Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maayalogam - Part 2
Maayalogam - Part 2
Maayalogam - Part 2
Ebook138 pages54 minutes

Maayalogam - Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

விந்தை மனிதர்கள், விந்தை விஞ்ஞானம், விந்தை ஆராய்ச்சிகள் பற்றிய நூல் இது. பாக்யா ஆசிரியரும் பிரபல டைரக்டருமான திரு கே. பாக்யராஜ் அவர்களின் பாக்யா இதழில் 2009 முதல் 2011 முடிய இந்தத் தொடர் வெளியானது. மூன்று பாகங்களாக இப்போது இது வெளிவருகிறது.

இந்த இரண்டாம் பாகத்தில் வியப்பூட்டும் தற்செயல் ஒற்றுமைகள், அமெரிக்க ரகசியம், டியோடிஹுவாகானின் சந்திர சூரிய பிரமிடுகள்!, மஹாவதாரம் பாபாஜி, அதிசய புருஷர் தலாய்லாமா , மரணப் பள்ளத்தாக்கு, அயல்கிரகவாசி இருக்கிறான், ஆனால் அபாயகரமானவன் : விஞ்ஞானியின் எச்சரிக்கை, அதிசய ரொபாட்டும் பறக்கும் சப்மரீனும், சந்திரனை அடைய விண்வெளி தூக்கி, நிரந்தரமாக உயிர் வாழ பழைய மூளை, புதிய உடல், அதிசய ரொபாட்டும் பறக்கும் சப்மரீனும் உ:ள்ளிட்ட பிரமிப்பூட்டும் விஷயங்கள் இடம் பெறுகின்றன. புலன் கடந்த விஷயங்களைப் பற்றிக் கூறும் சுவையான இந்த நூல் அனைவரும் படிக்க ஏற்ற நூலாகும்.

Languageதமிழ்
Release dateApr 16, 2024
ISBN6580151011035
Maayalogam - Part 2

Read more from S. Nagarajan

Related to Maayalogam - Part 2

Related ebooks

Reviews for Maayalogam - Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maayalogam - Part 2 - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மாயாலோகம் - பாகம் 2

    (விந்தை மனிதர்கள், விந்தை விஞ்ஞானம், விந்தை ஆராய்ச்சிகள் பற்றிய நூல்!)

    Maayalogam - Part 2

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    பொருளடக்கம்

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    1. வியப்பூட்டும் தற்செயல் ஒற்றுமைகள்! - 1

    2. வியப்பூட்டும் தற்செயல் ஒற்றுமைகள்! – 2

    3. வியப்பூட்டும் தற்செயல் ஒற்றுமைகள்! - 3

    4. வியப்பூட்டும் தற்செயல் ஒற்றுமைகள்! - 4

    5. பாதாள நகரம் டெரின்குயு!

    6. டியோடிஹுவாகானின் சந்திர சூரிய பிரமிடுகள்!

    7. 2012ல் உலகப் பேரழிவு ஏற்படும்! எச்சரிக்கை தருகிறது பழைய நாகரிகம்!! - 1

    8. 2012ல் உலகப் பேரழிவு ஏற்படும்! எச்சரிக்கை தருகிறது பழைய நாகரிகம்!! - 2

    9. அமெரிக்க ரகசியம்! - 1

    10. அமெரிக்க ரகசியம்! - 2

    11. அமெரிக்க ரகசியம்! - 3

    12. செவ்வாயில் மனிதன்! ஒபாமாவின் கனவு!

    13. விஞ்ஞானியின் எச்சரிக்கை: அயல்கிரகவாசி இருக்கிறான்! ஆனால் அபாயகரமானவன்!

    14. மஹாவதாரம் பாபாஜி – 1

    15. மஹாவதாரம் பாபாஜி - 2

    16. மஹாவதாரம் பாபாஜி - 3

    17. மஹாவதாரம் பாபாஜி (குகை மர்மங்கள்)- 4

    18. அதிசய புருஷர் தலாய்லாமா – 1

    19. அதிசய புருஷர் தலாய்லாமா - 2

    20. மரணப் பள்ளத்தாக்கு - 1

    21. மரணப் பள்ளத்தாக்கு – 2

    22. அதிசய ரொபாட்டும் பறக்கும் சப்மரீனும் - 1

    23. அதிசய ரொபாட்டும் பறக்கும் சப்மரீனும் – 2

    24. சந்திரனை அடைய விண்வெளி தூக்கி!

    25. நிரந்தரமாக உயிர் வாழ பழைய மூளை; புதிய உடல்!

    26. அமேஸானை 4200 மைல் நடந்தே கடந்தவர்!

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    மாயாலோகம் என்ற பெயரைச் சூட்டி இப்படி ஒரு தொடரை எழுதப் பணித்தவர் அன்பிற்குரிய பாக்யா ஆசிரியரும் பிரபல டைரக்டருமான திரு கே. பாக்யராஜ் அவர்கள்.

    11-9-2009 பாக்யா இதழில் தொடங்கி 25-2-2011 முடிய இந்தத் தொடர் வெளியானது. தொடர்ந்து 4-3-2011 இதழிலிருந்து மிக நீண்ட தொடரான எனது அறிவியல் துளிகள் தொடர் ஆரம்பமானது.

    காஸினி பயணத்தில் ஆரம்பித்து செவ்வாய் பயணத்தில் முடியும் இந்தத் தொடரில் மாயா லோகத்தில் நாம் காணும் பல ஆச்சரியகரமான, அபூர்வமான, பிரமிப்பூட்டும் விஷயங்கள் இடம் பெறுகின்றன.

    இந்த இரண்டாம் பாகத்தில் வியப்பூட்டும் தற்செயல் ஒற்றுமைகள், அமெரிக்க ரகசியம், மஹாவதாரம் பாபாஜி, அதிசய புருஷர் தலாய்லாமா – 1, மரணப் பள்ளத்தாக்கு, அதிசய ரொபாட்டும் பறக்கும் சப்மரீனும், சந்திரனை அடைய விண்வெளி தூக்கி, நிரந்தரமாக உயிர் வாழ பழைய மூளை, புதிய உடல், அதிசய ரொபாட்டும் பறக்கும் சப்மரீனும் உ:ள்ளிட்ட பிரமிப்பூட்டும் விஷயங்கள் இடம் பெறுகின்றன.

    12-3-2010 முதல் 3-9-2010 முடிய பாக்யா இதழில் வெளிவந்த கட்டுரைகள் இவை.

    இவற்றையெல்லாம் வெளியிட்ட திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தொடர் வெளிவரும் போது வாரந்தோறும் இதைப் பாராட்டி ஊக்கமூட்டிய வாசகப் பெருமக்களுக்கு எனது நன்றி.

    இதை முதல் பதிப்பில் மூன்று பாகங்களாக லண்டன் திருமதி நிர்மலா ராஜு அவர்கள் நிலா பப்ளிஷர்ஸ் சார்பாக டிஜிடல் பதிப்பாக வெளியிட்டார். அவருக்கு எனது உளமார்ந்த நன்றி உரித்தாகுக.

    பலரின் வேண்டுகோளுக்கிணங்க டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் மாயாலோகம் மூன்று பாகங்களையும் மறு பதிப்பாகக் கொண்டு வர முன் வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாக்யா இதழில் வெளி வந்த அதே தொடர் வரிசையில் இந்த அத்தியாயங்கள் இந்த மறுபதிப்பில் மூன்று பாகங்களாக வெளியிடப்படுகிறது என்பதை வாசகப் பெருமக்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

    தக்க ஆதரவை எனகுத் தொடர்ந்து நல்கி வரும் அனைவருக்கும் எனது நன்றியை மீண்டும் இங்கு பதிவு செய்கிறேன்.

    பங்களூரு

    ச. நாகராஜன்

    6-4-2024

    1. வியப்பூட்டும் தற்செயல் ஒற்றுமைகள்! - 1

    நெருங்கிய நண்பர் ஒருவரை நினைத்து அவர் ஏன் வெகு காலம் நம்முடன் பேசவில்லை என்று நாம் நினைக்கும் போதே போன் மணி அடிக்கும். அட, என்ன ஆச்சரியம், போனை எடுத்தவுடன் அந்த நண்பரே போனில் பேச ஆரம்பிப்பார்!

    பத்தாயிரத்திஐநூறு ரூபாய்க்கு திடீரென்று ஒரு அவசர செலவு வந்து விட்டது. யாரையும் கடன் கேட்க முடியாது. என்ன செய்வதென்று திகைத்து உட்கார்ந்திருக்கும் போது தபால்காரர் தபாலைக் கொடுக்கக் கூப்பிடுகிறார். மனமில்லாமல் எழுந்து சென்று தபாலை வாங்கிப் பிரிக்கிறோம்,. அட, என்ன இது! யானை வாய்க்குள் போன கரும்பு போல என்று நாமே கை கழுவி விட்ட இன்கம்டாக்ஸ் ரிடர்ன் பணம் ரீ-·பண்ட் ஆகி திரும்பி வந்திருக்கிறது. நமக்கு வர வேண்டிய அந்தப் பணத்தின் தொகையை செக்கில் பார்க்கிறோம். சரியாக பத்தாயிரத்து ஐநூறு ரூபாய்! சொல்லமுடியாத ஆச்சரியத்தில் பேச முடியாமல் திகைக்கிறோம்; வியக்கிறோம்.

    அன்றாட வாழ்வில் நம் அனைவருக்கும் இது போல சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. இவற்றைத் தற்செயல் ஒற்றுமைகள் எனப்படும் கோஇன்ஸிடென்ஸ் என்று சொல்லி விட்டு அப்படியே விட முடியுமா? அல்லது இது போன்ற விஷயங்களுள் மேம்போக்காக விட்டுவிடாதபடி ஏதேனும் ஆழ்ந்த உட்பொருள் இருக்கிறதா? இவை மனித மனத்தின் முக்கியமான ஒரு பரிமாணத்தைக் காண்பிக்கிறதா அல்லது தெய்வீக ரகசியத்தின் ஒரு எல்லையைத் தொட்டு விட்ட செய்தியைச் சுட்டிக் காட்டுகிறதா?

    பல விஞ்ஞானிகள் இந்த தற்செயல் ஒற்றுமையைத் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். பிரபல விஞ்ஞானி கார்ல் ஜங் இதை சிங்க்ரானிசிடி என்ற பெயரில் தீவிரமாக ஆராய்ந்தார். அதீத உளவியலின் தந்தை எனக் கூறப்படும் ஆர்தர் கோஸ்லர் ‘தி ரூட் ஆஃப் கோஇன்சிடென்ஸ்’ என்ற புத்தகத்தையே எழுதி நம்மை வியக்க வைக்கிறார்.

    உலகெங்கும் இந்த தற்செயல் ஒற்றுமை ஆராய்ச்சி தீவிரமடையவே விஞ்ஞானிகள், கணித இயல் நிபுணர்கள், புள்ளி விவர நிபுணர்கள் ஆகியோர் தம் தம் நோக்கில் இதை ஆராய்ந்து தங்கள் முடிவுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

    முதலில் சில அதிசய தற்செயல் ஒற்றுமைகளைப் பார்ப்போம்.

    1955ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜேம்ஸ் டீன் என்பவர் அவருடைய ஸ்போர்ட்ஸ் காரை ஓட்டிச் செல்கையில் விபத்தில் சிக்கிக் கொல்லப்பட்டார்.இந்த விபத்திலிருந்து அந்தக் கார், ‘அதிர்ஷ்டமில்லாத கார்’ ஆகிவிட்டது! முதலில், விபத்து நடந்த இடத்திலிருந்து காரை ‘டோ’ செய்து இன்னொரு கார் மூலம் எடுத்துச் செல்கையில் காரின் எஞ்சின் கழன்று விழுந்து ஒரு மெக்கானிக்கின் கால்களில் விழவே அவரது இரண்டு கால்களும் முறிந்தன! அடுத்து அந்தக் காரின் எஞ்சினை வாங்கி தனது ரேஸ் காரில் மாட்டிய ஒரு டாக்டர் ரேஸில் காரை ஓட்டும் போது விபத்தில் மாண்டார். அதே ரேஸில் ஜேம்ஸ் டீனின் காரில் இருந்து அகற்றப்பட்ட ட்ரைவ் ஷாப்டை தன் காரில் மாட்டிக் கொண்டு ஓட்டிய இன்னொரு டிரைவரும் அதே ரேஸில் மாண்டார். அடுத்து ஜேம்ஸ் டீனின் கார் பழுதுபார்க்கப்பட்ட கார் ஷெட் தீப்பிடித்து தீவிபத்தில் முற்றிலுமாக அழிந்தது. பின்னர் அந்த கார் பழுதுபார்க்கப்பட்டு சாக்ரமெண்டோ நகரில் காட்சிக்காக வைக்கப்பட்ட போது அது வைக்கப்பட்டிருந்த காட்சி மேடையிலிருந்து கீழே விழுந்து ஒரு பையனின் இடுப்பை ஒடித்தது! அடுத்து அந்தக் காரை ஒரு ட்ரெயிலரில் மாட்டி ஆரேகான் நகருக்குக் கொண்டு செல்லும் போது அது டோ-பாரிலிருந்து நழுவி தறிகெட்டு ஓடி ஒரு கடைக்குள் நுழைந்து கடையை நாசம் செய்தது! கடைசியாக 1959ம் ஆண்டு இரும்பு ப்ரேம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த அது திடீரென்று விசித்திரமான விதத்தில் 11 துண்டுகளாக

    Enjoying the preview?
    Page 1 of 1