Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pandiyan Magal
Pandiyan Magal
Pandiyan Magal
Ebook589 pages3 hours

Pandiyan Magal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'உண்மைபோல பொய்யைச் சொல்லத் தெரியாதவர்கள் எவர் வேண்டுமானாலும் சரித்திரக்கதை எழுதிவிடலாம்.' ஆலண்ட் லீத் என்பவர் இலியட் காவியத்தை எழுதிய, ஹோமரிடம் சொன்னபோது, ஹோமர் ஆலண்ட லீத்தைப் பார்த்து இப்படிச் சொன்னார் : "உண்மைபோல பொய்யை எழுதுபவர்கள் சரித்திரக் கதை எழுதி விடலாம் என்பது உண்மைதான். ஆனால், உண்மைபோல எழுது வதற்குத் தெரிவு செய்யும் பொய்யைத் தேர்ந்தெடுப்பதில்தான் திறமையின் ஜாலம் இருக்கிறது" என்று.

'சோழ நாடு சோறுடைத்து' என்பது முதுமொழி. விஷ்வக் ஸேனனோ, 'சோழ நாடு வீரமுடைத்து' என்று தம் கருத்தை நிலைநாட்டிட முயல்கிறார். இந்தப் 'பாண்டியன் மகள்' நாவலில். என்ன இது அழகான முரண். படைப்போ 'பாண்டியன் மகள்'. நிலை நாட்டல் நோக்கமோ சோழர்களின் ஆக்ருதி.

விஷ்வக்ஸேனன், தனது அறிமுக உரையில், 'இது தன்னுடைய முதல் சரித்திரக் கதை முயற்சி' என்கிறார். ஆனால், பல படைப்பு களை நெய்த ஆழ்ந்த அனுபவ சாறின் சுவையாக இனிக்கிறது விஷ்வக்ஸேனனின் 'பாண்டியன் மகள்' வரலாற்றுப் புதினம்!

Languageதமிழ்
Release dateApr 16, 2024
ISBN6580178110988
Pandiyan Magal

Related to Pandiyan Magal

Related ebooks

Related categories

Reviews for Pandiyan Magal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pandiyan Magal - Vishwak Senan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பாண்டியன் மகள்

    Pandiyan Magal

    Author:

    விஷ்வக்ஸேனன்

    Vishwak Senan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vishwak-senan

    பொருளடக்கம்

    முன்னுரை

    01. ஆலயத்தில் அம்மங்கை

    02. எதிர்பாராமல் வந்தவன்

    03. திருநாராயண பட்டரின் சீடன்

    04. மேலைமங்கலத்துப் போர்

    05. வைகுந்தன் தந்த வரம்

    6. மலைச்சரிவில் ஒரு மாளிகை

    07. பாண்டியன் மகள்

    08. உபதலைவன் திட்டம்

    09. மலைப்பாதை, மரண விளிம்பு

    10. சமுத்திர பந்தன்

    11. நாகலோகத்துப் பைங்கிளி

    12. அழைப்பில் ஓர் ஆபத்து!

    13. நெருப்பில் விளைந்த பயிர்

    14. மார்க்கீயன்

    15. கள்ளழகர் பிரசாதம்

    16. சன்னதியில் உருவிய வாள்

    17. விரும்பி விழுந்த வலை

    18. ஏமாற்றத்தில் ஓர் இன்பச் சுமை!

    19. வாளின் மீது ஆணை!

    20. சவ்ய சாசி

    21. நதிக்கரையில் புலிக்கொடி

    22. யானை மேல் துஞ்சிய தேவர்

    23. சிறையில் ஒரு சதி!

    24. விக்கிரமன் விரித்த வலை

    25. கொலைக் கரங்கள்

    26. துறவிக்கு அரண்மனை துரும்பு!

    27. வல்லவனுக்கு வல்லவன்

    28. வாசி வாரியன்

    29. மன்னன் மறுப்பும் மங்கையின் சிரிப்பும்

    30. குயவன் கை மண்

    31. எதிர்பாராத தாக்குதல்

    32. அமைச்சர் ஓலை;அரையன் பயணம்!

    33. நிலவில் பறந்த செண்டு!

    34. நினைத்தது ஒன்று...

    35. பாண்டியர் ஆலோசனை

    36. இரவில் விழுந்த கொலை, இளவல் விரித்த வலை!

    37. மங்கை கேட்ட உதவி; மரத்தில் பாய்ந்த அம்பு

    38. மித்ர பேதம்

    39. பார்த்தனுக்கு சாரதி

    40. பாண்டிய அமைச்சர்,பழகிய சிறை

    41. தனஞ்செயன் தூது

    42. முதல் நாள் யுத்தம்

    43. சர்ப்பங்கள் மூன்று

    44. சேரன் தளம், சோழன் களம்

    45. மலைப்பாதையில் மாறவர்மன்

    46. பட்டரின் ஏமாற்றம்

    47. பட்டணப் பிரவேசம்

    48. ஸ்ரீவல்லபர் நம்பிக்கை

    49. சித்திரைத் தேர்

    50. குலோத்துங்கனின் கனவு

    51. வரதன் அளித்த வரம்

    52. அவன் சித்தம்

    முன்னுரை

    பொன் விழாவிற்கென சரித்திர நாவல்களை வரவேற்று ‘கல்கி’ விடுத்திருந்த அழைப்பு எனக்குள் உறங்கிக்கிடந்த ஆர்வத்தைத் தூண்டிவிட்டதாலும், ஆயிரக்கணக்கான நூல்களை சேகரித்து வைத்திருப்பவரும், கணித மேதை இராமானுஜத்தின் சகோதரர் மகனுமான திரு.விஜயராகவன் அவர்கள் கொடுத்து உதவிய நூல்களினாலும், எல்லாவற்றுக்கும் மேலாக திருவஹீந்திரபுரத்து தேவநாதப் பெருமாள் நான் எழுத வேண்டுமென்று திருவுள்ளம் கொண்டதாலும், அமரர் கல்கியையும், திரு. சாண்டில்யன் அவர்களையும் மானசீக ஆசான்களாகக் கொண்டு என் முதல் நாவலான ‘பாண்டியன் மகளை’ நான் எழுத முடிந்தது. அதை அன்புடன் தேர்ந்தெடுத்து பரிசுக் குரியதாக அறிவித்த திரு.விக்கிரமன் அவர்களுக்கும், திரு.மு.மேத்தா அவர்களுக்கும் என் நன்றி என்றும் உரியது. அதைத் தொடராக ‘கல்கி’யில் வெளியிட்டு லட்சக்கணக்கான வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய கல்கி ஆசிரியர் அவர்களுக்கும், பாத்திரங்களுக்கு அப்படியே உயிர்கொடுத்துவிட்ட ஓவியர் திரு.லதா அவர்களுக்கும் வெறும் நன்றி என்ற சொல்லோ வேறு வார்த்தைகளோ போதவே போதாது.

    ஆதாரங்களாகப் பயன்பட்ட நூல்கள்

    1 திரு.டி.வி.சதாசிவ பண்டாரத்தாரின் ‘முதற் குலோத்துங்கச் சோழன்’.

    2 திரு.கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியாரின் ‘சோழர்கள்’.

    3 கலிங்கத்துப்பரணி

    4 தென்னிந்தியக் கல்வெட்டுகள் - தொகுதி-5.

    5 குலோத்துங்கச் சோழன் மெய்கீர்த்திகள் - திருவைகாவூர்க் கல்வெட்டு.

    6 சோழ வமிச சரித்திரம்.

    7 விக்கிரமச் சோழன் உலா.

    - விஷ்வக்ஸேனன்

    01. ஆலயத்தில் அம்மங்கை

    தீபங்கள் அனைத்தும் வரிசையாக மாடங்களில் ஏற்றப்பட்டிருந்ததாலும், பெரும் தண்டுகளில் செருகப்பட்டு பந்தங்கள் பிரகாசமாக எரிந்ததாலும், அந்த முன்னிரவு நேரத்தில் திருவகீந்திரபுரத்து தேவநாதப் பெருமாள் ஆலயம் ஜாஜ்வல்யமாக ஜொலித்துக் கொண்டிருந்தது. அந்த ஆலயத்தின் ஒளி, நிலவையும் விஞ்சி பிரகாசித்ததாலும் அதன் பொருட்டு விண்மீன்கள் பரிகசித்ததாலும் வெட்கிய விண்மதி மேகப் போர்வையை இழுத்து தன்னைப் போர்த்திக் கொள்ள முயன்று முயன்று தோற்றுக் கொண்டிருந்தது.

    பராந்தக சோழன் காலத்திற்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன் பல்லவர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அந்த ஆலயம் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேல் காலத்தை ஜீரணித்துவிட்டு எவ்வித அழகும் மெருகும் குலையாமல் இருந்ததற்குக் காரணம் இருக்கவே செய்தது. சமய வேறுபாடு இன்றி ராஜராஜ சோழனும், கங்கைகொண்ட ராஜேந்திரனும் ஆலயங்களின் மீதுகாட்டிய அக்கறை காரணமாகவும், அவர்களுக்கு எந்தவகையிலும் குறையாத அளவில் குலோத்துங்கனும் தான் பட்டமேற்ற பின்பு பெரும் அக்கறையுடன் ஆலயங்களைப் பராமரித்து வந்ததாலும் இந்த திருவகீந்திரபுரம் ஆலயமும் மெருகு குலையாமலிருந்தது. போதாக்குறைக்கு ஆலய அதிகாரியும், தலைமைப் பட்டரும் கேட்டுக் கொண்ட போதெல்லாம் அந்த ஆலயத்திற்கு விஜயம் செய்யும் சோழ இளவரசி அம்மங்கை தேவி, தேவநாதப் பெருமாள் மீதிருந்த பேரன்பு காரணமாக மானியங்களை அள்ளி அள்ளி வழங்கியதாலும், அந்த ஆலயம் எவ்விதக் குறைவுமின்றி பெரும் பொலிவுடனே விளங்கியது.

    ஆலயத்தின் பின்புறம் செம்மையாகப் பராமரிக்கப்பட்டு பசுமையான செடி கொடிகளுடனும், வண்ண மலர்களுடனும் நிறைந்து கிடந்த நந்தவனம், தன் சுகந்தம் அனைத்தையும் திறந்து கிடந்த திட்டி வாசல் வழியாகப் பலமாக அனுப்பி வைத்துக் கொண்டிருந்ததால் ஆலயம் முழுவதும் அந்த நறுமணம் பரவிக் கிடந்தது. மலர்களின் அந்த நறுமணத்துடன் இசைந்து ஆலயத்தினுள் ஒலித்துக் கொண்டிருந்த ஆழ்வார்களின் பாசுரங்களும் வேத பாராயணங்களும் தெய்வீக மணத்தையும் அங்கு பரப்பின.

    மதிலை அடுத்து வரிசையாக நின்று கொண்டிருந்த வீரர்களும், சற்று நேரத்திற்கொருமுறை வாயிலுக்கு வந்து வந்து திரும்பிக் கொண்டிருந்த ஆலய அதிகாரியும் ஆலயத்தின் எதிரில் நீண்டிருந்த வீதியை உற்று உற்று நோக்கியதைப் பார்த்தால், அவர்கள் யாரோ ஒரு முக்கியமான பிரமுகருக்காகக் காத்திருப்பதாகப்பட்டது. விழாக்கள் ஏதுமற்ற சாதாரண நாளாதலால் குறைவாகவே வந்து சென்று கொண்டிருந்த மக்கள், வாயிலில் நின்ற காவலரை அதிகம் கவனித்ததாகத் தெரியவில்லை. அடிக்கடி பாதுகாவலுக்கென வீரர்கள் நிற்பதும் அவர்களுக்குப் பழகிப் போயிருந்தன.

    ஆனால் அன்று வருபவருக்காக, மதிற்சுவரை ஒட்டி சற்றுத் தள்ளி மூடப்பட்டு நின்ற ஆலயத் தேரின் மறைவில் மற்றொருவனும் காத்திருந்தான். உடலை மறைத்துப் போர்த்தியிருந்த போர்வையும் தலையில் சுற்றியிருந்த பெரும் தலைப்பாகையும் இன்னாரென்று தெரியாமல் மறைத்திருக்க, வீசிய காற்றில் அந்தப் போர்வை லேசாக விலகியபோது அவன் இடையில் தெரிந்த உடைவாளையோ, அடுத்திருந்த குறுவாளையோ எவரும் கவனித்ததாகத் தெரியவில்லை. தேரின் மறைவிலேயே நீண்ட நேரமாக மறைந்து நின்றிருந்த அவன், எதிரில் நீண்டு கிடந்த வீதியையும், வாயிலில் நின்றிருந்த காவலரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான். கழுகின் கண்களைவிடக் கூர்மையான அவன் கண்கள் ஆலய வாயிலில் வந்து நிலைகொள்ளாது தவித்துக் கொண்டிருந்த ஆலய அதிகாரியையும் கவனித்தன.

    ஆலய அதிகாரியின் கரங்களில் ஓலையொன்று சிக்கி அவதிப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த ஓலையை அவர் எடுப்பதும், படிப்பதும், மீண்டும் கச்சையில் செருகுவதுமாக இருந்தார். அவருக்கு இத்தகைய ஓலைகள் அடிக்கடி வருவது வழக்கம்தானென்றாலும் இந்த ஓலையிலிருந்த செய்தி சற்று அசாதாரணமாயிருந்ததால் அவரது முதிர்ந்த முகம் வியர்த்து விறுவிறுத்து அவர் பெரும் அவஸ்தையிலிருப்பதைக்காட்டியது.

    கரத்திலிருந்த ஓலையை மீண்டும் படித்தார் அவர். சோழ அரண்மனையின் அந்த முத்திரை ஓலை பேரமைச்சர் நம்பிப் பல்லவராயரிடமிருந்து வந்திருந்தது.

    ஆலய அதிகாரிக்கு, திருவகீந்திரபுரத்திலும் அதைச் சுற்றி உள்ள கிராமங்களிலும் பாண்டியர் நடமாட்டம் அதிகரித்திருப்ப தாகத் தகவல் கிடைத்திருக்கிறது. தேவநாதப் பெருமாளைக் காண இன்று மாலையில் வரும் சோழ இளவரசிக்குத் தக்க பாதுகாப்பை அளிக்கவும். அவசியமானால் காவற்படைத் தலைவரைக் கலந்து பேசி தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ளவும் - நம்பிப் பல்லவராயன்.

    என்று முடிந்த அந்த ஓலை, அதிகாரியை நிலைகொள்ளாமல் தவிக்க வைத்திருந்தது. அன்றைக்குப் பார்த்து அருகிலிருந்த ஊர் ஒன்றுக்கு உறவினரைக் காணச் சென்றிருந்த அதிகாரி, தாமதமாகத்தான் ஆலயத்திற்கு வந்திருந்தார். எனவே அந்த ஓலையிலிருந்த செய்தியையொட்டி அவர் எந்த நடவடிக்கையும் எடுக்க அவகாசமின்றிப் போய்விட்டது.

    சற்று நேரத்தில் வீதியின் மறுமுனையில் அழகிய ரதமொன்று வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அதன் உச்சியில் பறந்த புலிக்கொடியையும் உடன் வேல்களைத் தாங்கி வந்த பத்துப் பதினைந்து வீரர்களையும் கண்ட கோயில் அதிகாரி முதலில் சற்று கவலை அடைந்தாலும் ஆலயத்தில் வழக்கம் போல் நின்றிருந்த வீரர்களும் வந்து கொண்டிருக்கும் வீரர்களுமாகச் சேர்ந்து வீரர்களின் எண்ணிக்கை ஓரளவு அதிகரித்துவிடுவதை எண்ணி சற்று ஆறுதலடைந்தார். ரதம் வந்து நின்றதும், எங்கிருந்தோ ஓடி வந்து சேர்ந்து கொண்ட தலைமைப் பட்டருடன் ரதத்தை நெருங்கினார் அதிகாரி. வரவேற்கத்தான் சென்றார் என்றாலும் இளவரசியைக் கண்ட உவகையாலும் உண்மையிலேயே அவள் மீது கொண்டிருந்த பாசத்தாலும் உணர்ச்சிக் குவியலாகவே தெரிந்தார்.

    இளவரசி ரதத்திலிருந்து இறங்குவதைக் கண்டு உணர்ச்சி வசப்பட்ட இன்னொரு மனிதனும் ஆலயத் தேரின் அருகே சற்றுத் தொலைவில் நின்றிருந்தான். அவன் விழிகளில் விவரிக்க இயலாத உணர்ச்சிகள் தோன்றி மறைந்தன. அப்படியே பின்னுக்கு மெல்ல நகர்ந்தவன், மதிலின் நிழலடித்த பகுதியிலேயே சென்று பின்புற இருளில் மறைந்தான்.

    தேரிலிருந்து இறங்கி நின்ற சோழ இளவரசி, தனது கரங்களை அதிகாரியையும், பட்டரையும், சுற்றி நின்ற மக்களையும் நோக்கிக் குவித்தாள். படைப்புத் தொழிலில் நீண்ட காலமாக ஈடுபட்டிருந்த பிரம்மன், தான் இதுவரை எத்தனையோ அழகிகளைப் படைத்திருந்தாலும் அந்த அனுபவ அறிவையெல்லாம் திரட்டி அந்த அழகிகள் அனைவரையும் விஞ்சும் விதமாக ஓர் எழிலரசியைப் படைக்க எண்ணியிருந்தால் அந்தப் பேரழகி அம்மங்கைத்தேவியாகத்தான் இருக்க முடியும்! ஆலய அதிகாரியும் தலைமைப் பட்டரும் அப்படித்தான் தீர்மானித்தனர்.

    குவிந்து நின்ற அவளது கரங்களைத் தாமரை மொட்டு என்றே நினைத்தார் ஆலய அதிகாரி. இருளைப் பழித்த அவள் கரிய கூந்தலிலிருந்து பிரிந்த இழைக்கொத்துக்கள் சில, சற்று முன்புறமாக வந்து தன்னை விடக் கருமையான அவள் விழிகளைக் கண்டு வெட்கியதாலோ என்னவோ சுருண்டு கொண்டிருந்தன. ஈரம் படர்ந்ததால் சிவந்து பளபளத்த அவள் இதழ்கள் சற்றே பிரிந்தபோது தெரிந்த பல் வரிசையுடன் மூக்கின் நுனியில் தொங்கிய நல்முத்தொன்று போட்டியிட முடியாமல் ஒளி மங்கிக் காணப்பட்டது.

    அவள் உடுத்தியிருந்த பட்டைவிட மென்மையான நூல் சேலையில் குறுக்கும் நெடுக்குமாக ஓடிய கோடுகள் அவள் மேனியின் வளைவு நெளிவுகளைப் பாங்காக எடுத்துக்காட்டவே அமைந்தது போல் தோன்றின. செவிகளில் ஜொலித்த ரத்தினங்களும், வெண் சங்கு போன்ற கழுத்தில் புரண்ட பெரும் முத்துக்களும் ஒரு அரசையே விலைக்கு வாங்கப் போது மானவையாக இருந்தன. வங்கியும், கனத்த பொன் வளையல்களும் அணிந்திருந்த அவளது கரங்கள் சேர நாட்டின் யானைத் தந்தங்களைக் கொண்டு கை தேர்ந்த சிற்பி செதுக்கியது போல வடிவமைப்புப் பெற்றிருந்தாலும் அதிலே மென்மையையும் பார்வையாலேயே உணர முடிந்தது. செம்பஞ்சுக் குழம்பு பூசப்பட்ட அவள் பாதங்களில் ஜல் ஜல் என்று ஒலித்த சலங்கைகள், இவள் சோழ நாட்டின் இளவரசி; யாரும் நெருங்க ர்ற்பட வேண்டாம் என்று எச்சரித்துக் கொண்டிருந்தன.

    அதிராஜேந்திர சோழன் இறந்த பின், சோழ அரசுரிமையில் ஏற்பட்ட குழப்பமான நிலையில், அந்தக் குழப்பங்களைத் தீர்க்கவும் உள்நாட்டுப் பூசல்களையும் சிக்கல்களையும் அடியோடு ஒழிக்கவும்,

    புகழ்மாது விளங்கச் செயமாது விரும்ப நிலைமகணிலவ மலர்மகள் புணர உரிமையிற் சிறந்த மணிமுடி சூடி

    என்ற மெய்கீர்த்திகள் பாடும்படி சோழ அரியணையில் ஏறியவன் கங்கைகொண்ட சோழனின் மகள் வயிற்றுப் பேரன்.

    குலோத்துங்கன் என்ற பட்டப் பெயருடன் ஆட்சிக்கு வந்த இவன், வெகு விரைவில் அரசையும் தன்னையும் நிலைப்படுத்திக் கொண்டதோடு, தான் பட்டமேற்கு முன்னரே தொடங்கிவிட்டிருந்த போரில் சாளுக்கியர் படையை முறியடிப்பதில் தனது ஆட்சியின் முற்பகுதியைச் செலவிட்டுக் கொண்டிருந்தான்.

    "நிழலிலடைந்த திசைகள்,

    நெறியிலடைந்தன மறைகள்

    கழலிலடைந்தனர் உதியர்,

    கடலிலடைந்தனர் செழியர்"

    எனக் கலிங்கத்துப் பரணி பின்னாளில் இவன் வீரத்தை இசைக்கவிருந்தது.

    குலோத்துங்கன் வடக்கே சென்று போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும், எந்த அரசியல் சிக்கலையும் பக்குவமாகத் தீர்ப்பவர் என்று பெயரெடுத்த சோழப் பேரமைச்சர் நம்பிப் பல்லவராயரும், தந்தையைப் போலவே பெருவீரனென்று இளமையிலேயே பெயர் பெற்றுவிட்ட சோழ இளவல் விக்கிரமச் சோழனும், குலோத்துங்கன் சோழ நாட்டில் இல்லாத குறையே தெரியாதபடி செய்திருந்தனர்.

    ஆனால் அமைச்சர் நம்பிப் பல்லவராயரின் திடசித்தம் கூட சமீப காலமாகச் சற்றுக் கவலை கொண்டிருந்தது. மதுரைப் பாண்டியன், ஜடாவர்ம பாண்டியனைக் கலகம் செய்து கொன்று விட்ட அவன் தாயாதிகள், அதிராஜேந்திரன் காலத்திலிருந்தே பாண்டிய நாட்டை ஐந்து பகுதிகளாகப் பிரித்து தனித்தனியே ஆண்டு கொண்டிருந்தனர். தற்போது குலோத்துங்கன் வடநாட்டுப் போரிலேயே காலம் கழித்து வருவதைத் தக்க தருணமென எண்ணி இழந்த மதுரையை மீட்கவும், சோழ நாட்டைத் தாக்கவும் அவர்கள் திட்டமிடுவதாக வந்த செய்திகள் அமைச்சரது கவலைக்குக் காரணமாயிருந்தன. அதிலும் அந்த கோட்டாற்றுப் பாண்டியன் மாறவர்மனுக்கு அம்மங்கையைப் பெண் கேட்டும், அவன் மதுரை அரியணையிலிருந்து ஆளவும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் அவன் மாமனும், பாண்டியருள் மூத்தவனுமான மார்த்தாண்டவர்மன் அனுப்பி யிருந்த ஓலையைக் கண்டது முதல் அமைச்சரின் சிந்தை அதிகக் கவலை கொள்ள ஆரம்பித்திருந்தது.

    மன்னனும் படைகளின் பெரும் பகுதியும் நாட்டில் இல்லாத அந்தச் சமயத்தைப் பயன்படுத்திக் கொள்ளப் பாண்டியர் ஐவரும் சதி செய்வதாகவும், அதற்கு உதவப் பொன்னமராவதித் தலைவனும் முற்பட்டிருப்பதாகவும் ஒற்றர் படைத்தலைவன் ஜெயந்தன் செய்தியனுப்பியிருந்தான். ஜெயந்தன், அதுவரை திரும்பாதது அவர் மனத்தை உறுத்திக் கொண்டிருந்தது. பாண்டியர், சேரலாதனுடைய உதவியையும் நாடியிருப்பதாக வேறு ஜெயந்தன் தெரிவித்திருந்தான்.

    இத்தனை கவலைகளையும் சுமந்து கொண்டிருந்த அமைச்சர், அன்று காலையில் பாண்டியரைப் பற்றி எச்சரிக்கவும், காவற் படைகளைத் திரட்ட தான் ஏற்கெனவே கருவூருக்கு அனுப்பி வைத்திருந்த இளவல் விக்கிரமனைப் பற்றி விசாரிக்கவும் எண்ணியவராக மகாராணி புவனமகாதேவியைக் காண அரண்மனையின் அந்தப்புரம் நோக்கி நடந்தார்.

    கங்கைகொண்ட சோழபுரத்தின் அந்தப் பெரும் அரண்மனை அவர் நடக்க நடக்க நீண்டு கொண்டேயிருந்தது. பெரும் கூடங்களையும், கட்டுக்களையும் தாண்டி நடந்தவர் வழியில் தென்பட்ட பணிப்பெண்களில் சிலர் புதிதாகத் தென்படுவதைக் கவனித்து, இதுபற்றிப் பிறகு அரண்மனைத் தானிகரை விசாரிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.

    அவரை எதிர்கொண்ட மகாராணி புவனமகாதேவி அவரை இருக்கையில் அமரச் செய்து அவர் கூறிய விவரங்களுக்குப் பொறுமையுடன் செவிமடுத்தாள். அடிக்கடி அயலூர் ஆலயங்களுக்குச் சென்று வரும் இளவரசியையும் எச்சரிக்கையுடனிருக்கச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார் அமைச்சர்.

    அவர் வேண்டுகோளைக் கேட்டபடியே அறைக்குள் நுழைந்த அம்மங்கை, முத்துக்களை வெள்ளித் தட்டில் கொட்டுவது போலச் சிரித்தாள்.

    அவளைக் கண்டதும் அமைச்சரின் முதிர்ந்த முகம் மேலும் கனிந்தது. குழந்தைகளே இல்லாத அமைச்சர், அம்மங்கையைத் தமது சொந்தப் பேத்தி போலவே பாவித்தார்.

    போங்கள் தாத்தா, அண்ணன் விக்கிரமன் பெயரைக் கேட்டாலே காத தூரம் ஓடுவானே அந்த மாறவர்மன். அவனாவது, எனக்குத் தீங்கு விளைவிக்க எண்ணுவதாவது என்றாள் அம்மங்கை.

    இல்லையம்மா, இப்போது மாறவர்மனுக்கு அவன் தாயாதிகள் மட்டுமல்ல, சேரலாதனும் உதவப் போவதாகக் கேள்வி என்றார் அமைச்சர்.

    இதைக் கேட்டதும் மகாராணியின் முகத்திலும் சிந்தனை படர ஆரம்பித்தது.

    அமைச்சரே, எதற்கும் உள்ள நிலை பற்றி மன்னருக்கும் தெரிவிக்க ஏற்பாடு செய்துவிடுங்கள் என்றாள் புவனமகாதேவி.

    மகாராணியின் உத்தரவுக்குத் தலைவணங்கிய அமைச்சர், மீண்டும் அம்மங்கையிடம்,

    குழந்தாய், இனி நீ எங்குச் சென்றாலும் என்னிடம் அறிவித்து விட்டுத்தான் செல்ல வேண்டும் என்றார்.

    மீண்டும் கலகலவென நகைத்த அம்மங்கை,

    அப்படியே ஆகட்டும் தாத்தா. இன்று மாலை தேவநாதப் பெருமாளைச் சேவிக்க திருவகீந்திரபுரம் செல்லப் போகிறேன் என்றபடி அவர் பதிலையும் எதிர்பாராது உட்புறம் திரும்பி துள்ளியபடி ஓடினாள்.

    அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை ஒன்று விடாமல் கேட்டபடி பணியில் ஈடுபட்டிருந்த பணிப்பெண்ணொருத்தி வேகமாக எங்கோ கிளம்பிச் சென்றாள்.

    ஆலய வாயிலில் மெல்ல மக்கள் கூட்டம் சேரத் தொடங்கியிருந்தது. அம்மங்கைத் தேவியிடம் முறையிட்டுக் கொண்டால் குறைகள் உடனடியாகத் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை மக்களுக்கு அதிகமாயிருந்தது.

    உள்ளே சன்னதியில் தேவநாதப் பெருமாள் ரத்தினக்கிரீடமும் ஸ்வர்ண மாலையுமாக, உயர்த்திய அபயஹஸ்தத்தில் ரத்தினங்கள் மின்ன, நின்ற திருக்கோலத்திலிருந்தார். அன்று நடக்க இருந்த நாடகத்தை நினைத்ததாலோ என்னவோ அவரது இதழ்க்கோடியில் புன்னகையொன்றும் மின்னியது. தவிர, அவர் பிரயோகச் சக்கரமும் எதற்கோ மின்னிக் கொண்டிருந்தது.

    அர்ச்சனை செய்து கொண்டிருந்த ஆலயத்துப் பட்டருக்கு ஆலய மானியத்தை உயர்த்த வேண்டுகோள் விடுக்கும் சரியான தருணம் எது என்ற யோசனையும் மனத்தில் ஓடிக் கொண்டிருந்தது.

    அனைத்தும் முடிந்து தீர்த்தமும், திருத்துழாயும், சடாரியும் பெற்றுக் கொண்டு வெளியே வந்த அம்மங்கைக்கு ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தின் கோடியிலிருந்த சிற்ப மண்டபத்தின் நினைவு வந்தது. துள்ளல் நிரம்பிய அவளது நடைக்கு ஈடுகொடுக்க இயலாத ஆலய அதிகாரியும், தலைமைப் பட்டரும், தோழிகளும் கூட சற்றுப் பின் தங்கியே வர, முன்னால் சென்ற அம்மங்கை, அந்தச் சிற்ப மண்டபத்தை நோக்கி விரைந்தாள்.

    பின்னால் வந்து கொண்டிருந்த ஆலய அதிகாரியின் கண்களில் பின்புறத் திட்டி வாசல் திறந்திருப்பதும், அதன் வழியே வீசிய காற்றில் உட்புற மதிற்சுவரிலிருந்த பந்தங்கள் அணைந்து கிடப்பதும் பட்டன. எளிதில் அணையாத அந்தப் பந்தங்கள் அணைந்து கிடப்பது அவருக்குச் சற்று சந்தேகத்தை அளித்ததால் பட்டரிடம் தாழ்ந்த குரலில், ஆனால் சற்று உஷ்ணமாகவே வினவினார்:

    பட்டரே, ஏன் திட்டிவாசலைப் பூட்டவில்லை? பந்தங்களும் அணைந்து கிடக்கின்றன?

    அதிகாரியின் மனோநிலை புரியாத பட்டரின் பதில் வெகு சாவதானமாகவே வந்தது.

    இராமானுஜத்திடம் பூட்டச் சொன்னேன். மறந்து போயிருப்பான். காற்றில் பந்தங்கள் அணைந்திருக்கும். இதற்காக ஏன் கோபப்படுகிறீர்? இளவரசி சென்றபின் பூட்டி விட்டால் போகிறது.

    அதற்குள் அம்மங்கை சிற்ப மண்டபத்தினுள் நுழைந்து விட்டிருந்தாள். எரிந்து கொண்டிருந்த ஒரே விளக்கின் ஒளியில் திறந்த வாயுடன் நின்ற யாளிகளிரண்டும் பயங்கரமாகத் தெரிந்தன. அவற்றின் வாயினுள்ளிருந்த கல் உருண்டைகளை விளையாட்டாகத் தொட்டுப் பார்த்து வியந்த அம்மங்கை இன்னும் உள்ளே நடந்தாள். மூன்றாவது தூணில் தத்ரூபமாக இருந்த நரசிம்மமூர்த்தியின் கண்களில் தெரிந்த உக்கிரத்தையும், கரங்களின் கூரிய நகங்களையும் கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டவள், எதிரிலிருந்த தூணில் இரணியன் உருவம் இருக்கிறதா என்று தேடினாள்.

    சற்றுத் தள்ளி அரையிருளில் நின்ற அந்தத் தூணில் இரணியன் உருவிய வாளுடனும் வணங்காத தலையுடனும் காட்சியளித்தான். அவன் கையிலிருந்த நீண்ட அந்த வாள், லேசான விளக்கின் ஒளியில் மின்னியது.

    ‘கல்லில் செதுக்கிய வாள் எப்படி மின்னுகிறது?’ என்று வியந்த அம்மங்கை, அதை நெருங்கி தொட்டுப் பார்க்க ர்யன்றபோது தூணோடு தூணாக உருவிய வாளுடன் அங்கு ஒருவன் நின்று கொண்டிருப்பதைக் கண்டு, வாழ்வில் முதன் ர்றையாக அச்சத்தின் வசப்பட்டாள். திகைத்து இரண்டடி பின்னால் நடக்க முற்பட்டவளை வலிய இரு கரங்கள் பற்றி நிறுத்தின.

    அரையிருளில் அங்கு இன்னும் பலர் நிற்பது புலப்படவே, அலறுவதற்குத் திறந்த அவள் வாய், பின்னாலிருந்து நீண்ட கரமொன்றால் பலமாகப் பொத்தப்பட்டது. அந்த இடத்தில் புகையுடன் திடீரென்று விபரீத மணமொன்றும் பரவியது.

    இளவரசியுடைய தோழியின் அலறலைக் கேட்டுப் பதறி ஓடி வந்த அதிகாரியும் பட்டரும் திகைத்தனர். அம்மங்கை அங்கு காணப்படவில்லை. திறந்திருந்த திட்டிவாசல் வழியாகப் பலர் ஓடுவது மங்கிய ஒளியில் நிழலுருவங்களாகப் புலப்பட்டது!

    02. எதிர்பாராமல் வந்தவன்

    மாரிக்காலம் வருவதற்கு இன்னும் சில காலம் இருந்ததால் வெள்ளாற்றில் வெள்ளப் பெருக்கு இல்லையென்றாலும் நீரோட்டத்துக்குக் குறைவில்லை. அதன் ஆழமும் அகலமும் ஒரு கம்பீரத்தை உணர்த்தியது. முன்னிரவுக் காலமாதலால் நன்றாகக் கறுத்துவிட்ட வானிலிருந்து மங்கலான ஒளியை வீசிக் கொண்டிருந்தது நிலவு. ஆற்று நீரில் நிலவு பிரதிபலித்து வெள்ளியை உருக்கி வார்த்தது போல் பளபளக்கச் செய்தது. ஆற்றின் கரையோரம் நீண்டு விரிந்து வெளேரென்று நிலவொளியில் தெரிந்த மணற்பரப்பு, அதன் பக்கத்தில் இருளில் அசைவற்றுக் கருநிழலாக நின்ற மரக்கூட்டங்களின் கருமையை அதிகரித்துக்காட்டி பீதியை உண்டு பண்ண முயன்றது. ஆனால் இதனால் சற்றும் பாதிக்கப்படாமல் புரவி மீது அமர்ந்து மெல்ல வந்து கொண்டிருந்தான் அந்த வாலிபன். பாதையில் திடீர் திடீரென்று விலகி ஓடிய நரிகளைக் கண்டு முதலில் சற்று தயங்கிய அந்தப் புரவி, அந்த வாலிபன் கழுத்தில் தட்டிக் கொடுத்த பிறகு நம்பிக்கையோடு ஒரே சீராக நடந்து கொண்டிருந்தது.

    காஞ்சி நகரை விட்டுத் தான் கிளம்பி வெகுதூரம் வந்து விட்டாலும் இன்னும் தான் நெடுந்தொலைவு பயணம் செய்ய வேண்டியிருப்பதை அவன் உணர்ந்து கொண்டிருந்தான். எனினும் சித்தத்தில் ஓடிக் கொண்டிருந்த சிந்தனைகளின் விளைவாகப் புரவியை நிதானமாகவே செலுத்திக் கொண்டிருந்தான்.

    நெடிதுயர்ந்து வளர்ந்திருந்த அந்த வாலிபனின் தோற்றம் சற்று மெலிந்தே காணப்பட்டாலும் இடைவிடாத பயிற்சியும் அளவான உணவும் அவன் உடலை இரும்பாகச் செய்திருந்தது என்பதை அவன் புரவியில் நிமிர்ந்து அமர்ந்திருந்த முறையே நிரூபித்தது. அவன் இடையில் தொங்கிய வாளும் அசாதாரண நீளத்துடனும் லேசாக வளைந்தும் பார்வைக்குச் சற்று அச்சத்தை ஏற்படுத்தியது. வாளின் பிடியில் ரத்தினங்கள் பதிக்கப்பட்டுத் தென்பட்ட புலிச்சின்னம், சிவப்புக் கண்களால் இருளை ஊடுருவிக் கொண்டிருந்தது.

    காஞ்சியிலிருந்து பொதிகையை நோக்கிக் கிளம்பிய அந்த வாலிபன் தான் அறிந்துகொண்ட செய்திகளைப் பற்றிச் சிந்தித்தபடியே புரவியை நடத்திக் கொண்டிருந்தான். நீண்ட நேரம் பயணப்பட்ட அந்த வாலிபன் திடீரென்று புரவியை நிறுத்தி, வெகு தூரத்தே தெரிந்த மேலை மங்கலத்துக் கோட்டையின் நிழல் வடிவத்தைத் தன் கூரிய விழிகளால் உற்று நோக்கினான். ஒளிப் புள்ளிகள் கோட்டையின் மீதும் சுவரை அணைத்து ஓடிய தாழ்வாரங்களிலும் தென்பட்டன. இதிலெல்லாம் வித்தியாசமாக அவன் ஏதும் உணராவிட்டாலும் எப்போதுமே அவன் உடன் உறையும் எச்சரிக்கை உணர்வு இப்போது தலைதூக்கியது.

    நீண்ட நேரம் அக்கோட்டையை ஆராய்ந்த அவனது விழிகள், மெல்ல நகர்ந்து ஊரை விட்டுச் சற்றுத் தள்ளி வெள்ளாற்றங்கரை வரை நீண்டிருந்த தோப்பை ஆராய்ந்தன. கோட்டையைவிட இது அருகில் இருந்ததால், தோப்பின் ஒரு புறத்தில் மரங்களினூடே விளக்கொளியொன்று பளிச்பளிச் சென்று தெரிவதையும் சிலர் நடமாடுவதும் புலப்பட்டது. அங்கு வெள்ளாற்றங்கரையில் ஆடிப் பெருவிழா நடக்கும் காலங்களில் மன்னரும் அவர் பரிவாரங்களும் வந்து தங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சிறு மாளிகை யொன்றிருப்பதை அவன் ஏற்கெனவே அறிந்திருந்ததால், தன் புரவியை அந்தத் திக்கில் செலுத்தினான்.

    அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்டதாலோ என்னவோ அந்தப் புரவி அதிகமாக ஒலியெழுப்பாமல் மணலில் குளம்பு களைப் பதித்துத் தோப்பை நெருங்கியது.

    தோப்பின் முகப்பிலேயே புரவியை விட்டிறங்கிய அந்த வாலிபன், நேராக மாளிகையை நோக்கிச் சென்ற பாதையை விடுத்து, மரங்கள் கவிந்து, இருளை அதிகரித்திருந்த பகுதியின் வழியாக மாளிகையை நெருங்கினான். மேகங்கள் கறுத்துக் கிடந்ததாலும் அவ்வப்போது குறுக்கே பாய்ந்து நிலவை

    மறைத்ததாலும் தோப்பின் இருட்டு அவ்வப்போது கும்மிருட்டாகவும் மாறிக் கொண்டிருந்தது.

    அளவில் சிறியதாகவும் நேர்த்தியாகவும் கட்டப்பட்டிருந்த அந்தச் சிறு மாளிகை பார்வைக்கு மிக அழகாக இருந்தாலும் அதிக விளக்குகள் இல்லாததாலும், சுற்றிலும் இருளடித்த மரங்களாலும் அச்சத்தையே ஏற்படுத்தியது.

    மாளிகையின் முகப்பில் படிகளில் நான்கைந்து வீரர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் தரித்திருந்த போர் உடையும் பளபளத்த வாட்களும் வேல்களும் அவர்கள் மேலைமங்கலத்துக் கோட்டையில் நடந்து கொண்டிருந்த போரிலிருந்து விடுபட்டு வந்தவர்கள் என்பதை அந்த வாலிபனுக்குப் புரிய வைத்தன. சற்றுத் தள்ளி நின்ற புரவிகளின் மீது போடப்பட்டிருந்த துணிகளிலிருந்த சின்னங்கள், அவை பாண்டியருக்கு உரியவை யென்றும் அறிவித்தன. புரவிகளை அடுத்து ஓர் அழகிய ரதமும் நின்றிருந்தது. அதன் முகப்பிலும் படிகளிலும் தெரிந்த சின்னங்கள் அது பாண்டிய அரச குடும்பத்தினர் பயன்படுத்துவதென்பதைப் புலப்படுத்தின.

    மாளிகையின் மேன்மாடத்தில் இடதுபுறம் வெளிச்சம் தெரிவதையும் பேச்சுக் குரல்கள் சற்று பலமாகவே கேட்பதையும் கவனித்த அந்த வாலிபன், ஓசையின்றிப் பக்கவாட்டில் நகர்ந்து, அந்த மேன் மாடத்தின் கீழ்ப்பகுதியில் வந்து நின்றான். மாளிகையை ஒட்டி நின்ற மாமரத்தின் கிளைகள், மேல் உப்பரிகையைத் தொட்டுக் கொண்டு வளைந்து சென்றதைக் கவனித்தவன் வெகு லாகவமாக மரத்தில் தொற்றி ஏறினான். மரத்திலிருந்த பறவைகள் சடசடவென்று கிளப்பிய ஒலியால் சற்று நிதானித்து, காவலர் இருந்த திசையில் நோக்கினான்.

    மரமிருந்த திசையைத் திரும்பி நோக்கிய அந்தக் காவலரது கண்களில் இருண்ட அதன் கிளைகளைத் தவிர வேறொன்றும் புலப்படாததால் மீண்டும் தங்கள் பேச்சைத் தொடர்ந்தனர்.

    மேல்கிளைக்கு வந்த வாலிபன் இலைகளை நீக்கி மேன்மாடத்தின் உள்ளே தன் பார்வையைச் செலுத்தினான். உப்பரிகையை அடுத்து நீண்ட தாழ்வரையின் முடிவில் கூடம் ஒன்று இருப்பதையும், அங்கு நால்வர் நின்று பேசிக் கொண்டிருப்பதையும் கவனித்த வாலிபன் அவர்கள் பேச்சை உற்றுக் கேட்கலானான்.

    நடுவில் நிற்பவன் ஏற்கெனவே தான் இரண்டொரு முறை பார்த்திருக்கும் பாண்டிய இளவரசன் மாறவர்மன் என்பதைச் சட்டென்று புரிந்து கொண்ட வாலிபன், சுற்றிலும் நின்ற மூவரும் போர் உடையிலிருப்பதையும் அவர்களில் நெடிய உருவத்துடன் திடகாத்திரமாக தோற்றமளித்தவன் மாறவர்மனைப் பார்த்து உக்கிரமாக ஏதோ கேட்டுக் கொண்டிருப்பதையும் கவனித்தான்.

    மாறவர்மா, ஏனிந்த முட்டாள்தனமான காரியம் செய்தாய்? இதன் விளைவுகளைப் பற்றி சற்றேனும் சிந்தித்தாயா? - நெடிய உருவம் படைத்தவனின் குரலில் அனல் பறந்தது.

    மாறவர்மனது பதில் மிகுந்த அசட்டையாக ஒலித்தது.

    நான் எது செய்தாலும் குற்றம்தான் மாமா உங்களுக்கு. எத்தனை சிரமப்பட்டு அவளை இங்கு கொண்டு வந்திருக்கிறேன் என்பது தெரியுமா உங்களுக்கு?

    முட்டாளே, எதிரியுடன் நேருக்கு நேர் போரிடுவது என்பது உனக்குத் தெரியவே தெரியாதா? பெண்ணைக் கடத்தி வருவதும் அவளைப் பணயமாக வைத்துப் போரிடுவதும் வீரமாகாது மாறவர்மா!

    மாமா, என் யோசனையைச் சற்றுக் கேளுங்கள். மேலைமங்கலக் கோட்டையை நாம் பிடித்தவுடன் இவளை உள்ளே கொண்டு போய்க் கட்டாயமாக மணந்து கொண்டால் பிறகு சோழன் என்ன செய்ய இயலும்?

    விக்கிரம சோழனையும் அந்தக் கிழப்பல்லவராயனையும் நீ அறிந்தது அவ்வளவுதான். நம்மைப் பூண்டோடு அழித்துவிடுவார்கள். இந்த மேலைமங்கலத்துப் போரே நாம் அவசரப் பட்டு எடுத்த முடிவோ என்று நான் அஞ்சுகிறேன். கொற்கையிலிருந்து கிளம்பிவிட்ட படை நாளை மாலைதான் வந்துசேரும்.

    அருகில் சற்று பருமனாக நின்றிருந்தவன் இடைமறித்தான்.

    பொன்னவராவதித் தலைவன் புறப்பட்டு விட்டதாகச் செய்தி வந்துள்ளது பிரபு. நாளை உச்சிப் பொழுதுக்குள் வந்துவிடுவதாகவும் தகவல் அனுப்பியிருக்கிறான்.

    மாறவர்மன் குரல் உற்சாகமாக ஒலித்தது.

    பிறகு எதற்காக அஞ்ச வேண்டும் மாமா? நமது படைபலம் அதிகரித்துவிட்டால் சோழனால் ஒன்றும் செய்ய இயலாது.

    மாறவர்மனுக்குப் பதிலேதும் கூறாது அந்த நெடியவன் கைகளைப் பின்புறம் கட்டியபடி சற்று உலவினான்.

    அவன் திரும்பியதும் அந்த அறையில் நிலவிய வெளிச்சத்தில் அவன் முகத்தைக் கவனித்த வாலிபன், இவன்தான் மார்த்தாண்டவர்மனாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். மாறவர்மன் அவனை அழைத்த முறையும் அதை உறுதிப்படுத்தியது. பாண்டியர் அரசை மீண்டும் நிறுவவும், இழந்த மதுரையை மீட்டு மாறவர்மனை மன்னனாக அமர்த்தவும் அதி தீவிரமான முயற்சிகள் மேற்கொண்டிருந்த மார்த்தாண்ட வர்மனின் தலையில் தெரிந்த நரைமுடிகள் அவன் நடுத்தர வயதைக் கடந்தவன் என உறுதிப்படுத்தினாலும் ராட்சதன் உலவுவதைப் போன்ற பிரமையை உண்டாக்கின. கனமாகவும், அகலமாகவும் அவன் இடையில் தொங்கிய வாளும், உரமேறிய அவன் கரங்களும் அதில் தென்பட்ட வடுக்களும் அவன் பெரும் வீரனென்பதைப் புலப்படுத்தின. வல்லூறின் கண்களைப் போல் கூர்மையாகப் பளபளத்த அவன் விழிகள் சற்று அச்சத்தையே ஏற்படுத்தின.

    உலவிய மார்த்தாண்டவர்மன் நின்றான். கூர்மையான அவன் பார்வை மாறவர்மன் மீது பாய்ந்தது. கேள்வியொன்றும் பிறந்தது அவனிடமிருந்து:

    மாறவர்மா, அம்மங்கை எங்கேயிருக்கிறாள்?

    கூடத்தின் வலது கோடியிலிருந்த அறையைச் சுட்டிக்காட்டிய மாறவர்மன், அந்த அறையில் இருக்கிறாள். நான் அவளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன். மேலை மங்கலத்தைப் பிடித்ததும், நான் அவளை அழைத்துக் கொண்டு அங்கு வந்துவிடுகிறேன் என்றான்.

    சரி கவனமாக இரு. எங்களுடன் வந்த வீரர்களை இங்கேயே விட்டுச் செல்கிறேன் என்ற மார்த்தாண்டன், அருகில் நின்ற மனிதரிடம், சோமசுந்தரா! வா, நாம் கோட்டையை கவனிக்கச் செல்வோம் என்றான்.

    தடதடவெனப் படிகளில் அவர்கள் வேகமாக இறங்கிச் சென்ற சில நொடிகளில் புரவிகள் கிளம்பிச் சென்ற ஒலி கேட்டது.

    மாறவர்மன் கூடத்திலேயே நின்று கொண்டிருந்தான். பிறகு சற்று நேரம் அங்குமிங்குமாக உலவினான். பின் இடதுபக்க அறைக்குள் நுழைந்தவன், கைகளில் மதுவும் குவளையுமாகத் திரும்பினான். கூடத்தின் நடுவில் இருக்கையொன்றை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தவன், குவளையில் மதுவை ஊற்றி உறிஞ்சத் தொடங்கினான். நிமிர்ந்தவன் கண்களில் அதிர்ச்சி பரவியது.

    கூடத்தின் வாயிலில் உயரமாக ஒரு வாலிபன் சாய்ந்து நின்று கொண்டிருந்தான். அவன் பார்வை மாறவர்மன் மீது ஆணி அடித்தாற்போல் பதிந்திருந்தது. ஏதோ அந்த மாளிகையை விலைக்கு வாங்க வந்தவன் போல அலட்சியமாக நின்றிருந்த அவன் தோரணையும், கூரிய கண்களும் மாறவர்மனைத் திடுக்கிட வைத்தன. அவன் இடையில் தொங்கிய வாளைப் போல நீண்ட வாளை மாறவர்மன் அதுவரை பார்த்ததேயில்லை. அந்த வாளின் பிடியில் தெரிந்த புலிச்சின்னம் தன் சிவப்பு விழிகளால் மாறவர்மனை எரித்து விடுவது போல் நோக்கியது.

    மதுக் குப்பியை எறிந்து விட்டுச் சட்டென்று எழுந்த மாறவர்மன், யார் நீ? டேய் யாரங்கே! ஓடி வாருங்கள்! என்று கூவினான்.

    மாறவர்மனது பதற்றத்தையோ, அவன் கூவியதையோ சட்டை செய்யாத அந்த வாலிபன் நின்ற இடத்திலிருந்து இம்மிகூட அசையவில்லை. படிகளில் வீரர்கள் தடதடவென்று ஓடி வரும் ஒலியைக் கேட்டு, பார்வையை மட்டும் அவர்கள் பக்கம் திருப்பிய அந்த வாலிபன், தூணில் நன்றாகச் சாய்ந்து நின்றான்.

    ஓடி வந்த வீரர்கள் அறைக்குள் புதிதாக ஒருவன் நிற்பதையும் அவன் வாளின் பிடியில் தெரிந்த புலிச்சின்னத்தையும் கண்டு, ஒருகணம் திகைத்தாலும் மறுகணம் கைகளிலிருந்த வேல்களை அந்த வாலிபனின் மார்பை நோக்கி எறிந்தார்கள்.

    மாளிகையின் வலது கோடியிலிருந்த அந்த அறையில் தோப்பிலிருந்து வீசிய குளிர்ந்த காற்று தாராளமாகச் சாளரங்களின் வழியே நுழைந்து, அறையெங்கும் உலவியது. உலவிய காற்று பஞ்சணையில் மயங்கிக் கிடந்த அம்மங்கைதேவியைத் தன் மெல்லிய கரங்களால் வருடிக் கொடுத்ததால் பஞ்சணையில் புஷ்பக் கொடியொன்று அசைவது போலப் புரண்ட அம்மங்கைக்கு மெல்ல சுயநினைவு வரத் தொடங்கியது. சிரமப்பட்டு இமைகளைத் திறந்த அம்மங்கை மேலிருந்து தொங்கிய அலங்கார விளக்கு அணைந்து கிடப்பதையும் அறையின் மூலையிலிருந்த ஒரு தீபம் சிறிதளவே வெளிச்சம் அளிப்பதையும் அந்த மங்கலான ஒளியில் புதிதாகத் தெரிந்த அந்த அறையையும் கண்டு, நான் எங்கிருக்கிறேன்? என்ன ஆயிற்று எனக்கு? என்று தனக்குள்ளாக கேட்டுக் கொண்டவள், எழுந்து அமர முயன்றாள். தான் சுவாசித்த காற்றில் இன்னும் அந்த விபரீத மணம் இருப்பதையும், தலை லேசாகச் சுற்றுவதையும் உணர்ந்து இரு கரங்களாலும் தலையைப் பிடித்துக் கொண்டாள்.

    தேவநாதப் பெருமாள் ஆலய சிற்ப மண்டபத்தில், தான் நரசிம்ம மூர்த்தியையும், இரணியன் சிற்பத்தையும் கண்டது அவள் நினைவுக்கு வந்தது. இருளில் உருவிய வாளுடன் ஒருவன் நின்றிருந்ததும் நினைவுக்கு வரவே அவள் முகத்தில் அச்சம் படர ஆரம்பித்தது.

    தானிருந்த அறையையும் சாளரத்தின் வழியே தெரிந்த இருளையும் கண்ட அம்மங்கைக்கு ஒன்றும் புரியவில்லை.

    மெல்ல நிதானித்துக் கொண்டவள் பஞ்சணையை விட்டு எழ முயன்றாள். கால்கள் பலமற்று துவளுவதாகத் தோன்றியது. வாயிலை நோக்கித் தடுமாறியபடியே நடந்தவள், திரைச் சீலையைப் பிடித்துக் கொண்டு வெளியே நோக்கினாள்.

    கூடத்தில் நால்வர் நின்று பேசிக் கொண்டிருப்பதையும் அவர்கள் சோழர் குலத்துக்குச் சற்றும் சம்பந்தப்படாதவர்கள் என்பதையும் புரிந்து கொண்ட அம்மங்கையின் இதயம், புறாவின் சிறகுகளைப் போல படபடவென்று அடித்துக் கொண்டது. அவர்கள் பேசியது முற்றிலும் புரியாவிட்டாலும், நடுவில் நிற்பவன் மாறவர்மன் என்பதும், தான் மேலைமங்கலக் கோட்டைக்கருகில் இருப்பதும் புரிந்து விடவே மேலும் அச்சம் அவளைச் சூழ்ந்தது.

    மாறவர்மனைப் பற்றி அமைச்சர் பல்லவராயர் எச்சரித்ததும் தான் அலட்சியமாகப் பதிலளித்ததும் அவள் நினைவுக்கு வந்தன.

    சற்று நேரத்தில் மற்ற மூவரும் சென்றுவிட கையில் மதுக் குப்பியுடன் வந்து கூடத்தில் அமர்ந்து கொண்ட மாறவர்மனைக் கண்ட அம்மங்கைக்கு எப்படி அவனைத் தாண்டிச் சென்று தப்பிப்பது என்பது புரியவில்லை.

    எப்படியும் இத்தனை நேரம் பல்லவராயருக்கு விஷயம் தெரிந்திருக்கும் என்பதும் சோழ வீரர்கள் தன்னைத் தேடி நான்கு திசைகளிலும் சென்றிருப்பார்கள் என்பதும் அவளது ஒரே நம்பிக்கையாக இருந்தது.

    மாறவர்மன் மதுக்குப்பியை எடுத்து வர அறைக்குள் சென்றிருந்தபோது வேகமாக அடியெடுத்து வைக்க முயன்ற அம்மங்கை, தான் சுவாசித்த புகையாலும் அதனால் உண்டான மயக்கத்தாலும் தனது கால்கள் பலமற்றிருப்பதையும், தன்னால் வேகமாக நடக்கவோ, ஓடவோ இயலாது என்பதையும் புரிந்து கொண்டாள். என்ன செய்வது என்று தெரியாமல் அச்சத்தில் விழிக்க ஆரம்பித்தாள்.

    அரண்மனையில் சகல சௌகரியங்களுடனும் தன்னிஷ்டப் படியே இளவரசியாக வாழ்ந்து வளர்ந்துவிட்ட அம்மங்கையின் மனதுக்கு இந்த அதிர்ச்சியைத்

    Enjoying the preview?
    Page 1 of 1