கசிந்தது!

    பேரிடரில்

    பகுதி பகுதியாகத்

    தவணை முறையில்

    தத்தளித்தது தமிழகம்!

    ஐம்பது ஆண்டுகால

    வரலாறு காணாத பேரிடரைச்

    சமாளித்து உடனடியாக

    இயல்பு நிலைக்குத் திருப்பியிருக்கிறார்

    தமிழ்நாட்டு முதல்வர்!

    எனவே

    புதிய நம்பிக்கையோடும்

    சூரியனைக் கொண்டாடுவோம்!!

    பொருளடக்கம்

    கவிதை - இலக்கியா நடராஜன்

    சிறுகதை - ம.ரா.

    கட்டுரை - கவிதைக்காரன் இளங்கோ

    கவிதை - அய்யாறு ச.புகழேந்தி

    சிறுகதை - லட்சுமிஹர்

    கட்டுரை - முனைவர் இரா. காமராசு

    கட்டுரை - அதியன்

    சிறுகதை - கபிலன் சசிகுமார்

    கவிதை - ச. சத்தியபானு

    கட்டுரை – மு.இராமசாமி

    கவிதை - ரகுநாத் வ

    கட்டுரை - அண்டனூர் சுரா

    கட்டுரை - ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்

    கவிதை - ஆர். வத்ஸலா

    கடைசிப் பக்கம் – இ.பா

    கவிதை - இலக்கியா நடராஜன்

    புத்தாண்டிலாவது

    ஆங்கிலம்

    நம் மற்றொரு கண்

    ஆங்கிலப் புத்தாண்டை

    அன்புடன் வரவேற்போம்.

    புத்தாண்டு என்பது

    நமக்குப்

    புதிய சிந்தனைகளைத் தருவது

    புதிய மெருகுகள் பூசுவது.

    கடந்து போகிற ஆண்டின்

    நம் செயல்பாடுகளை

    மனச்சாட்சியின் கூண்டில்

    நிறுத்தி

    விசாரணை செய்வது.

    டிசம்பர் முப்பத்தொன்றில்

    தன்னந்தனியாக

    ஆள் அரவமற்ற தனிமையில்

    நிசப்தங்களின் சாட்சியாக

    மெய்வாய் பொத்தி

    சுத்தமான காற்றைச் சுவாசித்து

    ஆழ்நிலை தியானத்தில்

    அமர்ந்து

    பாவ புண்ணியங்களை

    ஆத்ம சுத்தியோடு

    அலசி ஆராய்வது.

    நம் நலன்

    நம் குடும்ப நலன்

    அவசியம்தான்.

    ஆனால்

    இவைகளைக் கடந்து

    இந்தத்

    தேசத்தின் நலன்

    ஏன்? இந்த

    உலகத்தின் நலன்?

    மானுடம் மரணம் கொண்டால்

    தேசமும்

    உலகமும்

    சேர்ந்தே அழியும்!

    தேசமும் உலகமும்

    சேர்ந்தே அழிந்தால்

    நாம் யார்?

    நம் குடும்பம் யார்?

    சாதியைக் கட!

    மதங்களை

    சனாதனங்களை உடை!

    தேசத்தையும்

    உலகத்தையும்

    பரிவுடன் நேசிப்போம்!

    புத்தாண்டிலாவது

    பூரணமான மனிதனாய் புதுக்கிடச்

    சிந்தனைகளைச் செதுக்குவோம்!

    kavingnarnatarajan@gmail.com

    சிறுகதை - ம.ரா.

    வெளிச்சப் பூச்சிகள்

    கண்மூடிய பிறகும் வெளிச்சப் பூச்சிகள் விடவில்லை. டி.வி., கம்ப்யூட்டரை நிறுத்திய பிறகும் கண்ணுக்குள் வெளிச்சப் பூச்சிகள்... எப்படி நிறுத்துவது?

    யார் யாரோ? எது எதுவோ? எல்லாமே பூச்சிகளாக! வெளிச்சப் பூச்சிகளாக! வெளிச்சத்தை ஆக்கிரமிக்கும் பூச்சிகளாக ஊர்ந்துகொண்டிருந்தன. அவனைத் தூங்க விடவில்லை.

    யோசனையில் புரண்டு கொண்டிருந்தவன் தூங்கிப்போய் இருக்கிறான். தூங்கியதே விழித்தபோதுதான் அவனுக்குத் தெரிந்தது. எப்படி விழித்தான்? ஏன் விழித்தான்? என்பது பிடிபடவில்லை. கடிகாரத்தைப் பார்த்தான் மணி இரண்டு.

    கனவு வந்து விழித்தோமா? என்று யோசித்துப் பார்த்தான். நினைவுச் சரடில் கனவு இல்லை. வேறு என்ன காரணமாக இருக்கும்? யோசனையிலேயே பாத்ரூம் நோக்கி நடந்தான். விளக்கைப் போட்டுக் கதவைத் திறந்தான்.

    வெளிச்சத்தில் தரையில் விழுந்து கிடந்தது கரப்பான் பூச்சி. மல்லாக்கக் கிடந்தது. கை கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. பார்த்துக்கொண்டே உட்கார்ந்தான். மல்லாக்கக் கிடந்த கரப்பான் பூச்சி, எதையோ வெட்ட வெளியில் தேடிப் பிடிக்கத் துடித்துக் கொண்டிருந்தன. எழுந்து கதவைச் சாத்திவிட்டு விளக்கை அணைத்தான். படுக்கையில் படுத்துக் கண்களை மூடினான். கண்களுக்குள் கரப்பான் பூச்சி.

    உலகில் பறக்கத் தொடங்கிய முதல் உயிர். அவன் கண்ணுக்குள் மல்லாக்கக் கிடந்து துடித்துக் கொண்டிருந்தது. புரண்டு படுத்தான்.

    கருப்பாக, வெள்ளையாக, மஞ்சளாகக் கரப்பான் பூச்சிகள்! ஜெர்மனிய, அமெரிக்க, இந்தியக் கரப்பான் பூச்சிகள்! கப்பலில் வந்த கரப்பான் பூச்சிகள்! ஆர்டிக் முதல் அண்டார்டிகா வரையிலான கரப்பான் பூச்சிகள்! கம்ப்யூட்டரில் ‘ஜி டிபன்ஸ்’ விளையாட்டுக் கரப்பான் பூச்சிகள்! மீண்டும் கண்ணுக்குள் கம்ப்யூட்டர் வெளிச்சம். இருட்டை வெளிச்சத்தால் மறைக்கலாம். வெளிச்சத்தை எதைக்கொண்டு மறைப்பது? இருக்கிற வெளிச்சத்தை மறைக்க அதைவிட அதிக வெளிச்சம் வேண்டும். எந்த வெளிச்சத்தை எதைக்கொண்டு மறைப்பது? எப்படி மறைப்பது?

    மறுபடியும் யோசனைக்குள் போனவன், கண்களைத் திறந்தான். வெளிச்சம் காணாமல் போயிருந்தது. அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. கண்களை மூடினால் வெளிச்சம் துரத்துகிறது. திறந்தால் வெளிச்சம் காணாமல் போகிறது. காதுகளைப் போல் கண்களைத் திறந்து கொண்டே தூங்க முடியுமா?

    கரப்பான் பூச்சியின் கஷ்டம் தெரிந்தது. வெளிச்சத்தைத் தாங்க முடியாமல் விழுந்திருக்கிறது. திடீரென்று இருட்டில் விளக்கைப் போட்டதும் தடுமாறி இருக்கிறது. விளக்கை அணைத்தபின் இருட்டில் அது சகஜமாகி இருக்கும்; ஓடி இருக்கும்.

    விளக்கைப் போடாமல் பாத்ரூம் கதவை திறந்து போய்ப் பார்த்தான். தரை வெளிச்சத்தில் கரப்பான் பூச்சி குட்டி இருட்டாய் கிடந்தது. விளக்கைப் போட்டான். கை கால்கள் துடிக்க அப்படியே மல்லாக்கக் கிடந்தது கரப்பான் பூச்சி.

    விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தான். கரப்பான் பூச்சி பயந்து போய் இருக்கிறது. குப்புறக் கிடந்தால் ஓடி இருக்கும். அதைப் பிடிக்க முடியாது. வேறு வழியில்லை என்றால் நிற்பவர் காலில் ஏறும். உதறினால் ஓடி வசதியான இருட்டில் ஒளிந்து கொள்ளும். இப்போது மல்லாக்கக் கிடக்கிறது.

    Enjoying the preview?
    Page 1 of 1