Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Athu Oru Kana Kaalam
Athu Oru Kana Kaalam
Athu Oru Kana Kaalam
Ebook134 pages53 minutes

Athu Oru Kana Kaalam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முதலில் அது ஒரு கனாக்காலம், முதியவரும், மனைவி சுசீலா அம்மாவும் லண்டன் புறப்பட ஆயத்தம், அவருடைய ஃபிளாஷ் பேக் காதல் நினைவுகள். மதுரை நகரை இளம் சிட்டுகளாய் சுற்றி வந்த காலம். எல்லாத்தையும் இங்கேயே சொல்ல முடியுமா? படியுங்கள், இளவயதினரோ வயது முதிர்ந்து பழங்காலநினைவுகளில் திளைப்பவர்களோ, அனைவரையும் சந்தோஷப் படுத்தும் இந்த கதை என்பதில் ஐயமில்லை.

Languageதமிழ்
Release dateJan 27, 2024
ISBN6580173810621
Athu Oru Kana Kaalam

Read more from Susri

Related authors

Related to Athu Oru Kana Kaalam

Related ebooks

Related categories

Reviews for Athu Oru Kana Kaalam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Athu Oru Kana Kaalam - Susri

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அது ஒரு கனாக் காலம்

    (சிறுகதைகள்)

    Athu Oru Kana Kaalam

    (Sirukadhaigal)

    Author:

    சுஶ்ரீ

    Susri

    For more books

    https://www.pustaka.co.in/home/author/susri

    பொருளடக்கம்

    என்னுரை

    1. அது ஒரு கனாக் காலம்

    2. நான் கதவு பேசுகிறேன்

    3. தனிக் குடித்தனம்

    4. சேதுராமனும் சட்டமும்

    5. சந்தோஷமா துக்கமா

    6. பெண்ணுரிமை

    7. திடீர் பிரயாணம்

    8. பத்த வச்சிட்டயே பத்மஜா

    9. ஞாபகமறதி

    10. வாழ்க்கை இனிது

    11. பஞ்சுதாத்தாஃபாரின் போன கதை

    12. பஞ்சு தாத்தா, பாருவுடன் பறக்கிறார்

    13. சிங்கப்பூரில பஞ்சு தாத்தா பாரு பாட்டி

    14. சிட்னியில் பஞ்சு தாத்தா பாரு பாட்டி

    15. நடிக்க வந்தேன் பஞ்சு கலக்கப் போறேன் பாரு

    16. பஞ்சாபகேசனும் பொன்னியின் செல்வனும்

    17. பொறுப்பு

    18. காதலுக்கு மரணமுண்டோ

    என்னுரை

    அனைவருக்கும் வணக்கம். என்னுடைய முந்தைய நூல்கள், ஜானு சிறுகதை தொகுப்பு, ரத்னாவாகிய நான் குறு நாவல்கள் தொகுப்பு, மாறிவரும் தலைமுறைகள் என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பு, நினைவெல்லாம் கோகிலா முழு நாவல், ஐந்தாவது நூலாக இந்த சிறுகதை தொகுப்பு, "அது ஒரு கனாக் காலம்' 18 சிறு கதைகளுடன் மணிமேகலை பிரசுரத்தினரால் வெளியிடப்படுகிறது.

    முதலில் அது ஒரு கனாக்காலம், முதியவரும், மனைவி சுசீலா அம்மாவும் லண்டன் புறப்பட ஆயத்தம், அவருடைய ஃபிளாஷ் பேக் காதல் நினைவுகள். மதுரை நகரை இளம் சிட்டுகளாய் சுற்றி வந்த காலம். எல்லாத்தையும் இங்கேயே சொல்ல முடியுமா? படியுங்கள், இளவயதினரோ வயது முதிர்ந்து பழங்காலநினைவுகளில் திளைப்பவர்களோ, அனைவரையும் சந்தோஷப் படுத்தும் இந்த கதை என்பதில் ஐயமில்லை.

    மற்ற கதைகள், பஞ்சாபகேசன் தாத்தா, பாரு பாட்டியின் கல கல கதைகள். 'சேது ராமனும் சட்டமும' 'தனிக் குடித்தனம்’, 'சந்தோஷமா! துக்கமா?" ‘பெண்ணுரிமை’, 'காதலுக்கு மரணம் உண்டோ?' இப்படி வெவ்வேறு சுவையில் கதைகள் உங்களை கட்டாயம் தொடர்ந்து படிக்கத் தூண்டும்.

    என்னுடைய மற்ற புஸ்தகங்களைப் போலவே இதுவும் ஸ்வாரஸ்யமாகவே இருக்கும் என உறுதியளிக்கிறேன்.

    விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத கதைகளாக இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. படித்துப் பாருங்கள்.

    உங்கள் கருத்துகள் நல்லதோ, இல்லை என் எழுத்தை மேம்படுத்த உதவும் சொற்களோ என்னுடன் பகிருங்கள்.

    சுஸ்ரீ

    Mobile: 9819065814

    email: srimant2006@gmail.com.

    1. அது ஒரு கனாக் காலம்

    1

    அந்த ஊறுகாய் பாட்டிலை எல்லாம் என் கிழிசல் பனியன் துணி இருக்கு பாரு அதையெல்லாம் எடுத்து அதுக்குள்ளே சுத்தி பெரிய புளூ பெட்டில அடுக்கி வை.

    உவ்வே, இந்த அழுக்கு நாத்தம் எடுத்த பனியன் துணிலயா? அதுக்கு ஊறுகாயே எடுத்துண்டு போக வேண்டாம்.

    உன் கைல இருக்கறது உன் பழைய அழுக்கு ஸ்லிப், என் பனியன் இல்லை. கப்பு இங்கே வருது.

    ஆமாம் ஆமாம், எங்காத்து கொடில காயப்போட்டிருந்த இந்த அழுக்கு ஸ்லிப்பை திருடி வச்சிண்ட அந்த நாட்களெல்லாம் மறந்து போச்சாக்கும்.

    சரி, சரி பழசெல்லாம் இப்ப எதுக்கு மளார்னு பேக்கிங் வேலையை பாரு

    ஓ இதெல்லாம் என்ன டயலாக்னு முளிக்கறீங்களா? ஒண்ணுமில்லை முதல் தடவையா வெளிநாட்டு பயணம்(லண்டன்)முதமுதலா ஏரோப்பிளேன்ல ஏறப் போறோமில்லை ரெண்டு நாள்ல அதுதான்.

    யாருப்பா அது, நீ லண்டன் போனா என்ன,லாகூர் போனா என்ன அந்த கொடில இருந்து திருடினேன்னு பழி போட்டாங்களே அந்த கதை சொல்லுன்றது.

    ஹி… ஹி… அதெல்லாம் எதுக்கு இப்ப அறியாத வயசுல செஞ்ச காதல் தப்புக்கள், அதுவா இப்ப முக்கியம்.

    சரி சரி அதையும் கொஞ்சம் சொல்றேன்.

    நான் பிறந்தது, வளந்தது படிச்சது எல்லாம் இந்த மதுரைலதான்.இப்ப சொக்கிகுளத்துல பங்களா கட்டிண்டு இருக்கேன், ஆனா அந்த படிக்கிற காலத்துல இருந்தது,வைகை ஆற்றை ஒட்டினாப்பல இருக்கே லட்ச்மிநாராயணபுர அக்கிரகாரம், அதுல நடுவாந்தரமா ஒரு ஸ்டோர்.

    மதுரைல அப்பல்லாம் ஸ்டோர்னு சொன்னா ஒரு நீளமான தொடர் வீடுகள்.10,12 குடித்தனம் எதிரும் புதிருமா ஒரு ஸ்டோர்ல இருக்கும். பாத்ரூம் டாய்லெட், கிணறு,எல்லாருக்கும் பொது. ஒரு நீளமா மொட்டை மாடி அங்கே நைட் எல்லாரும் பாயோ, ஜமக்காளமோ விரிச்சு படுத்துப்போம்.

    அந்த மொட்டை மாடில இன்னொரு சவுகரியம், பக்கத்துல கல்பனா தியேட்டர். அதாவது எங்க ஸ்டோர் பின் சுவரை ஒட்டி ஒரு சாக்கடை கால்வாய், அதுக்கு அடுத்து தியேட்டர்தான்.

    ராத்திரி நைட்ஷோ மாடில படுத்தா வசனம் கேக்கும்.

    அந்த துணி காயப் போடற கொடிக்காக கம்பம் இருக்கே அதுக்கு பக்கமா நின்னா பாதி படம்( அதாவது இடுப்புக்கு கீழே) கூட தெரியும். குளிர் காத்துனு தியேட்டர் வாசலை புளூ ஸ்கிரீன் போட்டு மூடினா ஒண்ணும் தெரியாது, வசனம் மட்டும் கேட்டுக்கலாம்.

    இப்படி பல படங்களோட வசனம் கேட்டு கேட்டு எங்க ஸ்டோர் பசங்களுக்கு வசனம் அத்துப்படி. ‘கல்யாணப் பரிசு’படம்னா பாட்டு வசனம் எல்லாம் தலைகீழா மனப்பாடம். வெள்ளி விழா தாண்டி ஓடிச்சே.

    நான் அமெரிகன் காலேஜ்ல டிகிரி முதல் வருஷம் படிச்சிண்டிருந்தேன். அப்பதான் முதல் முதலா பெண்கள்னா என்னனு தெரிஞ்சிக்க ஒரு ஆர்வம் வந்தது.

    அதுவும் எதனாலேன்னா பசங்க குசு குசுனு பேசறதை கேட்டு ஒரு கெமிகல் ரியாக்‌ஷன் திடீர்னு.

    எங்க ஸ்டோர்ல எங்க போர்ஷன் 6 வது, அதாவது நடுவுல. முதல் போர்ஷன்ல, ஒரு சின்ன ஃபேமிலி சங்கரய்யர், வேதா மாமி அவங்க பொண்ணு சுசீலா. சுசீலா நல்ல கலரா அழகா புஷ்டியா இருப்பா, முனிசிபல் ஸ்கூல்ல 9வதோ 10வதோ படிக்கறானு நினைக்கறேன். அவ ஸ்கூலுக்கு போறப்ப நின்னு நிதானமா ‘அம்மா போய்ட்டு வரேன்’ ன்னு கல்யாணப்பரிசு சரோஜாதேவி மாதிரி கத்தி சொல்வா.

    அப்ப நானும் காலேஜ் புறப்படற டைமா, அவசரமா பாண்ட்ஸ் பவுடரை முகத்துல அப்பிண்டு புறப்படுவேன்.ஆனா சுசிலா கிட்ட பேசற தைரியம் வரலை. ஆனா அவ ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னால அவ அம்மா கிட்ட கத்தி சொல்லிண்டு போறது எனக்காகத்தான்.

    ஒரு சனிக் கிழமை காலைல 10.30 மணி இருக்கும் மொட்டை மாடில உக்காந்து கெமிஸ்ட்ரி புக்கோட போராடிண்டிருந்தேன். கல்பனா தியேட்டர்ல அசோகன் வில்லத்தனமா பேசிண்டிருக்கார். திடீர்னு பூச்சு மஞ்சள், சந்திரிகா சோப் கலந்த கலவை மணம். சுசீலா ஒரு பெரிய பிளாஸ்டிக் பக்கெட் நிறைய துவைத்த துணிகளோட தூக்க முடியாம தூக்கிண்டு வந்தா,

    துணி காயப் போட.

    முதல் தடவையா பக்கத்துல நேருக்கு நேர் அவ முகத்தை பாத்தேன், உண்மைல அழகிதான். லேசா புன்னகை அவ முகத்துல. கெமிஸ்ட்ரி புக்ல மனசு போகலை.

    துணிகளை காயப் போட்டுண்டே கிட்டத்தட்ட ஒரு 6 அடி தூரத்துல வந்தப்ப, என்ன வசனம் கேக்கறயா, பாடம் படிக்கறயானு மெதுவா கேட்டா.

    அவ குரலை கேட்டே என் நெஞ்செல்லாம் ஐஸ்கிரீம்.

    இல்லை மண்டே கெமிஸ்ட்ரீ எக்சாம்

    சரி சரி நல்லா படி, நானும் அனுமார் கோவிலுக்கு போகணும் நேரமாச்சு

    கால் கொலுசு கிணுகிணுக்க இறங்கி போயிட்டா.இப்ப கெமிஸ்ட்ரி படிக்க முடியமா நீங்களே சொல்லுங்க.

    டப்னு புஸ்தகத்தை மூடினேன், போறும் இதுவரை படிச்சதுக்கு 60, 65 மார்க் வாங்கிடலாம்.

    கீழே போனா அம்மா, டே போய் மெஷின்ல இந்த அரிசியை அரைச்சிண்டு வந்துடுனு பித்தளை தூக்கை கொடுக்கறா.

    போம்மா எனக்கு வேற வேலை இருக்கு சட்டைய மாட்டறப்ப ட்யூப் லைட் பளிச்சிட்டது, அட சுசீலா என்ன சொன்னா, சரி சரி அம்மா அந்த அரிசி தூக்கை எடு. அரைச்சிண்டு வரேன்

    மாவு மில் அனுமார் கோவில் பக்கத்துலதான்.

    ஸ்டைலா தலையை தூக்கி

    Enjoying the preview?
    Page 1 of 1