Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ponniyin Selvanin Pennmanigal
Ponniyin Selvanin Pennmanigal
Ponniyin Selvanin Pennmanigal
Ebook299 pages1 hour

Ponniyin Selvanin Pennmanigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இது சுந்தர சோழர் ஆட்சி காலத்தில் நடந்த சரித்திர நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து பொன்னியின் செல்வன் நாவல் எழுதப்பட்டுள்ளது. இந்த சிறந்த சரித்திர நாவலை இதுவரை வாசித்திராத வாசகர்களுக்காக கதையின் ஓட்டம் பாதிக்காத வண்ணம் சுருக்கமாகத் தந்துள்ளேன்.

Languageதமிழ்
Release dateApr 22, 2024
ISBN6580171611030
Ponniyin Selvanin Pennmanigal

Read more from Mohana Suhadev

Related to Ponniyin Selvanin Pennmanigal

Related ebooks

Related categories

Reviews for Ponniyin Selvanin Pennmanigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ponniyin Selvanin Pennmanigal - Mohana Suhadev

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பொன்னியின் செல்வனின் பெண்மணிகள்

    Ponniyin Selvanin Pennmanigal

    Author:

    மோகனா சுகதேவ்

    Mohana Suhadev

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mohana-suhadev

    பொருளடக்கம்

    என்னுரை

    பொன்னியின் செல்வனின் பெண்மணிகள்

    பகுதி 1:புது வெள்ளம்

    பகுதி 2:சுழற்காற்று

    பகுதி 3:கொலை வாள்

    பகுதி 4:மணிமகுடம்

    பகுதி 5:தியாகச் சிகரம்

    1.நந்தினி

    2.இளைய பிராட்டி குந்தவை தேவியார்

    3. கொடும்பாளூர் இளவரசி வானதி

    4.செம்பியன்மாதேவி

    5.பூங்குழலி

    6.மணிமேகலை

    7.மந்தாகினி

    8.வானமாதேவி

    வந்தியத்தேவன் வழியிலே ஒரு வரலாற்றுப் பயணம்

    முதல் நாள்: 07/03/2020

    இரண்டாம் நாள்: 08/03/2020

    மூன்றாம் நாள்: 09/03/2020

    ஆசிரியர் குறிப்பு

    பிறந்தது தேனிக்கு அருகில் உள்ள பழனிசெட்டிபட்டி கிராமத்தில் என்றாலும் நெடுங்காலமாக சென்னைவாசி. 30 வருடங்களுக்கும் மேலாக தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தின் சமூக விஞ்ஞானி (Social Scientist in National Institute of Research for Tuberculosis, Chennai, Indian Council of Medical Research). எய்ட்ஸ், காசநோய் குறித்த தனது ஆராய்ச்சிக் கட்டுரைகளை உலக கருத்தரங்குகள் பலவற்றில் சமர்ப்பித்திருப்பதுடன், பல விஞ்ஞான சஞ்சிகைகளிலும் பிரசுரித்துள்ளார்.

    கடந்த ஐந்து ஆண்டுகளில் 25 க்கும் மேற்பட்ட சமூக நாவல்களை எழுதி தமிழ் வாசகர்களின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

    -மோகனா சுகதேவ்

    என்னுரை

    நான் கல்கியின் பொன்னியின் செல்வனின் பரம ரசிகை என்ற ஒரே தகுதியுடன் இந்த ஆய்வுக் கட்டுரையை எழுதத் துணிந்தேன். நாம் ராஜராஜனையும், ராஜேந்திர சோழனையும் கொண்டாடும் அளவுக்கு செம்பியன் மாதேவியையோ, குந்தவை பிராட்டியாரையோ கொண்டாடுவதில்லை. ஏன் இந்த பாரபட்சம்? ராஜராஜன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலுக்கு குந்தவை 10,000 கழஞ்சு எடையுள்ள தங்கத்தையும், 18,000 கழஞ்சு மதிப்புள்ள வெள்ளிப் பாத்திரங்களையும் கொடுத்திருப்பதை கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன. ராஜராஜனின் முதல் கல்வெட்டே நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்தக் கல்லிலே வெட்டி அருள்க என்று ஆரம்பிக்கிறது. தன் பெயருக்கு அடுத்து தன் அக்கன் என்று குந்தவைப் பிராட்டியைத்தான் குறிப்பிட்டு உள்ளான் அந்த மாமன்னன்.

    குந்தவை இல்லையென்றால் ராஜராஜனோ, அவன் மகன் ராஜேந்திரனோ உலகம் போற்றும் மன்னாதி மன்னர்களாய் வரலாற்றின் புத்தகங்களில் இடம்பெற வாய்ப்பில்லை. அதைப் போலவே பெரிய பிராட்டி செம்பியன் மாதேவி சுமார் 90 ஆண்டுகள் வாழ்ந்து ஆறு சோழ மன்னர்களின் ஆட்சியைக் கண்டவர். சோழர் கால செப்புத் திருமேனிகள் என்றாலே நினைவுக்கு வருவது பெரிய பிராட்டியாரே! அத்துடன் இன்றளவும் சோழர்கள் காலக் கோவில்கள் நிலைத்திருக்க இவர் எழுப்பித்த கற்றளி கோவில்களே காரணம். சோழ மன்னர்கள் மண்ணாலும், செங்கற்களாலும் கட்டிய பத்து ஆலயங்களை செம்பியன்மாதேவி என்றும் அழியாதிருக்க கருங்கல் கோவில்களாக (கற்றளி) மாற்றிக் கட்டினார்.

    அதைப் போலவே வானதிக்கும், ராஜராஜனுக்கும் மார்கழி திருவாதிரைத் திருநாளில் பிறந்த ராஜேந்திரன் பிற்காலத்தில் சந்திரகுப்தன், அசோகன், விக்கிரமாதித்தன், ஹர்ஷவர்த்தனன் ஆகியவர்களுடன் ஒப்பிடத்தக்க சக்கரவர்த்தியாக, இலங்கை முதல் கங்கை வரை, லட்சத் தீவு முதல் ஸ்ரீவிஜயம் வரை வெற்றி கொண்டு மகோன்னதமாக ஆட்சி செய்தான்.

    இப்படி பொன்னியின் செல்வனின் பெண்மணிகள் வரலாற்றில் இடம் பிடித்தாலும் மக்கள் மனதிலும் மறையாத இடத்தை தக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில் இந்த ஆய்வை எழுதியுள்ளேன். நிச்சயமாக இந்தப் பெண் கதாபாத்திரங்கள் தங்கள் மாறுபட்ட அழகால், குணத்தால், செயலால் உங்கள் நெஞ்சில் நிறைந்திருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

    வாசகர்களின் வசதிக்காக பொன்னியின் செல்வன் நாவலின் கதை சுருக்கத்தையும் தந்துள்ளேன். ஏதேனும் குறை இருந்தால் அது இந்த எளியவளின் தவறாகத்தான் இருக்குமே தவிர, அது சரித்திரக் கதை எழுத்தாளர்களின் பிதாமகர் கல்கியின் குற்றமன்று;

    இதன் தொடர்ச்சியாக சக்தி விகடன் நடத்திய வந்தியத் தேவன் வழியிலே ஒரு வரலாற்றுப் பயணம் என்ற பயணக் கட்டுரையையும் இணைத்துள்ளேன். நாங்கள் 2020 ம் ஆண்டு மார்ச் மாத துவக்கத்தில் சென்ற இந்தப் பயணம் வாழ்நாளில் ஒரு மறக்க முடியாத பயணமாக மாறி விட்டது. நாங்கள் திரும்பி வந்த பின்பு கொரானா பெருந்தொற்று காரணமாய் இந்தியா முழுதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப் பட்டது. நல்லவேளையாக, நாங்கள் தப்பித்து விட்டோம். நாம் நாவலில் படித்த இடங்களைப் பார்க்கும்போது நம் மனதில் எழும் பல்வேறு வகை உணர்ச்சிகள் நம்மை இன்னும் பொன்னியின் செல்வன் நாவலோடு ஒன்றிப் போகச் செய்து விடுகிறது.

    அதுவும் மாமன்னன் ராஜராஜனின் நினைவிடம் ஒரு சாதாரண தகரக் கொட்டகையின் கீழ் கேட்பாரற்று இருப்பதைப் பார்க்கும்போது நெஞ்சம் பதறி, ரத்தக் கண்ணீர் வரும். ஒரு சிறிய வாட்ஸ்அப் பதிவு இங்கே...

    "தான் கட்டிய கோவிலில் தன் பெயரை எழுதாமல்

    அதில் வேலை செய்த சிற்பக் கலைஞர்களின்

    பெயரை எழுதி வைத்த நம் ராஜராஜ சோழனின்

    கல்லறை எங்கே? மணிமண்டபம்தான் எங்கே?

    தெற்காசியாவை ஆண்ட ஒரு மாமன்னனின் கல்லறையை

    நீ வைத்திருக்கும் கோலத்தைப் பாரடா!"  - யாரோ?

    இப்போதாவது நாம் விழித்தெழுந்து நம் வரலாற்று நாயகர்களை இன்றைய இளைஞர்களுக்குத் தெரிய வைப்போம். அதற்கு இந்த நூல் சிறிதளவு உதவும் என்ற நம்பிக்கையுடன் வாசகப் பெருமக்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.

    இந்த நூலை அழகுற வடிவமைத்து உங்கள் கரங்களில் தவழச் செய்த திருமகள் நிலயத்துக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உங்களுடைய பேராதரவை இந்த நூலுக்கு நிச்சயம் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

    பேரன்புடன்.

    மோகனா சுகதேவ்

    mohanasuhadev@gmail.com

    Ph: 9444427750

    பொன்னியின் செல்வனின் பெண்மணிகள்

    பொன்னியின் செல்வன் நாவலைத் தெரியாதவர்கள் தமிழ் கூறும் நல்லுலகில் யாரும் இல்லையென்றே சொல்லலாம். இந்த நாவலை எழுதியப்போது கல்கி இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களே இந்த அளவு வரவேற்பை தமிழ் வாசகர்களிடமிருந்து எதிர்பார்த்திருக்க மாட்டார்.

    பொன்னியின் செல்வன் தமிழில் வரலாற்று புதினங்களுக்கு ஒரு முன்னோடியாக உள்ளது. இந்த புகழ் பெற்ற சரித்திர நாவலை கல்கி கிருஷ்ணமூர்த்தி 1950 – 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக எழுதினார். இந்த நாவலுக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்து பல்வேறு காலக்கட்டங்களில் பொன்னியின் செல்வன் நாவலை கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. அத்துடன் தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புகளைக் கண்டுள்ளது. பல்வேறு நாடகக் குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டது. இந்த நாவலைத் திரைப்படமாகும் முயற்சிகளும் மக்கள் திலகம் எம்ஜிஆர் முதற்கொண்டு திரு. கமல்ஹாசன் போன்ற பிரபல நடிகர்களால் மேற்கொள்ளப்பட்டன. இப்போது பிரபல சினிமா டைரக்டர் மணிரத்னம் இந்த சரித்திர நாவலை பிரம்மாண்டமாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த நாவலைப் பற்றி எண்ணற்ற விமரிசனங்களும், தர்க்கங்களும், ஆராய்ச்சிகளும் நடந்துள்ளன. இப்போதும் நடந்து கொண்டிருக்கின்றன. இன்று வரையிலும் பொன்னியின் செல்வன் நாவலுக்கு வாசகர்கள் மத்தியில் நல்ல ஈர்ப்பு சக்தி இருப்பதால்தான் எல்லா புத்தக கண்காட்சிகளிலும் இந்த நாவல் அதிகம் விற்கப்படும் நிலையில் உள்ளது.

    பாஞ்சாலி சபதத்தால் ஒரு பாரதம்; கைகேயி சபதத்தால் ஒரு ராமாயணம்; இந்தியாவின் இரு பெரும் காவியங்களுக்கும் காரணகர்த்தா பெண்கள். சிலப்பதிகாரமும், மணிமேகலையும் கூட பெண்ணின் பெருமையைப் பாடும் தமிழ்க் காப்பியங்கள். அதைப்போல் பெண்கள் நினைத்தால் நல்லதும் நடக்கும்; நாசமும் விளையும் என்பதை குந்தவை, நந்தினி என்ற இரு கதாபாத்திரங்கள் மூலம் கல்கி அழகாக எடுத்து சொல்லியிருப்பார்.

    என்னுடைய பள்ளிப் பருவத்திலேயே பொன்னியின் செல்வனைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்குக் காரணம் என் தமக்கையார். அவர் இந்த பொன்னியின் செல்வனைப் படித்து விட்டு தன் பெயரை குந்தவை என்றே மாற்றிக் கொண்டார். எனக்கும் குந்தவையின் கம்பீரம், அழகு, புத்திகூர்மை எல்லாம் பிடித்திருந்தாலும் என்னை அதிகம் கவர்ந்தது நந்தினி கதாபாத்திரம்தான்.

    பொன்னியின் செல்வன் கதையை இரண்டே வரிகளில் சொல்லி விடலாம். இரண்டாம் பராந்தக சுந்தர சோழ சக்கரவர்த்திக்குப் பின் யார் அரசுக் கட்டிலில் ஏறுவது என்ற அதிகாரப்போட்டியே இந்த சரித்திர நாவலின் கரு. இந்தப் போட்டியில் ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மன் தவிர அவர்களின் சிற்றப்பன் மதுராந்தகனும் உள்ளான். அதையொட்டிய நிகழ்வுகளை கல்கி மிக மிகச் சுவைப்பட பிற்காலச் சோழர்களின் சரித்திரத்துடன் விவரித்துள்ளார்.

    பொன்னியின் செல்வன் என்ற பெயர் இளவரசர் அருள்மொழிவர்மனைக் குறிப்பிட்டாலும் இந்த நாவலின் கதாநாயகன் வல்லரையன் வந்தியத்தேவன். ஆதித்த கரிகாலனின் நண்பனாய் அறிமுகமாகி சோழ இளவரசி குந்தவைத் தேவியின் கைப்பிடிக்கும் அதிர்ஷ்டக்காரன்.

    கல்கி தம் நாவலில் வரும் ஆண் கதாபாத்திரங்களுக்கு சமமாகவே பெண் கதாபாத்திரங்களையும் படைத்துள்ளார். செம்பியன் மாதேவி, குந்தவை, நந்தினி, பூங்குழலி, வானதி, மந்தாகினி முதலிய மாதரசிகள் சுதந்திரமாக தாங்கள் நினைத்ததை செயல்படுத்தும் ஆற்றல் கொண்டவர்களாய் இருந்தார்கள். அதிலிருந்து கல்கி பிற்காலத்தில் பரவலாக்கப்பட்ட பெண்ணடிமைத்தனம், கல்வி, சொத்துரிமை மறுப்பு போன்ற பிற்போக்கு வாதத்தை ஆதரிக்கவில்லை என்பதைத் தெரிந்துக் கொள்ளலாம்.

    இந்த கதை ஆய்வுக் கட்டுரையில் நான் இந்த நாவலில் வரும் பெண் கதாபாத்திரங்களை மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளேன். ஆண் கதாபாத்திரங்கள் முக்கியமாக அருள்மொழிவர்மன், ஆதித்த கரிகாலன், உத்தம சோழன், சுந்தர சோழர் மற்றும் பலர் சரித்திர நூல்களிலும், கல்வெட்டுகளிலும் இடம் பெற்றிருக்கும் போது திரும்பத் திரும்ப அவர்களைக் குறித்து ஆராய வேண்டிய அவசியமில்லை என்றே நினைக்கிறேன்.

    கல்கி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மாறுபட்ட குணாதிசயங்களுடன் படைத்திருப்பார். கம்பீரத்துக்கும், புத்திசாலித்தனத்துக்கும் குந்தவை, அழகுக்கு நந்தினி, அடக்கத்துக்கு வானதி, துணிச்சலுக்கு பூங்குழலி, தியாகத்துக்கு மந்தாகினி, இறைபக்திக்கு செம்பியன்மாதேவி, பதிபக்திக்கு வானமாதேவி, காதலுக்கு மணிமேகலை என்று பொன்னியின் செல்வளின் பெண்மணிகள் ஒவ்வொருவரும் கதையின் சுவாரஸ்யத்தை கூட்டியிருப்பார்கள். அவர்களின் மனதிலும் ஊடுருவி அவர்களின் எண்ண ஓட்டத்தையும், மற்ற கதாபாத்திரங்கள் அவர்களைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதையும் சுவைப்பட சொல்லியிருப்பார் கல்கி.

    நான் இந்த ஆய்வுக் கட்டுரையில் கல்கி ஒவ்வொரு பெண் கதாபாத்திரத்தின் தோற்றத்தையும், குணாதிசயங்களையும் நாவலில் எப்படி சித்தரிக்கப்பட்டு உள்ளதோ, அப்படியே விவரித்துள்ளேன். கூடுதலாக சில விமரிசனங்களையும் இணைத்துள்ளேன்.

    கதை சுருக்கம்

    இது சுந்தர சோழர் ஆட்சி காலத்தில் நடந்த சரித்திர நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து பொன்னியின் செல்வன் நாவல் எழுதப்பட்டுள்ளது. இந்த சிறந்த சரித்திர நாவலை இதுவரை வாசித்திராத வாசகர்களுக்காக கதையின் ஓட்டம் பாதிக்காத வண்ணம் சுருக்கமாகத் தந்துள்ளேன்.

    பொன்னியின் செல்வன் தமிழ் நாவல் மொத்தம் 5 பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமாக 300க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது

    பாகம் 1 – புதுவெள்ளம்

    பாகம் 2 – சுழல்காற்று

    பாகம் 3 – கொலைவாள்

    பாகம் 4 – மணிமகுடம்

    பாகம் 5 - தியாக சிகரம்

    பொன்னியின் செல்வன் நாவலில் உள்ள மொத்தம் 5 பாகங்களையும் அலங்கரிக்கும் கதாப்பாத்திரங்கள்:

    1. வல்லவரையன் வந்தியத்தேவன்

    2. அருள்மொழி வர்மன் என்கிற இராசராச சோழர்

    3. ஆழ்வார்க்கடியான் நம்பி என்கிற திருமலையப்பன்

    4. குந்தவை பிராட்டியார்

    5. பெரிய பழுவேட்டரையர்

    6. நந்தினி

    7. சின்ன பழுவேட்டரையர்

    8. ஆதித்த கரிகாலர்

    9. சுந்தர சோழர்

    10. செம்பியன் மாதேவி

    11. கடம்பூர் சம்புவரையர்

    12. சேந்தன் அமுதன்

    13. பூங்குழலி

    14. குடந்தை சோதிடர்

    15. வானதி

    16. மந்திரவாதி ரவிதாஸன்(பாண்டியனுடைய ஆபத்துதவிகளின் தலைவன்)

    17. கந்தமாறன்(சம்புவரையர் மகன்)

    18. கொடும்பாளூர் வேளாளர்

    19. மணிமேகலை(சம்புவரையர் மகள்)

    20. அநிருத்த பிரம்மராயர்

    பகுதி 1:புது வெள்ளம்

    ஆடித்திருநாள் அத்தியாயம் தொடங்கி மாய மோகினி வரை 57 அத்தியாயங்களை உள்ளடக்கியது.முதல் பகுதியான புதுவெள்ளம் சரித்திர புகழ் பெற்ற வீர நாராயண (வீராணம்) ஏரியில் துவங்குகிறது. வடதிசை மாதண்ட நாயகராக திகழும் ஆதித்த கரிகாலர் தனது அன்பு தமக்கைக்கும், தந்தைக்கும் ஓலை கொடுத்து வர வந்தியத்தேவனை அனுப்புகிறார். வடதிசையில் இருந்து தஞ்சை செல்லும் வழியில் வீரநாராயண ஏரியில் வந்தியத் தேவன் சென்றுகொண்டிருக்கும் பொது ஆடித் திருநாள் கொண்டாட்டத்தை ரசித்தவாறு செல்வதாக முதல் பகுதி துவங்கி, பிறகு செல்லும் வழியில் கடம்பூரில் தாங்கும் போது சோழ சாம்ராஜ்யத்தின் மணி மகுடத்திற்கு பெரும் சூழ்ச்சி நடப்பதை காண்கிறான். பிறகு பல தடங்கல்களையும் மீறி சுந்தர சோழரை சந்தித்து ஓலை தந்தவுடன் ஆதித்த கரிகாலரின் தமக்கை இளையபிராட்டி குந்தவை தேவியை காண பழையாறை செல்கிறான். அங்கேயே இளைய பிராட்டியை சந்தித்து அவர் தனது இளைய தம்பியான அருள்மொழி வர்மருக்கு ஓலை கொடுத்து அனுப்ப அதற்காக கடல் பிரயாணம் செய்ய துவங்கும் வரை இப்பகுதி நீள்கிறது.

    1100 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள சோழர் ஆட்சி காலப்பகுதியில் கதை ஆரம்பிக்கின்றது. விஜயாய சோழன் இரண்டாவது சோழ சாம்ராஜ்யத்துக்கு வழி கோலினான். பின்னர் 980 ஆண்டுகளுக்கு முன்னால் சுந்தர சோழர் தென்னாட்டில் இணையில்லாத சக்கரவர்த்தியாக விளங்கி வந்தார். இவர் ஆட்சி காலத்தில் சோழ சாம்ராஜ்யம் நாலா திசையிலும் பரவியிருந்தது. எனினும் சுந்தர சோழர் பட்டத்திற்கு வந்த சமயத்தில் தெற்கேயும் வடக்கேயும் விரோதிகள் வலுப்பெற்றிருந்தார்கள். சுந்தர சோழருக்கு முன்னால் பட்டத்தில் இருந்த கண்டராதித்தர் சிவப்பக்தியில் திளைத்ததால் ராஜ்யத்தை விஸ்தரிப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. கண்டராதித்தருக்கு பின்னர் பட்டத்திக்கு வந்த அவரின் சகோதரர் அரிஞ்சயர் ஓர் ஆண்டு காலம் பதவிவகித்து மரணம் அடைந்தார். அவருக்கு பின்னர் ஆட்சி பொறுப்பை அரிஞ்சயர் புதல்வர் சுந்தர சோழர் ஏற்றுக்கொண்டார்.

    சுந்தர சோழர் ஆட்சி காலத்தில் தென் திசைக்கு படை எடுத்து சென்று பாண்டிய படையுடன் போர் புரிந்தார். அச் சமயத்தில் மதுரையில் வீர பாண்டிய மன்னன் அரசாட்சி செய்து கொண்டிருந்தான். வீர பாண்டியனுக்கு உதவுவதற்காக சிங்கள மன்னன்மகிந்தன் இலங்கையில் இருந்து ஒரு படையை மதுரைக்கு அனுப்பி வைத்தான். சேவூர் என்னும் இடத்தில் பாண்டிய படையையும், மகிந்தன் படையையும் சோழர் படைகள் போரிட்டு வெற்றி கொண்டன. வீர பாண்டியன் படையிழந்து, முடியிழந்து ஓடித் தப்பித்தான். பாண்டிய மன்னனுக்கு படை உதவி வழங்கிய மகிந்தனுக்கு பாடம் புகட்டும் நோக்கில் சுந்தர சோழர் ஒரு படையை இலங்கைக்கு அனுப்பினார். எதிர் பாராத விதமாக சோழர் படை மகிந்தனிடம் தோல்வியடைய வேண்டி வந்தது. இதை கேள்வியுற்ற வீர பாண்டிய மன்னன் மீண்டும் சோழர் படையுடன் மோதி சுந்தர சோழர் மூத்த புதல்வர் ஆதித்த கரிகாலர் கையால் தலை இழந்து உயிர் துறந்தான். அதன் பின் பாண்டிய நாடு சோழர் சாம்ராஜ்யத்தில் ஐக்கியம் ஆனது. வீரபாண்டியன் தலை கொண்ட ஆதித்த கரிகாலன் சோழர் சாம்ராஜ்யத்தின் இளவரசராக பட்டம் சூட்டப்பெற்றார். அச் சரித்திர சம்பவத்திற்கு பின்னர் ஆதித்த கரிகாலர் வடக்கே சென்று தென்னாட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்த இரட்டை மண்டல படையை முறியடித்து காஞ்சி நகரை சோழர் வசம் கொண்டு வந்து அங்கேயே தங்கி பொன்மாளிகை ஒன்றை கட்டிக்கொண்டிருந்தார்.

    எனினும் சிங்கள மன்னன் மகிந்தனுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்ற விருப்பம் சுந்தர சோழர் மற்றும் தளபதிகளிடம் இருந்தது. தயாரான நிலையில் இருந்த பெரிய படையை தலைமை வகித்து செல்ல சுந்தர சோழர் இளைய மகன் அருண்மொழிவர்மன் முன்வந்தார். தன் தமக்கை குந்தவையின் ஆசியுடன் பெரும் சோழப்படையுடன் இலங்கை புறப்பட்டு சென்றார்.

    அரசு பட்டத்துக்கு வருவதற்கு முன்னர்

    Enjoying the preview?
    Page 1 of 1