Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

வாரிசு
வாரிசு
வாரிசு
Ebook135 pages47 minutes

வாரிசு

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கான்ஃப்ரன்ஸ் அறையில் நுழைந்தார் ராஜன்.
ஏற்கனவே ஞானசேகரும் - கண்ணப்பனும் காத்திருந்தார்கள்.
ஒரு சில முக்கிய அதிகாரிகள் தவிர அவர்களது ஏஜெண்டுகள், பேங்கர்ஸ், ஆடிட்டர், கம்பெனி லாயர் என சகல பேரும் காத்திருந்தார்கள்.
ஒரு வீடியோ காணொலிக்காக சகல நவீன ஆயத்தங்களும் செய்யப்பட்டிருந்தன.
ராஜன் பிரமித்தார்.
தனக்கு மட்டுமே தர வேண்டிய ஒரு விளக்கம். எதற்கு இத்தனை முன்னேற்பாடுகள்.
உள்ளே நுழைந்தாள் ரேகா.
கூடவே பிரபலமான மீடியா ஆட்கள் காமிரா சகிதம்.
ஞானசேகர், கண்ணப்பன் டென்ஷனாகிவிட்டார்கள்.
“சேர்மன் சார்! இது முழுக்க முழுக்க நம் கம்பெனியோட உள்விவகாரம். நாங்க கேட்ட சில கேள்விகளுக்கு ரேகா பதில் தரணும்னு நீங்க விரும்பினீங்க. அவகாசம் குடுத்தீங்க. எதுக்கு பிஸினஸ் ஏஜெண்டுகள், பேங்கர்ஸ், மீடியா எல்லாம்?”
ராஜனுக்கும் புரியலீங்க. கேட்டே விட்டார், மகளிடம்.
“அப்பா நமது உலகளாவிய வர்த்தகம். இதுல போட்டியாளர்களும் அதிகம். இதை அடுத்த கட்டத்துக்கு நாம கொண்டு போகனும்னா, உள்ளே மட்டுமே பேசி லாபமில்லை. வெளிய தெரியனும். அப்பத்தான் உலகத்தோட பார்வை நம்ம பக்கம் திரும்பும். என்னை அனுமதிங்க.”
“சரிம்மா.மீடியா காமிராக்களுடன் காத்திருக்க,
அறை இருட்டாக்கப்பட, திரையின் வெளிச்சம். சீனியர்கள் இதுவரை சாதித்தது, அவர்களது பல வருட அனுபவம், ஏஜெண்டுகள், ரெகுலர் சப்ளையர்ஸ் லாப நஷ்ட கணக்குகள், கம்பெனியை உயர்த்த அவர்கள் எடுத்த முடிவுகள் என சகலமும் விவாதிக்கப்பட்டது. திரையில தோன்றி சகலத்தையும் ரேகாவே சொன்னாள்.
அவர்களது கேள்விகள் திரையிடப்பட்டன.
ஒவ்வொரு கேள்விக்கும், ரேகா தரும் பதில்கள், அதற்கு பக்கபலமான டாக்குமென்ட்ஸ், ஆதாரங்கள், ஒப்பிட்டு பார்க்கும்போது, ரேகா அதை உடைத்து கம்பெனியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக எடுக்கும் முயற்சிகள்.
இதுபோல 37 கேள்விகளுக்கும் தெளிவான பதில்-விளக்கம், முன்னேற்றம், லாபக் கணக்கு.
பழைய ஒப்பந்தங்கள் பதினாறு ரத்து.
பதிலாக புதிய ஒப்பந்தங்கள் இருபத்தி ஏழு உருவான விதம்.
உலக மார்க்கெட்.
அவர்களோடு இணைய போகும் முயற்சி.
முடிச்சவுடன் விளக்கு எரிய கைதட்டல் அரங்கத்தையே அதிர வைத்தது.
கண்ணப்பர் எழுந்தார்.
“நாங்க பேசனும். இது ஒரு மாதிரி மீடியாவை வச்சிட்டு நடத்தற ஆடம்பர மீட்டிங். கொஞ்சம் உள்ளே போய் பார்க்கனும். விளக்கம் சொல்லணும்.”
ரேகா எழுந்தாள்.
“சார் யார் யாருக்கு விளக்கம் தரணும்?”
“நீங்க எங்களுக்கு!”ஹலோ நீங்க ரெண்டு பேரும் கம்பெனில பார்ட்னரா, ஷேர்வோல்டறா? டைரக்டர்களா, எது? சேர்மன்கிட்ட சம்பளம் வாங்கற சீனியர் அதிகாரிகள். உழைச்ச உழைப்புக்கு தாராளமா எல்லாம் கிடைச்சிருக்கு. அதனால் முதலாளியை கேள்வி கேட்கற தகுதி இல்லை. உங்க கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனா, கம்பெனியோட நோக்கம், வளர்ச்சி, அதோட நவீன பாதையை மீடியாவுக்குத் தெரிவிக்கத்தான் இந்த கான்பரன்ஸ். உங்களுக்கு விளக்கம் தர அல்ல.”
அவர்கள் ஆடிப் போக, “உங்க உழைப்பை மதிக்கிறோம். ஆனா, அதே பழைய ஸ்டைல்ல நடந்தா, பின் தங்குவோம். அதை நவீனமாக்கத்தான் பலவித மாற்றங்கள். உங்க ரெண்டு பேருக்கும் இப்ப முடிய கம்பல்சரி ரிடையர்மென்ட்! உங்க செட்டில்மென்ட் செக் ‘ரெடி’ சார்! உங்க கையாலே குடுத்து அவங்களை கௌரவமா அனுப்பி வைங்க!”
ராஜனே ஆடிப் போனார்.
“டு வாட் ஐ ஸே சார்!”
அவள் குரலில் அதட்டலும் அதிகாரமும் இருந்தது.
ஞானசேகர் எழுந்தார்.
“அப்படியெல்லாம் எங்களை வெளிய அனுப்ப முடியாது”
“யார் சொன்னது? லாயரை கலந்து பேசித்தான் இந்த முடிவை எடுத்தேன். நீங்க கோர்ட்டுக்கு போகலாம். சந்திக்க நான் தயாரா இருக்கேன், நீங்க பிரச்சனை பண்ணினா, உங்களுக்கு சேர வேண்டிய பணத்தைக்கூட கோர்ட்லதான் வாங்கிக்க முடியும்!”
“சார் என்ன இது?”
“அப்புறமா உங்களுக்கு இன்கம்டாக்ஸ் பிராபளம் வரும். அப்பாகிட்ட நீங்க எல்லாத்தையும் ஒயிட்ல வாங்கலை ப்ளாக் இருக்கு! அதுக்கெல்லாம் பதில் சொல்லணும்!”
இருவரும் மிரண்டார்கள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 16, 2024
வாரிசு

Read more from தேவிபாலா

Related to வாரிசு

Related ebooks

Related categories

Reviews for வாரிசு

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    வாரிசு - தேவிபாலா

    1

    அந்த பிரபலமான பத்திரிகை பல லட்சங்கள் சர்க்குலேஷன் போகும் பத்திரிகை கடந்த எட்டு வாரங்களாக ‘வாரிசு’ என்ற தலைப்பில் எழுதும் ஒரு பகுதி மிகவும் ரசிக்கும்படியான ஒரு தொடராக வந்து கொண்டிருந்தது. அரசியலில் வாரிசு... சினிமாவில் வாரிசு... பிஸினஸில் வாரிசு... விளையாட்டில் வாரிசு... இலக்கியத்தில் வாரிசு என தேடிப் பிடித்து பிரபலங்களை பேட்டி எடுத்து புகைப்படங்களுடன் ‘கவர் ஸ்டோரியாக’ வெளியாகிக் கொண்டிருந்தது.

    அதற்கு ஏராளமான விளம்பரம்.

    போஸ்டர்கள் மீடியாவின் பெரிய வெளிச்சம் என சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தது.

    யார் முதலில் - அவரது வாரிசு அல்லது வாரிசுகள் யார் என தேர்ந்தெடுக்க, இரண்டு பேரையும் பேட்டி எடுத்து, சர்ச்சைக்குரிய கேள்விகளைக் கேட்க, முடிந்தால் சண்டை மூட்டிவிட்டு அந்தப் பகுதி சுவாரசியமாக இருந்தது.

    மக்களிடையே அது பெரிய வரவேற்பை பெற்றதால், பிரபலமான தொலைகாட்சி ஒன்றை அதை அப்படியே ஒளிபரப்ப முடிவு செய்தது.

    பத்திரிகையில் வந்தவர்களை சின்னத் திரையில் கொண்டு வர முடிவு செய்தது.

    எடுத்துக்காட்டாக சினிமாத் துறையில் அப்பாவும்-பிள்ளையும் பிரபலமாக இருந்தால்,

    அப்பாவை பிள்ளை மிஞ்சி விட்டாரா?

    அவருக்குள்ள நட்சத்திர அந்தஸ்த்து இவருக்கு உண்டா?

    சாதனையாளர்கள் இருவரில் யார்- என்பது போன்ற அலசலும் உண்டு.

    இனி நம் கதைக்கு வரலாம்.

    அந்த வகையில் தொழில் துறையில் அரிய இந்திய அளவில் கடந்த பத்து வருடங்களாக மிகவும் பிரபலமானவர் ‘வீனஸ்’ க்ரூப் கம்பெனியின் உரிமையாளர் ராஜன்!

    கடுமையான உழைப்பாளி.

    படிப்படியாக முன்னுக்கு வந்தவர்!

    உலக அளவில் வர்த்தகத்தில் இன்று கொடி கட்டிப் பறப்பவர்.

    அவரை மிஞ்ச யாருமில்லை. போட்டியாளர்கள் அவரை நெருங்க முடியலிங்க!

    எதிரிகளும் ஏராளம்!

    சகல தந்திரங்களையும் கையாண்டு முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளும் புத்திசாலி!

    க்ரூப் கம்பெனி!

    எதில் காலை வைத்தாலும் வெற்றிதான். காரணம் அதைப் பற்றிய அலசல்! அதன் வெற்றிப் புள்ளியை தேடிப்பிடித்து அதை கைவசப்படுத்த எந்த லெவலுக்கும் போகும் மனிதர்.

    பணத்தால், தந்திரத்தால் அதற்கு என்ன விலை தர முடியுமோ, அதை தந்து விடுவார்!

    கடந்த நாலு வருடங்களுக்கும் மேலாக, அவருடன் பிஸினஸில் இறங்கி, அவரே பிரமிக்கும் அளவுக்கு உருவாகிவிட்ட அவரது மகள் ரேகா!

    ரேகா படித்துக் கொண்டிருக்கும் போதே அலுவலகம் வரத் தொடங்கி விட்டாள்! அப்பா செல்லம்! அவரது நிழலில் வளர்ந்தவள்! அவரது சுய குணங்களும் அச்சு பிசகாமல் அவளிடம் உண்டு.

    ராஜனுக்கு சரியான வாரிசு அவர் மகள் ரேகாதான் என பேசும்படி செய்தவள்!

    குழந்தை காலம் தொட்டே, அவளிடம் அதிகபட்ச பாசம் அவருக்கு. ராஜன்-பத்மா தம்பதிக்கு இரண்டும் பெண்கள்.

    மூத்தவள் ரேகா!

    அடுத்தவள் ரேஷ்மி!

    சின்னவள் அமைதியாக-அம்மா பத்மாவைப் போன்றவள். அம்மாவின் நிதானம்-விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, சற்றே பயந்த சுபாவம்- துணிச்சல் இயலாமை என அமைதியான பெண்!

    ரேகா பள்ளியிலும் சரி, பொறியியல் கல்லூரியிலும் சரி - பேசும்படியான மாணவி!

    தடாலடிதான்.

    படிப்பு, விளையாட்டு. இசை. நாடகம் என எதை எடுத்தாலும் முதலிடம்!

    தன்னைத் தாண்டி இன்னொருவர் பேர் எடுத்து விடக்கூடாது. எடுக்க விடமாட்டாள். எப்படியும் ஜெயித்து விடுவாள்.

    அதில் ஒரு மூர்க்கம் உண்டு!

    கூடவே படிக்கும் மாணவி ஒருத்தி இவளை தொடர்ந்து மூன்று முறையாக ஜெயித்துக் கொண்டிருக்க, மனசு பொறுக்காத ரேகா, அவளுக்கு குடிக்கும் பானத்தில் எதையோ கலந்து, அவள் மயக்கமாகி, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, ஒரு மாதம் முடங்கி, அந்த இடைவெளியில் ரேகா மேலே வந்து விட்டாள்.

    இது யாருக்கும் தெரியாது!

    அதன் பிறகு அந்தப் பெண் உடல் பலவீனமாகி ரொம்பவும் கீழே போய் விட்டாள்.

    எப்படிம்மா ஜெயிச்சே? ராஜன் கேட்க,

    அப்பா! உங்களுக்கு மட்டும் சொல்றேன்! உண்மையைச் சொல்ல,

    அவர் ஆடிப் போனார்.

    சபாஷ்டா! என் வாரிசுதான் நீ!

    அப்பா! இதுக்காக என்கிட்ட நீங்க கோவப்படலையா?

    எதுக்கும்மா கோபம்? நாம ஒன்றை அடையனும்னா, உச்சில் நிக்கனும்னா, அதுக்காக எதையும் செய்யலாம்! என்ன விலை வேண்டும்னாலும் தரலாம்! தப்பே இல்லை, நியாய, தர்மங்களை பார்த்தோம்னா, நாம மேலே வர முடியாது! உச்சிக்கு வந்தவங்க பல பேர் சரித்திரத்தை நீ புரட்டினா, அதுல பல கதைகள் இருக்கும்!

    அவள் பிரமித்தாள்.

    அவரும் உச்சிக்கு வர பல குற்றங்களை செய்தவர்தான்,

    நம்பிக்கை துரோகம், ஏமாற்று, வஞ்சனை, கொலை வரை போனவர். அது வெளியே வராமல சாதுர்யமாக மறைத்தவர்.

    வெளியே வரும் சூழ்நிலை உண்டானால், அதை மறைக்க எந்த விலையையும் தரும் புத்திசாலி!

    அதே குணத்துடன் வளரும் வாரிசு!

    அப்பா! இதை அம்மாவுக்குச் சொல்ல வேண்டாம்!

    எதுக்கு என்னோட நல்ல பக்கம் மட்டும்தான் உங்கம்மாவுக்குத் தெரியும்! மறுபக்கம் தெரியாது! நீயும் அப்படியே இரு!

    இப்படியாக வளர்வது, படிக்கும் நாட்களிலேயே பிரபலமாகி, தொழிலதிபர் ராஜனின் வாரிசு என வெளிச்சம் போடப்பட்டு, அப்பா கம்பெனியிலேயே தனது பைனல் இயர் ப்ராஜக்டையும் முடித்தாள்.

    அவளது ரிசல்ட் வந்த போது கல்லூரியின் முதல் மாணவியாக தங்க மெடல் வாங்கினாள்.

    பல பெரிய நிறுவனங்களிலிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.

    அப்பாவின் கம்பெனியே ஒவ்வொரு வருடமும் காம்பஸ் இன்டர்வ்யூ நடத்தி நூற்றுக்கணக்கான திறமைசாலிகளுக்கு வேலை தருகிறது.

    ரேகாவுக்கு இன்னொரு கம்பெனி எதற்கு?

    படிக்கும் போதே ஓரளவுக்கு வேலைகளை கற்றுக்கொண்டு விட்டாள். முடித்ததும் உள்ளே வந்து விட்டாள்.

    நாலே வருடங்கள்.

    அப்பாவையே மிஞ்சும் அளவுக்கு நிர்வாகத்தில் சக்கை போடு போடத் தொடங்கி விட்டாள்.

    சேர்மன் ராஜன்!

    அவருக்கு அடுத்த பதவியில் ரேகா.

    ஏற்கனவே இருந்த சீனியர்கள் அத்தனை பேரையும் பின்னுக்கு தள்ளி, முன்னே வந்து விட்டாள்.

    அதில் சிலர் நியாயமாக ஒதுங்கிக் கொண்டார்கள்.

    சிலருக்கு இவளது அணுகுமுறை பிடிக்கவில்லை

    இது நீடிச்சு வராதுங்க! தடாலடி வர்த்தகம் கீழே தள்ளிடும் வேண்டாம்!

    எச்சரித்தார்கள்!

    ரேகா கேட்கவில்லை.

    பழுத்த அனுபவமும் கம்பெனியின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்த சீனியர் இரண்டு பேருடன் ரேகாவுக்கு அடிக்கடி மோதல் ஏற்பட்டது.

    ஒருவர் ஞானசேகர்.

    எதையும் உழைப்பால், நேர் வழியால் அடைய வேண்டும் என்பதில் திடமாக இருப்பவர்.

    அடுத்தவர் கண்ணப்பர்.

    தரமான பொருட்களைத்தான் வாங்க வேண்டும். சப்ளை செய்வதும் முதல் தரமாக இருக்க வேண்டும். அப்போதுதான் மார்கெட்டில் நீண்டகாலம் நிலைத்திருக்க முடியும் என்றார்.

    இரண்டையும் ரேகா உடைத்தாள்.

    லாபத்தை பெருக்கி, தரத்தைக் குறைத்தாள். ஏற்கனவே பல வருடங்களாக மெட்டீரியலை சப்ளை செய்தவர்களை ரத்துச் செய்தாள். புதிய பார்ட்டியை கொண்டு வந்தாள். வர்த்தகத்தில் இருந்த நேர்மையை துண்டித்தாள்.

    குறுக்கு வழியில் இறங்கினாள்.

    இதையெல்லாம் ஞானசேகரும், கண்ணப்பனும் விரும்பவில்லை. சேர்மன் மகள் என்பதால் முதலில் விட்டுப் பிடித்தார்கள். சொல்லிப் பார்த்தார்கள்.

    எதுவும் எடுபடவில்லை. அவர்களை எதிர்க்கத் தொடங்கி விட்டாள். அடிக்கடி மோதல் வந்தது.

    ராஜன் வரை போய் விட்டது.

    ரேகா செய்யும் தவறை- அதனால் எதிர்காலத்தில் சந்திக்கப் போகும் நஷ்டங்களை, கம்பெனியின் பின்னடைவை முன்னமே கணித்து புள்ளி விவரங்களுடன் அறிக்கை தர,

    ராஜன் பார்த்தான்.

    ரேகாவை தனியாக அழைத்துப் பேசினார்.

    "ரேகா! அவங்க ரெண்டு பேரும் சாதாரண ஆட்கள் இல்லை. மேதைகள். இந்த கம்பெனியோட ரெண்டு தூண்கள்! இதோட

    Enjoying the preview?
    Page 1 of 1