Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஒளி தரும் உதயம்...
ஒளி தரும் உதயம்...
ஒளி தரும் உதயம்...
Ebook103 pages38 minutes

ஒளி தரும் உதயம்...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரோஜா மாலைக்கு நடுவில் கம்பீரமாக புன்னகைத்த படி காட்சி தரும் கணவனை பார்க்கிறாள் சிவகாமி.
உங்க உழைப்பிலும், முயற்சியில் உருவானது இந்த
குடும்பம். இன்னைக்கு ஸ்பின்னிங் மில், நாற்பது கடை வாடகைக்கு விட்டிருக்கும் பெரிய மால், இதோ இத்தனை பெரிய கடல் போன்ற வீடு எல்லாமுமே நீங்க சம்பாதித்து கொடுத்தது. நம்ப இரண்டு மகன்களும் இதை கட்டி காக்கிறாங்க. எந்த குறையுமில்லாமல் இரண்டு பேருக்கும் கல்யாணமும் பண்ணி வச்சுட்டு தான் நீங்க போனீங்க... இன்னைக்கு பேரன், பேத்தின்னு நம்ப வம்சம் தழைச்சுட்டு இருக்கு. இருந்தாலும் எனக்கு நிறைவு இல்லைங்க... மனசெல்லாம் பாரமாக இருக்கு. எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாத மாதிரியான உணர்வு தான் இருக்குங்க. இதுக்கெல்லாம் காரணம் என்னன்னு உங்களுக்கே தெரியும்.
நம்ப மூணாவது மகன் சுதாகர். இருபதைந்து வயதை
தொட்டுட்டான். அவன் கிட்டே பெரிசா எந்த மாற்றமும் இல்லை. நீங்க இருக்கும் போதே எவ்வளவு டீரிட்மெண்ட்... மருந்து மாத்திரைகள். இது பிறவி குறைபாடு. மூளை வளர்ச்சி இயல்பாக இல்லை. இதனால் பெரிசா எந்த பாதிப்பும் வராது. வளர வளர புரிஞ்சுக்கிற தன்மை அதிகரிக்கும். பெரிசா முன்னேற்றம் கிடைக்கலைன்னாலும்... இயல்பான ஆண்மகனாக இருப்பான். பயப்படாதீங்கன்னு டாக்டர் சொன்னாரு. ஸ்பெஷல் ஸ்கூலில் படிக்க வச்சோம். கஷ்டப்பட்டு பத்தாவது வரை படிச்சான். உடல் வளர்ச்சியில் எந்த குறையும் இல்லைங்க... உங்க சாயலில், கம்பீரமாக ஒரு ஆண்மகனாக, இளமைக்கே உரிய பொலிவோடு இருக்கான். அறிவு வளர்ச்சி, சுயமாக சிந்திக்கும் திறன், எதுவும் இல்லைங்க. மத்தவங்க சொல்றதை கேட்கிறான். அவ்வளவு தான்.
எவ்வளவு நாள் நான் அவனுக்கு துணை வர முடியும். எனக்கு பிறகு அவன் வாழ்க்கை... நினைக்கவே பயமா இருக்குங்க...சிவகாமியின் கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறது.
“அம்மா... அம்மா...”
சமையல்காரி வேதா கூப்பிடுவது கேட்க,
முந்தானையால் கண்ணீரை துடைத்தவளாய், அறையை விட்டு வெளியே வருகிறாள்.
“அம்மா... நம்ப சுதாகர் தம்பி இன்னும் சாப்பிட வரலைம்மா... பசி தாங்க மாட்டாரு. எட்டு மணிக்கெல்லாம் சாப்பிட வந்துடுவாரு... பெரியவங்க இரண்டு பேரும் சாப்பிட்டு கிளம்பிட்டாங்க... அதான் உங்க கிட்டே சொல்லலாம்னு கூப்பிட்டேன்.”
மாடி ஏறுகிறாள்.
“சுதாகர்... சுதா எங்கேப்பா இருக்கே?”
மாடியில் பெரியவன் சுந்தருக்கும், அடுத்தவன் சுரேனுக்கும் தனி, தனி ரூம்கள் இருக்க,
சுதாகருக்கென்று ஒதுக்கப்பட்ட ரூம் அனைவரும் உபயோகப் படுத்தும் அறையாக மாறிவிட, அதை பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாத சுதாகர், அம்மாவின் ரூமை பயன்படுத்தி கொண்டான். இரவு படுப்பதும் அவள் ரூமில் தான்.
“சுதாகர், நீ சின்னவனாக இருந்த வரைக்கும் அம்மாவுடன் இருந்தே... இப்ப இளைஞனான பிறகும், இன்னும் அம்மாவை தேடிவர்றியே... உன் ரூமில் படுத்துக்கப்பா...”
“போம்மா... சின்ன பிள்ளையிலிருந்து நீ தானே எனக்கு அம்மா... இப்ப மட்டும் ஏன் நான் உன்னை பிரியணும். இங்கே தான் இருப்பேன்.”
“இவனுக்கு எப்படி புரிய வைப்பது...”
அவள் ரூமிலும் சுதாகரை காணாமல், திரும்பவும் கூப்பிடுகிறாள். “சுதாகர்... எங்கே இருக்கே?”
“இங்கே வாம்மா... சின்ன அண்ணன் சுரேன் ரூமில் இருக்கேன் பாரு...”
அங்கே என்ன செய்கிறான், உள்ளே நுழைந்தவள்சுரேனின் மனைவி தீபாவின் அலமாரியில் புடவைகளை வரிசைப் படுத்தி அடுக்கி கொண்டிருக்கிறான் சுதாகர்.
“என்னப்பா இது... இந்த வேலைகளை நீ செய்யலாமா... எழுந்திரு.”
“தீபா அண்ணி தான், எந்த வேலையும் பார்க்காமல் சும்மா இருக்கே. என் புடவை அலமாரியெல்லாம் ஒழுங்கா அடுக்கி வை. நான் ப்யூட்டி பார்லர் போய்ட்டு வரும் போது, எல்லாம் வரிசையாக ஒழுங்காக அடுக்கி வச்சுருக்கணும்னு சொல்லிட்டு போனாங்க.”
கடவுளே இவன் அறியாமையை பயன்படுத்தி ஒவ்வொருவரும் இவனிடம் எப்படி வேலை வாங்குகிறார்கள்.
‘இவனும் இந்த வீட்டில் சமபங்கு உரிமை உள்ளவன் இவனை ஒரு வேலைக்காரனை போல் அல்லவா நடத்துகிறார்கள்.
நேற்று சாயந்திரம் சுந்தரின் மனைவி பூஜா... இவனிடம், சுந்தரின் ஷுவை பாலிஷ் பண்ணி வைக்க சொல்லியிருக்கிறாள். கையில் எல்லாம் கறுப்பு பாலிஷ் பூசிக் கொண்டு வந்து நின்னவனை பார்த்து திகைத்து போனாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 12, 2024
ஒளி தரும் உதயம்...

Read more from பரிமளா ராஜேந்திரன்

Related to ஒளி தரும் உதயம்...

Related ebooks

Related categories

Reviews for ஒளி தரும் உதயம்...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஒளி தரும் உதயம்... - பரிமளா ராஜேந்திரன்

    1

    ஒவ்வொருவரும் நம்மால் முயன்ற நல்லதுகளை செய்ய வேண்டும். ஒரு மனிதன் மனிதனாக வாழ்கிறான் என்பதற்கு அடையாளமே அவன் செய்யும் நல்ல செயல்கள் தான்.

    நல்லது செய்ய காசு, பணம் உள்ளவராகவோ, செல்வந்தராகவோ இருக்க வேண்டும் என்பதில்லை. நல்ல மனம் இருந்தால் மட்டுமே போதுமானது. உதவி தேவைபடுகிறவர்களுக்கு, உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். வாழ்வை அர்த்தப்படுத்துங்கள்.

    அக்கா... அக்கா...

    யாமினி கூப்பிடுவது கேட்க...

    புத்தகத்தை மூடுகிறாள் பாரதி.

    நிதானமாக அடியெடுத்து வைத்து நடந்து வரும் தங்கையை பார்க்கிறாள். அழகான நிலவு போன்ற எழில் பொங்கும் முக அழகை தந்த கடவுள்...

    அவள் இந்த அழகிய உலகை பார்த்து மகிழ முடியாதபடி அவள் பார்வையை ஒட்டுமொத்தமாக பறித்து விட்டாரே... மனம் நெகிழ்கிறது.

    தாய் இல்லாத பாரதி, யாமினி, தம்பி சேகர்... மூன்று பேருக்கும் தாய்க்கு தாயாக இருந்து வளர்த்து ஆளாக்கியவர் அப்பா மாணிக்கம் தான். மில்லில் சூப்பர்வைஸர் வேலை.

    வரும் சொற்ப வருமானத்தில் அழகாக குடும்பம் நடத்துபவர். எந்த விஷயத்தையும் நேர்மறை எண்ணங்களோடு அணுகுபவர்.

    அப்பா... அம்மா, இல்லாம எங்களை வளர்த்து ஆளாக்க ரொம்பவே சிரமப்பட்டிருப்பீங்களேப்பா... ஏன்ப்பா... நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலை.

    பருவ வயதில் அடியெடுத்து வைத்த பாரதியின் கேள்விக்கு...

    அவள் கன்னத்தை செல்லமாக தட்டி தோள் சேர்த்து அணைத்தவர்.

    "வாழ்ந்தாச்சும்மா... உன் அம்மாவுடன் நான் வாழ்ந்த பத்து வருஷ வாழ்க்கை அற்புதமானது. அன்புங்கிற வார்த்தைக்கு அடையாளமாக இருந்தவ... சொல்லப் போனா... அவக்கிட்டேயிருந்து தான் பொறுமை, எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் மனோபாவம் எல்லாத்தையும் கத்துக்கிட்டேன்.

    நீங்கெல்லாம் அவளோடு வாழ கொடுத்து வைக்கலை. அவ என் மனசில் விதைச்ச அன்பென்னும் விதை... விருட்சமாக வளர்ந்திருக்கு. உங்களையெல்லாம் அன்போடு அரவணைச்சு வளர்க்கிறது எனக்கு பெரிசா தெரியலைமா. இன்னொரு கல்யாணம் என்ற பேச்சுக்கே

    என் வாழ்வில் இடம் இல்லைம்மா. உங்க மூணுபேருக்கும் நல்வழி காட்டணும். அதற்கும் நான் வணங்கும் அம்பிகை பாதை அமைச்சு தருவான்னு நம்பறேன்மா."

    அப்பாவின் மென்மையான அதிராத குரலில் வெளிவரும் வார்த்தைகள் பாரதியை உருக வைக்கும்.

    விபரம் தெரிய ஆரம்பித்த வயதிலிருந்தே, தங்கையின் பார்வை குறைபாட்டை உணர்ந்து, பாரதியும் ஒரு தாயாக இருந்து தங்கையை பராமரித்தாள்.

    ப்ளஸ்டு முடித்தவுடன்,

    அப்பா... நான் படிச்ச வரைக்கும் போதும்பா... ஏதாவது கடையில் வேலைக்கு சேர்ந்துக்கிறேன்பா... உங்களுக்கும் உதவியாக இருக்கும். இந்த குடும்பத்தின் சுமையை, நீங்க ஒருத்தரே சுமந்துட்டு இருக்கீங்க.

    இல்லை பாரதி... நீ டிகிரி வாங்கணும். நாளைக்கு கல்யாணம் பண்ணி இன்னொரு வீட்டில் வாழ வேண்டிய பொண்ணு. குடும்பம் நடத்துவதற்கான உன் திறமையை வளர்த்துக்கணும்.

    வேண்டாம்பா... எனக்கு கல்யாணமே வேண்டாம். கண் பார்வை இல்லாத தங்கை, வீட்டுக்கு ஆண் வாரிசாக இருக்கும் தம்பி சேகர்... இவர்களுக்கு நான் துணையாக இருக்கணும். தம்பியை நல்லா படிக்க வைக்கணும். யாமினிக்கு என் உதவி. கடைசி வரை கிடைக்கணும். இதெல்லாம் நடக்கணும்னா... நான் கல்யாணம் பண்ணிக்காமல் இருந்தால்தான்பா முடியும்.

    "மக்கு பாரதி... இந்த அப்பாவின் ஆசை என்ன தெரியுமா. என் பாரதி கல்யாணம் பண்ணி கணவனோடு நிறைவாக வாழணும்.

    யாமினிக்கு பார்வை வருவதற்கான வாய்ப்பு ஐம்பது சதவீதம் இருக்கு... முயற்சித்து பார்க்கலாம்னு சொன்ன, அந்த நேத்திராலயா டாக்டர்கிட்டே, கொஞ்சம் பணம் சேர்த்து, யாமினிக்கு டீரிட் மெண்ட் கொடுத்து பார்வை வரவழைக்கணும்.

    என் மகள் உலகை பார்த்து மகிழும் காட்சியை நான் கண்ணார கண்டு ரசிக்கணும்.

    அதுமட்டுமில்லை, சேகரை... டாக்டருக்கு படிக்க வைக்கணும். அதுவும் கண் மருத்துவராக... உன் தங்கையை போல சிரமப்படும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு வெளிச்சம் தரும் டாக்டராக என் மகள் வாழ்வில் உயரணும். என்னம்மா அப்படி பார்க்கிறே... இதெல்லாம் சாத்தியப்படுமான்னு யோசிக்கிறியா... முடியும்மா... எண்ணங்கள் தான் வாழ்க்கையை தீர்மானிக்குது. நான் கண் மூடறதுக்குள் இதெல்லாம் நடக்கும்மா... நடத்தி காட்டுவேன்."

    நம்பிக்கையுடன் சொல்பவரை, விழி நீர் நிறைய பார்க்கிறாள் பாரதி.

    என்னம்மா யாமினி எதுக்கு அக்காவை தேடற...

    என்னக்கா பண்ணிட்டு இருக்கே.

    புக்... படிச்சிட்டிருந்தேன்மா... உனக்கு என்ன வேணும் சொல்லு.

    அக்கா, எனக்கு கண் பார்வை வந்துடும். இந்த உலகத்தை நான் பார்ப்பேன்னு அப்பா அடிக்கடி சொல்றாரே... எனக்கு கண் பார்வை வருமாக்கா.

    குழந்தையாக கேட்கும் தங்கையை கனிவுடன் பார்க்கிறாள்.

    பெரிய டாக்டர் அப்படி தான் சொல்லியிருக்காரு. நிச்சயம் வரும் யாமினி.

    அக்கா எனக்கு கண் பார்வை வந்ததும், முதலில் உன்னையும், அப்பாவையும், நம்ப தம்பியையும் பார்ப்பேன்… அப்புறம் முழு நீள கண்ணாடியில் என்னை முழுவதும் பார்க்கணும்கா. என் அழகை, என் முக அமைப்பை... அடுத்தவங்க பாராட்டும் என் தோற்றத்தை நானும் பார்த்து ரசிக்கணும்னு ரொம்பவே ஆசையாக இருக்குக்கா... இதெல்லாம் நடக்குமா...

    எவ்வளவு ஆவலுடன் கேட்கிறாள். கடவுளே என் தங்கைக்கு பார்வையை கொடு. அவள் கனவுகளை நிறைவேற்று.

    மனதை திடப்படுத்தியவளாய்,

    எல்லாம் நடக்கும் யாமினி. இனி இதை பற்றி பேச கூடாது சரியா... உன் குறை தெரியாமல் அன்போடு பாதுகாக்கிற அப்பா மனசு கஷ்டப்படும். இடைவிடாத நம் வேண்டுதல்களை கடவுள் கேட்டுட்டு தான் இருக்கார். நமக்காக இல்லாட்டியும் தன்னலமில்லாத நம் அப்பாவின் நல்ல மனதிற்காகவாவது கடவுள் உனக்கு பார்வை தருவாரு. என் தங்கை அதுவரை அந்த குறை தெரியாமல் சிரித்த முகத்தோடு எப்பவும் சந்தோஷமாக இருக்கணும் சரியா. புன்னகைத்தபடி தலையை பலமாக ஆட்டுகிறாள்.

    தரையில் உட்கார்ந்து குனிந்த படி

    Enjoying the preview?
    Page 1 of 1