Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கிலி காலம்
கிலி காலம்
கிலி காலம்
Ebook162 pages40 minutes

கிலி காலம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தொலைக்காட்சி நிலையத்தின் உள்ளரங்கத்திலிருந்து 'ஹலோ டாக்டர்' என்னும் அந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க, பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த டாக்டர் ருக்மாங்கதன் ப்ளட் லைட்களின் வெளிச்சத்தில் நனைந்தபடி தெரிந்தார். பேட்டி எடுக்க வந்த பாப் தலை பெண் உருண்டை மைக்கை தன் கையில் வைத்தபடி உற்சாகமாய் பேசிக் கொண்டிருந்தாள்.
 "நேயர்கள் அனைவர்க்கும் வணக்கம். இன்றைக்கு நம்முடைய 'ஹலோ டாக்டர்' பகுதியில் இடம் பெறப் போகிற டாக்டர் ருக்மாங்கதன் அவர்கள் சென்னையில் உள்ள மிகச்சிறந்த பத்து டாக்டர்களில் ஒருவர். சென்னை அச்சரப்பாக்கத்தில் உள்ள சில்வர் ஸ்டார் ஹாஸ்பிட்டல் இவரைத் தலைவராகக் கொண்டு நல்லமுறையில் இயங்கி வருகிறது. இந்த ஹாஸ்பிட்டலில் - கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு - சில்வர் ஸ்டார் ஹாஸ்பிட்டல் மற்றும், சுவிட்சர்லாந்தில் உள்ள பாஸ்கோ பல்கலைக்கழக ஹாஸ்பிட்டலின் புதிய மருந்து கண்டுபிடிக்கும் திட்டம் ஆகியவற்றின் சார்பில் 'ஸ்டெம் செல்' ஆராய்ச்சிக்காக 'ஷ்யூர்க்யூர்' ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டது. இந்த ஆராய்ச்சி மையமும் இப்போது டாக்டர் ருக்மாங்கதனின் தலைமையில்இயங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த 'ஷ்யூர் க்யூர்' ஆராய்ச்சி மையம் அதன் செயல்பாடுகள் பற்றிய கருத்தரங்கம் போன மாதம் சிங்கப்பூரில் நடைபெற்றது. அப்போது 'ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி 'இருதய வால்வு' உருவாக்கும் சாத்தியம் உள்ளது' என்று டாக்டர் ருக்மாங்கதன் அவர்கள் சொன்னது மருத்துவ உலகையே அதிர வைத்தது. இப்போதுள்ள மக்கள் தலைமுறைக்கு ஸ்டெம் செல்களைப் பற்றித் தெரியவில்லை. அதன் பயன்பாட்டைத் தெரிந்து கொள்ளும் வகையில் டாக்டர் ருக்மாங்கதன் அவர்கள் இப்போது நேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கமான பதில்களைச் சொல்ல இருக்கிறார். முதன்முதலாக டாக்டர் அவர்களிடம் தொலைக்காட்சி நிலையத்தின் சார்பாக ஒரு கேள்வி!" - காம்பியர் பெண் பேச்சை நிறுத்தி டாக்டரிடம் திரும்பினாள்.
 "வணக்கம் டாக்டர்!"
 "வணக்கம்"
 "நேயர்கள் கேள்வி கேட்பதற்கு முன் உங்களிடம் ஒரு கேள்வி!"
 "கேளுங்கள்...!" -  கழுத்தில் இருந்த டையை இறுக்கிக் கொண்டே டாக்டர் புன்னகைத்தார்.
 "டாக்டர்! 'ஸ்டெம் செல்கள்' என்றால் என்ன? அதைப்பற்றிக் கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா...?"
 டாக்டர் ருக்மாங்கதன் காமிராவின் க்ளோஸப்புக்கு வந்து பேச்சை ஆரம்பித்தார். "மருத்துவத் துறையில் புதிய முன்னேற்றமாக ஸ்டெம் செல்கள் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நமது உடலில் உள்ள கோடிக்கணக்கான செல்கள் பல்வேறு இயக்கங்களைச் செய்கின்றன. ஆரம்பகட்ட செல்கள் 'ஸ்டெம் செல்' என்று அழைக்கப்படுகிறது. நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பு,  திசு மற்றும் செல்களுக்கு ஆதாரமானது இந்த ஸ்டெம் செல்கள்."
 டாக்டர் பேசி முடிந்த விநாடி டெலிபோனில் ஒரு நேயரின் அழைப்பு வந்தது.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 9, 2024
ISBN9798224512348
கிலி காலம்

Read more from Rajeshkumar

Related to கிலி காலம்

Related ebooks

Related categories

Reviews for கிலி காலம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கிலி காலம் - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அடடே! அப்படியா? - 1

    ஒளிமயமான வியாழன்

    நம் சூரியக்குடும்பத்தில் இருக்கும் கிரகங்களில் மிகப்பெரியது வியாழன். அதாவது பூமியைக் காட்டிலும் 1300 மடங்கு பெரியது. அதேபோல் பூமியை விட 318 மடங்கு கூடுதல் எடை கொண்டது. வியாழனில் தட்ப வெப்ப நிலை எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். பூமி தன்னுடைய அச்சில் 23.5 டிகிரி சாய்வாக இருப்பதால் அந்தந்த காலத்துக்கு ஏற்றபடி தட்ப வெப்பநிலை மாறுகிறது. ஆனால் வியாழனோ நேர் அச்சில் சூரியனைச் சுற்றி வருகிறது. இதனால் வியாழன் எப்போதும் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் கொண்டதாக இருக்கும்.

    1

    நந்தினி ஜெயராமன், போர்டு டைரக்டர்ஸ் மீட்டிங்கில் தெளிவான ஆங்கில உச்சரிப்போடு தீர்க்கமான குரலில் பேசிக் கொண்டிருந்தாள்:

    இப்போது உலகமே போட்டி மயமாகி விட்டது. நம் கம்பெனி ஆரம்பித்தபோது இவ்வளவு போட்டியாளர்கள் இல்லை. இப்போது எந்தப்பக்கம் திரும்பிப் பார்த்தாலும் அங்கே ஒரு போட்டியாளரின் தலை தெரிகிறது. அந்த போட்டியாளர் யார்... அவருடைய பின்புலம் என்ன என்று விசாரித்துப் பார்த்து தெரிந்து கொள்வதற்குள், சற்று தூரத்தில் இன்னொரு போட்டியாளரின் தலை தெரிகிறது. இந்தப் போட்டியாளர்களை நாம் எப்படி சமாளிக்கப் போகிறோம்...?

    மேடம்...!

    கம்பெனியின் ஜி.எம்.வரதராஜன் மெல்ல கையை உயர்த்திக் கொண்டு எழுந்தார்.

    எஸ்...! என்றாள் நந்தினி ஜெயராமன்.

    நான் ஒரு கருத்தைச் சொல்லலாமா?

    சொல்லுங்கள்...

    போட்டியாளர்களைப் பற்றி நாம் கவலைப்படவேண்டியதே இல்லை. ‘100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டதற்கு ஒருவர் ‘தொடர்ந்து ஓடி ஓடி பயிற்சி செய்ய வேண்டும்’ என்றார். மற்றொருவர் ‘விடாமுயற்சி வேண்டும்’ என்றார். இன்னொருவரோ ‘சத்தான உணவை உண்டு உடலைக் கட்டு கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்’ என்றார். ஆனால் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற முனைப்போடு இருந்தவர் மட்டும் ‘ஏற்கெனவே வெற்றி பெற்று சாதனை புரிந்தவர் 100 மீட்டர் தூரத்தை எத்தனை விநாடிகளில் ஓடிக் கடந்தார் என்ற விபரத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அதைவிட குறைவான நேரத்தில் ஓடி பயிற்சி பெற்றால் மட்டுமே வெற்றியோடு சாதனையையும் தொட முடியும்’ என்றார். அதைப்போல் நம் போட்டியாளர்கள் தங்களுடைய பொருள்களை எந்த அளவுக்குத் தரத்தோடு செய்கிறார்கள் என்கிற விபரத்தைத் தெரிந்து கொண்டு அதைவிட சற்று கூடுதல் தரத்தோடு நம்முடைய பொருள்களை நாம் தயார் செய்தால் போதுமானது. ஏனென்றால் ஒரு சந்துக்குள் இருக்கும் டீக்கடையில் டீ நன்றாக இருக்கிறது என்று தெரிந்தாலே நம்முடைய மக்கள் தேடிப்போய் டீ குடிப்பார்கள். அவர்களுக்கு வேண்டியது தரம் மட்டுமே!

    வரதராஜன் பேசி முடித்ததும் நந்தினி ஜெயராமன் அவரை ஒரு புன்னகையோடு ஏறிட்டாள்.

    வெல்செட் மிஸ்டர் வரதராஜன்... ஐ அக்ரி வித் யுவர் வேர்ட்ஸ்...! நம்ம கம்பெனியோட ப்ராடக்ட்ஸ் என்னிக்கும் தரம் வாய்ந்ததுதான்! இன்னமும் தரத்தில் கூடுதல் கவனம் செலுத்தினால் நாம் போட்டியாளர்களைப்பற்றிக் கவலைப்பட வேண்டியது இல்லைன்னு சொல்றீங்க இல்லையா...?

    எஸ்... மேடம்...!

    அப்படீன்னா அந்த ‘க்வாலிடி இம்ப்ரூவ் மெண்ட்’ பொறுப்பை நீங்களே எடுத்துக்கிட்டு செயல்படுத்துங்க. இது சம்பந்தமாய் க்வாலிடி கண்ட்ரோல் ஆபீஸர்ஸ்கிட்டே பேசுங்க...!

    எஸ் மேடம்...!

    எனி அதர் டாபிக்ஸ்...?

    போனஸ் இஷ்யூ...?

    அது இந்த மீட்டிங்கில் வேண்டாம். அடுத்த மீட்டிங்கில் வெச்சு டிஸ்கஸ் பண்ணிக்கலாம்... திஸ் ஈஸ் டைம் ஃபார் டீ பிரேக்! - நந்தினி ஜெயராமன் சொல்லிக் கொண்டே நாற்காலியைத் தள்ளிக்கொண்டு எழுந்தாள். அனைவரும் எழுந்தார்கள்.

    ஏ.ஸி. கான் ஃப்ரன்ஸ் ஹாலை விட்டு வெளியே வந்த நந்தினி ஜெயராமனுக்கு நாற்பத்தைந்து வயது உடம்பு. இளம் பச்சை நிற மைசூர் சில்க் சேலையில் தன்னுடைய எண்பது கிலோ உடம்பை அடக்கியிருந்தாள். கண்களுக்கு தங்க பிரேமிட்ட கண்ணாடி கொடுத்து லேசாய் மேக்கப் போட்டிருந்தாள். பொட்டு இல்லாத நெற்றிப் பிரதேசம் போக்குவரத்து இல்லாத ரோடு மாதிரி வெறிச்சோடிப் போயிருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போன தன் கணவர் ஜெயராமனை நினைத்து அடிக்கடி அழுததில் கண்களுக்குக் கீழே சதை சுருக்கங்களை வாங்கியிருந்தாள்.

    தன்னுடைய அறையை நோக்கி வராந்தாவில் நடக்கும் போதே பி.ஏ ஞானகடாட்சம் எதிர்பட்டார்.

    குட் மார்னிங் மேடம்...!

    குட்மார்னிங்! எனி ஃபேக்ஸ் நியூஸ்?

    எஸ் மேடம்...! நம்ம ஃபேக்டரி மானேஜர் ஜாம்ஷெட்பூர் போய் சேர்ந்துட்டார். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் பிராஜக்ட் ஹெட் ஜோஸ்வாவைப் பார்த்துடுவார்.

    வெரி நைஸ்... அப்புறம்...?

    பாலன்ஸ் சீட் ரெடின்னு ஆடிட்டர் போன் பண்ணியிருந்தார். உங்களை எத்தனை மணிக்கு மீட் பண்ணலாம்ன்னு அப்பாயிண்ட்மெண்ட் கேட்டார்.

    ஈவினிங் ஃபைவ் ஒ-க்ளாக் கொடுங்க...!

    எஸ் மேடம்...!

    சர்மா டெல்லியிலிருந்து ஏதாவது போன் பண்ணினாரா?

    இல்ல மேடம்!

    அவர் டெல்லி போய் நாலைஞ்சு நாளாச்சு. பட்... ஐ டோண்ட் கெட் எனி ரிப்ளை ஃப்ரம் ஹிம்...! - சொல்லிக்கொண்டே தன்னுடைய அறைக்குள் நுழைந்தாள் நந்தினி ஜெயராமன். பி.ஏ. ஞானகடாட்சமும் அவளைத் தொடர்ந்து அறைக்குள் பிரவேசித்தார்.

    சர்மா இன்னிக்கு போன் பண்ணுவார்ன்னு நினைக்கிறேன் மேடம்...

    லெட் அஸ் வெயிட் அண்ட் ஸி...! - சொன்ன நந்தினி ஜெயராமன் மேஜை மேல் இருந்த தண்ணீர் நிரம்பிய டம்ளரை

    Enjoying the preview?
    Page 1 of 1