Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manam Kamazhum Malargal
Manam Kamazhum Malargal
Manam Kamazhum Malargal
Ebook272 pages1 hour

Manam Kamazhum Malargal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சில நபர்கள் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவார்கள். இப்படித்தான் வெங்கட், புவனாவை சந்திக்கிறான். இந்த சந்திப்பு ஒரு அற்புதமான காதல், தவிப்பு, சந்தோஷம் என்று எல்லா உணர்வுகளையும் பிரதிபலிப்பதையும், இன்னும் சில சுவாரசியமான சிறுகதைகளையும் வாசித்து மகிழ்வோம் வாருங்கள்...!

Languageதமிழ்
Release dateJan 13, 2024
ISBN6580172310526
Manam Kamazhum Malargal

Related to Manam Kamazhum Malargal

Related ebooks

Related categories

Reviews for Manam Kamazhum Malargal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manam Kamazhum Malargal - Sankaran Aswathy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மணம் கமழும் மலர்கள்

    Manam Kamazhum Malargal

    Author:

    சங்கரன் அஸ்வதி

    Sankaran Aswathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sankaran-aswathy

    பொருளடக்கம்

    1. மெல்லிய மலர் உன் மனது

    2. மணம் கமழும் மலர்கள்

    3. உயிரிலும் உயர்வாகும் உறவுகள்

    4. அனுவும், அவள் விரும்பிய அவனும்

    5. வைரங்கள் தெரிவதில்லை

    6. அன்பு மலர்களும் அரவிந்தனும்

    7. இவள் ஒரு காதம்பரி

    8. உன்னோடு நான் பேச மாட்டேன்

    9. பேச நினைத்தேன் பேசுகிறேன்

    10. ஓடும் ரயிலின் ஓரத்து ஜன்னல்

    11. பனி பொழியும் மலை தந்த ஒரு பதுமை

    12. கண்ணீரில் நனைந்த நினைவுகள்

    13. காற்று, கடல், கண்மணி

    14. ரமேஷ் தேடிய ராகமாலிகா

    1. மெல்லிய மலர் உன் மனது

    சென்ட்ரல் ஸ்டேஷன் ரிசெர்வேஷன் கௌண்டர்!.

    இப்போல்லாம் ஆன்லயனில் ரிசெர்வேஷன் இருந்தாலும் அன்று வெங்கட் அவன் மாமாவை பெங்களூர் வழி அனுப்ப வந்ததால் அப்படியே அந்த ரிசெர்வேஷன் கௌண்டருக்கு வந்தான். பாரம் எழுதி ஆகிவிட்டது. ஆனால் ரயில் நம்பர் தெரியாது! பேர் தெரியும்!

    வரிசையில் புவனாவிற்கு அடுத்தாற்போல் ஒரு பெரியவர். அதற்கு முன்னால் வெங்கட்!

    சார்!

    என்ன!

    இதிலே ரயில் நம்பர் போடணுமா அல்லது ரயிலின் பேர் மட்டும் போட்டாப் போதுமா!

    அவருக்கு என்ன எரிச்சலோ!

    ஏம்ப்பா! ரயிலோட நம்பர் பேர் தெரியாம கௌண்டர்லே வந்து நிக்கறே! என்று ஆரம்பித்தார்.

    வெங்கட்டுக்கு கஷ்டமாய் போய் விட்டது.

    சாரி சார்! தெரியாமேக் கேட்டுட்டேன்!

    சாரி!

    அதற்குக் கூட அவர் பதில் சொல்லலே!

    புவனாவிடம் திரும்பினான். பாவம் பரிதாபமாக இருந்தான்.

    நீங்க ரயில் பேர் மட்டும் போடுங்க! டிக்கட் கொடுப்பார்கள் என்றாள்.

    தேங்க்ஸ் மிஸ்... தேங்க்ஸ் எகெயின்! அதற்கு மேல் பேச்சை இழுக்கத் தயங்கினான்.

    அவள் பார்வையும் அதுபோதும் என்றிருந்தாள் அல்லது அதற்கு மேல் விரும்பவில்லையோ!

    ஆனால் ஒரு தரம் அவனை நன்றாகப் பார்த்துக் கொண்டாள்.

    இவன் அந்த விண்ணப்பத்தாள் இன்னும் எழுதவில்லை! முழித்துக் கொண்டிருந்தான்.

    பெண்கள் மாதப் பத்திரிக்கை ஒன்று படித்துக் கொண்டிருந்த புவனா, தற்செயலாக அவன் பக்கம் பார்த்தாள்.

    என்னங்க! இன்னும் பாரம் எழுதலையா?

    எந்த டிரைன் சொன்னாங்க! அதை மறந்திட்டேன்! திருநெல்வேலிக்குப் போகணும்.

    திருநெல்வேலிக்கு மூணு நாலு டிரைன் இருக்கு! உங்களுக்கு எதில் போகணும்?

    எனக்கு இல்லீங்க! என் அங்கிள் ஆண்டிக்கு! அசடு வழிந்தான்!

    புவனாவுக்குப் பாவமாக இருந்தது!

    போன் இருக்கில்லே! கேளுங்க! இல்லை செல் வேணுமா!

    சேச்சே! செல் இருக்கு! தாங்க்ஸ் பார் ஆபரிங்!

    சித்தப்பா! எந்த டிரைன்? ஒ! கனியக்குமரியா! சரி சித்தப்பா! வாங்கிடறேன்!

    திரும்பவும் பாரம் எழுதலே!

    மறுபடியும் என்னாங்க! என்று அவனைப் பார்த்தாள்.

    வெச்சு எழுதணும்! கியு பெரிசா இருக்கு! அந்த டேபிள்க்குப்போய் எழுதிட்டு வரேன்!

    பரவாயில்லை! இந்தாங்க! இந்த புக் மேல வச்சு எழுதுங்க!

    எழுதினான்...! புவனா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

    எல்லாம் எழுதிட்டீங்களா!

    எழுதிட்டேன்.

    அப்புறம் கிளாஸ் போடலை! ரிடர்ன் தேதி போடலே! என்று சொல்லாதீங்க! மறுபடியும் புத்தகம் எழுதத் தர மாட்டேன்!

    சிரித்தாள்!

    இல்லீங்க! எல்லாம் எழுதிட்டேன்! நீங்க வேணாப் பாருங்க!

    புவனா ஒரு பள்ளி ஆசிரியை மாதிரி பேப்பரைப் பார்த்துக் கொடுத்தாள்.

    சரியா இருக்கா! நீங்க இல்லேன்னா நான் திண்டாடிப் போய் இருப்பேன்!

    புவனா சிரித்தாள்! அந்த சிரிப்பில் வெங்கட்டின் வெகுளித்தனம் அவள் மிகவும் ரசித்தது தெரிந்தது...!

    அப்பொழுது தான் அவனை திரும்பவும் நன்றாகப் பார்த்தாள்!

    இவ்வளவு ஸ்டைலாக அட்ராக்டிவாக இருக்கான்! ஆனா எவ்வளவு பிளைனாக களங்கமில்லாம இருக்கான்!

    வெரி நைஸ் சுவீட் கை!

    ஒரு வழியா வெங்கட் டிக்கட் வாங்கினான். பெரியவர் வாங்கிக் கொண்டிருந்தார். அதற்குப் பிறகு புவனா!

    அவளிடம் தாங்க்ஸ் எகெயின்! சொல்லி விட்டுக் கிளம்பினான். ஆனால் உடனே போக முடியவில்லை!

    ஏதோ ஒரு தயக்கம் அவனை அறியாமல் அவன் நடையை மேதுவாக்கியது!

    புவனாவும் டிக்கட் வாங்கிக் கொண்டிருந்தாள். அவளுக்கும் அவன் மெதுவாகப் போக மாட்டானா என்ற எண்ணம் இயற்கையாகத் தோன்ற ஆரம்பித்தது!

    எண்ணங்களுக்கு நேரம் காலம் என்று எப்பொழுதும் வரையறை இருப்பதில்லை!

    சூழ்நிலையிலும் சில அருமையான நேரங்களில் நல்ல நினைவுகளுடன் செயல்பட்டால் எதிர்பாராத இனிமை உணர்வுகள் மெதுவாக இசை பாட ஆரம்பிக்கும்!

    நல்ல இரு மனங்கள் இயற்கை நிலையைவிட்டு இடம் மாறித் தாவுவதற்கு இம்மாதிரி நல்ல நிகழ்வு ஒன்று போதும்!

    வரும் நாட்களில் அவை இவர்களுக்கு ஆசைக் கனவுகளை ஏக்கத்துடன் காட்டும்!

    படியில் தயங்கித் தயங்கி வெங்கட் இறங்குவதற்கு முன் புவனா வந்து விட்டாள்.

    ஹாய்! மிஸ்டர் வெங்கட் ராம்! என்ன! மெதுவாப் போறீங்க!

    என் பேர் உங்களுக்கு எப்படித் தெரியும்?

    அதுதான் அப்பிளிக்கேஷன்லே இருக்கே! பார்த்தேனே!

    அய்யோ! நீங்க ரொம்ப ஷார்ப்! ஐ கான்ட் பிலீவ் இட்!

    புவனா சிரித்தாள்! என் பேர் புவனா! இப்போ சென்னையில் தான் இருக்கேன்! இதற்கு முன்னால் பெங்களூரில் இருந்தேன்.

    மிஸ் புவனா! எப்படி போறீங்க? கேன் ஐ டிராப் யு?

    இல்லை மிஸ்டர் வெங்கட்! நான் ஸ்கூட்டர் வச்சுருக்கேன். அப்புறம் பார்க்கலாம்.

    உங்க பேச்சும் ப்ளைனாக பழகுவதும் பிடிச்சு இருக்கு! நிச்சயம் இன்னொரு முறை மீட் பண்ணுவோம்!

    வழக்கமான போன் நம்பர் அவளும் கொடுக்கலே! அவனும் கேட்கலே!

    ஆனால் அவரவர்கள் வாகனங்களில் பிரயாணம் பண்ணும் போது நினைவுகள் வராமல் இல்லை!

    ***

    இன்னும் ஒரு நாள்!

    காலையில் வெங்கட் வாக்கிங் போய்க் கொண்டிருந்தான்.

    ஹல்லோ மிஸ்டர் வெங்கட்!

    அவனருகில் ஒரு ஸ்கூட்டர் நின்றது!

    உடம்பு முகமெல்லாம் மூடிக் கண்கள் மட்டும் தெரிகிற மாதிரி அவள் ஸ்கூட்டர் உடை அணிந்திருந்தாள்!

    அவனால் உடன் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை!

    ஹல்லோ புவனா! சட்டென்று தெரியவில்லை! எங்கே இந்தப் பக்கம்!

    இங்கே அடையாரில்தான் வீடு! நீங்க நடக்கறதைப் பார்த்தேன்! உடனே நிறுத்திட்டேன்! ஆபீஸ் போயிண்டு இருக்கேன்!

    உங்க கார் எங்க பார்க் பண்ணி இருக்கீங்க! வீடு எங்கே?

    இங்கே திருவான்மியுர்லே தான் வீடு! கார் வீட்லே இருக்கு! என் பிரண்டோடு வந்தேன். அவன் எங்கே நடக்கரான்னு தெரியலே!

    வாங்க நான் உங்களை டிராப் பண்றேன்!

    உங்களோடு ஸ்கூட்டர்லியா!

    ஆமாம் வாங்க! நான் உங்களைக் கூட்டிண்டு ஓடிட மாட்டேன்! நீங்க சொன்ன இடத்திலேயே டிராப் பண்றேன்! போதுமா!

    அதற்காக இல்லை! உங்களோடு நெருங்கி உட்காரனுமேன்னு பார்க்கிறேன்!

    ஒண்ணும் ஆகாது! தயங்காமே வாங்க! நாங்கதான் உட்காரப் பயப்படுவோம்! நீங்க பயப்படுகிறீங்க!

    புவனா! வாக் பண்ண ச்வட்டிங்!

    வெங்கட்! இப்போ ஏறி உட்காரப் போறீங்களா இல்லையா! என்று அன்பாக ஒரு அதட்டல் போட்டாள்!

    உட்கார்ந்தான்.

    புவனாவுக்கு உள்ளூர சிரிப்பு! இந்தக் காலத்தில் இவ்வளவு நாகரீகம் உள்ள ஒருவன் இவ்வளவு நல்ல மனதோடு இருப்பானா!

    உவகையுடன் ஒரு பெருமிதம் அவனைப் பற்றி அவளுக்கு!

    அதே சமயம் தன் சகோதரியின் கணவரையும் நினைத்துப் பார்த்தாள். அழுகை வந்தது!

    என்ன புவனா! திடீர்னு பேசாம இருக்கே!

    புவனா சமாளித்தாள்.

    வெங்கட்! நீங்க சொன்ன இடத்தில டிராப் பண்ணப் போறது இல்லை! அப்படியே கொண்டு போகப் போறேன்!

    அய்யோ! நீ எங்கேயாவது, உன் ஆபீஸ் பக்கம் போய் விடாதே! என் டிரஸ் சரியில்லே!

    புவனா ஸ்கூட்டரை நிறுத்தி விட்டாள்.

    சிரியோ சிரி என்று அடக்க முடியாமல் சிரித்தாள்.

    அய்யோ! வெங்கட்! வாட் எ நைஸ் மேன் யு ஆர்! ரொம்ப ப்ளைன்! இங்கே காபி ஷாப்புக்கு தான் போறேன்!

    உங்களோடு காபி சாப்பிட்டு கொஞ்ச நேரம் ஸ்பென்ட் பண்ணலாமா!

    புவனா! சாதரணமா பையன்கள்தான் இப்படி பேசுவாங்க! எனக்கு உன்னை நினச்சா பெருமையாக இருக்கு!

    நான் உனக்கு அறிமுகமானதிர்க்கு அந்தக் கடவுளுக்கு நன்றி சொல்லணும். யு ஆர் வெரி சுவீட்! சோ கியூட்!

    காபி ஷாப் போனார்கள்.

    ஒரு சாதாரண சுவெட் ஷர்ட் டிரசில் கூட வெங்கட் அழகாக இருந்தான்! அந்த நேர்மையான, வெகுளியான, எண்ணங்களும் செயல்களும் அவன் முகத்தை இன்னும் தெளிவாக காண்பித்தன.

    ஒப்பனை இல்லாத ஒருமித்த அழகுப் பெண் புவனா! எளிமையாக எப்போதும் சிரித்துப் பேசும் புவனா இயற்கை எழிலோடு இணைந்தவள்!

    என்ன புவனா! திடீர்னு சீரியஸ் ஆயிட்டே! ஏன் ஒரு மாதிரியா இருக்கே!

    புவனாவின் விழிகளிலே வெங்கட்டின் முழு முகமும் தெளிவாக நிலை கொண்டிருந்தது!

    வெங்கட்!

    புவனா தயங்கினாள்.

    வெங்கட்! நான் உன்னை நீ என்று கூப்பிடலாமா! உன்னோட உயிர்த்தோழி ஆக ஆசைப்படறேன்!

    புவனா! ஆர் யு ஓகே! உண்மையாகவே உன்னை இன்னொரு முறைப் பார்க்கணும்னு தவிச்சேன்! அது ஏன் என்று எனக்கே தெரியலே! ஆனா இப்படி இவ்வளவு சீக்கிரம் பக்கத்திலே பேசிப் பார்ப்பேன் என்று நினைக்கலே!

    வெங்கட்! அய் வாண்ட் டு பீ வித்யு! உன்னோடு இருக்க ஆசைப்படறேன்! இது பார்த்த உடனே எடுத்த முடிவல்ல! என் அக்கா கணவரையும் உன்னையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது என்னையும் அறியாமல் எனக்குள் வந்த முடிவு!

    புவனா கண்ணீர் பெருக அழுது கொண்டிருந்தாள்.

    வெங்கட் எவ்வளவு சமாதானம் செய்தும் பயனில்லை!

    இவ்வளவு நாட்கள் தன்னுள் தேங்கிய துக்கம் இவன் போன்ற நல்ல மனித உள்ளத்தைப் பார்க்கும் போது பீரிட்டு பெரு அருவி போல வருவதில் ஆச்சர்யமில்லை!

    புவனா! அவள் கையைப் பிடித்துக்கொண்டு இந்தப் பிடி உன்னை விட்டு என்றும் தளராது!

    இப்படியே உன்னோடுதான் இருக்கும். போதுமா!

    ஹாலில் இருந்து சற்று ஒதுக்குப்புற ரூமில் உட்கார வைத்து சமாதானம் செய்தான்!

    விசித்து விசித்து கண்களும் முகமும் சிவந்து வீங்கி இருந்தது!

    புவனா! ஆர் யு ஓகே! ஏன் இப்படி ஒரு அவுட் பர்ஸ்ட்!

    வெங்கட்! என் அக்காவும் காதலிச்சு கல்யாணம் பண்ணிண்டவள்தான். ஆனா அது கொஞ்ச நாள்தான் பாரின் அசைன்மெண்ட் வந்தது. நாங்கள் ரொம்ப சந்தோஷப்பட்டோம்.

    ஆனால் அங்கு அவள் அவனால் பட்ட வேதனை கஷ்டங்கள் மிகவும் அதிகம். நான் இப்போ அழுதேனே.

    இதுபோல பல நாள் அவளுக்காக அழுதிருக்கிறேன். எங்கள் அப்பா அம்மா மனதையும் உடலையும் அவை வெகுவாக பாதித்தது.

    நாங்க ரெண்டு பெண்கள்தான். எனக்குக் கல்யாண ஆசையே போய்விட்டது. யாரைப் பார்த்தாலும் பயம்!

    போன வாரம் உன்னைச் சந்தித்தது, உன் களங்கமில்லா பேச்சும் செய்கைகளும் எனக்கு எதோ ஒரு புது உயிர் வந்த மாதிரி தோன்றியது! உன்னைப் போல நல்ல பையன்களும் இருக்கிறார்கள் என எனக்குப் புரிய ஆரம்பித்தது.

    "புவனா! பத்து நாளில் இரண்டு முறை சந்தித்துள்ளோம். ஆனா இவ்வளவு சீக்கிரம் என்னைப் புரிஞ்சிண்டு பேசறையா? அல்லது ஏன் இந்த அவசரம்?

    போன வாரம் நான் உன்னைப் பார்ப்பதற்கு கொஞ்ச நாட்களுக்கு முன் என் அக்கா என்னிடம் மனம் விட்டுப் பேசினாள். என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது. ஆனால் உன் வாழ்க்கையும் அப்படி ஆகாது. யோசனை பண்ணு. நல்ல முடிவுக்கு வந்து ஒரு பையனைப் பாரு. அப்பா அம்மா கொஞ்சமானும் நிம்மதி அடைவார்கள் என்றாள்.

    பார்க்கலாம் அக்கா! எனக்கு எப்படி விதிச்சிருக்கோ தெரியலே! பெண்களான நாமதான் எதிர் காலத்தை அறிய முடியாமல் கஷ்டப்படறோம். அன்னைக்கு ரயில் டிக்கட் வாங்க வந்ததும் எதோ ஒரு எதிர்பாராத செயல்தான். ஆன் லயனில் பண்ணலாம் என்று இருந்தேன்.

    அன்று டவுனில் வேலை இருந்ததால் சென்ட்ரலுக்கு வந்தேன். ஆனால் அது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் என்று உன்னைப் பார்த்த அப்புறம்தான் உணர்ந்தேன்.

    கொஞ்சம் முன்னாடிக் கேட்டாயே! பத்து நாட்களில் இரண்டு தடவைப் பார்த்ததில் எனக்கு என்ன அவசரம் என்று! இந்த ஒரு கேள்வி உன் தெளிவான நிதானமான செயலுக்கு ஒரு முன் உதாரணம். சாதரணமாக பையன்கள் வேறு மாதிரிப் பேசுவார்கள். உன்னுடைய இந்த நிதானம் தெளிவு என்னைக் கடைசி வரை கண் கலங்க விடாது என்ற உறுதி என்னுள் வந்ததனால் உன்னிடம் பேசுகிறேன்.

    வெங்கட்! எதோ பார்த்தவுடன் காதல்! கொஞ்ச நாட்கள் பித்துப் பிடித்து செல்லிலும் கம்ப்யூட்டரிலும் ராப் பகலா தூங்காத வழியற பெண் அல்ல நான். என் அக்காவைப் பார்த்த பிறகு எல்லாம் மரத்து விட்டது! வெறுத்து விட்டது! என் உள்ளுணர்வுகளைப் புரிந்து என்னுடன் பகிர்ந்து கொள்ளும் ஒருவன் வருவான் என நினைத்துக் கொண்டே இருந்தேன். உன்னைப் பார்த்த பிறகு அந்த நம்பிக்கை வந்து விட்டது. இன்று என் வாழ்கையில் மிக முக்கியமான வேளை!

    புவனா உணர்சிகளின் உச்சத்தில் இருந்தாள். அந்த உருக்கம் பேச்சாக வந்தது. பேசினாள்.

    புவனா! நீ பேசி முடிச்சிட்டே...! என் மேல இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும் உன்னை இப்போதுதான் பார்க்கிறேன். என்னுடன் பேசிப் பழகின பெண்கள் யாரும் இந்த மாதிரிப் பேசினதில்லை!

    ஒரு பெண்ணின் மனது எவ்வளவு ஆழமானது! அழகானது! எவ்வளவு மெல்லிய உணர்வுகள் நிறைந்தது தெளிவும் தீர்க்கமும் உள்ளது என்பதற்கு நீ ஒரு உதாரணம். இதை முழுவதுமாகப் புரிந்து கொண்ட என்னுள் நீங்காத நினைவுகளாக இருக்கும்.

    மெல்லிய மலர் போன்ற அந்த மனதை வாடவோ சுருங்கவோ விட மாட்டேன். அந்த மலரின் மணமும் நிறைவும் என்னுள் எப்பொழுதும் அழகாக இருக்கும். முடிந்தவரை அதை இன்னும் அழகுறச் செய்வேன்.

    அவனது ஒவ்வொரு வார்த்தையும் புவனாவை நிலை கொள்ளாமல் உருக வைத்துக் கொண்டிருந்தது.

    ஒ மை டியர் வெங்கட்! மை சுவீட் பேபி!

    அவள் முழு வேகத்துடன் எழுந்து அவனை இருக்க அணைத்து கன்னங்களைப் பதித்த வேகம் அவன் எதிர்பார்க்கவில்லை!

    ஆனாலும் மறுக்கவில்லை! மகிழ்வோடு இணைந்து கொண்டான்!

    அந்த காபி ஷாப் ஒரு காதல் காட்சியை கண் கொட்டாமல் கண்டு ரசித்துக் கொண்டிருந்தது!

    புவனா! இன்னும் என்ன அழுகை!

    அவன் மார்பில் புறத்தில் விழுந்த சுடு நீர் அவள் விழி நீராகத்தான் இருக்க வேண்டும்! வெங்கட்! இது என் மனம் குளிர்ந்த கண்கள் பனித்த கண்ணீர்! இது அழுகை இல்லை!

    எனக்கேற்ற ஒருவன் என் எதிரே என்ற மகிழ்ச்சி!

    ஒ மை பிரட்டி கேர்ள்! யு ஆர் ரியலி ஸ்மார்ட்!

    வெங்கட் அவளை மறுபடியும் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

    புவனா! உன் ஸ்கூட்டர் சாவியை கொடு! நான் டிரைவ் பண்றேன்.

    நேரா உன் அக்காவை முதல்லே பார்க்கலாம். அப்புறம் என் அப்பா அம்மாவைப் பார்க்கலாம்.

    ஸ்கூட்டர் ஓடியது.

    புவனா ஒருவேளை நான் யுஎஸ் க்கோ அல்லது யுகே வுக்கோ போனா வருவே இல்லே!

    நீ சந்திர மண்டலத்திற்குப் போனால் கூட இப்படியே உன்னோடு வருவேன்...!

    புவனா அவனை இறுக்கியபடி அவன் தோளில் சாய்ந்த விதம் இன்றல்ல என்றுமே உன்னோடு இப்படித்தான் என்று உறுதி செய்தது.

    2. மணம் கமழும் மலர்கள்

    (இது மெல்லிய மலர் உன் மனது கதையின் தொடர்)

    ஸ்கூட்டர் ஓடிக் கொண்டிருந்தது.

    புவனா! இவ்வளவு நெருக்கமா ஒருபெண்ணோடு உட்கார்ந்ததே இல்லை! அப்படி இருந்தா எப்படி என்று இப்பதான் புரியறது! உங்க வீடு வரை கூட ஸ்கூட்டர் ஓட்ட முடியாது! இனிமே இப்படிதான் இருப்பாயா? நான் ஆபீஸ் மற்ற வேலை எல்லாம் பார்க்க முடியுமா?

    "வெங்கட்! என்னை ரொம்ப கேலி பண்ணாதே!

    எதோ நான் நினைச்சபடி யாருக்கும் எளிதில் கிடைக்காத பொருள்போல நீ எனக்குக் கிடைச்சிருக்கே!

    அந்த சந்தோஷம் என்னை என்னவெல்லாமோ செய்யத் தூண்டுகிறது!

    நான் ரொம்ப ஹாப்பி மூடில் இருக்கேன்!

    நீயும் நானும் எப்பொழுதும் நம்ம வேலைகளைப் பார்க்கலாம்.

    நான் தனியாகப் பார்க்க முடியாது! என் மனசிலே, செய்கையிலே நீ இருந்திண்டே இருப்பே!

    உன் நினைப்பு இல்லாமே என்னால் எதுவும் செய்ய முடியாது! திடீர் என்று ஒரு மாறுதல் என்னுள் எப்படி வந்தது என்றே தெரியலே! எல்லாம் மாயமா இருக்கு!

    என்னைப்போல் இன்னொரு பெண்ணுக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைந்தால் நான் இன்னும் சந்தோஷமா இருப்பேன்!"

    அவன் பரந்த முதுகில் களங்கமில்லாத மனதுடன் முகத்தை சாய்த்துக் கொண்டு, தன் இரு கைகளால்

    Enjoying the preview?
    Page 1 of 1