Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pookuzhi
Pookuzhi
Pookuzhi
Ebook283 pages1 hour

Pookuzhi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பூக்குழி, ஒரு விசித்திரமான நாவல்; உருவத்தால் வேறுபாடு கண்டுபிடிக்க முடியாத வகையில் நாவலில் வருகின்ற இரட்டையர்களில் ஒருவனான போலி ராஜேஷ் குமார், தனது அண்ணியான அகல்யாவிடம் விபரீதமாக நடக்கத் துடிக்கும் போது, என்ன நடந்தது? அகல்யாவின் கணவர் ராஜேஷ்க்கு நேர்ந்தது என்ன? என்பதைக் காண வாருங்கள் வாசிப்போம்...!

Languageதமிழ்
Release dateFeb 24, 2024
ISBN6580155608880
Pookuzhi

Read more from Lakshmi

Related to Pookuzhi

Related ebooks

Related categories

Reviews for Pookuzhi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pookuzhi - Lakshmi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பூக்குழி

    Pookuzhi

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    முன்னுரை

    அமரர் கல்கி தமிழகத்துக்குக் கண்டுபிடித்துக் கொடுத்த எண்ணற்ற எழுத்தாளர்களுள் லக்ஷ்மியும் ஒருவர். நான் முதன்முதலில் ஒரு சிறுகதை எழுதி ஆனந்த விகடனுக்கு அனுப்பினேன். அதைப் படித்துவிட்டு கதை பிரசுரமாவதற்கு முன்பே ஒரு பாராட்டுக் கடிதம் எழுதினார் கல்கி. அந்தக் கடிதம் தான், என்னை மேன்மேலும் எழுதத் தூண்டியது என்று, லக்ஷ்மி கூறியிருக்கிறார்.

    இந்த நன்றி உணர்வு காரணமாக, கல்கி பத்திரிகைக்கு ஒரு நாவல் எழுதித்தர வேண்டும் என்று சென்ற ஆண்டு நான் கேட்டபோது, லக்ஷ்மி ஆகட்டும் என்றோ, யோசிக்கிறேன் என்றோ கூறவில்லை. அது என் கடமையல்லவா? என்றார். கல்கி அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, அவரே ஆசிரியராக இருந்து நடத்திய பத்திரிகை, அவருடைய மகன் வந்து கேட்கிறீங்க; இல்லை என்பேனா? என்றார்.

    நான் நெகிழ்ந்து போனேன். மேலே குறிப்பிட்ட ஒரு நிமிட உரையாடலின் விளைவுதான் பூக்குழி. தொடர் கதையாகப் பிரசுரிக்கப்பட்ட போது, கல்கி வாசகர்களிடையே அபரிமிதமான வரவேற்பைப் பெற்றது.

    முதல் கதைக்கு ஆனந்த விகடன் ஆசிரியரின் பாராட்டைப் பெற்றபின், அந்தப் பத்திரிகையில் ஏராளமான சிறு கதைகளும் நீண்ட பல தொடர்கதைகளும் எழுதினார் லக்ஷ்மி. இதற்கிடையில் கல்கி தமது சொந்தப் பத்திரிகையை ஆரம்பித்தார். தென் ஆப்பிரிக்காவிலிருந்து தமது தொடர் கதையின் அத்தியாயங்களை விகடனுக்கு அனுப்புவார் லக்ஷ்மி. தபால் தாமதங்கள் காரணமாக சில வாரங்கள் விகடனில் கதைப் பகுதி இடம் பெறாமலேயே போகும். அப்போது வாசகர்கள் பட்ட பாடு; அவர்கள் மனங்கள் அடைந்த ஏக்கம்!

    நல்லவேளை, டாக்டர் லக்ஷ்மி திரிபுரசுந்தரி இப்போது நிரந்தரமாக சென்னைக்கே திரும்பி விட்டார். தபாலில் கதைப் பகுதி தாமதமாக வாய்ப்பில்லை. அதோடு இன்னொரு அனுகூலம்! ஒரு பத்திரிகை என்றில்லாமல் பல பத்திரிகைகள் அவர் எழுத்தைத் தாங்கிப் பெருமையுறுகின்றன. அவரும் தமக்குப் பெரும்புகழ் குவித்து வருகிறார்.

    லக்ஷ்மி எழுத ஆரம்பித்து நிச்சயமாக நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன ஆயினும், என்ன அதிசயம்? அன்று ‘காஞ்சனையின் கனவை’ எவ்வளவு ஆர்வத்துடன் வாசகர்கள் படித்தார்களோ, அதே அளவு ஆவலோடு இன்று பூக்குழியையும் படித்தார்கள். அதற்குப் பிறகு அவர் எழுதிவரும் தொடர்கதைகளையும் படிக்கிறார்கள். வேறு பல எழுத்தாளர்களின் புகழ் சிலகாலம் கொடிகட்டிப் பறப்பதையும், அப்புறம் அவர்கள் இருக்குமிடம் தெரியாமல் போய் விடுவதையும் ஒப்பிட்டு நோக்கும் போதுதான், லக்ஷ்மியின் இந்தச் சாதனை எவ்வளவு மகத்தானது என்பதை நாம் உணர முடியும். அவர் எழுத்து; சென்ற தலைமுறையைக் கவர்ந்தது; இன்றைய தலைமுறையை ஈர்க்கிறது; எதிர்கால இளம் தலைமுறைக்கும் பிடிக்கும்!

    லக்ஷ்மியின் இந்த அபார வெற்றிக்குக் காரணம் என்ன? ஒரே வாக்கியத்தில் அந்த ரகசியத்தை உடைத்துக் கூறுவதெனில், சமுதாய வளர்ச்சிக்கும் மக்களின் மனவளர்ச்சிக்கும் ஏற்ப அவர் எழுத்து வளர்ச்சி அடைந்து வருகிறது எனலாம்.

    ஆனால் புதுமை, புத்தலை என்று கூறிக்கொண்டு, நமது பண்பாடுகளுக்கு ஒவ்வாத விதமாக எழுதுவதென்பது அவருக்குத் தெரியாத ஒன்று. ஆபாசங்களை, அருவருப்பான மனவக்கிரங்களைப் பற்றி அறியாதவர் அல்ல லக்ஷ்மி. ஏனெனில் அவர் ஒரு டாக்டர். நோயுற்ற மனித மனங்களின் எத்தனையோ விதமான விகாரங்களை அவர் டாக்டர் என்ற முறையில் நேரில் கண்டுமிருப்பார். அவை பற்றி விஞ்ஞான ரீதியாக நிறையப் படித்தும் இருப்பார். மற்றவர்களைப் போல் அரைகுறையாக அன்று. முழுமையாகத் தெரிந்து கொண்டிருப்பதாலேயே அவற்றைத் தம் எழுத்தில் தவிர்த்தும் விடுகிறார். டாக்டராகிய அவர், தம் எழுத்து வாசகர்களின் மன ஆரோக்கியத்தைப் பாதித்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். உணவு உடலுக்கு போஷாக்கு அளிப்பது போல, எழுத்து உள்ளத்துக்குப் போஷாக்கு தர வேண்டும் என்று உணர்ந்தவர் லக்ஷ்மி.

    எப்போதும் சாந்தமாக இனிமையாகப் பேசிக் கொண்டிருக்கும் லக்ஷ்மி, ஆபாச எழுத்துப் பற்றி உரையாடல் திரும்பிவிடுமானால் மட்டும், ஒரேயடியாகக் கோபமடைந்து முகம் சிவக்கப் படபடப்பதைக் காணலாம்.

    ‘லக்ஷ்மி கோபித்துக் கொண்டால் என்ன? பிறருக்கு என்ன நஷ்டம்?’ என்று கிண்டலாகவும் பொறுப்பின்றியும் சிலர் கேட்கிறார்கள். நஷ்டம் தமிழகத்துக்கும் தமிழ் சமுதாயத்துக்கும் தான்.

    நான் பணத்துக்காகத்தான் எழுதுகிறேன்; இப்படி எழுதச் சொல்லிக் கேட்கிறார்கள் எழுதுகிறேன்? என்றெல்லாம் கூறுவது இன்று ஒரு ‘பேஷன்’ ஆகிவிட்டது. பணத்துக்காகத்தான் பாலில் தண்ணீர் கலக்கிறேன் என்றோ, பணத்துக்காகத்தான் கலப்படம் பண்ணுகிறேன் என்றோ ஒரு பால்காரரோ அல்லது ஒரு மளிகைக்கடைக்காரரோ கூறித் தப்ப முடியுமா?

    இன்னும் சிலர் வேறு வழியாக வாதிக்கிறார்கள். என்னுடைய எழுத்தைப் படித்து விட்டுத்தான் சமுதாயம் சீர்கெட்டு விடப் போகிறதா? எனக்கொன்றும் சமுதாயத்தைப் புனருத்தாரணம் பண்ணுகிற நோக்கம் இல்லை சார்! ஏதோ மக்களை மகிழ்விக்க எழுதுகிறேன். அவ்வளவுதான் என்கிறார்கள்.

    இவர்கள் வாதத்தை ஏற்றால் எழுத்துக்குச் சக்தியே இல்லை என்றாகிறது. ஆனால் சரித்திரம் இதைப் பொய் என்று நிரூபிக்கிறது. எழுத்துக்குச் சக்தி உண்டு. அது மாபெரும் சாதனைகளைப் புரியும் என்று சரித்திரம் எடுத்துக் காட்டுகிறது. டால்ஸ்டாய் என்ன, டிக்கன்ஸ் என்ன, வால்டேர் என்ன, பாரதி என்ன எல்லாரும் சமுதாயத்தில் பெரிய மாறுதல்களைத் தம் எழுத்தால் நிகழ்த்திக்காட்டியவர்கள். அவை ஆரோக்கியமான மாறுதல்கள். ஆக, எழுத்துக்கு ஆக்கும் திறன் உண்டெனில் அதற்கு அழிக்கும் சக்தியும் உண்டு என்பதை ஒப்புக் கொண்டுதானே ஆக வேண்டும்! பொறுப்பற்ற எழுத்து சில சமயம் வெளிப்படையாகவே தீமை பயக்கும்; வேறு பல தருணங்களில் மேலிருந்து பார்க்கையில் தெரியாமல் உள்ளிருந்து அரிக்கும் நோயாகப் பரவும்.

    உண்மையில் ஆபாசமாக எழுதத் தூண்டுவது சிரமமின்றி பிரபல்யம் அடையலாம் என்ற பேராசைதான். குறுக்கு வழியில் அடையும் இந்தப் பிரபல்யம் நீண்ட காலம் நிலைக்காது; அது புகழாகாது.

    ஆபாசம் அவசியமில்லை; ஆரோக்கியமான எழுத்து மூலமே வாசகர்களைக் கவர முடியும் என்று நிரூபித்து வருகிறார் லக்ஷ்மி. ஆனால் லக்ஷ்மி பின்பற்றும் இந்த மார்க்கம் கடினமானது; நிறைய உழைப்பைக் கோருவது. அதற்கு அவர் தயங்குவதில்லை. கதை சொல்லும் உத்தியால், பாத்திரப் படைப்புத் திறனால், உணர்ச்சிகளை வெளியிடும் பாங்கால், ‘சஸ்பென்ஸோடு நிகழ்ச்சிகளை உருவாக்கிக் கோக்கின்ற லாகவத்தால், எழுத்தின் நடையழகால், வாசகர்களைக் கவர்கிறார். சிறந்த எழுத்து என்பது இதுதான்.

    இந்தப் பூக்குழி கதையில்தான் பாத்திரப் படைப்புக்களை எத்தனை அழகாகத் திறம்படக் கையாண்டிருக்கிறார்? சஸ்பென்ஸைப் படிப்படியாக எத்தனை ஆற்றலோடு வளர்த்துக்கொண்டே போகிறார்!

    ராஜ்குமார் இறந்து விட்டான் என்றபோது வாசகர்கள் அடைந்த வேதனை, படபடப்பு! அகல்யாவை காமேஷ் துர்நோக்கத்துடன் அணுகியபோது, அவள் நெஞ்சம் துடிதுடித்தது போலவே பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் இதயங்களும் துடிதுடிக்கத்தான் செய்தன.

    ஷெர்லாக் ஹோம்ஸை ஒரு கதையில் கொன்றுவிட்ட எழுத்தாளர் கானன்டாயில் வாசகர்களின் கோபத்துக்கு ஆளாகி, அதைச் சமாளிக்க முடியாமல், அடுத்த கதையில் அவனை உயிர்ப்பித்தார்! அது போலத்தான் ராஜ்குமார் உயிருடன் வந்திருக்கவில்லையானால் லக்ஷ்மியைக் கல்கி நேயர்கள் மன்னித்தே இருக்கமாட்டார்கள்! அவர் வீடு நோக்கிப் படை எடுத்திருந்தாலும் வியப்பதற்கில்லை.

    நமது கிராமப்புறங்களில் வாழ்கிற எளிய மக்களிடம் இன்றைக்கும் நிலவுகிற நம்பிக்கைகள், தீவிரபக்தி, பாசங்கள், அன்புள்ளங்கள், திடசித்தம், கடமை உணர்வு, வீரம், தியாக நோக்கு எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு கதையில் ஜொலிக்கின்றன. அவ்வளவையும் பிரகாசிக்க வைப்பது காமேஷ் என்ற ஒரு பொறாமை பிடித்த ஜீவன். அவனுடைய பொறாமைக்கும் கோபத்துக்கும் கூட வலுவான நியாயமான காரணங்களைக் கற்பித்திருக்கிறார் லக்ஷ்மி.

    ஒரே ஒரு பொறாமை உள்ளம் எத்தனை வித பாதிப்புகளை, எத்தனை பேரிடம் சங்கிலித் தொடர்போல உருவாக்கி, அவர்கள் அத்தனை பேரிடமும் உள்ள குண நலன்களை விகசிக்கச்செய்து விடுகிறது!

    ஏதாச்சும் வேணுமினா கூப்பிடச் சொல்லுங்க. அகல்யா அருகில் வந்தபோது, ஒரு மணம் கம்மென்று முகத்தில் மோதுவதை உணர்ந்தாள்.

    அலமாரியில் அடுக்கி வைத்திருக்கும் புடைவைகள் இடையே, அவள் போட்டு வைத்திருக்கும் காய்ந்து போன தாழம்பூ மடலின் நறுமணம் சுகமாக மின்சிவிறியின் காற்றோடு கலந்து வீட்டுக்குள் வட்டமிட்டது.

    வெள்ளிக்கிழமை அகல்யா கோவிலுக்குப் போக உடுத்திக்கொண்டு போன பட்டுச் சேலையை இன்னமும் களைந்து வைக்கவில்லை போலிருக்கு. இப்படி எண்ணிய கிழவியின் உள்ளத்திலே, பழைய நினைவுகள் குபீரென்று எழுந்து நெஞ்சை அடைத்துக்கொண்டு விட்டன.

    அதுவும் முதல் நாள், அவளைப் பார்க்க வந்த அவள் தோழி பார்வதி தூங்கிக்கொண்டிருந்த அவளது நினைவுகளைக் கிளறித் தூண்டிவிட்டுப் போயிருந்தாள்.

    மாமியாரின் வேண்டுகோளைத் தட்ட முடியாது, அவள் உடல்நிலை சிறிதளவு சீராகியபின் தான், அதை விளக்கி பார்வதி அம்மாளுக்கு அகல்யா ஒரு கார்டு போட்டிருந்தாள்.

    அவ்வளவுதான் தன் கடைக்குட்டிப் பேரனுடனும், கூடை சாத்துக்குடி பழங்களுடனும், அம்பாசிடரில் அவள் சேலத்திலிருந்து பறந்து வந்து விட்டாள்.

    ‘எழுந்து உட்காரும் அளவுக்குத்தான் உடம்பு தேறியிருக்கிறது. அதற்குள் நாள் முழுவதும் தொண தொணக்க இந்த அம்மாள் வந்து விட்டாங்களே?’ என்று அகல்யாவுக்கு உள்ளூறக் கவலைதான். ஆனால் மாமியாரின் ஆசைக்குக் குறுக்கே நிற்க அவளுக்கு அதிகாரம் இருக்கவில்லை.

    அவர்கள் இருவரையும் பேசவிட்டு, அவள் குழந்தையைத் தூக்கிக்கொண்டு தோட்டத்துக்குள் போய்விட்டாள்.

    இறுதியில் புராணகால அகல்யாவைப் போல ஏமாறாமல், லக்ஷ்மியின் படைப்பிலே வரும் இந்த அகல்யா, புராணங்களில் நாம் காணும் எத்தனையோ பல கற்புக்கரசிகளையெல்லாம் தோற்கடிக்கும் விதமாக நடந்து கொள்வதைப் பார்க்கும் போது, மெய்சிலிர்க்கிறது, மனம் நிறைகிறது.

    அகாதமி பரிசே பெற வேண்டிய நாவல் இது. பெறாவிட்டாலும் பாதகமில்லை என்று தோன்றுகிறது. ஏனெனில் அகாதமி பரிசு பெறும் பெரும்பாலான எழுத்தாளர்கள், அப்புறம் எழுதுவதையே விட்டு விடுகிறார்கள். நமக்கோ லக்ஷ்மி இன்னும் ஒரு நாற்பது ஆண்டு காலமாவது எழுதி தமிழுக்குச் சேவை புரிய வேண்டும் என்ற ஆசை.

    கல்கி அவர்கள்தான், எனக்கு எழுதும் திறன் இருப்பதைக் கண்டுகொண்டு முதன் முதலாக என்னை ஆதரித்து ஊக்கினார். அவரிடமே என்னுடைய ஒரு புத்தகத்துக்கு முன்னுரை கோரிப் பெற வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அந்த ஆசை கைகூடும் முன்னரே அவர் காலமாகிவிட்டார் என்று லக்ஷ்மி என்னை முன்னுரை எழுதுமாறு வேண்டியபோது குறிப்பிட்டார்.

    ‘பொன் வைக்கும் இடத்தில் பூ’ என்பார்களே, அப்படி கல்கி எழுத வேண்டிய முன்னுரைக்குப் பதிலாக, அவர் மகன் எழுதியிருக்கிறேன். இதில் லக்ஷ்மிக்கு ஒரு மன ஆறுதல் கிடைக்கும். எனக்கோ பெருமையும் கௌரவமும் கிட்டியுள்ளன!

    1. புருஷோத்தம முதலியார் சாலை,

    ஏரி வட்டம்.

    சென்னை – 600 034.

    கி. ராஜேந்திரன்

    ஆசிரியர், கல்கி

    7.4.80.

    1

    அன்று செவ்வாய்க்கிழமை. வழக்கத்தைவிடச் சற்று முன்னதாகவே அகல்யா விழித்துக் கொண்டு விட்டாள். மங்கலாக அறைக்குள் விடிவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. மெல்லத் திரும்பிப் பார்த்தாள். அந்தப் பெரிய ஹைதர் காலத்துத் தேக்குமரக் கட்டிலின் மீது வாயைப் பிளந்து கொண்டு பஞ்சரத்தினம், விடியற்காலை வேளையின் இனிமை கலந்த உறக்கத்திலே லேசாகக் குறட்டை எழுப்பிக் கொண்டிருந்தான். சப்தமிடாது தனது படுக்கையைச் சுருட்டிப் பெஞ்சியின் ஓரத்தில் சுவரையொட்டினாற்போல் வைத்துவிட்டு மெல்ல நடந்து கதவருகே வந்தாள்.

    அந்த வீடு அவளது கணவனது பாட்டன் காலத்தில் கட்டப்பட்ட அழுத்தமானதொரு காரைக் கட்டிடம். கோயில் அடைப்புக்கதவுபோல வேலைப்பாடமைந்த தேக்கு மரத்தில் குறுக்குத் தண்டுகளின் மீது வெண்கலக் குமிழ்கள் பளபளத்தன. அந்தக் கதவின் தாழ்ப்பாளை நீக்கி மெல்லத் திறப்பதற்குள் அவள் தோள்பட்டையே கழன்றுவிடும் போன்ற கனம். வீட்டின் எல்லாக் கதவுகளுமே எக்கச்சக்கமானதொரு கனம். திருடன் இலேசில் உடைத்துவிட முடியாது. கோடாலி கொண்டு பிளந்து ஊரையே கூட்டி விட்டுத்தான் உள்ளே நுழைய முடியும். அப்படி ஒரு பாதுகாப்பு.

    முன்கட்டு, பின்கட்டு என்று பழைய பாணியில் புழக்கடை வரை ஓடிய அந்தக் கட்டிடத்தில், தன் என்ஜினீயர் மூளையைச் செலவழித்துப் பலமாற்றங்கள் செய்திருந்தான் ராஜ்குமார். அனாவசியத் தடுப்புக்களை இடித்துத் தள்ளிவிட்டுப் பெரியதொரு ஹால். அதற்கு எதிரும் புதிருமாக இரண்டு பெரிய அறைகள், பின்னால் ஒரு தாழ்வாரம், சமையலறை, பூஜையறை, சற்றுத்தள்ளி குளியலறை என்று வீட்டை மாற்றி, சீராகக் கட்டி விட்டிருந்தான். செங்கல் பாவிய தரை முழுவதையும் மொசைக்கினால் இழைத்து விட்டிருந்தான்.

    தனக்குக் கல்யாணம் நிச்சயமானவுடன், உடனடியாகத் தங்கள் உபயோகத்துக்கென மொட்டையாக இருந்த மாடியில் ஒரு சிறு முன்னறையும், குளியலறையையும் உள்ளடக்கிக் கொண்ட பெரியதொரு படுக்கையறையும் கட்டிவிட்டிருந்தான். கட்டில்கள், மேஜை நாற்காலிகள், சோபாக்கள், ஜன்னலுக்கு அழகான திரைச்சீலை என்று பட்டணத்துப் பணக்காரர் வீட்டைப்போல் அலங்கரித்து விட்டிருந்தான். ஆறு மாதம்தான் அவர்கள் அந்த அறையை உபயோகித்தனர். அதற்குப் பின்னர் அது பூட்டிக் கிடந்தது.

    திருநல்லூர் கிராமத்துக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னமே மின்விசை அமைப்பு வந்துவிட்டிருந்தது. அந்த வீட்டின் எந்தப் பகுதியிலும் அந்த வசதிக்குக் குறைவே இருக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காவேரி நீரைக் குழாய் இணைப்பு மூலம் குடி தண்ணீராக மக்களுக்குக் கிடைக்கும் வசதியும் வந்து விட்டிருந்தது.

    கணவன் ஊரில் அவளுடன் தங்கியிருந்த காலத்தில் அவன் துணைக்கு வருவான். இரண்டு கிலோமீட்டர் தொலைவில் ஓடிக்கொண்டிருந்த காவேரியில் தலைமுழுகிக் குளித்துவர கருக்கலுடன் கிளம்புவார்கள். விடியற்காலை வேளையில் துறையில் யாருமே இருக்கமாட்டார்கள். தண்ணீரும் வெதுவெதுவென்று உடம்புக்கு இதமாக இருக்கும். ஆசை தீர முங்கி அவள் வெகு நேரம் நீரில் துளைந்து குளிப்பாள். கீழ்வானத்திலே செம்மை கட்டிக்கொண்டு சூரியன் புறப்படத் தொடங்கியதும் மனமில்லாது தண்ணீரைவிட்டு வருவாள். ஒரு பாதிப்புடவையை இடுப்பில் சுற்றிக்கொண்டு மறு பாதியைத் துவைத்து அலசிப் பிழிந்துவிட்டு, அதை லாவகமாக உடலில் நன்றாக மூடி மறைத்துக்கொண்டு, மறு பாதியைத் துவைத்துப் பிழிந்து உடலைச் சுற்றி அவள் இறுக்கிக் கட்டிக்கொள்வதைக் காணாதது போல் அவன் கண்டு வியப்பான்.

    இருள் பிரிந்து புது வெளிச்சம் பரவத் தொடங்கியதும், அங்கே குளிக்க ஊர் மக்கள் பலர் வந்து விடுவார்கள். அதற்குள் அவள் பொன்னாகத் தேய்த்துக் கழுவிய குடத்தில் நீரை மொண்டு கரை ஏறிவிடுவாள். எல்லோருக்கும் முன் வீடு திரும்பிவிட வேண்டும் என்பது அவன் உத்தரவு. தன் அழகு மனைவியை நீர்த் துறையில் யாரும் வெறித்துப் பார்ப்பதை அவன் விரும்பியதில்லை. அவளுக்கும் அது பிடிக்காத விஷயமே.

    ஊருக்குப் போகுமுன் அவன் சொல்லி விட்டிருந்தான். நீ கால் வைச்சவேளை, குழாயிலே காவிரித் தண்ணியே வீட்டுக்குள் வந்து கொட்டுது. துணை இல்லாம நீ கருக்கலில் காவேரிக்குப் புறப்படத் தேவையில்லை. ஆழந் தெரியாமல் இறங்கிட்டா உனக்கு என்னைப் போல நீஞ்சக்கூடத் தெரியாது, பத்திரம்.

    ‘தன்னந்தனியாக அவள் இங்கு மட்டும் வெளியே போவதை கணவன் விரும்பவில்லை’ அவள் சட்டென்று புரிந்து கொண்டு விட்டாள்; கெட்டிக்காரி.

    மாரியம்மன் கோயிலுக்கு வெள்ளி - செவ்வாய்களில் நம்ப தோட்டக்காரன் சிங்காரத்தைத் துணைக்குக் கூட்டிக்கிட்டுப் போய் வரத்தைப் பத்தி?

    கோயிலுக்குப் போகக் கூடாதுன்னா சொல்வேன்? முத்துமாரி நம்ம குலதெய்வமாச்சே! என்று அவள் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளினான்.

    விமானப் பையைத் தோள்மீது போட்டுக்கொண்டு, பெட்டியைச் சிங்காரம் தூக்கிக்கொண்டு செல்ல, வாசலில் காத்திருந்த மாட்டு வண்டியில் ஏறி, அவன் கிளம்பிச் சென்றது, இப்போதுதான் நடந்தது போல் இருந்தது. வருஷம் ஒன்றரையாகிவிட்டிருந்தது.

    ஏனோ, அவளுக்கு, அன்று காலை அவனது நினைவு நெஞ்சைக் கனமாக அழுத்தியது. மெல்லக் கதவை ஒருக்களித்து வீட்டு ஹால் விளக்கைப் போட்டுவிட்டுக் குளியலறைக்குள் புகுந்தாள்.

    எப்பொழுதும் அவள் குளிர்ந்த நீரில்தான் முழுகுவது வழக்கம். அதுவும் இரண்டு நாட்களாக எரிந்த வெய்யிலில் சில்லென்ற நீரைத் தலையில் ஊற்றிக் கொள்வது இனிமையாகத்தான் இருந்தது. ஈரம் போகத் தலையைத் துவட்டி முடியின் நுனியில் சிறு முடிச்சிட்டுக் கொண்டாள். கொடியில் கிடந்த மாற்றுப் புடவை உள் ஆடைகள் அனைத்தையும் எடுத்துப் பரபரப்பாக உடுத்திக் கொண்டாள்.

    கண்ணாடியில் முகத்தைப் பார்த்து நெற்றி மீது குங்குமப் பொட்டை வைத்துச் சீராக்கிக்கொண்டு அவள் வெளியே வருவதற்குள், தோட்டத்துக் கதவு இலேசாகத் தட்டப்படும்

    Enjoying the preview?
    Page 1 of 1