Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

120 Vayathu Vaazhntha Athisaya Bhuddha Thuravi Xuyun!
120 Vayathu Vaazhntha Athisaya Bhuddha Thuravi Xuyun!
120 Vayathu Vaazhntha Athisaya Bhuddha Thuravi Xuyun!
Ebook181 pages1 hour

120 Vayathu Vaazhntha Athisaya Bhuddha Thuravi Xuyun!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தைவானின் உள்ள ‘The Corporate Body of the Buddha Educational Foundation’ நிறுவனம் புத்த மதம் பற்றி இலவசமாக அனுப்பி வரும் புத்தகங்களுள் மிக முக்கியமான ஒரு நூல் ‘Empty Cloud - The Autobiography of the Chinese Zen Master XU YUN’. Translated by Charles Luk – Revised and Edited by Richard Hunn.

120 வயது வாழ்ந்த அற்புதமான ஜென் துறவி ஸூ யுன் என்ற மகானின் சுய சரிதை இது. 120 ஆண்டுக் காலத்தில் அவர் கால்நடையாகவே சீனா, இந்தியா, பர்மா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று ஆற்றிய பணிகள் பிரமிக்க வைப்பவை.

தமிழ் மக்களுக்கு புத்தரின் போதனைகளையும் ஜென் பிரிவு தரும் குட்டிக் கதைகள், கோயன்கள் பற்றியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு, ‘புத்தரின் போதனைகளும் ஜென் குட்டிக் கதைகளும்’ மற்றும் ‘ஜென் காட்டும் வாழ்க்கை நெறி’ என்ற தலைப்புகளில் புஸ்தகா நிறுவனம் சார்பில் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.

அதைத் தொடர்ந்து வெளி வரும் நூல் இது. தமிழாக்கத்தில் சுவையான பகுதிகளின் சுருக்கம் மட்டும் இந்த நூலில் தரப்பட்டுள்ளது. உற்சாகமும் உத்வேகமும் ஊட்டும் ஒரு மாபெரும் மகானின் சரிதத்தை அவரே வழங்க அதைப் படிப்பது ஒரு பாக்கியமல்லவா! அவர் கூறும் சிந்தைக்கு இனிய கருத்துக்களைப் படிக்கலாம்; வாழ்வில் உயரலாம்!

Languageதமிழ்
Release dateApr 16, 2024
ISBN6580151010995
120 Vayathu Vaazhntha Athisaya Bhuddha Thuravi Xuyun!

Read more from S. Nagarajan

Related to 120 Vayathu Vaazhntha Athisaya Bhuddha Thuravi Xuyun!

Related ebooks

Reviews for 120 Vayathu Vaazhntha Athisaya Bhuddha Thuravi Xuyun!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    120 Vayathu Vaazhntha Athisaya Bhuddha Thuravi Xuyun! - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸுயுன்!

    (EMPTY CLOUD ஆங்கில நூலில் உள்ள சுயசரிதையின் தமிழாக்கச் சுருக்கம்)

    120 Vayathu Vaazhntha Athisaya Bhuddha Thuravi Xuyun!

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயங்கள் 1 முதல் 40 முடிய

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    கலைச் சொற்கள்

    முன்னுரை

    உலகில் எளிதில் விடை காண முடியாத மனதின் கேள்விகள் பல!

    ‘இவற்றிற்கான பதிலை நீயே ஆராய்ந்து கண்டு பிடி; உன் அனுபவத்தால் உணர்; என்கிறது புத்த மதம்! இதன் பால் அறிவியல் அறிஞர்கள் உள்ளிட்ட பல கோடி பேருக்கு ஒரு ஈர்ப்பு உண்டு.

    தமிழ் மக்களுக்கு புத்தரின் போதனைகளையும் ஜென் பிரிவு தரும் குட்டிக் கதைகள், கோயன்கள் பற்றிப் பல கட்டுரைகளை எழுதி வந்தேன்.

    இந்தக் கட்டுரைகளின் தொகுப்பு, ‘புத்தரின் போதனைகளும் ஜென் குட்டிக் கதைகளும்’ மற்றும் ‘ஜென் காட்டும் வாழ்க்கை நெறி’ என்ற தலைப்புகளில் புஸ்தகா நிறுவனம் சார்பில் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.

    தைவானின் உள்ள ‘The Corporate Body of the Buddha Educational Foundation’ நிறுவனம் புத்த மதம் பற்றி எனக்கு விலை மதிக்கவே முடியாத அரிய புத்தகங்களை இலவசமாக அனுப்பி உதவியது. அருமையான இந்தப் புத்தகங்கள் என்னை மேலும் பல கட்டுரைகளை எழுத ஊக்குவித்தன.

    தைவான் நிறுவனம் அனுப்பிய புத்தகங்களுள் மிக முக்கியமான ஒரு நூல் ‘Empty Cloud - The Autobiography of the Chinese Zen Master XU YUN’. Translated by Charles Luk – Revised and Edited by Richard Hunn.

    120 வயது வாழ்ந்த அற்புதமான ஜென் துறவி ஸூ யுன் என்ற மகானின் சுய சரிதை பெரிதும் உத்வேகம் ஊட்டும் ஒரு சரிதை.

    அதை தமிழில் கட்டுரைகளாக லண்டனிலிருந்து வெளியாகும் tamilandvedas.com இணையதள ப்ளாக்கில் எழுதி வரலானேன்.

    ஏராளமான பெயர்கள். இவை அனைத்தும் சீன மொழியில் வேறு உள்ளன. ஆகவே தமிழாக்கத்தில் சுவையான பகுதிகளின் சுருக்கத்தை மட்டும் தரலானேன்.

    அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.

    நூலின் இறுதியில் சில கலைச் சொற்கள் தரப்பட்டுள்ளன.

    அவற்றை முதலில் படித்து விட்டு நூலுக்குள் செல்லலாம்.

    முதலில் இந்த நூலை எனக்கு அனுப்பி உதவிய The Corporate Body of the Buddha Educational Foundation’ நிறுவனத்திற்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜென் பிரிவைப் பற்றிய அனைத்தையும் உலகளாவிய விதத்தில் இலவசமாக வழங்கி வரும் இதன் பணி போற்றுதற்குரியது.

    அடுத்து இதை tamilandvedas.com -ல் வெளியிட்ட லண்டன்

    திரு ச. சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

    நூற்றுக்கும் மேற்பட்ட எனது நூல்களை தரத்துடன் அழகுற டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் வெளியிட்டுள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIA இந்த நூலையும் வெளியிடுகிறது. இதன் உரிமையாளர் டாக்டர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உற்சாகமும் உத்வேகமும் ஊட்டும் ஒரு மாபெரும் மகானின் சரிதத்தை அவரே வழங்க அதைப் படிப்பது ஒரு பாக்கியமல்லவா!

    வாருங்கள் சரிதையைப் படிப்போம்!

    நன்றி.

    பங்களூரு

    28-3-2024

    ச. நாகராஜன்

    அத்தியாயங்கள் 1 முதல் 40 முடிய

    1

    ஒவ்வொரு புத்த மடாலயத்திலும், சீனாவில் ஒவ்வொரு இல்லத்திலும் மிக்க பயபக்தியுடன் உச்சரிக்கப்படும் பெயர் ஸு யுன் (Xu Yun)!

    120 ஆண்டுகள் வாழ்ந்ததோடு நேரடியாக ஆன்மீக வாழ்க்கையை 101 ஆண்டுகள் புத்த துறவியாக இருந்து வாழ்ந்து காட்டிய ஒரு பெரியவர் என்பதால் அவர் ஒரு அதிசய புருஷர்!

    அவர் வாழ்க்கையில் ஏராளமான சுவையான சம்பவங்கள் நிறைந்திருப்பதால் அவர் வாழ்க்கை சரிதம் ஒரு அபூர்வ சரிதம்!

    நூற்றுக்கணக்கான சீடர்களை அவர் ஆங்காங்கே உருவாக்கினார். சில சமயம் அவரைப் பார்க்க வரும் மக்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில் திரண்டது.

    மிங் வமிசத்தில் மாஸ்டர் ஹான் ஷான் (1546-1623) என்பவருக்கு மட்டுமே இப்படிப்பட்ட ஒரு பெரும் சீடர் கூட்டம் இருந்தது.

    அவர் காலத்திலும் ‘தர்மா’ (புத்த தர்மம்) நலிவுற்று அழியும் தருணத்தில் இருந்தது. அதற்குப் புத்துயிரூட்டி நலிவடைந்திருந்த ஏராளமான ஆலயங்களை புனருத்தாரணம் செய்தார் அவர்.

    அதே போல ஸூ யுன் காலத்திலும் சீனாவில் மாசேதுங் எழுச்சியால் புத்த தர்மத்திற்கு பேராபத்து ஏற்பட்டது. அந்தக் காலத்திலும் கூட இவர் தளரவில்லை. இவர் பட்ட கொடுமைகள் சகிக்க முடியாதவை.

    இருந்தாலும் ஏராளமான புத்த ஆலயங்களை இவர் புதுப்பித்தார். புத்த தர்மத்திற்கு ஒரு புதிய அர்த்தத்தைத் தன் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டி அளித்தார்.

    ஆகவே இந்த இரு புத்த குருமார்களையும் வரலாறு ஒப்பிடுகிறது. இவரை ஹான் – ஷான் திரும்பி வந்து விட்டார் என்று சீன மக்கள் செல்லமாகக் குறிப்பிட்டனர்.

    இருவரின் வாழ்க்கையிலும் ஏராளமான ஒற்றுமை சம்பவங்கள் உண்டு.

    1840 ஆம் ஆண்டு ஸூ யுன் பிறந்தார். ஓபியம் போர் முடிவுக்கு வந்த காலம் அது.1843ஆம் ஆண்டு ஹாங்காங் நகரம் பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மஞ்சு வமிசம் 1911இல் முடிவுக்கு வந்தது. சீனாவின் புதிய தலைவர்கள் புத்த மதத்திற்கு எதிராகவே திரும்பி விட்ட தருணம் ஆரம்பித்தது.

    ஏராளமான புத்த மடாலயங்கள் கம்யூனிஸ கொடுங்கோலர்களால் தரைமட்டமாக்கப்பட்டன. ஏற்கனவே சிதிலமாக இருந்த மடாலயங்கள் வேறு இடிந்து வீழ்ந்தன. பஞ்சம், கொடும் நோய்கள் என சீனாவை துயரம் பிடித்து ஆட்டியது.

    ஆயிரத்தி தொள்ளாயிரத்து முப்பதுகளில் ஜப்பானிய படை வேறு வட சீனாவை ஆக்கிரமித்தது.

    இப்படிப்பட்ட ஒரு மோசமான கால கட்டத்தில் தான் ஸூ யுன் தோன்றினார்.

    ஆனால் அவர் மதிப்போ மிகவும் பெரிது. அவர் தாய்லாந்து விஜயம் செய்த சமயம் அந்த நாட்டின் மன்னரே அவரிடம் தன்னை சீடனாக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார்.

    தான் வாழ்ந்த நீண்ட 120 ஆண்டுகள் முழுவதும் மிகவும் எளிமையாக வாழ்ந்தார் அவர்.

    ஒரு மடாலயத்தைப் புனருத்தாரணம் செய்ய நிச்சயித்து அந்த இடத்திற்கு அவர் சென்றால் கையில் ஒரு கம்புடன் மட்டுமே செல்வார். அந்த கம்பு ஒன்றே அவரது உடைமை.

    அந்த மடாலயம் அல்லது கோவிலின் புனருத்தாரண வேலை முடிந்து விட்டால் அவர் அங்கிருந்து கிளம்பி விடுவார் – கையில் இருந்த ஒரே உடைமையான கம்பை அந்த இடத்தில் போட்டு விட்டு!

    அபூர்வமான அந்த அற்புத புருஷரின் வாழ்க்கை சரிதத்தை இங்கு வழங்குவதில் பெருமிதப்படுகிறோம்.

    2

    பொதுவாக தனது நீண்ட நெடும் வாழ்க்கையில் காலால் நடந்தே

    அனைத்துத் தலங்களுக்கும் சென்றிருக்கிறார் ஸூ யுன் (Xu Yun).

    நதி, கடல் போன்ற நீர் நிலைகளில் மட்டும் படகில் ஏறிப் பயணம் செய்வார்.

    அத்துடன் அவருடைய அதிசயமான ஒரு பழக்கம் ஒவ்வொரு மூன்று

    அடிகளிலும் புத்த மதத்தின் த்ரி ரத்தினங்களுக்கு – மூன்று

    ரத்தினங்களுக்கு – நமஸ்காரம் செய்வார். புத்தமதத்தின் த்ரி ரத்தினங்கள்

    என்று போற்றப்படுபவை புத்தர், தர்மா, சங்கம்!

    இப்படி வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு மூன்று அடிக்கும் த்ரி ரத்தின

    நமஸ்காரம் செய்து சென்றதால் இவரது நடைப்பயணம் சற்று

    மெதுவாகவே நடந்திருக்கும் என்பதை ஊகிக்கலாம்.

    ஏராளமானோர் இப்படி அதிசயிக்கத்தக்க விதத்தில் மூன்று அடிக்கு

    நமஸ்காரம் செய்வதைப் பற்றிக் கேட்டு வியப்பர். அவரைப் பற்றிய

    மரியாதை கூடி பயபக்தியும் அதிகமாகும் – கம்யூனிஸ்ட் கயவர்களைத்

    தவிர!

    தனது வயிற்று உணவுக்கு இவர் பின்பற்றியது பை ஸாங் ஹுய்–ஹாய் (Master Bai zhang Hu-hai) என்பவரது வழியை.

    ஆங்காங்கே உள்ள ஆலயங்கள் மடாலயங்களுக்கு உரிய நிலத்தில்

    விவசாயம் செய்து அதில் கிடைக்கும் பயிரை வைத்து வாழ்க்கையை

    நடத்துவது இவர் பாணி!

    ‘வேலை செய்யாத ஒரு நாள், உணவு அருந்தாத ஒரு நாள்’ என்பது    இவரது கொள்கை. ஆகவே வாழ்நாள் முழுவதும் வேலை செய்து

    கொண்டே இருந்தார்.

    ஸூ யுன் 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி க்வான் ஜோ (Quanzhou) என்ற இடத்தில் பிறந்தார். (1959ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி மறைந்தார்.)

    அவரது தாயார் பிரசவ வேதனையால் துடித்து கடைசியில் ஒரு ‘பையை’

    கருப்பையிலிருந்து வெளியேற்றினார்.

    ஆசை ஆசையாக ஒரு மகன் பிறப்பான் என்று எண்ணியிருந்த அந்தத் தாய் தன் வயிற்றிலிருந்து ஒரு பை வெளியானதைக் கண்டு அதிர்ச்சியுற்றார்.

    இன்னொரு குழந்தை தனக்கு பிறக்கவே முடியாது என்ற மனவிரக்தியில் ஆழ்ந்தார். மயக்கமுற்றார்.

    இந்த மனவேதனையில் உடனடியாக அவர் மரணம் சம்பவித்தது.

    அடுத்த நாள் மருந்துகள் விற்கும் வயதான முதியவர்

    Enjoying the preview?
    Page 1 of 1