Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பிரியாதே பிரியா!
பிரியாதே பிரியா!
பிரியாதே பிரியா!
Ebook156 pages37 minutes

பிரியாதே பிரியா!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"அப்புறம்..." பாரத் பத்திரிகையின் எடிட்டர் பராங்குசம், அகலமாய் ஆச்சர்யப்பட்டார். எதிரே உட்கார்ந்திருந்த சந்திரபோஸ் தொடர்ந்தான்.
 "அப்புறமென்ன ஸார். அந்தப் பிச்சைக்கார குடும்பத்தைக் கொண்டுபோய் ராயப்பேட்டை, ஹாஸ்பிடல்ல விட்டுட்டு... கையில நூறு ரூபாயும் குடுத்துட்டுதான் போனா அந்த பிரியா..."
 "இந்தக் காலத்துல இப்படியும் ஒரு பொண்ணா...?"
 "இன்னும் கேளுங்க ஸார்... பிரியாவோட பங்களாவுக்குப் பின்னாடி ஒரு சேரி இருக்கு. அந்தச் சேரியில் கிட்டத்தட்ட ஒரு நூறு குடும்பம் இருக்கும். அந்த குடும்பங்களுக்கெல்லாம் பிரியா தான் நடமாடும் தெய்வம்... பிரியாவைப் பார்த்துட்டா போதும்... அது ஆறுவயசு குழந்தையா இருந்தாலும் சரி... அறுபது வயசு கிழமாயிருந்தாலும் சரி... கையெடுத்து கும்பிடறாங்க...'
 "கேட்க கேட்க பிரமிப்பா இருக்கு...! பணத்தை குடுத்து குடுத்து குடுத்து - எல்லாரையும் மயக்கி வெச்சிருக்கா போலிருக்கு..."
 "எனக்கும் அந்தச் சந்தேகம் இருந்தது ஸார். அந்தச் சேரியிலிருந்து நாலைஞ்சு பேரைப் பேட்டி எடுத்ததும் - அந்த சந்தேகமும் கழண்டு போச்சு. அத்யாவசியமா இருந்தாலொழிய கைநீட்டி பணத்தை வாங்க மாட்டாங்களாம். பிரியாம்மாவோட பாதம் அந்த சேரியில் பட்டாலே போதும்ன்னு சொல்றவங்கதான் அதிகம்..."
 "பணக்கார வீட்ல பொறந்த ஒரு பொண்ணுக்கு. இந்தச் சேரி ஜனங்க மேலே ஏன் இவ்வளவு பாசம்..."அந்த சேரிக்குள்ளே நீங்க, ஒருதடவை நுழைஞ்சுட்டு வெளியே வந்தா நாலு நாளைக்கு உடம்பு நாறிட்டே இருக்கும் எடிட்டர் ஸார். கர்சீப்பாலே மூக்கை பொத்திகிட்டுதான் அங்கே இருக்கிற ஆட்கள்கிட்டே பேச முடியும்..."
 "இந்த பிரியா. இதே ரீதியில் போனா... ஒரு கட்சிக்கே தலைவியாகி - ஆட்சியைப் பிடிச்சாலும் பிடிச்சுடுவா போலிருக்கே...?"
 "அவ கைவசம் வெச்சிருக்கிற எல்லா திட்டங்களும் அருமையான மணிமணியான திட்டங்கள் ஸார். ஒருவேளைக் கூட யாரும் பசியாய் இருக்கக் கூடாது. சினிமா நடிகர் நடிகைகள் கிட்டேயும். பெரிய பெரிய தொழிலதிபர்கள் கிட்டேயும் முடங்கியிருக்கிற கறுப்புப் பணத்தை - பாரபட்சம் பார்க்காமே பறிமுதல் பண்ணி – அதை அரசாங்க நிதியில் சேர்க்காமே ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கவும், அவங்க தொழில் தொடங்கவும் செலவு பண்ணனும்ங்கிறது பிரியாவோட கோரிக்கை. இந்தியாவில் இருக்கிற மொத்த கறுப்புப் பணமும் - வெளியே வந்துட்டா... இதுவும் ஒரு அமெரிக்காவா மாறும்ங்கிறது பிரியாவோட எண்ணம். இளம் விதவைகளுக்கு அரசாங்கமே மறுமணம் செய்ய ஸ்டெப்ஸ் எடுக்கணும். ஒரு பெண் இளம் வயசுல கணவனை இழந்துட்டா... அவளுக்கு. ஒரு வருஷ காலக்கெடுவுல கல்யாணத்தைப் பண்ணி வைக்கணும்ன்னு சட்டம் வரணும்... மனைவியை இழந்த ஆண்கள் ரெண்டாந்தாரமா ஒரு விதவைப் பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும். மீறி வேற பெண்ணைக் கல்யாணம் பண்ணிகிட்டா ஒரு வருஷ ஜெயில் தண்டனை... தரணும்..."
 "அடேங்கப்பா...!"
 "இன்னும் நிறைய இருக்கு ஸார்... அவளோட அப்பாவுக்கு ஒரு விதவைப் பெண்ணை கல்யாணம் பண்ணி வெச்சு... தன்னோட புரட்சியை ஸ்டார்ட் பண்ணியிருக்கா. பத்திரிகைகள் மட்டும் அவளை 'பூஸ்ட்' பண்ணிவிட்டா... ஒரு வருஷத்துக்குள்ளே அவ எங்கேயோ போயிடுவா..."
 எடிட்டர் பராங்குசம் நாற்காலியின் நுனிக்கு வந்தார்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 9, 2024
ISBN9798224778669
பிரியாதே பிரியா!

Read more from Rajeshkumar

Related to பிரியாதே பிரியா!

Related ebooks

Related categories

Reviews for பிரியாதே பிரியா!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பிரியாதே பிரியா! - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    ஹோட்டலுக்குள் கார் நுழைந்து - போர்டிகோவில் அடைக்கலமாகி அணைந்ததும் - பிரியா கீழே இறங்கினாள். அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின், மத்தியான நேரம் சோம்பலாயிருந்தது. பக்கவாட்டில் தெரிந்த ராபின் ப்ளு நீச்சல் குளத்தில் மட்டும் லேசாய் ஆரவாரம். ஸ்விம்மிங் சூட்களில் ஆங்கிலோ இந்தியப் பெண்களின் கேரட் நிற உடம்புகளை - பார்வையில் வாங்கிக் கொண்டே வரவேற்பறைக்குள் நுழைந்தாள் பிரியா...

    வெளிர் மஞ்சள் நிற சல்வார் கம்மீஸில் இருந்த பிரியாவுக்கு வயது 240 மாதங்கள். சமீபத்திய நடிகைகளில் லேசாய் கெளதமியை ஒத்துப் போயிருந்தாள். ஈஸ்ட்மென் நிறக் கனவுகளோடு கண்கள். ஸ்டெல்லா மேரீஸில் பி.ஏ. இறுதியாண்டு மாணவி. 'பிரியா டிஸ்பிளேஸ்' அட்வர்டைசிங் கம்பெனியின் மானேஜிங் டைரக்டர் - வித்யாகரின் ஒரே புத்திரி. இவள் ஒருவனைக் காதலிக்கிறாள். அதன் விவரங்களைப் பின்னால் வரும் பாராக்களில் பார்க்கலாம்.

    பிரியா கெளண்டரை நெருங்கினாள். மானேஜர் என்று சட்டைப் பையில் வில்லைக் குத்தியிருந்த நபர் கழுத்து டையை இறுக்கிக் கொண்டு நிமிர்ந்தார்.

    எஸ்...

    ஒரு மேரேஜ் ரிசப்ஷனுக்கு ஹால் வேண்டும்.

    என்றைக்கு?

    இன்று இரவு ஏழுமணிக்கு.

    அக்காமடேஷன் கெப்பாஸிடி...?

    நூறு பேர்...

    அப்படியானால் ஃபர்ஸ்ட் ப்ளோரில் இருக்கிற கங்கா ஹாலையே நீங்க எடுத்துக்கலாம்...

    அதற்கு நான் எவ்வளவு 'பே' பண்ண வேண்டும்?

    ரிசப்ஷன் நிகழ்ச்சி எத்தனை மணி நேரம் நடக்கும்...?

    இரண்டு மணி நேரம்...

    ஒரு மணி நேரத்திற்கு வாடகை இரண்டாயிரம் ரூபாய்... போர்டிங் அயிட்டம்ஸ் பர் ஹெட் ஃபிப்டி ரூப்ஸ் ஆகும்...

    பிரியா - தன் ஹேண்ட்பேக்கின் ஜிப்பைப் பிரித்து - ஐம்பது ரூபாய் நோட்டுக்கட்டு ஒன்றை எடுத்து - மேஜையின் மேல் வைத்தாள். இந்த ஐயாயிரத்தை அட்வான்ஸாக வைத்துக்கொள்ளுங்கள். மீதியை பில் செட்டில் பண்ணும் போது குடுத்துவிடுகிறேன்."

    சரியாய் ஏழுமணிக்கு பங்க்ஷனை ஆரம்பித்து ஒன்பது மணிக்கு முடித்துவிட வேண்டும். ரிசப்ஷனுக்கு ஹாட் ட்ரிங்க்ஸ் வேண்டுமா...?

    வேண்டாம்...

    ஹோட்டலின் மானேஜர் - ரசீது புத்தகத்தைப் புரட்டிக் கொண்டே கேட்டார். "உங்க நெம்...?

    பிரியா...

    அட்ரஸ்

    நெம்பர் செவன் வித்யாகர் பவன் க்ரீன்வேஸ் ரோட்

    மானேஜர் வியப்பாய் நிமிர்ந்தார்.

    நீங்க மிஸ்டர் வித்யாகரோட டாட்டரா...?

    ஆமாம்...

    வீட்ல யார்க்கு கல்யாணம் நடந்தது?

    என்னோட அப்பாவுக்கு...

    சில விநாடிகள் ஸ்தம்பித்துப் போன மானேஜர்க்கு - பிரியாவின் நிதானமான பேச்சும், நடத்தையும் ஆச்சர்யமாக இருந்தது.

    சீக்கிரமா... ரசீதைப் போட்டு தர்றீங்களா...?

    ஸாரி... இதோ...! - மானேஜர் வேகமாய்! ரசீதை நிரப்பி - கையெழுத்தைப் போட்டுக் கொடுக்க - பிரியா வாங்கி ஹேண்ட்பேக்குக்குள் போட்டுக் கொண்டே சொன்னாள்.

    பொண்ணும். மாப்பிள்ளையும்... சரியா ஏழு மணிக்கெல்லாம் வந்துடுவாங்க... வெளியே வெக்கிற அனௌன்ஸ் மெண்ட் போர்டில் 'வித்யாகர் - சசிகலா' மேரேஜ் ரிசப்ஷன் 7.Pm To 9. P.M, என்கிற வாசகங்கள் இருக்கட்டும்.

    மானேஜர் தலையாட்டினார். பின் தயக்கமாய் கேட்டார்.

    ரிசப்ஷன்ல என்னென்ன அயிட்டம் பரிமாறலாம்...?

    ஹெவியா வேண்டாம்... சிம்ப்ளாவே இருக்கட்டும், ரிசப்ஷனுக்கு வர்ற ஆசாமிகளில் பெரும்பாலோர்க்கு பி.பியும் சுகர் கம்ப்ளைய்ண்ட்டும் இருக்கும்...

    ஆர்க்கெஸ்ட்ரா... வேணுமா...?

    வேண்டாம்...

    ரிசப்ஷன் நடக்கப் போகிற ஹாலில் ப்ளவர். டெக்ரேஷன்ஸ் இருக்கட்டுமா?

    வேண்டாம்...

    ஓ.கே. ஏழு மணிக்கு ஹால் ரெடி யாயிடும்...

    தாங்க்யூ... - பிரியா ஹேண்ட்பேக்கை தோளில் சரித்துக் கொண்டு புறப்பட்டாள். அவள் பத்தடி நகர்ந்ததுமே - ஹோட்டல் மானேஜர் - பக்கத்திலிருந்த டெலிபோன் ஆபரேட்டர் பெண்ணிடம் சிரிப்போடு திரும்பினார்.

    நடக்கிற காலம் கலிகாலம்ன்னு சொல்றது உண்மைதான். அப்பாவோட ரெண்டாவது கல்யாணத்துக்கு மகளே ரிசப்ஷன் ஹாலை 'புக்' பண்ண வந்திருக்கா...! வீட்ல ஒரு வயசுப் பொண்ணு இருக்கும் போது... கிழட்டு அப்பன்காரன் பண்ற காரியமா இது... வயசுப் பசங்க கூட ஆசைகளைக் கட்டுப்படுத்திக்கறாங்க... ஆனா இந்த கிழடுக இருக்கே...?

    மானேஜர் பேசிக் கொண்டிருக்கும் போதே -

    பிரியா சட்டென்று திரும்பினாள். கண்களில் கோபம் ஜ்வலிக்க கெளண்டரை நோக்கி வந்தாள். ஹேண்ட்பேக்கைத் திறந்து - மடித்து வைத்திருந்த ரசீதை எடுத்து - கௌண்டர் பலகையின் மேலே வைத்தாள்.

    பணத்தை ரீபண்ட் பண்ணிடுங்க... மானேஜர் எச்சில் விழுங்கினார். ஏ...ஏன்...?

    இங்கே எங்கப்பாவோட ரிசப்ஷன் நடக்கிறது எனக்கு பிடிக்கலை... ப்ளீஸ்... பணத்தை ரீபண்ட் பண்ணிடுங்க...

    ஸாரி... நான் பேசினதை நீங்க கேட்டுட்டீங்க போலிருக்கு. ஐயாம் வெரி... வெரி... ஸாரி...

    "எங்கப்பாவுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1